Saturday, December 8, 2012

வேந்தருக்கு மகற்கொடை அளித்த ‘அரையர்’ என்போர் யார்?

ராஜ ராஜ சோழன் கள்ளர் இனம் என்பதற்கு 'கள்ளர்' கொடுக்கும் விளக்கம்:


@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
தொண்டியில் மூவேந்தர் சின்னத்துடன் அரிய கல்வெட்டு 
(Ref: Dinamalar அக்டோபர் 06,2008,00:00 IST)
கரூர்:
        தொண்டியில் உள்ள குளம் நடுவில், மூவேந்தர் சின்னமான வில், புலி, மீன் மூன்றும் ஒன்றாகப் பொறிக்கப்பட்ட அரிய கல்வெட்டு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பாண்டிய நாட்டின் ஒரு பகுதியை ஆட்சிபுரிந்த சடையவர்மன் வீரபாண்டியன் காலத்தில், கி.பி., 1192ம் ஆண்டு தொண்டியில் இருந்த காளிகோவிலை, காளிகணத்தார் என்போர் நிர்வகித்தனர். அங்கு வாழ்ந்த உய்யவந்தான் சுந்தரன் ஆன வல்லப சமஞ்சிதனான பரசமய கோளரி என்பவரிடம் நிலம் வாங்கி ஊருக்குப் பொதுவாக குளம் வெட்டினர். அதற்கு, "காளிகணத்தான் குளம்' என்று பெயர் வைத்து காளி உருவத்தையும் பொறித்தனர். குளம் அமைத்ததைக் கூறும் கல்வெட்டில், மூவேந்தர் சின்னமான வில், புலி, மீன் பொறிக்கப்பட்டுள்ளது.
        கல்வெட்டில், தொண்டிக்கு "பவித்திரமாணிக்கப் பட்டினம்' என்ற பெயர் இருந்தது குறிப்பிடப்பட்டுள்ளது. பவித்திர மாணிக்கம் என்றால் "தூய்மையான மணி' என்று பொருள். அக்காலத்தில் வணிக முக்கியத்துவம் வாய்ந்த, செல்வ வளம் மிக்க காயல்பட்டினம், பெரியபட்டினம் போன்ற ஊர்களுக்கும் பவித்திரமாணிக்கப்பட்டினம் என்று பெயர் விளங்கியது. இந்த கல்வெட்டில் சேரர், சோழர் சின்னங்களும் பொறித்துள்ளதற்கு, சரித்திர ரீதியான காரணங்கள் உள்ளன. வீரபாண்டியனுக்கும், அவன் தாயாதியான விக்கிரம பாண்டியனுக்கும் அரசுரிமைப் போர் நடந்தது. வீரபாண்டியனுக்கு இலங்கை படைத்தலைவர்களான இலங்காபுரித் தண்டநாயகன், ஜகத்விஜயத் தண்டநாயகன் ஆதரவு தந்தனர். 
        மூன்றாம் குலோத்துங்க சோழன் படைத்தலைவன் திருச்சிற்றம்பலம் உடையான் பெருமான் நம்பிப் பல்லவராயனும் விக்கிரமபாண்டியனுக்கு ஆதரவாகப் போரிட்டு வென்று, விக்கிரம பாண்டியனை அரியணையில் அமர்த்தினான். இலங்கைப் படைத்தலைவர்களின் தலைகள் மதுரைக்கோட்டையில் தொங்கவிடப்பட்டன. சேர நாடு சென்ற வீரபாண்டியன், சேரன் துணையோடு மூன்றாம் குலோத்துங்கனிடம் அடைக்கலம் புகுந்தான். தன் இரு மக்களுக்கும் வீரகேரளன், பரிதி குலபதி என்று சேரர், சோழர் பெயரை வைத்தான். "மூன்றாம் குலோத்துங்கன், வீரபாண்டியனைப் பாண்டிய நாட்டின் ஒரு பகுதிக்கு அரசன் ஆக்கினான். அதனால், தன்னை அரசனாக்கிய சோழர் சின்னத்தையும், உதவிய சேரர் சின்னத்தையும் தன் கல்வெட்டில் வீரபாண்டியன் பொறித்திருக்க வேண்டும்' என்று ஈரோடு கொங்கு ஆய்வு மைய ஆய்வாளர் புலவர் ராசு தெரிவித்தார்.

இராசராச சோழன் கள்ளரே..ஆதாரங்கள் வருமாறு;

        அலையிருக்கும், மலையிருக்கும், காற்றிருக்கும் நாள்வரை மன்னராண்ட மதுரை தஞ்சை காஞ்சியோடு உறந்தையும் மறவர் நாடும் உலகமுற்றும் வாழ்கவாழ்க வாழ்கவே! --- கவிஞர் கண்ணதாசன்.

        குற்றப்பரம்பரை சட்டம் கொண்டுவருவதற்குமுன்பாக, பிரிட்டிசுப் பேரரசு, சுமார் 150 ஆண்டுகளுக்குமுன், டொணமூர் & சோல்பரி என்ற 2 ஆணையர்களைநியமித்து, கள்ளர்களின் வரலாற்றை ஆய்வுசெய்துள்ளது. அவ்வாய்வறிக்கையில், கள்ளர்களை வியப்பில் ஆழ்த்தும் பல வரலாற்றுச் செய்திகள் உள்ளன. விசயாலயச் சோழன் மனைவி, வலங்கைமான் ஆவூருக்கு அருகிலுள்ள ஊத்துக்காடு மழவராயர் மகள். மேலும் தஞ்சை பெரியகோயிலைக்கட்டிய இராசராச சோழன், கல்லணையைக்கட்டிய கரிகாலன், மகனின் மீது தேராட்டி பசுவுக்குநீதிவழங்கிய ஆரூர் மனுநீதிச்சோழன் அனைவரும் கள்ளர்களே! உலகிலேயே 2000 க்கும் மேற்பட்ட பட்டப்பெயர்கள் உள்ள ஒரே இனம் கள்ளர் இனம் மட்டுமே!!! இவ்வாறு அவ்வாய்வறிக்கை முடிவுகள் கூறுகின்றன. இராசராசோழனை பள்ளர், பறையர்,புலையர்,வலையர் என்றெல்லாம் இழிவுபடுத்துவதை தடுக்க நம் இனத்தினர் நீதிமன்றம் செல்லவேண்டிய அவசியமிருக்கிறது என்றே எண்ணுகின்றேன். ஏனெனில், நான் ஊத்துக்காடு மழவராயர் குடும்பத்தில் பிறந்தவன். இன்றைக்கும் ஊத்துக்காட்டில் 5 குடியானதெருக்கள் முழுவதும் வீரசிங்கநாட்டுகள்ளர் என்பவர்கள் மட்டுமே வசித்துவருகின்றோம். மேலும், சோழ மன்னர்கள் அனைவரும் வீர இனத்தினரான கள்ளர்குலத்தைச்சேர்ந்தவர்கள். எனவே, அவர்களைப்பற்றி எழுதவேண்டிய அவசியமும் அத்தியாவசியமும் எனக்கு ஏற்பட்டுள்ளதால், கட்டுரைகளை தொடங்குகின்றேன். 

பிற்காலச்சோழர்களின் ஆட்சிப்பட்டியல்: வஎண் சோழமன்னனின்பெயர் மனைவியின்பெயர் ஆட்சிக்காலம் தலைநகரம்
1 விசயாலயச் சோழன் ஊத்துக்காடு மழவராயர் மகள் கிபி.846-881 பழையாறைதஞ்சாவூர்
2 ஆதித்த சோழன் வல்லவராயர் மகள்இளங்கோபிச்சி கி.பி.871-907 தஞ்சாவூர்
3 1ம் பராந்தக சோழன் பழுவேட்டரையர் மகள் கி,பி,907-953 தஞ்சாவூர்
4 கண்டராதித்த சோழன் மழவராயர்மகள்செம்பியன்மாதேவி கி.பி.950- 957 தஞ்சாவூர்
5 அரிஞ்சய சோழன் வைதும்பராயர் &கொடும்புரார்மகள்கள் கி.பி.956 -957 தஞ்சாவூர்
6 சுந்தரசோழன் திருக்.மலையமான் சேதிராயர்மகள் கி.பி.957 -970 தஞ்சாவூர்
7 உத்தமசோழன் மழவராயர் & இருங்களார்மகள்கள் கி.பி.957 -970 தஞ்சாவூர்
8 1ம்இராசராச சோழன் கொடும்புரார் & பழுவேட்டரயர் மகள்கள் கி.பி.985 -1014 தஞ்சாவூர்
9 1ம் இராசேந்திர சோழன் 5 மனைவிகள்பட்டம் தெரியவில்லை கி.பி.1012 -1044 க.கொ.சோழபுரம்
10 முதல்இராசாதிராசசோழன் கி.பி.1018 -1054 க.கொ.சோழபுரம்
11 2ம் இராசேந்திரசோழன் கி.பி,1051-1063 க.கொ.சோழபுரம்
12 வீர்ராசேந்திர சோழன் கிபி.1063 1070 க.கொ.சோழபுரம்
13 அதிராசேந்திரசோழன் கிபி.1070 க.கொ.சோழபுரம்
14 முதல் குலோத்துங்கசோழன் காடவராயர்மகள் கிபி1070 1120 க.கொ.சோழபுரம்
15 விக்கிரமசோழன் கிபி.1118 1136 க.கொ.சோழபுரம்
16 2ம் குலோத்துங்க சோழன் கிபி.1133 1150 க.கொ.சோழபுரம்
17 2ம் இராசராச சோழன் திருக்கோ.மலைய.சேதிராயர் மகள் கிபி.1146 1163 க.கொ.சோழபுரம்
18 2ம் இராசாதிராசசோழன் கிபி.1163 1178 க.கொ.சோழபுரம்
19 3ம் குலோத்துங்கசோழன் கிபி.1178 1218 க.கொ.சோழபுரம்
20 3ம் இராசராச சோழன் வல்லவரையர் (வாணர்குல) மகள் கிபி.1216 1256 க.கொ.சோழபுரம்
21 3ம் இராசேந்திரசோழன் சோழகுலமாதேவி கிபி.1246 1279 க.கொ.சோழபுரம்

