Wednesday, May 21, 2014

பாண்டியர்களை வீழ்த்திய 'வாணர்குலத்தவர்'

பாண்டிய மன்னர்களின் ஆட்சியில் அவர்களுக்குத் திறை செழுத்தி ஆங்காங்கே மாவலி வாணராயர் என்ற வாணர்குலத்தவர் குறுநில மன்னர்களாக ஆட்சி செய்தனர். அவ்வாறே, சேலம் ஜில்லாவின் கீழ்ப் பகுதியும்,தென்னார்காடு ஜில்லாவின் மேற்பகுதியும் தன்னகத்தே கொண்ட உள்நாடு ஒன்று பாண்டியரின் கீழ் இருந்த வாணராயர் என்ற குறுநில மன்னர்களின் ஆட்சியில் இருந்தது. கி.பி 13 நூற்றாண்டின் பிற்பகுதியில் குறுநில மன்னர்களின் நாடெல்லாம் பாண்டிய மன்னனின் ஆட்சியின் கீழ் வந்த நிலையில், வாணர்குலத்தவரில் சிலர் பாண்டியன் ஆட்சியில் அரசியல் தலைவர்களாகவும், படைவீரர்களாகவும் அதிகாரம் பெற்றனர். பிள்ளை மாவலி வாணராயன் என்பான் பாண்டியன் ஆட்சியில் இருந்த வாணர்குல அரசியல் தலைவனாவான். புதுக்கோட்டையிலுள்ள 'கோனாடு' இவன் மேற்பார்வையில் இருந்தது. இதேபோன்று,  இராமனாதபுரம் ஜில்லாவில் உள்ள கேரள சிங்க 'வளநாடும்' ஒரு வாணர்தலைவனின் கண்காணிப்பில் இருந்தது அறியத்தக்கது ( The Pandyan Kingdom by K.A.Nilakanda Sastrigal M.A Page:187).

பாண்டிய வேந்தரிடம் படைத்தலைவர்களாக நிலவிய இவ்வாணராயர் பாண்டியர் அயலார் படையெழுச்சினால் ஆற்றல் இழந்து இன்னல் எய்திய காலத்தில், அதை தமக்குச் சாதகமாகக் கொண்டு, பாண்டியரை வீழ்த்தி, தாம் சுயேட்சையாகத் தனியாக அரசு புரியத் தொடங்கினர். மேலும், பாண்டிய மன்னர் திருநெல்வேலி ஜில்லாவிற்குச் சென்று அங்கு குறுநில மன்னராக ஆட்சி புரிய இவர்களே காரணமாயினர். எனவே, பாண்டிய மன்னர்களின் வீழ்ச்சிக்கு இந்த வாணர்குலத்தவரின் அடாத செயல்களே காரணமாகும். இந்த வாணராயரது கல்வெட்டுக்கள் தேவிபட்டிணம், திருப்புல்லாணி, காளையார்கோயில்களில் உள்ளன. "புவனேசுவீரன்" எனப் பொறிக்கப்பட்ட இந்த வாணர்களது செப்புக்காசுகள் இராமநாதபுரம் மாவட்டத்தில் அழகங்குளம், பெரியபட்டிணம் ஆகிய ஊர்களில் அகழ்வாய்வில் கிடைத்துள்ளன. "மைக்கருங்கண் மாதரார் மனங்கவர்ந்த மாரவேள், மதுரை வீரகஞ்சுகன்" என்பது ஒரு வாணராயர் பற்றிய தனிப்பாடலின் தொடராகும் (பெருந்தொகை-மதுரைத் தமிழ்ச் சங்கப்பதிப்பு,1932 பாடல் எண்.1008).
இராமநாதபுரம் ஜில்லாவிலுள்ள ஸ்ரீவில்லிப்புத்தூரில் கி.பி1453 ஆண்டில் வரையப்பெற்றுள்ள ஒரு கல்வெட்டு 'மகாபலி வாணத்தரையர் சீர்மையான மதுரை மண்டலம்' என்று கூறுகிறது ( Travancore Archaeological Series Vol. 1. Page 46; Ins. 577 of 1926. க ). மேலும், பாண்டியருக்குத் திறை செழுத்தி வந்த குறுநில மன்னர்களான மாவலிவாணராயர் தம்மை 'மதுராபுரி நாயகன்(மதுரைராயன்)' எனவும், 'பாண்டியன் குலாந்தகன்' எனவும் கி.பி 1483ல் சிறபித்துக் கூறிக் கொள்வதைப் புதுக்கோட்டை நாட்டில் நெக்கோணம் என்ற ஊரிலுள்ள ஒரு கல்வெட்டில் காணலாம் (Inscriptions of  The Pudukkottai State. No. 672 ). ஆகவே, 15 ஆம் நூற்றாண்டில் மதுரையிலிருந்து அரசு செழுத்தியவர்கள் வாணராயர் என்பது நன்கு தெளிவாகிறது. முன்பே சொன்னது போல் பாண்டியர் அயலார் படையெடுப்பால் மிக்க தளர்ச்சியெய்திருந்த காலத்தில் வாணராயர்கள் பாண்டியர்களைப் போரில் வென்று மதுரையைக் கைப்பற்றிக் கொண்டதோடு, அதனைச் சூழ்ந்துள்ள நாட்டைத் தாமே சுயேட்சையாக ஆட்சி புரியவும் தொடங்கினர். வாணராயர் 'பாண்டியர் குலாந்தகன்' என்று தம்மைச் சிறப்பித்துக் கூறிக்கொள்வது ஒன்றே, பாண்டியரிடம் அவர்கள் கொண்ட பெரும்பகை நன்கு விளங்கும்.
மேலும், புதுக்கோட்டை நாட்டில் குடுமியான் மலையிலுள்ள இரண்டு கல்வெட்டுக்கள், 'பாண்டியர்கள் வாணராயரிடம் தோல்வியுற்று வேற்றிடம் சென்றனர்' என்று வழியுறுத்துகின்றன (Inscriptions of  The Pudukkottai State. No. 653 and 678 ).
மதுரை மாநகரை விட்டு நீங்கிய பாண்டியர்கள் தென்பாண்டி நாட்டை அடைந்து அங்கு அரசு செழுத்தி வந்தனர் என்பது பல்வேறு கல்வெட்டுச் செய்திகளால் உறுதியாகிறது. இவர்களின் ஆளுகையும் அங்கு 17 ஆம் நூற்றாண்டின் இறுதி வரை நடைபெற்றது அறியப்படுகிறது. 
    

29 comments:

  1. "இவர்களின் ஆளுகையும் அங்கு 17 ஆம் நூற்றாண்டின் இறுதி வரை நடைபெற்றது அறியப்படுகிறது. " - 17 ஆம் நூற்றாண்டின் இறுதி என்பது கிட்டதிட்ட 18 ஆம் நூற்றாண்டின் ஆரம்பமே, அப்பொழுது இருந்த பாண்டியர்கள் குறிப்பாக தென் பாண்டி நாட்டை அடைந்து அரசு செலுத்திய இடம் ஏது? 17 ஆம் நூற்றாண்டு முதலே ஆங்கில மற்றும் ஐரோப்பிய குறிப்புகள் தமிழகத்தை பற்றி பெருமளவில் உள்ளன, அதே சமயம் இங்க இருந்த அரச எல்லைகளையும் பற்றி விரிவான வரலாற்று தரவுகள் உள்ளன...ஆகையால் இப்படி ஒரு அரச குடும்பம் இருந்திருந்தால் கண்டிப்பாக சரித்திர குறிப்புகளில் இருந்திருக்குமே.... அதற்கான ஆதாரம் குடுக்க முடியுமா? மற்ற எல்லா கருத்துக்களுக்கும் ஆதாரம் குடுக்கிறேன் என்று சொல்லி உள்ளீர்களே..முக்கியமான இந்த கடைசி பத்தி அல்லது வரிக்கு என்ன அதாரம் எங்கே இருக்கிறது, சொல்லுங்களேன் பார்ப்போம்.... இதே போல் தான் பொதுவான சரித்திர நிகழ்வுகளுக்கு ஆதாரம் குறித்து விட்டு.... "இதனால் தான் மள்ளர் என்போரே பள்ளர் ஆனார்...அவர்களே மூவேந்தர்" என்று கட்டுரையை முடித்து விடுவது... எப்படியும் கடைசி வரியை தான் பலரும் படிப்பார்கள். மேல ஆங்காங்கே சிவப்பு / நீல நிறத்தில் பெதுவான சரித்திர நிகழ்வுகளுக்கு ஆதாரம் என்று போட்டு விடுவது... பார்பவர்கள் பலருக்கும் ஆஹா அருமையாக ஆதாரம் தருகின்றரே என்று நினைத்து கொள்வார்கள், இப்படி தானே தவறான சரித்திரத்தை பரப்ப முயற்சி செய்கிறீர்? இல்லை என்று மறுப்பீர்கள் என்றால், எந்த அரச குடும்பம் (முன்னால் தாங்கள் பாண்டியர் என்று கூறி கொண்டு ) தென்பாண்டி நாட்டை, எந்த எல்லைக்குட்பட்டு, எந்த அரசர்கள்,எத்தனை வருடம் ஆண்டனர் என்றும், 17 ஆம் நூற்றாண்டின் எந்த வருடம், எதனால் அந்த அரச குடும்பம் முடிவுக்கு வந்தது என்று சான்றோடு தர முடியுமா ?

