Tuesday, May 20, 2014

மறவர் என்போர் 'தமிழ் மூவேந்தர்' வழியினர் இல்லை,ஏன்?

மறவராகிய சேதுபதி மன்னர்கள் தமிழ் மூவேந்தர் வழியினர் இல்லை என்பதற்கான காரணம் என்ன?

இந்திய வரலாற்றில் இருவகையான சமூக அமைப்பை நாம் காண முடியும்.ஒன்று தாய்வழிச் சமூகம் மற்றொன்று தந்தை வழிச் சமூகம்.தாய் வழிச் சமூகத்தில் மூத்தப்பெண் அரசாள்வதற்கு முழுத் தகுதியும் கொண்டவர்.ஆனால்,தந்தை வழிச் சமூகத்தில் தந்தைக்குப் பின் ஆண் பிள்ளைகள் மட்டுமே அரசாள அனுமதிக்கப்பட்டனர்.ஒரு பெண் கூட மூவேந்தர் வழியில் அரசாள அனுமதிக்கப்பட்டது கிடையாது. தற்போது நாகரிக காலத்தில் இது தவறான ஒன்றுதான்.ஆனால் இது முற்காலத்திய ஒரு நடைமுறை.இது நியாயமா?இல்லையா? என்று இப்போது நாம் பார்க்க முடியாது.இப்படித்தான் தந்தை வழிச் சமூகத்தின் அரசு உரிமை என்பது வழி வழியாக நடைமுறையில் இருந்து வந்தது.ஒரு அரசனுக்கு ஆண் குழந்தை இல்லாதபோது அவனது அண்ணன் மகன் அல்லது தம்பி மகன் அந்த உரிமைக்கு உரியவனாகிறான்.

இங்கே நாம் பார்க்கக் கூடிய மறவர் சமூகமானது முக்கியமாக தாய்வழிச் சமூகமாகும்.இந்தச் சமூகத்தில் மூத்தப் பெண் அரசாள முழு உரிமையும் அளிக்கப்பட்டார்.ஆனால்,தமிழ் நாட்டின் மூவேந்தர் சமூகமானது தந்தை வழி அரசுரிமை கொண்ட சமூகமாகும்.ஏனெனில்,இவர்கள் சங்க காலத்தே அரசின் அடிப்படைக் கூறாகிய குடும்ப அமைப்பை ஏற்படுத்தி, ஆணைக் குடும்பத் தலைவனாகவும், பெண்ணை அவனது துணைவியாகவும் கொண்டு ஆற்றங்கரை நாகரிகம் கண்டு, அரசமைப்பு ஏற்படுத்தியவர்கள்.இதனால்தான், குடும்பத் தலைவனான ஆண் முக்கியமாக 'குடும்பன்' என்றும் அழைக்கப்பட்டான்.இதை தேவநேயப் பாவாணர் அவர்கள் தம்முடைய 'தமிழர் வரலாறு' என்ற நூலில் தெளிவாக விளக்குவதை நாம் கண்டு கொள்ள முடியும். சரி,மறவராகிய சேதுபதி மன்னர்கள் எப்படி தாய்வழிச் சமூகம் என்று சொல்லப்படுகிறது.அதற்கு ஆதாரம் என்ன?
கி.பி 1795 ஆம் ஆண்டு வரை மறவர் சீமையாகிய இராமநாதபுரத்தை ஆண்டவர் முத்துராமலிங்க சேதுபதி என்ற மன்னராவார்.இவரது மூத்த சகோதரி பெயர் மங்களேஸ்வரி நாச்சியார்.உண்மையில் இவர், முத்துராமலிங்க சேதுபதி மன்னருடைய தாயின் முன்னால் கணவருக்குப் பிறந்த பெண் ஆவார்.இதனால் தாய்வழிச் சமூக முறைப்படி மங்களேஸ்வரி நாச்சியார்தான் ஆட்சிக்கு உரிமை உடையவராகிறார்.எனவே,மங்களேஸ்வரி நாச்சியார், 'தங்களது மறவர் சமூக முறைப்படி மூத்த பெண்ணான தானே மறவர் சீமையின் ஆட்சி பீடத்தில் அமரத் தகுதியுள்ளவள்' என்று வழக்குத் தொடுத்து, ஆதாரங்களை கும்பெனியாருக்கு எடுத்துக் கூறித் தனது உரிமையை நிலைநாட்ட முறையிட்டார்.இவரது முறையீடு உண்மை என உணர்ந்த கும்பனியார் சேதுபதி மன்னரை கி.பி 1795 ல் நீக்கம் செய்து,நீண்ட நாள்களுக்குப் பிறகு 22.4.1803 அன்று மங்கேஸ்வரியை அரசியாக அல்லாமல் இராமநாதபுரம் ஜமீன்தாரினியாக நியமனம் செய்தனர்.எனவே,முத்துராமலிங்க சேதுபதி மன்னர் நீக்கப்பட்டு மங்களேஸ்வரி நாச்சியார் ஆட்சியுரிமை பெறுவதற்கு முழுக்காரணமாக இருந்தது மறவர்களின் தாய்வழிச் சமூக அமைப்புதான்.
ஆனால்,தமிழ் மூவேந்தர்கள் முழுக்க முழுக்க தந்தை வழி அரசுரிமை அமைப்புக் கொண்டவர்கள். எனவே,மறவர்களுக்கும்,மூவேந்தர்களான சேர,சோழ,பாண்டியர்களுக்கும் எந்த சம்பந்தமும் நிச்சயமாகக் கிடையாது.

26 comments:

  1. வெறும் தாய் வழி சமூகம் / தந்தை வழி சமூகம் வைத்து கொண்டே ஒரு இனம் தமிழ் இனமா இல்லையா என்று கண்டிப்பாக வரையறுத்து விட முடியுமா? அது மட்டும் தான் வரலாற்றறிஞர்களின் அளவுகோலா? அப்படியான ஒரு வரலாற்றாய்வு எவ்வளவு முட்டாள் தனமான ஆய்வாக இருக்கும்?
    சேதுபதிகள் தாய்வழி சமூகம் என்பதற்கு நீங்கள் கூறி இருக்கும் ஆதாரம் போல, உங்களின் இந்த கருத்துக்கு - "ஒரு பெண் கூட மூவேந்தர் வழியில் அரசாள அனுமதிக்கப்பட்டது கிடையாது." குறிப்பாக " அனுமதிக்கப்பட்டது கிடையாது" என்ற வாக்கியத்துக்கு என்ன ஆதாரம்?
    சேதுபதிகள் தாய் வழி சமூகம் என்பது உண்மை, நீங்கள் கொடுத்துள்ள ஆதாரத்தில் கூட ஆங்கில அரசு மங்களேஸ்வரி நாச்சியார் அவர்களுக்கு முடி சூட்ட வில்லை, மாறாக சேதுபதி சொத்துக்களை அனுபவித்து அதற்கான அதிகாரம் முழுவதும் கொண்டவர் என்று தான் தீர்ப்பு சொல்கிறதே தவறிய, மறவர் சீமையின் ஆட்சி பீடத்தில் அமர்த்தவில்லை. இரண்டுக்கும் பெரிய வித்தியாசம் உண்டு, இன்றும் சிவகங்கை சமஸ்தான உரிமை, புதுகோட்டை சமஸ்தான உரிமை ஆகியவற்றுக்கு நீதிமன்றத்தில் வழக்கு நடந்து கொண்டிருக்கிறது, அவ்வழக்குகளில் தீர்ப்பு வரும் போது, அரசாங்கம் அவர்களுக்கு முடி சூட்டி படம் கட்டது மாறாக அவர்களில் யாருக்கு அந்த சொத்து அனுபவித்து கொள்ள / அதிகாரம் செலுத்த உரிமையானது என்று தான் அர்த்தம் கொள்ளப்படும். அப்படியே தாய் வழி சமூகம் என்றால், ஏன் சேதுபதிகளில் தலைச்சன் பிள்ளையாக அதற்கு முன்னால் பிறந்த பெண் பிள்ளைகள் யாரும் ஆட்சி செய்யவில்லை? சொத்து வழக்கினை வைத்து, இப்படி ஒரு சிறுபிள்ளை தனமான விளக்கம் கொடுத்து, தவறான சரித்திரத்தை எழுத முற்படுவது தான் "தமிழர் வரலாற்று ஆய்வு நடுவம்" என்பதா? இதற்கு நீங்கள் "தமிழர்களுக்கு புருடா விடும் நடுவம்" என்று பேரை மாற்றி கொள்ளலாமே

    ReplyDelete
  2. மூவேந்தர்கள் ஆன்வழி வாரிசு உரிமை உடையவர்கள். அதாவது மன்னரின் பட்டத்து அரசியின் மூத்தமகனே அடுத்த மன்னருக்கு உரிமை உடையவர். இக்கருத்தை எந்த வரலாற்று அறிஞரும் மறுக்கவில்லை. ஆனால் சேதுபதிகள் பெண்வழி வாரிசு உரிமை உடையவர்கள். இதை இல்லை என்று கூறமுடியுமா. மங்கலேஸ்வரி நாச்சியாரின் அரசு உரிமை பிரச்சனையில் அவர் ஆங்கிலேயரிடம் அரசு உரிமைகோறி எழுதிகொடுத்த சாசனம் உள்ளது. அதில் உள்ள செய்தி
    ரிபில் சேதுபதி ( முத்துராமலிங்கம் ) , மங்கலேஸ்வரி என்ற எங்கள் இருவருடைய தந்தையும் வேறு தாய் ஒன்று , எங்கள் செம்பி நாட்டு சிறு தாழி கட்டி முறைப்படி பெண்களே வாரிசுரிமை உடையவர்கள் என்று வாதிட்டார் . இக்கருத்தை இராமேஸ்வரம் கோயில் கார்காத்த வேளாளர், குருக்கள், நயினார் கோயில் குருக்கள் ஆகிய மூவரும் உண்மை என்று கூறியதின் அடிப்படையில் பிரிட்டிஷ் அரசாங்கம் மங்களேஸ்வரிக்கு அரசு உரிமையை வழங்கியது.

    மேலே கூறப்பட்டுள்ளவை அரசு உரிமையா?. அல்லது சொத்து உரிமை மட்டும்தான?.

    ReplyDelete
  3. நான் கேட்ட கேள்விக்கு பதில் தர வில்லை.

    கேள்வி 1: வெறும் தாய் வழி சமூகம் / தந்தை வழி சமூகம் என்பதை வைத்து வரலாறு எழுதி விட முடியுமா?

    கேள்வி 2: ரிபெல் முத்துராமலிங்க சேதுபதிக்கு பிறகு சேதுபதி சமஸ்தானத்தை ஆங்கில அரசு எடுத்து கொண்டது, சமஸ்தானத்துக்கு சொந்தமான சில சொத்துகளை (Estates) மட்டும் தான் வாரிசு தாரர் அனுபவிக்க அனுமதித்தது, உதாரணமாக புதுகோட்டை அரசு என்பது ஓர் அரசரும் ஆங்கிலேயே ரெசிடென்ட் ஒருவரும் கொண்டு ஆட்சி செய்த தனி நாடாகும், இங்கே ரிபெல் முத்துராமலிங்க சேதுபதிக்கு பிறகு ஆட்சியே இல்லை எனும்போது, எப்படி "அரசு" உரிமை குறித்து ஆங்கிலயே அரசு பேசும்?

    கேள்வி 3: மங்களேஸ்வரி மட்டும் தான் மொத்த சேதுபதி பரம்பரையில் பெண் மகவா? ஏன் காலம் காலமாக ஆண்ட சேதுபதி மரபில் வேறு பெண் ஆட்சி உரிமையோ / ஆட்சியோ செலுத்த வில்லை? நீங்கள் கூறுவது போல தாய் வழி சமூகம் என்பதால் அவ்வாறான ஒரு ஆட்சி உரிமை கோரி இருந்தால் மறுத்திருக்கவா முடியும் ?

    ReplyDelete
  4. "சேதுபதிகள் பெண்வழி வாரிசு உரிமை உடையவர்கள்" - பெண் வழி "சமூகம்" என்று ப்ளாக்-ல் எழுதி விட்டு பெண் வழி "வாரிசு உரிமை" என்று சொல்வது எப்படி சரி ஆகும். ஆங்கிலேயே அரசின் தீர்ப்பு மட்டும் தான் உதாரணம் என்றால் எப்படி ஆங்கிலேயே அரசின் காலத்தையும் மூவேந்தர்களின் காலத்தையும் இணைத்து பேசுகிறீர்கள்? இரண்டுக்கும் 600-700 வருட இடைவெளி இருக்கிறதே? ஒரு சமூகம் 700 வருட காலத்தில் மாறாமல் இருக்குமா?

    இதற்கு பேர் தான் தமிழர் வரலாற்று (புருடா) ஆய்வு நடுவமா?

    ReplyDelete
  5. சேதுபதி மன்னருக்கும் பாண்டிய மன்னர்களுக்கும் என்ன தொடர்பு என்று விளக்க முடியுமா? .பாண்டியர்களிலிருந்து எவ்வாறு சேதுபதியானார்கள்?. எப்பொழுது அட்சி உரிமை பெற்றார்கள் என்று கூற முடியுமா?.

    ReplyDelete
  6. "சேதுபதி மன்னருக்கும் பாண்டிய மன்னர்களுக்கும் என்ன தொடர்பு என்று விளக்க முடியுமா?"
    - இந்த கேள்வி என்னை தான் கேட்கிறீர்கள் என்று நினைகிறேன். நான் சேதுபதி மன்னர் தான் பாண்டிய மன்னர் என்று எங்கும் எழுத வில்லையே? பின் ஏன் இந்த கேள்வி.

