Showing posts with label அகமுடையார். Show all posts
Showing posts with label அகமுடையார். Show all posts

Friday, April 5, 2013

தமிழின மூத்த குடி யார் என்ற ஆய்வும், உண்மை பின்னணியும்

மூல கட்டுரை:


பாமரனின் பார்வையில் கேள்விகள்/சந்தேகங்கள்:
கேள்வி/சந்தேகம்: 1
* மூல கட்டுரையில்,
//முதல் மனிதன் ஆப்பரிக்க கண்டத்தில்தான் தான் தோன்றினானன் அங்கிருந்து தான் மற்றப் பகுதிகளுக்கு. சுமார் 70 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இடம் பெயர்ந்தான் என்பது ஆராய்ச்சியாளர்கள் முடிவு இன்று மறுபரிசீலனை செய்யப்படுகிறது. இந்த முதல் தமிழ் மனிதனை தேடி தமிழ் மண்ணில் ஆராய்ச்சியாளர்கள் வரவு தொடர்கிறது//

என்று சொல்லப் பட்டுள்ளது. ஆனால் இவர்கள் கொடுத்த லிங்கில்,
However, genetic and archaeological evidence points towards an initial migration from southwestern Africa over 100,000 years ago, which spread eastwards out of Africa into the Arabian Peninsula, before a small group began a worldwide dispersal around 60,000 years ago along mainly coastal routes

என்று சொல்லப் பட்டுள்ளது. இதில் எது உண்மை? "தமிழ் மண்ணில் தான் முதல் மாந்தன் தோன்றினான்" என்று இவர்கள் கொடுத்த ஆதாரங்கள் ஏதும் சொன்னதாக தெரியவில்லையே? அனைத்து ஆதரங்கலுமே "பிரமலை கள்ளர்கள்" ஆப்பிரிக்காவில் இருந்து வந்தவர்கள் என்று தானே சொல்கின்றன? அப்படி என்றால் தமிழ் நாட்டை பொறுத்த வரை, இந்தியாவை பொருத்தவரை தமிழன் வந்தேறியா? அப்படி என்றால் 'நாங்கள் குமரிக் கண்டத்தில்' தான் தோன்றினோம் என்று இத்தனை நாள் முக்குலத்தோர் சொல்லி வந்தது பொய்யா...?

கேள்வி/சந்தேகம்: 2
> M130 என்ற மரபணு பிரமலை கள்ளரிடம் மட்டும் தான் உள்ளது என்று எந்த அடிப்படையில் இந்த ஆய்வை நடத்திய பேரா.பச்சையப்பன் முடிவுக்கு வந்தார்?  (இதன் உண்மையான பின்னணியை பிறகு பார்ப்போம்).
> யார் யாரிடம் இருந்து எல்லாம் மாதிரிகள் பெறப்பட்டன?
> எங்கே பெறப்பட்டன ?
> எப்படி பெறப்பட்டன ?
> என்ன என்ன ஆய்வுகள்,ஆராய்ச்சிகள் செய்யப்பட்டன என்று எந்த தகவலும் தெரிவிக்கப்படவில்லையே. ஏன்?

கேள்வி/சந்தேகம்: 3
கள்ளரிடையே பல பிரிவுகள் உண்டு. பிரமலை கள்ளர்,தஞ்சை கள்ளர்,தொண்டைமான் என பலவகைப்படும். இவர்கள் அனைவரும் ஒருவரா? அதற்க்கு வாய்ப்பு இல்லையே. ஆக, ஒரு கள்ளருக்கும், இன்னொரு கள்ளருக்குமே சம்பந்தம் இருக்கா இல்லையா என்று தெளிவாக கூறமுடியாத பட்சத்தில், இங்கே நடத்தப்பட்ட ஆய்வின் மூலம் 'கள்ளர்' தான் தமிழின் மூத்த குடி என்று பொதுவாக சொல்வது ஏற்புடையாதா?

கேள்வி/சந்தேகம்: 4
ஒட்டு மொத்த கள்ளரையே ஒரே மாதிரி பார்க்க இயலாத போது, மறவரையும், அகமுடையாரையும் இணைத்து 'முக்குலத்தோரே' தமிழின் மூத்த குடி என்று சொல்வது ஏற்புடையதா? மறவர்,எயினர் பாலை நிலக்குடி என்று தமிழ் இலக்கணம் கூறும் போது, பிரமலை கள்ளர் போன்ற மலை சார்ந்த வாழ்வு வாழ்ந்த 'கள்ளர்' சிலரையும் ஒரே பார்வையில் பார்ப்பது சரியா?

கேள்வி/சந்தேகம்: 5
   70000 வருசத்துக்கு முன்பு இந்தியாவில் வந்த முதல் மாந்தன் என்று ஒருவரை அடையாள படுத்தும் போது, அதற்க்கு முன்பு இந்தியாவில், குறிப்பாக தமிழகத்தில் மாந்தரே இல்லை என்று உறுதி பட நிலை நிறுத்த வேண்டியது இந்த ஆய்வை நடத்திய பேராசிரியர்களின் கடமை. அப்படி ஏதும் செய்ததாக தெரியவில்லை. ஏன்? அப்படி இருக்க வாய்ப்பில்லை என்ற முடிவுக்கு பேராசிரியர் எப்படி வந்தார்?

    இனி விசயத்துக்கு வருவோம். இந்த M130 என்ற இந்த ஆய்வானது நேர்மையாக நடத்தப்பட்ட ஆய்வா, இல்லை பித்தலாட்டமா என்பதை இந்த கட்டுரையின் இறுதியில் நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள். இந்த ஆய்வை பற்றி அலசும் முன்பு, இந்த ஆய்வுக்கு பின்பு உள்ள அடித்தளத்தை சற்று பார்ப்போம்.

