Friday, April 5, 2013

தமிழின மூத்த குடி யார் என்ற ஆய்வும், உண்மை பின்னணியும்

மூல கட்டுரை:


பாமரனின் பார்வையில் கேள்விகள்/சந்தேகங்கள்:
கேள்வி/சந்தேகம்: 1
* மூல கட்டுரையில்,
//முதல் மனிதன் ஆப்பரிக்க கண்டத்தில்தான் தான் தோன்றினானன் அங்கிருந்து தான் மற்றப் பகுதிகளுக்கு. சுமார் 70 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இடம் பெயர்ந்தான் என்பது ஆராய்ச்சியாளர்கள் முடிவு இன்று மறுபரிசீலனை செய்யப்படுகிறது. இந்த முதல் தமிழ் மனிதனை தேடி தமிழ் மண்ணில் ஆராய்ச்சியாளர்கள் வரவு தொடர்கிறது//

என்று சொல்லப் பட்டுள்ளது. ஆனால் இவர்கள் கொடுத்த லிங்கில்,
However, genetic and archaeological evidence points towards an initial migration from southwestern Africa over 100,000 years ago, which spread eastwards out of Africa into the Arabian Peninsula, before a small group began a worldwide dispersal around 60,000 years ago along mainly coastal routes

என்று சொல்லப் பட்டுள்ளது. இதில் எது உண்மை? "தமிழ் மண்ணில் தான் முதல் மாந்தன் தோன்றினான்" என்று இவர்கள் கொடுத்த ஆதாரங்கள் ஏதும் சொன்னதாக தெரியவில்லையே? அனைத்து ஆதரங்கலுமே "பிரமலை கள்ளர்கள்" ஆப்பிரிக்காவில் இருந்து வந்தவர்கள் என்று தானே சொல்கின்றன? அப்படி என்றால் தமிழ் நாட்டை பொறுத்த வரை, இந்தியாவை பொருத்தவரை தமிழன் வந்தேறியா? அப்படி என்றால் 'நாங்கள் குமரிக் கண்டத்தில்' தான் தோன்றினோம் என்று இத்தனை நாள் முக்குலத்தோர் சொல்லி வந்தது பொய்யா...?

கேள்வி/சந்தேகம்: 2
> M130 என்ற மரபணு பிரமலை கள்ளரிடம் மட்டும் தான் உள்ளது என்று எந்த அடிப்படையில் இந்த ஆய்வை நடத்திய பேரா.பச்சையப்பன் முடிவுக்கு வந்தார்?  (இதன் உண்மையான பின்னணியை பிறகு பார்ப்போம்).
> யார் யாரிடம் இருந்து எல்லாம் மாதிரிகள் பெறப்பட்டன?
> எங்கே பெறப்பட்டன ?
> எப்படி பெறப்பட்டன ?
> என்ன என்ன ஆய்வுகள்,ஆராய்ச்சிகள் செய்யப்பட்டன என்று எந்த தகவலும் தெரிவிக்கப்படவில்லையே. ஏன்?

கேள்வி/சந்தேகம்: 3
கள்ளரிடையே பல பிரிவுகள் உண்டு. பிரமலை கள்ளர்,தஞ்சை கள்ளர்,தொண்டைமான் என பலவகைப்படும். இவர்கள் அனைவரும் ஒருவரா? அதற்க்கு வாய்ப்பு இல்லையே. ஆக, ஒரு கள்ளருக்கும், இன்னொரு கள்ளருக்குமே சம்பந்தம் இருக்கா இல்லையா என்று தெளிவாக கூறமுடியாத பட்சத்தில், இங்கே நடத்தப்பட்ட ஆய்வின் மூலம் 'கள்ளர்' தான் தமிழின் மூத்த குடி என்று பொதுவாக சொல்வது ஏற்புடையாதா?

கேள்வி/சந்தேகம்: 4
ஒட்டு மொத்த கள்ளரையே ஒரே மாதிரி பார்க்க இயலாத போது, மறவரையும், அகமுடையாரையும் இணைத்து 'முக்குலத்தோரே' தமிழின் மூத்த குடி என்று சொல்வது ஏற்புடையதா? மறவர்,எயினர் பாலை நிலக்குடி என்று தமிழ் இலக்கணம் கூறும் போது, பிரமலை கள்ளர் போன்ற மலை சார்ந்த வாழ்வு வாழ்ந்த 'கள்ளர்' சிலரையும் ஒரே பார்வையில் பார்ப்பது சரியா?

கேள்வி/சந்தேகம்: 5
   70000 வருசத்துக்கு முன்பு இந்தியாவில் வந்த முதல் மாந்தன் என்று ஒருவரை அடையாள படுத்தும் போது, அதற்க்கு முன்பு இந்தியாவில், குறிப்பாக தமிழகத்தில் மாந்தரே இல்லை என்று உறுதி பட நிலை நிறுத்த வேண்டியது இந்த ஆய்வை நடத்திய பேராசிரியர்களின் கடமை. அப்படி ஏதும் செய்ததாக தெரியவில்லை. ஏன்? அப்படி இருக்க வாய்ப்பில்லை என்ற முடிவுக்கு பேராசிரியர் எப்படி வந்தார்?

    இனி விசயத்துக்கு வருவோம். இந்த M130 என்ற இந்த ஆய்வானது நேர்மையாக நடத்தப்பட்ட ஆய்வா, இல்லை பித்தலாட்டமா என்பதை இந்த கட்டுரையின் இறுதியில் நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள். இந்த ஆய்வை பற்றி அலசும் முன்பு, இந்த ஆய்வுக்கு பின்பு உள்ள அடித்தளத்தை சற்று பார்ப்போம்.

மனித தோற்றம் பற்றிய கோட்பாடுகள்
* உலகில் மாந்தன் தோன்றினான் என்று சொல்லப்படும் முக்கிய தியரி
  > 'ஆப்பிரிக்காவில் தோன்றி பரவினான்'
  > 'லெமூரியாவில் (குமரித்தீவு) தோன்றி பரவினான்'
என்ற இரட்டை தியரிகலாகும். இதில் மேலை நாட்டவர்களால் முன்னிறுத்தப்பட்டு பிரச்சாரம் செய்யப்படும் முக்கிய தியரி 'ஆப்பிரிக்க தியரி' தான். அவர்கள் விரும்புவதும், நிலை நிறுத்த நினைப்பதும் அது தான். முதல் மாந்தன் 'லெமூரியாவில்' தோன்றினான் என்று யோசிக்க கூட அவர்கள் தயார் இல்லை. விதி விளக்காக சுவீடன் போன்ற நாடுகள் 'லெமூரிய' ஆராய்ச்சியில் முடிவை நெருங்கி விட்டதாக அறிகிறோம். (மேலதிக தகவல் இணைக்கப்படும்).மூலக் கட்டுரை கூட தியரி 1 (அதாவது ஆப்பிரிக்க தியரி'க்கு) வலு சேர்ப்பதற்காக நடத்தப்பட்ட ஆய்வே. இதை நாம் முதலில் புரிந்து கொள்ள வேண்டும். இந்த 'ஆப்பிரிக்க' தியரியை எப்பாடு பட்டாவது நிலை நிறுத்த விரும்பும் மேலை நாட்டு அறிவுஜீவிகள்,அதற்காக பண பலம்,ஊடக பலம் (டிஸ்கவரி சேனல்) என சகல வழிகளிலும் முயற்சி செய்கிறார்கள் என்பதும் அறிந்ததே. எனவே M130 என்ற பேராசிரியரின் ஆய்வு முடிவு அவர்களை ஈர்த்ததில் ஆச்சரியம் இல்லை. இந்த ஆய்வுக்காக பல கோடி ரூபாய்களை வரை 'NGO 'க்கள் மூலம் பேராசிரியரின் குழுவுக்கு விநியோகிக்கப்பட்டதாக சொல்லப்படுகிறது.

