Wednesday, May 21, 2014

பாண்டியர்களை வீழ்த்திய 'வாணர்குலத்தவர்'

பாண்டிய மன்னர்களின் ஆட்சியில் அவர்களுக்குத் திறை செழுத்தி ஆங்காங்கே மாவலி வாணராயர் என்ற வாணர்குலத்தவர் குறுநில மன்னர்களாக ஆட்சி செய்தனர். அவ்வாறே, சேலம் ஜில்லாவின் கீழ்ப் பகுதியும்,தென்னார்காடு ஜில்லாவின் மேற்பகுதியும் தன்னகத்தே கொண்ட உள்நாடு ஒன்று பாண்டியரின் கீழ் இருந்த வாணராயர் என்ற குறுநில மன்னர்களின் ஆட்சியில் இருந்தது. கி.பி 13 நூற்றாண்டின் பிற்பகுதியில் குறுநில மன்னர்களின் நாடெல்லாம் பாண்டிய மன்னனின் ஆட்சியின் கீழ் வந்த நிலையில், வாணர்குலத்தவரில் சிலர் பாண்டியன் ஆட்சியில் அரசியல் தலைவர்களாகவும், படைவீரர்களாகவும் அதிகாரம் பெற்றனர். பிள்ளை மாவலி வாணராயன் என்பான் பாண்டியன் ஆட்சியில் இருந்த வாணர்குல அரசியல் தலைவனாவான். புதுக்கோட்டையிலுள்ள 'கோனாடு' இவன் மேற்பார்வையில் இருந்தது. இதேபோன்று,  இராமனாதபுரம் ஜில்லாவில் உள்ள கேரள சிங்க 'வளநாடும்' ஒரு வாணர்தலைவனின் கண்காணிப்பில் இருந்தது அறியத்தக்கது ( The Pandyan Kingdom by K.A.Nilakanda Sastrigal M.A Page:187).