மனித தோற்றம் பற்றிய கோட்பாடுகள்
* உலகில் மாந்தன் தோன்றினான் என்று சொல்லப்படும் முக்கிய தியரி
  > 'ஆப்பிரிக்காவில் தோன்றி பரவினான்'
  > 'லெமூரியாவில் (குமரித்தீவு) தோன்றி பரவினான்'
என்ற இரட்டை தியரிகலாகும். இதில் மேலை நாட்டவர்களால் முன்னிறுத்தப்பட்டு பிரச்சாரம் செய்யப்படும் முக்கிய தியரி 'ஆப்பிரிக்க தியரி' தான். அவர்கள் விரும்புவதும், நிலை நிறுத்த நினைப்பதும் அது தான். முதல் மாந்தன் 'லெமூரியாவில்' தோன்றினான் என்று யோசிக்க கூட அவர்கள் தயார் இல்லை. விதி விளக்காக சுவீடன் போன்ற நாடுகள் 'லெமூரிய' ஆராய்ச்சியில் முடிவை நெருங்கி விட்டதாக அறிகிறோம். (மேலதிக தகவல் இணைக்கப்படும்).மூலக் கட்டுரை கூட தியரி 1 (அதாவது ஆப்பிரிக்க தியரி'க்கு) வலு சேர்ப்பதற்காக நடத்தப்பட்ட ஆய்வே. இதை நாம் முதலில் புரிந்து கொள்ள வேண்டும். இந்த 'ஆப்பிரிக்க' தியரியை எப்பாடு பட்டாவது நிலை நிறுத்த விரும்பும் மேலை நாட்டு அறிவுஜீவிகள்,அதற்காக பண பலம்,ஊடக பலம் (டிஸ்கவரி சேனல்) என சகல வழிகளிலும் முயற்சி செய்கிறார்கள் என்பதும் அறிந்ததே. எனவே M130 என்ற பேராசிரியரின் ஆய்வு முடிவு அவர்களை ஈர்த்ததில் ஆச்சரியம் இல்லை. இந்த ஆய்வுக்காக பல கோடி ரூபாய்களை வரை 'NGO 'க்கள் மூலம் பேராசிரியரின் குழுவுக்கு விநியோகிக்கப்பட்டதாக சொல்லப்படுகிறது.

இனி பேராசிரியர்.பச்சையப்பன் செய்தது ஆய்வு தானா என்பதை அலசுவோம்.

பேராசிரியர்.பச்சையப்பன் ஆய்வின் பின்னணி
    ஏதோ ஒரு தருணத்தில், ஏதோ ஒரு மருத்துவ பரிசோதனைக்கு வந்த பல ரத்த மாதிரிகளில் இருந்து M130 மரபணு உள்ள மாதிரிகள் பிரித்தரியப்பட்டு ,அதில் சுமார் 12 மாதிரிகள் இறுதி செய்யப்பட்டன. அந்த தகவல் தான் பேராசிரியர்.பச்சையப்பனுக்கு சொல்லப்பட்டது. அதை இவர் வெளியே தெரியப்படுத்தினார். அவ்வளவே...!!! மாறாக, இவர் தானே முன்வந்து மாநிலம் முழுக்க பல்வேறு இனக்குழுக்களிடம் இந்த ஆய்வை செய்யவும் இல்லை, கண்டுபிடிக்கவும் இல்லை. சரி அந்த  12 மாதிரிகளும் 'பிரமலை கள்ளரிடம்' மட்டும் தான் இருந்ததா? இல்லை வேறு எந்த சாதி'க்கும் இருந்ததா? இங்கே தான் பச்சையப்பனின் நரித்தனம் வெளிப்படுகிறது.


    உண்மை என்னவெனில், அந்த 12 மாதிரிகளில் வேறொரு சாதியின் மாதிரியும்(sample) இதே M130 மரபணு கொண்டுள்ளது. அது வேறு யாரும் அல்ல 'கோனார்' சாதி தான். இதை பச்சையப்பன்  வெளியே சொன்னாரா..? இல்லை என்றால் இதை விட வேறு அயோக்கிய தனம் இருக்க முடியுமா..? அதெப்படி 'கோனாரு'க்கு இந்த மரபணு வந்தது என்று நீங்கள் கேட்கலாம். அதற்க்கு முன்பு M130 என்ற மரபணுவுக்கு முந்திய நிலை 'காட்டுமிராண்டி' மனித படி நிலை என்பதை உள்வாங்கி கொண்டு மேற்கொண்டு வாசியுங்கள்.

மனித மாந்தன் குமரித்தீவில் தோன்றியமை குறித்த ஆய்வுகள் பல உள்ளன. அதில் ஒன்றை இங்கே தருகிறோம்.

விழுப்புரம் ஓடை கிராமத்தில், ஆப்பிரிக்காவில் இருந்து மனிதன் இடம் பெயர்ந்தான், தமிழ் மண்ணுக்கு வந்தான் என்று கூறப்படும் காலத்துக்கு பல ஆயிரம் வருடங்களுக்கு முன்பில் இருந்தே மனிதர்கள் இங்கே வாழ்ந்து வருகின்றனர் என்பதை உணர்த்தும் ஆய்வு இது.

அப்படி பெறப்பட்ட ஒரு குழந்தையின் மண்டை ஒட்டு பாசில் இதோ.

