Wednesday, December 12, 2012

பண்டைய தமிழகத்தில் போர்மறவர் என்போர் ‘பள்ளரே’ -- பாகம் 2

கள்ளர்கள் தங்களது வரலாற்றை பற்றி எடுத்து வைக்கும் ஆதாரங்கள்/வாதங்கள்: 

@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
=>    குறிஞ்சி நிலத்து குறவன் ஒருவன் முல்லைநிலத்து இடைச்சியை மணக்கலாம். அதுபோல் நெய்தல் நிலத்து பரதவன், மருதநிலத்து விவசாயப்பெண்ணைமணக்கலாம்.
(ஆதாரம்:முனைவர் கே.கே.பிள்ளை அவர்கள் எழுதிய தமிழக வரலாறு மக்களும் பண்பாடும்)அப்போது, தமிழகத்தில் மக்கள் அவரவர் செய்துவந்த தொழிலுக்கேற்ப பல குலங்கள் மட்டுமே தோன்றியிருந்தன. தமிழக மக்கள் அனைவரும் அவரவர் செய்துவந்த தொழிலின் அடிப்படையில், தொழில் பெயராலேயே அழைக்கப்பட்டனர். எ.கா:--(1)அளவர் (2)இடையர் (3)உமணர் (4)உழவர் (5)எயினர் (6)குயவர் (7)கூத்தர் (8)கொல்லர் (9)தச்சர் (10)தட்டார் (11)தேர்ப்பாகர் (12)பரதவர் (13)பறையர் (14)புலையர் (15)வண்ணார் (16)வணியர் (17) வெள்ளாளர் (18)களவர். இன்றைய கள்ளர்குல முன்னோர்கள் அனைவரும் உலகம் தோன்றிய நாள்முதல் போர்க்களம் சென்று போராடுவதையே தங்கள் குலத்தொழிலாகக்கொண்டிருந்தனர் என்பதை பன்னிருபடலம், புறப்பொருள்வெண்பாமாலை, அகநானூறு, புறநானூறு, நற்றிணை கலித்தொகை, சிலப்பதிகாரம், மணிமேகலை போன்ற தமிழ இலக்கியங்கள் மூலம் அறியமுடிகிறது.

     களவர்(விளக்கம்): ஆதிகாலம் முதல் நம்குலமுன்னோர்கள் அனைவரும்போர்க்களத்தொழிலையே குலத் தொழிலாகக் கொண்டு வாழ்ந்ததால், கி.மு.ஆறாம் நூற்றாண்டுக்குமுன் அக்குலத்தொழில் பெயராலேயே களவர் என்று அனைவராலும் அன்புடன் அழைக்கப்பட்டனர். களவர் என்றால் களம் காண்பவர் என்று பொருள். இதனைப்பற்றி, மயிலை சீனி வெங்கடசாமி அவர்கள் எழுதியுள்ளது வருமாறு: களவர் தமிழ்ச்சொல். களம் என்னும் தமிழ்ச்சொல்லிலிருந்து பெறப்படும். களம் என்றால் போர்க்களம். களவர் என்பதற்கு களம் காண்பவர் அல்லது போர்க்களம் சார்ந்த மக்கள் என்று பொருள். இவ்வாறு அவர் எழுதியுள்ளார். தென்னிந்திய குலங்களும் குடிகளும் என்ற நூல் எழுதிய எட்கர் தர்சன் என்ற ஆங்கிலேய வரலாற்று ஆசிரியரும் கள்ளர்,மறவர், அகமுடையோர் என்போர் போர்க்களம் சார்ந்த மக்கள் என்பதை தெளிவாக எழுதியுள்ளார். பிற்காலத்தில், களவர் என்ற வார்த்தைக்கு புள்ளி வைத்து எழுதும்போது கள்வர் என்றும்,கள்வர் என்ற வார்த்தையே தற்காலத்தில் கள்ளர் என்றும் மரூவி வந்துள்ளது.

=> தஞ்சை பெருவுடையார் கோயிலில் உள்ள மாமன்னர் இராஜராஜசோழனின்கல்வெட்டில் "தாய்மண் காக்க உதிரம் கொட்டிய கள்ளர்குல மறவர்களுக்கு உதிரப்பற்று என்னும் வரிநீக்கிய நிலங்களை கொடையாக அளித்து போற்றியுள்ளது" பொறித்துவைக்கப்பட்டுள்ளது. இதை அறியாத அரைவேக்காட்டு கத்துக்குட்டி வரலாற்று ஆசிரியர்கள், கள்ளர் என்பதற்கு திருடர் என்று பொருள் கண்டுள்ளனர்., மேலும், கள்ளர்கள் பலப்பல போர்க்களங்கள் கண்டு ஏராளமான விருதுப்பெயர்களை சோழமன்னர்களிடமிருந்து பெற்றுள்ளனர் என்பதற்கு போதுமான சான்றுகள் உள்ளன. எனவே, கள்ளர்களைவிருதுகள் பலகூறு வீரைமுடையான் என்று மிராஸ்ரைட் கல்வெட்டு கூறுவதை காண்க:"தொண்டைமண்டல வரிசை மூவாறு குடிமக்கள் சுருதிநாள் முதலாகவே துங்கமிகு நாவிதன், குயவன்,வண்ணான், ஓலை சொன்னபடி எழுதும் ஒச்சன், கண்டகம் மாளர்வகை ஐவர், வாணியர் மூவர், கந்தமலர் மாலைகாரர் கலைமீது சரடோட்டும் பாணன், தலைக்கடைக் காவல்புரி பள்ளி,வலையன், பண்டுமுதல் ஊரான் மறிக்கும் இடையன், விருது பலகூறு வீரமுடையான் பதினெண் குடிமக்கள் அனைவரும்……………………………………"

     பழங்காலத்தில், போர்முரசு கொட்டியவுடன், நம் முன்னோர்கள் அனைத்துவேலைகளையும் புறம்தள்ளிவைத்துவிட்டு, அவசரம் அவசரமாக போர்க்கோலம் பூண்டு, இடது தோளில் வில்லை எடுத்துமாட்டிக்கொண்டு, வலது தோளில் முதுகுப்பக்கம் கற்றை கற்றையாக எண்ணற்ற அம்புகளைப்பிணைத்திருக்கும் அம்பறாத்தூளியை எடுத்துக்கட்டிக்கொண்டு, இடது இடையில் போர்வாளுடன கூடிய உறையை எடுத்து இறுகக்கட்டிக்கொண்டு, வலதுகையில் நெடிய ஈட்டியையும் இடதுகையில் கேடயத்தையும் எடுத்துக்கொண்டு போர்க்களம் நோக்கி ஓடி, எதிரி நாட்டுப்போர்ப்படையின்மீது புலிபோல் பாய்ந்து உயிரைப்பற்றிக்கவலைப்படாமல் மதம்கொண்ட யானையைப்போல்வெறியுடன் போர்க்களம்முழுவரும் ஓடி எதிரிகளின் தலைகளை பனங்குலைகளை வெட்டித்தள்ளுவதைக்போல் வெட்டித்தள்ளி வீரம்-தீரம் காட்டிப்போராடியவர்கள் என்பதை புறநானூறு அகநானூறு போன்ற தமிழ் இலக்கியங்கள் மூலம் அறிகிறோம்.