    "கள்வன் ராஜ ராஜன்" என்றும், "களப ராஜராஜன்" என்றும் தன்னுடைய மெய்க்கீர்த்திக் கல்வெட்டில் பொறித்து வைத்துள்ள இராஜராஜ சோழன் - கள்ளரே! ஆவார்.இரண்டாம் இராசராச சோழன் கிபி.1146ல் அரியணை ஏறினார். அவருடைய மூன்றாம் ஆட்சியாண்டில் கிபி.1149ல் இரண்டு மெய்க்கீர்த்திக்கல்வெட்டுக்களை வெளியிட்டார். அக்கல்வெட்டு-1ல் தன்னை "களப ராஜராஜன்" என்றும், மற்றொரு 2-வது கல்வெட்டில், தன்னை "கள்வன் ராஜ ராஜன்" என்றும் பொறித்துவைத்துள்ளார். 860 ஆண்டுகளுக்குமுன் வெட்டப்பட்டுள்ள "களப" என்ற வார்த்தை "களவ" என்பதன் திரிபு ஆகும். களவர், களபர் என்ற பட்டப்பெயர் உள்ள கள்ளர்கள் இன்றும் தஞ்சாவூரிலும், அதனைச்சுற்றியுள்ள ஊர்களிலும் வசித்து வருகின்றனர்.(ஆதாரம்: ந.மு.வேங்கடசாமி நாட்டாரய்யா அவர்கள் எழுதிய கள்ளர் சரித்திரம் & சர்வதச கள்ளர்பேரவை வெளியிட்டுள்ள பட்டப்பெயர்கள் பட்டியல்.)
ஆரியர்கள் இமயம் கடந்து இந்தியாவிற்குள் வந்த காலம் கி.மு.1500. அவர்கள் வடநாடெங்கும் பரவியதை ஆரிய வர்த்தனம் என்று வரலாறு குறிப்பிடுகிறது. ஆரியவர்த்தனம் நடைபெற்றபிறகு, அவர்கள் வாழ்வியல்தேடி தெற்கே விந்தியமலை கடந்து தமிழகத்திற்குள் நுழைந்தகாலம் கி.மு.6ம் நூற்றாண்டு ஆகும். கி.மு.6ஆம் நூற்றாண்டுக்குமுன், அதாவது ஆரியர்கள் தமிழகம் வருவதற்குமுன், தமிழகத்தில் சாதிப்பிரிவுகள் ஏதும் இல்லை. திருமணக்கலப்பு ஏதும் தடைசெய்யப்படவில்லை.
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@


மேற்கண்ட விளக்கத்திற்கு எமது மறுப்புரைகள்

        தொண்டியில் உள்ள குளம் நடுவில், மூவேந்தர் சின்னமான வில், புலி, மீன் மூன்றும் ஒன்றாகப் பொறிக்கப்பட்ட அரிய கல்வெட்டு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது எல்லோருக்கும் தெரிந்த விசயந்தான். இதற்கும் கள்ளருக்கும் என்ன சம்பந்தம் இருக்கிறது? இதன்மூலம் கள்ளர் என்போர் தரக்கூடிய தரவு என்ன?

     இராசராச சோழன் பற்றி ‘நன்செய் கழனிகளின் (மருத நிலத்தின்) நாயகனே நீ வாழ்க! என்று கூடத்தான் கவிஞ்ர்கள் சினிமாப் பாட்டு எழுதியுள்ளனர். இதை வைத்து முடிவு பண்ணிடலாம் அல்லவா? இராசராசசோழன் என்பவன் மள்ளன் என்று. ஏனென்றால், மருத நிலத்தான்தான் மள்ளனாயிற்றே!

    மூவேந்தர்கள், அவர்கள் ஆட்சியில் தங்களின் இனத்தவரையே தளபதிகளாக, நிலச்சுவான்தார்களாக, குறுநில மன்னர்களாக அதிகாரம் கொடுத்து ஆட்சி செய்ய வைத்துள்ளனர். இத்தகைய நம்பிக்கைக்குப் பாத்திரமானவர்களுக்கு சோழமன்னர்கள் ‘அரையன்’’ என்று பட்டம் வழங்கி கௌரவிப்பது வழக்கில் இருந்தது. இப்படி அரையன் பட்டம் பெற்றவர்கள் சோழப்பேரரசின் குறுநில மன்னர்களாகவும், படைத்தளபதிகளாகவும், பாதுகாவலர்களாகவும் விளங்கியுள்ளனர். வரலாற்றார் கே.கே.பிள்ளை அவர்கள் ‘பழுவேட்டரையரும், கொடும்பாளூர் வேளிர்களும் சோழன் பராந்தகனுக்குத் துணை புரிந்தனர்’ என்கிறார் (தமிழக வரலாறு மக்களும், பண்பாடும் பக்கம் 217)

    பழுவேட்டரையர் சேர மன்னன் மரபினர். அரையன் பற்றிய கல்வெட்டுக்கள் சோழப்பேரரசில் பல பகுதிகளில் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இந்த அரையன் பட்டந்தான் ‘ராயர் எனவும் மறுவியது. இந்த மாதிரி அரையர் பட்டம் கொண்டவர்கள்தான் உத்தம சோழன் காலத்தில் அவன் கீழ் அரசு புரிந்த குறுநில மன்னன் பழுவேட்டரையன் கந்தன் மறவன் (SSSII Vol.XIX ARE 381), பழுவேட்டரையன் மறவன் கண்டனார் (ARE 229/1926), கடம்பவேளான் என்ற மறவன் அனுக்கப்ப அரையன் (ARE137/1908). இங்கு, மறவன் என்பது படைத்தலைவரைக் குறிக்கும் (விளக்கத்திற்கு மறவர் யார்? கட்டுரையைப் பார்க்க) மேலும், சேதிராயன், காடவராயன், பல்லவராயன், காலிங்கராயன், மழவராயன் மற்றும் வல்லவராயன் என்போர் இவர்கள் அனைவரும் தமிழ்குடியாகிய வேந்தர் மரபினரே

    தமிழ் வேந்தர்கள் இந்த அரையர் மற்றும் வேளிர்களிடமிருந்து பெண் எடுத்தனர். இதுவும் வரலாற்றில் மறுக்க முடியாத உண்மை. (எ.கா) பழுவேட்டரையரான அடிகள் மறவன் கந்தனார் என்பவன் சுந்தரசோழன் மற்றும் உத்தமசோழன் காலத்தில் அந்த இருவரையும் சார்ந்து வாழ்ந்த ஒரு அதிகாரி. பழுவேட்டரையர் திருச்சியைச் சார்ந்த பழுவூரைச் சுற்றிய நிலப் பகுதியில் ஒரு நூற்றாண்டுக்கு மேல் பண்ணை நிலக்குடிகளாக இருந்தவர் (Epigrapic India. Vol.XV. No.5). மறவன் கந்தன் மகள் பஞ்சவன் மாதேவி இராசராச சோழனின் மனைவிகளில் ஒருத்தி. மற்றொரு பழுவேட்டரையர் மகள் சேர இளவரசனை மணந்தாள்(SII. Vol. XIX. No.153 ARE 364/1924). இந்த அரையர் மற்றும் வேளிர்கள் என்போர் தமிழ்தலைக்குடியான மள்ளர்குடியைச் சார்ந்தவர்களேயாவர்.

