Wednesday, October 31, 2012

சோழர்களின் வம்சம்? கட்டுரைக்கு மறுப்புரை:


மூலக் கட்டுரை

சோழர்களின் வம்சம்? கட்டுரைக்கு மறுப்புரை:
யார் இந்தக்கட்டுரையின் ஆசிரியர்?. முதலில் இந்தக் கட்டுரையின் ஆசிரியர் குறிப்பது போல், இது உண்மையில் ஒரு சார்பான உணர்ச்சிக்கு அப்பாற்பட்டு, அறிவியல் பூர்வமாக எழுதப்பட்ட கட்டுரை இல்லை என்பதை இதைப் படிப்பவர் அனைவரும் எளிதாக உணர்ந்து கொள்ள முடியும்.
சோழர் வம்சத்தைக் காண சோழகனார், சோழகங்கன் மற்றும் சோழங்கன் என்ற பட்டம் இருந்தால் போதும் என்றும், அந்தப் பட்டத்தைத் தற்போது(?) கொண்டுள்ளதால் கள்ளர் மற்றும் வன்னியர் போன்ற இனத்தாருக்கே சோழ வம்சத்தாராக இருக்க வாய்ப்பு வலுவாக உள்ளதாக கட்டுரையாளர் கண்டுபிடித்துள்ளார். என்ன ஒரு அரிய கண்டுபிடிப்பு!
நான் கேட்பது என்னவெனில், தற்காலத்தில் ‘சோழர்’ என்பது போன்ற பட்டப்பெயர் வைத்துக் கொண்டால் அவர்கள் சோழ வம்சத்தார் என்று முடிவு கொள்வது சரியாகுமா? இது பெரிய முட்டாள்தனமாக தெரியவில்லையா? ஒரு வேளை சோழர்கள் ஆட்சிக்காலத்தில் கள்ளர், வன்னியர்களுக்கு இந்தக்குடிப் பெயர்கள் இருந்திருந்தால், அதற்கான ஆதாரம் கல்வெட்டுக்களில் காணப்பட்டிருந்தால் நாம் அவர்களை சோழ வம்சத்தார் என்று ஏற்றுக்கொள்ள முடியும். ஆனால், கள்ளர் மற்றும் வன்னியர் போன்ற இனத்திற்கு சோழர்கள் ஆட்சிக் காலத்தில் ‘சோழர்’ போன்ற பெயர்கள் இருந்ததற்கான கல்வெட்டுச் செய்தி உறுதியாக இல்லை. தற்காலத்தில்(?) அவர்கள் ‘சோழங்கன்’ போன்ற பட்டங்கள் வைத்துள்ளனர். இதை வைத்து அவர்கள்தான் சோழ வம்சத்தார் என்று சொல்வது அறிவார்த்தமான முடிவாக இல்லை என்பதே உண்மை.
முதலில் ‘சோழ’ என்ற சொல்லானது சோறு மற்றும் நெல்லைக் குறிக்கும் வேர்ச் சொல் என்பதை தெரிந்து கொள்ள வேண்டும். எனவே, சோழன் என்பவன் அந்த நெல்லுக்குரிய, நெல் நாகரிகத்தின் பண்பாட்டுக்குறி என்பதை இதன்மூலம் உணர்ந்து கொள்ள முடியும். அப்படியெனில், நெல் நாகரிகத்து மக்கள் என்ற வகையில் மள்ளர் என்றும், தற்காலத்தில் பள்ளர் என்றும் அழைக்கக் கூடிய மக்களே ‘சோழர்கள்’ என்பது சொல்லாமலே விளங்கும். ஏன் மற்ற இனத்தவர் நெல் நாகரிக மக்களாக இருக்கக் கூடாது? இந்தக் கேள்வி எல்லோர் மனதிலும் எழுவது இயற்கையே. தற்காலத்தில் பல இனத்தார் நெல்விவசாயம் செய்கிறார்கள். ஆனால், இரண்டாயிரம் ஆண்டுக்கு முன்புவரை மள்ளர்களே நெல் விவசாயம் செய்தார்கள். தற்காலத்தில், மற்ற இனத்தார் விவசாயம் கற்றுக் கொண்டபோதும், பள்ளர் இனமக்களே தங்களது குலத்தொழிலை விடாமல் போற்றி வருகின்றனர். சரி, பள்ளர் என்ற பெயர் எப்படி வந்தது? எப்படி உயர்ந்த விவசாயத் தொழிலைச் செய்யும் பள்ளர்கள் சமூகத்தில் கீழே கொண்டு செல்லப்பட்டார்கள்? என்று கேட்டால், அதற்கு ’பள்ளர்கள் பள்ளமான வயலில் நெல்விவசாயம் செய்ததால் பள்ளர்கள் ஆனார்கள். அதனால், சேற்றில் கால் வைத்ததால் இவர்கள் தாழ்’த்தப்பட்டவர்கள் என்று சொல்கிறார்கள். இதன்மூலம் தெரியவில்லையா?, பள்ளர்கள்தான் நெல் நாகரிக மக்கள் என்று.
தேவேந்திரகுல வேளாளர்களைக் குறிப்பிடும்போது, ‘அவர்கள் மள்ளர் அல்லது பள்ளர் என்ற பட்டம் வைத்துக் கொண்டு சோழர் என்கிறார்கள்’ என்று இந்தக் கட்டுரையாளர் குறிப்பிடுகிறார். மள்ளர் மற்றும் பள்ளர் என்பது பட்டப் பெயர் இல்லை. அது ஒரு இனத்தைக் குறிக்கும் மரபுப்பெயர். வன்னியர் என்பது தேவர் போன்று பட்டப்பெயர். இந்த, வன்னியர் பட்டம் கள்ளர்களும் வைத்துக் கொண்டுள்ளனர். உண்மையில் சொல்லப்போனால் தற்காலத்தில்(?) தஞ்சைக் கள்ளர்கள் வைத்துக் கொள்ளாத பட்டமே(?) இல்லை.
தற்காலத்தில் மட்டுமே கள்ளர் மற்றும் வன்னியர் போன்றோர் ‘சோழ’ போன்ற சொற்களை பட்டமாகக் கொண்டுள்ளனர். அது எதற்கு என்பது நமக்குத் தெரியாதா! சோழர்கள் ஆட்சிக் காலத்தில் இந்த இனத்தார்கள் இந்தக் குடிப் பெயர் கொண்டதற்கு எந்தக் கல்வெட்டுச் செய்தியும் உறுதியாக இல்லை. ஆனால், பள்ளர்களுக்கு சோழர்களின் ஆட்சிக் காலத்திலேயே இந்தப் பெயர்கள் இருந்துள்ளது. அதை இவர் வசதியாக மறைத்துள்ளார்.
மள்ளர் என்ற பள்ளர்கள், சோழர் ஆட்சி காலத்திலேயே ‘சோழன்’ என்ற பெயர் கொண்டதற்கு கல்வெட்டு ஆதாரம்:
1.கோயமுத்தூர்,பேரூர் பட்டீஸ்வரர் கோயில்கல்வெட்டு.. (தெ.க.5/240) பட்டீஸ்வரர் கோயிலுக்கு நந்தவனம் எற்படுத்திக் கொடுத்த குடும்பர்
‘தென்வழிநாட்டு ஏழூர் ஊராளி தென் குடும்பரில் சிங்கன் சோழனான அணுத்திரப்பல்லவரையன்’
இங்கு குடும்பன் என்பது பள்ளரைக் குறிக்கும். அணுத்திரன் என்றால் தேவேந்திரன்.
2.திண்டுக்கல் மாவட்டம் கீரனூர் கல்வெட்டு (தெ.க.5/278) கோயிலுக்கு நிலம் கொடை அளித்தவர்” ‘குடும்பரில் சுந்தன் அதிசய சோழனான குலோத்துங்கச் சோழ இருங்கோளர்
இதுபோன்று நூற்றுக்கணக்கான ஆதாரங்கள் மள்ளர் என்ற பள்ளர்களுக்கு உள்ளது. அதை வசதியாக மறைத்து விட்டார், இந்த நல்லவர்!
இதுமட்டும் கிடையாது. இராசராச சோழன் மற்றும் இராசேந்திர சோழன் ஆட்சியின் போதுதான் அதாவது கி.பி 9 மற்றும் 10 நூற்றாண்டு காலத்தில்தான்
‘அருந்திரல் வீரர்க்கும்,பெருந்திரல் உழவர்க்கும்
வருந்தகையதாக்கும் மள்ளர் எனும் பெயர்’ (திவாகர நிகண்டு)
‘செருமலை வீரரும்,திண்ணியோரும் மருதநில  
மக்களும் மள்ளர் என்ப” (பிங்கல நிகண்டு)              
அதாவது, மிகச்சிறந்த வீரன், மிகச்சிறந்த உழவன் மற்றும் மருதநிலத்தான் என்பவன் மள்ளனே என்று அருதிட்டுக் கூறப்பட்டது. இதன்மூலம் மற்ற இனத்தவர் மன்னர் மற்றும் உழவன் இல்லை என்பதாகிறது! மள்ளர் என்றாலே மன்னர் என்றுதானே அர்த்தம். தற்காலத்தில் சோழர் என்ற பட்டப்பெயரை தங்களது பெயருக்குப் பின்னால் போட்டுக் கொண்டதால் அவர்கள் சோழ வம்சத்தவர் ஆகி விட்டனர் என்று சொன்னால்,இந்த முட்டாள்தனத்தை யாரிடம் சொல்வது. பிச்சாவரம் சமீன் சூரப்ப சோழகனாரை சோழ வம்சத்தவர் என்று எப்படி சொல்ல முடிகிறது? உண்மையில், சூரப்ப சோழகனார் தெலுங்கு பாளையத்துக்காரன் வாரிசு.’ சோழகனார்’ என்ற பட்டத்தை வைத்துக்கொண்டால்,அவர் ‘சோழ வாரிசு’ஆகி விடுவாரா?
சோழர்கள் ‘களப’ என்று பெயருக்கு முன்னால் போற்றுக் கொண்டார்கள் என்று சொல்லி, அவர்கள் கள்ளர் இனத்தவர் என்கிறார்! அய்யா சோழர் மன்னர் ஒருவர் ‘களப’ என்ற சொல்லை பெயருக்கு முன்னால் போட்டுக் கொண்டார். அப்படிஎனில், அவர் கள்ளர் இனத்தவர் என்று அர்த்தம் கிடையாது.’களப’ என்றால் ‘யானைக்கன்று’ என்று அர்த்தப்படுத்திக் கொள்ளத்தான். பொதுவாகவே சோழர்கள் ‘ராஜசிங்கம்’ மற்றும் ‘யானைக்கன்று’ என்று தங்களை பெருமையாக அழைத்துக் கொள்வார்கள். அதற்காகத்தான் இந்த ‘ராஜகேசரி’ மற்றும் ‘களப’ போன்ற சொற்களை பெயருக்கு முன்னால் போட்டுக் கொள்வது. தனது இனத்தைக் குறிக்க அல்ல. இதற்குப் பிறகும் கண்ட இனத்தவர்களை ‘சோழர் வம்சம்’ என்று சொல்வதை நிறுத்திக்கொள்ள புத்தி வருமா?.
                         ---சுந்தரலிங்க குடும்பன்---


45 comments:

  1. தாராபுரத்தை தலைநகராக கொண்டு ஆண்ட கொங்கு சோழர்கள் ஆட்சிகுட்பட்ட பகுதியில் வன்னியர் கள்ளர் போன்ற சாதிகளுக்கு பூர்குடி உண்டா? ஆனால் பாலக்காடு, நீலாம்பூர் வரை பண்ணாடிகள் உள்ளனர். மேலும் கரூர் மாவட்டம் நெரூர் அக்னிசுவரர் கோயிலில் உள்ள குஞ்சர மல்லனின் கல்வெட்டை பார்க்கட்டும் பின்னர் தெரியும் யார் சோழ வமிசம் என்று

    ReplyDelete
    Replies
    1. வில்லவர் மற்றும் பாணர்

      நாகர்களுக்கு எதிராக போர்
      __________________________________________

      கலித்தொகை என்ற ஒரு பண்டைய தமிழ் இலக்கியம் நாகர்களுக்கும் வில்லவர் -மீனவர்களின் ஒருங்கிணைந்த படைகளுக்கும் இடையே நடந்த ஒரு பெரிய போரை விவரிக்கிறது. அந்தப் போரில் வில்லவர்-மீனவர் தோற்கடிக்கப்பட்டு நாகர்கள் மத்திய இந்தியாவை ஆக்கிரமித்தனர்.

      நாகர்களின் தெற்கு நோக்கி இடம்பெயர்வு

      நாகர்களின் பல்வேறு குலங்கள் தென்னிந்தியா மற்றும் ஸ்ரீலங்காவுக்கு குறிப்பாக கடலோர பகுதிகளுக்கு குடிபெயர்ந்தனர்.

      1. வருணகுலத்தோர் (கரவே)
      2. குகன்குலத்தோர் (மறவர், முற்குகர், சிங்களர்)
      3. கவுரவகுலத்தோர் (கரையர்)
      4. பரதவர்
      5. களப்பிரர்கள் (கள்ளர், களப்பாளர், வெள்ளாளர்)
      6. அஹிச்சத்ரம் நாகர்கள்(நாயர்)

      இந்த நாகர்கள் வில்லவர்களின் முக்கிய எதிரிகள் ஆவர். நாகர்கள் டெல்லி சுல்தானேட், விஜயநகர நாயக்கர்கள் மற்றும் ஐரோப்பியர்கள் காலனித்துவ ஆட்சியாளர்களுடன் கூடி பக்கபலமாக இருந்து வில்லவர்களை எதிர்த்தனர், இது வில்லவர் வீழ்ச்சிக்கு வழிவகுத்தது.

      கர்நாடகாவின் பாணர்களின் பகை
      _________________________________________

      பொதுவான தோற்றம் இருந்தபோதிலும் கர்நாடகாவின் பாணர்கள் வில்லவர்களுக்கு எதிரிகளாயிருந்தனர்.

      கி.பி 1120 இல் கேரளாவை துளுநாடு ஆளுப அரசு பாண்டியன் இராச்சியத்தைச் சேர்ந்த பாணப்பெருமாள் அராபியர்களின் உதவியுடன் ஆக்கிரமித்தார்.

      கி.பி 1377 இல் பலிஜா நாயக்கர்கள் தமிழ்நாட்டை ஆக்கிரமித்தனர். வில்லவரின் சேர சோழ பாண்டியன் இராச்சியங்கள் விஜயநகர சாம்ராஜ்யத்தின் பலிஜா நாயக்கர்களால் (பாணாஜிகா, ஐந்நூற்றுவர் வளஞ்சியர் என்னும் மகாபலி பாணரின் சந்ததியினர்) அழிக்கப்பட்டன.

      வில்லவர்களின் முடிவு

      1310 இல் மாலிக் காபூரின் படையெடுப்பு பாண்டிய வம்சத்தின் தோல்விக்கு வழிவகுத்தது. வில்லவர்கள் படுகொலை செய்யப்பட்டனர், மேலும் மூன்று தமிழ் ராஜ்யங்களும் முடிவுக்கு வந்தன.

      கர்நாடகாவின் பாண்டியன் ராஜ்யங்கள்
      __________________________________________

      கர்நாடகாவில் பல பாணப்பாண்டியன் ராஜ்யங்கள் இருந்தன

      1. ஆலுபா பாண்டியன் இராச்சியம்
      2. உச்சாங்கி பாண்டியன் இராச்சியம்
      3. சான்றாரா பாண்டியன் இராச்சியம்
      4. நூறும்பாடா பாண்டியன் இராச்சியம்.

      கர்நாடக பாண்டியர்கள் குலசேகர பட்டத்தையும் பயன்படுத்தினர். நாடாவா, நாடாவரு, நாடோர், பில்லவா, சான்றாரா பட்டங்களையும் கொண்டவர்கள்.

      ஆந்திரபிரதேச பாணர்கள்

      ஆந்திராவின் பாண ராஜ்யங்கள்

      1. பாண இராச்சியம்
      2. விஜயநகர இராச்சியம்.

      பலிஜா, வாணாதிராஜா, வாணாதிராயர், வன்னியர், கவரா, சமரகோலாகலன் என்பவை வடுக பாணர்களின் பட்டங்களாகும்.

      பாண வம்சத்தின் கொடிகள்
      _________________________________________

      முற்காலம்
      1. இரட்டை மீன்
      2. வில்-அம்பு

      பிற்காலம்
      1. காளைக்கொடி
      2. வானரக்கொடி
      3. சங்கு
      4. சக்கரம்
      5. கழுகு

      திருவிதாங்கூர் மன்னர்கள் சங்கு முத்திரையுடன் ஒரு கொடியைப் பயன்படுத்தினர். ஏனென்றால், அவர்கள் கர்நாடகாவின் துளுநாட்டில் ஆலுபா வம்சத்தைச் சேர்ந்தவர்கள். சேதுபதி அனுமன் சின்னத்துடன் ஒரு கொடியைப் பயன்படுத்தினார். அதற்கு காரணம் அவர் பாண - கலிங்க வாணாதிராயர் ஆவார்.

      Delete
  2. வன்னியர் என்ற சொல் தமிழ்நாட்டில் எந்தொரு இலக்கியத்திலும்(பிற்கால இலக்கியங்கள் அல்ல) இல்லை .அது தமிழீழத்தில் பயன்படுத்தப்பட்ட சொல் . இதற்கு ஒப்பான சொல் "" உழைப்பாளி "" என்பதாகும் . வன்னியர்கள் கொங்கு மள்ளர் வம்சத்தை சேர்த்தவர்கள் .ஈழத்தை பண்டாரவன்னியன் ஆண்டமையால் இப்பெயர் வந்தது . மேலும்
    வன்னியர்கள் , உடையார்கள் மற்றும் மறவர்கள் தங்களது வரலாற்றை மறுபரிசிலனை செய்யவேண்டும் !! இல்லையென்றால் கயவர்கள் தங்கள் போக்கிற்கு வரலாற்றை எழுதிவிடுவார்கள் ..

    ReplyDelete
    Replies
    1. இங்கு எதற்கு ஜாதி யை இழுக்க வேண்டும்...குடிகள் மட்டுமே அக்காலத்தில் இருந்தது. ஜாதி வெறும் 1500 வருடத்திற்கு பின் தோன்றியது..அக்காலத்தில் வேடுவர் (அ) குறவர்,இடையர்,பள்ளர்,பறையர்,மீனவர் என்ற குடிகள் மட்டுமே இருந்தது..மேலும் சோறு போடும் பள்ளரை தெய்வமாக பார்த்த காலமும் உண்டு....இப்படிக்கு நான் மீனவன்

      Delete
    2. என்னது வன்னியர் என்ற சொல் இலக்கியத்தில் இல்லையா கம்பர் எழுதிய சிலையெழுபது நூலை சென்று படித்துவிட்டு பதிவிடவும்

      Delete
  3. 800 வருடங்களாக நாயக்கர் மற்றும் வெள்ளையர்களுக்கும் கட்டுப்பட்டு அடிமையாக வாழ்ந்தவர்கள் மன்னர் பரம்பரையா மற்றும் சத்திரியனா? இங்கு முக்குலத்தோர் மட்டுமே மன்னர் இனம் என்று சொல் வதற்கு ஏற்றார் போல் வாழ்ந்த இனம், முக்குலத்தோர் மன்னர்கள் நாயக்கர்களுக்கு அடங்காது எதிர்த்து விரட்டிய 14, 15 ம் நூற்றண்டில் சேதுபதி மன்னர்கள், கள்ளர் நாடு அம்பலகாரர்கள் ,16ம் நூற்றாண்டில் தொண்டைமான், சேதுபதிகள் , 17 ம் நூற்றண்டில் வெள்ளையர்களை விரட்டியடித்த பூலித்தேவர்,வெள்ளைய தேவன் , கள்ளர் நாடு அம்பலகாரர்கள், மறவர் நாட்டு பாளையத்தார்கள் ,18 ம் நூற்றண்டில் வேலுநாச்சியார், மருது பாண்டியர், வாளுக்கு வேலி அம்பலம், 19 ம் நூற்றண்டில் மறவர் நாட்டு பாளையத்தார்கள், கள்ளர் நாடு அம்பலகாரர்கள், இராமு தேவர் மற்றும் ஜானகி தேவர் (நேதாஜி ஆர்மி ) இன்னும் பல நூறு பேர்கள் , இவர்கள் யாருக்கும் அடங்காமல் வீரத்தோடு வாழ்ந்தவர்கள் (அதுக்காக கிடைத்த பரிசு குற்ற பரம்பரை சட்டம் ), ஓரு சத்திரியனும் யாருக்கும் அடங்கி வாழ்வானா? , இந்த 800 வருடங்களாக வன்னியர்,பள்ளர் பறையர் சாதியினர் எல்லோரும் எங்க இருந்திங்க, அய்யோ பாவம்;

    800 வருடங்கள் முன் சோழர்கள் பாண்டிய பல்லவ சேர சாளுக்கிய, சிங்களவர் கலப்பு திருமணம் நடந்தது, இதில் எங்கே சாதி வந்தது,

    ReplyDelete
    Replies
    1. சூப்பர் தலைவா அருமையான பதிவு

      Delete
    2. This comment has been removed by the author.