=> கி.மு.மூன்றாம் நூற்றாண்டில் வாழ்ந்தவர் தொல்காப்பியர். அவர் நம்குலமறவர்களாகிய வெட்சிமறவர் கள்வர்கள் போர்செய்த முறையையும் அவர்கள் போர்க்களம் சென்று வீரமரணம் அடைந்தபின் நடுகல்லாகி அனைவராலும் வணங்கப்பட்ட செய்திகள் பலவற்றையும் நேரில் கண்ட செய்திகளாக பன்னிருபடலத்தில் நமக்கு படம்பிடித்துக்காட்டுகிறார். தொல்காப்பியருக்குப்பின் இருநூறு ஆண்டுகளுக்குப்பின் வாழ்ந்தவர் திருவள்ளுவர்.அவரும் நம்மறக்குடி மக்களின் மாண்பையும் வீரத்தையும் நேரில்கண்டு போற்றிப்பாடியுள்ளார். திருவள்ளுவரின் கீழ்காணும் இருபாடல்கள் நம் குல முன்னோர்கள் போர்க்களத்தில் நின்று போராடும் காட்சியை நமக்குக் காட்டுகின்றது:"விழித்தக்கண் வேல்கொண்டு எறிய, அழித்து இமைப்பின் ஓட்டு அன்றோ வன் கணவர்க்கு"(குறள் 775) பொருள்: போர்க்களத்தில் நேருக்குநேர்நின்று போர்புரியும்போது, எதிரி எறியும் வேலைக்கண்டு, திறந்திருந்த கண்களை சிறிது மூடிதிறந்தாலும்(இமைத்தாலும்) அது கோழையின் செயலாகக்கருதி, புறமுதுகிட்டு ஓடியதற்கு ஒப்பாகும்."கைவேல் களிற்றொடு போக்கி வருபவன் மெய்வேல் பறியா நகும்" (குறள் 774பொருள்: போர்க்களத்தில் வீரன் ஒருவன் தன்னைத்தாக்க எதிரேவரும் யானையின் மீது தன் கையிலிருக்கும் கூரிய வேலை வேகமாக எறிந்து அதன் உடலில் ஆழமாக பாய்ச்சி விடுகின்றான். வேலின் வன்மையை தாக்குபிடிக்கமுடியாத அந்த யானை வலியினால் பின்வாங்கி அவன் எறிந்த வேலோடு திரும்பி ஓடிவிடுகின்றது. மேற்கொண்டு போராட வேலில்லையே என அவ்வீரன் செய்வதறியாது திகைத்து நிற்கின்றான். அப்போது, எதிரி எறிந்த வேல் ஒன்று வேகமாக பாய்ந்து வந்து அவன் மார்பில் பதிந்த நிற்கின்றது. அதுகண்டு அவன் மனம் மகிழ்ந்தான். வேல்ஒன்று கிடைத்துவிட்ட மகிழ்ச்சியில், அவன் மார்பில் தைத்துநிற்கின்ற அந்த வேலை பிடிங்கி கையில் எடுத்து சுழற்றிக்கொண்டு எதிரியைத்தாக்க மகிழ்ச்சியுட்ன் ஓடுகின்றான்.மேலும், போர்க்களம்செல்லும் முன் தன் மனைவியை மைத்துனர் வீட்டில் விட்டுச்செல்வதையும் நம் குலமுன்னோர்கள் வழக்கமாகக் கொண்டிருந்தனர்.

=>     போர்க்களம் செல்லும் நம்குல மறவர்கள், மாலையில்வீடுதிரும்புவோம் என்ற நிச்சயமற்றநிலையை மனதில் கருதியே அவ்வழக்கத்தைக்கடைபிடித்தனர். தமிழ் இனத்தில்பள்ளுபறை என்னும் 18 சாதிகள் உண்டு. ஆனால், எந்த சாதியினரும் செய்யாத மிகவும் ஆபத்தான தொழிலையேஇவர்கள் செய்ததற்குக் காரணம், முற்கால மன்னர்கள் இவர்களை மிகவும் போற்றி மதித்துள்ளனர் என்பதுமட்டுமல்லாமல் பிறந்த மண்ணுக்காகவும், மன்னனுக்காகவும் போரில் வீர மரணம் அடைவதை பெறும் பேறாகக்கருதியவர்கள் நம்குலமுன்னோர்கள் என்பதும் அவர்கள் உண்மையாக போர்செய்து வெற்றிவாகைசூடி மன்னனுக்குபெருமைதேடித்தந்தனர் என்பதையே தஞ்சை பெருவுடையார் கோயிலில்உள்ள பேரரசன் இராஜராஜ சோழனின்கல்வெட்டு சான்று கூறுகிறது. போர்க்களம் சென்ற தன் தளபதிகள் உடல் உறுப்புக்கள் ஊனமின்றி நல்லபடியாக வீடுதிரும்பவேண்டும் என, சிவபெருமானைவேண்டி இராஜராஜசோழன் திருவிளக்கு எரிய நிவந்தம் விட்ட செய்திகளும்தஞ்சை பெருவுடையார்கோயிலில் உள்ள கல்வெட்டுகள் மூலம் அறிகிறோம்.இரட்டைப்பாடி ஏழரைஇலக்கத்தின்மன்னன் மேலைச் சாளுக்கியனுடன் 100 ஆண்டுகளுக்குமேல் நடைபெற்ற போரில் 9,00,000 போர்வீரர்கள் போரிட்டுஇறுதியில் சோழமன்னன் வெற்றிவாகை சூடினான்..தரைப்படை,குதிரைப்படை,யானைப்படை மற்றும்கப்பற்படைமூலம் கடல்கடந்த நாடுகளையும் தாக்கி தென்கிழக்கு ஆசிய நாடுகளையும் சோழர்படை வென்றது. 1. பாண்டிநாடு 2. பல்லவநாடு3. சேரநாடு 4. இலங்கை5. இரட்டைப்பாடி ஏழரை இலக்கம்6. வேங்கி7. சாளுக்கியநாடு8. சக்கரக்கோட்டம்9. கலிங்கம்10. கங்கபாடி 11. நுளம்பப்பாடி 12. குடகு 13. கேரளம் 14. கொல்லம் 15. மாநக்கவாரம்16. மாப்பாளம் 17. மலேயா தீபகற்பத்திலுள்ள மாயிருடிங்கம்18. கடாரம் 19. சாவகம்20. இலாமுரிதேசம் 21. சிறீவிசயம்22. கருமனம் 23. புட்பகம் 24. யவனம் 25. மிசிரம் 26. காழகம் 27. புட்பகம்28. அரபிக்கடலிலுள்ள முன்னீர் பழந்தீவுபன்னீராயிரம்29. அங்கம் 30. வங்கம்31. கோசலம் 32. விதேகம்33. கூர்சரம்34. பாஞ்சாலம் 35. இடைதுறைநாடு36. வனவாசி37. கொள்ளிப்பாக்கை 38. மண்ணைக்கடக்கம்39. மதுரமண்டலம்40. நாமணக்கோணை 41. பஞ்சப்பள்ளி 42. மாசுணிதேசம்43. ஒரிசா(ஒட்ட விசயம்) 44. சுமத்ரா தீவிலுள்ள விசையம் 45. பண்ணை46. மலையூர்47. இலங்கா சோகம்48. இலிம்பிங்கம் 49. வளைப்பந்தூறு 50. தக்கோலம் 51. மதமாலிங்கம் ஆகிய நாடுகளை சோழர் படைவென்றுஉலகப்பேரரசாக மாறியது.