பாண்டிய வேந்தரிடம் படைத்தலைவர்களாக நிலவிய இவ்வாணராயர் பாண்டியர் அயலார் படையெழுச்சினால் ஆற்றல் இழந்து இன்னல் எய்திய காலத்தில், அதை தமக்குச் சாதகமாகக் கொண்டு, பாண்டியரை வீழ்த்தி, தாம் சுயேட்சையாகத் தனியாக அரசு புரியத் தொடங்கினர். மேலும், பாண்டிய மன்னர் திருநெல்வேலி ஜில்லாவிற்குச் சென்று அங்கு குறுநில மன்னராக ஆட்சி புரிய இவர்களே காரணமாயினர். எனவே, பாண்டிய மன்னர்களின் வீழ்ச்சிக்கு இந்த வாணர்குலத்தவரின் அடாத செயல்களே காரணமாகும். இந்த வாணராயரது கல்வெட்டுக்கள் தேவிபட்டிணம், திருப்புல்லாணி, காளையார்கோயில்களில் உள்ளன. "புவனேசுவீரன்" எனப் பொறிக்கப்பட்ட இந்த வாணர்களது செப்புக்காசுகள் இராமநாதபுரம் மாவட்டத்தில் அழகங்குளம், பெரியபட்டிணம் ஆகிய ஊர்களில் அகழ்வாய்வில் கிடைத்துள்ளன. "மைக்கருங்கண் மாதரார் மனங்கவர்ந்த மாரவேள், மதுரை வீரகஞ்சுகன்" என்பது ஒரு வாணராயர் பற்றிய தனிப்பாடலின் தொடராகும் (பெருந்தொகை-மதுரைத் தமிழ்ச் சங்கப்பதிப்பு,1932 பாடல் எண்.1008).
இராமநாதபுரம் ஜில்லாவிலுள்ள ஸ்ரீவில்லிப்புத்தூரில் கி.பி1453 ஆண்டில் வரையப்பெற்றுள்ள ஒரு கல்வெட்டு 'மகாபலி வாணத்தரையர் சீர்மையான மதுரை மண்டலம்' என்று கூறுகிறது ( Travancore Archaeological Series Vol. 1. Page 46; Ins. 577 of 1926. க ). மேலும், பாண்டியருக்குத் திறை செழுத்தி வந்த குறுநில மன்னர்களான மாவலிவாணராயர் தம்மை 'மதுராபுரி நாயகன்(மதுரைராயன்)' எனவும், 'பாண்டியன் குலாந்தகன்' எனவும் கி.பி 1483ல் சிறபித்துக் கூறிக் கொள்வதைப் புதுக்கோட்டை நாட்டில் நெக்கோணம் என்ற ஊரிலுள்ள ஒரு கல்வெட்டில் காணலாம் (Inscriptions of  The Pudukkottai State. No. 672 ). ஆகவே, 15 ஆம் நூற்றாண்டில் மதுரையிலிருந்து அரசு செழுத்தியவர்கள் வாணராயர் என்பது நன்கு தெளிவாகிறது. முன்பே சொன்னது போல் பாண்டியர் அயலார் படையெடுப்பால் மிக்க தளர்ச்சியெய்திருந்த காலத்தில் வாணராயர்கள் பாண்டியர்களைப் போரில் வென்று மதுரையைக் கைப்பற்றிக் கொண்டதோடு, அதனைச் சூழ்ந்துள்ள நாட்டைத் தாமே சுயேட்சையாக ஆட்சி புரியவும் தொடங்கினர். வாணராயர் 'பாண்டியர் குலாந்தகன்' என்று தம்மைச் சிறப்பித்துக் கூறிக்கொள்வது ஒன்றே, பாண்டியரிடம் அவர்கள் கொண்ட பெரும்பகை நன்கு விளங்கும்.
மேலும், புதுக்கோட்டை நாட்டில் குடுமியான் மலையிலுள்ள இரண்டு கல்வெட்டுக்கள், 'பாண்டியர்கள் வாணராயரிடம் தோல்வியுற்று வேற்றிடம் சென்றனர்' என்று வழியுறுத்துகின்றன (Inscriptions of  The Pudukkottai State. No. 653 and 678 ).
மதுரை மாநகரை விட்டு நீங்கிய பாண்டியர்கள் தென்பாண்டி நாட்டை அடைந்து அங்கு அரசு செழுத்தி வந்தனர் என்பது பல்வேறு கல்வெட்டுச் செய்திகளால் உறுதியாகிறது. இவர்களின் ஆளுகையும் அங்கு 17 ஆம் நூற்றாண்டின் இறுதி வரை நடைபெற்றது அறியப்படுகிறது. 
    

Tuesday, May 20, 2014

மறவர் என்போர் 'தமிழ் மூவேந்தர்' வழியினர் இல்லை,ஏன்?

மறவராகிய சேதுபதி மன்னர்கள் தமிழ் மூவேந்தர் வழியினர் இல்லை என்பதற்கான காரணம் என்ன?

இந்திய வரலாற்றில் இருவகையான சமூக அமைப்பை நாம் காண முடியும்.ஒன்று தாய்வழிச் சமூகம் மற்றொன்று தந்தை வழிச் சமூகம்.தாய் வழிச் சமூகத்தில் மூத்தப்பெண் அரசாள்வதற்கு முழுத் தகுதியும் கொண்டவர்.ஆனால்,தந்தை வழிச் சமூகத்தில் தந்தைக்குப் பின் ஆண் பிள்ளைகள் மட்டுமே அரசாள அனுமதிக்கப்பட்டனர்.ஒரு பெண் கூட மூவேந்தர் வழியில் அரசாள அனுமதிக்கப்பட்டது கிடையாது. தற்போது நாகரிக காலத்தில் இது தவறான ஒன்றுதான்.ஆனால் இது முற்காலத்திய ஒரு நடைமுறை.இது நியாயமா?இல்லையா? என்று இப்போது நாம் பார்க்க முடியாது.இப்படித்தான் தந்தை வழிச் சமூகத்தின் அரசு உரிமை என்பது வழி வழியாக நடைமுறையில் இருந்து வந்தது.ஒரு அரசனுக்கு ஆண் குழந்தை இல்லாதபோது அவனது அண்ணன் மகன் அல்லது தம்பி மகன் அந்த உரிமைக்கு உரியவனாகிறான்.

