Saturday, December 15, 2012

மதுரைத் தெப்பத் திருவிழா தலைவன் யார்?

      (குறிப்பு: கீழே உள்ள கருத்து (கள்ளர் திரு.மேகநாதன் எழுதியது & குமரன் சுப்பையா) மதுரை மீனாட்சி கோயிலில் பள்ளர்களுக்கு உள்ள பரிவட்ட முறையையும், தெப்பத் திருவிழாவின் வரலாறையும்  விமர்சித்து மிகவும் நாகரிகமான(?) முறையில் எழுதப்பட்டது. அவருடைய கருத்துக்கு எமது பதில் மறுப்பை இங்கே யாம் பதிவு செய்துள்ளோம்.)


      @மேகநாதன் முக்குலத்து புலி (said):
-----------------------------------------------------------------

   பதினேழாம் நூற்றாண்டில் தான் மாரியம்மன் தெப்பக்குளம் அமைக்கப்பட்டது அதுவும் குளமாக வடிவமைக்கப்படவில்லை. திருமலை நாயக்கன் புதிய கோட்டை அமைப்பதற்க்கு தேவையான மண் எடுப்பதற்காக தோண்டப்பட்ட பள்ளம். மதுரை நகரில் இருந்து தொலைவில் இருந்த பகுதியில் இப்பள்ளம் தோண்டப்பட்டது.(இப்போதே அது ஊருக்கு ஒதுக்குபுறமாக உள்ளது) கோட்டை அமைத்த பிறகும் பல ஆண்டுகளாக இப்பள்ளம் அப்படியே இருந்தது... ....எப்பொழுதும் மன்னர்கள் புதிய திட்டங்களை ஆரம்பிக்கும் முன் பலியிடுவது வழக்கம்(சில விஷயங்கள் வரலாற்றில் எழுதப்படாது)...எனவே அப்போதும் பலியிடல் நடந்தது உண்மை...பிறகு அஸ்திவாரம் மட்டும் அமைக்கப்பட்ட கட்டிடமும், ஆழ தோண்டபட்ட பள்ளங்களும் அரசனுக்கு மட்டும் அல்ல குடிகளுக்கே உகந்தது அல்ல என்பது மன்னனுக்கு உரைக்கப்பட்டு பள்ளத்தில் நீர் நிரப்பும் கால்வாய்கள் அமைக்கப்பட்டன..இப்போதும் அப்போதும் எப்போதும் தெப்பக்குளம் அருகில் உள்ள அனுப்பனாடி பள்ளர்கள் வாழும் சேரி...தமிழர்களின் வழிபாடு முறையில் நீரில் சாமி இறங்கும் போதும், குதிரையில் சாமி செல்லும் பொதும் எதிரே கெட்ட சக்திகள் எதிர்படும் என்பது காலம் காலமாக இருந்து வரும் நம்பிக்கை ...எனவே தான் எல்லா சாமி ஊர்வலங்களிலும் முன்னே பறையர்கள் பறையடித்து செல்வதும் வழக்கம் .எனவே கெட்ட சக்திகள் எதிர்பட்டாலும் இந்த நல்ல சக்திகளை ( போனா பரவாயில்லை ) அழிக்கட்டும் என கடை பிடிக்க பட்ட முறைகள்.அதுபோன்ற பலியிடுதல் தான் இந்த பழக்கம்.ஆனாலும் இவனுக சொல்றது போல மரியாதை எல்லாம் இல்லை...கரையில் பள்ள இனத்தவன் நிற்பான் ...அவனை குளத்திற்குள் இறக்கி விடுவார்கள் அவன் திரும்பி வந்தால் ஒரு மாலை ஒரு தேங்காய் ஒரு வெத்தலை குடுத்து போயிட்டு வாடா தம்பின்னு அனுப்பிருவாங்க ( பலியாட்டுக்கு மஞ்ச தண்ணி ஊத்துரோம்ல ).கவனிக்க இந்த தெப்ப திருவிழாவில் பறையடிக்க படுவதில்லை அதுதான் கெட்ட சக்திகள் எதிர்படுதானு இவனுகள வச்சு சோதன பண்ணிறோம்ல. காலை இரு முறை சாமி தெப்பத்தில் வரும்.(டெஸ்டிங் லாம் முடுஞ்சுரும் ) மாலை ஒரு முறை சாமி ஊர்வலம் வரும்.அப்போது தான் மன்னர் கலந்து கொள்வார்.ஒவ்வொரு ஜனவரி பிப்ரவரிக்கு இடைப்பட்ட சித்ரா பவுர்ணமில இது நடக்கும் .மீனாட்சி அம்மன் கோவிலுக்கும் இந்த தெப்பகுளத்துக்கும் 5 கிலோமீட்டர் தூரம் இருக்கும் ...மதுரை மக்கள் இந்த குளத்தை வண்டியூர் மாரியம்மன் தெப்பகுளம் என்று தான் சொல்வார்கள் ....உங்க முகரைல முள்ள வெட்டி சாத்த மீனாட்சி அம்மன் கோவிலுக்கும் மாரியம்மன் கோவில் தெப்ப குளத்துக்கும் என்னடா சம்பந்தம் .....