=> சோழனின் படை வடஇந்தியாவில் உள்ள கங்கைக்கரைவரை சென்று வெற்றிவாகைசூடியது. வடஇந்தியாவின்மீது 18முறை படையெடுத்து சோமநாதபுரம் கோயிலை கொள்ளையிட்ட ஆப்கானிஸ்தானின்துருக்கி அரசன் கஜினிமுகமதுவை தண்டிக்கவும் இராஜேந்திரசோழன் வடஇந்தியாவின்மீது திக்விஜயம் செய்தார்என்பதற்கு வலுவான வரலாற்று சான்று உள்ளன. கி.பி.1025,டிசம்பர் மாதத்தில் 17வது முறையாக கஜினி முகமதுசோமநாதபுரம் கோயிலின்மீது படையெடுத்தான். அவன் அக்கோயிலைநோக்கி அரபிக்குதிரைகளின்மீதும்ஒட்டகங்களின்மீதும் புயல்காற்றென வாயுவேகத்தில் வந்து தாக்கினான். அவனைத்தடுத்த 50,000க்கும் மேற்பட்டநிராயுதபாணியான பக்தர்களைவெட்டிசாய்த்தான். கோயிலை இடித்து, இறைவனுக்கு காணிக்கையாக பக்தர்களால்அளிக்கப்பட்ட தங்கம்,வைரம், வைடூரியம், கோமேதகம்,முத்து, பவளம்,மாணிக்கம் போன்ற விலையுயர்ந்த கோடானகோடிசெல்வங்களை கொள்ளையிட்டு ஒட்டகங்களின்மீதும், குதிரைகளின்மீதும் மூட்டையாக்க்கட்டிஅள்ளிச்சென்றான். அவன் அப்போது கொண்டுபோன தங்கம் மட்டுமே ஆறுடன் எடைக்கு குறையாது. அம்மூட்டைகளைதூக்கமுடியாமல், ஒட்டகங்களும், குதிரைகளும் முதுகைநெளித்துக்கொண்டு எறும்புஊருவதைபோல்ஆப்கானிஸ்தானை நோக்கி மெல்ல ஊர்ந்துசென்றன.. இவ்வாறு அரபுநாட்டு வரலாற்று ஆசிரியர்அல்காசுவினி எழுதியுள்ளார். கி.பி.1000லிருந்து தொடங்கி தொடர்ந்து ஆண்டுதோறும் துருக்கி அரசன் கஜினிமுகம்மதுவடஇந்தியாவின்மீது படையெடுத்து சோமநாதபுரம் சிவன்கோயிலைகொள்ளைஅடித்துவரும்செய்தி, சிவபாதசேகரனும்சிவநேசச்செல்வனுமான இராஜராஜசோழனையும், மும்முடிச்சோழன் பெற்ற களிறு என்று வரலாறு போற்றும்இராசேந்திர சோழனையும் மனம் நோகச்செய்திருக்கவேண்டும். மேலும், கஜினி முகமது கிபி.1018ல் கன்னோசிநாட்டின்மீதுபடையெடுத்து, அந்நாட்டை ஆண்ட ராஜ்யபாலனைத்தோற்கடித்து நாட்டைவிட்டே துரத்தி, வழக்கம்போல்கோயில்களை இடித்தும், கோயில் சொத்துக்களையும் உடைமைகளையும் சூறையாடி, பொதுமக்களைகொன்றுகுவித்து ஊருக்கும் எரியூட்டி அந்நாட்டிற்கு பேரிழப்பை உண்டுபண்ணினான். ராஜ்யபாலன் இவற்றைத்தடுக்கஎவ்வித முயற்யசியும்செய்யாது கோழையைப்போல் ஓடி ஒளிந்துகொண்டான். இதனால் பக்கத்து நாட்டுமன்னர்கள்சந்தெல்லர் நாட்டு மன்னன் வித்தியாதரன் என்பவன் தலைமையில் ஒன்றுகூடி நடவடிக்கை மேற்கொண்டனர்.கஜினியை எதிர்த்துப்போரிடாத கோழை ராஜ்யபாலனை கொன்று அவன் மகன் திரிலோசன பாலனை கன்னோசியின்மன்னாக முடிசூட்டி, கஜினியை எதிர்க்க கூட்டு உடன்படிக்கை மேற்கொண்டனர். தன்னைஎதிர்த்து கூட்டுநடவடிக்கைமேற்கொண்ட மன்னர்களைத்தண்டிக்க, கஜினி மீண்டும் கன்னோசியின்மீது படையெடுத்து வெற்றிகண்டான்.