இனி பேராசிரியர்.பச்சையப்பன் செய்தது ஆய்வு தானா என்பதை அலசுவோம்.

பேராசிரியர்.பச்சையப்பன் ஆய்வின் பின்னணி
    ஏதோ ஒரு தருணத்தில், ஏதோ ஒரு மருத்துவ பரிசோதனைக்கு வந்த பல ரத்த மாதிரிகளில் இருந்து M130 மரபணு உள்ள மாதிரிகள் பிரித்தரியப்பட்டு ,அதில் சுமார் 12 மாதிரிகள் இறுதி செய்யப்பட்டன. அந்த தகவல் தான் பேராசிரியர்.பச்சையப்பனுக்கு சொல்லப்பட்டது. அதை இவர் வெளியே தெரியப்படுத்தினார். அவ்வளவே...!!! மாறாக, இவர் தானே முன்வந்து மாநிலம் முழுக்க பல்வேறு இனக்குழுக்களிடம் இந்த ஆய்வை செய்யவும் இல்லை, கண்டுபிடிக்கவும் இல்லை. சரி அந்த  12 மாதிரிகளும் 'பிரமலை கள்ளரிடம்' மட்டும் தான் இருந்ததா? இல்லை வேறு எந்த சாதி'க்கும் இருந்ததா? இங்கே தான் பச்சையப்பனின் நரித்தனம் வெளிப்படுகிறது.


    உண்மை என்னவெனில், அந்த 12 மாதிரிகளில் வேறொரு சாதியின் மாதிரியும்(sample) இதே M130 மரபணு கொண்டுள்ளது. அது வேறு யாரும் அல்ல 'கோனார்' சாதி தான். இதை பச்சையப்பன்  வெளியே சொன்னாரா..? இல்லை என்றால் இதை விட வேறு அயோக்கிய தனம் இருக்க முடியுமா..? அதெப்படி 'கோனாரு'க்கு இந்த மரபணு வந்தது என்று நீங்கள் கேட்கலாம். அதற்க்கு முன்பு M130 என்ற மரபணுவுக்கு முந்திய நிலை 'காட்டுமிராண்டி' மனித படி நிலை என்பதை உள்வாங்கி கொண்டு மேற்கொண்டு வாசியுங்கள்.

மனித மாந்தன் குமரித்தீவில் தோன்றியமை குறித்த ஆய்வுகள் பல உள்ளன. அதில் ஒன்றை இங்கே தருகிறோம்.

விழுப்புரம் ஓடை கிராமத்தில், ஆப்பிரிக்காவில் இருந்து மனிதன் இடம் பெயர்ந்தான், தமிழ் மண்ணுக்கு வந்தான் என்று கூறப்படும் காலத்துக்கு பல ஆயிரம் வருடங்களுக்கு முன்பில் இருந்தே மனிதர்கள் இங்கே வாழ்ந்து வருகின்றனர் என்பதை உணர்த்தும் ஆய்வு இது.

அப்படி பெறப்பட்ட ஒரு குழந்தையின் மண்டை ஒட்டு பாசில் இதோ.

முழு தகவலுக்கு இங்கே சொடுக்கவும்.
அந்த ஆய்வு முடிவு சொல்வது

"The human fossils from Odai and Hathnora probably bear significant implications for the current "Out of Africa" verses "Multiregional" debate concerning the place of origin and antiquity of humans, and Asia's importance in the story of hominid evolution"

தமிழ் கூறும் ஐவகை நில மக்கள் வாழ்வு

    தமிழ் இலக்கணப்படி கோனார்(இடையர்),மலை கள்ளர் போன்றவர்கள் முல்லை,குறிஞ்சி நில மக்கள். மறவர்,எயிற்றினர் போன்றவர்கள் பாலை நிலக்குடி மக்கள். ஆனால் பிரமலை கள்ளர்,மறவர் போன்றவர்களின் தொழில் 'ஆடு மாடு திருடுதல், வழிப்பறி செய்தல்' என்பதால் தொழில் அடிப்படையில் இவர்கள் ஒரே இனமாக பின்பு அறியப்பட்டனர். நிற்க. கால்நடை வளர்ப்பதும், அதை பராமரிப்பதும் இடையரின் தொழில். அதை திருடுவதும்,கொள்ளை இடுவதும் 'மலை கள்ளரின்' தொழில். இந்த அடிப்படையில் நோக்கினால் எப்படி 'கோனார்' போன்ற குறிஞ்சி நில பழங்குடி மக்களிடமும் M130 வந்தது என்பது புலனாகும்.

எமது வேண்டுகோள்கள்:
>    இந்த தகவலை (கோனாருக்கும் M130 இருக்கிறது) பேராசிரியர்.பச்சையப்பன் அறிவிக்க வேண்டும். அதோடு மட்டுமின்றி, மாநிலம் முழுவதும்,பல்வேறு இனக் குழுக்களிடமும் இது போன்ற ஆய்வை மேற்கொண்டு உண்மை தகவலை வெளியில் சொல்ல வேண்டும்.

> அப்படி ஒரு ஆய்வு நடத்தி முடிக்கப்படும் போது, வெவ்வேறு இனக்குளுக்களுக்கிடையே உள்ள மரபண்டு தொன்மை, இடைவெளி, பரிணாம வளர்ச்சி போன்ற தகவலகளையும் வெளியிட வேண்டும்.

Sunday, March 3, 2013

பள்ளிகள் என்போர் யார்? பூர்வீகம் குறித்த சர்ச்சை

    பண்டைய தமிழ் நிகண்டுகளில் பள்ளிகள் என்ற மக்கள் பிரிவு பற்றிக் கூறப்படவில்லை. ஆனால், பள்ளி என்றால் முல்லை நிலக்குடியிருப்பு என்று கூறப்பட்டிருக்கிறது.