      Delete
    3. வெள்ளைக்காரனால் கடைசியில் போராடி வீழ்த்தப்பட்ட பூமி வன்னி ஆமாம் அடங்காப்பற்று பண்டாரவன்னியன் பூமிதான் , தெலுங்கு படையெடுப்பை ஆண்மையோடு எதிர்த்து தமிழ் மண்ணுக்கு அரணாக நின்றவர்கள் வன்னிய குல சத்திரியர்கள் என்பது வரலாறு , எங்களுக்கு காட்டி கொடுத்து பாளையத்தை வாங்கி பொழைக்க தெரியலை உங்களை போல
      தெலுங்கு வந்தேறி நாயக்கனுக்கு விளக்கு பிடிச்சி பாளையத்தை வாங்கிட்டு பெரிய மன்னர் பரம்பரை மண்ணாங்கட்டி பரம்பரைன்னு கலர்கலரா ரீல் விடுறே , திருடுவதை குலத்தொழிலாக கொண்ட உங்களுக்கு ஆளும் உரிமை எப்படி வந்தது என்ற வரலாறு எங்களுக்கு தெரியும் கெளம்பு

      Delete
    4. Dei naanga thaanda palayame ungalukku kuduthom
      Neega காலங்காலமா திருடி ஏமாத்தி துரோகம் படுபாதக கொலைகள் செஞ்சு பொழச்சவங்கடா

      Delete
    5. என்ன சகோ பச்சை பச்சையாக கிழிச்சுடிங்க🤔

      Delete


  4. மள்ளர் / பள்ளர்

    மள்ளர் தான் பள்ளர்' என்பதற்கு ஆதாரமாக இவர்கள் காட்டும் பாடல் .

    “ "மள்ளர் குலத்தில் வரினும் இரு பள்ளியர்கோர்
    பள்ளக் கணவன்" ”
    —-முக்கூடற் பள்ளு

    அதைப்பற்றி : இது 17 அல்லது 18 ம் நூற்றண்டில் எழுதியது. ஆசிரியர் பெயர் தெரியவில்லை. இதை ஆதாரம் கட்டுவது ஏற்புடையதல்ல. மேலும்

    பள்ளத்தில் பயிர் செய்த மருத நில மக்களின் வாழ்வியலைப் பதிவு செய்யும் இலக்கியம் பள்ளு இலக்கியமாகும். ஈழத்தில் எழுந்த 6 பள்ளு நூல்கள் உட்பட 35 பள்ளு நூல்களின் பெயர்கள் அறியப்பட்டுள்ளன. பள்ளு இலக்கியத்தில் தலை சிறந்த நூல் ‘முக்கூடற் பள்ளு’ ஆகும். இதில் கூறப்படுகிற காவை வடமலைப் பிள்ளை காலத்தை வைத்துப் பார்க்கும்போது இந்நூல் 1780ல் பாடப்பட்ட நூல் என்று தெரியவருகிறது. ஆசிரியர் பெயர் தெரியவில்லை.
    பொருநை நதி, சிற்றாறு என்னும் சித்ராநதி, காட்டாறு ஆகிய மூன்று நதிகள் கூடுகிற இன்று சீவலப்பேரி என்று அழைக்கப்படுகிற முக்கூடல் ஊரில் கோவில்கொண்டுள்ள அழகருடைய பண்ணையில் வேலை பார்ப்பவன் வடிவழகக்குடும்பன். திருமாலைத் தொழாத பேரை இரண்டுகால் மாடெனவே கொழுவில் பூட்டி விரட்டி உழுவேன் என்று சொல்லும் தீவீரமான வைணவன். அவனுக்கு மாமன் மகள் மூத்த பள்ளி. அவன் கண்டு ஆசைப்பட்டு இரண்டாவதாகக் கட்டிக்கொண்டவள் மருதூர்ப் பள்ளியாகிய இளைய பள்ளி. சிவநெறி சார்ந்தவள்.
    இவர்களுடைய வாழ்வில் பயிரிடும் ஒருபோகத்திற்கான பயிர்க்காலத்தில் நடந்த நிகழ்வுகளின் பதிவு இந்நூல். பலவகையான உழவுக் கருவிகள், பகல் உண்ட உணவு எந்த அரிசி என்று தெரியாத இக்காலத்தில் வியப்புடன் நாம் அறிய வேண்டிய அன்றிருந்த நெல்வகைகள், மாடுகள், அவற்றின் சுழிவகைகள், மீன் வகைகள் என நூலில் ஏராளமான செய்திகள் ஆவணப்படுத்தப் பட்டுள்ளன என்று எடுத்துரைத்தார்.

    மேலும் கீழ்க்கண்ட சமுதாய, உளவியல் சிந்தனைகளை நூலிலுள்ள பாடல்கள் வழி ஆய்வுரையாகத் தொடர்ந்தார்.

    1.பள்ளர்களைத் தூரப் போ என்று விலக்கும் சமுதாய நிலை
    2. ஆனாலும் தக்க வேளாண்மை மூலம் மைக்கடல் முத்துக் கீடாய் மிக்கநெல் உண்டாக்கும் தான் தூரப் போகச் சொல்லும் மக்களின் பக்கமே என்றும் அழகர் என்று முக்கூடலுக்கு வந்தாரோ அன்றே அடியாராக வந்த பரம்பரை தன்னுடையது என்றும் பெருமிதம் கொள்ளும் குடும்பப் பள்ளன்.
    3.பண்ணைக்காரனை வேடிக்கை மனிதனாக வர்ணிப்பதின் மூலம் மக்கள் மனதில் பண்ணையின் கங்காணியான பண்ணைக்காரனின் தாழ் நிலை.
    4.ஆண்டை, நாயானார் என்று பண்ணைகாரனை அழைக்க வேண்டிய அடிமைத் தொழிலாளி.
    5.வேலை செய்யத் தவறிய பள்ளனுக்குக் காலில் கட்டையைக் கட்டித் தொழுவத்தில் அடைக்குமளவுக்குத் தண்டனை அளிக்கப் பண்ணைக்காரனுக்கு அதிகாரம் கொடுத்திருந்த அன்றிருந்த அரசியல் நிலை.
    6.விளைந்த நெல் விளைவித்தவனுக்கு உரிய அளவில் கிடைக்காமல் மடத்துக்கும், சுவாமி கட்டளைகளுக்கும், பிறவற்றிற்கும் சென்ற நிலை.
    7.இரண்டு மனைவிகளின் சக்களத்தி மனச்சிக்கல்கள், அதனால் குடும்பத்தில் விளையும் துன்பம், அங்கு ஆணின் நிலை.
    8.அந்த மனைவியரிடையே எழும் பூசல் அவரவரின் கடவுளர் வரை சென்று கடவுளரையும் தூற்றல்.
    9.தூற்றலிலும் கடவுளைப் போற்றும் உளவியல்.
    10.மக்களின் கடவுளர்கள். அவர்களுக்கு விரைய வெட்டும் செங்கிடாயும் குடத்திலிடும் கள்ளும்.
    11.ஆணும் பெண்ணும் சேர்ந்து அலுப்பில்லாமல் செய்யும் உழவு வேலைகள். இனக்கவர்ச்சியால் எழும் சிக்கல்கள்.
    12.கம்பனுக்கு ஈடாகக் கவிநயத்துடன் முக்கூடல் பள்ளு ஆசிரியன் காண விரும்பிய கற்பனை நாடு,
    சந்தமும், பண்ணும் அமைந்த நாடகப் பாடல்களின் சொல்நயமும் பொருள் நயமும் பகிர்ந்துகொள்ளப்பட்டது

    *********

    ReplyDelete
    Replies
    1. திறனாய்வு

      Delete
    2. பள்ள பாட்டு 🌼👔 பாட்டுனு 1310 மாலிக் கபூர் படையெடுப்பு க்கு முன் இருந்த பள்ளர் பாடல் காட்டு

      Delete
  5. தொல்காப்பியம் கூறியுள்ள நான்கு வகை தமிழ் நிலத்திலும் ( இயற்றப்பட்ட காலம் கி.மு. நாலாம் நூற்றாண்டுக்கு) சிலப்பதிகாரத்தில் கூறியுள்ள ஐந்து வகை தமிழ் நிலத்திலும் (இயற்றப்பட்ட காலம் கி.பி இரண்டாம் நூற்றாண்டு) உள்ள மக்களில் எங்கும் மள்ளரும் இல்லை பள்ளரும் இல்லை

    தொல்காப்பியர் காலத்திற்கு முன்னர் முல்லை, குறிஞ்சி, மருதம், நெய்தல் ஆகிய நால்வகை நிலங்கள் இருந்துள்ளமை தெளிவாகின்றது. காலப்போக்கில் முல்லையும், குறிஞ்சியும் முறைமுறை திரிந்து, நல்லியல்பு இழந்து, வெம்மையால் வளமை குன்றிப் போயுள்ள நிலத்தைப் ‘பாலை' எனப் பெயரிட்டனர். இதன்பின்தான் நால்வகை நிலங்கள், ஐவகை நிலங்களாகவும், ஐந்திணைகளாகவும் பெயர் பெற்றன. பாலை பிறந்த கதையைச் சிலப்பதிகாரத்தில் காண்போம்.

    'முல்லையும், குறிஞ்சியும், முறைமையின் திரிந்து
    நல் இயல்பு இழந்து, நடுங்கு துயர் உறுத்துப்
    பாலை என்பது ஓர் படிவம் கொள்ளும்.'
    –(காடுகாண் காதை 11: 64-66)

    ‘உயர்ந்தோர்’, ‘தாழ்ந்தோர்’ என மக்களையும், ‘

    I . குறிஞ்சியின் கருப்பொருள்கள்

    11. உயர்ந்தோர் - பொருப்பன், வெற்பன், சிலம்பன், குறத்தி, குறவன், கொடிச்சி.
    12. தாழ்ந்தோர் - குறவர், கானவர், குறத்தியர், வேட்டுவர், குன்றுவர்.

    II. முல்லையின் கருப்பொருள்கள்

    11. உயர்ந்தோர் - குறும்பொறை நாடன், கிழத்தி, தோன்றல் மனைவி.
    12. தாழ்ந்தோர் - இடையர், இடைச்சியர், ஆயர், ஆய்ச்சியர், கோவலர், பொதுவர்.

    III. பாலையின் கருப்பொருள்கள்

    11. உயர்ந்தோர் - விடலை, காளை, மீளி, எயிற்றியர்.
    12. தாழ்ந்தோர் - எயினர், எயிற்றியர், மறவர், மறத்தியர்.

    IV. மருதத்தின் கருப்பொருள்கள்

    11. உயர்ந்தோர் - ஊரான், மகிழ்நன், கிழத்தி, மனைவி.
    12. தாழ்ந்தோர் - உழவர், உழத்தியர், கடையர், கடைசியர், களமர்.

    V நெய்தலின் கருப்பொருள்கள்

    11. உயர்ந்தோர் - சேர்ப்பன், புலம்பன், பரத்தி, நுழைச்சி.
    12. தாழ்ந்தோர் - நுளையர், நுளைச்சியர், பரதர், பரத்தியர், அளவர், அளத்தியர்.

    ******

    மல்லர் - மள்ளர்

    மல்லன், பெயர்ச்சொல்.
    மற்போர் செய்வோன்
    (எ. கா.) மறத்தொடு மல்லர் மறங்கடந்த (பு. வெ. 9, 4)
    பெருமையிற் சிறந்தோன் (பிங்.)

    மள்ளன் பெயர்ச்சொல்.
    உழவன்; திண்ணியோன்; வலிமையுடையவன்; படைத்தலைவன்; படைவீரன்; இளைஞன்; மருதநிலத்தோன்; குறிஞ்சிநிலத்துவாழ்வோன்.

    மல்லர்
    மற்போர்செய்வோர்; வலியர்; திருக்குறள்உரையாசிரியருள்ஒருவர்.

    மள்ளர்
    mḷḷr s. The laboring class in agri cultural districts. See பள்ளர். 2. The inhabitants of mountainous districts,குறி ஞ்சிநிலமாக்கள். (சது.)

    உலகின் தொன்மையான மொழியென்று உலகத்தவர்களால் ஏற்று கொள்ளப்பட்ட செம்மொழியான தமிழ் பல சிறப்புகளை தன்னகத்தே கொண்டுள்ளது. சிலேடை, வஞ்ச புகழ்ச்சி, இரட்டைக்கிழவி யென தமிழ் தனக்கான ஆற்றலை வெகு நேர்த்தியாக வெளிப்படுத்தி கொண்டே வந்திருக்கிறது. இந்த தமிழில் ஒரே வார்த்தைக்கு பல பெருள் / பல்வேறு அர்த்தங்கள் விரவி கிடக்கின்றன.ஒரே ஒலியுடைய சொல்லும், ஒரேவொரு எழுத்தின் சிறு மாறுதல் வாயிலாகவும் பல பரிமாணங்களையும், பல அர்த்தங்களையும் நமக்கு தருகிறது.அதுதான் தமிழுக்கான தனித்தன்மை. அந்த வகையில் தமிழ் பெருமையடைய வேண்டிய விசயம் தான்; ஆனாலும், அந்த விசயமே ஒரு மாபெரும் குழப்பத்தை பிற்காலத்தில் ஏற்படுத்தும் என்பதை யாரும் உணர்ந்திருக்க வாய்ப்பில்லை.

    அதற்கான உதாரணங்கள் கீழே:

    மதி – நிலவு, அறிவு;

    மாலை - மாலைப் பொழுது, பூமாலை.

    கல் – கல்வி கற்பது , செங்கல் உட்பட பலவித கல் வகைகள்; கள் – மதுபானம்.

    வெள்ளம் – நீர் பெருக்கு; வெல்லம் – இனிப்பு சுவையுடையது.

    தால் – வார்த்தை முடிவுறா சொல் (செய்தால், வந்தால்) ; தாழ் – பூட்டு; தாள் – காகிதம்.

    ஒலி – சப்தம்; ஒளி – வெளிச்சம்; ஒழி – அழிப்பது.

    அலி – ஆண் பெண் நிலையற்ற தன்மை; அழி – நிர்மூலம் செய்தல்; அளி – கொடுப்பது.

    இது போல, (பால், பாள், பாழ்) ; (ஆல், ஆழ், ஆள்) – இவையெல்லாமே தனித்தனி வெவ்வேறு அர்த்தங்கள் கொண்டவை. இப்படி நிறைய தமிழில் சொல்லிக்கொண்டே போகலாம். அது போல ‘மல்லர்’ என்பது மல்லுயுத்தம் புரியும் வீரர்; மன்னர் யென்று பொருள். ஆனால் ‘மள்ளர்’ என்பது விவசயம் செய்யும் ஒரு பிரிவினர்.

    *******

    ReplyDelete
    Replies
    1. புறநானூறு 10ம் வரியில் சொல்லப்பட்டுள்ளது...
      மல்லன் -உழவன் (பள்ளர்)என்று......
      சிற்றிலக்கியங்களை படிக்காமல்
      ஏன் பிதற்றுகிறீர்கள்...

      Delete
  6. அடலருந் துப்பின் .. .. .. ..
    குரவே தளவே குருந்தே முல்லையென்று இந்நான் கல்லது பூவும் இல்லை;

    கருங்கால் வரகே இருங்கதிர்த் தினையே சிறுகொடிக் கொள்ளே பொறிகிளர் அவரையொடு இந்நான் கல்லது உணாவும் இல்லை;

    துடியன் பாணன் பறையன் கடம்பனென்று இந்நான் கல்லது குடியும் இல்லை;

    ஒன்னாத் தெவ்வர் முன்னின்று விலங்கி ஒளிறுஏந்து மருப்பின் களிறுஎறிந்து வீழ்ந்தெனக் 10

    கல்லே பரவின் அல்லது
    நெல்உகுத்துப் பரவும் கடவுளும் இலவே.

    அருஞ்சொற்பொருள்: 1. அடல் = கொல்லுதல், அழித்தல்; துப்பு = வலிமை. 2. குரவு = ஒரு செடி; தளவு = செம்முல்லை; குருந்து = குருக்கத்தி. 5. பொறி = புள்ளி; கிளர்தல் = நிறைதல். 7. துடி = உடுக்கை; குறிஞ்சிப் பறை; துடியன் = துடியடிப்பவன்; கடம்பன் = ஒரு குடி; பறையன் = பறையடிப்பவன். 9. ஒன்னாமை = பொருந்தாமை; தெவ்வர் = பகைவர். 10. மருப்பு = கொம்பு (தந்தம்). 11. பரவுதல் = வழிபடுதல். 12. உகுத்தல் = சொரிதல், தூவல்.

    உரை: அழித்தற்கரிய வலிமையையுடைய …

    குரவமலர், தளவுமலர், குருந்த மலர், முல்லைமலர் ஆகிய இந்நான்கு மலர்களைத் தவிர வேறு மலர்களும் இல்லை.

    கரிய அடியையுடைய வரகு, பெரிய கதிரையுடைய தினை, சிறிய கொடியில் விளையும் கொள், புள்ளிகள் நிறைந்த அவரை இவை நான்கைத் தவிர வேறு உணவுப்பொருட்களும் இல்லை.

    துடியன், பாணன், பறையன், கடம்பன் ஆகிய இந்நான்கு குடிகளைத் தவிர வேறு குடிகளும் இல்லை.

    மனம் பொருந்தாத பகைவரின் முன்னே நின்று அவர் படையெடுப்பைத் தடுத்து, ஒளிறும் உயர்ந்த கொம்புகளையுடைய யானைகளைக் கொன்று தாமும் விழுப்புண்பட்டு இறந்தவர்களின் நடுகல்லைத் தவிர, நெல்லைத் தூவி வழிபடுவதற்கேற்ற கடவுளும் வேறு இல்லை.

    சிறப்புக் குறிப்பு: புலவர் மாங்குடி கிழார் என்ன காரணத்தினால் குரவு, தளவு, குருந்து, முல்லை ஆகிய மலர்களைத் தவிர வேறுமலர்கள் இல்லையென்றும், உணவுப் பொருட்களில் வரகு, தினை, கொள், அவரை ஆகிய நான்கு மட்டுமே என்றும், குடிகளில் துடியன், பாணன், பறையன், கடம்பன் என்ற நான்கு குடிகளே என்றும், வழிபடுவதற்கேற்ற கடவுள் இறந்த வீரர்களின் நடுகல்லைத் தவிர வேறு எதுவும் இல்லை என்று கூறுகிறார் என்பது தெரியவில்லை. ஒருசிற்றூரில் தான் கண்ட காட்சியைத் தன் கருத்தில் கொண்டு இவ்வாறு கூறுகிறார் என்று தோன்றுகிறது.

    ******

    ReplyDelete
  7. புறப்பொருள் வெண்பாமாலையின் சான்றுப்பாடலும்,

    “களமர் கதிர்மணி காலோகம் செம்பொன் வளமனை பாழாக வாரிக் – கொளன்மலிந்து கண்ணார் சிலையார் கவர்ந்தார் கழல்வேந்தன் நண்ணார் கிளையலற நாடு” (புறப்.15)

    புறப்பொருள் வெண்பாமாலையின் ஆசிரியர் ஐயனாரிதனார், புறப்பொருள் இலக்கணம் கூற எழுந்த நூலாகும். இதன் காலம் கி.பி. 9-ஆம் நூற்றாண்டு. இலக்கணநூல்களில் குறிப்பிடப்பட்டுள்ள உழவர், உழத்தியர், கடையர், கடைசியர், ஊரன், மகிழன், களமர் போன்ற ஒரு சில பெயர்களில் மருதநில மக்கள் அழைக்கப்பட்டமையை அறிய முடிகிறது. இங்கும் மள்ளர் என்பது அரசர்களை குறிப்பிடவில்லை

    ***********

    கம்பராமாயணத்தில்

    'நெடும் படை வாள் நாஞ்சில் உழு நிணச் சேற்றின்,
    உதிர நீர் நிறைந்த காப்பின்,

    கடும் பகடு படி கிடந்த கரும் பரம்பின்,
    இன மள்ளர் பரந்த கையில்,

    படுங் கமல மலர் நாறும் முடி பரந்த
    பெருங் கிடக்கைப் பரந்த பண்ணை,

    தடம் பணையின் நறும் பழனம் தழுவியதே
    எனப் பொலியும் தகையும் காண்மின்!