    ஒரு வேளை "ஒரு சமூகம் 700 வருட காலத்தில் மாறாமல் இருக்குமா? " என்ற கேள்வியை நீங்கள் சேதுபதிகள் சமூகம் பாண்டியர் குலம் என்று எழுதி உள்ளதாக நினைத்து விட்டீர்களோ... நான் சொல்ல வந்தது தந்தை வழி சமூகம் தாய் வழி சமூகமாக 700 வருடம் எனும் பெரும் கால வெளியில் மாறி இருக்ககூடாதா என்பது தான்.

    நான் உங்கள் ப்ளாக் படித்து அதில் எவ்வளவு தூரம் உண்மை என்று அறிய முற்படும் ஒரு சாதாரணன் மட்டுமே.

    எங்கெல்லாம் உங்கள் சரித்திர ஆதாரங்கள் தவறெனபடுகிறதோ அவற்றை பற்றி மேலும் விளங்கி கொள்ள நான் எடுக்கும் ஒரு சிறிய முயற்சியே இந்த கேள்விகள். நீங்கள் மட்டும் அல்ல, இன்றைக்கு தமிழகத்தில் இருக்கின்ற எந்த சாதியையும் மூவேந்தர் வமிசாவளி என்று நான் நினைக்கவில்லை. மாறாக பல தமிழ் குலங்கள் சேர்ந்து தான் மூவேந்தர் ஆட்சி உச்சநிலை எய்தியிருக்க வேண்டும் என்று நினைகிறேன். உலகெங்கும் அரச குலங்கள் உருவாவதும் உச்சநிலை அடைவதும் பலகுலங்களின் ஒத்திசைந்த ஒரு செயல் தான் என்று நினைகிறேன்.

    உதாரணமாக நாம் நய்யக்கர் அரசு என்று ஒற்றைபடையாக பார்க்கிறோம், ஆனால் அவர்களுக்குள்ளே பலிஜா, கொல்லவாரு, கம்மவாரு இன்னும் ஏக பட்ட குலங்கள் ஒன்றோடு ஒன்று மோதி பின் இனைந்து உருவாகியதே நாயக்க சாம்ராஜ்யம். இன்றும் அவர்களுக்குள் மண உறவு என்பது கிடையாது அல்லது தவறென கருதபடுவது. மேலும் அவர்களுக்குள்ளே உயர்வு தாழ்வும் உண்டு. இதே போல் தான் உலகமெங்கும் உள்ள அரச குலங்களின் கதைகளும். ஆனால் நாம் படிக்கும் சரித்திரம் என்பது மிகவும் ஒற்றைபடையானது. குறிப்பாக மூவேந்தர்கள் 800 வருட காலத்திற்கு முன் ஆண்டவர்கள், அவர்கள் காலத்துக்கு பின் ஏகப்பட்ட சிக்கல் - சுழல்களில் தமிழகம் உழன்டது, இந்த இடைப்பட்ட காலத்தில் எத்தனை மாற்றங்கள் நிகழ்ந்திருக்கும், வெறும் 10 வருட இடைவெளியே நமக்கு எவ்வளவு மாற்றங்களை தருகிறது அப்படி இருக்கையில், 800 வருட இடைவெளிக்கு பின் இன்று உள்ள சாதிய குழுக்களுக்குள் அவர்களை அடைக்க மேற்கொள்ளும் முயற்சி என்பது சரித்திரம் பற்றிய சரியான புரிதல் இல்லாதவர்களின் செயல் என்பது தான் எனது எண்ணம்.

    ReplyDelete
  7. மூவேந்தர் வமிசாவளிகள் யாராக இருக்கும் என்பதை இன்றை சாதிய கண்ணோட்டத்தில் நீங்கள் பார்ப்பதாள்தான் மிகவும் குழப்பத்தில் உள்ளீர்கள்.

    மனிதன் இனகுழு மக்களாக ஒவ்வொரு நிலத்திலும் ( குறுஞ்சி, முல்லை, நெய்தல், பாலை) உனவுக்காக ஒவ்வொரு நாளும் நாடோடிகளாக வாழ்ந்த காலத்தில் மருத நிலத்தில் விவசாயத்தின் உற்ப்பத்தி பெருக்கால் மனிதன் ஒரே இடத்தில் இருந்து வாழத் தொடங்கினர்.

    மருத நிலத்தின் விவசாயம் நிலை பெற்றதை ஒட்டிய காலப் பகுதியில்தான்சுமார் நான்காயிரம் ஆண்டுகளுக்கு முன்னர், குடும்பம் என்கிற சமூக அமைப்பு தோன்றி இருக்கிறது. ஒரு தலைவி, ஒரு தலைவன், குழந்தைகள் என்ற ரத்த உறவு கொண்டவர்கள், ஒரு கூரையின் கீழ், தனிச் சொத்து உரிமையோடு வாழத் தொடங்கிய காலம்தான் குடும்பம் என்ற அமைப்பு உருவான காலம். அது, மருத நில உழவர்களிடம் இருந்துதான் தொடங்குகிறது. அந்த அமைப்புக்குக் காரணமாக இருந்த மருத நில உழவர்கள் குடும்பனார் எனப்பட்டார்கள்.

    குலம், குழு வாழ்க்கை சிதைந்து, தனிச் சொத்து, தனிக்குடும்பம் உருவான பழம் காலத்து வரலாறு இது. சங்க இலக்கியம் முழுக்க முழுக்கக் குடும்ப அமைப்பை நிலைப் பெறச் செய்வதை நோக்கமாகக் கொண்டிருப்பதற்குக் காரணம், உருவாகி வந்து கொண்டிருக்கிற புதிய நாகரிகமாகிய ‘குடும்பம்’ என்ற புதிய வாழ்க்கைமுறையை நிலைபேறு அடையச் செய்யத்தான்.

    குடும்பம் என்பது, ஒரு சிறிய அரசாங்கம். பெரிய அரசாங்கத்தின் சிறிய பதிப்பு அது. அங்கு அரசன். இங்கு குடும்பத் தலைவன். அங்கு அரசி. இங்கு தலைவி. அங்கு அரசுக்கு உரியவன் இளவரசன். இங்கு சொத்துக்கு உரியவர்கள் குழந்தைகள். இந்தக் குடும்பம் என்ற அமைப்பில்தான் ‘ஆண் தலைமை’ உருவாகிறது. குடும்ப அமைப்பு நிலைபெற்ற பிறகுதான் திட்டவட்டமான சட்டமுறைகள், அமைப்புகள் கொண்ட அரசுகள் உருவாகின.

    அன்று உலகில் முதல் மனிதன் ஆப்பிரிக்கவில் தோன்றியதாக கூறும் உலக அரிஞர்கள் கூட மனித நாகரிகமும், அரசும் உழவு தொழில் செய்த வேளான் இனக்குழுக்களில் தோன்றியதாக கூறுகின்றன.
    இவ்வாறு தோன்றிய அரசில் மருதநில இனக்குழுக்களின் கீழ் மற்ற இனக்குழுக்கள் பணி செய்திருக்களாம் அல்லது இனக்குழுக்கள் இனைந்து செயல்பட்டிருக்களாம்.