(எ.கா)
1.சோழ மண்டலம் பூவாலகுலவல்லி வளநாட்டு வேண்ணாட்டு பிரமதேயன் திருநலம் கல்வெட்டு (தெ.க.26/693) (கி.பி.943-44). அரசு அதிகாரியாக பணிக்க செம்பியதரையன். ‘பணிக்கன் என்பது சோழநாட்டில் மள்ளர்களின் பட்டங்களில் ஒன்று (பார்க்க:பழனிப்பட்டயச் செய்தி வரி 239-242)

2.செங்கல்பட்டு மாவட்டம்,திருவள்ளூர் வட்டம் கூவம் திருப்புராந்தகேசுவர் கோயில் கல்வெட்டு (தெ.க.26/360) ‘சந்தி விளக்கு வைத்தவர் திரும(ப)ள்ள வீரசோழப்பேரையன் மகன் அத்திப்பேரையன் இங்கு மள்ளர் மற்றும் பள்ளர் என்ற இருவரும் ஒருவரே என்ற விளக்கமும் உள்ளது.

3.கோயம்புத்தூர் மாவட்டம் பேரூர் பட்டீஸ்வர மள்ளர் கோயில் கல்வெட்டு (தெ.க.5/240) ‘பட்டீஸ்வர மள்ளர் கோயிலுக்கு நந்தவனம் ஏற்படுத்திக் கொடுத்த குடும்பர் ‘தென்வழிநாட்டு ஏழூர் ஊராளி தென்குடும்பரில் சிங்கன் சோழனான அணுத்திரப் பல்லவரையன்

      இப்படி ஏராளமான ஆதாரம் பள்ளர்களுக்கு உள்ளது. இதுபோன்று எந்த ஆதாரமும் கள்ளர்களுக்கு நிச்சயமாகக் கிடையாது. இதில் முக்கியமான விசயம் என்னவென்றால், அரையர்கள் மற்றும் வேளிர்கள் அனைவரும் தமிழ்க்குடிகள். ஆனால், இடைக்காலமான கி.பி. 12-13 நூற்றாண்டுக்கு முந்திய காலக்கட்டத்தில் தமிழ்நாட்டில் கள்ளர் என்ற இனம் கிடையாது. பின் எப்படி அவர்கள் பிற்காலச் சோழமன்னர்களுக்குப் பெண் கொடுத்திருக்க முடியும்?

     இராசராசனை அவனது உண்மையான இனமான மள்ளர் என்ற பள்ளர் இனத்தைச் சொல்லிப் பெருமைப்படுத்துகிறார்கள்.போலியாக கள்ளன் என்று சொல்லி இழிவுபடுத்துவதுதான் தவறாகும். நீதிமன்றம் போக விரும்புபவர்களை யாரும் பயந்து தடுத்துக் கொண்டிருக்கவில்லை. தாராளமாகச் செல்லலாம். அப்பவாவது உண்மை உலகுக்குத் தெரியட்டுமே!

    ‘கள்வன் ராஜராஜன் என மெய்கீர்த்திச் செய்தி இருந்தது என்று சொல்வதெல்லாம் ஆதாரமில்லாத அப்பட்டமானக் கட்டுக்கதை. இது ஆராய்ச்சி இல்லாதோர் கூற்று. உண்மையில் கள்ளர் இனத்தைச் சார்ந்த வரலாற்று ஆராய்ச்சியாளர்களே இதைக் கேட்டு சிரிப்பார்கள்.
உண்மையில் ‘களப என்று இருந்தால் அது கள்ளர் என்ற சாதியைக் குறிக்காது. களப என்பது யானைக்கன்று என்று அர்த்தமாகும். பொதுவாகவே சோழமன்னர்கள் ‘பரகேசரி போன்ற வார்த்தைகளை பெயருக்கு முன்னால் போட்டுக்கொள்வதுண்டு. அது சாதியைக் குறிக்காது. பரகேசரி என்றால் பகைவர்களுக்கு சிங்கம் போன்றவன் என்று அர்த்தம். அதேபோன்றே, களப என்று இருந்தால் அதன் அர்த்தம் யானைக்கன்று என்பதாகும்.

    கள்ளர்களுக்கு 418-கும் மேற்பட்ட பட்டங்கள் தற்காலத்தில்(?) உள்ளது உண்மையே! இது ஒன்றே சொல்லி விடும் கள்ளர்கள் யார் என்பதை! கள்ளர்கள் தென்மாவட்டங்களிலிருந்து தஞ்சாவூரில் குடியேறியதை 1970 ஆண்டின் பிற்பட்டோர் அறிக்கைக் கூறுகிறது. மேலும், அப்படி தஞ்சைக்கு வந்த கள்ளர்கள் தாங்கள் பூர்வீகத்தில், மதுரை பிறமலைக் கள்ளர் வம்சாவழியில் வந்தவராகக் கூறுகின்றனர். பிறமலைக் கள்ளர் என்றால் முஸ்லீம்களிலிருந்து மாறியவர் என்பது நாம் அறிந்ததே. எனவே, தஞ்சைக்கு வந்தேரிகளான கள்ளர்கள் அங்கிருந்த பூர்வீக விவசாயிகளின் நிலங்களைக் கைப்பற்றி பூர்வீகக்குடிகளை வெளியேற்றிய பின்பு, அங்கு தங்களது ஆதிக்கத்தை நிலைநிறுத்திக் கொள்ளவே தமிழர்களின் பல பட்டங்களை இவர்கள் வைத்துக்கொண்டனர். இதுதான் கள்ளர்களுக்கு 400-கும் மேற்பட்ட பட்டங்கள் வந்ததன் ரகசியம். முக்கியமாக, கி.பி.18 ஆம் நூற்றாண்டில் ஹைதர் அலி படையெடுப்பிற்குப் பிறகு இவர்கள் அதிக அளவில் தஞ்சை மண்ணில் குடியேறினர். இதுதான் கள்ளர்கள் தற்காலத்தில் தஞ்சையில் பெரும் எண்ணிக்கையில் இருப்பதன் காரணம்.

Thursday, December 6, 2012

முக்குலத்தோரின் தோற்றம் பற்றிய புனைவும், உண்மையும்

கள்ளர்,மறவர்,அகமுடையார் தமது தோற்றம் பற்றி கூறும் விளக்கங்கள்

@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
* முக்குலத்தோர் தோன்றிய இடம்
முக்குலத்தோர் பிறப்பிடமும் தமிழ் மொழியின் பிறப்பிடமும் குமரிக்கண்டம் தான். அக்கண்டம் நீரில் மூழ்கிப் போனது. முச்சங்க வரலாற்றாலும், சிலப்பதிகார உரைகள் மூலம் தெரியலாம். திரு. பி.டு. சீனிவாசய்யர், திரு சேசையர் திரு. இராமச்சந்திர தீட்சிதர் போன்றோரின் வரலாற்று நூல்கள் வாயிலாகவும், தேவநேயப் பாவாணர் எழுதிய "முதற்தாய் மொழி" வாயிலாகவும், நாம் நன்கறிகிறோம். தமிழன் தோன்றிய இடம் குமரிக்கண்டம், கையாண்ட மொழி தமிழ் திராவிட மொழியாகும். பல்லாயிரம் ஆண்டுகளுக்குப் பின் படிப்படியாக வளர்ந்த tamilar , புகழின் உச்சக்கட்டம் எட்டினர். பழந்தமிழ் நாட்டை உலகிற்குச் சுட்டிக் காட்டினர்.
சடையவர்மன் அதிவீரராம பாண்டியன் கி.பி. 1564 முதல் 1604 வரை பாண்டிய நாட்டினை ஆட்சி செய்த மன்னனாவான். நெல்வேலி மாறனின் முதலாம் மகனாவான். அழகன் சீவலவேள் என்ற பெயரினைப்பெற்ற இவன் தனது தந்தையில் நினைவாக தென்காசியில் குலசேகரமுடையார் ஆலயம் அமைத்து விண்ணகரம் ஒன்றினையும் அமைத்தான். சிவனிடன் பக்தியுடைய இம்மன்னன் சிறந்த புலவனும் ஆவான். தமிழில் மிகுந்த பற்றுடன் இருந்த இம்மன்னன் வடமொழியிலும் தேர்ச்சி பெற்றவன் கூர்ம புராணம், வாயுசங்கிதை, காசிகாண்டம், இலிங்க புராணம், நறுந்தொகை ஆகிய நூல்களினை இயற்றிய பெருமையினையும் உடையவனாவான் இம்மன்னன். வடமொழி நூலான 'நைஷதம்' என்னும் நூலினை 'நைடதம்' என மொழி பெயர்த்த ..இவன் வெற்றிவேற்கை எனும் தமிழ் நூலையும் எழுதி உள்ளன்.

* வெற்றிவேற்கை எனும் தமிழ் நூல் நீதி நூல் ...அதில் நீதி மட்டும் போதிக்காமல் ஒரு சரித்திர உண்மையையும் கூறி உள்ளார் . அதை காண்போம் .

''இருவர் தம் சொல்லையும் எழுதரம் கேட்டே
இருவரும் பொருந்த உரையார் ஆயின்
மனு முறை நெறியின் வழக்கு இழந்தவர் தம்
மணமுற மருகி நின்று அழுத கண்ணீர்
முறையுறத் தேவர் மூவர் காக்கினும்
வழி வழி ஈர்வதோர் வாள் ஒக்கும்மே.''