பாட்டும் தொகையும் என்ற நூலில்(பக்கம் 116,நியூ செஞ்சுரி வெளியீடு) பள்ளி என்பதற்கு இடம்,சாலை,இடைச்சேரி எனவும், ‘பள்ளி அயர்ந்து என்பதற்கு நித்திரை செய்தல் எனவும் ‘பள்ளி புகுந்து துயில் கொண்ட தன்மை எனவும் பொருள் தருகின்றது. பாண்டியன் நெடுஞ்செழியனைப் பற்றி எழுந்த நெடுநல்வாடை செய்யுள்(186) 
நள்ளென் யாமத்துப் பள்ளி கொண்டான் 
என்பதில் வரும் பள்ளி என்பது துயில் அல்லது நித்திரை கொள்தல் எனப் பொருள்படுகிறது.

சரி முல்லை நிலக்குடியிருப்பு என நிகண்டுகள் கூறும்போது, அதே நிகண்டு முல்லை நில மக்களை அண்டர்,இடையர்,ஆயர்,ஆய்ச்சியர்,கோவலர்,பொதுவர்,பொதுவியர் மற்றும் குடத்தியர் என்று கூறுகிறது. இதன்மூலம், பள்ளி என்போர் முல்லை நில மக்கள் இல்லை என்பதாகிறது.

மலைபடுகடாம் செய்யுள்(451) 
மண்ணும் பெயர்தன்ன காயும் பள்ளியும் 
என்பதில் வரும் பள்ளி என்பது சாலை எனப் பொருள்படுகிறது.

எம்.சீனிவாச அய்யங்கார் கூறுவது:
"பண்டைய காலத்தில் நகரம் அல்லது ஊரின் பல்வேறு பிரிவினரும் எவ்வாறு தனித்தனியாய் வாழ்ந்து வந்தனர் என்பது பற்றி பெரும்பாணாற்றுப்படையில் சித்தரிக்கப் பட்டுள்ள காஞ்சி மாநகரத்தை உற்று நோக்குவோம். இந்நகரத்தின் உட்பகுதில் பார்ப்பனர் குடியிருப்பு இருந்தது. இவற்றை சூழ்ந்து மள்ளர் அல்லது பள்ளர் மற்றும் கள் வினைஞர் தெருக்கள் இருந்தன. இவற்றிற்கு அப்பால் வெகு தூரத்தில் ஒரு கோடியில் இடையரின் பள்ளியும் அதற்கு அப்பால் ஒதுக்குப் புறமாய் எயினர் மற்றும் அவர்களது குடியிருப்புகளும் ஆகிய (எயினர் சேரி) பறைசேரிகளும் இருந்தன. மள்ளர் தெருக்களை ஒட்டி திருவெட்கா கோயிலும், மன்னன் இளந்திரையன் அரண்மனையும் காட்சியளிக்கின்றன. (Page 76, Tamil Studies, M. Srinivas Ayyangar).

M. Srinivasa Ayyangar Says "But by way of introduction, it is highly desirable to present before the readers a description of an ancient town or village in which the regional classifications of the tribes explained above is clearly discernible. We shall first take the city of Kanchipuram as described in the Perumpanattuppadai a Tamil work of the 3rd or 4th century A.D. In the heart of the town were the Brahmin quarters where neither the dog nor the fowl could be seen. They were flanked on the one side by the fisherman (வலைஞர்) street and on the other by those of traders (வணிகர்) and these were surrounded by the cheris of Mallar or Pallar (உழவர்) and the toddy drawers(கள்ளடு மகளிர்). Then far removed from there were situated at one extremity of the city of Pallis of Idayars and beyond them lay the isolated Paracheri of the Eyinars and their chiefs. Next to the Mallar (உழவர்) street were the temples of Tiruvekka and the palace of the king Ilandhirayan. (Page 76, Tamil Studies, M. Srinivas Ayyangar).

இதில் கூட பள்ளி என்றால் இடையர் குடியிருப்பு என்றே காட்டப்பட்டுள்ளது.பின்னர் பள்ளி என்போர் யார்? பள்ளி என்றால் பள்ளனின் மனைவி என்று பொருள் கொள்ளலாம். ஆனால், தற்கால வன்னியர் என்போர் தங்களை பள்ளி இனமாக தெரிவித்து கொள்கின்றனர். அப்படியென்றால், சங்க காலத்தில் பள்ளி என்ற ஒரு இனம் இருந்திருக்க வேண்டும்.

சங்க இலக்கியம் பத்துப்பாட்டில் தொண்டைமான் இளந்திரையன் மேல் பாடிய பெரும்பாணாற்றுப்படைச் செய்யுள்:

".....முல்குடைப் பெருவழிக் கவலை காக்கும்
வில்லுடை வைப்பின் வியன்காட் டியவி  
னீளரை யிலவத் தலங்குசினை பயந்த
பூளையம் பசுங்காய் புடைவிரிந் தன்ன
வரிப்புற வணிலொடு கருப்பை யாடா  85

தியாற்றறல் புரையும் வெரிநுடைக் கொழுமடல்
வேற்றலை யன்ன வைந்நுதி நெடுந்தக
ரீத்திலை வேய்ந்த வெய்ப்புறக் குரம்பை  
மான்றோற் பள்ளி மகவொடு முடங்கி
ஈன்பிண வொழியப் போகி நோன்கா  90

ழிரும்புதலை யாத்த திருந்துகணை விழுக்கோ
லுளிவாய்ச் சுரையின் மிளிர மிண்டி
யிருநிலக் கரம்பைப் படுநீ றாடி
நுண்பு லடக்கிய வெண்ப லெயிற்றியர்  
பார்வை யாத்த பறைதாள் விளவி  95...."

விளக்கம்:
83-88 : நீளரை யிலவத்து .............. குரம்பை

கருத்துரை : நீண்ட அடியினையுடைய இலவமரத்தின் அசைகின்ற கொம்புகள் காய்த்த பஞ்சினையுடைய அழகிய பசிய காய், முதிர்ந்து முதுகிலே விரிந்து பஞ்சு தோன்றினாற் போன்ற வரியை முதுகிலே உடைய அணிலோடே எலியும் திரியாதபடி, யாற்றின் அறலையொத்த முதுகினையும், கொழுவிய மடலினையும் உடையதும், வேல்போலும் நுனி பொருந்தியதுமாகிய ஈந்தின் இலையாலே வேயப்பட்ட நெடிய முகட்டையும், எய்ப்பன்றியின் முதுகுபோன்ற புறத்தினையும் உடைய குடிலின்கண் என்பதாம்.

எயிற்றியர் செயல்

89-97 : மான்றோல் ............... உலக்கையோச்சி

கருத்துரை : மான்றோற் படுக்கையிலே பிள்ளையோடு முடங்கிக் கிடக்கும் ஈன்ற எயிற்றியை ஒழிய ஒழிந்தோரெல்லாம் போய், பூண்கட்டிய சீரிய கோல் செருகப்பட்ட உளிபோலும் வாயையுடைய பாரைகளாலே கரிய கரம்புநிலத்தைக் குத்திக் கிளறிப் புழுதியை அளைந்து நுண்ணிய புல்லரிசியினை வாரிக்கொண்ட வெள்ளிய பல்லை யுடைய எயினர் மகளிர், பார்வைமான் கட்டிநின்ற தேய்ந்த தாளினையுடைய விளவின் நீழலையுடைய தம் முற்றத்தே தோண்டப்பட்ட நிலவுரலிலே அப் புல்லரிசியைச் சொரிந்து குறிய வயிரமேறிய உலக்கையால் குற்றி என்பதாம்.