இந்தப்பின்னூட்டத்தை எழுதிய பதருக்கு மள்ளரின் மறுப்புரை:
இதில் சொல்லப்பட்ட இரண்டு முட்டாள்தனமான செய்திகள்
1.விழா நடப்பதற்கு முன்பு பலியிடுதல் என்று சொல்வது
2.பறை அடிப்பது தீய சக்தியை விரட்ட என்று சொல்வது
     இந்த தெப்பத் திருவிழாவில் பலியிடுதலை உறுதிபடுத்தக்கூடிய நிகழ்வோ, கெட்ட ஆவியை தடுக்கும் பொருட்டு முன்னால் செல்லக்கூடிய நிகழ்வோ எதுவும் நடைபெறுவது இல்லை. இது பரிவட்டம் கட்டி முதல்மரியாதை செய்யும் நிகழ்வு மட்டுமே. அது எதற்கு என்பது கீழே விளக்கப்பட்டுள்ளது. பரிவட்டம் கட்டி முதல்மரியாதை செய்தலை பலியிடுதல் என்று ஒருவர் சொன்னால், அதைச் சொல்பவர் உண்மையில் மனநிலை பாதிக்கப்பட்டவர் என்றுதான் அர்த்தம்!
     பறை அடித்தல் என்பது பண்டைய தமிழ் சமூகத்தில் தமிழ்மூத்தகுடியான பள்ளனை மகிழ்வூட்டும் பொருட்டு அடிக்கப்பட்ட இசை எழுப்புதலே ஆகும். இப்படி பலவிதத்தில் மகிழ்விக்கப்பட்ட பள்ளனே சங்க இலக்கியங்களில் ‘மகிழ்நன்என்றும் அழைக்கப்படுகிறான். இது சங்க இலக்கியம் படித்தவருக்குப் புரியும். சரி, பறை ஏன் கோயில் திருவிழாவின்போது அடிக்கப்படுகிறது? புரியவில்லையா? இன்று தமிழ்கடவுள் என்று காட்டப்படுகின்ற அனைத்தும், முன்னால் தமிழ்த் தலைகுடியான பள்ளனே. முன்னோர் வழிபாடு என்பதுதான் தமிழர் வழிபாட்டுமுறை. அதனால்தான் பள்ளன் சாமி ஆடுவதும் அதற்கு அருளூட்ட பறை ஒலி எழுப்புதலும். அப்போது அனைத்தும் மக்களும், பள்ளன் சாமி ஆடும்போது கும்பிட்டு விழுந்து திருநீர் பெறும் வழக்கமாக இருக்கிறது. அதனடிப்படையில்தான் அனைத்துக் கோயில்களிலும் பள்ளனுக்கே முதல்மரியாதை. சொக்கநாதர் முன்னால் பாண்டிய மன்னனான சுந்தரேசுவரபாண்டிய பள்ளன். அவனது ‘பள்ளிப்படை கோயிலே மதுரையில் உள்ள மீனாட்சியம்மன் கோயிலில் உள்ள லிங்கம். மீனாட்சி என்பது முன்னால் பாண்டிய அரசியான ‘தடாதகை மள்ளத்தியார் இவரது வம்சாவழியினரான பள்ளர்கள் இன்னும் மதுரைப் பக்கத்தில் இருக்கிறார்கள். (காண்க: மதுரை வரலாறு)

மதுரை தெப்பத் திருவிழா மற்றும் கதிர் அறுப்பு விழாவின் வரலாற்று சுருக்கம்:
    "மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் தை மாதத்தில், தை பூசத்திற்கு முதல்நாள் கதிர் அறுப்புத் திருவிழா நடக்கிறது. இதற்காக பள்ளனான சுந்தரேசுவரரும், பள்ளத்தியான தடாதகைப் பிராட்டியும் மீனாட்சி அம்மன் கோயிலிருந்து புறப்பட்டு அனுப்பானடிக்கு அருகே மருதநிலப் பகுதியான சிந்தாமணி (முன்பு இது வயல்பகுதியாக இருந்த இடம். இப்போது இப்பகுதியில் அதிக கட்டிடங்கள் உருவாகிவிட்டன) என்ற பகுதிக்கு வருகை தருகிறார்கள். இந்த நிலப்பகுதியானது ‘கிருதுமால் என்ற ஆற்றின் கரையில் இருந்தது. தற்காலத்தில் இந்த ஆறு மறைந்துவிட்ட நிலையில், மதுரையின் உட்பகுதியில் மட்டும் இந்த ஆற்றின் சில பகுதிகள் இன்றும் உள்ளது. சிந்தாமணி என்ற பகுதியில் வைகை நதியின் கிளைநதியான இந்த கிருதுமால் நதியின் முதல் மடை அமைந்துள்ளது. அதன் வழியாக வரும் நீரில் விளைந்த நெல்லை அறுவடை செய்யும் நிகழ்வே விழாவாகிறது. 