    நெடும் படை வாள் நாஞ்சில் உழுநிணச் சேற்றின் - நீண்டவாளாம் கலப்பையாக உழுத கொழுப்பாகிய சேறுள்ளதாலும்;
    உதிரநீர் நிறைந்த காப்பின் - இரத்தமாம் நீர்நிறைந்த தேக்கமுள்ளதாலும்; கடும்பகடு படி கிடந்த கரும்பரப்பின்-
    (விரைந்து செல்லும் எருமைகளோடு தரையில் கிடந்த பரம்பு அடிக்கும் பலகை கொண்டுள்ளது போல) விரைந்து செல்லும் யானைப்பகடு படிந்த கரிய பெரும்பரப்பையுள்ளதாலும்; இனமள்ளர் பரந்த கையில் - (இரைமாத்த உழவர் பரவியுள்ள மக்கள் போல்) இனமொத்த வீரர் பரவிய பக்கங்கள் உள்ளதாலும்; படுங்கமல மலந் நாறும் முடிபரந்த
    பெருங்கிடக்கைப் பரந்த -(களையுள்ள தாமரை மலரோடு நாற்று முடிகள் கிடந்த பெரிய களங்கள் போல) தலைமாலையாகத் தாமரை சூடியதால் மணம் வீசும் முடிமகுடங்கள் கிடக்கும் பெரிய கிடக்கைகள் உள்ளமையாலும்; பண்ணை - (வயல்) வீரரின்
    பரந்த கூட்டம் உள்ள;தடம்பணையின் நறும்பழனம் தழுவியதே
    - எனப் பொலிவும் தகையும் காணீர். பெரிய மருதநிலம்
    பரப்பினை உடைய (போர்க்களம்) நறுமணம் வீசும் வயல்;
    எனப் பொலியும் தகையும் காண்மின் - எனத்தோன்றும்
    தன்மையையும் பாருங்கள்.

    கம்பராமாயணத்தில் உள்ள பாடல்களையும், கம்பரின் வாழ்வினையும் கொண்டு கம்ப இராமாயணம் பன்னிரண்டாம் நூற்றாண்டில் இயற்றப்பட்டது என்று அறிஞர்கள் கருதுகின்றனர். சிலர் கம்பராமாயணம் ஒன்பதாம் நூற்றாண்டைச் சேர்ந்தது, பத்தாம் நூற்றாண்டினைச் சேர்ந்தது என்றும் கூறியுள்ளார்கள். வையாபுரிப் பி்ள்ளை என்பவர் கம்பர் தனியன்கள் என்பதினை 16ம் நூற்றாண்டில் சிலர் புகுத்தியிருக்க கூடும் என்று கூறியுள்ளார்

    இங்கும் மள்ளர் என்பது அரசர்களை குறிப்பிடவில்லை
    *************

    இக்கால கட்டத்தில் எழுந்த திவாகர நிகண்டு “களமர் தொழுவர் மள்ளர் கம்பளர் வினைஞர் உழவர் கடைஞர் இளைஞர் (என்று அனையவை) கழனிக் கடைந்தவர் (பெயரே)” (திவாகரம்.130) என்று குறிப்பிடுகிறது. திவாகர நிகண்டு என்னும் நிகண்டு நூல் கிபி 8 ஆம் நூற்றாண்டில் திவாகர முனிவர் என்பவரால் இயற்றப்பட்டது.
    இங்கும் மள்ளர் என்பது அரசர்களை குறிப்பிடவில்லை

    ***********

    ReplyDelete
    Replies
    1. இதனைப் போன்றே பிங்கல நிகண்டு, “களமர் உழவர் கடைஞர் சிலதர் மள்ளர் மேழியர் மருதமாக்கள்” (பிங்கலம்.132) என்று மருதநில மக்களில் ஆறு பிரிவினர் . பிங்கல நிகண்டு நூலைப் பிங்கலம் என்றும் வழங்குவர்.[1] இது சோழர்கள் ஆண்ட கிபி 10 ஆம் நூற்றாண்டில் பிங்கல முனிவர் என்பவரால் இயற்றப்பட்டது.
      இங்கும் மள்ளர் என்பது அரசர்களை குறிப்பிடவில்லை. சோழர்கள் காலத்தில் தான் பள்ளர் சேரிகள் உருவாக்கப்பட்டது.

      ***********

      மருதநில மக்கள் “களமரே தொழுமரே மள்ளர் கம்பளர் உழவரொடு வினைஞர் கடைஞர்” (சூடாமணி.71) என்ற ஏழு வகைப் பிரிவினர் என்று சூடாமணி நிகண்டும் கூறுகின்றன. சூடாமணி நிகண்டு என்னும் நூல் கி.பி. 16 ஆம் நூற்றண்டில் வாழ்ந்த மண்டல புருடர் என்னும் சமணரால் இயற்றப்பட்டது. இவை யாவும் பிற்காலத்தவரின் பாகுபாடு என அறிஞர் மக்கள் தெரிவிக்கின்றனர்.
      இங்கும் மள்ளர் என்பது அரசர்களை குறிப்பிடவில்லை

      *******
      பரஞ்சோதிமுனிவர்
      அருளிச்செய்த
      திருவிளையாடற் புராணம்

      புரவி வெள்ளமும் போர்க்கரி வெள்ளமும்
      வரவிற் கால்வலி* மள்ளரின் வெள்ளமும்
      வரவி யாழய வெள்ளமு முள்ளுற
      இரவி தன்வழித் தோன்றல்வந் தெய்தினான்.
      (இ - ள்.) புரவி வெள்ளமும் போர்க்கரி வெள்ளமும் - குதிரை
      வெள்ளமும் போர் செய்தலையுடைய யானை வெள்ளமும், வரவில் கால்வலி
      மள்ளரின் வெள்ளமும் - விரைந்த செலவில் காற்றினைப் போலும்
      வலியினையுடைய வீரர்களின் செய்யமும் ஆகிய இவற்றுடன், ஆழிய
      வெள்ளமும் விரவி உள்ளுற - தேர் வெள்ளமும் கலந்து உள்ளே பொருந்த
      (இந்நால்வகைச் சேனையுடன்), இரவிதன் வழித்தோன்றல் வந்து எய்தினான் -
      சூரியன் வழித்தோன்றலாகிய சோழ மன்னன் வந்து சேர்ந்தான்

      இங்கு மள்ளர் வலியினையுடைய வீரர்கள் என்று உள்ளது.

      *******

      யாழ்ப்பாணச் சாதிகளை,

      உயர் சாதியினர்,
      உயர் சாதி அல்லாதோர்
      குடிமக்கள் (குடிமைகள்)

      வெள்ளாளச் சாதியினர் "உயர் சாதி" வகைப்பாட்டினுள் அடங்குவர். குடியேற்றவாதக் காலத்திலும் அதற்கு முன்னரும் மடப்பளி, அகம்படியர் ஆகிய சாதிகளும் உயர் சாதிகளாகக் கருதப்பட்டன. தற்காலத்தில் இவ்விரு சாதிகளும் இல்லாமல் போய்விட்டன. "உயர் சாதி அல்லாதோர்" என்னும் பிரிவினுள் அடங்கும் சாதிகள், இடைத்தரமான சமூக அதிகார நிலையில் உள்ளவை. கோவியர், தச்சர், கொல்லர் போன்ற சாதிகள் இப்பிரிவினுள் அடங்குபவை. மூன்றாவது பிரிவில் அடங்கும் சாதிகள் மிகவும் குறைவான சமூக அதிகார நிலையை உடையவை. பள்ளர், நளவர், பறையர் போன்ற சாதிகள் இத்தகையவை.

      ******

      Delete
    2. இதனைப் போன்றே பிங்கல நிகண்டு, “களமர் உழவர் கடைஞர் சிலதர் மள்ளர் மேழியர் மருதமாக்கள்” (பிங்கலம்.132) என்று மருதநில மக்களில் ஆறு பிரிவினர் . பிங்கல நிகண்டு நூலைப் பிங்கலம் என்றும் வழங்குவர்.[1] இது சோழர்கள் ஆண்ட கிபி 10 ஆம் நூற்றாண்டில் பிங்கல முனிவர் என்பவரால் இயற்றப்பட்டது.
      இங்கும் மள்ளர் என்பது அரசர்களை குறிப்பிடவில்லை. சோழர்கள் காலத்தில் தான் பள்ளர் சேரிகள் உருவாக்கப்பட்டது.

      ***********

      மருதநில மக்கள் “களமரே தொழுமரே மள்ளர் கம்பளர் உழவரொடு வினைஞர் கடைஞர்” (சூடாமணி.71) என்ற ஏழு வகைப் பிரிவினர் என்று சூடாமணி நிகண்டும் கூறுகின்றன. சூடாமணி நிகண்டு என்னும் நூல் கி.பி. 16 ஆம் நூற்றண்டில் வாழ்ந்த மண்டல புருடர் என்னும் சமணரால் இயற்றப்பட்டது. இவை யாவும் பிற்காலத்தவரின் பாகுபாடு என அறிஞர் மக்கள் தெரிவிக்கின்றனர்.
      இங்கும் மள்ளர் என்பது அரசர்களை குறிப்பிடவில்லை

      *******
      பரஞ்சோதிமுனிவர்
      அருளிச்செய்த
      திருவிளையாடற் புராணம்

      புரவி வெள்ளமும் போர்க்கரி வெள்ளமும்
      வரவிற் கால்வலி* மள்ளரின் வெள்ளமும்
      வரவி யாழய வெள்ளமு முள்ளுற
      இரவி தன்வழித் தோன்றல்வந் தெய்தினான்.
      (இ - ள்.) புரவி வெள்ளமும் போர்க்கரி வெள்ளமும் - குதிரை
      வெள்ளமும் போர் செய்தலையுடைய யானை வெள்ளமும், வரவில் கால்வலி
      மள்ளரின் வெள்ளமும் - விரைந்த செலவில் காற்றினைப் போலும்
      வலியினையுடைய வீரர்களின் செய்யமும் ஆகிய இவற்றுடன், ஆழிய
      வெள்ளமும் விரவி உள்ளுற - தேர் வெள்ளமும் கலந்து உள்ளே பொருந்த
      (இந்நால்வகைச் சேனையுடன்), இரவிதன் வழித்தோன்றல் வந்து எய்தினான் -
      சூரியன் வழித்தோன்றலாகிய சோழ மன்னன் வந்து சேர்ந்தான்

      இங்கு மள்ளர் வலியினையுடைய வீரர்கள் என்று உள்ளது.

      *******

      யாழ்ப்பாணச் சாதிகளை,

      உயர் சாதியினர்,
      உயர் சாதி அல்லாதோர்
      குடிமக்கள் (குடிமைகள்)

      வெள்ளாளச் சாதியினர் "உயர் சாதி" வகைப்பாட்டினுள் அடங்குவர். குடியேற்றவாதக் காலத்திலும் அதற்கு முன்னரும் மடப்பளி, அகம்படியர் ஆகிய சாதிகளும் உயர் சாதிகளாகக் கருதப்பட்டன. தற்காலத்தில் இவ்விரு சாதிகளும் இல்லாமல் போய்விட்டன. "உயர் சாதி அல்லாதோர்" என்னும் பிரிவினுள் அடங்கும் சாதிகள், இடைத்தரமான சமூக அதிகார நிலையில் உள்ளவை. கோவியர், தச்சர், கொல்லர் போன்ற சாதிகள் இப்பிரிவினுள் அடங்குபவை. மூன்றாவது பிரிவில் அடங்கும் சாதிகள் மிகவும் குறைவான சமூக அதிகார நிலையை உடையவை. பள்ளர், நளவர், பறையர் போன்ற சாதிகள் இத்தகையவை.

      ******

      Delete
  8. சோழரும் சாதியமும்

    சோழர்கள் சாதிய அடுக்கமைவையும் அமைப்பையும் ஏற்று, அதற்கு கட்டுப்பட்டு ஆட்சிபுரிந்தார்கள். இவர்கள் காலத்துக்கு முன்னரேயே தீட்டுக் கோட்பாடு தமிழ்ச் சமூகத்தில் வழங்கியதானாலும், இதை அமுல்படுத்துவதில் சோழரின் பங்கும் குறிப்பிடத்தக்கது. "முதலாம் இராசராசனுடைய கல்வெட்டொன்று 'தீண்டாச்சேரி-பறைச்சேரி' என ஒரு ஊர்ப் பகுதியைச் சுட்டுகிறது என்றும், பாகூரில் உள்ள திருமூலநாதர் திருக்கோவில் கல்வெட்டொன்று (முதலாம் இராசராசன் காலத்தைச் சேர்ந்தது - கி.பி. 10 ஆம் நூற்றாண்டு) ஓர் ஊரில் வாழ்ந்த ஒரு மக்கள் பிரிவினரைத் 'தீண்டாதார்' எனக் குறிப்பிடுகின்றது என்றும் பேராசிரியர் கோ. விசயவேணுகோபால் விளக்குகிறார். மேலும் சோழர் காலத்தில்தான் இந்தத் தீண்டத்தகாதவர் 'சேரிகள்', அரசாணையின்படி அமைக்கப்பட்டுள்ளன. மேடான இடத்தில் மேல் சாதியினரும் பள்ளமான இடத்தில் கீழ்ச் சாதியினரும் குடியிருக்க வேண்டும். அப்பொழுதுதான் முற்றத்தில் வரும் மழைத்தண்ணீர் கூடத் தீட்டுப்படாததாய் இருக்கும். மேலும் குனிந்து போகும்படியாகத்தான் குடிசை கட்ட வேண்டும். ஜன்னல் வைத்துக் கட்டக் கூடாது. சுவருக்கு வெள்ளையடிக்கக் கூடாது. பிணத்தைச் சும்மாதான் எடுக்க வேண்டும். பொதுக் குளத்தில் தண்ணீர் எடுக்கக்கூடாது. என்றெல்லாம் ஆணை போட்டு" அமுல்படுத்தியிருப்பதாகத் தெரிகிறது. இந்த ஆணைகள் அக்காலத்தில் நிலவிய அடக்குமுறைகளை எடுத்துக்காட்டுவதாக ஆய்வாளர் கூறுகிறார்கள்.பிராமணர்களே சோழ நிர்வாகத்தின் முக்கியமான பதவிகளைக் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்தனர். மற்றவர்கள் அவர்களுக்கு வேலை செய்தார்கள். பிராமணர்கள் அல்லாதோர் ஒன்றாகச் செயல்படுவதை தடுப்பதற்கு சாதிச் சார்பையும், சாதி ஒற்றுமையையும், சாதி சமூகங்களையும் பிராமணர்கள் ஊக்குவித்தார்கள்.

    ***********

    சோழர்களைப் போல் பல்லவர்களைப் போல் பள்ளர் பறையரை கசக்கி வதக்கி அவர்கள் உழைப்பை குடித்தவர்கள் யாரும் இருந்த்ததில்லை. இதற்க்கும் ஆதாரம் இருக்கிறது.
    தஞ்சை பெரிய கோயிலை கட்டும் போது நடந்த நிகழ்ச்சி.வெட்டிக் குடிகளைக் கொண்டு கட்டப்-பட்ட கோயில்கள்தானே! கூலி எதுவும் கேட்காமல், பெற்றுக் கொள்ளாமல் வேலை செய்துவிட்டுப் போக வேண்டியவர்கள் வெட்டிக் குடிகள் எனப்பட்டனர். உதாரண-மாக ஆடு, மாடுகள் மேய்ப்பதற்காக 100,50 எனக் கால் நடைகளைக் கொடுத்துவிட்டு இந்த அளவு நெய் கொடுக்கவேண்டும் என நிர்ணயம் செய்துவிடுவார்கள். அதனைக் கொடுத்துவிட்டு, எஞ்சியிருப்பதைக் கொண்டு கால் வயிற்றுக் கஞ்சியினைக் குடிக்கவேண்டிய-வர்கள் வெட்டிக் குடிகள். உழுது பயிரிட்டு வரிகளைக் கொட்டிக் கொடுத்துவிட்டு அரைவயிற்றுக் கஞ்சி குடித்தவர்கள் உழுகுடி-கள்(பள்ளுபறை). இந்த இரண்டுவகைத் தரித்திர நாராயணர்களுக்குள் பகை, சண்டை. நாராயணனும் அதைப்பற்றிக் கவலைப்பட-வில்லை. நாராயணனின் அவதாரம் என்று புருடா விட்டுக் கொண்டிருந்த சோழ மன்னர்களும் கவலைப்படவில்லை. அதன் விளைவாக, கோயில்களுக்கும் வெட்டிக் குடிகளுக்குமான உறவு கெட்டது. கோயிலுக்-கும் உழுகுடிகளுக்குமான உறவும் கெட்டது. இதற்குக் காரணம் முதுகு முறியும் அளவு சுமத்தப்பட்ட வரிச்-சுமை.
    விளைவு _ உழுகுடிகள்(பள்ளுபறை) கோயிலைத் தீ வைத்துக் கொளுத்தினர்
    மகேந்திர சதுர்வேதிமங்கலக் கல் வெட்டு இதனை விவரிக்கிறது.

    ****

    ReplyDelete
  9. சோழர் காலத்திலேயே பள்ளர் வரி தொடங்கி விட்டது:

    மேலும் தலித்துகளுக்குரிய நிலங்கள் பறைத்துடவை (தெ.இ.க. 26, க.எ.686)

    பள்ளன் விருத்தி(தெ.இ.க.8 க.எ.151)
    என்றும் அவர்களுக்குரிய சுடுகாடு பறைச்சுடுகாடு (தெ.இ.க.4, க.எ.529, 68, 79, 83, தெ.இ. க. உ.தொகுதி 1,2, க.எ. 5)என்றும் குறிப்பிடப்பட்டுள்ளன.
    சோழர் காலத்தில்

    பள் வரி, பறை வரி
    என்ற வரிகள் நடைமுறையில் இருந்துள்ளன. சில நேரங்களில் இவ்வரி கட்டுவதிலிருந்துவிலக்களிக்கப்பட்டதையும் சில கல்வெட்டுக்கள் குறிப்பிடுகின்றன. மேலும் அரண்மனைக்குக் காணிக்கைப் பணமாக மக்கள் செலுத்தவேண்டிய வரி வாசல் காணிக்கை எனப்பட்டது. இவ்வரியிலிருந்து

    பள்ளர்களுக்கு விலக்களிக்கப்பட்டதை பள்ளக்குடிக்கு வாசல் பணம்மானியமாகவும் (தெ.இ.க. 26, க.எ.336) என்ற கல்வெட்டு வரி தெரிவிக்கின்றது.

    நாம் மேலே காட்டிய பள்ளர்கள் வரியிலிருந்து அவர்கள் சேரி வாழ் தாழ்த்த பட்டவர்கள் என்பது சோழர்கள் காலத்தில் இருந்தே நடைமுறையில் இருப்பது தெள்வாகின்றது எனவே ராஜ ராஜ சோழ தேவந்திரர் என்பது கட்டுக்கதையே..