=> இரண்டுஆண்டுகளுக்குப்பிறகு,(கிபி.1021-22ல்) தனக்கு எதிராக கூட்டணிநிறுவிதலைமையேற்ற வித்தியாதரனைத்தண்டிக்க,கஜினி முகமது அவன் நாட்டின்மீது படையெடுத்தான்.இந்நிலையில்,வடநாட்டுபடையெடுப்பின்போது போசராசன்நட்பும், சேதிநாட்டுக்காளச்சூரி மன்னன் காங்கேயர் விக்கிரமாதித்தன் நட்பும் இராசேந்திர சோழனுக்கு கிடைத்தது.அவர்களின் வேண்டுகோளை ஏற்று,வித்தியாதரனை கஜினியிடமிருந்து காப்பாற்ற மாபெரும் படையுடன் இராசேந்திரசோழன் வடநாடுநோக்கி திக்விஜயம் புறப்பட்டான். வழியில் சக்கரக்கோட்டம், மதுரை மண்டலம், நாமனைக்கோட்டம்,பஞ்சப்பள்ளி, மாசுணிதேசம்(சிந்துநதிக்கரையில் உள்ளது) ஆகிய இடங்களை கைப்பற்றினான்.(ஆதாரம்: டாக்டர்கே.கே.பிள்ளை அவர்கள் எழுதிய தமிழக வரலாறும் மக்களும் பண்பாடும் பக்கம் 277&278ல்காண்க).இராசேந்திரசோழனின் மேற்கண்ட திக்விஜயத்தைகேள்விபட்ட கஜினி முகமது அஞ்சிஓடிஒளிந்துகொண்டான். அதுமட்டுமல்ல.,இராசேந்திரசோழனின் மேற்கண்ட வடநாட்டு படையெடுப்பிற்குப்பிறகு,இந்தியாவின்மீது படையெடுப்பதையும் கோயில்களை கொள்ளை யடிப்பதையும் விட்டுவிட்டான். அதன்பிறகு இந்தியாவின் மீது படையெடுப்பு எதையும் கஜினி முகமது எடுக்கவில்லை என்று வரலாறுகூறுகிறது. மதுரை மண்டலம் என்பது யமுனைக்கரையில் உள்ள வடமதுரையே என்பதில் ஐயமில்லை. அந்நகர் அக்காலத்தில் செல்வமும் செழிப்பும் புகழும்பொதிந்து காணப்பட்டதால், அந்நகர் மீது கஜினிமுகமது பன்முறை தாக்குதல்நடத்தி கொள்ளையடித்து தீயிட்டு சீரழித்தான்.அப்போது வடநாட்டு மன்னர்களின் வேண்டுகோளைஏற்று சிவபாதசேகரனின் மகனான இராசேந்திரசோழன்,சோமநாதபுரம் கோயிலைக் காப்பாற்றவும், கஜினிமுகம்மதுவுடன் போரிட்டு அவன்தொல்லையிலிருந்து வடஇந்தியாவைவைக் காப்பாற்றவும், மாபெருமபடை திரட்டிக்கொண்டு வடநாட்டின்மீது திக்விஜயம் விஜயம் மேற்கொண்டான் என்று கருதத்தோன்றுகிறது என்று டாக்டர் கே.கே.பிள்ளை கூறுகிறார்.(பக்கம்279) இராஜேந்திரசோழனின் நாட்டம் அடுத்துக் கங்கை வெளி யின் மீது பாய்ந்த்து. மேலைச்சாளுக்கிய மன்னன்இரண்டாம் சயசிம்மனுக்கு படைத்துணைநல்கிய வர்களான கலிங்கத்து அரசனும், ஒட்டவிசயஅரசனும் சோழர்படைக்கு அடிபணிந்தனர். இப்படைகள் மேலும் வடக்கே முன்னேறிச்சென்று இந்திரதரன், இரணசூரன், தருமபாலன்ஆகியமன்னர்களை வென்று கங்கைவெளியில் அடிவைத்தன. வங்க நாட்டு பாலவமிசத்து மன்னன் மகிபாலன் என்பான்சோழர்படைக்கு தலைவணங்கி அடிபணிந்தான். கங்கைஆற்யறைக்கடந்துசென்றும் சோழர் படை சிற்சில இடங்களில்போரிட்டுவென்றது.

=> வங்காளம் முழுவதுமே சோழப்பேர்ரசின் மேலாட்சிக்குஇணங்கிற்று.இராசேந்திரசோழனின் வடநாட்டுபடையெடுப்பில் படைத்தலைவனாக சென்ற கருநாடகக்குறுநிலமன்னன் ஒருவன் மேலை வங்கத்தில் குடியேறினான்.அவன் வழியில் பிறந்த சமந்தசேனன் என்ற ஒருவன் தோன்றி, "சேனர் பரம்பரை" ஒன்றை மேற்கு வங்காளத்தில் தொடங்கி வைத்தான். மேலும், இராசேந்திரசோழன் கங்கைக்கரையிலிருந்து சைவர்கள்(கங்கை வேளாளர்) சிலரை கொண்டுவந்து காஞ்சிபுரத்தில் குடியேற்றினான்(ஆதாரம்: திரிலோசன சிவாச்சாரியார் எழுதிய சித்தாந்த சாராவளி என்னும் நூல்).கங்கைத்திருநாட்டில் வேளாண்மைத்தொழில் செய்த வேளாளர் இன்றும்தமிழகத்தில், தங்களை கங்கைக்குலத்தவர் என்றே கூறிக்கொள்கின்றனர். வேளாளர்களுக்குக் கங்கக்குலம் அல்லது கங்க வம்சம் என்ற பெயரும் உண்டு. ஏனெனில் அவர்கள் பிளினி, டாலமி ஆகியவர்களால் குறிப்பிடப்பட்ட கங்கைத்தீரத்திலுள்ள வல்லமைவாய்ந்த கங்கரிடே என்ற மாபெருங்குடி மரபிலிருந்து தங்கள் குலமரபை வரன்முறையாகக் கொண்டனர். (ஆதாரம்:ரா.பி.சேதுப்பிள்ளை அவர்கள் தமிழகம் ஊரும் பேரும் என்ற நூலில் எழுதியுள்ளது).இராசேந்திரன் கிபி.1018ல் இலங்கை முழுவதையும் வென்று சோழப்பேரரசின்கீழ் கொண்டுவந்தார். முதலாம் பராந்தகச்சோழனிடம் தோற்றோடிய வீரபாண்டியன் அன்று சிங்களத்தில் கைவிட்டோடிய பாண்டிநாட்டு மணிமுடியையும், இந்திரஆரத்தையும், இரெத்தின சிம்மாசனத்தையும், பாண்டியனின் செங்கோலையும் இராசேந்திரன் மீட்டு வந்தார்.("தேவர்கோன் பூணாரம் தென்னர்கோன் மாப்பினவே" என்று சிலப்பதிகாரத்தில் இளங்கோவடிகள் இதனை குறிப்பிடுவதை காண்க) மேலும் சிங்கள மன்னனின் மணிமுடியையும் அவன் பட்டத்தரசியின் மணிமுடியையும் பறித்தார். இலங்கையில் சிவனுக்கும் பெருமாளுக்கும் பல கோயில்கள் எழுப்பப்பட்டன.