    ReplyDelete
    Replies
    1. பள்ள shedule caste not shedule tribal

      Delete
  8. "மூவேந்தர் வமிசாவளிகள் யாராக இருக்கும் என்பதை இன்றை சாதிய கண்ணோட்டத்தில் நீங்கள் பார்ப்பதாள்தான் மிகவும் குழப்பத்தில் உள்ளீர்கள். " -- யார் நானா?

    என்னுடைய மறுப்புரையை சரியாக வாசித்தீர்களா?
    குறிப்பாக இந்த வரியை "நீங்கள் மட்டும் அல்ல, இன்றைக்கு தமிழகத்தில் இருக்கின்ற எந்த சாதியையும் மூவேந்தர் வமிசாவளி என்று நான் நினைக்கவில்லை" - இதை எழுதியது நான், நீங்களோ அல்லது இந்த ப்ளாக் owner "தமிழர் வரலாற்று (புருடா) ஆய்வு நடுவம்" மோ எழுதவில்லை

    இந்த ப்ளாக்-ன் பல இடங்களில் மள்ளர் என்ற பள்ளர் சாதி தான் தமிழ் வேந்தர் (மூவேந்தர்) என்று எழுதுகின்றனர். நீங்களும் மள்ளர் என்பது சாதி அதுவே இன்றைய பள்ளர் சாதி என்று வாதாடுகிறீர்கள் (எதற்காக என்றால் இந்த ப்ளாக்-ல் பல இடங்களில் சொல்லி உள்ள தமிழ் வேந்தர் மள்ளர் சாதி என்று சொல்வதற்கு ஒத்திசைவாக இருக்க)

    ஆனால் கொஞ்சம் கூட கூச்சம் இல்லாமல் நான் மூவேந்தரை சாதிய வட்டத்துக்குள் பார்கிறேன் என்றும், நீங்கள் எதோ மூவேந்தர் எந்த சாதியும் இல்லை என்று வாதிடுவது போல சொல்கிறீர்கள். இதை நான் என்ன சொல்வது, இந்த ப்ளாக் படிக்கும் எல்லாரும் இந்த கமெண்டுகளை படிக்கும் போது அவர்களுக்கு புரியும் நானா - நீங்களா யார் மூவேந்தரை சாதிக்குள் திணிக்க முயல்வது என்று.

    ReplyDelete
  9. அரசமைப்பும் - குடும்பமும்
    ---------------------------------------------

    நான் சொன்னது என்ன " அரச குலங்கள் என்பது நாம் நினைப்பது போன்ற ஒற்றைபடையான சாதி அமைப்பு கொண்டது அல்ல, பல்வேறு குலங்கள் சேர்ந்து உருவாக்குவதே மூவேந்தர் ஆண்டது போன்ற பேரரசுகள்"

    நீங்கள் சொன்னது என்ன "குடும்பம் என்பது மருத நிலத்தில் தான் உருவானது. குடும்பம் என்பது ஒரு தலைவன், ஒரு தலைவி, சில குழந்தைகள் (நல்லவேளை அதுவும் ஒரு குழந்தை என்று எழுதவில்லை) கொண்டு ஒரு அரசு போன்று இருப்பது, இதில் இருந்து தான் அரசும் சட்ட திட்டங்களும் உருவாகின"

    மேலே உள்ள இரண்டு கருத்துக்களுக்கும் என்ன ஒற்றுமைகள் [குமுதம் இதழ் போல 6 ஒற்றுமைகளை கண்டுபிடியுங்கள் :) ]

    - நான் சொன்ன கருத்துக்கும், நீங்கள் சொன்ன கருத்துக்கும் என்ன சம்பந்தம்?

    மருத நிலத்தில் மட்டும் தான் குடும்பம் இருந்ததா? அப்போ மற்ற இடங்களில் எல்லாம் மிருகங்கள் போல புணர்ந்து பின் குழந்தைகளை கொன்றுவிட்டார்களா?

    குடும்பம் என்பதே முதலில் குழுவாக வாழ ஆரம்பித்ததிலிருந்து உருவானது என்பதே வரலாற்றாய்வாளர் சொல்லும் கருத்து. Neanderthal man கூட கூட்டமாக வாழ்ந்தான், தான் புணர்ந்து தன் பிள்ளையை பெற்ற பெண்ணையும்/குழந்தையையும் காக்க வேட்டையாடி இருக்க வேண்டும் என்று அறிகின்றனர். இன்றும் கூட bonobos, orangutan போன்ற குரங்கினங்கள் கூட்டமாக வாழும் போதே தன் பெண், குழந்தை குரங்குகளோடும் கூட்டமாக வாழ்கிறது. நம் நாட்டில் ஒருவனுக்கு ஒருத்தி என்பது ஆங்கிலேயே கிறித்துவ மத தத்துவத்தை பின் பற்றிய விக்டோரிய காலத்திய (Victorian Era) தாக்கம் ஆகும். அதற்கு முன்னால், பலதார மனம் என்பது இங்கே தவறல்ல. நாயர், திபெத்தியர் போன்ற சில இந்திய இனங்களில் ஒரு பெண் 4 அல்லது 5 அண்ணன் தம்பிகளை திருமணம் புரிவது என்பது கூட இருந்தது (இதை சரித்திர காலவெளியில் புரிந்து கொள்ளாமல் இன்றைய கண்ணாடி போட்டு அதை பார்த்து கீழ்த்தரமாக சித்தரிக்கும் முட்டாள்களும் உள்ளனர்). இதுவும் குடும்பம் தான்.

    மருத நில அமைப்புகள் (Fertile Lands) போன்றஆற்று வழி நாகரீகங்களில் தான் நாகரீகங்கள் உருவாகியது என்பது தான் என் எண்ணமும், அதற்கு சார்பான ஆதாரங்களே அதிகமாக உள்ளன என்பதால்.

    அதே சமயம் "மருதநில இனகுழுக்களின் கீழ் மற்ற இனகுழுக்கள் பணி செய்திருக்கலாம் அல்லது சேர்ந்து செயல்பட்டிருக்கலாம்"

    - நான் என்ன சொன்னேன், எந்த அரசானாலும் பல்வேறு குலங்கள் ஒன்று சேர்ந்தே பேரரசு தோன்றியிருக்கவேண்டும்.

    நீங்கள் ஏன் அதையே சொல்லி பின் வெறும் "மருதநிலம்" என்று சுருக்குகிறீர்கள்?
    அதிலும் குறிப்பாக அந்த "கீழ் பணி செய்வது" என்று குறிப்பிட்டு சொல்வது எதற்கு? - மருதநில மக்கள் தான் அரசாண்டனர், மருதநில மக்களே மள்ளர், மள்ளரே பள்ளர். ஆக இன்றைய பள்ள சாதியே மூவேந்தர் என்று மறுபடியும் இங்கிருந்து ஆரம்பித்து பழைய குருடி கதவ திறடி கதைக்கு செல்வதற்கா?