முழு தகவலுக்கு இங்கே சொடுக்கவும்.
அந்த ஆய்வு முடிவு சொல்வது

"The human fossils from Odai and Hathnora probably bear significant implications for the current "Out of Africa" verses "Multiregional" debate concerning the place of origin and antiquity of humans, and Asia's importance in the story of hominid evolution"

தமிழ் கூறும் ஐவகை நில மக்கள் வாழ்வு

    தமிழ் இலக்கணப்படி கோனார்(இடையர்),மலை கள்ளர் போன்றவர்கள் முல்லை,குறிஞ்சி நில மக்கள். மறவர்,எயிற்றினர் போன்றவர்கள் பாலை நிலக்குடி மக்கள். ஆனால் பிரமலை கள்ளர்,மறவர் போன்றவர்களின் தொழில் 'ஆடு மாடு திருடுதல், வழிப்பறி செய்தல்' என்பதால் தொழில் அடிப்படையில் இவர்கள் ஒரே இனமாக பின்பு அறியப்பட்டனர். நிற்க. கால்நடை வளர்ப்பதும், அதை பராமரிப்பதும் இடையரின் தொழில். அதை திருடுவதும்,கொள்ளை இடுவதும் 'மலை கள்ளரின்' தொழில். இந்த அடிப்படையில் நோக்கினால் எப்படி 'கோனார்' போன்ற குறிஞ்சி நில பழங்குடி மக்களிடமும் M130 வந்தது என்பது புலனாகும்.

எமது வேண்டுகோள்கள்:
>    இந்த தகவலை (கோனாருக்கும் M130 இருக்கிறது) பேராசிரியர்.பச்சையப்பன் அறிவிக்க வேண்டும். அதோடு மட்டுமின்றி, மாநிலம் முழுவதும்,பல்வேறு இனக் குழுக்களிடமும் இது போன்ற ஆய்வை மேற்கொண்டு உண்மை தகவலை வெளியில் சொல்ல வேண்டும்.

> அப்படி ஒரு ஆய்வு நடத்தி முடிக்கப்படும் போது, வெவ்வேறு இனக்குளுக்களுக்கிடையே உள்ள மரபண்டு தொன்மை, இடைவெளி, பரிணாம வளர்ச்சி போன்ற தகவலகளையும் வெளியிட வேண்டும்.

Thursday, December 6, 2012

முக்குலத்தோரின் தோற்றம் பற்றிய புனைவும், உண்மையும்

கள்ளர்,மறவர்,அகமுடையார் தமது தோற்றம் பற்றி கூறும் விளக்கங்கள்

@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
* முக்குலத்தோர் தோன்றிய இடம்
முக்குலத்தோர் பிறப்பிடமும் தமிழ் மொழியின் பிறப்பிடமும் குமரிக்கண்டம் தான். அக்கண்டம் நீரில் மூழ்கிப் போனது. முச்சங்க வரலாற்றாலும், சிலப்பதிகார உரைகள் மூலம் தெரியலாம். திரு. பி.டு. சீனிவாசய்யர், திரு சேசையர் திரு. இராமச்சந்திர தீட்சிதர் போன்றோரின் வரலாற்று நூல்கள் வாயிலாகவும், தேவநேயப் பாவாணர் எழுதிய "முதற்தாய் மொழி" வாயிலாகவும், நாம் நன்கறிகிறோம். தமிழன் தோன்றிய இடம் குமரிக்கண்டம், கையாண்ட மொழி தமிழ் திராவிட மொழியாகும். பல்லாயிரம் ஆண்டுகளுக்குப் பின் படிப்படியாக வளர்ந்த tamilar , புகழின் உச்சக்கட்டம் எட்டினர். பழந்தமிழ் நாட்டை உலகிற்குச் சுட்டிக் காட்டினர்.
சடையவர்மன் அதிவீரராம பாண்டியன் கி.பி. 1564 முதல் 1604 வரை பாண்டிய நாட்டினை ஆட்சி செய்த மன்னனாவான். நெல்வேலி மாறனின் முதலாம் மகனாவான். அழகன் சீவலவேள் என்ற பெயரினைப்பெற்ற இவன் தனது தந்தையில் நினைவாக தென்காசியில் குலசேகரமுடையார் ஆலயம் அமைத்து விண்ணகரம் ஒன்றினையும் அமைத்தான். சிவனிடன் பக்தியுடைய இம்மன்னன் சிறந்த புலவனும் ஆவான். தமிழில் மிகுந்த பற்றுடன் இருந்த இம்மன்னன் வடமொழியிலும் தேர்ச்சி பெற்றவன் கூர்ம புராணம், வாயுசங்கிதை, காசிகாண்டம், இலிங்க புராணம், நறுந்தொகை ஆகிய நூல்களினை இயற்றிய பெருமையினையும் உடையவனாவான் இம்மன்னன். வடமொழி நூலான 'நைஷதம்' என்னும் நூலினை 'நைடதம்' என மொழி பெயர்த்த ..இவன் வெற்றிவேற்கை எனும் தமிழ் நூலையும் எழுதி உள்ளன்.

* வெற்றிவேற்கை எனும் தமிழ் நூல் நீதி நூல் ...அதில் நீதி மட்டும் போதிக்காமல் ஒரு சரித்திர உண்மையையும் கூறி உள்ளார் . அதை காண்போம் .

''இருவர் தம் சொல்லையும் எழுதரம் கேட்டே
இருவரும் பொருந்த உரையார் ஆயின்
மனு முறை நெறியின் வழக்கு இழந்தவர் தம்
மணமுற மருகி நின்று அழுத கண்ணீர்
முறையுறத் தேவர் மூவர் காக்கினும்
வழி வழி ஈர்வதோர் வாள் ஒக்கும்மே.''