    மீனாட்சி அறுவடை செய்யும் வயல் அனுப்பானடியைச் சேர்ந்த மடைவாரியர் குடும்பத்திற்கு மீனாட்சி அம்மன் கோயிலில் இருந்து கொடுக்கப்பட்டது. இந்த வயலை மடைவாரியர் குடும்பத்தினர் பராமரித்து வருவது தொன்றுதொட்டு வந்த வழக்கம். மடைவாரியர் என்பது நெல் நாகரிக மக்களில் கண்மாய்ப் பாசனத்தை நிர்வகிக்கும் பள்ளனுக்குரிய பெயர் ஆகும். கிருதுமால் நதியைப் பற்றி இங்கு வாழ்ந்த முன்னோர்கள் குறிப்பிடுகையில், ‘நதியின் குறுக்கே மிருகங்கள்கூட கடந்து செல்லமுடியாத அளவிற்கு ஆழமாகவும், அகலமாகவும் இருந்தது என்று குறிப்பிடுகிறார்கள். தற்காலத்தில் அந்த இடத்தில் சுத்தம் செய்து தண்ணீர் ஊற்றி வயலாக மாற்றுகின்றனர். வேறு இடத்தில் இருந்து எடுத்து வந்த விளைந்த நெல் கதிரை தற்காலிமாக உருவாக்கப்பட்ட அந்த இடத்தில் நட்டு வைக்கிறார்கள். பின்பு மீனாட்சி அம்மன் கதிர் அறுக்கும் சடங்கு நடைபெறுகிறது. அந்த விழாவில் கோயில் குருக்கள் கதிர் அறுக்கும் அரிவாளுடன் தற்காலிக வயலில் கதிர் அறுப்பு நிகழ்வு நடக்கும் (ஏன் மீனாட்சி கதிர் அறுக்கவில்லை என்று அதி புத்திசாலித் தனமாக கேட்கக்கூடாது). பிறகு, மாரியம்மன் கோயில் அருகேயுள்ள வண்டியூர் தெப்பக்குளத்திற்கு (உண்மை) மீனாட்சியும், சுந்தரேசுவரரும் கதிரறுப்புத் திருவிழா முடிந்து, தெப்பத்தில் அமர்ந்து உழவின் வெற்றியை அடையாளப்படுத்தும் விதமாக மக்களுக்கு காட்சி அளிக்க வருகிறார்கள். இது ஒவ்வொரு ஆண்டும் தைப்பூசத்தன்று நடைபெருகிறது (ஏன் மற்ற மாதத்தில் நடத்தக்கூடாது என்று அதி மேதாவித் தனமாக கேட்கக் கூடாது). 