    ReplyDelete
  2. தென்காசிப் பாண்டியர்கள் வரலாற்றில் அறியப்படும் கடைசி பாண்டிய மன்னர்கள். சடையவர்மன் பராக்கிரம பாண்டியன் முதல்அவனின் அடுத்து வந்த பாண்டியர் அனைவரும் தென்காசிப் பாண்டியர்கள் எனப்படுவர்.பதினைந்தாம் நூற்றாண்டில் தமிழகத்தில் ஏற்பட்ட முகலாயர் மற்றும் நாயக்கர் படையெடுப்புகளால் பாண்டியர் தங்கள் பாரம்பரியத்தலைநகரான மதுரையை இழந்து தென்காசி, திருநெல்வேலி போன்ற தென்தமிழக நகரங்களில் சிற்றரசர்களாக வாழத் தலைப்பட்டனர்.பாண்டியர்களின் கடைசித்தலைநகரம் தென்காசி ஆகும். தென்காசிப் பாண்டியர்கள் பெயரளவுக்குத்தான் தங்களை மன்னர்கள் என்று கூறிக்கொண்டார்கள். அவர்களின் ஆட்சியின்கீழ் 50 ஊர்கள்கூட இல்லை. பின்பு ஆங்கிலேயர்களின் ஆட்சியில் 5 ஊர்கள்கூட இல்லாது சாதாரன குடிமக்கள் நிலைக்குள்ளானார்கள்.

    தென்காசிப் பாண்டியர்கள்

    சடையவர்மன் பராக்கிரம பாண்டியன் கி.பி. 1422-1463

    இரண்டாம் சடையவர்மன் குலசேகர பாண்டியன் கி.பி. 1429-1473

    அழகன் பெருமாள் பராக்கிரம பாண்டியன் கி.பி. 1473-1506

    குலசேகர தேவன் கி.பி. 1479-1499

    சடையவர்மன் சீவல்லப பாண்டியன் கி.பி. 1534-1543

    பராக்கிரம குலசேகரன் கி.பி. 1543-1552

    நெல்வேலி மாறன் கி.பி. 1552-1564

    சடையவர்மன் அதிவீரராம பாண்டியன் கி.பி. 1564-1604

    வரதுங்கப் பாண்டியன் கி.பி. 1588-1612

    வரகுணராம பாண்டியன் கி.பி. 1613-1618

    ReplyDelete
  3. உங்கள் பதிலுக்கு நன்றி, மேலும் சில கேள்விகள்
    1. 50 ஊர்களிலிருந்து 5 ஊர்கள் என்றால், என்ன காரணத்தினால் குறைந்தது மேலும் அந்த ஊர்கள் பின் எந்த பாளையத்துடன் இணைந்தன என்று தகவல் உண்டா?

    2. ஆங்கிலயர் காலத்தில் 5 ஊர்கள் கூட இல்லாது பின் சாதாரண குடிமக்கள் ஆனார்கள் என்று சொல்லி இருக்கிறீர்கள், அப்படி என்றால் ஆங்கில வரி வசூல் ஏடுகளில் இப்படி ஒரு பள்ளர் குடும்பம் இருந்தது என்று குறிப்பு இருந்திருக்க வேண்டுமல்லவா? ஒரு வேலை ஆங்கிலேயரின் வரி வசூலிக்கும் காலத்திற்கு முன் என்றால், ஐரோப்பியரின் வருகை குறிப்புகளில் (கி. பி. 15 ஆம் நூற்றாண்டின் மத்தியிலேயே போர்த்துகீசியர், டச்சு காரர்கள் தென் தமிழகத்தில் வியாபாரத்துக்காக வந்தார்கள்) இப்படி பாண்டியர்கள் மெல்ல மெல்ல பள்ளர்கள் ஆனார்கள் என்று ஏதேனும் குறிப்பு உள்ளதா?

    ReplyDelete
  4. ஐந்து ஊர்கள் என்று உங்களால் சொல்ல முடிந்ததால் அவை எந்த எந்த ஊர்கள் என்றும் சொல்ல முடியுமா?அங்கே இருந்த பாண்டியர்கள் தான் பள்ளர்கள் ஆனார்கள் என்பதற்கு சான்று இருந்தால் நன்றாக இருக்குமே?

    ReplyDelete
    Replies
    1. தமிழ் நாட்டில் ஒரு அதிசயம்!
      கி.பி 1754 ஆம் ஆண்டு வரை பாண்டியர்கள் தென்காசியில் வசிக்கிறார்கள்.அப்போது, அவர்கள் பெயரளவிற்குத்தான் மன்னராக இருந்திருக்கிறார்கள்.ஆனால்,ஒரு ஊர்கூட சொல்லும்படியாக அவர்கள் கட்டுப்பாட்டில் இருந்ததில்லை.அக்கால கட்டத்தில் தென்காசி வரிவசூல் முழுவதும் வடகரை ஜமீனால் செய்யப்பட்டது.வடகரை ஜமீன் என்பவர்கள் கொண்டையங்கோட்டை மறவர்கள்.அவர்கள் மதுரை நாயக்கர்களுக்குக் கட்டுப்பட்டவர்கள்.இந்த விபரம் அரசால் சொல்ல முடிகிறது.
      கி.பி 1756 ஆம் ஆண்டு தென்காசி கோயிலானது மறவர் பாளையக்காரனான பூலித்தேவன் கட்டுப்பாட்டில் இருக்கிறது.அப்போது கான்சாகிப் பூலித்தேவன் ஆட்கள் 11 பேரை தென்காசி கோயிலில் சுட்டுக்கொல்கிறான்.இதைப்பற்றி அவனே தன் கைப்பட ஆற்காடு நவாப்புக்கு எழுதிய கடிதம் தமிழக அரசிடம் உள்ளது. இதை தமிழக தொல்பொருள் துறையினர் ஆய்வு செய்து பூலித்தேவன் எந்த இனத்தைச் சார்ந்தவன்?அவனது வாரிசுகள் தற்போது யார்? என்ற அனைத்து விபரங்களையும் கண்டுபிடித்து விட்டனர்.பூலித்தேவன் கொண்டையங்கோட்டை மறவர் இனத்தைச் சார்ந்தவன் என்று மிகத் தெளிவாகக் கூறுகிறார்கள்.ஆனால்,அதற்கு 2 வருடம் முந்தி அதாவது கி.பி.1754 ஆம் ஆண்டு வரை வாழ்ந்த தென்காசிப் பாண்டியர்கள் யார்?அவர்கள் எந்த இனத்தைச் சார்ந்தவர்கள்? என்று அரசால் இதுவரை சொல்ல முடியவில்லை என்றால் என்ன விந்தை பாருங்கள்! அவர்கள் காற்றில் கரைந்து விட்டார்களா? குற்றாலம் கோயிலில் தென்காசிப் பாண்டியர்கள் கி.பி 1754 ஆம் ஆண்டு வெளியிட்ட செப்புப்பட்டயம் தற்போது கிடைத்துள்ளது.ஆனால் அதிலும் பாண்டியர்கள் என்போர் யார்? என்ற விபரம் இல்லை என்று சொல்கிறார்கள்.என்ன ஆச்சரியம்! இந்தியா முழுமைக்கும் 18 ஆம் நூற்றாண்டு வரை ஆட்சி செய்தவர்கள் யார், யார்? அவர்கள் இனம் என்ன?அவர்கள் வாரிசு தற்போது யார்? என்று கூட சொல்லி விடுகிறார்கள். ஆனால் தமிழ் நாட்டில் ஆட்சி செய்த மூவேந்தர்கள் யார்? அவர்கள் இனம் என்ன? தற்போது அந்த பரம்பரையினர் யார்? என்ற கேள்விக்கு மட்டும் பதில் தெரியவில்லையாம்!

      Delete
    2. கி.பி 1600 முதல் கி.பி 1800 வரை இராமனாதபுரம், சிவகங்கை மற்றும் புதுக்கோட்டை சீமைகளை ஆண்ட மன்னர்கள் யார் யார்? அவர்கள் எந்த சாதியைச் சார்ந்தவர்கள்? மற்றும் தற்போது அவர்களின் வாரிசுகள் யார்? என்பதைத் தொல்பொருள் துறையால் தற்போது மிகத் தெளிவாகச் சொல்ல முடிகிறது.ஆனால் கி.பி 1754 ஆண்டைய தென்காசிப்பாண்டியர்கள் யார்? அவர்கள் எந்தச் சாதியைச் சார்ந்தவர்கள்? தற்போது அவர்கள் வாரிசுகள் யார்? என்பதற்கு ஆதாரம் இல்லையாம்! வேடிக்கையாக இல்லை!

      Delete
    3. பதிலுக்கு நன்றி, "தமிழர் வரலாற்று ஆய்வு நடுவம்" என்று பெயர் வைத்து கொண்டு அரசாங்கம் / தொல் பொருள் துறை ஆய்வு செய்ய வில்லை என்று சொல்வது தான் ஒரு ஆய்வு நடுவத்தின் செயலா?

      அல்லது உங்களின் ஆய்வு என்பதின் அர்த்தம் தான் என்ன?

      உங்களில் ஒரு சரித்திர முக்கியம் வாய்ந்த விடயத்தை ஆய்வு செய்ய முடியவில்லை என்றால், இதுவரை இருந்த சில தரவுகளின் அடிப்படையில் ஒற்றைப்படையான கருத்துக்களை நீங்களே உருவாக்கி கொள்வது தான் உங்கள் நடுவத்தின் வேலையா?