இந்தப் பாடலிலும் பள்ளி என்றால் படுக்கை என்ற அர்த்தப்படுகிறது. வேறு எந்தப் பாடலிலும் பள்ளி என்ற இனத்தைக் குறிக்கக் கூடிய சொல் கிடையாது. அப்படியென்றால், சங்க காலத்தில் பள்ளி என்ற இனம் இருந்ததற்கான ஆதாரம் கிடையாது.

   ஆனால், இடைக்காலத்தில் கல்வெட்டுக்களில் பள்ளி என்ற இனம் பற்றிய செய்திகள் உள்ளன. காஞ்சிபுரத்துக்கு அருகில் சீயமங்கலம் சிவாலயத்தில் குலோத்துங்க சோழன் காலத்து கல்வெட்டு உள்ளது. அதில் உள்ள செய்தி, சம்புபுரத்தில் இருந்த பள்ளி செல்வன் என்பவன் மற்றொரு பள்ளி வேணாட்டரையன் என்பவனோடு வேட்டைக்கு போனதைக் குறிக்கிறது.

பள்ளி ஒருவனுக்கு "அரையன்" என்ற பட்டம் இருந்தது. இதை, வேணாட்டரையன் என்பதால் அறியலாம். பல கல்வெட்டுகள் இதுபோல "அரையன்" பட்டம் பெற்ற பள்ளிகளை குறிக்கின்றன. சோழ மன்னன் இரண்டாம் ராஜாதி ராஜன் காலத்தில், பள்ளி ஒருவன் தண்டல்நாயகனாக விளங்கி இருக்கிறான். அரக்கோணத்தில் அருகில் தக்கொலத்திற்கு அருகில் சிவாலயத்திற்கு அவன் தானம் அளித்திருக்கிறான் அதை கல்வெட்டு கூறுகிறது.

விருத்தாச்சலத்தில் விருத்தகிரீஸ்வரர் கோயிலுக்கு ஒரு பள்ளி, மண்டபம் கட்டி வைத்துள்ளான். அப்பகுதியில் ஒரு நாடாளும் தலைவனாக அவன் திகழ்ந்திருக்கிறான். அதை கல்வெட்டு கூறுகிறது. எறும்பூர் காணி உடைய பள்ளி ஆளப்பிறந்தான் ஆன ஏழிசை மோகன் ஆன குலோத்துங்க சோழ காடஹாதித்தன் ஒரு முது குன்றுடைய நாயனார்க்கு மகா ஸ்நானம் செய்ய என்பேரால் ஏழிசை மோகன் என்னும் திருமண்டபம் திருக்கற்றளி சார்த்தி இத்தர்மம் செய்து முடித்தேன் என்று கூறுகிறான். இது வரலாற்று சிறப்பு மிகுந்த கல்வெட்டு.

இக்கல்வெட்டு 1170 இல் சோழர் காலத்தை சேர்ந்தது. திருநாவலூரில் இருந்த பள்ளி ஒருவன், சிற்றரசனாக திகழ்ந்து இருக்கிறான். "மாகா தேவர்க்கு இந்நாட்டு ஒக்கூர் நாட்டு பள்ளி ஆடவல்ல சொக்கன் ஆனா காலிங்கராஜ பெரியரையன் வைத்த திருனொந்தா விளக்கு" என்று இக்கல்வெட்டு கூறுகிறது.

இவ்வூரில் இருந்த மற்றொரு பள்ளி, இவ்வூர் சிவன் கோயிலுக்கு ஒரு மகா தோரணம் அளித்து உள்ளான். அவனைக்குறிக்கும் போது, 'கூடலூர் பள்ளி ஆளப்பிறந்தான் மோகன் ஆன குலோத்துங்க சோழ கச்சியராயன் இட்ட மகர தோரணம்' என்று கல்வெட்டு கூறுகிறது. இதில் இருந்து சோழர் காலத்தில் சில பள்ளிகள் வியாபாரிகளாக இருந்தனர் எனத் தெரிகிறது.

நாட்டைக் காப்பதற்காக, தங்கள் உய்ரைத் தியாகம் செய்து வீரம் விளைத்த பள்ளிகளைப் பற்றி சில கல்வெட்டுகள் கூறுகின்றன.
திருக்கோவிலூருக்கு அருகில் வேட்டவலம் என்ற இடத்தில் உள்ள ஒரு கல்வெட்டு, ஆதித்தன் பள்ளி மலி என்பவன் அங்கு நடந்த போரில் வீரமரணம் எய்தினான். அன்று நாடாண்ட பிருதிகங்கரையன் என்பவன் இவனுக்காக அவ்வூர் கோயிலில் ஒரு விளக்கு எரித்தான்.

இவற்றை எல்லாம் நோக்கும் போது, பிற்காலச்சோழர் ஆட்சியில் மிக உயர்ந்த நிலையில் பள்ளிகள் இருந்தனர் என்பதும், காளிங்கராயன்,கச்சியராயன், காடவராதிராயன்,பெரியரையன், ராயன் என்றெல்லாம் பட்டம் பெற்று இருந்தனர் என்பதும் தெரிகிறது. மேலும் நாடு காப்பாளராகவும், வீரர்களாகவும் இவர்கள் வாழ்ந்தனர் என்பதும், நில சுவான்தார்களாகவும் செல்வந்தர்களாகவும் இருந்திருக்கின்றனர் என்பதும் உறுதியாகிறது. கி.பி.12ஆம் நூற்றாண்டுக்கு முன்பு 'பள்ளி' என்ற மக்களைப் பற்றி எந்த குறிப்பும் தமிழ் இலக்கியத்திலோ, கல்வெட்டுகளிலோ இல்லை எனலாம். ஆனால், 12 நூற்றாண்டில் அதாவது, குலோத்துங்கன் காலத்திய கல்வெட்டுக்களில் பள்ளி என்ற இனம் பற்றியும், அவர்கள் சமூகத்தில் உயர்ந்த நிலையில் இருந்தது பற்றியும் கல்வெட்டுக்கள் தெரிவிக்கின்றன.

எமது கேள்விகள்

* கி.பி 12 ஆம் நூற்றாண்டுக்கு முன்பு இல்லாதபோது, 12 ஆம் நூற்றாண்டு காலத்தில் பள்ளி என்று ஒரு இனம் காட்டப்படுகின்ற மர்மந்தான் என்ன?
* வன்னியர்கள் தங்களை மூவேந்தர்கள்,பல்லவர்கள் குறிப்பாக சோழரின் வாரிசு என்று உரிமை கோருகிறார்கள். அப்படி என்றால் கி.பி.12 ஆம் நூற்றாண்டுக்கு முன்பு சோழர்கள்,பல்லவர்கள் யாரும் இல்லையா....?