@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
மேற்குறிப்பிட்ட வாதங்களுக்கு எமது மறுப்புரை

      சங்க காலத்தில் வாழ்ந்த மக்கள் பற்றி அறியத் துணை புரிவது சங்க இலக்கியங்கள் ஆகும். இவை எட்டுத் தொகை, பத்துப்பாட்டு மற்றும் தொல்காப்பியம் ஆகியன. அக்கால மக்கள் வாழ்ந்த நிலத்தை இயற்கை அமைப்புக்கு தக்கவாறு குறிஞ்சி, முல்லை, மருதம் மற்றும் நெய்தல் என்று நான்காகப் பிரித்திருந்தனர். பாலை என்ற ஐந்தாவது நிலம் பற்றி தொல்காப்பியத்தில் குறிப்பு கிடையாது. ஆனால், குறிஞ்சியும், முல்லையும் வானம் பொய்த்துப் போன நிலையில் தனது நிலையில் மாறுபட்டு புதிய நிலமாக காட்சி தருகின்ற ஒரு காலப்பகுதியைக் குறிப்பதே பாலை என்று சிலப்பதிகாரம் குறிப்பிடுகிறது. எனவே, பாலை என்பது குறிஞ்சி மற்றும் முல்லையின் ஒரு மாறுபட்ட நிலையேயன்றி, ஒரு தனி நிலப்பரப்பு அன்று. இதில் குறிஞ்சியும்,முல்லையும் வன் நிலம். அதாவது, திருந்தாத நிலம். திருந்தாத நிலம் என்னும் போது அங்கு வாழ்ந்த மக்களின் வாழ்க்கை முறையும் திருந்தாத நிலையாகவே இருந்தது. குறிஞ்சி நிலமக்கள் குறவர், குறத்தியர் எனப்பட்டனர். அவர்கள் தொழில் தேன் எடுத்தல் மற்றும் விலங்குகளை வேட்டையாடல். முல்லை நிலமக்கள் இடையர் மற்றும் இடைச்சியர். இவர்கள் தொழில் ஆநிரை பேனல் மற்றும் வேட்டையாடல். இந்த இரு நிலங்களிலும் தொழிலின் அடிப்படையில் இவர்களுக்கு நிரந்தரமான குடியிருப்புகள் இல்லை. இவர்களின் வாழ்க்கை நாடோடி வாழ்க்கையாகவே இருந்தது. எனவே, இவர்களிடையே கணவன், மனைவி என்ற குடும்ப அமைப்பு ஏற்படவில்லை.

    மருதமும், நெய்தலும் மென் நிலங்கள். நெய்தல் நிலத்தில் மீன், உப்பு இவைகள்தான் கிடைக்கும். ஆனால், மருதநிலம் அப்படி இல்லை. இது நீர் நிலை நிறைந்த வளமான நிலம். ஏனெனில், இது ஆற்றோரங்களில் அமைந்திருந்தது. இதனால், அங்கு நெல் உற்பத்தி செய்யப்பட்டது. நெல் உற்பத்தியே நாகரிகத்தின் பொருளியல் அடிப்படையானது. எனவே, குறிஞ்சியும், முல்லையும் போல் இல்லாமல் மருத நிலத்தில் நாகரிக வளர்ச்சியும், அதனால் நிரந்தரக் குடியிருப்புகளும் ஏற்பட்டன. இந்த நிலத்தில் வாழ்ந்த மக்கள் மள்ளர் எனப்பட்டனர். இந்த மக்கள் கழனியில் செய்த வேலையின் பொருட்டு உழவர், களமர், வினைஞ்ர், கடைஞ்ர், உழத்தியர், கடைசியர் மற்றும் ஆற்றுக்காலாட்டியார் என பல பெயரால் அழைக்கப்பட்டனர். இவர்களுக்கென பிரத்தியோகத் தனி உடைமைகள் ஏற்பட்ட நிலையில் கணவனை தலைவனாகக் கொண்ட குடும்ப வாழ்க்கை ஏற்பட்டது. மருத நில மக்கள் தொகை பெருகிய பின், பண்டமாற்றிற்கு வணிகனும், வழக்குத் தீர்ப்பிற்கும் காவற்கும் ஊர்க்கிழவரும்(தலைவர்), தெய்வத்தை வேண்ட உவச்சனும்(பூசாரி) உழவரின்றி பிரிந்தனர். இவ்வாறாக மருதநில மக்கள் நான்கு பிரிவாயினர். ஊர்க்கிழவரே அரசகுலத் தொடக்கம். ஆட்சிப்பரப்பு விரியவிரிய, வேளிரும், குறுநில மன்னரும், கோக்களும் மற்றும் வேந்தரும் முறையே தோன்றினர். எனவே, மருத நிலம்தான் நாகரிகத்தின் பிறப்பிடம். நீர் வளம் நிறைந்த இடத்திலேதான் நாகரிகம் பிறந்தது. நாகரிகத்தின் சின்னம்தான் அரசும், அரசனும். பண்டைகாலத்தில் மக்களைக் காத்து அவர்கள் முன்னேறத் துணை செய்தவன் அரசனே. மக்களும் தங்களுக்குத் துணை செய்த மன்னனை தெய்வப் பிறவியாக மதித்து வணங்கினர். ஆதலால், வேந்தனையே மருத நிலத்தின் தெய்வமாக வைத்தார் தொல்காப்பியர்.

வேந்தன் மேய தீம்புனல் உலகம்

இதைப்போலவே மருதநில மள்ளர்கள் பற்றி நிகண்டுகள் குறிப்பிடுவது,

அருந்திரல் வீரர்க்கும் பெருந்திரல் உழவர்க்கும்
வருந் தகையதாக்கும் மள்ளர் எனும் பெயர் (திவாகர நிகண்டு)

செருமலை வீரரும் திண்ணியோரும் மருதநில
மக்களும் மள்ளர் என்ப           (பிங்கல நிகண்டு)

இந்த இரண்டு செய்யுள்களிலிருந்தும் நாம் தெரிந்து கொள்வது, மருதநில மக்கள் மள்ளர் என்று சொன்னால் போதும் நாம் புரிந்துகொள்ளலாம். ஆனால், அருந்திரல் வீரர் மற்றும் செருமலை வீரர் என்போர் மள்ளர் என்றும் சொல்வதால், பண்டைய காலத்தில் வீரன் என்றாலே மருத நில மள்ளன்தான் என்பதாகிறது. அவன்தான் அனைத்து நில மக்களையும் அடக்கி ஆண்டவன் என்பது உறுதியாகிறது. இதனை கீழ்கண்ட தொல்காப்பியப் பாடல் உறுதிபடுத்துகிறது.