பொருள் : வழக்கு தொடுத்தவர் அதனை மறுப்பவர் இருவர் கூற்றையும் எழு முறை கேட்டு அவை பொருந்த வராமல் நீதி முறையாக கிடைக்க வில்லையானால் வழக்கை இழந்தவர் அறம் பிறழா மனதுடன் நின்று அழுத கண்ணீர் அறமுறை பிழையாது நீதி வழங்கும் ஆற்றல் மிக்க தேவர் மூவர் { சேர , சோழ ,பாண்டியர் } காக்கினும் . அந்த கண்ணீருக்கு காரணமானவர் வழி வழி தோன்றும் வாரிசுகளையும் அழிக்கும் வாளாகும். இந்த பாடலை இயற்றியவர் ஒரு பாண்டிய மன்னராவார். அவர் தேவர் மூவர் என்று சேர , சோழ பாண்டியரை விளித்து இருப்பதால் மூவரசரும் தேவர் அதாவது முக்குலதோர் என்று ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்துள்ளார் .எனவே, தற்க்காலத்தில் சிலர் மாறுபட கூறி வருவது முக்குலதோர் மீது உள்ள காழ்ப்பு உணர்ச்சியால் என்பதை அறியலாம் .. 
இதில் முறையுறத் தேவர் மூவர் என்பதில் பொதுவாக முப்பெரும் தேவர் என சிவன் ,திருமால் , பிரமன் இவர்களை குறிக்கும் ... மூவர் என்பது தமிழில் பொதுவாக சேர , சோழ ,பாண்டியரை குறிக்கும் . ஆனால் இதில் முறையுற என்பதை கவனிக்க வேண்டும் . அதாவது நீதி நெறி வழுவாமல் காப்பாற்றுவது அரசர்களை குறிக்கும் ..

எடுத்துக்காட்டாக
"முறை செய்து காப்பாற்றும் மன்னவன் மக்கட்கு 
இறை என்று வைக்கப்படும் ."
எனும் திருக்குறள் வாயிலாக அறியலாம் .

இந்த பாடலை இயற்றியவர் ஒரு பாண்டிய மன்னராவார்.
அவர் தேவர் மூவர் என்று சேர , சோழ பாண்டியரை விளித்து இருப்பதால்
மூவரசரும் தேவர் அதாவது முக்குலதோர் என்று ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்துள்ளார. கொங்கு என்றால் தேவர்கள் தேன் சொறிந்த நாடு என பொருள். தலை சிறந்த தமிழகத்தில் சேர,சோழ,பாண்டியர் எனும் உற்ற சகோதரர்கள் ஆட்சியில் சமதர்மம் , ஜனநாயகம், சன்மார்கம் யாவும் தலைத்தோங்கி நின்ற காலத்தில் ஒரே குலம் ஒருவனே தேவன் என உலகை படைத்த பார்வதி பரமசிவன் நாமம் பாடி உழவு துறைக்கு முதலிடம் கொடுத்தார்கள். மேற்கே திருவிதாங்கூர், கிழக்கே திருவாரூர், வடக்கே திருவேங்கடம், தெற்க்கே திருமதுரை வரை மன்னன் சேரன் தலைமையில் யாவரும் ஒன்று பட்டு திருப்புகழ், தேவார தெய்வ வழிபாடு பட்ட கவிஞர்களுடன் சிற்பிகள் ஒன்றினைந்து ரத, கஜ, துரக, பாதிகளைக் கொண்டு சிவாலயங்களும், விஷ்ணு ஆலயங்களும் கி.பி. ஆறாம் ஙூற்றாண்du அமைக்கப்பட்டது. சேர மன்னனின் துணை கொண்டு நதிகளுக்கு கரைகளும், கற்களை கொண்டு அணைகள் கட்டினர்கள். காவிரி நதியை தாயாக கொண்டு கொங்கு நாட்டின் சேக்கிழார் வம்ச உழவர் பெருமக்கள் நான்கு லட்சம் பேர் திருவாரூரில் தியாகராஜேஸ்வர் ஆலயம் அமைய ஆவண செய்தார்கள்.
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@

மேற்ப்படி விளக்கங்களுக்கு எமது மறுப்புரைகள்


     தமிழன் தோன்றியது, ஏன் உலகின் முதல் மாந்தன் தோன்றியது கடலில் மூழ்கிப் போன ‘லெமூரியாக் கண்டம்’’ என்பதை தேவநேயப் பாவாணர் மிக விளக்கமாகத் தெளிவுபடுத்தி விட்டார். எனவே, இதற்கு புது விளக்கம் எதுவும் தேவைப்படவில்லை. 