    ReplyDelete
  10. மறுபடியும் உங்களுக்கு விளங்க (விளக்கம் அல்ல) சொல்கிறேன் பேர்வழி என்று, நான் கேட்ட கேள்வியிலிருந்து மாறி போய்விட்டேன், மீண்டும் உங்களுக்கு நினைவு படுத்துவதற்காக கீழே

    1. ஒரு சமூகம் இந்த வம்சாவளியை சேர்ந்ததா இல்லையா என்பதை வெறும் தாய் வழி / தந்தை வழி சமூகமாக இருக்கிறதா என்பதை வைத்து வரையறுத்து சொல்லமுடியுமா?

    2. இன்றைய தாய் வழி சமூகம் 700 ஆண்டு இடைவெளியில் மாறியிருக்க கூடாதா?

    ReplyDelete
  11. தாய் வழியில் உரிமை / பங்கு இரண்டும் ஸத்ரிய தர்மத்தில் உண்டு ( ஆனால் அது போர் மரபு கொண்டோர் இள வயதில் மரணம் அடையும் காரணத்தால். முக்குலத்தோர் சமூகத்தில் விரும்பினால் பெண்கள் மறுமணம் செய்யலாம் அல்லது உடன் கட்டையும் ஏறலாம். இது அவர்கள் போர் மரபு பின்பற்ருப்பபவர்கள் என்பதை காட்டுகிறது. ) போர் மரபு பின்பற்றும் சத்ரிய குல மக்கள் இயல்பு அது( இந்தியா முழுவதும் உள்ள அரச பரம்பரை அப்படித்தான்) தாய் வழி மரபு ஸத்ரிய குலத்தில் உண்டு,

    ReplyDelete
  12. தமிழ் வரலாற்றில் இடைக்காலம் என்பது கி.பி.9 முதல் 13 ஆம் நூற்றாண்டு வரை உள்ள காலகட்டமாகும். இந்தக் காலகட்டத்தில் தமிழகத்தில் உள்ள சாதிகள் எவை எவை என்பதை கல்வெட்டில் கீழ்கண்டவாறு உள்ளது. அப்படியென்றால் நீங்கள் எப்பொழுது தமிழகம் (மருத நிலம்) வந்தீர்கள் என்பதற்க்கான சான்றுகளை தேடுங்கள் அதைவிடுத்து மூவேந்தர்களுக்கு உரிமைகோரல் என்பது அர்த்தமற்றது.

    1.வெள்ளாளர்
    2.பிராமாணர்
    3.கைக்கோளர்
    4.செட்டி
    5.மன்றாடி
    6.இடையர்
    7.குயவர்
    8.பள்ளி
    9.பறையர்
    10.கம்மாளர்
    11.சாலியர்
    12.சாவர்ணா
    13.சுருதிமான்
    14.வாச்சியன்
    15.ஈழச்சான்றான்
    16.மணிக்கிராமம்
    17.அதிரேசியர்
    18.வேட்டுவர்
    19.கள்ளர்
    20.பட்டினவர்
    21.தச்சன்
    22.தட்டான்
    23.வேட்கோ
    24.குதிரைச்செட்டி
    25.சங்கரப்பாடி
    26.வளஞ்சியர்
    27.திரையர்
    28.வலையர்
    29.இளமகன்
    30.தருமாவாணியர்
    31.கொங்கன்
    32.நாவிதர்


    (Noboru karashima, Y. Subbarayalu and Toru Matsui. A Concordance of the names in the Chola Inscriptions - 1979 )

    ReplyDelete
  13. 16. மணிக்கிராமம் அல்ல "கிராமணி" (சான்றோர் குல உட்பிரிவு)

    ReplyDelete
  14. மறவர் தாய்வழிச்சமூகமாம் அதனால் மூவேந்தர் ஆகும் தகுதி இல்லையாம்! ஹாஹாஹா! சிரிப்புதான் வருது! அந்த சோமசுந்தரகடவுள் மனைவி மீனாக்ஷி தடாதகைப்பிராட்டியாக பாண்டியமண்டலத்தை ஆண்டதாகச்சொல்லும் புராணம் படித்ததில்லை போல! அவளின் இருதோள்களில் இருந்து அவள் மறவர்களைத்தோற்றுவித்ததால் இவர்கள் தாய்வழிச்சமூகமாம் அதிலும் எல்லா மறவரும் தாய்வழிச்சமூகமல்ல! கொண்டையன்கோட்டையார் மட்டுமே தாய்வழிச்சமூகம்

    ReplyDelete
  15. மறவர் தாய்வழிச்சமூகமாம் அதனால் மூவேந்தர் ஆகும் தகுதி இல்லையாம்! ஹாஹாஹா! சிரிப்புதான் வருது! அந்த சோமசுந்தரகடவுள் மனைவி மீனாக்ஷி தடாதகைப்பிராட்டியாக பாண்டியமண்டலத்தை ஆண்டதாகச்சொல்லும் புராணம் படித்ததில்லை போல! அவளின் இருதோள்களில் இருந்து அவள் மறவர்களைத்தோற்றுவித்ததால் இவர்கள் தாய்வழிச்சமூகமாம் அதிலும் எல்லா மறவரும் தாய்வழிச்சமூகமல்ல! கொண்டையன்கோட்டையார் மட்டுமே தாய்வழிச்சமூகம்

    ReplyDelete
  16. செம்பி நாடு என்ற சேது நாடு சோழநாட்டை குறிப்பதாகும்

    ��������������������

    ராமநாதபுரத்தை ஆண்ட சேதுபதி மன்னர்களின் ஆட்சி அதிகார எல்லை பரந்து விரிந்த பகுதியாகும். கடந்த 13ம் நூற்றாண்டில் சோழப் பேரரசு வீழ்ந்து, பாண்டிய மன்னர்கள் ஆட்சிக்கு வந்தனர். இந்த காலகட்டத்தில் பாண்டிய மன்னர்களுக்கு கட்டுப்பட்டு சேதுபதி மன்னர்கள் ஆட்சி நடத்தினர். இதன் பின்பு பாண்டிய பேரரசு வீழ்ச்சியடைந்தது.

    அப்போது கடந்த 14ஆம் நூற்றாண்டு தொடக்கத்தில் சேதுபதி மன்னர்கள் வலுவடைந்து இந்த சீமையில் தன்னாட்சி நடத்தினர். இவர்கள் மறவர் இனத்தின் பிரதான கிளைகளில் ஒன்றான செம்பிநாட்டு மறவர் வகையை சேர்ந்தவர்கள்.