ஆயர் வேட்டுவர் ஆடூஉத்திணைப்பெயர்
ஆவயின் வரூஉம் கிழவரும் உளரே   (தொ.பொ.அக.23)

“ஆயர் என்பதும், வேட்டுவர் என்பதும் (முறையே முல்லை மற்றும் குறிஞ்சி நில) ஆண்களைக் குறிக்கும் திணைப்பெயராகும். அவ்விடங்களிலே வேறு பெயர் குறித்து வரும் தலைவர்களும்(கிழவர்) உள்ளனர்

    இங்கே குறிஞ்சி மற்றும் முல்லை நில மக்களை (வேட்டுவர்,ஆயர்) அடக்கியாண்ட அந்த தலைவர்கள் மருத நிலத்தைச் சார்ந்த கிழவரே (குறுநில மன்னர்) ஆவர். இவர்களே அந்த நிலங்களில் நிலத் தலைவர்களாக வாழ்ந்தனர். இதேபோன்றே வணிகம், படையெடுப்பு மற்றும் காதல் போன்ற காரணங்களால் மருத நிலத்தவன் பிற நிலங்களில் போய்த் தங்கக்கூடிய சூழலும் இருந்தது. இந்நிலையில், அவனே கிளவித் தலைவனாகவும் காட்டப்படுகிறான். அப்படி ஏற்பட்ட ஒரு நிலைதான் மள்ளனான முருகன் குறுஞ்சி நிலக் குறத்தியான வள்ளியைக் காதல் செய்த விவகாரம். இங்கே மருத நிலத்தான் மற்ற நிலங்களில் பெண் எடுத்திருக்கிறான். ஆனால், மற்ற நிலத்தவன் மருத நிலத்தில் வந்து பெண் எடுக்கக் கூடிய சூழ்நிலை இருந்ததில்லை.

    மருத நிலத்தின் உழவர், அரசர், வணிகர் மற்றும் உவச்சன் என்ற நான்கு பிரிவு மக்களில் உழவனே தலையாய இடத்தில் வைக்கப்பட்டான். இதன்பொருட்டே திருவள்ளுவரும்

சுழன்றும் ஏர்ப்பின்னது உலகம்-அதனால்
உழந்தும் உழவே தலை

என்று உழவனின் பெருமையை விளக்கினார். இவ்வாறு உழவிற்கு முக்கியத்துவம் ஏற்பட்ட நிலையில், உழவர்க்கு தேவையான பொருள்களை செய்து கொடுக்க பதினெட்டுக் குடிகள் என்ற பக்கத்தொழிலாளர்கள் படிப்படியாகத் தோன்றினர்.  
 
புறப்பொருள் வெண்பாமாலை புகழக்கூடிய போர்மறவன் மள்ளனே ஆவான். இதனை கீழ்கண்டபாடல் மூலம் தெளிவு பெறலாம்.

கோடுயர் வெற்பின் நிலங்கண் டிரைகருதும்
தோடுகொள் புள்ளின் தொகையொப்பக்-கூடார்
முரணகத்துட்ப பாற முழவுத்தோள் மள்ளர்
அரணகத்துப் பாய்ந்திழிந்தார் ஆர்த்து  (புறப்பொருள் வெண்பாமாலை-உழி.படலம்
                                      பாடல் 20)

பொருள்: மத்தளம் போன்ற திரண்ட தோள்களையுடைய மள்ளர், நிலத்திலே இரையைப் பாய்ந்து பிடிக்கும் பறவை போல, பகைவர் பயந்து ஒழியும்படி மதில் உச்சியிலிருந்து குதித்து இறங்கினர்.

இலக்கியத்தில் காட்டப்படுகின்ற வெட்சிமறவர் மற்றும் கரந்தைமறவர் என்போர் போர்மறவரான ‘மள்ளர்களே.

வெட்சி நிரை கவர்தல்
மீட்டல் கரந்தையாம் என்று புறப்பொருள் வெண்பாமாலை கூறும்.

கல்கெழு சீறூர்க் கடைக்கண் விருப்பினான்
மெல்ல நடவா விரையு நிரையென்னோ
தெள்ளற் கான்யாற்றுதீநீர் பருகவும்
மள்ளர் நடவா வகை      ( பெரும்பொருள் விளக்கம்-செய்யுள் 14)

பொருள்: ஆரவாரம் மிகுந்த சீர்மையான ஊரைச் சென்றடையும் விருப்பத்தினால் உந்தப்பட்டு ‘வெட்சிமறவர்களான வீரமள்ளர்கள் தாம் கொள்ளைகொண்டுவரும் பசுக்கூட்டம் இடைப்பட்ட தெளிந்த தித்திப்பான காட்டாற்றுத் தண்ணீரைப் பருகும்படி செய்து விரைவாக ஓட்டிச் சென்றனர். இது வெட்சிமள்ளர்களின் ஒழுக்கநெறியாகும்.

‘கரந்தியல் காட்டுத்தீயப் போலப் பெரிதும்
பரந்துசென் மள்ளர் பதிந்தா-ரராந்தை
விரிந்தவியு மாறுபோல் விண்டோயத் தோன்றி
எரிந்தவியும் போலுமிவ் வூர்         (புறத்திரட்டு-பாடல் 40)

பொருள்: விரைந்து பரவி வளைத்துக்கொண்டு மூண்டெரியும் காட்டுத்தீ போல வீர மள்ளர்கள் பசுக்கூட்டத்தை மீட்கும் பொருட்டு பகைவர் ஊருக்குள் சென்றனர். அதனால், இந்த ஊர் துன்பம் பெருகி அழிவது போல் எரிந்து அழியும்.


திருவள்ளுவர் போற்றிய வன்கண் போர்மறவன் ‘மள்ளனே

வெஞ்சொன் மாற்றம் வந்துகை கூட
வன்கண் மள்ளர் வந்தழல் உறீஇப்
போர்ப்பறை அரவாமொ.............     (பெருங்கதை இலாவாண காண்டம்-17)

பொருள்: ....அச்செய்திக்கு கருவியாக அமைந்த இதறுகண்மையுடைய மள்ளர் போர்ப்ப்பறை முழக்கத்தோடு  ஆரவாரித்து வந்து ............

சீறிவரும் வேலுக்கும் அஞ்சாதவர் மள்ளர். அது கள்ளர் இல்லை.

எறி கோல் அஞ்சா அரவின் அன்ன
சிறு வல் மள்ளரும் உளரே, அதா அன்று
............................               (புறநானூறு-பாடல் 89)

பொருள்: ......போர்ப்படை வேந்தனே, எதிர்த்துப் பாய்ந்து வரும் வேலுக்கும் அஞ்சாத பாம்பு போல் சீறிப் பாயும் வலிமையுள்ள மள்ளர் குலப்போர் மறவரும் உள்ளனர் எம்நாட்டில்........(ஔவையார் சொன்னது)

களம் என்ற சொல்லிலிருந்தே களமர் என்ற சொல் தோன்றியது.
‘களமர் என்று பண்டைய காலத்தில் அழைக்கப்பட்டவர் ஏர்க்களம் மற்றும் போர்க்களம் போற்றிய ‘மள்ளரே. தற்காலத்தில் இருக்கக்கூடிய கள்ளர் கிடையாது.