Friday, March 1, 2013

மூவேந்தர்கள் வந்தேறிக் கூட்டமாம்!: சொல்வது கள்ளர்

மூலக் கட்டுரை: http://www.thevarthalam.com/thevar/?p=2681

@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@

பள்ளர்களும் ஆந்திர பூர்வீககுடிகளேPosted on 23/02/2013 by குவைத் பாண்டியன்பள்ளர்கள் என்றும் மள்ளர்கள் என்றும் தேவேந்திரர்கள் என்றும் தானே சுத்த தமிழினம் என்றும் மற்றவர்களை வந்தேரிகள் என கூறும் பள்ளர்களை பற்றி இக்கட்டுரையில் ஆதாரபூர்வமாக கான்போம்.

யார் தான் தமிழர்கள்??

நாம் தான் தமிழர்கள் நாம் தமிழினம் என்று கூறும் நாம் நம்முடைய மரபனு ரீதீயாக உள்ள மக்கள் இந்தியா முழுவதும் இருப்பார்கள் என்று பல மரபனு ஆய்வாளர்கள் கூறுகிறார்கள். எடுத்து காட்டாக வெள்ளாளரை எடுத்துக்கொள்வோம்.

வெள்ளாளர்-தமிழ்நாடு மேனன்-கேரளா(மன்றாடி வெள்ளாளர்) ரெட்டி-ஆந்திரா கவுடா-கர்நாடகா துளு பிலால்(அ) ஷெட்டி- துளு இவர்கள் அனை வரும் வெள்ளாளர் இனத்தை சார்ந்தவர்கள் தொழில்-விவசாயம்.

இதை போல் நாடார் என்பர்கள் குமரி நாட்டின் இறுதிக்குடி என்று கூறும் இவர்களும் தென்னாடு முழுவதும் வேர பெயர்களில் உள்ளனர். நாடார்-தமிழ்நாடு ஈழவர்,தியர்-கேரளா கூடு-ஆந்திரா இடிகா-கர்நாடகா வில்லவா- துளு துருவர்-சிங்களம் இவர்கள் அனை வரும் நாடார் இனத்தை சார்ந்தவர்கள் தொழில்-பனை தென்னை மர தொழில்.

இதை போல் பறையரை எடுத்து கொள்வோம்.பறையர்-தமிழ்நாடு புலையர்-கேரளா சாம்பான்ஸ்-ஆந்திராஇதை போல தான் பள்ளர் இனமும் இந்தியா முழுவதும் வேறு வேறு பெயர்களில் உள்ளனர். பள்ளர்-தமிழ்நாடு செருமார்(சேரிமார்)-கேரளா மலாஸ் (அ) மள்ளா-ஆந்திரா கோலியாஸ் -கர்நாடகா மஹரா-மஹரஷ்டிரா போன்றுஆந்திர மலாஸ் (அ) மள்ளா என்ற இனத்தவரே பள்ளர்கள்:

அந்திர மலாஸ் என்பவர்கள் விவசாய கூலிகளாக இருப்பினும் காகித்திய மற்றும் விஜயநகர பேரரசுகளில் போர்வீரர்களாக பனியாற்றி உள்ளனர். இவரகள் ஆந்திர ஆதிதிராவிட மக்கள் தொகை ஆதாவது அந்திர தாழ்த்தபட்டவர்களில் 90% உள்ளனர். இவர்கள் தமிழக பள்ளர் பறையரை தன் இனத்தவர்கள் என கூறும் ஆதரங்களை கூறுகின்றன.இவர்கள் விஜயநகர பேரரசு தமிழகத்தில் குடியெற்றத்திர்காண ஆதாரங்கள் ஒரிரு இடங்களிலே கானப்படுகின்றன.

அவை இன்றும் ஆந்திராவில் பெரும்பான்மையாக உள்ள தாழ்த்த பட்டவர்கள் பள்ளர்களே.அதனால் தான் நாயக்க பேரரசு காலத்தில் பள்ளு என்ற இலக்கியம் உருவாக பள்ளர்கள் ஊக்குவிக்கபட்டனர்.இன்று உள்ள மலாஸ் இனத்தவர்கள் தான் நக்சல் எனற போராளி கும்பலில் அதிகமாக கானபடுகின்றனர் இவர்கள் ஆதிக்க சமுதாயரான ரெட்டி,நாயுடு முதிலியவர்களை எதிர்த்து ஆயுதம் ஏந்தினர். இவர்கள் பள்ளர்களை தம் இனம் என கூறும் விக்கி மூலத்தை கீழே கொடுத்துள்ளேன்.

புதுகோட்டை கல்வெட்டொன்று :

புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் வட்டத்திலுள்ள காரையூர் திருமாங்கனி ஈஸ்வரர் கோவிலில் உள்ள கல்வெட்டொன்று ஊரைப் பாதுகாக்கும் பணியில் பறையர் ஒருவர் நியமிக்கப்பட்டதை குறிப்பிடுகிறது. ஆதனமழகியான் என்பவருக்கு ‘காரையூர்ப் பறையன்’ என்று பட்டம் கட்டி பாதுகாவல் உரிமையை ஊரார் வழங்கியுள்ளனர். இதற்காக அவரிடமிருந்து நூற்றுப் பத்துப் பணம் பெற்றுள்ளனர்.

இக்காவல் பணிக்காக இடையர்கள் நெய்யும், வலையர் முயலும், பள்ளர் பறையர் கோழியும் அவருக்கு வழங்கவேண்டுமென்று ஊரவர்கள் முடிவு செய்துள்ளனர். (IPS 843)குதிரைகளுக்கு புல்லிடும் பணியை பறையர்களில் ஒரு பிரிவினர் மேற்கொண்டிருந்தனர். ‘குதிரைக்கிப் புல்லிடும் பறையர்’ என்று சோழர் காலக் கல்வெட்டுக்கள் குறிப்பிடுகின்றன. இவர்கள் இழிவாகக் கருதப்பட்டதை கல்வெட்டு காப்புரைகள் சில வெளிப்படுத்துகின்றன.உழுதொழிலை மேற்கொண்டு வாழ்ந்த பறையர்கள் ‘உழப்பறையர்’ என்று அழைக்கப்பட்டனர். இதனால் பறையர்கள் வெவ்வேறான தொழில்களில் ஈடுபட்டிருந்தமையும் உழுதொழிலில் ஈடுபட்டவர்கள் மட்டுமே உழப்பறையர் என்று அழைக்கப்பட்டனர் என்பதும் புலனாகிறது.அரசன், பறையன் அல்லது பொய்யாத் தமிழ்நம்பி என்ற பறையர் பூசகராகப் பணிபுரிந்துள்ளார். (தெ.இ.க.26, க.எ.253) பாண்டிய மன்னனின் மெய்க்காப்பாளராகப் பறையர் ஒருவர் பணியாற்றியமையை ‘அரையன் அணுக்க கூவன் பறையனேன்’ என்ற கல்வெட்டு வரி உணர்த்துகிறது.