    நாயக்கர் கால பள்ளுபறை வரி:

    நாயக்கர் காலத்திலும் அதன் பின்பு சேதுபதி தொண்டைமான் செப்பேடுகளில் பள்ளுப்பறை இறை என்ற பொது வரியே பள்ளர்களுக்கும் பறையர்களுக்கும் வித்திக்கபட்டது.புதிய ஊரில் வேளாண்மை செய்ய உழவர்களான பள்ளர்களும் கைவினைத் தொழில் செய்ய கம்மாளர்களும் குடியேற்றப்பட்டுள்ளனர். 3. கம்மாளர்களுக்கு வழங்கியதை விட குறைவான பணமே பள்ளர்களுக்கு வழங்கப்பட்டது.மேலும் இவர்கள் நிலத்துடன் கொடையாக வழங்கப்பட்டுள்ளனர். அல்லது விற்பனை செய்யப்பட்டுள்ளனர் என்பதனை சேதுபதி செப்பேடுகளில் இடம் பெறும் பின்வரும் வரிகள் உணர்த்துகின்றன.பள்ளுப்பறை சகலமும் சர்வ மானியமாக (இராசு.1994;208)பள்ளுப்பறை இறை, வரி ,ஊழியம்....ஆண்டனுபவித்துக் கொள்ளவும் (மேலது, 242)பள்ளுப்பறை...சந்திராக்கமாக அனுபவிச்சிக் கொள்வாராகவும் (மேலது, 451)பள்ளுப்பறை சகலமும் ஆண்டு கொள்வது(மேலது, 142)

    ReplyDelete
  10. சோழர் காலத்திலேயே பள்ளர் வரி தொடங்கி விட்டது:

    மேலும் தலித்துகளுக்குரிய நிலங்கள் பறைத்துடவை (தெ.இ.க. 26, க.எ.686)

    பள்ளன் விருத்தி(தெ.இ.க.8 க.எ.151)
    என்றும் அவர்களுக்குரிய சுடுகாடு பறைச்சுடுகாடு (தெ.இ.க.4, க.எ.529, 68, 79, 83, தெ.இ. க. உ.தொகுதி 1,2, க.எ. 5)என்றும் குறிப்பிடப்பட்டுள்ளன.
    சோழர் காலத்தில்

    பள் வரி, பறை வரி
    என்ற வரிகள் நடைமுறையில் இருந்துள்ளன. சில நேரங்களில் இவ்வரி கட்டுவதிலிருந்துவிலக்களிக்கப்பட்டதையும் சில கல்வெட்டுக்கள் குறிப்பிடுகின்றன. மேலும் அரண்மனைக்குக் காணிக்கைப் பணமாக மக்கள் செலுத்தவேண்டிய வரி வாசல் காணிக்கை எனப்பட்டது. இவ்வரியிலிருந்து

    பள்ளர்களுக்கு விலக்களிக்கப்பட்டதை பள்ளக்குடிக்கு வாசல் பணம்மானியமாகவும் (தெ.இ.க. 26, க.எ.336) என்ற கல்வெட்டு வரி தெரிவிக்கின்றது.

    நாம் மேலே காட்டிய பள்ளர்கள் வரியிலிருந்து அவர்கள் சேரி வாழ் தாழ்த்த பட்டவர்கள் என்பது சோழர்கள் காலத்தில் இருந்தே நடைமுறையில் இருப்பது தெள்வாகின்றது எனவே ராஜ ராஜ சோழ தேவந்திரர் என்பது கட்டுக்கதையே..

    நாயக்கர் கால பள்ளுபறை வரி:

    நாயக்கர் காலத்திலும் அதன் பின்பு சேதுபதி தொண்டைமான் செப்பேடுகளில் பள்ளுப்பறை இறை என்ற பொது வரியே பள்ளர்களுக்கும் பறையர்களுக்கும் வித்திக்கபட்டது.புதிய ஊரில் வேளாண்மை செய்ய உழவர்களான பள்ளர்களும் கைவினைத் தொழில் செய்ய கம்மாளர்களும் குடியேற்றப்பட்டுள்ளனர். 3. கம்மாளர்களுக்கு வழங்கியதை விட குறைவான பணமே பள்ளர்களுக்கு வழங்கப்பட்டது.மேலும் இவர்கள் நிலத்துடன் கொடையாக வழங்கப்பட்டுள்ளனர். அல்லது விற்பனை செய்யப்பட்டுள்ளனர் என்பதனை சேதுபதி செப்பேடுகளில் இடம் பெறும் பின்வரும் வரிகள் உணர்த்துகின்றன.பள்ளுப்பறை சகலமும் சர்வ மானியமாக (இராசு.1994;208)பள்ளுப்பறை இறை, வரி ,ஊழியம்....ஆண்டனுபவித்துக் கொள்ளவும் (மேலது, 242)பள்ளுப்பறை...சந்திராக்கமாக அனுபவிச்சிக் கொள்வாராகவும் (மேலது, 451)பள்ளுப்பறை சகலமும் ஆண்டு கொள்வது(மேலது, 142)

    ReplyDelete
  11. பிச்சாவரம் ஜமீனில் உள்ள சோழ அரசர்கள் உடையார் பாளையும்,முகாசபரூர்,அரியலூர் போன்ற அரச வம்சத்தாரிடம் மட்டுமே திருமண உறவு கொண்டுள்ளார்கள்.அவர்கள் அனைவருமே வன்னிய மரபை சேர்ந்தவர்கள்.சிவகிரஜமீன் தான் சூத்திர சேற்றில் விழுந்து பித்ரு தோசத்தை ஏற்படுத்திவிட்டது.


    ReplyDelete
  12. வில்லவர் மற்றும் பாணர்
    ____________________________________

    பாண்டிய என்பது வில்லவர் மற்றும் பாண ஆட்சியாளர்களின பட்டமாகும். இந்தியா முழுவதும் பாணர்கள் அரசாண்டனர். இந்தியாவின் பெரும்பகுதி பாண ஆட்சியாளர்களால் ஆளப்பட்டது. இந்தியா முழுவதும் பாண்பூர் எனப்படும் ஏராளமான இடங்கள் உள்ளன. இவை பண்டைய பாணர்களின் தலைநகரங்கள் ஆகும். பாணர்கள் பாணாசுரா என்றும் அழைக்கப்பட்டனர்.

    கேரளா மற்றும் தமிழ்நாட்டை ஆண்ட வில்லவரின் வடக்கு உறவினர்கள் பாணர்கள் ஆவர். கர்நாடகாவிலும் ஆந்திராவிலும் பாணர்கள் ஆண்டனர்.

    வில்லவர் குலங்கள்

    1. வில்லவர்
    2. மலையர்
    3. வானவர்

    வில்லவரின் கடலோர உறவினர்கள் மீனவர் என்று அழைக்கப்பட்டனர்

    4. மீனவர்

    பண்டைய காலங்களில் இந்த அனைத்து துணைப்பிரிவுகளிலிருந்தும் பாண்டியர்கள் தோன்றினர். அவர்கள் துணை குலங்களின் கொடியையும் பயன்படுத்தினர். உதாரணத்திற்கு

    1. வில்லவர் குலத்தைச் சேர்ந்த பாண்டியன் சாரங்கத்வஜ பாண்டியன் என்று அழைக்கப்பட்டார். அவர் ஒரு வில் மற்றும் அம்பு அடையாளமுள்ள கொடியை சுமந்தார்.

    2. மலையர் குலத்தைச் சேர்ந்த பாண்டியன் மலையத்வஜ பாண்டியன் என்று அழைக்கப்பட்டார். அவர் மலை சின்னத்துடன் ஒரு கொடியை ஏந்தினார்.

    3. வானவர் துணைப்பிரிவைச் சேர்ந்த பாண்டியன் ஒரு வில்-அம்பு அல்லது புலி அல்லது மரம் கொடியை ஏந்திச் சென்றார்.

    4. மீனவர் குலத்தைச் சேர்ந்த பாண்டியன் ஒரு மீன் கொடியை ஏந்திச்சென்று தன்னை மீனவன் என்று அழைத்துக் கொண்டார்.

    பிற்காலத்தில் அனைத்து வில்லவர் குலங்களும் ஒன்றிணைந்து நாடாள்வார் குலங்களை உருவாக்கின. பண்டைய மீனவர் குலமும் வில்லவர் மற்றும் நாடாள்வார் குலங்களுடன் இணைந்தது.


    பிற்காலத்தில் வடக்கிலிருந்து குடிபெயர்ந்த நாகர்கள் தென் நாடுகளில் மீனவர்களாக மாறினர். அவர் வில்லவர்-மீனவர் குலங்களுடன் இனரீதியாக தொடர்புடையவர் அல்லர்.

    வில்லவர் பட்டங்கள்
    ______________________________________

    வில்லவர், நாடாள்வார், நாடார், சான்றார், சாணார், சண்ணார், சார்ந்நவர், சான்றகர், சாண்டார் பெரும்பாணர், பணிக்கர், திருப்பார்ப்பு, கவரா (காவுராயர்), இல்லம், கிரியம், கண நாடார், மாற நாடார், நட்டாத்தி, பாண்டியகுல ஷத்திரியர் போன்றவை.

    பண்டைய பாண்டிய ராஜ்யம் மூன்று ராஜ்யங்களாகப் பிரிக்கப்பட்டது.

    1. சேர வம்சம்.
    2. சோழ வம்சம்
    3. பாண்டியன் வம்சம்

    அனைத்து ராஜ்யங்களையும் வில்லவர்கள் ஆதரித்தனர்.

    முக்கியத்துவத்தின் ஒழுங்கு

    1. சேர இராச்சியம்

    வில்லவர்
    மலையர்
    வானவர்
    இயக்கர்

    2. பாண்டியன் பேரரசு

    வில்லவர்
    மீனவர்
    வானவர்
    மலையர்

    3. சோழப் பேரரசு

    வானவர்
    வில்லவர்
    மலையர்

    பாணா மற்றும் மீனா
    _____________________________________

    வட இந்தியாவில் வில்லவர் பாணா மற்றும் பில் என்று அழைக்கப்பட்டனர். மீனவர், மீனா அல்லது மத்ஸ்யா என்று அழைக்கப்பட்டனர். சிந்து சமவெளி மற்றும் கங்கை சமவெளிகளில் ஆரம்பத்தில் வசித்தவர்கள் பாணா மற்றும் மீனா குலங்கள் ஆவர்.

    பாண்டவர்களுக்கு ஒரு வருட காலம் அடைக்கலம் கொடுத்த விராட மன்னர் ஒரு மத்ஸ்யா - மீனா ஆட்சியாளர் ஆவார்.

    பாண மன்னர்களுக்கு அசுர அந்தஸ்து இருந்தபோதிலும் அவர்கள் அனைத்து சுயம்வரங்களுக்கும் அழைக்கப்பட்டனர்.

    அசாம்

    சோனித்பூரில் தலைநகருடன் அசுரா இராச்சியம் என்று அழைக்கப்பட்ட ஒரு பாண இராச்சியம் பண்டைய காலங்களில் அசாமை ஆட்சி செய்தது.

    இந்தியா முழுவதும் பாணா-மீனா மற்றும் வில்லவர்-மீனவர் இராச்சியங்கள் கி.பி .1500 வரை, நடுக்காலம், முடிவடையும் வரை இருந்தன.

    மஹாபலி

    பாணர் மற்றும் வில்லவர் மன்னர் மகாபலியை தங்கள் மூதாதையராக கருதினர். மகாபலி பட்டத்துடன் கூடிய ஏராளமான மன்னர்கள் இந்தியாவை ஆண்டனர்.

    வில்லவர்கள் தங்கள் மூதாதையர் மகாபலியை மாவேலி என்று அழைத்தனர்.

    ஓணம் பண்டிகை

    ஓணம் பண்டிகை ஒவ்வொரு ஆண்டும் கேரளாவை ஆண்ட மகாபலி மன்னர் திரும்பி வரும் நாளில் கொண்டாடப்படுகிறது. மாவேலிக்கரை, மகாபலிபுரம் ஆகிய இரு இடங்களும் மகாபலியின் பெயரிடப்பட்டுள்ளன.

    பாண்டியர்களின் பட்டங்களில் ஒன்று மாவேலி. பாண்டியர்களின் எதிராளிகளாகிய பாணர்களும் மாவேலி வாணாதி ராயர் என்று அழைக்கப்பட்டனர்.

    சிநது சமவெளியில் தானவர் தைத்யர்(திதியர்)

    பண்டைய தானவ (தனு=வில்) மற்றும் தைத்ய குலங்கள் சிந்து சமவெளியிலுள்ள பாணர்களின் துணைப்பிரிவுகளாக இருந்திருக்கலாம். தைத்யரின் மன்னர் மகாபலி என்று அழைக்கப்பட்டார்.

    இந்தியாவில் முதல் அணைகள், ஏறத்தாழ நான்காயிரம் ஆண்டுகளுக்கு முன்பு சிந்து நதியில் பாண குலத்தினரால் கட்டப்பட்டன.

    ஹிரண்யகர்பா சடங்கு

    வில்லவர்கள் மற்றும் பாணர் இருவரும் ஹிரண்யகர்பா விழாவை நிகழ்த்தினர். ஹிரண்யகர்பா சடங்கி்ல் பாண்டிய மன்னர் ஹிரண்ய மன்னரின் தங்க வயிற்றில் இருந்து வெளிவருவதை உருவகப்படுத்தினார்.
    ஹிரண்யகசிபு மகாபலியின் மூதாதையர் ஆவார்.

    ReplyDelete
    Replies
    1. Outh dynasty பாண்டிய வம்சமா

      Delete
    2. முலைவரி கேரளா ல சாணர்க்கு கொடுத்ததல மருந்த குடிச்சு செத்துடாங்களா.

      Delete
  13. சோழர்கள் வில்லவர் வம்சத்தின் வானவர் துணைக்குழுவைச் சேர்ந்தவர்கள். வனவர்கள் காட்டில் வசிப்பவர்கள். வானவர்களின் பழங்காலக் கொடியில் மரச் சின்னமும், பிற்காலத்தில் சோழர்களின் கொடி புலியாகவும் இருந்தது. புலியும் மரமும் காடுகளுடன் தொடர்புடையவை!

    ReplyDelete
  14. கடைசி வில்லவர் தலைநகரங்கள்

    கேரள வில்லவர் இடம்பெயர்வு

    துளு படையெடுப்பின் அச்சுறுத்தலை எதிர்கொண்ட
    வில்லவர் கி.பி.1102ல் கொடுங்களூரில் இருந்து கொல்லத்திற்கு குடிபெயர்ந்தனர்.
    1120 இல் பாணப்பெருமாள் என்ற துளு படையெடுப்பாளர் ஒரு நாயர் படையுடன் கேரளா மீது படையெடுத்தார். பாணப்பெருமாள் அரேபியர்களால் ஆதரிக்கப்பட்டார்.

    மாலிக் காஃபூரின் தாக்குதல்

    கி.பி 1310 இல் மாலிக் காஃபூர் பாண்டிய இராச்சியத்தை தோற்கடித்தார். அடுத்த காலகட்டத்தில் வில்லவர் மக்கள் டெல்லி சுல்தானகத்தின் துருக்கிய இராணுவத்தால் படுகொலை செய்யப்பட்டனர். விரைவில் அனைத்து தமிழ் அரசுகளும், சேர சோழ பாண்டிய வம்சங்களும் முடிவுக்கு வந்தன. வில்லவர்கள் தோற்கடிக்கப்பட்ட குலமாக மாறினர்.

    கேரள வில்லவர் கிபி 1314 க்குப் பிறகு மேலும் தெற்கே திருவனந்தபுரம் மற்றும் கன்னியாகுமரிக்கு நகர்ந்து கன்னியாகுமரி மற்றும் சேரன்மாதேவிக்கு அருகிலுள்ள கோட்டையடியில் தங்கள் தலைநகரை நிறுவினார்.
    பண்டைய வில்லவர் தலைநகரான இரணியல் (ஹிரண்ய சிம்ம நல்லூர்) ஆய் வம்சத்தால் ஆக்கிரமிக்கப்பட்டது.

    சேரன்மாதேவி

    சேரன்மாதேவியில் கேரள வில்லவர்கள் மற்றொரு கோட்டையைக் கட்டினார்கள். இது கி.பி 1383 முதல் கிபி 1444 வரை துளு-சேராய் வம்சமான ஜெயசிம்ஹவம்சத்தின் தலைநகராக செயல்பட்டது.

    கோட்டையடி

    வாய்மொழி மரபுகளில் கன்னியாகுமரிக்கு அருகில் இருந்த கோட்டையடி என்னும் சேர கோட்டை இருந்த இடம் குறிப்பிடப்பட்டுள்ளது. கோட்டையடி கடைசி சேரர் கோட்டை. வேணாட்டின் ஆய் அரசரான ராமவர்மா கோட்டையடியைச் சேர்ந்த இளவரசியை மணக்க விரும்பியபோது அவர்கள் மறுத்துவிட்டனர். 'நாடாளும் ராமவன்மனுக்கும் நாடார்கள் குலத்தில் பெண் கொடோம்' என்ற முதுமொழி இந்த நிகழ்வை அடிப்படையாகக் கொண்டது. பிற்காலத்தில் ஆய் வம்சம் வில்லவ நாடார்களின் எதிரியாக இருந்தது.

    நாடாளும் ராமவன்மனுக்கும் நாடார்கள் குலத்தில் பெண் கொடோம்.

    கி.பி.1610 இல் குழித்துறையைத் தலைநகராகக் கொண்டு வேணாட்டை ஆண்ட துளு-ஆய் மன்னன் ராமவர்மா. கி.பி.1610க்குப் பிறகு வேணாடு மன்னர்களால் கோட்டையடி அழிக்கப்பட்டது.

    தமிழ்நாட்டிலிருந்து வேணாட்டுக்கு வில்லவர் இடம்பெயர்வு

    பாண்டியர் தோல்வியைத் தொடர்ந்து ஒரு பாண்டிய குலத்தினர் விஜயநகர நாயக்கர்களின் ஆட்சியை ஏற்று தென்காசியில் இருந்து ஆட்சி செய்யத் தொடங்கினர். மற்ற சோழ மற்றும் பாண்டிய வம்சங்கள் தெற்கு நோக்கி நகர்ந்தன.

    ReplyDelete
  15. கடைசி சேர, சோழ பாண்டிய மன்னர்கள்

    சேர, சோழ பாண்டியர்கள் வில்லவர் வம்சத்தினர்

    கி.பி.1311 இல் மாலிக் காஃபூரின் படையெடுப்பிற்குப் பிறகு சேர சோழ பாண்டியன் குலத்தினர் வேணாடு, தென்காசி, திருநெல்வேலி, தூத்துக்குடி மற்றும் இலங்கை ஆகிய இடங்களுக்கு குடிபெயர்ந்தனர்.

    சேராய் குலத்தினர் தெற்கே குடிபெயர்ந்து திருவிதாங்கோடு, கோட்டையடி மற்றும் சேரன்மாதேவி ஆகிய இடங்களில் கோட்டைகளை நிறுவினர். சேரர்களின் வழித்தோன்றல்கள் வில்லவ நாடார், திருப்பாப்பு நாடார் மற்றும் மேனாட்டார் போன்றவர்களாகும்.

    பாண்டியர்கள் தங்கள் பண்டைய அரச வீட்டிற்கு குடிபெயர்ந்து 17 ஆம் நூற்றாண்டு வரை தொடர்ந்து ஆட்சி செய்தனர். தென்காசி பாண்டியர்கள் விஜயநகரப் பேரரசின் மேன்மையை ஏற்றுக்கொண்டனர். சில பாண்டிய குலத்தினர் கல்லிடைக்குறிச்சி மற்றும் அம்பாசமுத்திரம் ஆகிய இடங்களுக்கு குடிபெயர்ந்து அங்கு கோட்டைகளை நிறுவினர். பாண்டியர்கள் களக்காடு மற்றும் வள்ளியூர் ஆகிய இடங்களிலும் தங்கியிருந்தனர்.

    பாண்டிய வம்சாவளியினர் பாண்டிய குல க்ஷத்திரிய நாடார், மாற நாடார் அல்லது மானாட்டார் போன்றவர்கள்.

    சோழ பாண்டியன் கலப்பு குலம் நட்டாத்தி நாடார்கள்.

    களக்காடுக்குப் புலம் பெயர்ந்த சோழர்கள் களக்காடு என்ற இடத்தில் சோழ குல வல்லிபுரத்தில் கோட்டையைக் கட்டினார்கள்.

    பாண்டிய நாட்டை ஆண்ட கடைசி பாண்டிய மன்னன் சந்திரசேகர பாண்டியன்.

    உலகுடையப்பெருமாளும் அவரது சகோதரர் சரியகுலப்பெருமாளும் கன்னியாகுமரியில் இருந்து ஆட்சி செய்து சிறிது காலம் மதுரையை ஆக்கிரமித்தனர். அவர்கள் பட்டாணி ராகுத்தனுக்கு எதிராக போர்த்துகீசியர்களுடன் கூட்டு சேர்ந்தனர். நாடார்கள் அவர்களை முன்னோர்களாகக் கருதி அவர்களுக்குக் கோயில் எழுப்பியுள்ளனர்.

    உறையூரை ஆண்ட கடைசி சோழன் வீரசேகர சோழன். விஜயநகர நாயக்கர் தனது அரசை ஆக்கிரமித்த பிறகு, கி.பி 1529 இல் வீரசேகர சோழன் சந்திரசேகர பாண்டியர்களின் பிரதேசத்தை ஆக்கிரமித்தார். சந்திரசேகர பாண்டியனுக்கு உதவ அனுப்பப்பட்டவர் நாகம நாயக்கர். நாகம நாயக்கர் வீரசேகர சோழனைக் கொன்றார், ஆனால் அவர் பாண்டிய நாட்டை சந்திரசேகர பாண்டியரிடம் மீட்டு கொடுக்கவில்லை.