     ஆனால்,கள்ளர்,மறவர்,அகமுடையார் என்போர் தமிழர் தானா என்பதுதான் சற்று சிந்திக்க வேண்டிய விசயம். ஏனெனில், கள்ளர் மற்றும் மறவர் என்ற இனக்குழுக்களின் முழுமையும், அகமுடையார் இனத்தின் ஒரு சிறிய பகுதியும் பூர்வீகத் தமிழர்கள் என்பதற்கு போதுமான ஆதாரங்கள் இல்லை. அவர்கள் அப்படி இருக்கும்பட்சத்தில், சங்க இலக்கியத்தில் அவர்கள் பற்றிய அடையாளம் கண்டிப்பாக இருந்திருக்கும். ஆனால், சங்க இலக்கியமானது தமிழ்த்தலைக்குடியான மள்ளர்தம் மாட்சிமை பெற்ற வாழ்க்கையையும், பிற தமிழ்க்குடிகளின் வாழ்க்கை முறையையும் காட்டும்போது, கள்ளர் மற்றும் மறவர் பற்றிய ஏதும் குறிப்பிடவில்லை (கவனிக்க: முக்குலத்தோர் என்பவர் யார்?மறவர் யார்?யார் வந்தேறி?) நெல்வேலி மாறன் மற்றும் அவனது மகன் இருவரும் மள்ளர்குல பாண்டிய வேந்தர்கள் என்பதை (திருநெல்வேலி: நெல்லையப்பர் கோவிலும், நெல்லின் மக்களும்) என்ற பதிவின் மூலம் தெரிந்துகொள்ளலாம்.

     ‘தேவர்’ என்ற பட்டத்தை வைத்து மூவேந்தர்களை தற்கால ‘முக்குலத்தோர்’ இனத்தைச் சார்ந்தவர்கள் என்று சொல்வது உண்மையில் முட்டாள்தனமான விசயமாகும்.(பார்க்க:'தேவர்' பட்டமும், முக்குலத்தோரின் பொய்களும்) ஏனெனில், தேவர் என்பது தனிநபர் பட்டமேயன்றி, அது சாதியைக் குறிப்பிடுவது கிடையாது. உண்மையில், சேரர், சோழர், பாண்டியர் மூவரும் தமிழ்த்தலைக்குடியான பள்ளர்(மள்ளர்)குடியைச் சார்ந்தவர்கள்.

    சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன் பற்றி வெள்ளைக்குடி நாகனார் பாடிய சங்கப்பாடல்:

    "மண்திணி கிடக்கைத் தண்தமிழ்க் கிழவர்
    முரசு முழங்கு தானை மூவர் உள்ளும்
    அரசு எனப்படுவது நினதே பெரும"  (புறநானூறு 35:3-5)

பொருள்: ...... மண் செறிந்த உலகத்தில், (அருள்மிக்க) தமிழ்த்தலைமகன்களான, முரசு ஒலிக்கும் படை பொருந்திய மூவேந்தருள்ளும் அரசு என்று பாராட்டிச் சொல்லப்படுவது நின் அரசே! பெரும!

     இப்பாடலில் உள்ள ‘கிழவர்’ என்பது மருதநிலத் தலைமகனான மள்ளனைக் குறிக்கும் சொல்லாகும். ‘தமிழ்க் கிழவர் மூவர்’ எனும்போது அது மருதநிலத் தலைமகன்களான மூவேந்தரைக் குறிக்கும். எனவே, மூவேந்தரும் பள்ளன்(மள்ளன்) என்பது தெளிவாகிறது.
இதனை திவாகர நிகண்டு கீழ்கண்டவாறு விளக்குகிறது.

306     "மருதநிலத் தலைமகன் பெயர் (3)
        ஊரன், மகிழ்நன், கிழவன் என்று இவை
        சாலி மருதத் தலைமகன் பெயரே".

இங்கு ‘சாலி என்பது நெல்லைக் குறிக்கும். ‘சாலி மருதத் தலைமகன் என்பது நெல் வளநாட்டு தலைமகன் என்பதாகும்.

Wednesday, December 5, 2012

முக்குலத்தோர் என்பவர் யார்?

கள்ளர்கள் 'முக்குலத்தோர் என்போர் யார்' என்பதற்கு கொடுக்கும் விளக்கங்கள்

@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@

  • முக்குலத்தோர் (தேவர்) 
     முக்குலத்தோர் என்றும் இச்சாதியினரைக் குறிப்பிடுவதுண்டு. கள்ளர், மறவர், அகமுடையார் ஆகிய முக்குலங்களும் போர்த் தொழிலை அடிப்படையாக கொண்டு வாழ்ந்து வந்ததால் இந்த மூன்று சாதியினரும் முக்குலத்தோர் என்று அறியப்படுகின்றனர். இந்திர(சூரிய) குலத்தினர் - கள்ளர், சந்திர குலத்தினர் - மறவர், அக்னி குலத்தினர் - அகமுடையார் என்பதை வரலாற்றின் மூலம் அறிய பெறலாம். இந்த மூன்று குலத்தினரும் தேவர் என்ற பொதுவான பெயரோடு குறிக்கப்பெறுவர். கள்ளர், மறவர், அகமுடையார் ஆகிய மூவரும் சகோதரர்களே என்றும் சிலர் குறிப்பிடுகின்றனர். வரலாற்று அறிஞர் எட்வர் தாட்சன் அவர்களும் இவ்வாறே கூறுகின்றார்.
  • கள்ளர், அகமுடையார் , மறவர் ஆகிய மூன்று சாதியினரும் தேவர் எனும் சாதியின் கீழ் ஒருங்கிணைக்கப்படுகின்றனர். மூன்று சாதியினராக இவர்கள் மூன்று குலத்தவர்களாகக் கொண்டு முக்குலத்தோர் என்றும் குறிப்பிடுவதுண்டு. 
  • தேவர் (முக்குலத்தோர்)
     தேவர் சமூகத்தினர் போர்க்குணம் படைத்த வீரம் செரிந்தவர்களாக வரலாற்றுகாலம் தொட்டு இன்றுவரை விளங்கி வருகின்றனர். தேவர் என்போர் கள்ளர், மறவர் மற்றும் அகமுடையார் இம்மூவரும் உள்ளடக்கிய ஒரு சமூக கூட்டமைப்பு. இம் மூவரும் இணைந்தவொரு வீரவர்க்கமானது முக்குலத்தோர் யென்று வழங்கப்பட்டு வருகிறது. 
         ஆங்கில காலணித்துவ காலங்களில் அவர்களுக்கு கீழே அடிமைப்படுவதை எதிர்த்து ஆங்கிலேயர்களுக்கு சிம்ம சொப்பனமாக திகழ்ந்து வந்தனர். ஆங்கிலேய ஆதிக்கத்தின் போது தமிழகத்திலிருந்து சட்டிஸ்கர் பகுதிக்கு இடம் பெயர்ந்த தேவரின மக்கள் ஒரு சிறிய சமூகமாய் இன்றளவிலும் வசித்து வருகின்றனர். 
    • தேவர் (முக்குலத்தோர்) சமூகத்தினர் பெரும்பான்மையானோர் தென் தமிழகத்து மாவட்டங்களை பூர்வீகமாகக் கொண்டுள்ளனர். மேலும், தஞ்சை, திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, திருச்சி யென தமிழகத்தின் பெரும்பகுதிகளில் வாழ்ந்து வருகின்றனர். குறிப்பாக தென் தமிழகத்திலும், மத்திய தமிழகத்திலும் தேவரின மக்கள் அதிகம் காணப்படுகின்றனர். 
    • முக்குலத்தோர் :
         தமிழை வளர்க்க மிகவும் செம்மையான பணிகளை செய்துள்ளனர். "கள்ளர் மறவர் கனத்ததோர் அகமுடையார் மெல்ல மெல்ல வெள்ளாளர் ஆனார்" என்ற பாடலை செவி வழி கேட்டறிந்து இருக்கலாம்
    @@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@