இங்கே நாம் பார்க்கக் கூடிய மறவர் சமூகமானது முக்கியமாக தாய்வழிச் சமூகமாகும்.இந்தச் சமூகத்தில் மூத்தப் பெண் அரசாள முழு உரிமையும் அளிக்கப்பட்டார்.ஆனால்,தமிழ் நாட்டின் மூவேந்தர் சமூகமானது தந்தை வழி அரசுரிமை கொண்ட சமூகமாகும்.ஏனெனில்,இவர்கள் சங்க காலத்தே அரசின் அடிப்படைக் கூறாகிய குடும்ப அமைப்பை ஏற்படுத்தி, ஆணைக் குடும்பத் தலைவனாகவும், பெண்ணை அவனது துணைவியாகவும் கொண்டு ஆற்றங்கரை நாகரிகம் கண்டு, அரசமைப்பு ஏற்படுத்தியவர்கள்.இதனால்தான், குடும்பத் தலைவனான ஆண் முக்கியமாக 'குடும்பன்' என்றும் அழைக்கப்பட்டான்.இதை தேவநேயப் பாவாணர் அவர்கள் தம்முடைய 'தமிழர் வரலாறு' என்ற நூலில் தெளிவாக விளக்குவதை நாம் கண்டு கொள்ள முடியும். சரி,மறவராகிய சேதுபதி மன்னர்கள் எப்படி தாய்வழிச் சமூகம் என்று சொல்லப்படுகிறது.அதற்கு ஆதாரம் என்ன?
கி.பி 1795 ஆம் ஆண்டு வரை மறவர் சீமையாகிய இராமநாதபுரத்தை ஆண்டவர் முத்துராமலிங்க சேதுபதி என்ற மன்னராவார்.இவரது மூத்த சகோதரி பெயர் மங்களேஸ்வரி நாச்சியார்.உண்மையில் இவர், முத்துராமலிங்க சேதுபதி மன்னருடைய தாயின் முன்னால் கணவருக்குப் பிறந்த பெண் ஆவார்.இதனால் தாய்வழிச் சமூக முறைப்படி மங்களேஸ்வரி நாச்சியார்தான் ஆட்சிக்கு உரிமை உடையவராகிறார்.எனவே,மங்களேஸ்வரி நாச்சியார், 'தங்களது மறவர் சமூக முறைப்படி மூத்த பெண்ணான தானே மறவர் சீமையின் ஆட்சி பீடத்தில் அமரத் தகுதியுள்ளவள்' என்று வழக்குத் தொடுத்து, ஆதாரங்களை கும்பெனியாருக்கு எடுத்துக் கூறித் தனது உரிமையை நிலைநாட்ட முறையிட்டார்.இவரது முறையீடு உண்மை என உணர்ந்த கும்பனியார் சேதுபதி மன்னரை கி.பி 1795 ல் நீக்கம் செய்து,நீண்ட நாள்களுக்குப் பிறகு 22.4.1803 அன்று மங்கேஸ்வரியை அரசியாக அல்லாமல் இராமநாதபுரம் ஜமீன்தாரினியாக நியமனம் செய்தனர்.எனவே,முத்துராமலிங்க சேதுபதி மன்னர் நீக்கப்பட்டு மங்களேஸ்வரி நாச்சியார் ஆட்சியுரிமை பெறுவதற்கு முழுக்காரணமாக இருந்தது மறவர்களின் தாய்வழிச் சமூக அமைப்புதான்.
ஆனால்,தமிழ் மூவேந்தர்கள் முழுக்க முழுக்க தந்தை வழி அரசுரிமை அமைப்புக் கொண்டவர்கள். எனவே,மறவர்களுக்கும்,மூவேந்தர்களான சேர,சோழ,பாண்டியர்களுக்கும் எந்த சம்பந்தமும் நிச்சயமாகக் கிடையாது.