    வீரசேகர சோழன் மகனும் மகளும் இலங்கைக்கு தப்பிச் சென்றனர்.

    விஸ்வநாத நாயக்கர் வந்து நாகம நாயக்கரைக் தோற்கடித்து கிருஷ்ணதேவ ராயரிடம் கைதியாக அழைத்துச் சென்றார். விஸ்வநாத நாயக்கர் சந்திரசேகர பாண்டியனைக் கொன்று மதுரை நாயக்கர் வம்சத்தை நிறுவினார்.

    வீரசேகர சோழனின் மகன் வெங்கல தேவ மகராசன் இலங்கைக்குத் தப்பிச் சென்றான். பல வருடங்கள் கழித்து போர்த்துகீசியர்களின் எதிர்ப்பை எதிர்கொண்டு வந்து கன்னியாகுமரிக்கு அருகில் வெங்கலராசன் கோட்டை என்று ஒரு கோட்டையை கட்டினார். ஆனால் ஒரு உள்ளூர் ஆட்சியாளர், துளு-ஆய் அரசராக இருக்கலாம் வெண்கல தேவனின் மகளை திருமணம் செய்ய விரும்பினார். அதை விரும்பாத வெங்கல தேவன் பின்னர் குரும்பூர் சென்றார். அங்கேயும் எதிர்ப்புகளை எதிர்கொண்ட அவர் தற்கொலை செய்து கொண்டார். வெங்கல தேவரின் வழித்தோன்றல்கள் வெங்கலராயன் கூட்டம் என்று அழைக்கப்படுகின்றன. வெங்கலராயன் கூட்டம் நாடார் குலத்தின் துணைக்குழு ஆகும்.

    .

    ReplyDelete
  16. சான்றாரா பாண்டியன் வம்சம்

    ஜக தேவ சான்றாரா

    கிபி 1099 ஆம் ஆண்டு ஜக தேவ சான்றாரா பட்டி பொம்பூர்ச்சா புரா அதாவது ஹம்சாவில் இருந்து ஆட்சி செய்து வந்தார்.


    கலசாவின் சான்றாரா வம்சம்

    1100 இல் சான்றாரா  வம்சத்தைச் சேர்ந்த ஜகலாதேவி மற்றும் பாலராஜா மேற்குத் தொடர்ச்சி மலையில் உள்ள தங்கள் தலைநகரான கலசாவில் இருந்து ஆட்சி செய்தனர்.


    ஹோம்புஜாவின் சான்றாரா வம்சம்

    கி.பி 1103 இல் சான்றாரா மன்னன் மல்ல சாந்தா தனது மனைவி வீர அப்பரசியின் நினைவாகவும், தனது குருவான வடிகரத்தா அஜிதசேன பண்டித தேவாவின் நினைவாகவும் ஹோம்புஜாவில் ஒரு கோயிலுக்கு அடிக்கல் நாட்டினார்.


    புஜபலி சாந்தா

    கிபி 1115 இல் சான்றாரா வம்சத்தைச் சேர்ந்த புஜபலி சாந்தா ஹோம்புஜாவில் ஒரு ஜைன கோயிலைக் கட்டினார். புஜபலி சாந்தாவின் சகோதரரான நன்னி சாந்தா, சமண மதத்தை உறுதியாக பின்பற்றுபவர் ஆவார்.


    சான்றாலிகே சாளுக்கிய வம்சத்தின் கீழ் கொண்டு வரப்பட்டது

    கிபி 1116 இல் அனைத்து கடம்ப பிரதேசங்களும் அதாவது பாணவாசி, ஹங்கல் மற்றும் ஹோம்புஜா சான்றாரா வம்சத்தால் ஆளப்பட்ட சான்றாலிகே 1000 பிரதேசம், மேற்கு சாளுக்கிய மன்னர் இரண்டாம் தைலாவின் ஆதிக்கத்தின் கீழ் மீண்டும் ஒன்றிணைக்கப்பட்டன.


    சாளுக்கியருக்கும் சான்றாரா வம்சத்திற்கும் இடையிலான போர்

    கி.பி.1127ல் மேற்கு சாளுக்கிய மன்னர் தைலபாவுக்கும் சான்றாரா மன்னர் பெர்மாதிக்கும் இடையே போர் நடந்தது.

    பாணவாசி தண்டநாயகர் மாசாணைய்யா தனது மைத்துனர் காளிக நாயக்கரை அனுப்பினார், அவர் சான்றாரா மன்னரை தோற்கடித்தார், மேலும் சான்றாரா மன்னர் தனது ராஜ்ஜியத்திலிருந்து வெளியேற்றப்பட்டார்.

    1130 கிபி வரை சான்றாலிகே கடம்ப வம்சத்தின் கீழ் தொடர்ந்து இருந்தது.


    சாளுக்கிய இளவரசர் கடம்ப மன்னராக முடிசூட்டப்பட்டார்

    கி.பி 1131 இல் சாளுக்கிய மன்னன் தைலபாவின் மகன் மூன்றாம் மயூரவர்மா கடம்ப இராச்சியத்தின் அரசனாக்கப்பட்டார், அனைத்து முன்னாள் கடம்பப் பகுதிகளான ஹங்கல், பாணவாசி 12000 மற்றும் சான்றாலிகே 1000 ஆகியவை அவரது ஆட்சியின் கீழ் வந்தன.

    மாசாணைய்யா

    அரசனாக்கப்பட்ட சிறுவனான மூன்றாம் மயூரவர்மாவை தண்டநாயகர், மாசாணைய்யா என்ற மாசாணா பாதுகாத்ததாக ஹங்கலில் உள்ள வீரகல் கூறுகிறது.


    சான்றாரா மன்னரின் கீழ் சான்றாலிகே

    1172 இல் நன்னியகங்காவைத் தொடர்ந்து ஹோம்புஜாவின் மன்னனாக வந்த வீரசாந்தா "ஜினதேவன சரண கமல்காலா பிரமா" என்று அழைக்கப்பட்டார்.


    ஹொசகுண்டாவின் சான்றாரா மன்னர்கள்

    1180க்குப் பிறகு பீரதேவராசா, பொம்மராசா  மற்றும் கம்மராசா  ஹொசகுண்டா கிளை சான்றாரா  வம்சத்தின் அரசர்களாக ஆனார்கள்.

    கி.பி. 1200 இல் ஹம்சாவுக்கு அருகிலுள்ள தீர்த்தஹள்ளி மண்டலம்  சான்றாலிகே சாவிரா என்று அழைக்கப்பட்டது, இது தீர்த்தஹள்ளி பகுதி சான்றாலிகே 1000 இன் கீழ் இருந்தது என்பதைக் குறிக்கிறது. சாவிரா என்றால் கன்னடத்தில் 1000 என்று பொருள்.


    சான்றாரா வம்சத்தின் பிளவு

    கி.பி 12 ஆம் நூற்றாண்டில் சான்றாரா வம்சம் இரண்டு கிளைகளாகப் பிரிந்தது. ஒரு கிளை ஷிமோகா மாவட்டத்தின் ஹொசகுண்டாவிலும், மற்றொரு கிளை மேற்கு தொடர்ச்சி மலையில், சிக்கமகளூர் மாவட்டத்தில் உள்ள கலசாவிலும் நிறுத்தப்பட்டன.


    ஹோம்புஜாவிலிருந்து இடம்பெயர்தல்

    படிப்படியாக இந்த சான்றாரா வம்சத்தின் கிளைகள் அதாவது ஹொசகுண்டா மற்றும் கலசா கிளைகள் அல்லது கலசா கிளை மட்டுமே, தங்கள் தலைநகரங்களை கர்காலாவில் இருந்து வடகிழக்கே 14 கிமீ தொலைவில் இருந்த கெரவாஷேவிற்கும் பின்னர் கர்காலாவுக்கும் மாற்றியது, இவை இரண்டும் பழைய தென் கனரா மாவட்டத்தில் இருந்தன. எனவே அவர்கள் ஆட்சி செய்த பிரதேசம் கலசா-கர்கலா இராச்சியம் என்றும் அழைக்கப்பட்டது.


    ஹொசகுண்டா சான்றாரா வம்சம் இந்து மதத்திற்கு மாறியது

    கி.பி 1200 இல் ஹொசகுண்டா சான்றாரா வம்சத்தின் அரசர்கள், முன்பு திகம்பர ஜைனர்களாக இருந்தவர்கள் ஆனால் பின்னர் அவர்கள் சைவ இந்து மதத்தைத் தழுவினர்.

    ReplyDelete
  17. மீனா வம்சம்

    நாடார்களின் வடநாட்டு உறவினர்களான மீனா மன்னர்களின் கதை.

    மீனா குலம் அவர்களின் பெயரை மீன் என்ற திராவிட தமிழ் வார்த்தையிலிருந்து பெற்றிருக்கலாம். மீனா குலங்கள் பண்டைய வட இந்திய திராவிட ஆட்சியாளர் குலங்களின் ஒரு பகுதியாகும்.

    ராஜஸ்தானின் மீனா குலத்தினர் நாடார்களின் வடக்கு உறவினர்கள் ஆவர். மீனாக்கள் பயன்படுத்தும் மீனா பட்டம் என்பது வில்லவர்-நாடார் குலங்கள் பயன்படுத்தும் மீனவர் பட்டத்தின் மாறுபாடு ஆகும். மீனாக்கள் பயன்படுத்தும் பில்-மீனா பட்டம் நாடார்களின் வில்லவர்-மீனவர் பட்டத்திற்கு சமம்.

    நாடார் அதாவது வில்லவர் பண்டைய காலத்தில் வில்லவர், மலையர் மற்றும் வானவர் என்று மூன்று துணைக்குழுக்களைக் கொண்டிருந்தனர். வில்லவரின் கடலில் மீன்பிடிக்கும் உறவினர்கள் மீனவர் ஆவர்.

    மீனா என்பது இந்தியாவின் ராஜஸ்தான் மாநிலத்தில் முக்கியமாக வசிக்கும் ஒரு சாதி. மீனா சாதி இந்தியாவின் பழமையான சாதிகளில் ஒன்றாக கருதப்படுகிறது. வேதங்கள் மற்றும் புராணங்களின்படி மீனா சாதியினர் மத்ஸ்ய சின்னம் அல்லது மீனா சின்னத்தை அடையாளமாக கொண்டிருந்தனர். மீனா சமாஜம் மத்ஸ்ய ஜெயந்தியாகக் கொண்டாடும் அதே வேளையில், ராஜஸ்தான் முழுவதும் கங்கௌர் திருவிழா வெகு விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது. மீனா சாதியின் அடையாளம்  மீன். சமஸ்கிருதத்தில் மீன் மத்ஸ்யா என்று அழைக்கப்படுகிறது. பழங்காலத்தில்  மீனா சாதியின் அரசர்களின் கேடயத்திலும் கொடிகளிலும் மீனின் அடையாளம் பொறிக்கப்பட்டிருந்தது.

    மீனா குலம் என்பது ராஜஸ்தானில் எண்ணிக்கையில் மிகப் பெரிய பழங்குடியாகும். அவர்கள் ஒரு காலத்தில் முன்னாள் ராஜ்ஜியங்களான ஜெய்ப்பூர் மற்றும் ஆள்வார் ஆகியவற்றை ஆட்சி செய்தனர் மற்றும் அடிப்படையில் ஒரு விவசாய சமூகமாக இருந்தனர்

    சாந்தா மீனா

    பண்டைய காலங்களில் அதாவது 10 ஆம் நூற்றாண்டு வரை இந்தியாவின் வடபகுதி முக்கியமாக சௌஹான்களின் குலங்களால் ஆளப்பட்டது. ஜமீன்தார் மீனாவின் குலமான சாந்தா, சௌஹான்களின் கிளைகளில் ஒன்று. சாந்தாக்கள் இப்போது ஜெய்ப்பூரின் ஒரு பகுதியான கோகன்வ்வை ஆட்சி செய்து கொண்டிருந்தனர் மற்றும் மீனா இராச்சியத்தின் கூட்டமைப்பின் தலைவராக இருந்தனர். சாந்தா என்பது சான்றாரின் மாறுபாடு. சாந்தா மீனா என்றால் சான்றார் மீனவர் என்று பொருள்.


    கிபி 1036 வரை மீனா குலங்கள் ராஜஸ்தானின் பாரம்பரிய ஆட்சியாளர்களாக இருந்தனர். பழங்காலத்திலிருந்தே மீனா குலத்தார் ராஜஸ்தானையும் கங்கை நதிப்பகுதியையும் ஆண்டனர்.


    சிந்து சமவெளி நாகரிகம்

    சிந்து சமவெளியின் பிற திராவிட பாணா, வில்லவர், தானவ மற்றும் தைத்திய குலங்களுடன் சிந்து சமவெளியின் பழமையான குடியிருப்பாளர்களில் மீனா குலமும் இருக்கலாம்.

    குஜராத்தின் மேற்கு கத்தியவாரின் ஜெத்வா வம்சத்தின் சின்னம் இன்னும் மீன் வடிவில் உள்ளது. ஜெத்வா மக்கள் மெர் (மஹர், ராவத்) சமூகத்தைச் சேர்ந்தவர்களாகக் கருதப்படுகிறார்கள். ஜெத்வா மெரோன் குலத்தின் ஒரு வம்சக் கிளை. மெரோன் குலத்தினர் மீனா சமூகத்தைச் சேர்ந்தவர்கள். மெர்-மேரு அல்லது மலையில் வசிப்பவர்கள் என்பது வில்லவர்களின் மலையர் துணைக்குழுவுடன் ஒத்திருக்கிறது.

    மகாபாரதம்

    மகாபாரதத்தில் பாண்டவரும் திரௌபதியும் விராட மன்னனின் அரண்மனையில் ஒரு வருடம் மறைந்திருந்து வாழ்ந்தனர். மத்ஸ்ய ராஜ்ஜியத்தை ஆண்ட மீனா மன்னன் விராட மன்னன். மத்ஸ்யா என்பது மீனா குலத்தின் சமஸ்கிருத வடிவம்.


    பில்மீனாக்கள்

    மீனா ஆட்சியாளர்கள் நவீன ஜெய்ப்பூருக்கு அருகில் ஆமர் கோட்டையை கட்டினார்கள்.
    வில்லவர் மீனவர்கள் வட இந்தியாவில் பாணா-பில் மீனா என்று அழைக்கப்படுகிறார்கள். பில்மீனாக்கள் இடைக்காலத்தில் ராஜஸ்தானை ஆண்டனர். மீனா அரசர்களின் அரச பட்டம் சாண்ட மீனா அல்லது சாந்தா மீனா அதாவது சான்றார் மீனவர்.

    ஆமர்

    மீனா வம்சத்தில் பல உபகுலங்கள் இருந்தன. ஜோதா மீனா ஆட்சியாளர்களின் நினைவாக ஜோத்வாரா என்று பெயரிடப்பட்டது. ஜெய்ப்பூர் ஆட்சியாளர்களின் குடையாக இருந்தவர்கள் கெட்டா மீனா. அமீர் மீனா ராஜா அலன்சி என்பவரால் நிறுவப்பட்டது. கிபி 967 இல் ஆமர் குடியேற்றப்பட்டதற்கான சான்றுகளும் உள்ளன.


    ஜகா இனத்தவரின் பதிவுகள்

    சாந்தா குலத்துக்காக ராஜஸ்தானின் ஜகா இனத்தவர் பராமரித்த பதிவுகளின்படி, சாந்தா வம்சம் மற்றும் ராஜ்ஜியங்கள் பற்றிய கடந்தகால வரலாற்றை வெளிப்படுத்துகிறது. ஜகாஸின் கூற்றுப்படி, சாந்தா மீனாக்கள் அக்னிவன்ஷிகள் மற்றும் சௌஹான்களின் துணை குலத்தைச் சேர்ந்தவர்கள் என்று கூறப்படுகிறது

    ReplyDelete
  18. மீனா வம்சம்

    ஆலன் சிங் சாந்தா மீனா

    ஆலன் சிங் சாந்தா மீனா என்றும் அழைக்கப்படும் மீனா ராஜா ராலுன் சிங் கோகோங்கின் அரசராக இருந்தார். அவர் சாந்தா கோத்திரத்தைச் சேர்ந்தவர். அவரது ராஜ்ஜியத்தில் தஞ்சம் புகுந்த ராஜபுத்திர தாயையும் அவரது குழந்தையையும் அன்புடன் தத்தெடுத்தார். பின்னர், மீனா ராஜ்ஜியத்தை பிரதிநிதித்துவப்படுத்த மீனா ராஜா மகன் தோலா ராயை டெல்லிக்கு அனுப்பினார்.

    டெல்லி அரசர் பிருத்வி ராஜின் மகன் ஆலன் சிங் சாந்தாவின் மகளை மணந்தார். இந்த ஆலன் சிங் சாந்தா மீனா, கி.பி 1090 இல் பிற்காலத்தைச் சேர்ந்த வேறு அரசராக இருக்கலாம், ஆனால் அதே பெயரைக் கொண்டிருந்தார். இது சாந்தா மற்றும் சௌஹான்களுக்கு இடையே உள்ள தொடர்பை வெளிப்படுத்துகிறது. மற்ற சுவாரசியமான உண்மை, சௌஹான்கள் துந்தரிலிருந்து வந்தவர்கள் என்றும், வரலாற்று ரீதியாக கச்வாஹாவம்சத்திற்கு முன்பு 10 ஆம் நூற்றாண்டு வரை துந்தர் சாந்தா மீனா வம்சத்தால் ஆளப்பட்டதாகவும் கூறுகிறார்கள். துந்தர் என்பது ராஜஸ்தானின் தலைநகரான ஜெய்ப்பூரின் பழைய பெயர்.

    டோலா ராயின் துரோகம்

    இந்த உதவிகளுக்கு நன்றி செலுத்தும் வகையில் ராஜபுத்திர வளர்ப்பு மகன் தோலா ராய் ராஜபுத்திர சதிகாரர்களுடன் திரும்பி வந்து தீபாவளியன்று சடங்குகள் செய்யும் போது ஆயுதம் இல்லாத மீனாக்களை கொன்று குவித்தனர். மீனாக்கள் ராஜஸ்தானின் அசல் ஆட்சியாளர்களாக இருந்தனர், ஆனால் கிபி 1036 இல் கச்வாஹா ராஜபுத்திர குலத்தால் துரோகமாக தோற்கடிக்கப்பட்டனர். கச்வாஹா ராஜபுத்திரர்கள் மீனா குலத்திற்கு இழைத்த இந்த துரோகம் இந்திய வரலாற்றில் மிகவும் வெட்கக்கேடான மற்றும் கோழைத்தனமான செயலாகும்.

    ராஜபுத்திர படையெடுப்பாளர் தோலா ராய், மஞ்ச் என்ற இடத்தில் வாழ்ந்த மீனா குலத் தலைவரான ராவ் நாட்டோவின் செரோ பழங்குடியினரை அடிபணியச் செய்யத் தீர்மானித்தார்.
    ராஜபுத்திர படையெடுப்பாளர்கள் மீனாக்களை அடிபணியச் செய்தல்

    கச்வாஹா ராஜபுத்திர குலத்தினர்

    கச்வாஹா ராஜபுத்திர குலத்தினர் இன்றைய பீகாரில் உள்ள ரோஹ்தாஸில் ஆரம்ப காலத்தில் குடியேறியதாக நம்பப்படுகிறது, பின்னர் அந்தக் குலம் ராஜஸ்தானுக்கு குடிபெயர்ந்தது. தோலா ராய் பின்னர் ஜெய்ப்பூர் அருகே ஜாம்வா ராம்கர் என்று அழைக்கப்பட்ட மீனா குலத்தின் சிஹ்ரா கோத்திரத்தை அடிபணியச் செய்தார், மேலும் அவரது தலைநகரை அங்கிருந்து மாற்றினார்.

    டோலா ராயின் மரணம்

    டோலாராய் பின்னர் அஜ்மீரின் இளவரசரின் மருமகனானார். அதன் பிறகு டோலா ராய் 11,000 மீனாக்களுடன் போரிட்டபோது இறந்தார், ஆனால் அதற்கு முன்பு அவர்களில் பெரும்பாலோரை அவர் கொன்றார்.

    மைதுல் ராய் படையெடுப்பு

    டோலா ராயின் மகன் மைதுல் ராய், சூசாவுத் மீனாக்களிடம் இருந்து அம்பர் நகரை சதி மூலம் கைப்பற்றினார், அதன் மன்னர் ராஜா பானு சிங் மீனா, மீனா கூட்டமைப்பின் தலைவராக இருந்தார். அவர் நந்தலா மீனாக்களை அடக்கி, காட்டூர்-காட்டி மாவட்டத்தை இணைத்தார்.