     இந்த தெப்பவிழாவில் அனுப்பானடிக் கிராமத்தில் வசிக்கும் பூர்வீகக் குடிகளான பள்ளர்களுக்கே வடம்தொட்டுக் கொடுக்கவும், வெள்ளை வீசி தெப்பத் திருவிழாவைத் துவக்கி வைக்கும் உரிமையும் தரப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சிக்கு அனுப்பானடியைச் சேர்ந்த ஊர்க்குடும்பனார் தன் இல்லத்திலிருந்து புறப்பட்டு மாரியம்மன் கோயில் சென்று வணங்கி ஊர்வலமாகத் தெப்பத்திற்கு வருகிறார். தெப்பக்குளத்தில் மீனாட்சியம்மன் கோயில் அறங்காவல்துறை அதிகாரிகள் மற்றும் அரசு உயர் அதிகாரிகள் இவரை வரவேற்கிறார்கள். பின்பு மீனாட்சியம்மன் கோயில் குருக்கள் அனுப்பானடி ஊர்க்குடும்பனாருக்கு மாலை அணிவித்து, நெற்றியில் திலகமிட்டு பின்பு பரிவட்டம் கட்டி, தெப்பத்திருவிழாவைத் துவக்கி வைக்க வேண்டுகிறார். அதன்பின் அனுப்பானடிக் குடும்பனார் தெப்பத்தின் வடத்தைத் தொட்டு வணங்கி, வெள்ளை வீசத் தெப்பத் திருவிழா தொடங்குகிறது. தெப்பத்தின் வெளி வடத்தை அனுப்பானடி மள்ளர்களும் மற்றும் பொதுமக்களும், உள்வடத்தை அனுப்பானடி மள்ளர்கள் மட்டுமே வடம்பிடிக்கும் உரிமை உள்ளது. பின்பு காலை இருமுறையும் மாலை ஒரு முறையும் தெப்பம் வலம் வருகிறது. அதன்பின்பு சுந்தரேசுவர பள்ளரும், மீனாட்சி மள்ளத்தியும் தங்களுடைய வாகனத்தில் வந்து அமர்கிறார்கள். இந்த பெரிய தெப்பமானது 17 ஆம் நூற்றாண்டில் வெட்டப்பட்டது என்பது உண்மையே. அதற்கு முன்பு இதே சடங்குகள் கிருதுமால் நதியில் நடத்தப்பட்டது. இந்தக் குளம் உண்டான பிறகு இங்கு நடத்தப்படுகிறது."
இப்போது 'மேகநாதன் முக்குலத்து புலி & குமரன் சுப்பையா' என்ற பதர்களிடம் மள்ளர்கள் கேட்க விரும்பும் கேள்விகள்.
1. இந்தக் கதிர் அறுப்புத் திருவிழாவில் பலியிடல் சம்பவத்தை எங்கே கண்டாய்?
2. தெப்பத் திருவிழா என்பது கழனிப் பக்கமுள்ள நீர் நிலையில் நடக்காமல் குடியிருக்கும் வீட்டிற்குள் நடக்குமா? அதுமட்டுமல்ல மீனாட்சியம்மன் கோயில் என்பது சுந்தரேசுவரப் பள்ளனைப் பள்ளிப்படுத்திய இடம். (பெரும்பாலான லிங்கம் உள்ள சிவன் கோயில் அனைத்தும் மள்ள அரசர்களைப் பள்ளிப்படுத்திய இடமே). இதில் வயல் உள்ள பகுதி 5 கி.மீ இருந்தால் என்ன? 10 கி.மீ இருந்தால் என்ன? இதில் என்ன புதுமையை நீ கண்டு விட்டாய்?
3. தெப்பக்குளம் வண்டியூர் மாரியம்மன் தெப்பக்குளம்தான். இல்லை என்று உன்னிடம் யார் சொன்னது? அதனால் நீ என்ன கண்டாய்? 
4. இதேபோன்று திருப்பரங்குன்றம் கோயிலில் மாடக்குளம் ஊர்க்குடும்பனாருக்கு பரிவட்டம் கட்டி, முதல்மரியாதை செய்யப்படுகிறது. அங்கே எந்தக் குளத்தை வெட்டி அதனால் கெட்ட ஆவி வந்து அதைத் தடுக்க பள்ளனை அனுப்புகிறார்கள்? மேலும், முருகன், தெய்வானை திருமணம் முடிந்து மறுவீட்டு அழைப்பாக பள்ளரின் மடத்திற்கு அழைத்து வரப்படுகிறார்களே! அது கூட நீ சொன்ன காரணத்திற்காக இருக்குமோ? இருந்தாலும் இருக்கும்! பதரே ..பதரே! :-)
5. இதேபோன்று தமிழ்நாட்டின் வேறு இனத்தார் சிலரது குலதெய்வக்கோயிலில் அவர்களுக்கு பரிவட்டம் கட்டி முதல்மரியாதை செய்து கொள்கிறார்களே அதுகூட நீ சொன்ன அதே காரணம்தானோ?
6. இந்தத் தெப்பத்திருவிழாவானது பள்ளனும், பள்ளத்தியும் கதிர் அறுத்து அதன் வெற்றியைக் கொண்டாடும் விழா(தைத் திருவிழா) என்பது உனக்கு இன்னும் புரியவில்லையா? இதில் மன்னனான விழா தலைவன் இருக்கும்போது வேறு மன்னர் இங்கே வர என்ன தேவை இருக்கிறது?
திரும்பவும் சொல்றேன் புலி என்று பெயர் வைத்துக் கொண்டு இப்படி எல்லாம் தெரிஞ்ச பு**கி மாதிரி பேசும் பதரே! உன் புத்தியை எங்கே அடகு வச்சே?


5 comments:

  1. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
  2. நெத்தியடி பதில். கள்ளன்கள் பள்ளரின் வரலாற்றை திருடுவதிலே தீவிரமாய் இருக்கிறார்கள்.

    ReplyDelete
  3. அருமையான பதிவு

    ReplyDelete
  4. மிக சிறப்பான பதிவு

    ReplyDelete
  5. மிக சிறப்பான பதிவு

    ReplyDelete