    செம்பிநாடு என்பது சோழ நாட்டை குறிப்பதாகும். சேதுபதி மன்னர்கள் கோவில்களுக்கு வாரி வழங்கிய வள்ளல்களாகவும் வாழ்ந்துள்ளனர். இந்த மன்னர்கள் சைவம் சார்ந்தவர்களாக இருந்தாலும் வைணவ கோவில்கள், இஸ்லாமிய,கிறிஸ்தவ ஆலயங்களுக்கும் வாரி வழங்கி உள்ளனர்.
    கி.பி.1658ல் மதுரை மீது மைசூர்காரர்கள் படையெடுத்தனர். அப்போது அந்த படையை சமாளிக்க முடியாமல் திருமலை நாயக்கர் திணறிய போது,ராமநாதபுரம் மன்னர் ரெகுநாத சேதுபதி 15 ஆயிரம் மறவர் படையினருடன் மதுரையைக் காக்க விரைந்தார். திண்டுக்கல் அருகே நடந்த போரில் மைசூர் வீரர்கள் தோல்வியடைந்து ஓட்டம் பிடித்தனர்.

    இதே போல் கி.பி.1650ல் திருச்சி கோட்டையின் தளபதியான குஸ்தம்கான், திடீரென நாயக்கர் மன்னர் சொக்கநாதரை சிறைப்படுத்தி, திருச்சி கோட்டைக்குள் அடைத்து வைத்திருந்தான். இதைக் கேள்விப்பட்ட கிழவன் ரெகுநாத சேதுபதி, கன்னிவாடி பாளைக்காரருடன் திருச்சி சென்று தந்திரமாக குஸ்தம்கானை கொன்று, நாயக்க மன்னரை சிறை மீட்டார்.

    கி.பி.1736ல் மதுரை நாயக்க வழியினரின் கடைசி அரசியான ராணி மீனாட்சி, வாரிசு இல்லாமல் இறந்தார். அவரது வளர்ப்பு மகனான விஜயகுமாரன், ஆட்சியை மேற்கொள்ள இயலாதவாறு பெரும் குழப்பம் ஏற்பட்டது.
    அப்போது சேதுபதி மன்னன் தன் தளவாயான வெள்ளையன் சேர்வையை, மதுரைக்கு அனுப்பி வைத்தார். மதுரை கோட்டையை ஆக்கிரமித்திருந்த மைசூர் மன்னரின் பிரதிநிதியான தளபதி கோப்பை, போரிட்டு தோற்கடித்து, ராணி மீனாட்சியின் வளர்ப்பு மகன் விஜயகுமாரனை மதுரை மன்னராக கி.பி 1751ல் முடிசூட்டி திரும்பினார் தளபதி.

    இந்த சேதுபதி மன்னர்களின் வரலாற்றுச் சுவடிகளில் சுடர் விட்டுக் கொண்டிருப்பவர் தமிழ் மன்னர் ரெகுநாத சேதுபதி காத்த தேவர். இவரின் காலம் கி.பி.1693. இவரின் மனமகிழும் அன்பு காதலியின் பெயர் காதலி நாச்சியார். ராமேசுவரர் கோவிலில் வீற்றிருக்கும் பர்வதவர்த்தினியின் மறறொரு பெயர் மலைவளர் காதலி என்பதாகும். இந்த தெய்வீக திருநாமம் கொண்ட காதலி நாச்சியார், மாவீரன் ரெகுநாத சேதுபதி காத்த தேவரின் 2ம் மனைவி ஆவார்.

    கள்ளர் இனத்து காதலி நாச்சியாரை, காதல் திருமணம் செய்து கொண்ட சேதுபதி மன்னர், காதலி நாச்சியாரின் அண்ணன் ரெகுநாத தொண்டைமானை சேது நாட்டின் ஆளுகைக்கு உட்பட்டிருந்த திருமயம் கோட்டையின் தலைவராக்கினார். இதன் பின் ரெகுநாத தொண்டைமான் திருமயம் கோட்டையுடன் புதுக்கோட்டையையும் இணைத்து தனி அரசு ஏற்படுத்தினார்.


    விக்னேஷ்வர் பா மாளுசுத்தியார்

    ReplyDelete
  17. கங்கள், ஆயுதமின்றிப் போரிடும் அங்கப் போர் முறை போன்றவற்றைக் கற்பிக்கின்ற பரிக்கிரகங்கள் எனப்பட்ட போர் அவைகளில் (military academy) போர்ப் பயிற்சி அளிக்கின்ற உயர் வர்க்க அலுவலர்களே வலங்கை உய்யக்கொண்ட ரவிகுல க்ஷத்திரியர்கள் எனப்பட்ட சோழ அரச குலத்தைச் சார்ந்த சான்றோர் என நாம் ஊகிக்க முடிகிறது. இத்தகைய பரிக்கிரகங்களில் பயிற்சி பெற்றவர்களுள் வன்னியர் என்ற சாதிப் பட்டம் பூண்ட கள்ளர் குலப் பிரிவினரும் இருந்தனர் எனத் தெரியவருகிறது. இன்று வன்னியர் என்ற சாதிப் பெயரால் அழைக்கப்படுகின்ற பள்ளி குலத்தவர் அல்லது காடவர் குலத்தவர் வேறு; வன்னியக் கள்ளர் வேறு. பல்லவ அரச குலத்தவருடன் தாய்வழி உறவுடைய காடவர் அல்லது பள்ளி குலத்தவர் இடங்கைப் படைப் பிரிவைச் சேர்ந்தவர்கள். காடவர் என்ற சொல்லின் வடமொழி ஆக்கம்தான் வன்யர் என்பதாகும். இக்குலத்தவர்கள் 16ஆம் நூற்றாண்டுக்குப் பிறகு பொதுவாக வன்னியர்கள் என்ற சாதிப் பெயரால் அழைக்கப்படலாயினர். இவர்களுக்கும் வன்னியர் என்ற சாதிப்பட்டம் புனையும் கள்ளர் குலப் பிரிவினருக்கும் அதுவரை தொடர்பு ஏதுமில்லை.