    மைதுல் ராய்க்குப் பிறகு மன்னன் ஹூண்தேவ் ராஜபுத்திர அரியணைக்கு வந்தார், அவர் மீனாக்களுக்கு எதிரான போரைத் தொடர்ந்தார்.

    அவரது வாரிசான கூன்தள் மன்னன் மீனாக்களுடன் போரிட்டான், அதில் மீனாக்கள் பெரும் படுகொலை செய்யப்பட்டு தோற்கடிக்கப்பட்டனர், இது 1129 ல் துந்தர் முழுவதும் அவரது ஆட்சியை விரிவுபடுத்தியது. துந்தர் முன்பு மீனா ராஜ்ஜியமாக இருந்தது.

    கி.பி. 1342 இல் ஹரா ராஜபுத்திரரான ராவ் தேவாவால் பூந்தி நகரம் கைப்பற்றப்பட்டது மற்றும் சோபோலி முஸ்லிம் படையெடுப்பாளர்களிடம் வீழ்ந்தது.

    மீனாக்கள் அம்பர் நகரத்தை கட்டியவர்கள், அதை அவர்கள் தாய் தெய்வமான அம்பாவுக்கு பிரதிஷ்டை செய்தனர்.
    அம்பா தேவி அவர்களால் காட்டா ராணி அல்லது கணவாய் ராணி என்று அழைக்கப்பட்டார்.

    ஆமர் நகரம் இடைக்காலத்தில் துந்தர் என்று அழைக்கப்பட்டது. துந்தர் என்பது மேற்கு எல்லையில் உள்ள ஒரு பலி கொடுக்கும் மலையின் பெயர். நவீன காலத்தில் மீனா வம்சத்தின் தலைநகராக இருந்த ஆமர் நகரம் ஜெய்ப்பூர் என்று அழைக்கப்படுகிறது.

    கிபி 1037 இல் கச்வாஹா ஆட்சியாளர்கள் அதைக் கைப்பற்றினர். இங்குள்ள பெரும்பாலான கட்டமைப்புகள் முதலாம் ராஜா மான்சிங் (கி.பி. 1590-1614) காலத்தில் கட்டப்பட்டவை.

    ReplyDelete
  19. மீனா வம்சம்

    துருக்கிய தாக்குதல்

    மீனாக்கள் தற்போதைய ஹனுமான்கரின் சுனம் நகரில் குடியேறினர்.

    சுல்தான் முகமது பின் துக்ளக், சுனம் மற்றும் சமனாவின் கலகக்கார ஜாட் மற்றும் மீனாக்களின் 'மண்டல்' அமைப்பை அழித்தார், மேலும் அவர் கிளர்ச்சித் தலைவர்களை டெல்லிக்கு அழைத்துச் சென்று இஸ்லாமியர்களாக மதம் மாற்றினார்.

    முகலாய தாக்குதல்

    அம்பரின் கச்வாஹா ராஜ்புத் ஆட்சியாளர் பர்மால் எப்போதும் நஹான் மீனா ராஜ்யத்தைத் தாக்கிக்கொண்டிருந்தார், ஆனால் படா மீனாவுக்கு எதிராக பார்மால் வெற்றிபெற முடியவில்லை. அக்பர் ராவ் படா மீனாவை அவருடைய மகளை தனக்கு திருமணம் செய்து வைக்குமாறு கேட்டுக் கொண்டார் ஆனால் படா(பெரிய) மீனா மறுத்துவிட்டார். பின்னர் பார்மால் தனது மகள் ஜோதாவை அக்பருக்கு திருமணம் செய்து வைத்தார். பின்னர் அக்பர் மற்றும் பார்மாலின் கூட்டு இராணுவம் ஒரு பெரிய தாக்குதலை நடத்தி மீனா ராஜ்யத்தை அழித்தது. மீனாக்களின் கருவூலம் அக்பருக்கும் பார்மாலுக்கும் பகிர்ந்து கொடுக்கப்பட்டது. பார்மல் அம்பர் அருகே உள்ள ஜெய்கர் கோட்டையில் அந்த பொக்கிஷத்தை வைத்திருந்தார்.


    ஜெய்ப்பூர்

    கிபி 1727 வரை முன்னாள் மீனா தலைநகர் ஆமர் கச்வாஹா ராஜபுத்திரர்களின் தலைநகராக இருந்தது. ஜெய் சிங் II கிபி 1727 இல் ஜெய்ப்பூர் நகரில் குடியேறினார் மற்றும் புதிய நகரத்தில் தனது தலைநகரை உருவாக்கினார்.
    அதன் பிறகு ராஜஸ்தானின் தலைநகரம் ஆமரில் இருந்து 14 கிமீ தொலைவில் புதிதாக கட்டப்பட்ட ஜெய்ப்பூர் நகரத்திற்கு மாற்றப்பட்டது.


    மீனா வம்சத்தின் வீழ்ச்சி

    பண்டைய நூல்களில் மத்ஸ்ய ஜனபதத்தைப் பற்றிய தெளிவான குறிப்பு உள்ளது, அதன் தலைநகரம் விராட் நகர், அது இப்போது ஜெய்ப்பூரில் உள்ள வைரத் ஆகும். இந்த மஸ்த்யா பிரதேசத்தில் ஆள்வார், பரத்பூர் மற்றும் ஜெய்ப்பூர் ஆகிய பகுதிகள் அடங்கும். இன்றும் இந்தப் பகுதியில் மீனா இன மக்கள் அதிகளவில் வாழ்கின்றனர்.

    மீனா சாதியின் பதா அல்லது ஜகா எனப்படும் பழங்குடி வரலாற்றின் படி, மீனா சாதியில் 12 பால்கள், 32 தாட்கள் மற்றும் 5248 கோத்திரங்கள் இருந்தன.

    மீனா சமாஜ் மத்தியப் பிரதேசத்தின் சுமார் 23 மாவட்டங்களிலும் வசிக்கிறது.

    முதலில் மீனாக்கள் ஒரு ஆளும் சாதியாக இருந்தனர், மேலும் மத்ஸ்யாக்களின் ஆட்சியாளர்களாக இருந்தனர், அதாவது ராஜஸ்தான் அல்லது மத்ஸ்ய கூட்டமைப்பு. ஆனால் அவர்களின் சரிவு சித்தியர்களுடன் ஒருங்கிணைப்பதில் தொடங்கியது.

    ஜெய்ப்பூரில் உள்ள ஆம்பர் உட்பட ராஜஸ்தானின் முக்கிய பகுதிகளின் ஆரம்பகால ஆட்சியாளர்களாக மீனா மன்னர்கள் இருந்தனர்.

    "ஆர்.எஸ். மான்" எழுதிய 'கலாச்சாரம் மற்றும் இந்திய சாதிகளின் ஒற்றுமை' என்ற புத்தகத்தில், மீனாக்கள் ராஜபுத்திரர்களைப் போலவே க்ஷத்திரிய சாதியாகக் கருதப்படுகிறார்கள், ஆனால் வரலாற்றில் மிகக் குறைவாகவே குறிப்பிடப்பட்டுள்ளனர்.

    பழங்காலத்தில் ராஜஸ்தான் மீனா வம்ச மன்னர்களால் ஆளப்பட்டது. மீனா ராஜ்ஜியம் மீன் மாநிலம் என்று அழைக்கப்பட்டது. சமஸ்கிருதத்தில் மத்ஸ்ய ராஜ்ஜியம் ரிக்வேதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. பின்னர் பில் மற்றும் மீனாக்கள் சிந்து, ஹெப்தாலைட்டுகள் அல்லது பிற மத்திய ஆசிய படையெடுப்பாளர்களிலிருந்து வந்த வெளிநாட்டினருடன் கலந்தனர்.

    மீனா முக்கியமாக மீனம் மற்றும் சிவனை வழிபட்டார்கள். பல இந்து சாதிகளை விட மீனாக்கள் பெண்களுக்கு சிறந்த உரிமைகளைப் பெற்றுள்ளனர். விதவைகள் மற்றும் விவாகரத்து பெற்றவர்களின் மறுமணம் ஒரு பொதுவான நடைமுறை மற்றும் மீனா சமூகத்தில் நன்கு ஏற்றுக்கொள்ளப்பட்டது. இத்தகைய நடைமுறைகள் வேத நாகரிகத்தின் ஒரு பகுதியாகும்.

    துருக்கியர்களின் படையெடுப்பின் ஆண்டுகளில், மற்றும் 1868 இல் கடுமையான பஞ்சத்தின் விளைவாக, அழிவின் அழுத்தத்தின் கீழ் பல கொள்ளைக் குழுக்கள் உருவாக்கப்பட்டன. இதன் விளைவாக, பசியால் வாடும் குடும்பங்கள் தங்கள் பாரம்பரியத்திலிருந்து விலகி கால்நடைகளைத் திருடி உண்ணும் நிலைக்குத் தள்ளப்பட்டனர்.

    ஆங்கிலேய அரசு மீனா குலங்களை "குற்றப்பரம்பரை " என்று முத்திரை குத்தியது. இந்த நடவடிக்கை ராஜஸ்தானில் உள்ள ராஜபுத்திர ராஜ்யத்துடன் உண்டாய ஆங்கிலேய கூட்டணியை ஆதரிப்பதற்காக எடுக்கப்பட்ட முடிவு. மீனா பழங்குடியினர் இன்னும் ராஜபுத்திரர்களுடன் போரிட்டுக் கொண்டிருந்தனர், அவர்கள் இழந்த ராஜ்யங்களைக் கைப்பற்றுவதற்காக கொரில்லா தாக்குதல்களில் ஈடுபட்டனர்.

    இடைக்காலத்தின் முகலாய பதிவுகள் முதல் பிரிட்டிஷ் ராஜ்ஜின் பதிவுகள் வரை, மீனாக்கள் வன்முறையாளர்கள், கொள்ளையடிக்கும் குற்றவாளிகள் மற்றும் சமூக விரோத இன பழங்குடியின குழுவாக விவரிக்கப்படுகிறார்கள்.

    ReplyDelete
  20. வில்லவர்-பாண வம்சங்களின் பட்டங்கள்

    ஆந்திராவின் பாண இராச்சியம்

    பாணா, மகாபலி வாணாதி ராயர், மகாவிலி வாணாதிராயர், வன்னியர் வாணாதிராஜா, வாணவ ராயர், வாண அடியார், ஸாண்ணா, பலிஜா, நாய்க்கர், மணவாளன், கண்ட கோபாலன், சோடா


    கோலார் பாண இராச்சியம்

    பாணா, வாணாதிராயர், வாணர், மகாபலி வாணாதிராயர், வன்னியர் முடியெடா மணவாளன், திருமாலிருஞ்சோலை வாணன், பொன்பரப்பினான்.


    கவுட்

    செட்டி பலிஜா


    கலிங்க பாணா ராஜ்யம்- ராமநாடு- ஆரியச்சக்கரவர்த்தி இராச்சியம்

    கங்கை பிள்ளை வாணாதிராயர், பிள்ளை குலசேகர வாணாதிராயர், வன்னியர், கலிங்க வில்லவன், தனஞ்சய, மாகோன், குலசேகர சிங்கை ஆரியன்


    மகாராஷ்டிரா

    பண்டாரி


    வட இந்திய பாணா-மீனா ராஜ்ஜியங்கள்

    வில்லவர் -மீனவர் பட்டம் மற்றும் பில்-மீனா பட்டங்கள்

    1. வில்லவர் = பில்
    2. மலையர்= மெர், மெஹ்ர், மெஹர், மேரோன், மேவார், மேவாசி, கோமலாடு
    3. வானவர்= பாண, வாண
    4. மீனவர்= மீனா
    5. நாடார், நாடாள்வார்= நாடாலா, நாட்டார்வால்
    6. சான்றார், சாந்தார்= சாந்தா
    7. சேர = செரோ


    ராஜஸ்தானின் மீனா வம்சம்

    சாந்தா மீனா, மீனா, பில்-மீனா, நாடாலா, நாட்டாலா, நாட்டார்வால், கோமலாடு


    பில் குலங்கள்

    பில், பில்-மீனா, பில் கராசியா, தோலி பில், துங்ரி பில், துங்ரி கராசியா, மேவாசி பில்,  ராவல் பில், தாட்வி பில், பாகாலியா, பில்லாளா, பாவ்ரா, வாசவா மற்றும் வாசவே.


    வட இந்தியாவின் பாண வணிகர்கள்

    பாணியாபாணியா, பணியா, வாணியா, வைஷ்ணவ் வாணியா, குப்தா


    ராஜபுத்திர குலங்கள்

    அக்னிவன்ஷி ராஜபுத்திரர்கள், சௌஹான்


    குண்டேஷ்வர் பாண்பூர் திக்காம்கர் பாண்டியர்கள், மத்திய பிரதேசம்

    பாண்டியா, பாண்டா, குந்தேஷ்வரின் பாண்டியர்கள், பக்வார் க்ஷத்திரியர், பக்வார் ராஜ்புத்திரர்கள்


    திர்கார்

    அக்னி, வன்னி, திர்பாண்டா, திர்போண்டா, திர்காலா, பாணவாடி, பாணி சாத், பாண்வாதி, காம்னாகர், காமாங்கர், காம்னாகர், ரன்சாஸ், திட்காட், திர்பண்டா, திர்கர், திர்மாலி, திர்வார், திட்கர், திரிதார்


    பாஞ்சால நாடு மற்றும் தமிழ்நாட்டின் பல்லவ பாணர்கள்

    வன்னியர், வன்னிய குல க்ஷத்திரியர், அக்னிகுல க்ஷத்திரியர், காடுவெட்டி, திகளர், வட பலிஜா, சவலக்காரர், சவளர், வன்னே காப்பு, பள்ளே காப்பு, நாய்க்கர், வன்னிய கவுண்டர்


    சோனிப்பூர் அஸ்ஸாமின் பாண இராச்சியம்

    அசுரா, பாணா, மகாபலி


    சிந்து நதிதீர நாகரிகத்தின் பாண குலங்களின் பட்டங்கள்

    மகாபலி, தானவர், தைத்தியர், அசுரர்


    ________________________________

    ReplyDelete
  21. இந்தியாவின் மூன்று இனங்கள்

    இந்தியாவின் மூன்று இனங்கள் திராவிடர், ஆரியர் மற்றும் நாகர்கள்.
    திராவிடர்கள் இந்தியாவில் உருவான இந்தியாவின் பூர்வீக பூர்வகுடிகள்.

    1. திராவிடர்
    2. ஆரியர்
    3. நாகர்


    திராவிடர்கள்

    பாணர்கள், வில்லவர்கள், மீனவர் பில், மீனா, தானவர், தைத்தியர்கள் ஆகியோர் ஆரியர்களுக்கு முந்திய திராவிட மக்கள் ஆவர். அவர்கள் இந்தியா முழுவதையும் ஆண்டனர். பாண்டிய இராச்சியம் வரலாற்றுக்கு முந்தைய காலத்தில் நெருங்கிய தொடர்புடைய வில்லவர்-மீனவர் மக்களால் நிறுவப்பட்டது. வட இந்தியாவில் இப்போது ஆதிக்கம் செலுத்தும் பணியாக்கள் திராவிட பாணர்களிலிருந்து உருவாகியிருக்கலாம். இந்தோ-ஆரியர்கள் பாணர்களை அசுரர்கள் என்று அழைத்தனர்

    பண்டைய சங்க இலக்கியங்களின்படி, பாண்டிய மன்னன் காய்சின வழுதி பாண்டிய வம்சத்தை கிமு 9990 இல் நிறுவினார், அதாவது 11,971 ஆண்டுகளுக்கு முன்பு. வில்லவர் சாம்ராஜ்யங்கள் வில்லவர், மலையர், வானவர் போன்ற வில்லவர் குலத்தவர்களாலும் கடல்கடந்த குலமான மீனவர்களாலும் ஆதரிக்கப்பட்டன.
    வில்லவர் உயர்குடியினர் நாடாள்வார் அல்லது சான்றார் என்று அழைக்கப்பட்டனர்.


    இந்தோ-ஆரியர்கள்

    கிமு 1800 இல் இந்தோ-ஆரியர்கள் ஹரஹ்வைதி நதிக்கு அதாவது அர்கந்தாப் நதி பகுதிக்கு இடம்பெயர்ந்தனர். கிமு 1800 முதல் கிமு 1750 வரை அவர்கள் சிந்து சமவெளி நாகரிகத்தைத் தாக்கி அங்கு அவர்கள் குடியேறினர்.

    கிமு 1500 முதல் கிமு 1100 வரை இந்தோ-ஆரியர்கள் பாகிஸ்தானில் ஸ்வாட் பள்ளத்தாக்கில் குடியேறினர். அந்தக் காலத்தில் ரிக்வேதம் எழுதப்பட்டது. கிமு 1100 இல் இந்தோ-ஆரியர்கள் பஞ்சாப் மற்றும் உத்தரப்பிரதேசத்தில் குடியேறினர்! கிமு 1100 முதல் கிமு 500 வரையிலான இந்தோ-ஆரிய கலாச்சாரம் பிந்தைய வேத காலம் அல்லது வர்ணம் பூசப்பட்ட சாம்பல் சாமான் கலாச்சாரம் என்று அழைக்கப்பட்டது. கிமு 6 ஆம் நூற்றாண்டில் வேத யுகத்தின் பிற்பகுதியின் முடிவில் ராமாயணம் மற்றும் மகாபாரதத்தில் கூறப்பட்ட நிகழ்வுகள் தொடர்ச்சியாக நிகழ்ந்தன. யுதிஷ்டிரனின் ராஜசூய யக்ஞத்திற்குப் பரிசுகளைக் கொண்டு வரும் குருக்ஷேத்திரப் போரில் சிங்கள மன்னன் பங்கேற்றதை மகாபாரதம் குறிப்பிடுகிறது. சிங்கள சரித்திரம் மகாவம்சத்தின் படி சிங்கள இராச்சியம் இளவரசர் விஜயனால் நிறுவப்பட்டது கி.மு 543 இலாகும், .


    சித்தியன் படையெடுப்பு

    கிமு 150 இல் ஆரிய குலமாக இருந்த சித்தியன் - சாகா மக்களின் படையெடுப்பிற்குப் பிறகு, பழைய இந்தோ-ஆரிய கலாச்சாரம் முற்றிலும் மறைந்து விட்டது. பிராமணர்கள் பல்லின தோற்றமுள்ளவர்கள் மற்றும் பல பிராமணர்கள் சித்தியர்களிடமிருந்து உருவாகியிருக்கலாம். கிபி 460 இல் ஹூனா மற்றும் ஹெப்தாலைட்டுகள் இந்தியாவைத் தாக்கினர். ஹெப்தாலைட்டுகள் அல்லது வெள்ளை ஹுனா ஆரம்பகால துருக்கிய குலங்கள். சித்தியர்களிடமிருந்து, ஹூனாக்கள் மற்றும் ஹெப்தாலைட்டுகள் ராஜ்புத் குலங்கள் உருவாகின. சித்தியர்களிடமிருந்தும் ஜாட்கள் உருவாகியிருக்கலாம்.


    சித்தியன் மற்றும் ஹூணர்களுடன் இந்தோ-ஆரிய கலவை

    இவ்வாறு வட இந்தியப் பண்பாடு என்பது திராவிடர், இந்தோ-ஆரியர்கள், பார்த்தியர்கள், சித்தியர்கள், ஹூணர், ஹெப்தாலைட்டுகள் போன்றவர்களின் கலவையாகும்.
    வட இந்தியாவில் ராஜ்புத்திரர், ஜாட், கத்ரி, மராத்தியர் போன்ற பெரும்பாலான ஆதிக்க மக்கள் சித்தியர்கள் மற்றும் ஹூண படையெடுப்பாளர்களிடமிருந்து உருவாகியிருக்கலாம். காயஸ்தர்கள் குஷான படையெடுப்பாளர்களிடமிருந்து உருவாகியிருக்கலாம். உண்மையான இந்தோ-ஆரியர்கள் இன்று இல்லை. வட இந்தியர்களில் பெரும்பாலானோர் ஹிந்தி பேசினாலும் அவர்கள் இன ரீதியாக வேறுபட்டவர்கள்.

    வேத ஆரியர்களாக நடிக்கும் வட இந்தியர் உண்மையில் சித்தியனாகவோ, ஹூணனாகவோ அல்லது துருக்கியராகவோ இருக்கலாம். பிராமணர்கள் உட்பட அவர்களில் பலர் பாரசீக மொழியிலும், வேதங்களில் இல்லாத மத்திய ஆசிய மொழிகளிலும் குடும்பப்பெயர்களைக் கொண்டுள்ளனர்.