நுங்கோ யார்என வினவின் எங்கோக்
களமர்க்கு அரித்த விளையல் வெங்கள்
யாமைப் புழுக்கின் காமம் வீட ஆரா
.............................  (புறநானூறு-212)

பொருள்: உழவர்க்கு என வடித்தெடுக்கப்பட்ட முதிர்ந்த விரும்பத்தக்க கள்ளை ஆமையின் இறைச்சியுடனே ஆசைதீர உழவர் உண்டு,.........

"
இருவர்சேனை மள்ளரும் மெதிர்ந்துகை கலந்தனர்.   "(திருவிளையாடற்புராணம்                                தண்ணீர்ப்பந்தல் வைத்த படலம்-செய்யுள் 14)

பொருள்: ......இரு மள்ள மன்னர்களின் சேனை மள்ளர்களும் (போர்க்களத்தில்) எதிர் எதிர் மோதிக் கலந்தனர்.

     பண்டைய காலத்தில் பள்ளருக்குத் துணையாக இருந்த 18 தொழில்மக்களில் பறையன் என்ற பிரிவு இல்லை. கிணையன் என்ற பிரிவே இருந்தது. கிணையனையே சிலர் கிணைப்பறையன் என்று சொல்லிக் கொள்கிறார்கள். பள்ளு மற்றும் பறை என்ற சாதிகள் பற்றிய குறிப்பு நாயக்கர் ஆட்சி காலத்தில் கல்வெட்டுக்களில் காணப்படுகிறது. அதேபோன்று, பள்ளர்சேரி என்பது பச்சேரி என்ற பெயரில் இருந்தது. பறைச்சேரியும் தனியே இருந்தது. இடைக்கால தமிழ் வேந்தர் ஆட்சியில் மற்ற சேரிகளுடன் பறைச்சேரியும் இருந்தது. ஆனால், பள்ளர் சேரி கிடையாது. பள்ளர்கள் குடும்பு ஆட்சிமுறையின் முக்கிய அங்கத்தினராக இருந்தார்கள்.

     'இந்திர ஆரத்தை' அணிபவர் தேவேந்திரகுலத்தைச் சார்ந்த மூவேந்தர் மட்டுமே. மற்ற யாரும் அணிதல் முறை கிடையாது.
கள்ளர், மறவர் மற்றும் அகமுடையார் பற்றி எட்கர் தர்ஸ்டன் என்ன சொன்னார் என்பது பற்றி ஏற்கனவே அதிகம் சொல்லியாகி விட்டது. தாங்கள் போர்க்குடியினர் என்று சொல்லிக்கொள்கின்ற கள்ளர் பற்றி V.V.R. தீட்சதர் கூறுவது:

    “கள்ளர் ஒரு கொள்ளைக் கூட்டம். அவர்கள் எந்த படைகளிலும் சேர்ந்து பயிற்சி பெற்ற போர்வீரர் அல்ல (V.V.R.Dikshidar. War in ancient India page 183-184)

‘தாய்மண் காக்க உதிரம் கொட்டியவர் போர்மறவரான மள்ளரே. இடைக்கால ஆட்சியில் அவர் கள்ளர் என்பதற்கு ஆதாரம் இல்லை. அதேபோல், ‘பலகூறு வீரமுடையான் கள்ளர் என்பதற்கும் ஆதாரம் இல்லை.
மற்ற செய்திகளான இராஜேந்திரசோழன் வடஇந்தியா முழுமைக்கும் படைஎடுத்துச் சென்று பல நாடுகளை வென்றதும், கஜினிமுகமது தென்தமிழகம் வந்து கொள்ளையடித்துச் சென்றதும் அனைவரும் தெரிந்த உண்மையே. இதில் கள்ளர் அரசபரம்பரை என்ற ஆதாரம் எதுவும் கிடையாது.

13 comments:

  1. யாவரும் ஏற்கும் வண்ணம் பண்டைய போர் மறவர்கள் யாவரும் பள்ளர் குடியினரே என்பதை ஆணித்தரமாக நிருபித்து விட்டீர்கள். இதை மறுக்க எவராலும் முடியாது. நன்றி.

    ReplyDelete
  2. உண்மையிலேயே உங்களுடைய பதில் / மறுப்புரை அற்புதமாகவும், ஆதாரப் பூர்வமாகவும் உள்ளது.

    ReplyDelete
  3. ‘அருந்திரல் வீரர்க்கும் பெருந்திரல் உழவர்க்கும்
    வருந் தகையதாக்கும் மள்ளர் எனும் பெயர்’ (திவாகர நிகண்டு)

    ‘செருமலை வீரரும் திண்ணியோரும் மருதநில
    மக்களும் மள்ளர் என்ப’ (பிங்கல நிகண்டு)

    இந்த அருந்திரல் வீரர் என்பதும்
    பெருந்திரல் உழவர் என்பதும் இரு வேறு வேறு மக்கள்.... என எனக்கு சந்தேகமா இருக்கு யாராவது தெளிவாக விளக்க முடியுமா தோழர்களே?

    ReplyDelete
  4. Santhegame illa correct than. Nalla muyarchi. Best of luck.

    ReplyDelete
  5. vaalga thalaiva............
    Thalaiva you are great..........

    Ranjith Mallar

    ReplyDelete
  6. எதற்காக உயர்ஜாதி இனத்தவர்கள் திருவள்ளுவர், ஔவையார் பறையர் இல்லை என்று கொக்கரிகின்றார்கள் ? ஒரு தலித் சான்றோனாக இருக்கக் கூடாதா? ஏண்டா நீங்க மட்டும்தான் எல்லாவற்றிலும் இருக்க வேண்டுமா? திருவள்ளுவர் பறையர் என்பதினால் தமிழகத்தில் அதிக அரசுப் பேருந்துகளில் திருக்குறளை புறக்கணித்து வருகின்றார்கள்.