    கி.பி. 15ஆம் நூற்றாண்டின் முற்பகுதிக்குரிய, சென்னை பாடியிலுள்ள திருவலிதாயம் கோயிலிற் பொறிக்கப்பட்டுள்ள, இரண்டாம் தேவராயர் கல்வெட்டில் விஜயநகர அரச அலுவலர்களான வன்னியர்கள், அவ்வூர்ப் பள்ளி குலத்தவர்க்குச் சில சலுகைகள் வழங்கிய செய்தி பதிவாகியுள்ளது. வன்னியர் என்ற சாதிப் பட்டம் நெருப்பு என்று பொருள்படும் வஹ்னி என்ற வடமொழிச் சொல்லிருந்து தோன்றியிருக்கலாம். இச்சாதிப்பட்டம் இலங்கையில் முக்குவர்களுக்கும், அகம்படிய மறவர்களுக்கும் வழங்கப்பட்டது உண்டு. புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடிப் பகுதியில் முத்தரையர் சமூகத்தவர்கள் சின்ன வன்னியனார் என்றும், வழுவாடித் தேவர் என்றும் பட்டம் புனைந்திருந்தனர். தேவகோட்டை அருகிலுள்ள சூரைக்குடியில் கள்ளர் குலத்தைச் சேர்ந்த விசயாலத் தேவன் என்பவருக்கு வன்னியர் என்ற சாதிப்பட்டம் உண்டு. இவ்விசயாலத் தேவ வம்சத்தவர்கள் கி.பி. 17ஆம் நூற்றாண்டில் வலங்கை வாழவந்த விசயாலயத் தேவர் என்றே பட்டம் புனைந்தனர். சாத்தூர்ப் பகுதியிலுள்ள ஏழாயிரம் பண்ணை வன்னியர் (கள்ளர்) வரலாறு பாளையப்பட்டு வம்சாவளியில் பதிவாகியுள்ளது. வன்னியக் கள்ளர்கள் பன்றிக் குட்டிக்குப் பாலூட்டிய திருவிளையாடற் புராணத்தினைத் தங்கள் குலத் தொன்மமாகக் குறிப்பிட்டு உரிமை கோருகின்றனர். (கி.பி. 1806ஆம் ஆண்டைய பாளையப்பட்டு வம்சாவளி.) பள்ளி (வன்யர்) குலத்தவரோ வலைவீசிய திருவிளையாடற் புராணத்திற்கு உரிமை கோருகின்றனர். (கி.பி. 18ஆம் நூற்றாண்டைய குற்றாலம் செப்பேடு.)

    வன்னியர் சாதிப் பட்டம் புனைந்த மேற்குறித்த கள்ளர், முத்தரையர் சாதிப்பிரிவினரும் பிற்காலச் சோழர் ஆட்சியில் வலங்கை உய்யக்கொண்டார் எனப்பட்ட சான்றோர் குலப் போர்ப் பயிற்சியாளர்களிடம் பயிற்சி பெற்ற படைவீரர்களே என்று கருத வேண்டியிருக்கிறது. கி.பி. 10ஆம் நூற்றாண்டிலிருந்தே பாண்டிய நாட்டில் சோழர் ஆட்சி ஏற்பட்டதன் விளைவாக இத்தகைய சான்றார் குலப் போர்வீரர்களும் கள்ளர் (வன்னியர்) சாதிப்பிரிவுப் போர்வீரர்களும் குமரி மாவட்டத்தில் குடியேறி நிலைப்படையில் இடம்பெற்றிருந்ததற்கு வாய்ப்புகள் உண்டு. பள்ளிவில்லிகள் எனப்பட்ட விற்படை வீரர்கள், வில்லவர்கள் (சேரர்) நாட்டில் குடியேற்றப்பட்டிருக்கக்கூடும் எனினும் அவர்கள் இடங்கைப் போர்ப் படையினராகவே அங்கீகரிக்கப்பட்டிருக்க வேண்டும். சோழ அரசனின் பட்டப்பெயரோடு கூடிய தரணி விச்சாதிரத் தனு தம்பர் எனப்பட்ட விற்படை வீரர்களில் படையிலான் தமிழன் மாணிக்கன் என்பவன், சோழ நாட்டிலிருந்து குமரி மாவட்டத்தில் குடியேறிய ஒருவன் என்பது கி.பி. 12ஆம் நூற்றாண்டுக் கல்வெட்டுக் குறிப்புகளிலிருந்து ஊகிக்கப்படுகிறது. இத்தகையோருடனான மண உறவில் உருவானவர்கள் கள்ளச் சான்றார் பிரிவினர் எனலாம். கள்ளச் சான்றார் பிரிவினரை மேனாட்டார் என அழைப்பது, ஈச நாட்டுக் கள்ளர் தொடர்பால் ஆகலாம்.

    விக்னேஷ்வர் பா மாளுசுத்தியார்

    ReplyDelete
  18. பாண்டிய நாட்டு கள்வர் பெருமகன்

    கள்வர் பெருமகன் சங்ககாலப் பாண்டிய நாட்டில் ஒரு நிலப்பகுதியை ஆண்ட ஒரு குறுநில மன்னன். இவனது நாட்டுப்பகுதி கவுரியர் நன்னாடு என வழங்கப்பட்டது. இவனது தலைநகர் 'ஆ கொள் மூதூர்' எனச் சுட்டப்பட்டுள்ளது. இதனால் இவன் வெட்சிப் போர் பல புரிந்தவன் எனத் தெரிகிறது. இவன் இளையர் படை ஒன்று வைத்திருந்தான்.

    கள்ளர்களைத் குறித்து அகநானூற்றுச் செய்யுட்கள் விரிவாகக் கூறுகின்றன. திருவேங்கட மலையில் வசித்தோரும்., அஞ்சா நெஞ்சு படைத்தவருமாகிய இவர்கள் ‘கள்வர் பெருமகன் தென்னன்’ என்ற பாண்டியனால் தென்னாட்டிற்கு அழைக்கப்பட்டனர் எனத் தோன்றுகிறது. புதுக்கோட்டைக்கு வடகீழ்பாலுள்ள வீசங்கி (மீசெங்கள) நாட்டில் இவர்கள் தலைமை வகித்திருந்தனர். இவர்களில் பலர் அரசர்களோடு சம்பந்தப் பட்டிருக்கின்றனர். நாராயணப் பேரரசு மக்கள் என்றும், படைத்தலைவர் என்றும், தந்திரிமார் என்றும், கர்த்தர் என்றும் கள்ளர்கள் அழைக்கப் பட்டனர்.

    தென்னன் என்னும் பெயர் ஒரு பாண்டிய அரசன் தன் கட்டுப்பாட்டுக்குள் வராத சிற்றூர்களை வென்று வருகையில் இவனைப் போரில் வென்றான். பருந்துக்கு இரையாக்கினான். என்றாலும் தென்னனால் கள்வர் பெருமகன் நாட்டிலிருந்த நீர் வழியும் கற்குகையை நெருங்க முடியவில்லையாம். [1] [2]

    இந்த நீர் வழியும் கற்குகை திற்பரப்பு என்னும் பெயருடன் குமரி மாவட்டம் கல்குளம் வட்டத்தில் உள்ளது.