(தெ.இ.க. 14; க.எ. 56)சோழ சேர்வைக்காரன், அவன் மனைவி கொண்பொடிக்காரி ஆகியோருக்கு புல்லாங்குடியிலுள்ள பெரியகூத்தன், சின்னக்கூத்தன், ராக்கக் குடும்பன் ஆகிய மூவரும் தங்கள் ஊரிலுள்ள அம்பலத்தை விற்றுவிடும்படி ரகுநாத சேதுபதி ஆணையிட்டார். இதன்படி ஐம்பது பணத்திற்கு மூவரும் அம்பலத்தை விற்றனர்.

மேலும் அங்கு புதிதாய் கண்மாய் வெட்ட நூறு பணம் வழங்கப்பட்டது. அங்கு புதிதாகக் குடியேறும் கைக்கோளக்குடி மூன்றுக்கு ஐந்து பணம் வீதம் பதினைந்து பணமும், புதிதாய் குடியேறிய பள்ளர்குடி ஒன்றுக்கு மூன்று பணமும் ஆக நூற்றியெண்பது பணம் மூவரிடமும் வழங்கப்பட்டது. 17ம் நூற்றாண்டு செப்பேடு (21-5-1696) பின்வரும் மூன்று செய்திகளை நமக்கு உணர்த்துகிறது.1. புதிய ஊர்களை வேளாண்மை செய்ய ஏற்கனவே இருந்த தங்கள் உடைமையான அம்பலத்தை விற்கும்படி குடும்பர்கள் மூவருக்கும் சேதுபதி மன்னன் கட்டளையிட்டுள்ளான்.2. புதிய ஊரில் வேளாண்மை செய்ய உழவர்களான பள்ளர்களும் கைவினைத் தொழில் செய்ய கம்மாளர்களும் குடியேற்றப்பட்டுள்ளனர்.3. கம்மாளர்களுக்கு வழங்கியதை விட குறைவான பணமே பள்ளர்களுக்கு வழங்கப்பட்டது.மேலும் இவர்கள் நிலத்துடன் கொடையாக வழங்கப்பட்டுள்ளனர். அல்லது விற்பனை செய்யப்பட்டுள்ளனர் என்பதனை சேதுபதி செப்பேடுகளில் இடம் பெறும் பின்வரும் வரிகள் உணர்த்துகின்றன.பள்ளுப்பறை சகலமும் சர்வ மானியமாக (இராசு.1994;208)பள்ளுப்பறை இறை, வரி ,ஊழியம்….ஆண்டனுபவித்துக் கொள்ளவும் (மேலது, 242)பள்ளுப்பறை…சந்திராக்கமாக அனுபவிச்சிக் கொள்வாராகவும் (மேலது, 451)பள்ளுப்பறை சகலமும் ஆண்டு கொள்வதுமலாஸ் என்ற பள்ளர்கள் இனத்தையும் அவர்கள் விக்கிபிடியா மூலத்தையும் பார்ப்போம்:Mala or Malla (different from the family/last name Malla from Andhra) is a social group or caste mostly from the south Indian state of Andhra Pradesh. Mala is derived from the Sanskrit malla, which means wrestler. They are one of the dominant Dalit castes in Andhra Pradesh, the other being Madigas.According to Government of India census data from 2001,Malas constitute a total of 41.6 percent (5,139,305) of the scheduled caste population of the state. They are largely concentrated in the Coastal Andhra region. During the Adi-Andhra movement of the 1930s, several Mala caste people, including few Madigas, especially from coastal Andhra called themselves as ‘Adi-Andhra’ and were recorded in the census with the ‘Adi-Andhra’ caste name akin to Adi Dravida of Tamil Nadu. (Adi-Andhra is synonym word instead of using MALA or Madiga, in Adi-Andhra Malas are 90% and 10% belonged to Madiga caste). In the ancient times, Malas were mostly village watchmen or hardworking laborers. They were skilled workers too and were also recruited by the British Army because of their martial skills. Presently they don’t have a specific caste profession and can be seen in many professions. The Mahars in neighbouring Maharashtra are akin to the Malas and the two dominant dalit castes in Tamil Nadu, Paraiyar and

Pallar, tend to claim the inter-relation with the Malas,Mahars and Pulayas.

@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@

மள்ளரின் மறுப்புரை:

    இந்தக் கட்டுரையை எழுதியவர்கள் ‘மூளை இல்லாதவர்கள்’ என்று மீண்டும் ஒரு தடவை உறுதிபடுத்தியுள்ளனர். முதலில் இவர்கள் காட்டக்கூடிய ‘மலாஸ்’ என்ற சொல் பற்றிய விளக்கத்தைப் பார்க்கலாம். 'மலா' என்றால் இவர்கள் மள்ளா என்று அர்த்தம் கொடுக்கிறார்கள். இதில் மறுக்க ஒன்றும் இல்லை (விக்கி அடிப்படையில்). மலா என்றால் மல்லா என்பதுதான் நேரிடையான அர்த்தம் என்ற போதும் அதைச் சொல்ல இவர்களுக்கு மனம் இல்லை. 


    ஏனென்றால், முன்பு ஒரு கட்டுரையில் (மல்லர் – மள்ளர்: ஓர் ஆய்வு) 'மல்லர்' என்றால் 'முக்குலத்தோர்' என்றும், 'மள்ளர்' என்ற 'பள்ளர்' என்றும் சொல்லி தங்களது அதிபுத்திசாலித்தனத்தை உலகிற்கு வெளிப்படுத்தியவர்கள்தான் இவர்கள். மலா என்பது மல்லா என்று நேரிடையாகச் சொன்னால் எங்கே தங்களின் முந்தைய உளரலுக்கு ஆபத்து வந்துவிடுமோ என்று மள்ளா என்று சொல்லி விட்டனர். இதனால் ஒன்றும் பாதகம் இல்லை. மல்லர் மற்றும் மள்ளர் என்பது பள்ளரைக் குறிக்கும் என்பதை தெளிவாக்கி விட்டனர். ஏனெனில், இந்தக் கட்டுரையில் காட்டக்கூடிய மலா அல்லது மள்ளா(மல்லா) என்பது பலம் பொருந்தியவனைக் குறிக்கும் என்றும்,அது பள்ளர்கள் என்றும் தெளிவாக உணர்த்தி உள்ளனர். 