    மேலே கொடுக்கப் பட்ட விளக்கங்களுக்கான எமது மறுப்புரைகள்:


    • ஆங்கிலேயர் ஆட்சி காலத்திலிருந்து மறவர்,கள்ளர் மற்றும் அகமுடையர் (சேர்வை) என்ற வேறுபட்ட மூன்று இனத்தாரும் தாங்களை இந்திரனுக்கு அகலிகை மூலம் தவறான வழியில் பிறந்தவர் என்றும், இந்திரனுக்குப் பிறந்ததால் தாங்கள் ‘தேவர் என்றும், அதன் அடிப்படையில் தாங்கள் முக்குலத்தார் என்பதாகவும் கூறிக் கொள்கின்றனர் (பூவிந்திர புராணம்). ‘தேவர் என்ற பட்டத்தின் காரணத்தால் தாங்கள் மூவேந்தர் வம்சாவழியினர் என்றும் உரிமை கொண்டாடுகின்றனர். இது உண்மையா?
    ஆங்கிலேயர் ஆட்சிக்கு முந்திய நாயக்கர் ஆட்சிக் காலத்தில் இவர்கள் மூவரும் சகோதரர் எனவும், அதனால் முக்குலத்தார் எனவும் அறியப்பட்டதற்கு எந்தவித ஆதாரமும் கிடையாது.
        தேவர் என்பது அரசன், மதகுருமார் மற்றும் கடவுள் ஆகியோரைக் குறிக்கும் ஒரு மரியாதைச் சொல்லாகும். தேவர் என்ற சொல்லிற்கு கடவுள் அல்லது தெய்வம் எனப் பொதுவாகப் பொருள் கொள்கின்றனர். அதனை தலைவன் எனக் ‘கால்டுவெல் குறிப்பிடுகிறார் (கால்டுவெல், திருநெல்வேலி சரித்திரம், பக்கம் 52-53). தேவர் என்ற பட்டமானது தற்காலத்தில் மறவர் என்று காட்டப்படுகின்ற இனத்தைச் சார்ந்த சேதுபதி மன்னர்களுக்கு இருந்தது உண்மையே. 17 ஆம் நூற்றாண்டு காலத்திலிருந்து உள்ள கல்வெட்டுக்களில் இவர்கள் ‘சேதுபதி காத்த தேவர் என்றே குறிப்பிடப்படுகின்றனர். ஆனால், அதற்கு முன்பு அப்படி இருந்ததற்கு நிச்சயமாக ஆதாரம் இல்லை.
         இந்த ‘தேவர் என்ற சொல்லைப் பெயருக்குப் பின்னால் பட்டமாகப் பயன்படுத்துகின்ற வழக்கம் சங்ககாலம் தொட்டு வழக்கில் இருந்து வந்துள்ளது. (பார்க்க: 'தேவர்' பட்டமும், முக்குலத்தோரின் பொய்களும் )  ஆனால், அக்காலத்தில் இது ஒரு குறிப்பிட்டச் சாதியைச் சார்ந்தவர் பயன்படுத்துகின்ற பட்டமாக இல்லை. அதனடிப்படையில் பல புலவர்கள் இப்பெயர் பெற்றிருந்தனர்.
         (எ.கா) பெருந்தேவனார், ஈழத்துபூதன் தேவன், பூதன் தேவனார், வாயிலான் தேவன் மற்றும் தேவனனார். இவர்கள் யாவரும் வெவ்வேறு வகுப்பினைச் சார்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
        இடைக்காலத்தில் தமிழகத்தில் ஆட்சியிலிருந்த பிற்காலச் சோழ மன்னர்கள் மற்றும் பாண்டிய மன்னர்கள் தேவர் என்று பெயரிட்டுக்கொண்டனர். இக்காலத்திலும் இது குறிப்பிட்ட சாதிப் பிரிவினருக்கான பட்டமாக இல்லை.
        (எ.கா) பொன்மாளிகை துஞ்சிய தேவர், இராசராச தேவர், சுந்தரபாண்டியத் தேவர் மற்றும் குலசேகர பாண்டியத் தேவர்.
    பொதுவாக பேரரசர்களும், அவர்களுக்குக் கீழ் இருந்த தளபதிகளும் மற்றும் குறுநில மன்னர்களும் தங்களது முதன்மை மற்றும் அதிகாரத்தைக் காட்டுகின்ற வகையில் ‘தேவர் என பட்டம் சூடிக்கொண்டனர். பாண்டிய மன்னன் சுந்தரபாண்டியன் என்பவன் சுந்தரபாண்டியத் தேவர் என அழைக்கப்பட்டான். ஆனால், அவனுடன் பிறந்த அவனது மற்ற சகோதரர்கள் ‘தேவர் என்ற பட்டத்தைச் சூடிக் கொள்ளவில்லை. எனவே, இடைக்காலத்தில் தேவர் என்ற பட்டம் தனிநபர் சார்ந்த பட்டமாக இருந்ததேயன்றி ஒரு சாதி சார்ந்த பட்டமாக இல்லை என்பதே உண்மை. பிற்காலத்தில், தமிழ் வேந்தர்கள் வீழ்ச்சியடைந்த நிலையில், கண்டவர்கள் எல்லாம் இந்த தேவர் பட்டத்தை தங்களது பெயருக்குப் பின்னால் போட்டுக் கொண்டனர். இதற்கு ‘கண்டராதித்த தேவன் என்ற பெயர் கொண்ட ஒரு தாசியின் மகனைக் குறிப்பிடலாம். சில காலத்திற்கு முன்பு வரை கள்ளிக்கோட்டை வெள்ளாளர்களுக்கும் தேவர் என்ற பட்டமிருந்தது குறிப்பிடத்தக்கது. (நாஞ்சில் நாடன், நாஞ்சில் நாட்டு வெள்ளாளர் வாழ்க்கை, பக்கம் 89).