பொருள் : வழக்கு தொடுத்தவர் அதனை மறுப்பவர் இருவர் கூற்றையும் எழு முறை கேட்டு அவை பொருந்த வராமல் நீதி முறையாக கிடைக்க வில்லையானால் வழக்கை இழந்தவர் அறம் பிறழா மனதுடன் நின்று அழுத கண்ணீர் அறமுறை பிழையாது நீதி வழங்கும் ஆற்றல் மிக்க தேவர் மூவர் { சேர , சோழ ,பாண்டியர் } காக்கினும் . அந்த கண்ணீருக்கு காரணமானவர் வழி வழி தோன்றும் வாரிசுகளையும் அழிக்கும் வாளாகும். இந்த பாடலை இயற்றியவர் ஒரு பாண்டிய மன்னராவார். அவர் தேவர் மூவர் என்று சேர , சோழ பாண்டியரை விளித்து இருப்பதால் மூவரசரும் தேவர் அதாவது முக்குலதோர் என்று ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்துள்ளார் .எனவே, தற்க்காலத்தில் சிலர் மாறுபட கூறி வருவது முக்குலதோர் மீது உள்ள காழ்ப்பு உணர்ச்சியால் என்பதை அறியலாம் .. 
இதில் முறையுறத் தேவர் மூவர் என்பதில் பொதுவாக முப்பெரும் தேவர் என சிவன் ,திருமால் , பிரமன் இவர்களை குறிக்கும் ... மூவர் என்பது தமிழில் பொதுவாக சேர , சோழ ,பாண்டியரை குறிக்கும் . ஆனால் இதில் முறையுற என்பதை கவனிக்க வேண்டும் . அதாவது நீதி நெறி வழுவாமல் காப்பாற்றுவது அரசர்களை குறிக்கும் ..

எடுத்துக்காட்டாக
"முறை செய்து காப்பாற்றும் மன்னவன் மக்கட்கு 
இறை என்று வைக்கப்படும் ."
எனும் திருக்குறள் வாயிலாக அறியலாம் .

இந்த பாடலை இயற்றியவர் ஒரு பாண்டிய மன்னராவார்.
அவர் தேவர் மூவர் என்று சேர , சோழ பாண்டியரை விளித்து இருப்பதால்
மூவரசரும் தேவர் அதாவது முக்குலதோர் என்று ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்துள்ளார. கொங்கு என்றால் தேவர்கள் தேன் சொறிந்த நாடு என பொருள். தலை சிறந்த தமிழகத்தில் சேர,சோழ,பாண்டியர் எனும் உற்ற சகோதரர்கள் ஆட்சியில் சமதர்மம் , ஜனநாயகம், சன்மார்கம் யாவும் தலைத்தோங்கி நின்ற காலத்தில் ஒரே குலம் ஒருவனே தேவன் என உலகை படைத்த பார்வதி பரமசிவன் நாமம் பாடி உழவு துறைக்கு முதலிடம் கொடுத்தார்கள். மேற்கே திருவிதாங்கூர், கிழக்கே திருவாரூர், வடக்கே திருவேங்கடம், தெற்க்கே திருமதுரை வரை மன்னன் சேரன் தலைமையில் யாவரும் ஒன்று பட்டு திருப்புகழ், தேவார தெய்வ வழிபாடு பட்ட கவிஞர்களுடன் சிற்பிகள் ஒன்றினைந்து ரத, கஜ, துரக, பாதிகளைக் கொண்டு சிவாலயங்களும், விஷ்ணு ஆலயங்களும் கி.பி. ஆறாம் ஙூற்றாண்du அமைக்கப்பட்டது. சேர மன்னனின் துணை கொண்டு நதிகளுக்கு கரைகளும், கற்களை கொண்டு அணைகள் கட்டினர்கள். காவிரி நதியை தாயாக கொண்டு கொங்கு நாட்டின் சேக்கிழார் வம்ச உழவர் பெருமக்கள் நான்கு லட்சம் பேர் திருவாரூரில் தியாகராஜேஸ்வர் ஆலயம் அமைய ஆவண செய்தார்கள்.
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@

மேற்ப்படி விளக்கங்களுக்கு எமது மறுப்புரைகள்


     தமிழன் தோன்றியது, ஏன் உலகின் முதல் மாந்தன் தோன்றியது கடலில் மூழ்கிப் போன ‘லெமூரியாக் கண்டம்’’ என்பதை தேவநேயப் பாவாணர் மிக விளக்கமாகத் தெளிவுபடுத்தி விட்டார். எனவே, இதற்கு புது விளக்கம் எதுவும் தேவைப்படவில்லை. 

     ஆனால்,கள்ளர்,மறவர்,அகமுடையார் என்போர் தமிழர் தானா என்பதுதான் சற்று சிந்திக்க வேண்டிய விசயம். ஏனெனில், கள்ளர் மற்றும் மறவர் என்ற இனக்குழுக்களின் முழுமையும், அகமுடையார் இனத்தின் ஒரு சிறிய பகுதியும் பூர்வீகத் தமிழர்கள் என்பதற்கு போதுமான ஆதாரங்கள் இல்லை. அவர்கள் அப்படி இருக்கும்பட்சத்தில், சங்க இலக்கியத்தில் அவர்கள் பற்றிய அடையாளம் கண்டிப்பாக இருந்திருக்கும். ஆனால், சங்க இலக்கியமானது தமிழ்த்தலைக்குடியான மள்ளர்தம் மாட்சிமை பெற்ற வாழ்க்கையையும், பிற தமிழ்க்குடிகளின் வாழ்க்கை முறையையும் காட்டும்போது, கள்ளர் மற்றும் மறவர் பற்றிய ஏதும் குறிப்பிடவில்லை (கவனிக்க: முக்குலத்தோர் என்பவர் யார்?மறவர் யார்?யார் வந்தேறி?) நெல்வேலி மாறன் மற்றும் அவனது மகன் இருவரும் மள்ளர்குல பாண்டிய வேந்தர்கள் என்பதை (திருநெல்வேலி: நெல்லையப்பர் கோவிலும், நெல்லின் மக்களும்) என்ற பதிவின் மூலம் தெரிந்துகொள்ளலாம்.

     ‘தேவர்’ என்ற பட்டத்தை வைத்து மூவேந்தர்களை தற்கால ‘முக்குலத்தோர்’ இனத்தைச் சார்ந்தவர்கள் என்று சொல்வது உண்மையில் முட்டாள்தனமான விசயமாகும்.(பார்க்க:'தேவர்' பட்டமும், முக்குலத்தோரின் பொய்களும்) ஏனெனில், தேவர் என்பது தனிநபர் பட்டமேயன்றி, அது சாதியைக் குறிப்பிடுவது கிடையாது. உண்மையில், சேரர், சோழர், பாண்டியர் மூவரும் தமிழ்த்தலைக்குடியான பள்ளர்(மள்ளர்)குடியைச் சார்ந்தவர்கள்.

    சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன் பற்றி வெள்ளைக்குடி நாகனார் பாடிய சங்கப்பாடல்:

    "மண்திணி கிடக்கைத் தண்தமிழ்க் கிழவர்
    முரசு முழங்கு தானை மூவர் உள்ளும்
    அரசு எனப்படுவது நினதே பெரும"  (புறநானூறு 35:3-5)

பொருள்: ...... மண் செறிந்த உலகத்தில், (அருள்மிக்க) தமிழ்த்தலைமகன்களான, முரசு ஒலிக்கும் படை பொருந்திய மூவேந்தருள்ளும் அரசு என்று பாராட்டிச் சொல்லப்படுவது நின் அரசே! பெரும!

     இப்பாடலில் உள்ள ‘கிழவர்’ என்பது மருதநிலத் தலைமகனான மள்ளனைக் குறிக்கும் சொல்லாகும். ‘தமிழ்க் கிழவர் மூவர்’ எனும்போது அது மருதநிலத் தலைமகன்களான மூவேந்தரைக் குறிக்கும். எனவே, மூவேந்தரும் பள்ளன்(மள்ளன்) என்பது தெளிவாகிறது.
இதனை திவாகர நிகண்டு கீழ்கண்டவாறு விளக்குகிறது.

306     "மருதநிலத் தலைமகன் பெயர் (3)
        ஊரன், மகிழ்நன், கிழவன் என்று இவை
        சாலி மருதத் தலைமகன் பெயரே".

இங்கு ‘சாலி என்பது நெல்லைக் குறிக்கும். ‘சாலி மருதத் தலைமகன் என்பது நெல் வளநாட்டு தலைமகன் என்பதாகும்.

Wednesday, December 5, 2012

முக்குலத்தோர் என்பவர் யார்?