      உங்கள் ஆய்வு என்பது வெறும் கருத்துக்களின் முன் முடிவு தானா? அப்படி என்றல் உங்கள் இந்த ப்ளாக்-களின் தரம் எப்படி இருக்கும்?

      Delete
    4. @தமிழர் வரலாற்று ஆய்வு நடுவம்

      //கி.பி 1754 ஆம் ஆண்டு வரை பாண்டியர்கள் தென்காசியில் வசிக்கிறார்கள்.அப்போது, அவர்கள் பெயரளவிற்குத்தான் மன்னராக இருந்திருக்கிறார்கள்//

      தென்காசிப் பாண்டியர்கள் கி.பி. 1650 வரை தான் ஆண்டார்கள்.

      கி.பி. 1754 வரை பாண்டியர் ஆண்டதாகச் சொன்னதன் காரணம் வரகுணராம பாண்டிய குலசேகர தேவ தீட்சிதர் என்ற பிராமணர் ஒருவர் வரகுணராம பாண்டியனைப்ம் போல் பெயர் வைத்துக்கொண்டதே. கி.பி. 1650களோடு தென்காசிப் பாண்டியர் கல்வெட்டுகள் முடிகிறது. இராணி மங்கம்மாள் காலத்திலேயே தென்காசி நாயக்கர் கீழ் வந்துவிட்டது. 1730-50களில் தென்காசி கோயிலில் இருந்த ஆவணங்கள் கொளுத்தப்பட்டன.

      Delete
  5. வாணாதிராயன் என்பது தளபதி போன்ற ஒரு பட்டமாக இருந்திருக்க வேண்டும். இனக்குழுவின் பெயராக இருக்க வாய்ப்பு இல்லை. வாணர் என்பது ஒரு குலம் என்று நிறுவ முடியுமா? அப்படி நிறுவினால் தமிழ் நாட்டில் பல இனங்களை அந்த வாணர் குலத்திற்குள் அடைத்து விடமுடியும் என்பது உங்களுக்கு தெரியும் தானே நண்பரே. வாணர் குலம் என்று ஒன்று இருந்தால் அதை யார் என்று கூறுவீர்கள். அகம்படியர், துளுவர் இரு இனங்களை சந்தேகமாக கூறலாமா? பிள்ளை என்ற அர்த்தத்தில் அகம்படியரை கூறினால் அது வெள்ளாளர் இடையர் கலியர் என பல இனக்குழுக்களை உள்ளடக்கி வரும். ஆனால் அகமுடையார்கள் என்ற அகம்படியர்கள் மருது காலத்திற்கு முன் வரை போர் எல்லாம் செய்யவில்லை. அரண்மனையில் மறவர் தலைவர்களுக்கு நம்பிக்கையான ஊழியர்களாக "உள் வேலை" மட்டுமே செய்துள்ளனர். பிள்ளை என்ற பதத்தில் துளுவ வெள்ளாளரைக் கூட வாணர் குலமாகக் கூறலாம். ஆனால் வாணன் என்பது தளபதி போன்றவர்க்கு கொடுக்கப்பட்ட பட்டமாக மட்டுமே தெரிகிறது.

    ReplyDelete
    Replies
    1. தங்கள் கேள்விக்கு நன்றி நண்பரே. 'வாணர்' ஒரு இனக்குழு இல்லை என்பது போல் தாங்கள் எண்ணுவதாகத் தெரிகிறது. உங்களது வழியே நின்று நாம் உண்மை காண முயல்வோம். உங்கள் கருத்துப்படி வாணர் என்போர் ஒரு இனக்குழு இல்லையெனில், பாண்டியனை வென்று மதுரையைக் கைப்பற்றி ஆட்சி செய்த 'பாண்டியகுலாந்தகன், 'மதுரைராயன்' மற்றும் 'புவனேகவீரகஞ்சுகன்' என்று பட்டம் கொண்ட அந்தக்குழு யார்? கட்டுரையில் சொல்லியதுபோல் புதுக்கோட்டை நாட்டில் குடுமியான் மலையிலுள்ள இரண்டு கல்வெட்டுக்கள், 'பாண்டியர்கள் வாணராயரிடம் தோல்வியுற்று வேற்றிடம் சென்றனர்' என்று வழியுறுத்துகின்றன (Inscriptions of The Pudukkottai State. No. 653 and 678 ). இவர்கள்தான் பாண்டியர்கள் மதுரை விட்டு தென்காசி செல்ல காரணமாக இருந்தவர்கள். இதைப் பற்றி உங்கள் கருத்து என்ன? 'முதலாம் பராந்தகச் சோழன் வாணர்களது நாடாகிய வாணகப் பாடியை வென்று கங்க அரசனாகிய இரண்டாம் பிருதிவிபதிக்குக் கொடுத்தான்' என்ற கல்வெட்டுச் செய்தி உள்ளது. இந்த வாணர்கள் ஒரு இனக்குழு இல்லையா? நீங்கள் சொல்லக்கூடிய அகம்படியர், துளுவர் ஆகியோர்களுக்கு மதுரைராயன், புவனேகவீரகஞ்சுகன், வைகைவளநாடன் கொட்டமடக்கி, பாண்டியகுலாந்தகன் மற்றும் வளநாடன் என்ற வாணர்களின் பட்டங்கள் இருந்ததா? இதை நீங்கள்தான் தெளிவுபடுத்த வேண்டும்.

      Delete
    2. நண்பர் கட்டுரையில் உள்ள 'பிள்ளை மாவலி வாணராயன்' என்பதில் உள்ள 'பிள்ளை' என்ற பட்டத்தை வைத்து வாணராயர் என்போர் அகம்படியரைக் குறிப்பதாகக் கொண்டு குழம்பிக் கொள்வது போல் தெரிகிறது. அது உண்மையாக இருக்காது என்றே நான் நினைக்கிறேன். இதில் கட்டுரையாளரின் கருத்தைப் பார்ப்போம்.

      Delete
  6. "சின்னமநூருக்குத் தெற்கே மலையில் மலையாள கரையில் பூனையாற்றில் மீன்கொடியோடு ஒரு பாண்டிய வாரிசு இருந்தார். காளையார் கோவில் சதிரட்டக்காரி அபிராமியின் மக்கள் உரிமை கோரினர். வேறு மனைவிகளுக்கு பிறந்தவர்களென்று கயத்தாறு, தென்காசியில் பாண்டியர்கள் போட்டிக்கு வந்தனர். லக்கணன் காளையார் கோவிலில் இருந்த நால்வரில் வாணாதிராயரை அழைத்து வந்து மதுரை அரசனாக்கினான்" - காவல் கோட்டம்

    கேள்வி: வானாராயரா? வாணாதிராயரா? எதுசரியான பட்டம்?

    ReplyDelete
    Replies
    1. இரண்டாம் பாண்டியப் பேரரசு அழிந்த போது முதலாம் சடையவர்மன் சுந்தரபாண்டியனின் நேரடி வாரிசுகள் அனைவரும் அழிந்துவிட்டதாக இணையங்களில் சில தகவல்களைக் காணமுடிகிறது. இது தவறாகும்.

      முதலாம் சடையவர்மன் சுந்தரபாண்டியன் முதல் தென்காசிப் பாண்டியச் சிற்றரசின் அபிராமி பராக்கிரம்ம பாண்டியன் வரை முதலாம் சடையவர்மன் சுந்தரபாண்டியனின் நேரடி வாரிசுகளே பாண்டியர் தலைமையை ஏற்றார்கள். அவர்களின் பட்டியல் கீழே. இது நான் முன்னால் ஏதோ ஒரு நூலில் இருந்து எடுத்தது. இதை கல்வெட்டு ஆவணங்கள் கண்டு உறுதிப்படுத்த வேண்டும்.

      1. முதலாம் சடையவர்மன் சுந்தரபாண்டியன் (1251-1274)
      2. மூன்றாம் மாறவர்மன் விக்ரமன் (1283 - 1308) இவன் முன்னவனின் இரண்டாவது மகன்.
      3. இரண்டாம் மாறவர்மன் குலசேகரன் (1308 - 1333) இவன் முன்னவனின் முதலாம் மகன்.
      _________________________________________________
      4. நான்காம் மாறவர்மன் விக்ரமன் (1333 - 1367) இவன் முன்னவனின் இரண்டாவது மகன்.
      5. பராக்கிரம்ம பாண்டியன் (1367 - 1400) இவன் முன்னவனின் மகன். குற்றாலம் பகுதியை ஆண்டான். இவன் காலத்திலேயே செண்பகப்பொழில் சுற்றியுள்ள பகுதிகள் இவன் கட்டுப்பாட்டில் வந்துவிட்டன.
      6. சடையவர்மன் விக்கிரம பாண்டியன். (1401 - 1422) இவன் முன்னவனின் மகன்.
      7. அரிகேசரி பராக்கிரம்ம பாண்டியன் (1422 - 1463) இவன் முன்னவனின் முதல் மகன். தென்காசி கோயிலை செண்பகப்பொழிலின் தலைமையகமாக மாற்றி தென்காசிப் பாண்டியரின் சிற்றரசை அதன் கோயிலின் முழுவதும் முடிவடையாத சிவந்தபாத ஆதீனமடத்தில் முடியேற்றப்பட்டு தொடங்கி வைத்தான்.