         பிற்காலச்சோழ, பாண்டிய பேரரசுகளின் வீழ்ச்சிக்குப் பின்பு தமிழகத்தில் தமிழ் பேசாத இனத்தவரே பெரும்பாலும் அரசியல் அதிகாரத்தில் இருந்தனர். அந்த வகையில் ஒரு சில கள்ளர், மறவர் இனக்குழுக்கள் தாங்கள் வாழ்கின்ற பகுதிகளுக்கு அரசியல் அதிகாரத்தைப் பெற்றனர். அந்நிலையில், தேவர் என்ற பட்டத்தினை தங்களை முதன்மைப் படுத்தும் பொருட்டு பயன்படுத்தி இருக்கலாம். (இரா.சுந்தரவந்தியத்தேவன் ‘பிறமலைக் கள்ளர் வாழ்வும் வரலாறும் பக்கம் 142). இதன் அடிப்படையில், சேதுவின் பதியாகச் சொல்லப்படுகின்ற இராமேஸ்வரத்தைப் பாதுகாக்கும் கூட்டத்தின் தலைவனைக் குறிக்கும் சொல்லாக இந்த ‘தேவர் என்ற சொல் பயன்படுத்தப்பட்டதா? இது ஒரு வழி.
         கி.பி 17 ஆம் நூற்றாண்டு காலத்திய சேதுபதி மன்னர்களாகிய தற்கால மறவர் என்ற இனத்தைச் சார்ந்தவர், ‘தேவர் என அழைக்கப்பட்டனர் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. ஆனால், சேதுபதி வரலாற்றை ஆராய்ந்த முனைவர் எஸ்.எம்.கமால் அவர்கள், ‘சேதுபதியின் வரலாறு 17 ஆம் நூற்றாண்டிலிருந்து அதாவது, கி.பி 1601 லிருந்து முரண்பாடு இல்லாத வகையில் இருக்கிறது. ஆனால், அதற்கு முந்தைய சேதுபதி மன்னர்களது ஆட்சித் துவக்கம், அவர்கள் முன்னோர் மரபு பற்றிய முறையான வரலாற்றுச் செய்திகள் இதுவரைக் கிடைக்கவில்லை என்கிறார். மேலும் ‘முதல் சேதுபதி மன்னராகச் சுட்டப்படுகின்ற (கி.பி.1603) உடையான் ரெகுநாத சேதுபதி மன்னரது தந்தையார் பெயர் என்ன என்பதும், அவர் சேதுபட்டத்திற்கு எந்த முறையில் தகுதி பெற்றவர் என்பதும் அறியத்தக்கதாக இல்லை எனவும் குறிப்பிடுகிறார் (எஸ்.எம்.கமாலின் ‘சேதுபதிகள் சரித்திரம் பக்கம் 9). அப்படியெனில், கி.பி 17 ஆம் நூற்றாண்டுக்கு முன்பு சேதுபதி மன்னர்கள் இருந்தார்களா? அப்படி இருந்தார்கள் என்றால் அவர்கள் தற்கால மறவர்களின் முன்னோர்களா? இல்லையா?  அல்லது அப்போதைய சேதுபதி மன்னர் என்போர் வேறு இனத்தைச் சார்ந்தவர்களா? அவர்களுக்கும் ‘தேவர் என்ற பட்டம் இருந்ததா? என்ற விவரங்கள் நிச்சயமாக இல்லை. இந்த நிலையில் தேவர் என்ற பட்டம் கொண்ட 17 ஆம் நூற்றாண்டு காலத்திய மறவராகிய சேதுபதி மன்னர்களை, ‘தேவர் என்ற பட்டத்தின் மூலம் இடைக்காலத்திய தமிழ் மூவேந்தர்களுடன் நிச்சயமாகத் தொடர்புபடுத்த முடியாது. பிற்காலத்தில், தமிழ் வேந்தர்கள் ‘தேவர் என்று பட்டம் போட்டுக்கொள்வதை நிறுத்திக் கொண்டனர் என்பதையும் நினைவில் கொள்ளவேண்டும்.
         இதற்கிடையில், தேவர் என்ற சொல் பற்றி ஆராய்ந்த அந்தோணிசாமி நாடார் அவர்கள், ‘தெவ்வர் என்ற சொல்லிற்குப் பகைவன், கொடியவன் எனப் பொருள் எனவும், மறவர் போன்ற இனக்குழுக்கள் முரட்டு சுபாவம் உடையவராக, குடிமக்கள் சொத்தை கொள்ளை அடிப்பவராக இருந்ததால் அவர்கள் அமைதியான குடிகளுக்குப் பகைவர்களாகக் கருதப்பட்டனர். அதனால், அவர்கள் தெவ்வர் என அழைக்கப்பட்டனர். அச்சொல்லே பின்னர் தேவர் என மருவியதாகக் கூறுகிறார் (அந்தோணிசாமி நாடார், சான்றோர் வரலாறு, பக்கம் 138). 