    இதைத்தான் நாங்கள் ஆரம்பத்திலிருந்து சொல்லிக் கொண்டிருக்கிறோம் (மள்ளர் மல்லர் ஆய்வு என்ற கட்டுரைக்கு மறுப்பு). இவர்கள் காட்டக்கூடிய விக்கிபீடியாவிலும் இவர்கள் சொல்கின்ற மள்ளா(மல்லா) என்ற வார்தையின் அர்த்தம் பலவான்(மற்போர் புரிபவன்) என்றே காட்டப்பட்டுள்ளது. இதனால்தான் இடைக்காலச் சோழர்களின் கல்வெட்டுக்கள் அனைத்திலும் சோழமன்னர்களின் மெய்கீர்த்திகளில், சோழர்கள் ‘வன்மரான’ அதாவது பலம்பொருந்திய இராசராசசோழன், வன்மரான இராசேந்திர சோழன் என்றவாறே குறிக்கப்பட்டுள்ளனர்.அடுத்து மலா என்பது மள்ளா என்பதற்கு இணையானது என்பதைச் சொல்லி(விக்கிச் செய்தி) அதன் அடிப்படையில் மள்ளரான பள்ளர்கள் ஆந்திராவிலிருந்து தமிழ் நாட்டிற்கு வந்த வந்தேரிக்கூட்டம் என்று விளக்கியுள்ளனர். அதாவது,மலாஸ் என்போர் ஆந்திரமக்கள், அதன் அடிப்படையில் அதற்கு இணையான மள்ளா(மல்லா) என்பவர் ஆந்திராவைச் சார்ந்தவர்கள். அதாவது, மள்ளா என்ற பள்ளர் ஆந்திராவிலிருந்து தமிழ்நாட்டிற்கு வந்த வந்தேரிகள் என்பதுதான் இவர்கள் வாதம்


    இந்த புத்தி பேதலித்த வாதத்தை அவர்கள் வாயிலாகவே அலசுவோம்.    

  "இந்த மள்ளா என்ற பள்ளர் யார் காலத்தில் தமிழ்நாட்டிற்கு வந்தார்கள்?"

   "வந்தேரிகளான விசயநகர ஆட்சியர்கள் காலத்தில்."

   "அதாவது, கி.பி.12 ஆம் நூற்றாண்டு காலத்திற்குப் பின்பு. "

   "ஆம்"

   "அப்படியென்றால், அதற்கு முன்பு தமிழ்நாட்டில் மள்ளர் என்போர் நிச்சயமாக இல்லை என்பதுதான் அர்த்தம்.சரிதானே கள்ளர்களே....?" 


    நிற்க.இதை உண்மைத் தமிழன் யாராவது ஏற்பார்களா? இந்தக் கருத்தைச் சொல்பவர்கள், அதை ஏற்பவர்கள், அதை உண்மை என ஒப்புக்கொள்ளுமாறு விடாது முயற்சிப்பவர்கள் அனைவரும் நிச்சயமாக வந்தேறிக்கூட்டங்கள் அதாவது, தமிழினத்தின் எதிரிகள் என்பது இதனால் விளங்கும். இதன் காரணத்தால்தான் இவர்கள் தமிழினத்தின் தலைக்குடியாகிய மள்ளர் இனத்தை அந்நியராகச் சொல்லி அதில் குளிர் காய முயற்சி செய்து கொண்டுள்ளனர். 


(ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்னும் அடிப்படையில் 'மள்ளர்கள்' அவரின் வழித் தோன்றல்களான மூவேந்தர்கள்,பல்லவர்கள் வந்தேறிகளா, இல்லை இந்த மண்ணின் மைந்தர்களா என்பதை அறிய இங்கே சொடுக்கவும்.)

 சங்ககால மள்ளர்கள்(மன்னர்கள்):

* சோழன் நெய்தலங்கானல் இளஞ்செட் சென்னி 

“ மகளிர் மலைத்தல் அல்லது, மள்ளர் மலைத்தல் போகிய சிலைத்தார் மார்ப” (புறநானூறு பாடல் 10)

* கோப்பெருஞ்சோழன் 

“ முழுஉ வள்ளுரம் உனக்கும் மள்ள” (புறநானூறு பாடல் 219)

* இதேபோன்று, மள்ளன் ‘பாண்டியன் வழுதி’ (புறநானூறு பாடல் 388)

* சேரமன்னர்கள் (பதிற்றுப்பத்து 38,43,63...)

என மள்ளர் வரலாற்று சுவடுகள் ஏராளம்.

சங்கத் தமிழ் புலவர் பெருமக்கள்: 

  மதுரை அளக்கர் ஞாழார் மகனார் மள்ளனார், அம்மள்ளனார், கடுவன் மள்ளனார்,கடுவன் இளமள்ளனார்....

கள்ளர்கள் கூற்றுப்படி இவர்கள் அனைவரும் ஆந்திராவிலிருந்து தமிழ் நாட்டிற்கு வந்த வந்தேறிக் கூட்டமா? என்ன முட்டாள்தனமான வாதம்!. 


    இருப்பினும் வாசகர்களுக்கு ஒரு சந்தேகம் இருக்கும். மள்ளர்/மல்லர் என்போர் தமிழ் தலைக்குடி மக்கள் எனில், இவர்கள் எப்படி ஆந்திராவில்? அதுவும் மலாஸ் என்ற பெயரில்?. இதோ பதில். இந்த தமிழ் தலைக்குடியான மள்ளர் குடி இந்தியா முழுமைக்கும் பரவியுள்ளது. ஆந்திராவில் மட்டுமில்லை வடமாநிலங்களிலும், நேபாளத்திலும் ஏன் உலகம் முழுதிலும் இந்த மள்ளரான பள்ளர்குடி பரவியுள்ளது என்பதுதான் நிதர்சனமானது.

     யார்தான் தமிழர்?? என்ற தலைப்பின் கீழ் இவர்கள் காட்டக்கூடிய பட்டியலில் கூட நேர்மை இல்லை. அதாவது, பறையர் என்போர் கேரளத்தின் புலையர் என்பதாகக் காட்டியுள்ளனர். இது புலையர் கிடையாது புலயர் அதாவது புலம் என்றால் நிலம் அந்த நிலத்திற்கு உரியவர் புலயர். இந்தப் புலயர் என்போர் பள்ளர். அது பறையர் கிடையாது. அதேபோன்று செருமார் என்றால் சேரமார்(சேரன்) என்று அர்த்தம். அது சேரிமார் கிடையாது.


    கீழேயுள்ள கல்வெட்டுச் செய்தி வந்தேரிகள் (சேதுபதிகள்) தமிழ்நாட்டின் பூர்வகுடியான பள்ளர்களை ஒடுக்கிய செய்தியைக் காட்டுகிறதா அல்லது பள்ளர்களை வந்தேரிகள் என்று காட்டுகிறதா? பார்வையாளர்கள் முடிவிற்கே இதை விட்டுவிடுகிறேன்.