கள்ளர்கள் 'முக்குலத்தோர் என்போர் யார்' என்பதற்கு கொடுக்கும் விளக்கங்கள்

@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@

  • முக்குலத்தோர் (தேவர்) 
     முக்குலத்தோர் என்றும் இச்சாதியினரைக் குறிப்பிடுவதுண்டு. கள்ளர், மறவர், அகமுடையார் ஆகிய முக்குலங்களும் போர்த் தொழிலை அடிப்படையாக கொண்டு வாழ்ந்து வந்ததால் இந்த மூன்று சாதியினரும் முக்குலத்தோர் என்று அறியப்படுகின்றனர். இந்திர(சூரிய) குலத்தினர் - கள்ளர், சந்திர குலத்தினர் - மறவர், அக்னி குலத்தினர் - அகமுடையார் என்பதை வரலாற்றின் மூலம் அறிய பெறலாம். இந்த மூன்று குலத்தினரும் தேவர் என்ற பொதுவான பெயரோடு குறிக்கப்பெறுவர். கள்ளர், மறவர், அகமுடையார் ஆகிய மூவரும் சகோதரர்களே என்றும் சிலர் குறிப்பிடுகின்றனர். வரலாற்று அறிஞர் எட்வர் தாட்சன் அவர்களும் இவ்வாறே கூறுகின்றார்.
  • கள்ளர், அகமுடையார் , மறவர் ஆகிய மூன்று சாதியினரும் தேவர் எனும் சாதியின் கீழ் ஒருங்கிணைக்கப்படுகின்றனர். மூன்று சாதியினராக இவர்கள் மூன்று குலத்தவர்களாகக் கொண்டு முக்குலத்தோர் என்றும் குறிப்பிடுவதுண்டு. 
  • தேவர் (முக்குலத்தோர்)
     தேவர் சமூகத்தினர் போர்க்குணம் படைத்த வீரம் செரிந்தவர்களாக வரலாற்றுகாலம் தொட்டு இன்றுவரை விளங்கி வருகின்றனர். தேவர் என்போர் கள்ளர், மறவர் மற்றும் அகமுடையார் இம்மூவரும் உள்ளடக்கிய ஒரு சமூக கூட்டமைப்பு. இம் மூவரும் இணைந்தவொரு வீரவர்க்கமானது முக்குலத்தோர் யென்று வழங்கப்பட்டு வருகிறது. 
         ஆங்கில காலணித்துவ காலங்களில் அவர்களுக்கு கீழே அடிமைப்படுவதை எதிர்த்து ஆங்கிலேயர்களுக்கு சிம்ம சொப்பனமாக திகழ்ந்து வந்தனர். ஆங்கிலேய ஆதிக்கத்தின் போது தமிழகத்திலிருந்து சட்டிஸ்கர் பகுதிக்கு இடம் பெயர்ந்த தேவரின மக்கள் ஒரு சிறிய சமூகமாய் இன்றளவிலும் வசித்து வருகின்றனர். 
    • தேவர் (முக்குலத்தோர்) சமூகத்தினர் பெரும்பான்மையானோர் தென் தமிழகத்து மாவட்டங்களை பூர்வீகமாகக் கொண்டுள்ளனர். மேலும், தஞ்சை, திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, திருச்சி யென தமிழகத்தின் பெரும்பகுதிகளில் வாழ்ந்து வருகின்றனர். குறிப்பாக தென் தமிழகத்திலும், மத்திய தமிழகத்திலும் தேவரின மக்கள் அதிகம் காணப்படுகின்றனர். 
    • முக்குலத்தோர் :
         தமிழை வளர்க்க மிகவும் செம்மையான பணிகளை செய்துள்ளனர். "கள்ளர் மறவர் கனத்ததோர் அகமுடையார் மெல்ல மெல்ல வெள்ளாளர் ஆனார்" என்ற பாடலை செவி வழி கேட்டறிந்து இருக்கலாம்
    @@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@

    மேலே கொடுக்கப் பட்ட விளக்கங்களுக்கான எமது மறுப்புரைகள்:


    • ஆங்கிலேயர் ஆட்சி காலத்திலிருந்து மறவர்,கள்ளர் மற்றும் அகமுடையர் (சேர்வை) என்ற வேறுபட்ட மூன்று இனத்தாரும் தாங்களை இந்திரனுக்கு அகலிகை மூலம் தவறான வழியில் பிறந்தவர் என்றும், இந்திரனுக்குப் பிறந்ததால் தாங்கள் ‘தேவர் என்றும், அதன் அடிப்படையில் தாங்கள் முக்குலத்தார் என்பதாகவும் கூறிக் கொள்கின்றனர் (பூவிந்திர புராணம்). ‘தேவர் என்ற பட்டத்தின் காரணத்தால் தாங்கள் மூவேந்தர் வம்சாவழியினர் என்றும் உரிமை கொண்டாடுகின்றனர். இது உண்மையா?
    ஆங்கிலேயர் ஆட்சிக்கு முந்திய நாயக்கர் ஆட்சிக் காலத்தில் இவர்கள் மூவரும் சகோதரர் எனவும், அதனால் முக்குலத்தார் எனவும் அறியப்பட்டதற்கு எந்தவித ஆதாரமும் கிடையாது.
        தேவர் என்பது அரசன், மதகுருமார் மற்றும் கடவுள் ஆகியோரைக் குறிக்கும் ஒரு மரியாதைச் சொல்லாகும். தேவர் என்ற சொல்லிற்கு கடவுள் அல்லது தெய்வம் எனப் பொதுவாகப் பொருள் கொள்கின்றனர். அதனை தலைவன் எனக் ‘கால்டுவெல் குறிப்பிடுகிறார் (கால்டுவெல், திருநெல்வேலி சரித்திரம், பக்கம் 52-53). தேவர் என்ற பட்டமானது தற்காலத்தில் மறவர் என்று காட்டப்படுகின்ற இனத்தைச் சார்ந்த சேதுபதி மன்னர்களுக்கு இருந்தது உண்மையே. 17 ஆம் நூற்றாண்டு காலத்திலிருந்து உள்ள கல்வெட்டுக்களில் இவர்கள் ‘சேதுபதி காத்த தேவர் என்றே குறிப்பிடப்படுகின்றனர். ஆனால், அதற்கு முன்பு அப்படி இருந்ததற்கு நிச்சயமாக ஆதாரம் இல்லை.
         இந்த ‘தேவர் என்ற சொல்லைப் பெயருக்குப் பின்னால் பட்டமாகப் பயன்படுத்துகின்ற வழக்கம் சங்ககாலம் தொட்டு வழக்கில் இருந்து வந்துள்ளது. (பார்க்க: 'தேவர்' பட்டமும், முக்குலத்தோரின் பொய்களும் )  ஆனால், அக்காலத்தில் இது ஒரு குறிப்பிட்டச் சாதியைச் சார்ந்தவர் பயன்படுத்துகின்ற பட்டமாக இல்லை. அதனடிப்படையில் பல புலவர்கள் இப்பெயர் பெற்றிருந்தனர்.
         (எ.கா) பெருந்தேவனார், ஈழத்துபூதன் தேவன், பூதன் தேவனார், வாயிலான் தேவன் மற்றும் தேவனனார். இவர்கள் யாவரும் வெவ்வேறு வகுப்பினைச் சார்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
        இடைக்காலத்தில் தமிழகத்தில் ஆட்சியிலிருந்த பிற்காலச் சோழ மன்னர்கள் மற்றும் பாண்டிய மன்னர்கள் தேவர் என்று பெயரிட்டுக்கொண்டனர். இக்காலத்திலும் இது குறிப்பிட்ட சாதிப் பிரிவினருக்கான பட்டமாக இல்லை.
        (எ.கா) பொன்மாளிகை துஞ்சிய தேவர், இராசராச தேவர், சுந்தரபாண்டியத் தேவர் மற்றும் குலசேகர பாண்டியத் தேவர்.
    பொதுவாக பேரரசர்களும், அவர்களுக்குக் கீழ் இருந்த தளபதிகளும் மற்றும் குறுநில மன்னர்களும் தங்களது முதன்மை மற்றும் அதிகாரத்தைக் காட்டுகின்ற வகையில் ‘தேவர் என பட்டம் சூடிக்கொண்டனர். பாண்டிய மன்னன் சுந்தரபாண்டியன் என்பவன் சுந்தரபாண்டியத் தேவர் என அழைக்கப்பட்டான். ஆனால், அவனுடன் பிறந்த அவனது மற்ற சகோதரர்கள் ‘தேவர் என்ற பட்டத்தைச் சூடிக் கொள்ளவில்லை. எனவே, இடைக்காலத்தில் தேவர் என்ற பட்டம் தனிநபர் சார்ந்த பட்டமாக இருந்ததேயன்றி ஒரு சாதி சார்ந்த பட்டமாக இல்லை என்பதே உண்மை. பிற்காலத்தில், தமிழ் வேந்தர்கள் வீழ்ச்சியடைந்த நிலையில், கண்டவர்கள் எல்லாம் இந்த தேவர் பட்டத்தை தங்களது பெயருக்குப் பின்னால் போட்டுக் கொண்டனர். இதற்கு ‘கண்டராதித்த தேவன் என்ற பெயர் கொண்ட ஒரு தாசியின் மகனைக் குறிப்பிடலாம். சில காலத்திற்கு முன்பு வரை கள்ளிக்கோட்டை வெள்ளாளர்களுக்கும் தேவர் என்ற பட்டமிருந்தது குறிப்பிடத்தக்கது. (நாஞ்சில் நாடன், நாஞ்சில் நாட்டு வெள்ளாளர் வாழ்க்கை, பக்கம் 89).
         பிற்காலச்சோழ, பாண்டிய பேரரசுகளின் வீழ்ச்சிக்குப் பின்பு தமிழகத்தில் தமிழ் பேசாத இனத்தவரே பெரும்பாலும் அரசியல் அதிகாரத்தில் இருந்தனர். அந்த வகையில் ஒரு சில கள்ளர், மறவர் இனக்குழுக்கள் தாங்கள் வாழ்கின்ற பகுதிகளுக்கு அரசியல் அதிகாரத்தைப் பெற்றனர். அந்நிலையில், தேவர் என்ற பட்டத்தினை தங்களை முதன்மைப் படுத்தும் பொருட்டு பயன்படுத்தி இருக்கலாம். (இரா.சுந்தரவந்தியத்தேவன் ‘பிறமலைக் கள்ளர் வாழ்வும் வரலாறும் பக்கம் 142). இதன் அடிப்படையில், சேதுவின் பதியாகச் சொல்லப்படுகின்ற இராமேஸ்வரத்தைப் பாதுகாக்கும் கூட்டத்தின் தலைவனைக் குறிக்கும் சொல்லாக இந்த ‘தேவர் என்ற சொல் பயன்படுத்தப்பட்டதா? இது ஒரு வழி.
         கி.பி 17 ஆம் நூற்றாண்டு காலத்திய சேதுபதி மன்னர்களாகிய தற்கால மறவர் என்ற இனத்தைச் சார்ந்தவர், ‘தேவர் என அழைக்கப்பட்டனர் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. ஆனால், சேதுபதி வரலாற்றை ஆராய்ந்த முனைவர் எஸ்.எம்.கமால் அவர்கள், ‘சேதுபதியின் வரலாறு 17 ஆம் நூற்றாண்டிலிருந்து அதாவது, கி.பி 1601 லிருந்து முரண்பாடு இல்லாத வகையில் இருக்கிறது. ஆனால், அதற்கு முந்தைய சேதுபதி மன்னர்களது ஆட்சித் துவக்கம், அவர்கள் முன்னோர் மரபு பற்றிய முறையான வரலாற்றுச் செய்திகள் இதுவரைக் கிடைக்கவில்லை என்கிறார். மேலும் ‘முதல் சேதுபதி மன்னராகச் சுட்டப்படுகின்ற (கி.பி.1603) உடையான் ரெகுநாத சேதுபதி மன்னரது தந்தையார் பெயர் என்ன என்பதும், அவர் சேதுபட்டத்திற்கு எந்த முறையில் தகுதி பெற்றவர் என்பதும் அறியத்தக்கதாக இல்லை எனவும் குறிப்பிடுகிறார் (எஸ்.எம்.கமாலின் ‘சேதுபதிகள் சரித்திரம் பக்கம் 9). அப்படியெனில், கி.பி 17 ஆம் நூற்றாண்டுக்கு முன்பு சேதுபதி மன்னர்கள் இருந்தார்களா? அப்படி இருந்தார்கள் என்றால் அவர்கள் தற்கால மறவர்களின் முன்னோர்களா? இல்லையா?  அல்லது அப்போதைய சேதுபதி மன்னர் என்போர் வேறு இனத்தைச் சார்ந்தவர்களா? அவர்களுக்கும் ‘தேவர் என்ற பட்டம் இருந்ததா? என்ற விவரங்கள் நிச்சயமாக இல்லை. இந்த நிலையில் தேவர் என்ற பட்டம் கொண்ட 17 ஆம் நூற்றாண்டு காலத்திய மறவராகிய சேதுபதி மன்னர்களை, ‘தேவர் என்ற பட்டத்தின் மூலம் இடைக்காலத்திய தமிழ் மூவேந்தர்களுடன் நிச்சயமாகத் தொடர்புபடுத்த முடியாது. பிற்காலத்தில், தமிழ் வேந்தர்கள் ‘தேவர் என்று பட்டம் போட்டுக்கொள்வதை நிறுத்திக் கொண்டனர் என்பதையும் நினைவில் கொள்ளவேண்டும்.
         இதற்கிடையில், தேவர் என்ற சொல் பற்றி ஆராய்ந்த அந்தோணிசாமி நாடார் அவர்கள், ‘தெவ்வர் என்ற சொல்லிற்குப் பகைவன், கொடியவன் எனப் பொருள் எனவும், மறவர் போன்ற இனக்குழுக்கள் முரட்டு சுபாவம் உடையவராக, குடிமக்கள் சொத்தை கொள்ளை அடிப்பவராக இருந்ததால் அவர்கள் அமைதியான குடிகளுக்குப் பகைவர்களாகக் கருதப்பட்டனர். அதனால், அவர்கள் தெவ்வர் என அழைக்கப்பட்டனர். அச்சொல்லே பின்னர் தேவர் என மருவியதாகக் கூறுகிறார் (அந்தோணிசாமி நாடார், சான்றோர் வரலாறு, பக்கம் 138). 

         மேலும், மறவர்களின் பூர்வீகம் பற்றி ஆராய்ந்த திரு, ஆர்.சத்தியநாத அய்யர் அவர்கள் ‘மறவர் தலைவனின் தலைநகரமான பெரியபட்டணம் சிறு சிறு குன்றுகளால் சூழப்பட்டுள்ளது. இங்கு நாகரிகமற்ற காட்டுமிராண்டிகளான கொடிய மறவர்கள் வாழ்கின்றனர். இவர்களது தொழில் கொள்ளையடித்தல் ஆகும் என்று கூறுகிறார் ( R.Satyanatha Ayyar, The History of Nayaks-page 322). எனவே, ‘குடிமக்களுக்குப் பகைவர்களான முரட்டு சுபாவம் கொண்ட ‘தெவ்வர் என்போரே ‘தேவர் ஆகி இருக்க வாய்ப்புண்டு என்ற முடிவு ஒத்துவருவதாக இருக்கிறது.
         அகமுடையார் என்ற சேர்வை இனத்தார்கள் கி.பி 17 ஆம் நூற்றாண்டு காலத்தில் சேதுபதி மன்னர்களிடத்தில் சேவைக்காரன் என்ற வகையில் கீழ்நிலை ஊழியம் செய்ததாகவே தெரிகிறது. அக்காலத்திய சேவைக்காரர்களில் முக்கியமானவர்களாகக் குறிப்பிடப்படுபவர் மருது சேர்வைக்காரர்கள். இவர்கள் பற்றி முனைவர் எஸ்.எம்.கமால் குறிப்பிடுவது ‘மருது சகோதரர்கள் வேலுநாச்சியாரின் அந்தரங்கப் பணியாளர்களாகப் பணி புரிந்தனர். நாளடைவில் விதவையான சிவகங்கை ராணி வேலுநாச்சியாருக்கும், வெள்ளை மருதுவிற்கும் ஏற்பட்ட நெருக்கம் சிவகங்கை அரசியலில் விபரீதத்தை விளைவித்தது. அரசியாரது பலவீனத்தைப் பயன்படுத்தி, தாங்களே ஆட்சியாளர்களாக அவர்கள் இயங்கி வந்தனர். இதனை அறிந்த இராமநாதபுரம் மன்னர் முத்துராமலிங்க சேதுபதி, வீரமறக்குடி வழியினரான தமது உறவினர் ராணி வேலுநாச்சியாரை, அவரிடமே அடிமைகளாக இருந்த மருது சேவைக்காரர்கள் ஆட்டிப்படைப்பதா? என்ற வேதனையும், சினமும் அடைந்தார். மேலும், ஆண் வாரிசு அற்ற சிவகங்கை சமஸ்தானத்தை தமது இராமனாதபுரம் சமஸ்தானத்துடன் இணைக்க விரும்பி, ஆற்காடு நவாப்பிற்கு சேதுபதி மன்னர் கடிதம் எழுதினார். இதனடிப்படையில் சேதுபதி மன்னருக்கும், மருது சேர்வைக்காரருக்கும் பகை வளர்ந்தது. (எஸ்.எம்.கமாலின், ‘சேதுபதிகள் சரித்திரம் பக்கம் 239-247). இந்தக் காலக்கட்டத்தில் சேர்வைக்காரர் மற்றும் மறவர் ஆகியோருக்கு இடையே முக்குலத்தோர் என்ற பந்தம் ஏதும் நிச்சயமாக இல்லை. மேலும், மருது சகோதரர்கள் ‘சேர்வைக்காரர் என்றே அழைக்கப்பட்டனர். அவர்கள் ‘தேவர் என்று அழைக்கப்படவில்லை. அவர்களது இனத்தாரும் தேவர் என்று அழைக்கப்படவில்லை.
         அதே 17 ஆம் நூற்றாண்டு காலத்தில் கள்ளர்களுக்கும், மறவர்களுக்கும் எந்த சம்பந்தமும்  கிடையாது. உண்மையில் சேதுநாட்டில் கள்ளர்கள் கொள்ளை அடித்து அட்டூழியம் செய்ததும், அவர்களை சேதுபதி மன்னர்கள் தண்டித்ததுமே நடந்தது. இதுவும் சேதுபதி வரலாற்றில் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. பின்னால் ஒரு காலகட்டத்தில் புதுக்கோட்டை கள்ளர் சகோதரர்கள் இருவரின் தங்கையான கத்தாயி என்ற காதலி நாச்சியாரை சேதுபதி மன்னர் இரண்டாம்தாரமாகத் திருமணம் முடித்த நிலையில், புதுக்கோட்டையின் உண்மையான தொண்டைமான் மன்னனைக் கொன்றுவிட்டு, தனது மைத்துனான கள்ளனை சேதுபதி மன்னர் புதுக்கோட்டை தொண்டைமான் மன்னனாக்கினான். இப்படித்தான் புதுக்கோட்டை சமஸ்தானம் உருவானது. இங்கேயும் மறவருக்கும், கள்ளருக்கும் முக்குலத்தோர் என்ற வகையில் உறவுமுறை இல்லை. கள்ளருக்கு தேவர் என்ற பட்டமும் இருக்கவில்லை. பிறகு எப்படி கள்ளர், மறவர் மற்றும் அகமுடையார் என்போர் முக்குலத்தோர் ஆனார்கள்? கள்ளர் மற்றும் மறவர் என்போர் சட்டதிட்டங்களுக்கு உட்படாமல், பொதுமக்களிடத்தில் கொள்ளை போன்ற அட்டூழியச் செயல்களில் ஈடுபட்டதால் ஆங்கிலேய அரசின் குற்றபரம்பரைச் சட்டத்தால் அடக்கப்பட்டனர். இதுவே கள்ளர் மற்றும் மறவர் என்போர் ஒன்றிணைய வழிவகுத்தது. இதற்கிடையில், மறவரின் கீழ் சேர்வைக்காரர்களாக இருந்த அகமுடையாரும் இவர்களுடன் இணைந்தனர். முக்கியமாக இராமநாதபுரம் மாவட்டத்தில் பெரும்பான்மை மக்களான பள்ளர்களின் எதிர்ப்பை சமாளிக்கும்முகமாக மூன்று இனத்தாரும் ஒன்றிணைந்த அமைப்பாக செயல்பட ஆரம்பித்தனர். இதுதான் ‘முக்குலத்தோர் அமைப்பு உருவான முறை.

