இராமநாதபுரம் சேது அரன்மனையில் உள்ள வண்ண சித்திரங்கள்
சேதுபதி மன்னரின் திருநாமங்கள்:சேதுக்காவலன்
சேது மூலாரட்சாதுரந்தரன்
தனுஷ்கோடிக் காவலன்
வைகை வளநாடன்
தேவை நகராதிபன்
துடுக்கர் ஆட்டம் தவிர்த்தான்
பரங்கியர் ஆட்டம் தவிர்த்தான்
புலிகொடி கேதனன்
வடுகர் ஆட்டம் தவிர்த்தான்
ஆதி இரகுநாதன்
இராமநாத காரியதுரந்திரன்
தொண்டியந்துறைக் காவலன்
செம்பி வளநாடன்
ரவிகுலசேகரன்
செங்காவி குடையான்
பரராச கேசரி
வீரவென்பாமாலை
கொட்டமடக்கி
சொரிமுத்து சிங்கம்
வன்னியராட்டந் தவிர்த்தான்
மதுரை ராயன்
மதுரை மானங்காத்தான்
இளஞ்சிங்கம்
தளசிங்கம்
தாலிக்கு வேலி
அடைக்கலம் காத்தான்
வேதியர் காவலன்
இரணிய கர்ப்பயாஜி
சிவபூசாதுரந்திரன்
சுப்பிரமணிய பாதாரவிந்த சேவிதன்
ரவிகுல ரகுந்தாத சேதுபதி க
யல்கொடி கேதனன்
அடைக்கலம் காத்தான்
பரதநாடக பிறவீனன்
சடைக்க உடையான்
--------------------------------------------------------------------------------------------------------------
மறுப்புரை:
சேதுபதி மன்னர்களின் முக்கியமான விருதாவளிகள்(செப்பேட்டில் உள்ளபடி):
1.சேது மூலரட்சாதுரந்தரன்
2.சொரிமுத்து வன்னியன்
3.மகாமண்டலேசுவரன்
4.மூவராய கண்டன்
5.கண்ட நாடு கொண்டு கொண்ட நாடு கொடாதான்
6.புவனேகவீர கஞ்சுகன்
7.வீர வளநாடன்
8.வேதியர் காவலன்
9.வைகை வளநாடன் கொட்ட மடக்கி
10.(ம)துரை ராயன்
11.வன்னியராட்டம் தவிழ்த்தான்
12.ஆரிய மானங்காத்தான் மற்றும் பல (கீழே செப்பேட்டுச் செய்தியில் காண்க)
இதில் மகாமண்டலேசுவரன், மூவராய கண்டன், (ம)துரை ராயன் மற்றும் கண்ட நாடு கொண்டு கொண்ட நாடு கொடாதான் என்ற விருதாவளிகள் விசய நகர அரசர்களுக்கும்,அவர்களது பிரதிகளான நாயக்க மன்னர்களுக்கும் உரியவை.
இதேபோல், சேது மூலரட்சாதுரந்தரன், புவனேகவீர கஞ்சுகன், வேதியர் காவலன் மற்றும் ஆரிய மானங்காத்தான் போன்றவை வாணர்குல மாவலி வாணாதிராயரது சிறப்புப் பெயர்கள்.
வைகை வளநாடன் கொட்டமடக்கி என்பது 'பாண்டிய மன்னர்களின் கொட்டத்தை அடக்கியவர்கள் நாங்கள்' என்று சேதுபதி மன்னர்கள் சொல்லிக் கொண்டது.
வன்னியராட்டம் தவிழ்த்தான் என்பது கிருஸ்ணப்ப நாயக்க மன்னருடன் முரண்டிய சிவகிரி பாளையக்காரன் வன்னியனை சேதுபதி மன்னர் அடக்கியதாகச் சொல்லப்பட்டது.
இவற்றில் சிறப்புச் செய்தியாக 'மூவராய கண்டன்' என்பது தமிழ் மூவேந்தர்களான சேர,சோழ மற்றும் பாண்டிய மன்னர்களுக்கு தாங்கள் பகைவன் என்று சொல்லிக் கொண்டது.இதன் மூலம் சேதுபதி மன்னர் என்போர் உண்மையில் யார்? என்பதை உணர்ந்து தெளிவு பெறலாம்.
No comments:
Post a Comment