(தெ.இ.க. 14; க.எ. 56)சோழ சேர்வைக்காரன், அவன் மனைவி கொண்பொடிக்காரி ஆகியோருக்கு புல்லாங்குடியிலுள்ள பெரியகூத்தன், சின்னக்கூத்தன், ராக்கக் குடும்பன் ஆகிய மூவரும் தங்கள் ஊரிலுள்ள அம்பலத்தை விற்றுவிடும்படி ரகுநாத சேதுபதி ஆணையிட்டார். இதன்படி ஐம்பது பணத்திற்கு மூவரும் அம்பலத்தை விற்றனர்.


மேலும் அங்கு புதிதாய் கண்மாய் வெட்ட நூறு பணம் வழங்கப்பட்டது. அங்கு புதிதாகக் குடியேறும் கைக்கோளக்குடி மூன்றுக்கு ஐந்து பணம் வீதம் பதினைந்து பணமும், புதிதாய் குடியேறிய பள்ளர்குடி ஒன்றுக்கு மூன்று பணமும் ஆக நூற்றியெண்பது பணம் மூவரிடமும் வழங்கப்பட்டது. 17ம் நூற்றாண்டு செப்பேடு (21-5-1696) பின்வரும் மூன்று செய்திகளை நமக்கு உணர்த்துகிறது.1. புதிய ஊர்களை வேளாண்மை செய்ய ஏற்கனவே இருந்த தங்கள் உடைமையான அம்பலத்தை விற்கும்படி குடும்பர்கள் மூவருக்கும் சேதுபதி மன்னன் கட்டளையிட்டுள்ளான்.2. புதிய ஊரில் வேளாண்மை செய்ய உழவர்களான பள்ளர்களும் கைவினைத் தொழில் செய்ய கம்மாளர்களும் குடியேற்றப்பட்டுள்ளனர்.3. கம்மாளர்களுக்கு வழங்கியதை விட குறைவான பணமே பள்ளர்களுக்கு வழங்கப்பட்டது.மேலும் இவர்கள் நிலத்துடன் கொடையாக வழங்கப்பட்டுள்ளனர். அல்லது விற்பனை செய்யப்பட்டுள்ளனர் என்பதனை சேதுபதி செப்பேடுகளில் இடம் பெறும் பின்வரும் வரிகள் உணர்த்துகின்றன.பள்ளுப்பறை சகலமும் சர்வ மானியமாக (இராசு.1994;208)பள்ளுப்பறை இறை, வரி ,ஊழியம்….ஆண்டனுபவித்துக் கொள்ளவும் (மேலது, 242)பள்ளுப்பறை…சந்திராக்கமாக அனுபவிச்சிக் கொள்வாராகவும் (மேலது, 451)பள்ளுப்பறை சகலமும் ஆண்டு கொள்வது 



பின்னிணைப்பு:
    'பள்ளர்கள் வந்தேறிகள்' என்ற இந்த கட்டுரை எழுதியவர்கள் எத்துனை நேர்மையானவர்கள் என்று அறிந்து கொள்ளவும், 'பள்ளர்களை' பற்றி இப்படி உளறிக் கொட்ட இவர்களுக்கு யோக்கிதை இருக்கா இல்லையா என்பதையும் அறிந்து கொள்ள ஒரு சில உதாரணங்கள் இதோ:

*  ஊர் உலகமே பள்ளரே தேவேந்திரன் என்று ஏற்றுக்கொண்டுள்ள நிலையில், அந்த தேவேந்திரன் என்பது எங்களுக்கு உள்ள பட்டம் என்று இந்த கட்டுரை எழுதியவர் போட்டாரே போடு பார்க்கலாம். அறிவுலகமே ஒரு கணம் அசந்து தான் போய்விட்டது. (மேலும் அறிய:) :-)

* தேவர் என்பது பட்டம். அது சாதி அல்ல என்று நிறுவிய பின்பும், அது தாங்கள் மட்டுமே என்று இன்றும் இந்த கட்டுரையாளர் சாதிக்கும் கயமைத்தனம்.(மேலும் அறிய)

* மேலே சொல்லப்பட்ட 'பள்ளர்கள் ஆந்திர பூர்வீக குடிகள்' என்ற எழுதப்பட்ட கட்டுரைக்கு, மள்ளர்கள் சார்பில் பதில் பின்னூட்டம் ,கட்டுரையாளரின் வலைத் தளமான 'தேவர் தளத்தில்' இடப்பட்டது. வழக்கம் போல அதை அவர்கள் பிரசுரிக்கவில்லை. அத்துணை நியாயவான் இந்த கட்டுரையை எழுதிய கள்ளர். அந்த பின்னூட்டத்தை உங்களுக்கு அறியத் தருகிறோம்.
======================================
கடுங்கோன் பாண்டியன் says:
Your comment is awaiting moderation. 
27/02/2013 at 9:56 PM
“பிராமணர்கள் வடக்கிலிருந்து வந்தவர்கள் என்ற செய்தியில் சிறிதும் ஐயமில்லை. நாயக்கர்களும் மற்ற தெலுங்கு சாதியினர்களும் வடக்கிலிருந்து வந்தவர்களே என்பதிலும் ஐயமில்லை. பொதுவாக வேளாளர்கள்(பிள்ளை சாதியினர்) சோழ நாட்டிலிருந்தும், மறவர்கள் இராமநாதபுரத்தில் இருந்தும், சாணார்கள் இலங்கியில் இருந்தும் வந்தவர்கள் என்று கருத்தைப் படுகிறது. ஆனால், பள்ளர்கள் நாட்டிற்குள் குடி வந்தவர்கள் என்ற செவி வழிக்கதை கூட எக்காலத்திலும் இல்லை என்பது குறிப்பிடத் தக்க உண்மையாகும். நாம் இப்போது காணும் பல்வேறு சாதியினரையும், கூட்டத்தினரையும் குறிக்கும் குடியேற்ற மக்களின் கூட்டங்கள் வருவதற்கு முன்பே திருநெல்வேலிப் பகுதியில் பள்ளர்கள் இருந்தார்கலேனக் கொள்ளலாம்” — பிசப் கால்டுவெல், தென்பாண்டி திருநாடு அல்லது திருநெல்வேலி வரலாறு, மொழியாக்கம் பேரா.ந.சஞ்சீவி, பேரா. கிரிட்டின சஞ்சீவி, ப.5-6.

@@@@@@@@@@@@@@
குறிப்பு: வழக்கம் போல மேலே உள்ள கமெண்ட்டும் பிரசுரிக்க பட மாட்டாது என்று எங்களுக்கு தெரியும். அதை பற்றி நாங்கள் கவலைப் பட போவதில்லை. இந்த கட்டுரைக்கும் தக்க மறுப்பு ‘மறுப்பு களத்தில்’ (http://maruppukalam.blogspot.com/) விரைவில் இருக்கும்.
Reply
======================================


  மேற்சொன்ன தகவல்களில் இருந்து காலம் காலமாய் எப்படி முக்குலத்தோர் சரித்திர பொய்களை,வரலாற்று திரிப்புகளை திட்டமிட்டே அரங்கேற்றி வருகின்றனர் என்பதை எளிதில் உணரலாம்.