    ReplyDelete
  7. திருவள்ளுவர், ஔவையார்,நந்தனார், கண்ணபநாறும் பறையர் தான், பறையர்கள் தீண்டத் தகாதவர்கள் என்று யார் சொன்னது. பறையன் என்பது போர்காலங்களில் பறை அறிவிக்கும் பாணர்கள் ஆவார்கள். அரசவைகளில் ராஜ தந்திரிகலாகவும் சித்தர்களாகவும், புலவர்களாகவும் இருந்தவர்கள் என்பதிற்கு கல்வெட்டுகள் சாட்சியங்கள் இருகின்றன. திருவள்ளுவர் என்பவர் வள்ளுவர் என்கின்ற எனதில் பிறந்தவர். இந்த வள்ளுவர் என்கின்ற இனம் பறையர்களின் ஒரு பிரிவு "வள்ளுவ பறையர்கள்", இவர்கள் குலத் தொழில் ஆரூடம்,ஜோதிடம், இலக்கணம், பாடல் எழுதுவது. காமராஜர் ஆட்சி காலத்தில் நாடார்,சானார் எனப்படுகின்ற தீண்ட தகாக இனத்தினர்கள் BC ஆக கன்வெர்ட் ஆனார்கள், வள்ளுவப் பறையர் கள் BC to SC களாக கன்வெர்ட் ஆனார்கள். மன்னர்கள் ஆட்சி காலத்தில் பள்ளர்களும்,பறையர்களும் தீண்டத் தகாத இனத்தை சார்ந்தவர்கள் களாக கருதப்படவில்லை. இந்திய திரையுலகிற்கு பெருமை தந்த இசை ஜானி இளையராஜா, இளையதளபதி ஜோசப் விஜய், நடிகர் ஜெய் , பார்த்தீபன், மியூசிக் டைரக்டர் தேவா,நேர்மையான அதிகாரிகளுக்கு எடுத்துக்காட்டாக வாழும் கிரானைட் குவாரி.சகாயம் அனைவரும் பறையர்களின் இனத்தினை சார்ந்தவர்கள்.

    ReplyDelete
    Replies
    1. நாடாருடைய வரலாறு தெரிந்த பேசுங்கா திருவிதாங்கூரில் நாடார் மட்டும் தாழ்த்தப்பட்ட மக்கள் இல்லை 18சாதி அதில் பறையரும் உண்டு காமராஜர் ஆட்சி காலத்தில் தான் MBC பட்டியல் உருவானதா??? ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் உருவாக்க பட்டது உண்மை என்ன என்று தெளிவாக தெரிந்தால் எழுதுங்கள் நண்பரே

      Delete
    2. இன்றைய பறையர்கள் மாடு உண்ணும் புலையர்கள் என அறியப்பட்டவர் கள்.தமிழ்மரபு உழவை அடிப்படையாக கட்டமைக்கப்பட்டது.உழவுக்கு உதவும் நண்பனாக காளை சிவனின் வாகனமாக வழங்கக்கூடியது.மாட்டுக்கு என்று ஒரு விழா எடுத்தவன் தமிழன்.அம்மாட்டை உண்ண மாட்டான்.மாடு உண்பவர் தமிழரே அல்ல.இராட்டிர கூடர்களின் படையில் வந்த பாணர் பறையர் தான் இங்கு களப்பிரராக பலரோடு வந்தவர்.தமிழரோடு கலந்தவர்.தமிழர் மரபணுவுக்கும் பறையருக்கும் சம்பந்தமே இல்லை

      Delete
  8. கண்டதேவி ஹிஜிரா கல்வெட்டு படியுங்கள் !

    ReplyDelete
  9. 89
    இழையணிப் பொலிந்த வேந்துகோட் டல்குல்
    மடவர லுண்கண் வாணுதல் விறலி
    பொருநரு முளரோநும் மகன்றலை நாட்டென
    வினவ லானாப் பொருபடை வேந்தே
    5 எறிகோ லஞ்சா வரவி னன்ன
    சிறுவன் மள்ளரு முளரே யதாஅன்று
    பொதுவிற் றூங்கும் விசியுறு தண்ணுமை
    வளிபொரு தெண்கண் கேட்பின்
    அதுபோ ரென்னு மென்னையு முளனே.

    திணையும் துறையும் அவை.

    அவனை அவர் பாடியது.

    (இ - ள்.) மணிக்கோவையாகியஅணியாற் பொலிந்த ஏந்திய பக்கத்தையுடைய அல்குலினையும்மடப்பத்தினையும் மையுண்ட கண்ணினையும் ஒளிதங்கியநுதலினையுமுடைய விறலி! என்னோடு பொருவாருமுளரோநும்முடைய பெரிய இடத்தினையுடைய நாட்டின்கண்ணெனஎன்னைக் கேட்டலமையாத செருச்செய்யுந் தானையையுடையவேந்தே! நீ போர்செய்யக் கருதுவையாயின், எம்முடையநாட்டின்கண்ணே அடிக்குங் கோலுக்கு அஞ்சாது எதிர்மண்டும்பாம்புபோன்ற இளைய வலியவீரருமுளர்: அதுவேயன்றி,மன்றின்கண் தூங்கும் பிணிப்புற்ற முழவினது காற்றெறிந்ததெளிந்த ஓசையையுடைய கண்ணின்கண் ஒலியைக்கேட்பின்,அது போர்ப்பறையென்று மகிழும் என்னுடைய தலைவனும்உளன்-எ - று.

    ‘தெண்கண்’ என்றது அதன்கண்ஓசையை.

    போரென்றது போர்ப்பறையை.

    (கு - ரை.) 2. “மடவரல் வள்ளி”(முருகு. 102); மடவரன் மகளிர்” (பெரும்பாண். 387)

    3. நாடு - இங்கே அதிகமானாடு.

    4. வினவலானா : புறநா. 70 : 5; “வினவலானாப் புனையிழை” (அகநா. 29 : 14)

    5-6. “அராவ ழன்ற தனையதன் னாற்றலால்”,“அரவியற் றறு கண்வன் றாளாள்”, “மூரி வெஞ்சிலையிராவண னராவென முனிந்தான்” (கம்ப. கரன்வதை.184, முதற்போர். 151, 239); கதையிற்றாக்கப் படுமர வென்னப்பொங்கி” (காஞ்சிப். பரசிராம. 31)

    8. வளி பொருதெண்கண் - காற்று அடித்தலால்தெள்ளிய கண்ணிலிருந்து உண்டாகிய ஓசை.

    7-8. புறநா. 138 : 2 - 3.

    9. புறநா. 31 ; 9, 279 : 7.

    அண்டபுளுகு ஆயிரம் கொண்டவரே பாரும் ஆரைவேக்காடு அம்பி

    ReplyDelete
  10. செம பதிலடி இதை மறுக்க முடியாது இந்த மறவர் என்ற கொள்ளை கூட்டம்

    ReplyDelete
  11. பள்ள தேவடியா மயனே பன்னை அடிமை புண்ட வரலாறு என்பது ஆதி மனிதன் வாழ்ந்து வந்தது உன் இஸ்ட்ட புண்டைக்கி எழுதி கொள்வது இல்லை

    ReplyDelete