      //காளையார் கோவில் சதிரட்டக்காரி அபிராமியின் மக்கள் உரிமை கோரினர். வேறு மனைவிகளுக்கு பிறந்தவர்களென்று கயத்தாறு, தென்காசியில் பாண்டியர்கள் போட்டிக்கு வந்தனர். லக்கணன் காளையார் கோவிலில் இருந்த நால்வரில் வாணாதிராயரை அழைத்து வந்து மதுரை அரசனாக்கினான்" - காவல் கோட்டம்//

      Kaval Kottam is a novel. Not a History.

      Delete
  7. பரதவர் or பரதரே பாண்டியர் வம்சத்தை தோற்றுவித்தவர்கள் கண்ணதாசனே சொல்லிட்டாா் ஏன்டா அடுத்தவன் ஜாதி வரலாற தி௫டிரிங்க

    ReplyDelete
    Replies
    1. யூகத்தின் அடிப்படையில் யார் வேண்டுமானாலும் கதை செல்லலாம் செவிவழி இவர் சொன்னார் அவர் சொன்னார் என்றும் கதை சொல்லலாம் அதில் இடை சொருகள் இருக்க வாய்ப்பு உள்ளது அன்று கல்வெட்டு ஆதாரங்கள் இல்லை ஆனால் இன்று கல்வெட்டு ஆதாரங்கள் உள்ளன கல்வெட்டு ஆதாரங்களில் இடைச்சொருகலுக்கு இடமேயில்லை தொல்லியல் துறை சார்ந்த தகவல்களை வைய்த்தே உண்மை வரலாற்றை அறிய முடியும் என்பது என் கருத்து

      Delete
  8. ஆ.
    சந்திர
    சேகர் 4.7.2018.வடமலைபட்டி நான் தெரியாத தகவல்களை தெரிந்து கொண்டேன். சேர, சோழ, பாண்டியர் சாதாரண மனிதர்களாகிவிட்டார்கள். சந்ததி என்று ஒன்று இருக்கத்தான் செய்யும். ஆனால் அவர் எந்த சாதியினர் என்று தெரியாமலும் வெளியிடாமலும் இருப்பதே நல்லது. நாம் அனைவரும் மனதளவில் மூவேந்தர்களுக்கு மரியாதை செய்வோம்.

    ReplyDelete
  9. Sir my name is pandiarajan from madurai city angelsam234@gmail.com please contact me 9943741187 I want to be talk about this sir

    ReplyDelete
  10. Sir my name is pandiarajan from madurai city angelsam234@gmail.com please contact me 9943741187 I want to be talk about this sir

    ReplyDelete
  11. வாணர் அவர்களின் ஆட்சி குறித்து ஏதேனும் ஆய்வு உன்ட

    ReplyDelete
  12. வடுகர் பாண்டியனை நிம்மதியாக வாழ விடவில்லை. அது தான் உண்மை.பதினாறாம் நூற்றாண்டிலேயே பாண்டியன் அழிக்க பட்டார்கள்.காலிங்கராயர் என்னும் கங்க குலத்தார் குலசேகர பட்டினம் என்ற இடத்தில் பாண்டியன் வாரிசை காப்பாற்றினார். இந்த காலிங்கராயர் தான் பிற்காலத்தில் காத்த மூப்பனார் என்ற பெயரில் குலசேகர பட்டினம் மற்றும் திருச்செந்தூர் பகுதியில் ஆண்டவர்கள்.இவர்கள் வாரிசுகளுக்கு தான் திருச்செந்தூர் கோயிலில் எல்லா உரிமைகளும் உண்டு

    ReplyDelete
  13. எனதுபெயர்மரியசக்ரியாஸ்,எனதுபூர்வ்க இடம்தூத்துகுடிமாவட்டம்ஓட்டபிடாரம்தாலுகா
    கவர்னர்கிரிநீராவி யின்தென்கிழக்குவீட்டுமனைஇடம்60விளைநிலம்60சென்ட்339/6சர்வேஎன்1700களில்கோட்டைகட்டி,கோவில்கட்டிகுடியிருந்தோம்மேற்குபக்கத்தில்புதிதாக குடியேறியசாலிகுளம்கண்மாயில்இருந்தவர்கள்தங்கள்குலதொழிலைவிடுத்துதீவெட்டிகும்பலாக உருமாறிஎங்கள்குடியிருப்புபகுதிகளைஅட்டூழியம்செய்ததுஎதற்குவம்புஎன்றுதற்போதயகவர்னர்கிரிமடத்தின்நடுத்தெருக்களில்குடியேறினோம்ஆனால்எனதுகுடும்பத்தவர்கள்அவ்விடத்திலிருந்துஎதிர்த்துவந்தார்கள்ஒருநாள்நள்ளிரவுமிககொடூரமானசண்டையில்ரத்தவெள்ளத்தில்துடிதுடித்துஇறக்கும்தருவாயில்கவர்னர்கிரிசொந்தங்களால்காப்பாற்றபட்டபோதுஅங்கும்வந்துஆக்கிரமிப்பில்ஈடுபடவேசெய்வதறியாதுஎன்குடும்பத்தாரும்நெருங்கிய உறவினர்களும்தலைமறைவாக இருக்க ஆரம்பித்தபோதுகோட்டைகட்ட ஆரம்பித்தார்கள்அக்கோட்டையைஇடித்தபோதுசமாதானமாகசெல்வோம்எதற்குசண்டைஎன்றும்இந்த இடம்நாய்முயலைவிரடடுச்சிமுயல்நாயவிரட்டுச்சின்னுசொல்லிஎங்கள்குடும்பமும்விட்டுடுச்சி,

    ReplyDelete
  14. வில்லவர் மற்றும் பாணர்
    ____________________________________

    பாண்டிய என்பது வில்லவர் மற்றும் பாண ஆட்சியாளர்களின பட்டமாகும். இந்தியா முழுவதும் பாணர்கள் அரசாண்டனர். இந்தியாவின் பெரும்பகுதி பாண ஆட்சியாளர்களால் ஆளப்பட்டது. இந்தியா முழுவதும் பாண்பூர் எனப்படும் ஏராளமான இடங்கள் உள்ளன. இவை பண்டைய பாணர்களின் தலைநகரங்கள் ஆகும். பாணர்கள் பாணாசுரா என்றும் அழைக்கப்பட்டனர்.

    கேரளா மற்றும் தமிழ்நாட்டை ஆண்ட வில்லவரின் வடக்கு உறவினர்கள் பாணர்கள் ஆவர். கர்நாடகாவிலும் ஆந்திராவிலும் பாணர்கள் ஆண்டனர்.

    வில்லவர் குலங்கள்

    1. வில்லவர்
    2. மலையர்
    3. வானவர்

    வில்லவரின் கடலோர உறவினர்கள் மீனவர் என்று அழைக்கப்பட்டனர்

    4. மீனவர்

    பண்டைய காலங்களில் இந்த அனைத்து துணைப்பிரிவுகளிலிருந்தும் பாண்டியர்கள் தோன்றினர். அவர்கள் துணை குலங்களின் கொடியையும் பயன்படுத்தினர். உதாரணத்திற்கு

    1. வில்லவர் குலத்தைச் சேர்ந்த பாண்டியன் சாரங்கத்வஜ பாண்டியன் என்று அழைக்கப்பட்டார். அவர் ஒரு வில் மற்றும் அம்பு அடையாளமுள்ள கொடியை சுமந்தார்.

    2. மலையர் குலத்தைச் சேர்ந்த பாண்டியன் மலையத்வஜ பாண்டியன் என்று அழைக்கப்பட்டார். அவர் மலை சின்னத்துடன் ஒரு கொடியை ஏந்தினார்.

    3. வானவர் துணைப்பிரிவைச் சேர்ந்த பாண்டியன் ஒரு வில்-அம்பு அல்லது புலி அல்லது மரம் கொடியை ஏந்திச் சென்றார்.

    4. மீனவர் குலத்தைச் சேர்ந்த பாண்டியன் ஒரு மீன் கொடியை ஏந்திச்சென்று தன்னை மீனவன் என்று அழைத்துக் கொண்டார்.

    பிற்காலத்தில் அனைத்து வில்லவர் குலங்களும் ஒன்றிணைந்து நாடாள்வார் குலங்களை உருவாக்கின. பண்டைய மீனவர் குலமும் வில்லவர் மற்றும் நாடாள்வார் குலங்களுடன் இணைந்தது.


    பிற்காலத்தில் வடக்கிலிருந்து குடிபெயர்ந்த நாகர்கள் தென் நாடுகளில் மீனவர்களாக மாறினர். அவர் வில்லவர்-மீனவர் குலங்களுடன் இனரீதியாக தொடர்புடையவர் அல்லர்.

    வில்லவர் பட்டங்கள்
    ______________________________________

    வில்லவர், நாடாள்வார், நாடார், சான்றார், சாணார், சண்ணார், சார்ந்நவர், சான்றகர், சாண்டார் பெரும்பாணர், பணிக்கர், திருப்பார்ப்பு, கவரா (காவுராயர்), இல்லம், கிரியம், கண நாடார், மாற நாடார், நட்டாத்தி, பாண்டியகுல ஷத்திரியர் போன்றவை.

    பண்டைய பாண்டிய ராஜ்யம் மூன்று ராஜ்யங்களாகப் பிரிக்கப்பட்டது.

