Friday, November 30, 2012

மார்க்கலயாணம்(சுன்னத்)

மார்க்கலயாணம்

          "பாலாறுபட்டியில் ஊருக்கு வெளியே மரத்தடியில் காவி வேட்டி, கையில் கம்பியுடன் 'யாராவது வருகிறார்களா?’ என்று ரோட்டில் கண் வைத்துக் காத்திருக்கிறார்கள் சிறுவர்கள்
. பைக்கில் வருபவரைப் பார்த்ததுமே கம்பியை வைத்து வழி மறிக்கிறார்கள். ''காசை எடு... இது கள்ளநாட்டு வழக்கம்'' என்கிறார்கள் கோரஸாக. விஷயம் தெரிந்த உள்ளூர்க்காரர்கள் சிரித்தபடி காசு கொடுக்கிறார்கள். ஊருக்குப் புதியவர்களோ 'இது என்ன நவீன பிச்சையா, இல்லை வழிப் பறியா?’ எனப் புரியாமல் தடுமாறுகிறார்கள். ''எங்க சாதி வழக்கப்படி 10 வயசுப் பையன்களுக்கு மார்கல்யாணம் (சுன்னத்) செய்வாங்க. மார்கல்யா ணம் செய்றவங்க, ஒரு வாரம் ஊருக்கு வெளியே தங்கணும். அந்தச் சமயத்தில் வழியில் போற வர்றவங்ககிட்ட வழிப்பறி செய்றது மாதிரி பணம் வாங்குவோம். அந்தப் பணத்தில் கோயி லுக்கு எண்ணெய் வாங்கி ஊத்துவோம். மீதி பணத்துக்குக் காவி வேட்டி எடுத்துக் கட்டு«வாம்'' என்றார்கள் ஊர் மக்கள். 'இஸ்லாமிய மார்க்கத்தில் உள்ள சுன்னத் வழக்கம், பிரமலைக் கள்ளர் சமூகத்தினரிடம் எப்படி வந்தது?’ என்று கேட்டால், ''எப்படி வந்ததுனு தெரியலை. பாரம்பரியமாகக் கடைபிடித்து வருகிறோம். மார்கல்யாணம் பண்ணும்போது சொந்தக்காரங் களுக்குச் சொல்லி அனுப்புவோம். அவங்க சீர் செய்வாங்க'' என்றார்கள். இதுகுறித்து, சமூக அறிஞர் தொ.பரமசிவனிடம் கேட்டோம், ''உலகத்தில் பல பழங்குடி மக்களிடம் இந்தப் பழக்கம் இருந்துள்ளது. குறிப்பாக, யூதர்களிடம் இருந்தது. தமிழ்ச் சமுதாயத்தில் பல சமூகங்களில் இருந்த இந்தப் பழக்கம், பிரமலைக் கள்ளர்களிடம் மட்டும்தான் எஞ்சியுள்ளது. அவர்கள் முந்தைய காலத்தில் மார்கல்யாணத்தைக் 'கவரடைப்பு’ எனச் சொல்வார்கள். இந்த வழக்குச் சொல்லும் தற்போது மறைந்துவிட்டது'' என்றார்!"

Reference:
http://www.vikatan.com/article.php?mid=1&sid=332&aid=12287


நமது கேள்விகள்

* கள்ளன் பழங்குடி என்றால் மறவன், அகம்படையான் புது குடியா? அவங்ககிட்ட என் 'சுன்னத்' பழக்கம் இல்லையே? ஏன் ?
* அனைத்து கள்ளரிடமும் (தஞ்சை கள்ளர் உட்பட) சுன்னத் பழக்கம் இருக்கா..? இல்லை என்றால் ஏன்? அப்படி என்றால் அவர்கள் 'பழங்குடி' இல்லையா...?
* சுன்னத் பழக்கத்தின் வரலாறு 'யூதர்களிடம்' இருந்து தானே தொடங்குது...யூதன் எவனும் தமிழ்நாட்டின் மீது படை எடுத்து வந்தது இல்லை...இசுலாமியன் தான் வந்தான்....அப்படின்னா சுன்னத் பழக்கம் 
அவன்கிட்ட தான் உங்களுக்கு வந்திருக்கணும்....கரெக்டு தானே? 
http://govikannan.blogspot.in/2012/05/blog-post_24.html

4 comments:

  1. செவிவழி செய்தி: பிரமலைக்கள்ளர்கள் தேனிமாவட்டத்தில் ஆங்கில அரசாங்கத்திற்கு எந்த விதமான வரி செலுத்துவதில்லை என்றும் அரசு சேமித்த உணவுப்பொருட்களை கவர்ந்து செல்லும் பழக்கம் இருந்த காரணத்தாலும் கேரளாவிற்கு செல்லும் பொருட்களை கவர்ந்து வந்துள்ள காரணத்தினால் அவர்களை படைகளை அனுப்பி கூன்டோடு பிடித்து ஆண்களுக்கு மரணதண்டனை விதித்ததாகவும் படைகளிடமிருந்து தப்பித்து மதுரை நரசிங்கம் பகுதியில் அதாவது யானை மலை ஒத்தக்கடையில் இசுலாமிய மார்கத்தை தளுவிய கள்ளர்கள் இருந்த இடத்தில் தஞ்சமடைந்தனர் அப்போது ஆங்கில படையினர் ஒத்தக்கடை பகுதிக்கு வருவது அறிந்த இசுலாமியர்கள் தஞ்சமடைந்த பிரமலைக்கள்ளர் அணைவருக்கும் மார்க்ககல்யாணம் செய்து அவர்களை காப்பாற்றியதால் தான் இசுலாமியர்களை சீயான் என்று கூறுவதாக கூறினர்( இது முழுக்கவே செவி வழி செய்தி தவறாக இருந்தால் பதிவினை ரத்து செய்யவும்) செல்:9865305959

    ReplyDelete
  2. தமிழர் வரலாற்று ஆய்வு நடுவதிடம் ஒரு சந்தேகம் கேட்க்கிறேன். தெளிவு படுத்துங்கள். பாலாறுபட்டியில் உள்ள பிறமலை கள்ளர்கள் மட்டும் இந்த பழக்கத்தை கடைபிடிக்கிறார்களா? இல்லை அனைத்து பிறமலை கள்ளர்களிடமும் இந்த பழக்கம் இருக்கிறதா?

    ReplyDelete
  3. ஆதி தமிழர்களின் வரலாற்று பாரம்பரியம் எஞ்சி இருக்கிரது என்றால் அது பிறமலைக்கள்ளர் இனத்தில் மட்டுமே முன்பு இந்த பழக்கம் அனைத்து கள்ளர்களிடமும் இருந்து அழிந்துவிட்டது இசுலாமியரிடமிருந்து பின்பற்றப்பட்டது என்பது கட்டுக்கதை

    ReplyDelete
    Replies
    1. அனைத்து பிரமலைக்கள்ளர்ககளிடமும் இந்த பழக்கம் தொன்று தொட்டே இருந்துள்ளது

      Delete