    சித்தியன் படையெடுப்பிற்குப் பிறகு, இந்தோ-ஆரிய பிராமணர்கள் சூரிய வம்சத்தைச் சேர்ந்த இக்ஷவாகு மற்றும் சந்திர வம்சத்தைச் சேர்ந்த யாதவர்கள் போன்ற தங்கள் சொந்த மன்னர்களைக் கைவிட்டனர். இந்தோ-ஆரிய பிராமணர்கள் ராஜபுத்திர ராஜ்யங்களை நிறுவிய சித்தியன் மற்றும் ஹூண படையெடுப்பாளர்களுடன் இணைந்தனர்.


    மகாபாரத குலங்கள்

    மகாபாரத காலத்திலிருந்த யாதவர்கள், இக்ஷவாகு, குஷ்வாஹா, சாக்கியர், மௌரியர் போன்ற குலங்கள் உத்தரப்பிரதேசத்தில் இன்னும் பலமற்றவை. அவர்கள் ஒப்பீட்டளவில் கருமையான நிறமுள்ளவர்கள். இவர்கள் அனைவரும் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர்கள்.

    ReplyDelete
  22. இந்தியாவின் மூன்று இனங்கள்

    நாகர்கள்

    நாகர்கள் இந்தோ-ஆரியர்களுடன் சேர்ந்து இடம்பெயர்ந்திருக்கலாம். ரிக்வேதத்தில் நாக மன்னன் நஹுஷன் குறிப்பிடப்படுகிறார். நாகர்கள் இந்தோ-ஆரியர்களின் கூட்டாளிகள்.

    திராவிட பாண, மீனா, தானவ மற்றும் தைத்திய குலங்களுக்கு எதிராகப் போரிட்ட ஆரிய மன்னர்கள் இந்திரன் என்று அழைக்கப்பட்டனர். சிந்து சமவெளியில் ஆட்சி செய்த பண்டைய வில்லவர்-பாணர்களின் மூதாதையரான மஹாபலி மன்னர் இந்திரன் மற்றும் அவரது சகோதரர் உபேந்திரா ஆகியோரால் கொல்லப்பட்டனர்.

    நாகர்களின் மன்னன் நஹுஷன் இந்தோ-ஆரியர்களின் மன்னரானார் மற்றும் இந்திரன் என்ற பட்டத்தை ஏற்றுக்கொண்டார். நஹுஷன் ஆரிய முனிவர்களை மதிக்கவில்லை. நஹுஷன் ரிஷிகளிடம் தான் அமர்ந்திருந்த பல்லக்கைச் சுமக்கச் சொன்னார். இது அவரது வீழ்ச்சிக்கு வழிவகுத்தது.

    நவீன இந்தி ஆரிய மற்றும் நாகா மொழிகளில் இருந்து உருவானது எனவே தேவநாகரி என்று அழைக்கப்பட்டது. நாகர்கள் நகரம் அல்லது நகர் எனப்படும் பல நகரங்களை கட்டியதாக புகழ் பெற்றுள்ளனர்.
    யாதவர்களும் பாண்டவர்களும் நஹுஷாவின் குலத்திலிருந்து வந்த நாகர்கள். நாகர்கள் நஹுஷா மற்றும் அவரது இந்திர குலத்திலிருந்து வந்தவர்கள் என்று கூறினர்.

    கிமு ஆறாம் நூற்றாண்டில் பல நாகர்கள் புத்த மதத்திற்கு மாறியதால் இந்தோ-ஆரியர்களுக்கும் நாகர்களுக்கும் இடையே பகை தொடங்கியது. ஆரிய ஒடுக்குமுறையை எதிர்கொண்டு அவர்களில் பலர் இலங்கை மற்றும் தென்னிந்தியாவின் கடலோரப் பகுதிகளுக்கு குடிபெயர்ந்தனர்.


    முற்குகர்

    முற்குகர் என்பவர்கள் கங்கைப் பகுதியில் இருந்து வந்த சிங்கர், வங்கர் மற்றும் காலிங்கர் என அழைக்கப்படும் குகன் குலத்தைச் சேர்ந்த மூன்று குலங்கள் ஆவர். முற்குகர் ஒரிசாவிற்கும் பின்னர் இலங்கைக்கும் குடிபெயர்ந்தனர்.
    முற்குஹர் குடியேற்றம் கிமு 543 இல் இளவரசர் விஜயா சிங்கள இராச்சியத்தை நிறுவ வழிவகுத்தது.
    நவீன சிங்கள-கலிங்க வம்சங்கள், மறவர் மற்றும் முக்குவர் ஆகியோர் இந்த முற்குஹரின் வழித்தோன்றல்கள்.


    மறவர்

    குகன் குலத்தைச் சேர்ந்த மறவர் கங்கை பகுதியில் மீனவர்களாக இருந்தனர். மட்டக்களப்பு மான்மியத்தின்படி மறவர்கள் அயோத்திக்கு அழைத்துச் செல்லப்பட்டு, அவர்களுக்கு அயோத்தியில் பதவிகளை ஸ்ரீராமர் வழங்கினார். மறவர் ஸ்ரீராமருடன் சேர்ந்து கிமு ஆறாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் இயக்கர் அரசன் ராவணனை தோற்கடித்தனர்.

    மறவர்களில் பலர் மீண்டும் வந்து இலங்கையை ஆக்கிரமித்து அங்கேயே குடியேறினர். மறவர் இலங்கையை ஒட்டிய பகுதிகளான ராமநாடு போன்றவற்றிலும் குடியேறினர்.. மட்டக்களப்பு மான்மியத்தின்படி மறவர் இராமநாட்டை வட இலங்கை என்று அழைத்தனர். முக்குவர்கள் மறவர் இனத்துடன் தொடர்புடையவர்கள் மற்றும் அவர்கள் இருவரும் குகன் குலத்திலிருந்து வந்தவர்கள்.. முக்குவர் தமிழ்நாடு, கேரளா மற்றும் துளுநாட்டின் கடலோரப் பகுதிகளில் குடியேறினார்கள். முக்குவர் மறவர் போன்ற மீனவர்கள்.

    மறவர் இடம்பெயர்வு பாதை

    1.மறவர்- குகன்குலத்தோர்
    சரயு-கங்கை நதிப் பகுதியிலிருந்து அவர்கள் வங்காளம் மற்றும் கலிங்கத்திற்கு குடிபெயர்ந்து கிமு 560 இல் சிங்க, வங்க மற்றும் கலிங்க ராஜ்ஜியங்கள் என்று மூன்று அரசுகளை நிறுவினர். இந்த மூன்று குஹன் குலங்கள் கடல் வழியாக இலங்கை மீது படையெடுத்தனர். தொடர்ந்து கிமு 543 இல் சிங்கள இராச்சியம் நிறுவப்பட்டது. மட்டக்களப்பு மஹான்மியத்தின்படி சிங்கர், வங்கர், கலிங்கர் ஆகிய மூன்று குகன் குலங்களிருலிருந்து முற்குஹர், அதாவது சிங்களவர், மறவர், முக்குவர் ஆகிய மூன்று குலங்களும் பரிணமித்தன. மறவர் பின்னர் இந்தியாவின் அண்டிய பகுதிகளை அதாவது ராமநாடு பகுதியை ஆக்கிரமித்து அதை வடக்கு இலங்கை என்று அழைத்தனர். இதேபோல் மறவர் இனத்துடன் தொடர்புடைய முக்குவர் தென்னிந்தியாவின் கடலோரப் பகுதிகளை ஆக்கிரமித்திருந்தார்கள்.

    ReplyDelete
  23. இந்தியாவின் மூன்று இனங்கள்

    கல்வார்-கள்ளர்-களப்பாளர்

    சித்தியர்களின் படையெடுப்பு நாகர்களை தென்னிந்தியாவிற்கு பெரிய அளவில் வெளியேறத் தூண்டியது. வட இந்தியாவின் கல்வார் குலங்கள் கிமு இரண்டாம் நூற்றாண்டில் சேதி நாட்டிலிருந்து ஒரிசாவிற்கு குடிபெயர்ந்து அங்கும் ஒரு சேதி சாம்ராஜ்யத்தை நிறுவினர். வட இந்திய கல்வார் குலங்கள் தென்னிந்தியாவில் கள்வர் அல்லது களப்பிரர் என்று அழைக்கப்பட்டனர். களப்பிரர்களிடமிருந்து நவீன கள்ளர் சமூகம் மற்றும் களப்பாளர் என்று அழைக்கப்படும் வெள்ளாளர்கள் வம்சாவளியினர் தோன்றினர். வேளாளர்களை கலிங்க வேளாளர் என்றும் அழைப்பர்.

    கிமு 100 இல் காரவேளா என்ற கலிங்க ஆட்சியாளரின் கீழ் வெள்ளாளர்கள் வட தமிழகத்தை ஆக்கிரமித்தனர். கி.பி 250 இல் பெங்களூருக்கு அருகிலுள்ள நந்தி மலையிலிருந்து ஆட்சி செய்த களப்பிரர் சேர, சோழ மற்றும் பாண்டிய ராஜ்ஜியங்களைக் கைப்பற்றினர். இவ்வாறு சேர சோழ பாண்டிய ராஜ்ஜியங்களை ஆண்ட வில்லவர் வம்சங்கள் சேதி சாம்ராஜ்யத்திலிருந்து வந்த நாக குலங்களால் கீழ்ப்படுத்தப்பட்டன.


    வேளாளர் இடம்பெயர்ந்த பாதை

    வேளாளரும் கல்வாரும் சேதி ராஜ்ஜியத்திலிருந்து கலிங்க நாட்டிற்கு குடிபெயர்ந்து கிமு இரண்டாம் நூற்றாண்டில் அங்கு ஒரு சேதி சாம்ராஜ்யத்தை நிறுவினர். கிமு 100 வாக்கில் காரவேளா மன்னரின் கீழ் வெள்ளாளர் வட தமிழகத்தை ஆக்கிரமித்தார். அவர்கள் காரவேளரின் வேலைக்காரர்கள் என்பதால் வேள்-ஆளர் என்று அழைக்கப்பட்டனர். வட சோழப் பகுதி வேளாளர் என்று அழைக்கப்படும் முற்காலக் களப்பிரர்களின் கைகளில் இவ்வாறு வீழ்ந்தது. இந்த பகுதி கலிங்கன் மன்னன் காரவேளனின் நிலம் என்று பொருள்படும் கார் என்று அழைக்கப்பட்டிருக்கலாம். வேளாளரை கார்காத்த வேளாளர் என்றும் அழைத்தனர். வேளாளர்கள் கலிங்க வேளாளர் என்றும் அழைக்கப்பட்டனர். வேளாளர்களின் தலைவர்கள் வேளிர் என்று அழைக்கப்பட்டனர், அவர்கள் நாக-யாதவ வேர்களைக் கொண்டிருந்திருக்கலாம்.

    கள்ளர் இடம்பெயர்வு பாதை

    வட இந்திய கல்வார் முதன்முதலில் கி.மு. 2 ஆம் நூற்றாண்டில் சேதி சாம்ராஜ்யத்திலிருந்து ஒரிசாவிற்கு குடிபெயர்ந்தனர். பின்னர் இந்த கல்வார் அல்லது கள்ளர் பெங்களூருக்கு அருகிலுள்ள நந்தி மலையில் ஸ்ரீ கள்வர் நாடு என்ற பெயரில் ஒரு ராஜ்யத்தை நிறுவினர். ஸ்ரீ கள்வர் ராஜ்யத்தின் மன்னர்கள் வலையர் என்று அழைக்கப்படும் தெலுங்கு முத்தரையர், அவர்கள் உள்நாட்டு மீனவர்கள். கி.பி 250 இல் கள்வர்-களப்பிரர்கள் சேர, சோழ மற்றும் பாண்டிய ராஜ்ஜியங்களை ஆக்கிரமித்து கைப்பற்றினர்.


    கங்கர்

    கி.பி 200 இல் கங்கை நதி தீரத்திலிருந்து குடிபெயர்ந்தவர்கள் கங்கர் அல்லது கொங்குகள் என்று அழைக்கப்பட்டவர்கள். கங்க மக்களிடமிருந்து நவீன வொக்கலிகா கவுடா மற்றும் கவுண்டர்கள் தோன்றினர். கொங்கு வேளாளர்கள் தங்கள் கங்க இக்ஷவாகு வம்ச மன்னர் அவினிதாவின் (கி.பி. 469 முதல் கி.பி 529 வரை) ஆட்சியின் போது தமிழ்நாட்டின் கொங்கு பகுதியை ஆக்கிரமித்தனர்.

    வில்லவர் சேரர்கள் தங்கள் தலைநகரான கருவூரையும் கொங்கு மண்டலத்தையும் கொங்கு வேளாளர் என்று அழைக்கப்படும் கங்கைக் குடியேற்றக்காரர்களிடம் இழந்தனர். கி.பி ஆறாம் நூற்றாண்டில் சேர தலைநகர் கேரளாவில் உள்ள கொடுங்களூருக்கு மாற்றப்பட்டது

    ReplyDelete
  24. இந்தியாவின் மூன்று இனங்கள்

    இந்திர குலம்

    கள்ளர், மறவர், அகமுடையார் மற்றும் வெள்ளாளர் உட்பட தமிழகத்தின் பெரும்பாலான நாக குலங்கள் இந்திரனின் வழிவந்ததாகக் கூறுகின்றனர். நாக மன்னன் நஹுஷன் இந்திரன் ஆன பிறகு நாக குலத்தினர் தங்களை இந்திர குலத்தைச் சேர்ந்தவர்களாக அடையாளப்படுத்தியிருக்கலாம்.

    கள்ளர், மறவர் மற்றும் வெள்ளாளர் போன்ற நாக குலங்கள், இந்திர குலம் மற்றும் பார்கவ குலத்தைச் சேர்ந்த நாகர்கள் சேர, சோழ மற்றும் பாண்டிய வம்சங்களை நிறுவியதாக வேண்டுமென்றே கூறுகின்றனர். உண்மையில் இந்திரன் மற்றும் நாகர்கள் சேர, சோழ பாண்டிய ராஜ்ஜியங்களை நிறுவிய திராவிட வில்லவர்-மீனவர் மக்களுக்கு எதிரிகளாக இருந்தனர். நாயர்கள் போன்ற நாகர்கள் அரசன் மயூரவர்மாவால் அடிமைப் போராளிகளாகக் கொண்டு வரப்பட்டனர். நாகர்கள் புத்த மதத்திற்கு மாறிய பிறகு ஆரிய பிராமண சுங்க வம்சத்தின் அடக்குமுறையை நாகர்கள் எதிர்கொண்டனர். இது தென்னிந்தியா மற்றும் இலங்கைக்கு நாகர்கள் மற்றும் நெருங்கிய தொடர்புடைய யாதவர்களின் வெளியேற்றத்திற்கு வழிவகுத்தது. ஆரிய பிராமணர்களின் கோபத்திலிருந்து தப்பிக்க நாகர்கள் தெற்கு நோக்கி இடம்பெயர்ந்தனர். இலங்கை நாகர்கள் இன்னும் பௌத்த மதத்தைத் தக்க வைத்துக் கொள்கின்றனர்.

    மருதநாயகம் பிள்ளையின் வஞ்சகம்

    ஆற்காடு நவாபின் ஆதரவைப் பெற மருதநாயகம் பிள்ளை இஸ்லாத்தைத் தழுவினார். மருதநாயகம் பிள்ளை போர்த்துகீசிய லூசோ இந்தியப் பெண்ணான மார்ஷாவை மணந்து அவர் மூலம் ஒரு மகனைப் பெற்றெடுத்தார்.
    பின்னர் மருதநாயகம் பிள்ளை, வட இந்தியாவிலிருந்து வந்த தனது மூதாதையரான மருதநாயகப் பாண்டியன் மதுரையில் பாண்டிய வம்சத்தை நிறுவியதாகக் கூறி ஆற்காடு நவாபின் அமைச்சராக இருந்த செஸ்டர்ஃபீல்டின் 4வது ஏர்ல் பிலிப் ஸ்டான்ஹோப்பை ஏமாற்றினார். மருதநாயகம் பிள்ளையும் தனது குடும்பம் கிறித்தவர் என்று கூறிக் கொண்டார். மருதநாயகம் பிள்ளை மற்றும் களப்பிரர் வம்சாவளியைச் சேர்ந்த பிற வேளாளர்கள் தாங்கள் வில்லவர்களின் பாண்டிய வம்சத்தைச் சேர்ந்தவர்கள் என்று பொய்யாகக் கூறி, ஆங்கிலேயர்களின் கீழ் உயர் அந்தஸ்தை அனுபவித்தனர். மருதநாயகம் பிள்ளையின் மகன் ஆங்கிலேயர்களால் கிறிஸ்தவராக வளர்க்கப்பட்டார். ஆனால் விரைவில் ஆங்கிலேயர்கள் மருதநாயக பாண்டியன் கதை பொய் என்பதை உணர்ந்தனர், அதை அவர்கள் தங்கள் புத்தகங்களில் குறிப்பிடவில்லை.

    நாயர்கள், கள்ளர், மறவர் மற்றும் வெள்ளாளர் போன்ற பெரும்பாலான நாகர்கள் தமிழ்நாடு மற்றும் கேரளாவை பூர்வீகமாகக் கொண்டவர்களாக நடிக்கின்றனர். சேர, சோழ, பாண்டிய ராஜ்ஜியங்கள் ஆரிய-நாக மன்னன் இந்திரனின் குலத்தைச் சேர்ந்த நாகர்களால் உருவாக்கப்பட்டதாக அவர்கள் கூறுகிறார்கள்.

    கிமு 6 ஆம் நூற்றாண்டில் நாகர்கள் தென்னிந்தியாவிற்கு இடம்பெயரத் தொடங்குவதற்கு பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே திராவிட வில்லவர்-மீனவர் குலத்தைச் சேர்ந்த சேர, சோழ மன்னர்கள் தமிழ் அரசுகளை நிறுவினர். முத்தரப்பு தமிழ் மன்னர்கள் எந்த நாக-களப்பிரர் குலத்தவருடனும் இன ரீதியாக தொடர்புடையவர்கள் அல்ல.


    நாகர்கள் துருக்கியர்கள் மற்றும் அரேபியர்களுடன் நட்பு கொள்வது

    கி.பி.1120ல் சில நாயர்களும், கி.பி.1335ல் வெள்ளாளர்களும் கள்ளர்களும் இஸ்லாத்தைத் தழுவி அரேபியர்கள் மற்றும் துருக்கியர்களின் வலுவான கூட்டாளிகளாக மாறினர். ஆங்கிலேயர்களும் துருக்கியர்களின் கூட்டாளிகளுடன் கூட்டு வைத்தனர். தமிழ்நாட்டிலிருந்து ஆரம்பகால முஸ்லீம் மதம் மாறியவர்கள் சோழியர் என்று அழைக்கப்பட்டனர்.

    கி.பி 1311 இல் மாலிக் காஃபர் படையெடுப்பு தமிழ்நாடு மற்றும் கேரளாவில் உள்ள அனைத்து தமிழ் வில்லவர் ராஜ்யங்களையும் அழித்தது.
    நாக குலங்கள் அரேபியர்கள் மற்றும் துருக்கியர்களுடன் கூட்டணி வைத்து அவர்களுடன் திருமண உறவுகளை கொண்டிருந்தனர். கிபி 1335 முதல் கிபி 1377 வரை மாபார் சுல்தானகத்தின் ஆட்சியின் போது பல நாகர்கள் இஸ்லாமிற்கு மாற்றப்பட்டனர், ஆனால் கிபி 1377 க்குப் பிறகு நாயக்கர் ஆட்சியின் போது அவர்கள் மீண்டும் இந்து மதத்திற்கு மாற்றப்பட்டனர்.
    ஆனால் கள்ளர்கள் 20 ஆம் நூற்றாண்டின் இறுதி வரை விருத்தசேதனம் செய்யும் சடங்கைத் தொடர்ந்தனர். கள்ளர் திருமணங்களில் மணமகனின் சகோதரி மட்டுமே மணமகளின் கழுத்தில் தாலி கட்டுவார். தாலியில் சந்திரன் மற்றும் நட்சத்திரத்தின் உருவங்கள் பொறிக்கப்பட்டிருக்கினறன.