    1. சேர வம்சம்.
    2. சோழ வம்சம்
    3. பாண்டியன் வம்சம்

    அனைத்து ராஜ்யங்களையும் வில்லவர்கள் ஆதரித்தனர்.

    முக்கியத்துவத்தின் ஒழுங்கு

    1. சேர இராச்சியம்

    வில்லவர்
    மலையர்
    வானவர்
    இயக்கர்

    2. பாண்டியன் பேரரசு

    வில்லவர்
    மீனவர்
    வானவர்
    மலையர்

    3. சோழப் பேரரசு

    வானவர்
    வில்லவர்
    மலையர்

    பாணா மற்றும் மீனா
    _____________________________________

    வட இந்தியாவில் வில்லவர் பாணா மற்றும் பில் என்று அழைக்கப்பட்டனர். மீனவர், மீனா அல்லது மத்ஸ்யா என்று அழைக்கப்பட்டனர். சிந்து சமவெளி மற்றும் கங்கை சமவெளிகளில் ஆரம்பத்தில் வசித்தவர்கள் பாணா மற்றும் மீனா குலங்கள் ஆவர்.

    பாண்டவர்களுக்கு ஒரு வருட காலம் அடைக்கலம் கொடுத்த விராட மன்னர் ஒரு மத்ஸ்யா - மீனா ஆட்சியாளர் ஆவார்.

    பாண மன்னர்களுக்கு அசுர அந்தஸ்து இருந்தபோதிலும் அவர்கள் அனைத்து சுயம்வரங்களுக்கும் அழைக்கப்பட்டனர்.

    அசாம்

    சோனித்பூரில் தலைநகருடன் அசுரா இராச்சியம் என்று அழைக்கப்பட்ட ஒரு பாண இராச்சியம் பண்டைய காலங்களில் அசாமை ஆட்சி செய்தது.

    இந்தியா முழுவதும் பாணா-மீனா மற்றும் வில்லவர்-மீனவர் இராச்சியங்கள் கி.பி .1500 வரை, நடுக்காலம், முடிவடையும் வரை இருந்தன.

    மஹாபலி

    பாணர் மற்றும் வில்லவர் மன்னர் மகாபாலியை தங்கள் மூதாதையராக கருதினர். மகாபலி பட்டத்துடன் கூடிய ஏராளமான மன்னர்கள் இந்தியாவை ஆண்டனர்.

    வில்லவர்கள் தங்கள் மூதாதையர் மகாபலியை மாவேலி என்று அழைத்தனர்.

    ஓணம் பண்டிகை

    ஓணம் பண்டிகை ஒவ்வொரு ஆண்டும் கேரளாவை ஆண்ட மகாபலி மன்னர் திரும்பி வரும் நாளில் கொண்டாடப்படுகிறது. மாவேலிக்கரை, மகாபலிபுரம் ஆகிய இரு இடங்களும் மகாபலியின் பெயரிடப்பட்டுள்ளன.

    பாண்டியர்களின் பட்டங்களில் ஒன்று மாவேலி. பாண்டியர்களின் எதிராளிகளாகிய பாணர்களும் மாவேலி வாணாதி ராயர் என்று அழைக்கப்பட்டனர்.

    சிநது சமவெளியில் தானவர் தைத்யர்(திதியர்)

    பண்டைய தானவ (தனு=வில்) மற்றும் தைத்ய குலங்கள் சிந்து சமவெளியிலுள்ள பாணர்களின் துணைப்பிரிவுகளாக இருந்திருக்கலாம். தைத்யரின் மன்னர் மகாபலி என்று அழைக்கப்பட்டார்.

    இந்தியாவில் முதல் அணைகள், ஏறத்தாழ நான்காயிரம் ஆண்டுகளுக்கு முன்பு சிந்து நதியில் பாண குலத்தினரால் கட்டப்பட்டன.

    ஹிரண்யகர்பா சடங்கு

    வில்லவர்கள் மற்றும் பாணர் இருவரும் ஹிரண்யகர்பா விழாவை நிகழ்த்தினர். ஹிரண்யகர்பா சடங்கி்ல் பாண்டிய மன்னர் ஹிரண்ய மன்னரின் தங்க வயிற்றில் இருந்து வெளிவருவதை உருவகப்படுத்தினார்.
    ஹிரண்யகசிபு மகாபலியின் மூதாதையர் ஆவார்.

    ReplyDelete
  15. வில்லவர் மற்றும் பாணர்

    நாகர்களுக்கு எதிராக போர்
    __________________________________________

    கலித்தொகை என்ற ஒரு பண்டைய தமிழ் இலக்கியம் நாகர்களுக்கும் வில்லவர் -மீனவர்களின் ஒருங்கிணைந்த படைகளுக்கும் இடையே நடந்த ஒரு பெரிய போரை விவரிக்கிறது. அந்தப் போரில் வில்லவர்-மீனவர் தோற்கடிக்கப்பட்டு நாகர்கள் மத்திய இந்தியாவை ஆக்கிரமித்தனர்.

    நாகர்களின் தெற்கு நோக்கி இடம்பெயர்வு

    நாகர்களின் பல்வேறு குலங்கள் தென்னிந்தியா மற்றும் ஸ்ரீலங்காவுக்கு குறிப்பாக கடலோர பகுதிகளுக்கு குடிபெயர்ந்தனர்.

    1. வருணகுலத்தோர் (கரவே)
    2. குகன்குலத்தோர் (மறவர், முற்குகர், சிங்களர்)
    3. கவுரவகுலத்தோர் (கரையர்)
    4. பரதவர்
    5. களப்பிரர்கள் (கள்ளர், களப்பாளர், வெள்ளாளர்)
    6. அஹிச்சத்ரம் நாகர்கள்(நாயர்)

    இந்த நாகர்கள் வில்லவர்களின் முக்கிய எதிரிகள் ஆவர். நாகர்கள் டெல்லி சுல்தானேட், விஜயநகர நாயக்கர்கள் மற்றும் ஐரோப்பியர்கள் காலனித்துவ ஆட்சியாளர்களுடன் கூடி பக்கபலமாக இருந்து வில்லவர்களை எதிர்த்தனர், இது வில்லவர் வீழ்ச்சிக்கு வழிவகுத்தது.

    கர்நாடகாவின் பாணர்களின் பகை
    _________________________________________

    பொதுவான தோற்றம் இருந்தபோதிலும் கர்நாடகாவின் பாணர்கள் வில்லவர்களுக்கு எதிரிகளாயிருந்தனர்.

    கி.பி 1120 இல் கேரளாவை துளுநாடு ஆளுப அரசு பாண்டியன் இராச்சியத்தைச் சேர்ந்த பாணப்பெருமாள் அராபியர்களின் உதவியுடன் ஆக்கிரமித்தார்.

    கி.பி 1377 இல் பலிஜா நாயக்கர்கள் தமிழ்நாட்டை ஆக்கிரமித்தனர். வில்லவரின் சேர சோழ பாண்டியன் இராச்சியங்கள் விஜயநகர சாம்ராஜ்யத்தின் பலிஜா நாயக்கர்களால் (பாணாஜிகா, ஐந்நூற்றுவர் வளஞ்சியர் என்னும் மகாபலி பாணரின் சந்ததியினர்) அழிக்கப்பட்டன.

    வில்லவர்களின் முடிவு

    1310 இல் மாலிக் காபூரின் படையெடுப்பு பாண்டிய வம்சத்தின் தோல்விக்கு வழிவகுத்தது. வில்லவர்கள் படுகொலை செய்யப்பட்டனர், மேலும் மூன்று தமிழ் ராஜ்யங்களும் முடிவுக்கு வந்தன.

    கர்நாடகாவின் பாண்டியன் ராஜ்யங்கள்
    __________________________________________

    கர்நாடகாவில் பல பாணப்பாண்டியன் ராஜ்யங்கள் இருந்தன

    1. ஆலுபா பாண்டியன் இராச்சியம்
    2. உச்சாங்கி பாண்டியன் இராச்சியம்
    3. சான்றாரா பாண்டியன் இராச்சியம்
    4. நூறும்பாடா பாண்டியன் இராச்சியம்.

    கர்நாடக பாண்டியர்கள் குலசேகர பட்டத்தையும் பயன்படுத்தினர். நாடாவா, நாடாவரு, நாடோர், பில்லவா, சான்றாரா பட்டங்களையும் கொண்டவர்கள்.

    ஆந்திரபிரதேச பாணர்கள்

    ஆந்திராவின் பாண ராஜ்யங்கள்

    1. பாண இராச்சியம்
    2. விஜயநகர இராச்சியம்.

    பலிஜா, வாணாதிராஜா, வாணாதிராயர், வன்னியர், கவரா, சமரகோலாகலன் என்பவை வடுக பாணர்களின் பட்டங்களாகும்.

    பாண வம்சத்தின் கொடிகள்
    _________________________________________

    முற்காலம்
    1. இரட்டை மீன்
    2. வில்-அம்பு

    பிற்காலம்
    1. காளைக்கொடி
    2. வானரக்கொடி
    3. சங்கு
    4. சக்கரம்
    5. கழுகு

    திருவிதாங்கூர் மன்னர்கள் சங்கு முத்திரையுடன் ஒரு கொடியைப் பயன்படுத்தினர். ஏனென்றால், அவர்கள் கர்நாடகாவின் துளுநாட்டில் ஆலுபா வம்சத்தைச் சேர்ந்தவர்கள். சேதுபதி அனுமன் சின்னத்துடன் ஒரு கொடியைப் பயன்படுத்தினார். அதற்கு காரணம் அவர் பாண - கலிங்க வாணாதிராயர் ஆவர்.