    Monday, December 3, 2012

    களப்பிரர் வரலாறும், கள்ளரிடம் நமது கேள்விகளும்

    அ.சவரிமுத்து எம்.ஏ., அவர்களின் "விடியலை நோக்கி களப்பிரர் வரலாறு" என்ற நூலிலிருந்து

    "காளத்தி முதலிய மலைப்பகுதிகளில் வாழ்ந்தவர் 'களவர்' என்பவர் இப்பெயர் கன்னடத்தில் 'களபரு' என்றும், வடமொழியில் 'களப்ரா' என்றும்,தமிழில் 'களப்பிரர்' என்றும் உருப்பெறும். இவர்கள் ஒரு கூட்டத்தினர்; அரசமரபினர் அல்லர். மூவேந்தரை வென்றவராக பாண்டிய - பல்லவவர் பட்டயங்கள் குறிக்கின்றன.

    'அச்சுதக் களப்பாளன்' என்னும் பெயர் கொண்ட மன்னன் ஒருவன் முடியுடை மூவேந்தரையும் வென்று சிறைப்படுத்தினான் என்று தமிழ் நாவலர் சரிதை கூறுகின்றது.(பக்கம் 14)
    சேர, சோழ, பாண்டியர்களை 'அச்சுதன்' இரும்புச் சங்கிலியால் பிணைத்து இழுத்து வந்த போது மூவேந்தர்கள் பாடிபுகழ்ந்து கெஞ்சியது.

    சேரன் பாடியது:
    திணை விதைத்தார் முற்றந்திணை யுணங்கும் செந்நெல்
    தன்னை விளைத்தார் முற்ற மதுதானாம் கனைசீர்
    முரசுணங்கும் சங்குணங்கும் மூரித் தேர்த் தனை
    அரசுணங்கும் 'அச்சுதன்'தன் முற்றத்து.

    சோழன் பாடியது:
    அரசர்குல திலகன் 'அச்சுதன்' முற்றத்தில்
    அரசர் அவதரித்த வந்தால் - முரசதிரக்
    கொட்டிவிடு மோசையினுங் கோவேந்தர் கற்றளையை
    வெட்டிவிடும் ஓசை மிகும்.

    பாண்டியன் பாடியது:
    குறையுளார் எங்கிரார் கூர்வே லிராமன்
    நிறையறு திங்கள் இருந்தான் - முறைமையால்
    ஆலிக்குத் தானை யலங்குதார் 'அச்சுத' முன்
    வாலிக்கிளையான் வரை.

    குடகர் குணகடல் என்றார்த்தார் குடகர்க்கு
    இடகர் வடகடல் என்றார்த்தார் - வடகடலர்
    தென் கடலென்று ஆர்த்தார் தில்லையைச் 'சுதானந்தன்'
    முன் கடை நின்றார்க்கும் முரசு.(பக்கம் 51)

    ========================================
    நமது கேள்விகள்:
    1)'களப்பாளன்' என்பது கள்ளர் குலத்தின் பட்ட பெயர்களில் ஒன்று என்று ந.மு.வேங்கடசாமி நாட்டார்(கள்ளர்) கூறியுள்ளார். அப்படிஎனில் முடியுடை மூவேந்தரையும் சிறைபடுத்திய 'அச்சுதக் களப்பாளன்' என்பவன் யார்? கள்ளரா? களப்பிரரா?

    2)'களப்பாளன்' என்ற பட்ட பெயர் கொண்ட கள்ளர்கள் தமிழர்(?) எனில் களப்பிரர் ஆட்சி கால தொடக்கமான கி.பி 3ம் நூற்றாண்டுக்கு முன்புள்ள தமிழ் சங்க இலக்கியம் அல்லது கல்வெட்டுகளில் 'களப்பாளன்' என்ற பெயரை காட்ட முடியுமா?

    3)'கள்ளர்கள்' மூவேந்தர்களின் ஒருவரான சோழர்கள் எனில் 'களப்பாளன்' என்ற பட்ட பெயர் தரித்த சோழ வேந்தரில் ஒருவரேனும் காட்ட முடியுமா? அல்லது மூவேந்தரில் வேறு யாரேனும் காட்ட முடியுமா?

    (அச்சுத களப்பாளன் பற்றி 'தேவர் தளம்': http://www.thevarthalam.com/thevar/?p=1212)

    ---- மள்ளர் மருதவேல் மூப்பர்

    Sunday, December 2, 2012

    பண்டைய தமிழகத்தில் போர்மறவர் என்போர் ‘பள்ளரே’ -- பாகம் 1

    மறவர் என்ற வார்த்தைக்கு அர்த்தமாகவும், வரலாறாகவும் முக்குலத்தோர் கூறும் விளக்கம் இது:

    @@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
    மறவர் - பெயர்க் காரணம் : 
    மறவர்
    என்பவர் திராவிட இனத்தில் முதல் இனமாக இருக்கலாம் என்றும், இவர்கள் தென்னிந்தியாவில் பூர்வீகமாக வாழ்ந்தார்கள் என்றும் கூறப்படுகிறது. இவர்கள் ராமன் ராவணனுக்கு எதிராக நடந்த போரில் ராமனுக்கு உதவி செய்ததால் இராமபிரான் இவர்களுடைய சேவையைப் பாராட்டி உங்களை மறவேன் என்று சொன்னதால் இவர்கள் 'மறவன்' என்று அழைக்கப்பட்டனர். மற்றும் மறவன் என்ற இப்பெயர் வீரம், கொடூரம் கொலை செய்தல், கொள்ளை அடித்தல் ஆகியவற்றுடன் சம்பந்தப்படுத்துகிறார்கள். ஆனால் உண்மை அதுவல்ல ....முன்காலத்தில் இந்த இனம் படைக்கலன்களில் அதிகப் பங்கு எடுத்ததால் இப்பெயர் வந்திருக்காலம் என்று எட்கர் தார்ஸ்டன் கூறுகிறார். 
    குகன் வழித்தோற்றம் : 
         இவர்கள் குகன் வம்சாவழியினர் என்தற்கு, இராமாயணத்தில் இராமன் இலங்கைக்கு செல்வதற்கு குகன் உதவி செய்ததாகவும், அப்போது இராமன் குறிப்பிட்ட காலத்தில் திரும்பி வந்து, உன்னை சந்திப்பேன் என்று சொன்னான். ஆனால், குறிப்பிட்ட
    காலத்தில் வராததைக் கண்ட குகன் தீ மூட்டி தற்கொலை செய்ய இருந்த காலத்தில் அனுமன் அதைக் தடுத்து நிறுத்தினார். பின்னால் இச்செய்தியை இராமனுக்குச் சொன்னார்கள். இதைக் கேட்ட இராமன் குகனின் வீரத்தைக் குறிக்கும் விதமாக 'மறவன்' என்று அழைத்தார். இவர் வழி வந்தவர்கள் தான் மறவர்கள். இவ்வாறு இவ்வினத்தின் பெயர் வரலாற்று ஆசிரியர்களின் பல்வேறு கருத்துக்களையும், கர்ணபரம்பரைக் கதைகளையும் கொண்டுள்ளது. ஆனால் இந்திரன், அகலிகை ஆகிய ஆரியர் இருவர் சேர்க்கையால் தோன்றிய இனம் மறவர் என்று சொல்வது எங்களை இழிவுப்படுத்துவதற்காகவே திரிக்கப்பட்டது ...
    @@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@