    கிபி 1311 இல் மாலிக் காஃபுர் படையெடுப்பிற்குப் பிறகு நாயர், கள்ளர், மறவர், வெள்ளாளர் போன்ற நாக குலங்கள் கேரளா மற்றும் தமிழகத்தின் ஆட்சியாளர்களாக ஆனார்கள்.

    ReplyDelete
  25. இந்தியாவின் மூன்று இனங்கள்

    வாணாதிராயர்கள்

    கி.பி.1377ல் விஜயநகர நாயக்கர் தாக்குதலின் பின்பு வாணாதிராயர் எனப்படும் பல தெலுங்கு பாண தலைவர்கள் கள்ளர், வெள்ளாளர், மறவர் போன்ற நாக குலங்களின் பிரபுக்களாக மாறினர்.

    இந்த வாணாதிராயர்கள் பாளையக்காரர் ஆக்கப்பட்டனர். பிற்காலத்தில் இந்த தெலுங்கு வாணாதிராயர்களும் லிங்காயத்துகளும் கள்ளர், மறவர் மற்றும் கவுண்டர்கள் போன்ற உள்ளூர் தமிழ் சாதிகளாக தங்களை அடையாளப்படுத்திக் கொண்டனர்.


    திராவிடர்கள்

    தமிழ்நாட்டில் பெரும்பாலான நாக குலத்தினர் திராவிடர்களாக வேடம் போடுகிறார்கள். உண்மையில் நாடார்களும், பல்லவ வன்னியர்களும், பலிஜா நாயக்கர்களும் மட்டுமே தமிழ்நாட்டில் திராவிடர்கள் ஆவர்.

    வில்லவர், மலையர், வானவர், மீனவர் என அனைத்து வில்லவர் குலங்களும் இணைந்த பிறகே நாடார் அல்லது நாடாள்வார்கள் தோன்றினர்.
    வில்லவர் பட்டங்கள் வில்லவர், நாடாள்வார், நாடார், சான்றார், சாணார், சண்ணார், சார்ந்நவர், சான்றகர், சாந்தகன், சாண்டார் பெரும்பாணர், பணிக்கர், திருப்பார்ப்பு, கவரா -காவுராயர், இல்லம், கிரியம், கண நாடார், மாற நாடார், நட்டாத்தி, பாண்டியகுல ஷத்திரியர் போன்றவை.

    பாண குலங்களும் வில்லவர் குலங்களும் திராவிட இனத்தைச் சேர்ந்தவை. நாடார்கள் வில்லவர் குலத்தைச் சேர்ந்தவர்கள். பலிஜா நாயக்கர்கள் ஆந்திரா மற்றும் கர்நாடகாவின் பாண வம்சத்தைச் சேர்ந்தவர்கள். பல்லவ வன்னியர் பாஞ்சால நாட்டின் வட பாண வம்சத்தைச் சேர்ந்தவர்.

    பலிஜா நாயக்கர்கள் பழங்காலத்திலிருந்தே கிஷ்கிந்தா-ஆனேகுண்டியில் இருந்து ஆட்சி செய்த பாண வம்சத்தைச் சேர்ந்தவர்கள். பலிஜா நாயக்கர்களின் பட்டங்களில் பாணாஜிகா, பாணியா, வளஞ்சியர் மற்றும் வானரர் ஆகியவை அடங்கும்.

    பல்லவ வன்னியர்கள் உத்தரப்பிரதேசம் மற்றும் நேபாளத்தை ஒத்திருக்கும் பாஞ்சால நாட்டிலிருந்து வந்த வடக்கு பாணர்கள் ஆவர். அஸ்வத்தாமாவின் பிராமண பாரத்வாஜ குலத்தைச் சேர்ந்த பல்லவ மன்னர்களுடன் வன்னியர்கள் தென்னாட்டிற்கு கிமு மூன்றாம் நூற்றாண்டில் வந்தனர். பல்லவ வம்சம் ஈரானின் பார்த்தியன் வம்சத்துடன் இணைந்ததால் பல்லவ அல்லது பஹ்லவ என்று அழைக்கப்பட்டது. பாரத்வாஜ-பார்த்தியன் வம்சத்தினர் காடுவெட்டிப் படையைக் கொண்டுவந்தனர். பல்லவ மன்னர்கள் மகாபலிபுரத்தை கட்டி மன்னன் மகாபலியின் பெயரை சூட்டினார்கள். மகாபலி அல்லது மாவேலி வில்லவர் மற்றும் பாண குலத்தின் மூதாதையர் ஆவார்.

    அதன் காரணமாக பல்லவ மன்னர்கள் காடுவெட்டி என்ற பட்டத்தை ஏற்றுக்கொண்டனர். வீரகுமாரர்கள் எனப்படும் திரௌபதியின் தனிப்பட்ட பாதுகாவலர்களாக வன்னியர் இருந்தனர். வன்னியர்களின் பட்டங்கள் வட பலிஜா, திகலா அல்லது திர்கலா போன்றவை.

    தமிழ்நாட்டின் வில்லவர்-பாண வம்சங்களைச் சேர்ந்த மூன்று திராவிட குலங்கள், சேர, சோழ, பாண்டிய சாம்ராஜ்யத்தை ஆண்ட வில்லவர்-மீனவர் குலங்களிலிருந்து வந்த நாடார்கள் அல்லது நாடாள்வார் குலங்கள், ஆனேகுண்டி-குஷ்கிந்தாவைச் சேர்ந்த பாண மரபின் பலிஜா நாயக்கர்கள் மற்றும் வடநாட்டைச் சேர்ந்த பல்லவ வன்னியர் பண்டைய பாஞ்சால நாட்டிலிருந்து அதாவது உத்தரப்பிரதேசம் மற்றும் நேபாளப் பகுதியிலிருந்து இடம்பெயர்ந்த வட இந்திய பாண குலங்களைச் சேர்ந்த வன்னியர்கள் .


    முடிவுரை:

    இந்தியாவின் தொடக்கத்திலிருந்தே, வட இந்தியாவில் பாண-மீனா என்று அழைக்கப்பட்ட வில்லவர்-மீனவர் மக்களால் இந்தியா ஆளப்பட்டது. வில்லவர்-மீனவர் மக்களின் வீழ்ச்சிக்கு துருக்கிய மற்றும் அரேபிய படையெடுப்பாளர்களுடன் கூட்டு சேர்ந்த நாகா குலங்கள் காரணமாகும். ஐரோப்பியர்கள் 445 ஆண்டுகளாக ஆரிய பிராமணர்கள், நாகா குலங்கள் மற்றும் துருக்கிய சுல்தான்கள் மற்றும் நவாப்களுடன் கூட்டணி வைத்து வில்லவர்-மீனவர் நிலையை மேலும் மோசமாக்கினர்.

    ReplyDelete
    Replies
    1. பறையர் அடிமை சாதியா இருந்தாலும்
      சிவன் மட்டும் வணங்குறவங்க. பள்ள,சாண கிருத்துவ ரொட்டிக்கு மதம் மாறுனவங்க.

      Delete
  26. நாகர்களின் தெற்குக் குடியேற்றத்திற்கான காரணம்.

    சேதி சாம்ராஜ்யம், பரதராஜ சாம்ராஜ்யம், பாண்டவ ராஜ்யம், பாஞ்சால நாடு, கங்கையின் குஹன் குலங்கள் மற்றும் யாதவ ராஜ்ஜியம் ஆகியவற்றிலிருந்து யாதவர் மற்றும் நாகர்கள் தென்னிந்தியா மற்றும் இலங்கைக்கு குடிபெயர்ந்தனர். நாகர்கள் புத்த மதத்திற்கு மாறியதால் அவர்களுக்கு ஆரிய பிராமணர்களின் பகை ஏற்பட்டது. நாகர்கள் பிராமண சுங்க வம்சத்தால் துன்புறுத்தப்பட்டனர். இதற்குப் பிறகு நாகர்கள் வட இந்தியாவில் ஒடுக்கப்பட்ட வகுப்பாக மாறினார்கள்.

    சிந்து சமவெளி மற்றும் பஞ்சாப் ஆகியவை பாரசீக மன்னர் சைரஸால் கிமு 535 இலும் மற்றும் அவரது மகன் டேரியஸால் கிமு 518 இலும் ஆக்கிரமிக்கப்பட்டன. கிமு 323 இல் கிரேக்க அலெக்சாண்டர் தாக்கியபோது பாரசீகர்கள் சிந்துவின் கட்டுப்பாட்டை இழந்தனர். கிமு 150 இல் ஆரிய வம்சத்தைச் சேர்ந்த சித்தியர்கள் சிந்து சமவெளி மற்றும் மேற்கு இந்தியாவை ஆக்கிரமித்தனர். கி.பி 20 இல் கிரேக்க ஆட்சி பாரசீக இந்தோ-பார்த்தியன் இராச்சியத்தால் மாற்றப்பட்டது. அதே நேரத்தில் பரதராஜா என்ற மற்றொரு பாரசீக வம்சத்தினர் நாகர்களின் பர்வத ராஜ குலத்தை அகற்றினர். கிபி 262 இல் பாரசீக ஸசானிய இராச்சியம் சிந்து பகுதியை ஆக்கிரமித்தது மற்றும் பாரசீகர்கள் கிபி 365 வரை ஆட்சி செய்தனர். இவ்வாறு பிராமணர்கள் மற்றும் வெளிநாட்டு படையெடுப்பாளர்களிடமிருந்து எதிர்ப்பை எதிர்கொண்டு, நாகர்கள் மற்றும் யாதவர்கள் தென்னிந்தியாவிற்கு குடிபெயர்ந்தனர்.

    சேர, சோழ, பாண்டிய வம்சங்களுக்கு நாகர்கள் விரோதமாக இருந்தனர்.

    ஆனால் சேர சோழ பாண்டிய ராஜ்ஜியங்களை ஆண்ட வில்லவர் மன்னர்கள் நாகர்களை வென்று அவர்களை படைவீரர்களாக்கினர். ஆனால் நாகர்கள் அரேபிய, துருக்கிய மற்றும் விஜயநகர நாயக்கர் படையெடுப்பாளர்களுடன் கூட்டணி வைத்து வில்லவர் ராஜ்ஜியங்களை முடிவுக்குக் கொண்டு வந்தனர்.

    இந்த நாக குலங்களில் பெரும்பாலானவர்கள் உத்தரப்பிரதேசம், நேபாளம், பஞ்சாப் மற்றும் பலூசிஸ்தான் ஆகிய இடங்களில் இருந்து தென்னிந்தியா மற்றும் இலங்கைக்கு இடம்பெயர்ந்தனர். நாகர்களின் அசல் மொழி பிராகிருதம். பௌத்த நாகர்கள் பாலி மொழியை வழிபாட்டு மொழியாகப் பயன்படுத்தினர்.

    நாக களப்பிர குலங்கள் பண்டைய தமிழகத்தில் கி.பி 250 முதல் கிபி 600 வரை இருண்ட காலத்தை உருவாக்கினர். கிபி 1311 இல் மாலிக் காஃபூரின் படையெடுப்பிற்குப் பிறகு மற்றொரு காட்டுமிராண்டித்தனமான யுகம் தொடங்கியது. கிபி 1947 ஆம் ஆண்டு சுதந்திரம் அடையும் வரை கேரளா மற்றும் தமிழகம் நேபாள நாகர்கள், களப்பிரர்கள் மற்றும் முற்குஹர் எனப்படும் கங்கை நாகர்களால் ஆளப்பட்டது. சுருக்கமாகச் சொன்னால், அரேபியர்கள், துருக்கியர்கள், விஜயநகர நாயக்கர்கள் மற்றும் ஐரோப்பியர்களுடன் கூட்டணி வைத்துக்கொண்டு திருடர்களும் கொள்ளையர்களும் நேபாள அடிமைகளும் மட்டுமே கேரளாவையும் தமிழகத்தையும் ஆட்சி செய்தனர்.


    இப்போது நாகர்கள் வடமேற்கு இந்தியாவின் ஆரிய நாக குலங்களான பரசுராமரின் பார்கவகுலம், பரத குலம், குருகுலம், சேதிராயர்கள், இந்திரகுல மக்கள்தான் சேர, சோழ மற்றும் பாண்டிய வம்சங்களின் முன்னோர்கள் என்று கூறுகிறார்கள்.



    ___________________________________

    ReplyDelete
  27. சேர, சோழ மற்றும் பாண்டிய மன்னர்கள் ஆரிய மற்றும் நாக குலத்திலிருந்து வந்தவர்கள் என்ற தவறான கூற்று


    ஆரிய மற்றும் நாக குலங்கள் சேர சோழ பாண்டியர்களாக வேடம் போடுகிறார்கள்.
    கேரளாவில் ஒருபோதும் தமிழ் பேசாத நம்பூதிரிகள் பந்தளம் பாண்டியர்களாக நடிக்கிறார்கள். பாண்டியர்கள் தங்கள் பார்கவகுலத்தைச் சேர்ந்தவர்கள் என்று நம்பூதிரிகள் கூறுகின்றனர். பார்கவகுலம் பரசுராமரால் நிறுவப்பட்டது.

    தமிழ்நாட்டில் ஆரிய-நாக இந்திரனின் குலத்திலிருந்து வந்த பல்வேறு நாக குலங்கள் திராவிட சேர சோழ பாண்டிய மன்னர்களாக வேடம் போடுகிறார்கள். சேர சோழ பாண்டியன் போன்ற திராவிட வில்லவர் மன்னர்களின் மூதாதையர் இந்திரன் என்றும் அவர்கள் கூறுகின்றனர்.

    ஆனால் இந்திரன் மற்றும் நாகர்கள் திராவிட வில்லவர் மீனவர் மக்களுக்கு எதிரிகளாக இருந்தனர். நாகர்கள் முற்றிலும் வேறுபட்ட வட இந்திய இனமாகும்.

    சோழர்களும் கேரளாவின் நம்பூதிரி பாண்டியர்களைப் போலவே பார்கவ குலத்தைச் சேர்ந்தவர்கள் என்று நாகர்கள் கூறுகின்றனர். சேர சோழ பாண்டிய வம்சங்கள் ஆரிய பிராமண நம்பூதிரிகளுடனோ அல்லது கள்ளர், மறவர், அகமுடையார் மற்றும் வெள்ளாளர் போன்ற நாகர்களுடனோ தொடர்பு உன்னவர்கள் இல்லை.

    சேர சோழ பாண்டிய வம்சங்கள் திராவிடர்களான வில்லவர்-நாடாழ்வார் குலங்களிடமிருந்து வந்தவை. மீனவர் மற்றும் இயக்கர் குலங்களால் ஆதரிக்கப்பட்டனர். வில்லவர் பிரபுத்துவம் நாடாள்வார் அல்லது நாடார் குலங்கள் என்று அழைக்கப்பட்டது. வானவர் குலத்தினர் சோழர்களாகவும், வில்லவர்-மீனவர் குலங்கள் பாண்டியர்களாகவும், வில்லவர் குலங்கள் சேரர்களாகவும் இருந்தனர். அவர்கள் அனைவரும் வில்லவர் குலத்தைச் சேர்ந்தவர்கள்.


    ஆரியர்கள் மற்றும் நாக-களப்பிரர்களின் கூற்றுகள்

    1. பந்தளம் பாண்டியர்கள் போல் நடிக்கும் நம்பூதிரிகள் பாண்டியர்கள் தம்முடைய பிராமண பார்கவ குலத்தைச் சேர்ந்தவர்கள் என்று கூறுகின்றனர்.

    2. தமிழ்நாட்டில் மூப்பனார் உட்பிரிவு பார்கவ குலம் உடையார் அவர்கள் சோழர்களுடன் தொடர்புடையவர்கள் என்று கூறுகின்றனர். நாகர்களின் இந்த பார்கவ குலமானது நம்பூதிரிகளின் பார்கவ குலத்திலிருந்து வேறுபட்டதாகத் தோன்றுகிறது. நாக பார்கவகுலம் என்பது சேதி ராஜ்ஜியத்திலிருந்து புலம்பெயர்ந்த களப்பிரர்களின் குலமாகும்.

    3.சந்திர வம்சத்தைச் சேர்ந்த யாதவர்களும் நாகர்களும் பாண்டிய வம்சத்துடன் தொடர்புடையவர்கள் என்ற கூற்று. பண்டைய பாண்டிய வம்சத்தால் நிறுவப்பட்ட திராவிட சந்திர வம்சம் நஹுஷனால் நிறுவப்பட்ட யாதவ-நாக சந்திர வம்சத்திலிருந்து வேறுபட்டது.

    4. கள்ளர், மறவர், அகமுடையார் மற்றும் வெள்ளாளர் போன்ற பல்வேறு நாக குலங்கள் சேர, சோழ பாண்டிய வம்சங்கள் தங்கள் சொந்த இந்திர குலத்திலிருந்து வந்ததாகக் கூறுகின்றனர். சேர, சோழ, பாண்டிய வம்சங்கள் திராவிட வில்லவர்-நாடாழ்வார் குலங்களால் நிறுவப்பட்டது. சேர, சோழ மற்றும் பாண்டிய மன்னர்கள் நாகர்கள் அல்ல, அவர்கள் ஆரிய-நாக மக்களின் இந்திர குலத்தைச் சேர்ந்தவர்களும் அல்ல.

    5.சோழ வம்சத்தை நிறுவியவர்கள் வேளிர் என்ற கூற்று. வேளிர்கள் ஆரம்பகால களப்பிரர் படையெடுப்பாளர்கள். கிமு 172 முதல் கிமு 100 வரையிலான காலகட்டத்தில் கலிங்க மன்னன் காரவேளனின் ஆணைப்படி சோழ நாட்டின் மீது படையெடுத்தவர்கள். வேளிர்களுக்கு யாதவ-நாக வேர்கள் இருந்தன, அவர்கள் சேதி சாம்ராஜ்யத்திலிருந்து கலிங்க நாட்டிற்கு குடிபெயர்ந்தனர், அங்கிருந்து அவர்கள் சோழ நாட்டின் மீது படையெடுத்தனர். சோழர்கள் வில்லவர்களின் வானவர் துணைக்குழுவை சேர்ந்தவர்கள்

    6. சேதி ராயர்கள் மலையமான்களுடன் தொடர்புடையவர்கள் என்றும் அவர்கள் சோழர்களின் கிளைக்குடியினர் என்றும் கூறுவது.
    களப்பிரர்கள் சேதி ராஜ்ஜியத்திலிருந்து இடம்பெயர்ந்தவர்கள் மற்றும் அவர்களின் தலைவர்கள் சேதி ராயர்கள் என்று அழைக்கப்படுகிறார்கள். சேதிராயர்களுக்கு யாதவ-நாக வேர்கள் இருக்கலாம். மலையமான்கள் திராவிடர்களான வில்லவர்களின் மலையர் துணைக்குழுவின் தலைவர்கள். சோழர்களின் கீழ் இடைக்காலத்தில் சில மலையமான் குலங்கள் களப்பிரர்களின் சேதி ராயர் குலங்களுடன் கலந்திருக்கலாம். கள்ள சான்றார்களில் உள்ள சேதிராயர் மற்றும் சேர்வராயர் ராயர் என்ற பட்டங்கள் வில்லவ நாடார்களும் களப்பிரர்களுடன் கலந்திருக்கிறார்கள் என்பதைக் குறிக்கிறது.

    கள்ள சான்றார் மற்றும் மலையான் சான்றார் குலங்கள் களப்பிரர்களின் வழிவந்த கள்ளர் மற்றும் வெள்ளாளர் ஆகியோருடன் இன ரீதியாக தொடர்புடையதாக இருக்கலாம்.

    7.பரத குலம் என்பது குரு வம்சத்தின் மற்றொரு பெயர், அதாவது பாண்டவர் மற்றும் கௌரவர்கள் தோன்றிய குருகுலம். பரதராஜா அல்லது பர்வத ராஜ குலம் பாகிஸ்தானில் பலூசிஸ்தானை ஆண்டது.


    முடிவுரை:

    வில்லவர், மலையர், வானவர் மற்றும் மீனவர் போன்ற வில்லவர் குலங்களிலிருந்து தோன்றிய நாடாழ்வார்கள் அல்லது நாடார்களால்தான் சேர சோழ பாண்டியன் வம்சங்கள் நிறுவப்பட்டன.

    ________________________________________

    ReplyDelete
    Replies
    1. Nalla kathai kattukireergal, nadarum kidayathu, oru magnum kidayathu, MOOVENTHARGAL, SERA CHOZHA PANDIYARGAL, AGAMUDAYAR THOZHUVA VELLALA KULAM VAZHI VANTHAVARGAL,ATHAN NIRUBIKKAPATA, NITHARSANAMANA UNMAI.☆♤

      Delete