    - கள்வர்-பெருமகன், தென்னன், கவுரியர், 'வெல்போர்க் கவுரியர்' ஆட்சிப் பகுதியில் தெற்குப்பக்கம் உள்ளது 'புழை'க் கதவம். இதனைத் திறந்து சென்றால் 'நீரிழி மருங்கு' (நீர் வீழ்ச்சி) ஒன்றை அடையலாம். அங்கு 'வரையர மகளிர்' வாழ்தனராம். தலைவி இந்த வரையர மகளிர் போல் அடைய முடியாதவளாம். - 'ஏவல் இளையர்' பலரைக் கொண்ட 'கள்வர் பெருமகன்' ஒருவன் இந்தப் புழைக்கதவத்தைக் காத்துவந்தான். இதனைப் பல போர்களில் வெற்றி கண்ட 'தென்னன்'கூடத் தொட முடியவில்லை. (அகம் 342)
    விக்னேஷ்வர் பா மாளுசுத்தியார்

    ReplyDelete
  19. கள்ளர் கல்வெட்டுகள்:

    கொப்பரகேசரி பராந்தகன் கல்வெட்டில் வல்லநாட்டு கவிர்ப்பால் கள்ள நாடாய் இசைந்த நாட்டொம்

    முதல்குலோத்துங்கன் 232-1938 தெங்கவி நாட்டு கள்ளர் பால் கற்குறிச்சி கள்ளன்
    பாப்பான் சேந்தனான குலோத்துங்க சோழ நாடால்வான்

    வெள்ளனூர் கல்வெட்டு115 ஆலியர் கள்ளர் கோன் கன்ன நாட்டான்

    கற்குறிச்சி அரையனான நக்கன் செட்டி கள்ளன் அரையனேன்

    இரானேந்திரன் குலோதுங்க சோழன் உயர் அதிகாரி புல்வயன்ல் கடம்பராயனேன் கள்ள நாட்டன் த்ந்மம்

    கள்ளர் என்ற பெயர் கள்ளர் சமூகத்துக்கு எதனால்?

    சங்ககாலத்தில் தமிழகத்தில் இருந்த கள்ளர் போர்முறைகள்
    1. ஆ கொள் மூதூர்க் கள்வர் பெருமகன்
    ஏவல் இளையர் தலைவன் மேவார்
    அருஙு குறும்பு எறிந்த ஆற்றலொடு - அகநானூறு 342

    விளக்கம்: ஆநிரை கவரும் பொருட்டு ஆகொள்ளுக்கு சிறந்த பெயரைப் பெற்ற மூதூரின் கள்வர் பெருமகன் என்பவன் ஏவிவிட இளையர் படைத் தலைவன் எதிரியின் குறும்பு ஆடுகளை கவர்கிறான். இதனால் எதிரியின் பொருளாதார பலம் அழிய கள்வர் படை வென்றது.

    2. ஆயிடை அத்தக் கள்வர் ஆதொழு அறுத்தெனப்
    பிற்படு பூசலின் வழிவழ யோடி - அகநானூறு 7

    ஆநிரை கவர்ந்து கள்ளர் சென்றுவிட அவரை துரத்திச் சென்று ஆநிரை மீட்கும் மறவர் போல் பின்னே சென்றதாக உவமை சொல்கிறது.

    இதுதான் கள்ளரின் போர்முறை. 2500 ஆண்டுகளுக்கு மேலாக இருக்கும் கள்ளரின் போர்முறை காரணமாக அவர்களுக்கு வந்த பெயர்கள் தான் கள்வர், கள்ளர்.

    இச் சுரம் படர் தந்தாளே, ஆயிடை
    அத்தக் கள்வர் ஆ தொழு அருத்தென
    பிற்படு பூசலின் வழி வழி ஓடி - அகம்:7

    நறவுநொடை நெல்லின் நாண்மகிழ் அயருங்
    கழல்புனை திருந்தடிக் கள்வர் கோமான்
    மழபுலம் வணக்கிய மாவண் புல்லி
    விழவுடை விழுச்சீர் வேங்கடம் பெறினும்
    பழகுவ ராதலோ அரிதே முனாஅது - அகம்:61

    கன்று காணாது, புன் கண்ண, செவி சாய்த்து,
    மன்று நிறை பைதல் கூர, பல உடன்
    கறவை தந்த கடுங் கால் மறவர்
    கல்லென் சீறூர் எல்லியின் அசைஇ
    முதுவாய்ப் பெண்டின் செது காற் குரம்பை

    மட மயில் அன்ன என் நடை மெலி பேதை
    தோள் துணையாகத் துயிற்றத் துஞ்சாள்,
    ''வேட்டக் கள்வர் விசியுறு கடுங் கண்
    சேக் கோள் அறையும் தண்ணுமை
    கேட்குநள்கொல்?'' எனக் கலுழும் என் நெஞ்சே..- அகம்:63

    இரலை சேக்கும், பரல் உயர் பதுக்கைக்
    கடுங்கண் மழவர் களவு உழவு எழுந்த
    நெடுங் கால் ஆசினி ஒடுங்காட்டு உம்பர்,
    விசிபிணி முழவின் குட்டுவன் காப்ப,
    பசி என அறியாப் பணை பயில் இருக்கை - அகம்:91

    வெல்போர்க் கவுரியர் நன்னாட் டுள்ளதை
    மண்கொள் புற்றத் தருப்புழை திறப்பின்
    ஆகொள் மூதூர்க் கள்வர் பெருமகன்
    ஏவல் இளையர் தலைவன் மேவார்
    அருங்குறும் பெறிந்த ஆற்றலொடு பருந்துபடப்
    பல்செருக் கடந்த செல்லுறழ் தடக்கை

    கெடாஅ நல்லிசைத் தென்னன் தொடாஅ
    நீரிழி மருங்கிற் கல்லளைக் கரந்தவவ்
    வரையர மகளிரின் அரியள்
    அவ்வரி அல்குல் அணையாக் காலே. - அகம்:342

    பொன்னா குதலும் உண்டெனக் கொன்னே
    தடிந்துடன் வீழ்த்த கடுங்கண் மழவர்
    திறனில் சிதாஅர் வறுமை நோக்கிச்
    செங்கோல் அம்பினா கைந்நொடியாய்ப் பெயரக் - அகம்:347

    விக்னேஷ்வர் பா மாளுசுத்தியார்

    ReplyDelete
  20. பள்ளர் விவசாய ௯லிகள் மட்டுமே ஆண்ட ஜாதி கிடையாது ௬ம்மா காமடி பன்ன வேண்டாம்

    ReplyDelete
  21. பள்ளர் விவசாய ௯லிகள் மட்டுமே ஆண்ட ஜாதி கிடையாது ௬ம்மா காமடி பன்ன வேண்டாம்

    ReplyDelete
  22. only kondaiankottai maravars and nangudi vellalars are " THAI VAZHI SAMOOGAM" in tamil communities..

    ReplyDelete
    Replies
    1. வாதிரி என்ற நெசவாளர் சமுகமும் தாய்வழி கிளை சாதி ஆகும்.7 கிளைகள் பிரதானமாக உள்ளது.ஒரே கிளையை சார்ந்தவர்கள் தங்களுக்குள் திருமணம் செய்து கொள்ள கூடாது.இது இன்றும் கடைபிடிக்க பட்டு வருகிறது.

      Delete
  23. பள்ளர்கள் மருத நில தலைவன் முதுகுடி வேந்தரின் வம்சாவளியினர் அந்த முதுகுடி வேந்நனை வென்றவர்கள் மூவேந்தர்கள் இதுகூட தெரியாமல் தமது முன்னோர்களை வீழ்த்திய மூவேந்தர்களை உரிமை கோருவது நகைப்புக்குறியது

    ReplyDelete