    மேலே சொன்னவற்றிற்கு மறுப்புரைகள்:

    1. மறவர் என்ற சொல் பற்றி டாக்டர் கதிர்வேல் கூறுவது:
         சங்க இலக்கியத்தில் மறம், மறவர் என்ற சொற்கள் பயன்படுத்தி இருப்பது உண்மையே. ஆனால், அது முறையே வீரத்தையும், வீரரையும் சுட்டப் பயன்பட்டதேயன்றி, மறவர் என்ற இனம் அல்லது மரபைச் சுட்டவில்லை. (மறவர் வரலாறு, டாக்டர் கதிர்வேல்,பக்கம் 16)
    2. மறவர் என்பதற்கு பிங்கல நிகண்டு (3941) 
     ‘வேடர் தம் பெயரும் வீரருமாவர் எனப்பொருள் கூறுகிறது.
     வேடர் என்பவர் ‘அறம் செய்யின் மறம் கெடும் என்ற கோட்பாடுடன் ஆறலைத்தல் தொழில் செய்து வாழ்ந்த எயினரைக் குறிக்கும். இவர்களே வன்கண் மறவர், வன் கண் ஆடவர் என்றும், கூளியர் என்றும் சங்க இலக்கியங்களில் காட்டப்படுகின்றனர். இவர்களுக்கும், தற்காலத்தில் மறவர் என்று சொல்லக்கூடிய இனத்திற்கும் எந்த சம்பந்தமும் கிடையாது.
    (எ.கா) துவர்செய் ஆடைச் செந்தொடை மறவர் (நற்றினை 33:6)
          வருநர்ப் பார்க்கும் வங்கண் ஆடவர் (குறுந்தொகை 274:4)
          கொடுஞ் சிலை மறவர் கடறு கூட்டுண்ணும் (குறுந்தொகை 331:3)
          குரங்கன்னபுன் குறுங்கூளியர் (புறநானூறு 136:12)
    வீரர் என்ற வகையில் ‘மறவர் என்ற சொல் படைமறவரையும் மற்றும் படைத்தலைவரையும் குறிக்கும் ஒரு பண்புப் பெயராகும்.படைமறவர் என்றால் அது மள்ளர்குடியினரைக் குறிப்பதாக அமைகிறது.
          எம்.சீனிவாச அய்யங்கார் பள்ளர் பற்றிக் கூறுவதாவது: ‘பள்ளர் என்பது சரியாய் மள்ளர் என்று உச்சரிக்கப்பட வேண்டும். அவர் பாண்டியர் படைமறவர் ஆவார்(M.Srinivasa ayyangar, Tamil studies, page 106)'

    மறப் போர்ப் பாண்டியர் அறத்தின் காக்கும் ( அகம் 27:8)  
    படைத்தலைவர் என்ற வகையில் இது சேர, சோழ மற்றும் பாண்டியப் படைத்தலைவர்களைக் குறித்தது.
    (எ.கா) ‘திருவீழ் நுண்பூண் பாண்டியன் மறவன் (புறம் 179:5)
    இந்த மறவன் நாலைக் கிழவன் நாகன்.
    ‘இழை அணி யானைச் சோழர் மறவன் ( அகம் 326:9)
    இவன் பொருநர் கிழவன் பழையன்.
    வசை இல் வெம்போர் வானவன் மறவன் (அகம் 143:10)
    இந்த மறவன் சேரர் படைத்தலைவன் பிட்டன்.
    மேலே சொல்லப்பட்ட படைத்தலைவர்கள் அனைவரும் மள்ளர் குடியைச் சார்ந்தவர்கள். இந்த மறவர் என்போர் யாரும் தற்கால மறவர் குடியைச் சார்ந்தவர்கள் கிடையாது. ஏனென்றால், கி.பி 13 ஆம் நூற்றாண்டு வரைத் தமிழகத்தில் மறவர் என்ற இனம் கிடையாது.(Noboru karashima ‘A concordance of the names in the chola inscriptions’-1979)

    3. கி.பி 17 ஆம் நூற்றாண்டைச் சார்ந்த திருவிளையாடற் புராணத்தில் மறவர் என்பது வேட்டுவராகவும், மள்ளர் என்பது போர்மறவராகவும் வேறுபடுத்திக் காட்டப்பட்டுள்ளது. (திருவிளையாடற் புராணம்,பழியஞ்சின படலம்) 
    4. இடைக்காலமான 13ஆம் நூற்றாண்டு வரை மறவர் என்ற இனம் இல்லை என்றபோது, அதற்கு பல யுகங்கள் முந்தியதாகக் கூறப்படும் இராமன் காலத்தில் ‘மறவர் என்ற இனம் பற்றிச் சொல்லப்படுவதில் அர்த்தம் இல்லை. அதேபோன்றே குகன் கதையும்.

    எட்கர் தர்ஸ்டன் மறவர் பற்றிக் கீழ்கண்டவாறு கூறுகிறார்.
       ‘சென்னை மாகாண காவல்துறையினரின் 1903 ஆம் ஆண்டு அறிக்கையில் நெல்லை மாவட்டத்திலுள்ள பல்வேறு மக்கள் பிரிவினரில் மறவர் ஆரம்பத்திலிருந்தே திருடுவதைக் குலத்தொழிலாக நடத்தி வருவதாகக் கண்டுள்ளனர் (எட்கர் தர்ஸ்டன் ‘தென்னிந்திய குலங்களும் குடிகளும்’ தொகுதி 5, பக்கம் 29)'

    5. ‘இந்திரன், அகலிகை இணைவால் ‘மறவர் இனம் தோன்றவில்லை என்பது உண்மை. ஏனெனில்,அதற்கு ஆதாரம் கிடையாது.

    6. டாக்டர் எம்.எஸ்.கோவிந்தசாமி கி.பி 15-16 ஆம் நூற்றண்டுகளில் தெலுங்கு நூல்களில் பேசப்படும்லம்பகர்ணா என்பவரே மறவர் என்கிறார் (Dr.M.S.Govindasamy, The role of the feudafories in the later chola history)

    7. மறவர் இனத்தைச் சார்ந்த தினகரன் என்பவர் மறவர்கள் ஆந்திரப் பகுதியிலுள்ள கிழுவை நாட்டிலிருந்து வந்ததாக தமது மறவர் வரலாற்று நூலில் குறிப்பிடுகிறார்.

    8. இராமநாதபுரம் சேதுபதி மகாமறவன் என அழைக்கப்பட்டான். அவன் தெலுங்கு மொழியை ஆதரித்தான்.

    9. சேதுபதி மன்னர்கள் தங்களைப் பற்றிய மெய்கீர்த்திச் செய்திகளில் தம்மை ‘மகாமண்டலேஸ்வரன் என்றும் ‘ஆரியர் மானம் காத்தான் எனவும் பெருமைப்பட்டுக் கொள்கின்றனர். இது அவர்களைப் பற்றிய செப்பேடு மற்றும் கல்வெட்டுக்களில் இடம் பெற்றுள்ளது. மகாமண்டலேஸ்வரன் என்பது விசயநகர மன்னர்களைக் குறிக்கும். ஆரியர் என்பது வடுகரைக் குறிக்கும்.

    10. சேதுபதிகள் தம்மை ‘மூவராய கண்டன் என்றும் பெருமையாகச் சொல்லிக் கொண்டனர். மூவராய கண்டன் என்பது தமிழ் வேந்தர்களுக்கு பகைவன் என்பதாகும்.

       இன்று தம்மை 'மறவர்' என்ற அழைத்து கொள்ளும் முக்குல மறவர் என்போர் யார், அவர் பூர்வீகம் என்ன என்பதும், 'போர்குடி மறவர்' யார் என்பதும் விளங்குகிறது அல்லவா...?