    ReplyDelete
  16. வில்லவர் மற்றும் பாணர்

    வட இந்திய பாண குலங்கள்

    வட இந்திய பாணர்களுக்கு பாண, வட பலிஜா, அக்னி, வன்னி, திர்கலா போன்ற பட்டங்கள் இருந்தன. வட இந்திய பாணர்கள் ஜாட்கள், ராஜபுத்திரர்கள் போன்ற பல்வேறு சமூகங்களுடன் இணைக்கப்பட்டனர். சில பாணர்கள் ராஜபுத்திரர்களுக்கும் ஆரிய ஆட்சியாளர்களுக்கும் அடிபணிந்தனர். சில பாணர்கள் வில் மற்றும் அம்பு தயாரிப்பதை தங்கள் தொழிலாக ஏற்றுக்கொண்டனர்.

    பல்லவ பாணர்

    பல்லவ மன்னர்கள் பண்டைய உத்தர பாஞ்சால நாட்டிலிருந்து (உத்தரபிரதேசம் மற்றும் நேபால்) ஆந்திராவுக்கு கிமு 200 இல் குடிபெயர்ந்தனர். உத்தர பாஞ்சால நாட்டின் தலைநகரம் அஹிச்சத்திரம் ஆகும். பல்லவ மன்னர்கள் பாரத்வாஜ கோத்ரத்தைச் சேர்ந்த பிராமணர்கள் மற்றும் அஸ்வத்தாமாவின் வழித்தோன்றல்கள் ஆவர், ஆனால் பார்த்தியன் வம்சத்துடன் கலந்தவர்கள். பல்லவ மன்னர்களுடன், காடுகளை வெட்டுவதைத் தொழிலாகக் கொண்டிருந்த பாணர்களின் ஒரு இராணுவம், பாஞ்சால நாட்டிலிருந்து தென்னிந்தியாவிற்கு குடிபெயர்ந்தது. பாஞ்சால நாட்டிலிருந்து வந்த பிராகிருத மொழி பேசும் பாணர் குலங்களுக்கு வன்னி, திகலா (திர்கலா) மற்றும் வட பலிஜா என்ற பட்டங்கள் இருந்தன. கி.பி 275 இல் பல்லவர் தமிழ்நாட்டை ஆக்கிரமித்தனர்.. பல்லவக் கொடிகளில் பாண குலத்தின் காளை சின்னம் இருந்தது. பல்லவர் தலைநகரான மகாபலிபுரம் பாண வம்சத்தின் மூதாதையர், மகாபலி மன்னரின் பெயரால் அழைக்கப்பட்டது.

    பாணா வம்சம் மற்றும் மீனா வம்சம்

    வட இந்தியாவில் வில்லவர் பாணா மற்றும் பில் என்று அழைக்கப்பட்டனர். மீனவர் மீனா அல்லது மத்ஸ்யா என்று அழைக்கப்பட்டனர்.

    மீனா வம்சம்
    ___________________________________

    ராஜஸ்தானின் மீனா குலங்கள் பில் குலங்களுடன் கலந்து பில்-மீனா வம்சங்களை உருவாக்கின. மீனா வம்சம் ராஜஸ்தானை கிமு 1030 வரை ஆட்சி செய்தது. ஆலன் சிங் சான்ட மீனா கடைசி சிறந்த ஆட்சியாளராக இருந்தார்.

    சத்தீஸ்கர் பாண இராச்சியம்

    பல்லவர்கள் ஒரு பாண இராச்சியத்தை கி.பி 731 இல் சத்தீஸ்கர் மற்றும் ஒடிசாவில் உள்ள தெற்கு கோசல இராச்சியத்தில் நிறுவினர். பாலி தலைநகரமாக ஆண்ட விக்ரமாதித்யா ஜெயமேரு கடைசி மன்னர்.

    திக்கம்கரின் பாண்டிய வம்சம்

    பாண்டியா பட்டமுள்ள பாணர் குண்டேஷ்வர் தலைநகராக வைத்து மத்தியப்பிரதேசத்தை ஆட்சி புரிந்தனர்.

    பாண வர்த்தகர்கள்

    இடைக்காலத்தில் பாணர்கள் தங்களை ஒரு வெற்றிகரமான வணிக சமூகமாக மாற்றிக் கொண்டனர். பலிஜாக்கள் அஞ்சு வண்ணம் மற்றும் மணிகிராம் போன்ற பல்வேறு வர்த்தக குழுக்களை உருவாக்கி வர்த்தகத்தை கட்டுப்படுத்தினர். இந்த வர்த்தகர்-போர்வீரர்கள் பலிஜா நாயக்கர்கள்(வளஞ்சியர்கள்) ஆவர்.
    பலிஜாக்கள் ஆந்திரப்பிரதேசத்தின் பாண இராச்சியத்தைச் சேர்ந்தவர்கள் (வடுக நாடு).

    பலிஜா வர்த்தக குழுக்கள் ஜெர்மன் ஹான்ஸியாடிக் லீக்கை நெருக்கமாக ஒத்திருந்தனர்.

    முடிவுரை
    ____________________________________________

    இதனால் பாண்டியர்கள் தமிழ்நாட்டில் மட்டும் உள்ளவர்கள் இல்லை. மகாபாரதத்தில் குறிப்பிடப்பட்டுள்ள அனைத்து பாண்டியர்களும் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் அல்ல. சில பாண்டியர்கள் பாண்டவர்களை ஆதரித்தனர், மற்றவர்கள் கவுரவரை ஆதரித்தனர். பாணப்பாண்டியர்கள் இந்தியா முழுவதையும் ஆட்சி செய்தனர். சில பாணர்கள் பாண்டிய பட்டத்தை பயன்படுத்தினர். மற்றவர்கள் பாண்டியன் பட்டத்தை பயன்படுத்தவில்லை.
    பாணர் கலவையுடன் பல்வேறு ராஜ்யங்கள் தோன்றின.

    சாகர் மற்றும் ஹூணர் போன்ற காட்டுமிராண்டித்தனமான வெளிநாட்டு படையெடுப்பாளர்களின் படையெடுப்புகளுக்குப் பிறகு பல வட இந்திய பாண ராஜ்யங்களும் வீழ்ச்சியடைந்தன.

    ________________________________________________

    வில்லவர் மலையர் வானவர் சங்ககால நாணயம்.
    வில்-அம்பு மலை மற்றும் மரம் சின்னம்

    https://3.bp.blogspot.com/-Q5Ebqb5XTE4/W1LYuq2vnrI/AAAAAAAAEH4/1b-_GJRcWWoS9FdoOaLnvyUiGU3_BJJSQCLcBGAs/s1600/new.png

    ReplyDelete
  17. இந்திய துணைக்கண்டத்தின் அசுர-திராவிட ஆரம்பம்

    பண்டைய வட இந்தியாவில் திராவிட ஆட்சி

    பல திராவிட இராச்சியங்கள் வட இந்தியாவிலும் பண்டைய காலங்களில் இருந்தன. பண்டைய இலக்கியங்களில், திராவிட ஆட்சியாளர்கள் அசுரர்கள் என்று அழைக்கப்பட்டனர். பண்டைய இந்தியாவில், தானவர், தைத்யர், பாணர், மீனா மற்றும் வில்லவர் ராஜ்யங்கள் இருந்தன. கங்கை நதியின் வடக்குப் பகுதியில் மட்டுமே ஆரியர்கள் ஆதிக்கம் செலுத்தினர். திராவிட வேர்களைக் கொண்ட பல பாணாசுரர்கள் வட இந்தியாவை ஆண்டனர்.

    திராவிட வில்லவர்-பாணர் வம்சங்கள்
    1. தானவர் தைத்யர்
    2. பாண மீனா வம்சங்கள்.
    3. வில்லவர் - மீனவர் வம்சங்கள்

    தானவரும் வில்லவரும் பாணரும் ஒரே இனத்தைச் சேர்ந்தவர்களாக இருக்கலாம், அவர்கள் மகாபலி பட்டம் பெற்ற அரசர்களால் ஆளப்பட்டவர்கள்.

    தானவர் மற்றும் தைத்யர்

    இந்தியாவின் ஆரம்பகால இலக்கியங்களில் தானவா மற்றும் தைத்யா என்று அழைக்கப்படும் இரட்டை பழங்குடியினரும், சிந்து பகுதியில் அவர்களின் மன்னரான மகாபலியும் குறிப்பிடப்பட்டனர். தனு என்பது வில் என்று பொருள். தானவா குலங்கள் திராவிட வில்லவர் - பாண மக்கள் ஆயிருக்கலாம். வில்லவர் மற்றும் பாண மக்களும் மஹாபலியை தங்கள் மூதாதையராக கருதினர். வில்லவர் மற்றும் பாண மன்னர்கள் ஹிரண்யகர்பா விழாவை நிகழ்த்தினர். ஹிரண்யகசிபு மன்னர் மகாபலியின் மூதாதையர் ஆவார்.

    தானவர் , தைத்யர், பாணர் அனைவரையும் அசுரர்கள் என்று அழைத்தனர். திராவிடர்களும் அசுரர்களும் ஒரே குல மக்களாக இருக்கலாம்.