சேதுபதி மன்னர்களின் முக்கியமான விருதாவளிகள்

இராமநாதபுரம் சேது அரன்மனையில் உள்ள வண்ண சித்திரங்கள்

சேதுபதி மன்னரின் திருநாமங்கள்:
சேதுக்காவலன்
சேது மூலாரட்சாதுரந்தரன்
தனுஷ்கோடிக் காவலன்
வைகை வளநாடன்
தேவை நகராதிபன்
துடுக்கர் ஆட்டம் தவிர்த்தான்
பரங்கியர் ஆட்டம் தவிர்த்தான்
புலிகொடி கேதனன்
வடுகர் ஆட்டம் தவிர்த்தான்
ஆதி இரகுநாதன்
இராமநாத காரியதுரந்திரன்
தொண்டியந்துறைக் காவலன்
செம்பி வளநாடன்
ரவிகுலசேகரன்
செங்காவி குடையான்
பரராச கேசரி
வீரவென்பாமாலை
கொட்டமடக்கி
சொரிமுத்து சிங்கம்
வன்னியராட்டந் தவிர்த்தான்
மதுரை ராயன்
மதுரை மானங்காத்தான்
இளஞ்சிங்கம்
தளசிங்கம்
தாலிக்கு வேலி
அடைக்கலம் காத்தான்
வேதியர் காவலன்
இரணிய கர்ப்பயாஜி
சிவபூசாதுரந்திரன்
சுப்பிரமணிய பாதாரவிந்த சேவிதன்
ரவிகுல ரகுந்தாத சேதுபதி க
யல்கொடி கேதனன்
அடைக்கலம் காத்தான்
பரதநாடக பிறவீனன்
சடைக்க உடையான்


--------------------------------------------------------------------------------------------------------------
மறுப்புரை:

சேதுபதி மன்னர்களின் முக்கியமான விருதாவளிகள்(செப்பேட்டில் உள்ளபடி):

1.சேது மூலரட்சாதுரந்தரன்
2.சொரிமுத்து வன்னியன்
3.மகாமண்டலேசுவரன்
4.மூவராய கண்டன்
5.கண்ட நாடு கொண்டு கொண்ட நாடு கொடாதான்
6.புவனேகவீர கஞ்சுகன்
7.வீர வளநாடன்
8.வேதியர் காவலன்
9.வைகை வளநாடன் கொட்ட மடக்கி
10.(ம)துரை ராயன்
11.வன்னியராட்டம் தவிழ்த்தான்
12.ஆரிய மானங்காத்தான் மற்றும் பல (கீழே செப்பேட்டுச் செய்தியில் காண்க)

இதில் மகாமண்டலேசுவரன், மூவராய கண்டன், (ம)துரை ராயன் மற்றும் கண்ட நாடு கொண்டு கொண்ட நாடு கொடாதான் என்ற விருதாவளிகள் விசய நகர அரசர்களுக்கும்,அவர்களது பிரதிகளான நாயக்க மன்னர்களுக்கும் உரியவை.

இதேபோல், சேது மூலரட்சாதுரந்தரன், புவனேகவீர கஞ்சுகன்,  வேதியர் காவலன் மற்றும் ஆரிய மானங்காத்தான் போன்றவை வாணர்குல மாவலி வாணாதிராயரது சிறப்புப் பெயர்கள்.

வைகை வளநாடன் கொட்டமடக்கி என்பது 'பாண்டிய மன்னர்களின் கொட்டத்தை அடக்கியவர்கள் நாங்கள்' என்று சேதுபதி மன்னர்கள் சொல்லிக் கொண்டது.

வன்னியராட்டம் தவிழ்த்தான் என்பது கிருஸ்ணப்ப நாயக்க மன்னருடன் முரண்டிய சிவகிரி பாளையக்காரன் வன்னியனை சேதுபதி மன்னர் அடக்கியதாகச் சொல்லப்பட்டது.

இவற்றில் சிறப்புச் செய்தியாக  'மூவராய கண்டன்' என்பது தமிழ் மூவேந்தர்களான சேர,சோழ மற்றும் பாண்டிய மன்னர்களுக்கு தாங்கள் பகைவன் என்று சொல்லிக் கொண்டது.இதன் மூலம் சேதுபதி மன்னர் என்போர் உண்மையில் யார்? என்பதை உணர்ந்து தெளிவு பெறலாம்.