    சிந்து சமவெளியில் தானவர்(கிமு 1800)

    சிந்து மன்னர் விரித்ரா (விருத்திரர்)

    விரித்ரா ஒரு ஆரம்பகால தானவா மன்னர், அவர் சிந்து பள்ளத்தாக்கு நாகரிகத்தை ஆட்சி செய்திருக்கலாம்.

    நீர்ப்பாசனத்தைக் கட்டுப்படுத்த சிந்து நதியின் கிளைகளில் பாம்புகளின் வடிவத்தை ஒத்த பல கல் அணைகளை விரித்ரா கட்டியிருக்கலாம். சிந்து பகுதியில் விரித்ராவுக்கு 99 கோட்டைகள் இருந்தன.

    ரிக் வேதத்தின்படி, விரித்ரா இந்திரனால் கொல்லப்படும் வரை உலகின் அனைத்து நீரையும் சிறைபிடித்தான். விரித்ராவின் 99 கோட்டைகளையும் இந்திரன் அழித்தான்.

    விரித்ரன் போரின் போது இந்திரனின் இரண்டு தாடைகளை உடைத்தார், ஆனால் பின்னர் இந்திரனால் வீசப்பட்டார், வீழ்ச்சியடைந்தபோது, ​​ஏற்கனவே சிதைந்துபோன கோட்டைகளை நசுக்கினார்.

    இந்த சாதனை காரணம், இந்திரன் "விரித்ரஹான்" அதாவது விரித்ராவின் கொலைகாரன் என்று அறியப்பட்டார்.

    விரித்ராவின் தாய் தனு அசுரரின் தானவா இனத்தின் தாயாகவும் இருந்தவர், பின்னர் இந்திரனால் அவரது இடியால் தாக்கப்பட்டு தோற்கடிக்கப்பட்டார்.

    மூன்று தேவர்கள், வருணன், சோமன் மற்றும் அக்னி ஆகியோர் வ்ரித்ராவுக்கு எதிரான போராட்டத்தில் அவருக்கு உதவுமாறு இந்திரனால் வற்புறுத்தப்பட்டனர். அதேசமயம் அதற்கு முன்பு அவர்கள் விரித்ராவின் பக்கத்தில் இருந்தபோது விரித்ராவை தந்தையே என்று அழைத்து வந்தனர்.

    சிந்து மன்னர் வாளா

    விரித்ராவின் சகோதரர் தடுப்பவரான விரித்ராவுக்கு இணையாக அணை கட்டிய நதிகளை விடுவிப்பதற்காக இந்திரனால் கொல்லப்பட்ட ஒரு கல் பாம்பு (அணைக்கட்டு) உண்டாக்கியவர்.

    ரிக் வேதம் 2.12.3 இந்திரன் டிராகனைக்(அணைக்கட்டு) கொன்றது, ஏழு நதிகளை(சப்த சிந்து நதிகள்) விடுவித்தது, மற்றும் வாலாவின் குகையில் இருந்து கின்களை (பசுக்களை) வெளியேற்றியது.

    சிந்து சமவெளி நாகரிகத்தின் முடிவு

    சிந்து சமவெளியில் சிந்து நதியி்ன் ஏழு துணை நதிகளிலும் பாம்புகளின் வடிவத்தில் விரிவான அணைகள் கட்டப்பட்டிருந்தது. சிந்து சமவெளி ஒரு விவசாய நாடாக இருந்ததால் அசுர- தானவா மன்னர் விருத்திரர் பல அணைகளைக் கட்டினார். ஆரியர்கள் பெரும்பாலும் ஆயர்களாதலால் ஆறுகள் தடுக்கப்படுவதை அவர்கள் விரும்பவில்லை . ஆரியர்களின் மன்னனான இந்திரன், அசுர மன்னன் விருத்திரருடன் சண்டையிட்டு அவரைக் கொன்றார். இந்திரன் விரித்ரன் கட்டிய அனைத்து அணைகளையும், விரித்ரனுடைய 99 கோட்டைகளையும் அழித்தார்.

    விரித்ராவுக்குப் பிறகு அவரது சகோதரர் வாளா சிந்து பள்ளத்தாக்கின் மன்னரானார். மீண்டும் வாளா அனைத்து கிளை நதிகளிலும் அணைகள் கட்டினார். வாளா ஆரியர்களின் கால்நடைகளையும் கைப்பற்றி ஒரு குகையில் அடைத்தார். இந்திரன் வாளா மன்னரையும் கொன்றார். வாளா மன்னர் கட்டிய நீண்ட கல்பாம்பு போல காணப்பட்ட அணைகளையும் இந்திரன் தகர்த்தார். இந்திரன் அவர்களின் கால்நடைகள் அனைத்தையும் குகையிலிருந்து விடுவித்தார். அணைகள் அழிக்கப்பட்டதால் நீர்ப்பாசனம் மற்றும் வேளாண்மை தோல்வியடைந்தது. இறுதியில் சிந்து பள்ளத்தாக்கு நாகரிகம் முடிவுக்கு வந்தது.

    பிராஹுய்

    பலூசிஸ்தான் பகுதியில் உள்ள மெஹர்கரில், ஹரப்பா-சிந்து சமவெளிக்கு முந்தைய நாகரிகம் (கிமு 7000 முதல் சி. 2500 கிமு வரை) இருந்தது. பலூசிஸ்தான் மாகாணத்தில் மக்கள் இன்றும் பிராஹுய் என்ற வட திராவிட மொழியைப் பேசுகிறார்கள்.

    ReplyDelete
  18. அசுர திராவிட துடக்கம்

    பாண்பூர்

    வட இந்தியாவில் பெரும்பாலான மாநிலங்களில் பாண்பூர் அல்லது பான்பூர் என்று அழைக்கப்படும் பண்டைய பாண வம்ச தலைநகரங்கள் உள்ளன. அங்கிருந்து பாணர் அந்த பிரதேசங்களை ஆட்சி செய்தார்கள்.

    மகாபலி

    மகாபலி / மாவேலி பட்டத்துடன் பல மன்னர்கள் இந்தியாவை ஆண்டனர். ஒரு மகாபலி அசாமில் சோனித்பூரரில் இருந்து ஆட்சி செய்தார், மற்றொரு மகாபலி கேரளாவிலிருந்து ஆட்சி செய்தார், மேலும் மற்றொரு மகாபலி சிந்து சமவெளியில் தைத்யா மற்றும் தானவர்களின் ராஜாவாக இருந்தார். அவர் ஆரம்பகால ஆரியர்களுக்கு எதிராக போராடினார்.


    மீனா வம்சம்

    இதேபோல் மீனா வம்சம் ராஜஸ்தான், சிந்து மற்றும் கங்கை சமவெளிகளில் ஆரியர்க்கு முந்தைய ஆட்சியாளர்களாக இருந்தனர், அவர்கள் திராவிட வேர்களைக் கொண்டிருக்கலாம். பாணா இராச்சியம் மற்றும் மீனா-மத்ஸ்ய ராஜ்யம் ஆரியவர்த்தம் கங்கை சமவெளியில் உருவாக்கப்பட்ட பின்னரும் இருந்து வந்தது. பாணா-மீனா ராஜ்யங்கள் வேத கலாச்சாரத்தின் ஒரு பகுதியாக இருந்தன.

    மத்ஸ்ய ராஜ்யத்தின் மன்னராகிய விராட மன்னர் பாண்டவர்களை அஞ்ஞாதவாச காலத்தில், அங்கு ஒரு வருடம் வரை மறைத்து வைத்திருந்தார்.
    மீனா-மத்ஸ்ய மன்னன் விராடனின் மகள் உத்தரா பின்னர் அர்ஜுனனின் மகன் அபிமன்யுவை மணந்தார்.

    பாணா மீனா குலங்கள்

    வட இந்தியாவில் வில்லவர் மற்றும் மீனவர் ஆகியவர்கள், பாணா மற்றும் மீனா என்ற பெயர்களால் அறியப்பட்டனர். பாணா வடக்கில் பாணப்பாண்டியன் இராச்சியங்களையும், மீனா வட இந்தியாவில் மீனா அல்லது மத்ஸ்ய ராஜ்யத்தையும் நிறுவினார்கள். மலைப்பாங்கான பகுதிகளை ஆண்ட பில் பழங்குடியினர் வில்லவரின் துணைக்குழுக்களாகவும் இருக்கலாம்.

    கி.பி 1030 வரை மீனா ராஜ்ஜியம் ராஜஸ்தானை ஆட்சி செய்தது. நவீன ஜெய்ப்பூர் மீனா குலத்தாரால் நிறுவப்பட்டது. கடைசி சக்திவாய்ந்த மீனா ஆட்சியாளர் ஆலன் சிங் சாந்தா மீனா. இந்தக் காலத்தில் கச்வாஹா ராஜபுத்திரர்களால் மீனாக்கள் தோற்கடிக்கப்பட்டனர்.

    பண்டைய வேதங்களில் குறிப்பிடப்பட்டுள்ள பல்வேறு ராஜ்யங்கள் வெவ்வேறு இனங்களைச் சேர்ந்தவை. சில ராஜ்யங்கள் பண்டைய அசுர-திராவிட வம்சாவளியைக் கொண்டிருக்கலாம், மற்றவை நாக மற்றும் ஆரிய வம்சாவளியைச் சேர்ந்தவை. சிலர் வெளிநாட்டினர்.

    பாண ராஜ்யங்களின் வீழ்ச்சி

    வட இந்தியாவை ஆக்கிரமித்த சித்தியன், பார்த்தியன் மற்றும் ஹுண படையெடுப்பாளர்களின் வருகையின் பின்னர் பாண ராஜ்யங்கள் வலிவிழந்தன. பாணா-மீனா ராஜ்யங்கள் ராஜபுத்திர ராஜ்யங்களால் உள்வாங்கப்பட்டிருக்கலாம். மீனா இராச்சியம் கிபி 1036 வரை நீடித்தது. அதன் பிறகு ராஜபுத்திரர்களும் டெல்லி சுல்தானகமும் மீனா ராஜ்யத்தின் பிரதேசங்களை இணைத்து கொண்டனர்.

    ராஜபுத்திரர்களின் முடிசூட்டு விழா

    ராஜபுத்திரர்களின் முடிசூட்டு விழாவின் போது, ​​பில் அல்லது மீனா குலத்தினரின் கட்டைவிரலிலிருந்து எடுக்கப்பட்ட இரத்தத்தை ராஜாவின் நெற்றியில் பூசுவது வழக்கம். ஏனென்றால், வட இந்தியாவின் அசல் ஆட்சியாளர்கள் பாணா, பில், மீனா மக்கள் ஆயிருந்தனர்.

    திராவிட பாரம்பரியம்

    உடல் ரீதியாக அனைத்து இந்தியர்களும் பழுப்பு நிறம் மற்றும் திராவிட முக அம்சங்களைக் கொண்டுள்ளனர். அது அவர்களின் திராவிட தோற்றம் காரணமாகும்.

    சித்தியன் படையெடுப்பு (கிமு 150)

    ஆனால் வட இந்தியாவின் கங்கை சமவெளியில் உள்ள இந்த திராவிட பழங்குடியினர் சித்தியன் படையெடுப்பாளர்களால் தங்கள் தாயகத்திலிருந்து வெளியேற்றப்பட்டனர்.

    கங்கை பகுதிகளை ஆட்சி செய்த வில்லவர் குலங்களை சித்தியர்கள் தம்முடன் சேர்த்திருக்கலாம். ஜாட் சமூகத்தில் பல வில்லவர்-நாடார் குடும்பப் பெயர்கள் உள்ளன. ஜாட் சமூகம் சித்தியன் வம்சாவளியைக் கொண்டிருந்திருக்கலாம்.

    நாடார், சாணார், சாந்தார் பில்வன், பாணா, சேர, சோழர் பாண்டியா போன்ற பல வில்லவர் குடும்பப்பெயர்கள் ஜாட் சமூகத்தின் குடும்பப்பெயர்களில் காணப்படுகின்றன.

    ReplyDelete
  19. அசுர திராவிட துடக்கம்

    வில்லவர் மீனவர்

    தமிழ் வில்லவர் மற்றும் அதன் துணைக்குழுக்கள் வில்லவர், வானவர், மலையர் மற்றும் மீனவர் என்று அழைக்கப்பட்ட அவர்களின் கடலில் செல்லும் உறவினர்கள், இவர்கள் அனைவரும் பண்டைய பாண்டியன் இராச்சியத்தை நிறுவியவர்கள் ஆவர். பண்டைய பாண்டியன் மன்னர்கள் தங்கள் துணைக்குலங்களால் அறியப்பட்டனர் எ.கா. மலையர் குலம்-மலயத்வஜ பாண்டியன். வில்லவர் குலம்-சாரங்கத்வஜ பாண்டியன் மீனவர் குலம்-மீனவ பாண்டியன்போன்றவர்கள்.

    வில்லவர் குலங்களின் இணைப்பு

    பிற்காலத்தில் அனைத்து வில்லவர் குலங்களும் மீனவர் குலங்களுடன் ஒன்றிணைந்து நாடாள்வார் அல்லது நாடார் குலங்களை உருவாக்கின.

    பாண்டிய ராஜ்ஜியத்தின் பூர்வீகம்

    பாண்டிய ராஜ்ஜியத்தின் ஆரம்பம் குமரிக்கண்டத்தில் வரலாற்றுக்கு முந்தையது. தலைநகரங்கள் தென் மதுரை, கபாடபுரம் மற்றும் மதுரை.

    காலவரிசை

    1. முதல் பாண்டிய இராச்சியத்தின் அடித்தளம் (கிமு 9990)
    2. முதல் பிரளயம் (கிமு 5550)
    3. இரண்டாவது பாண்டிய சாம்ராஜ்யம்
    4. இரண்டாம் பிரளயம் (கிமு 1850)
    5. மூன்றாவது பாண்டிய சாம்ராஜ்யம்
    6. சங்க யுகத்தின் முடிவு (கி.பி. 1)


    பாண்டியன் ராஜ்யத்தின் பிரிவு

    பண்டைய பாண்டிய இராச்சியம் தமிழத்தில் சேர, சோழர் மற்றும் பாண்டியன் ராஜ்யங்களாக பிரிக்கப்பட்டது.

    வில்லவர் ராஜ்யங்களின் முடிவு.

    கி.பி 1120 இல் அரேபியர்களின் உதவியுடன் கேரளாவைத் தாக்கிய துளு-நாயர் படையெடுப்பைத் தொடர்ந்து சேர வம்சம் கொடுங்கலூரில் இருந்து கொல்லத்திற்கு மாற்றப்பட்டது. கி.பி 1310 இல் மாலிக் கஃபூரின் பாண்டிய ராஜ்ஜியத்தின் மீதுள்ள தாக்குதல் மற்றும் தோல்விக்குப் பிறகு, வில்லவர்கள் படுகொலை செய்யப்பட்டனர். கேரளா முழுவதும் துளு-நேபாள ஆட்சியின் கீழ் வந்தது. கி.பி 1335 க்குப் பிறகு கேரளாவில் அஹிச்சத்திரம்-நேபாளத்தைச் சேர்ந்த நாகர்கள் ஆதிக்கம் செலுத்தினர்.

    தமிழ்நாட்டை தெலுங்கு பலிஜாக்கள் மற்றும் வாணாதிராயர்கள் ஆக்கிரமித்தனர். வாணாதிராயர்கள் தமிழ்நாட்டின் கங்கை நாகர்களின் தலைவர்கள் ஆனார்கள். கி.பி 1377 க்குப் பிறகு கேரளாவும் தமிழகமும் பாண மன்னர்களால் ஆளப்பட்டன. கேரளா மற்றும் தமிழ்நாடு வடுக நாகர்களால் ஆதிக்கம் செலுத்தப்பட்டது.

    தெற்கே வில்லவர் குடியேற்றம்
    கேரளா
    1. கொடுங்கலூரிலிருந்து கொல்லத்திற்கு இடம்பெயர்வு (கி.பி 1102)
    2. கொல்லத்திலிருந்து திருவனந்தபுரம், கன்னியாகுமரி மற்றும் இலங்கைக்கு இடம்பெயர்வு (கி.பி 1335)

    தமிழ்நாடு
    1. தஞ்சாவூரில் இருந்து களக்காட்டுக்கு இடம்பெயர்வு (கி.பி 1310)
    2. மதுரையிலிருந்து திருநெல்வேலிக்கு இடம்பெயர்வு (கி.பி 1310)
    3. திருநெல்வேலியில் இருந்து கல்லிடைக்குறிச்சி மற்றும் அம்பாசமுத்திரத்திற்கு இடம்பெயர்வு (கி.பி. 1377 முதல் கி.பி .1640 வரை)

    வட இந்தியாவில் வில்லவர்
    வில்லவர் குலங்கள்
    1. வில்லவர் = பில்
    2. மலையர்
    3. வானவர் = பாணா
    4. மீனவர் = மீனா

    வில்லவர் பட்டங்கள் மற்றும் பாணரின் பட்டங்கள் வில்லவர் = பில், பில்லவா, சாரங்கா, தானவா
    மலையர் = மலெயா, மலயா
    வானவர் = பாணா, வானாதிராயர்
    மீனவர் = மீனா, மத்ஸ்யா
    நாடாள்வார் = நாடாவா, நாடாவரு, நாடாவரா.
    நாடார் = நாடோர்
    பணிக்கர் = பணிக்கா
    சான்றார் = சான்றாரா, சான்தா
    பாண்டியன் = பாண்ட்யா
    மாவேலி = மகாபலி

    முடிவுரை

    வில்லவர்-நாடார் குலங்கள் இந்தியா முழுவதையும் ஆண்ட வில்லவர் மற்றும் பாண குலங்கள் என்று அழைக்கப்படும் பழங்குடி ஆட்சியாளர்களைச் சேர்ந்தவை. டெல்லி படையெடுப்பைத் தொடர்ந்து நடந்த இனப்படுகொலைதான் வில்லவரின் வீழ்ச்சிக்குக் காரணம். மற்றொரு காரணம் வில்லவர் மற்றும் பணிக்கர் மற்ற நாடுகளுக்கு வெளியேறியது.

    ReplyDelete
  20. மதுரைகாஞ்சி பாண்டியரை

    "தென்பரதவர் போரேறே" என்கின்றது

    போரேறு என்பது ஆண்சிங்கம் மற்றும் காளையை குறிக்கும் சொல்

    இதன் மூலம் மதுரைக்காஞ்சி பாண்டியன் நெடுஞ்செழியனை தென்பரதவர் சிங்கமே என்பது நன்கு புலப்படும்

    ReplyDelete