         மேலும், மறவர்களின் பூர்வீகம் பற்றி ஆராய்ந்த திரு, ஆர்.சத்தியநாத அய்யர் அவர்கள் ‘மறவர் தலைவனின் தலைநகரமான பெரியபட்டணம் சிறு சிறு குன்றுகளால் சூழப்பட்டுள்ளது. இங்கு நாகரிகமற்ற காட்டுமிராண்டிகளான கொடிய மறவர்கள் வாழ்கின்றனர். இவர்களது தொழில் கொள்ளையடித்தல் ஆகும் என்று கூறுகிறார் ( R.Satyanatha Ayyar, The History of Nayaks-page 322). எனவே, ‘குடிமக்களுக்குப் பகைவர்களான முரட்டு சுபாவம் கொண்ட ‘தெவ்வர் என்போரே ‘தேவர் ஆகி இருக்க வாய்ப்புண்டு என்ற முடிவு ஒத்துவருவதாக இருக்கிறது.
         அகமுடையார் என்ற சேர்வை இனத்தார்கள் கி.பி 17 ஆம் நூற்றாண்டு காலத்தில் சேதுபதி மன்னர்களிடத்தில் சேவைக்காரன் என்ற வகையில் கீழ்நிலை ஊழியம் செய்ததாகவே தெரிகிறது. அக்காலத்திய சேவைக்காரர்களில் முக்கியமானவர்களாகக் குறிப்பிடப்படுபவர் மருது சேர்வைக்காரர்கள். இவர்கள் பற்றி முனைவர் எஸ்.எம்.கமால் குறிப்பிடுவது ‘மருது சகோதரர்கள் வேலுநாச்சியாரின் அந்தரங்கப் பணியாளர்களாகப் பணி புரிந்தனர். நாளடைவில் விதவையான சிவகங்கை ராணி வேலுநாச்சியாருக்கும், வெள்ளை மருதுவிற்கும் ஏற்பட்ட நெருக்கம் சிவகங்கை அரசியலில் விபரீதத்தை விளைவித்தது. அரசியாரது பலவீனத்தைப் பயன்படுத்தி, தாங்களே ஆட்சியாளர்களாக அவர்கள் இயங்கி வந்தனர். இதனை அறிந்த இராமநாதபுரம் மன்னர் முத்துராமலிங்க சேதுபதி, வீரமறக்குடி வழியினரான தமது உறவினர் ராணி வேலுநாச்சியாரை, அவரிடமே அடிமைகளாக இருந்த மருது சேவைக்காரர்கள் ஆட்டிப்படைப்பதா? என்ற வேதனையும், சினமும் அடைந்தார். மேலும், ஆண் வாரிசு அற்ற சிவகங்கை சமஸ்தானத்தை தமது இராமனாதபுரம் சமஸ்தானத்துடன் இணைக்க விரும்பி, ஆற்காடு நவாப்பிற்கு சேதுபதி மன்னர் கடிதம் எழுதினார். இதனடிப்படையில் சேதுபதி மன்னருக்கும், மருது சேர்வைக்காரருக்கும் பகை வளர்ந்தது. (எஸ்.எம்.கமாலின், ‘சேதுபதிகள் சரித்திரம் பக்கம் 239-247). இந்தக் காலக்கட்டத்தில் சேர்வைக்காரர் மற்றும் மறவர் ஆகியோருக்கு இடையே முக்குலத்தோர் என்ற பந்தம் ஏதும் நிச்சயமாக இல்லை. மேலும், மருது சகோதரர்கள் ‘சேர்வைக்காரர் என்றே அழைக்கப்பட்டனர். அவர்கள் ‘தேவர் என்று அழைக்கப்படவில்லை. அவர்களது இனத்தாரும் தேவர் என்று அழைக்கப்படவில்லை.
         அதே 17 ஆம் நூற்றாண்டு காலத்தில் கள்ளர்களுக்கும், மறவர்களுக்கும் எந்த சம்பந்தமும்  கிடையாது. உண்மையில் சேதுநாட்டில் கள்ளர்கள் கொள்ளை அடித்து அட்டூழியம் செய்ததும், அவர்களை சேதுபதி மன்னர்கள் தண்டித்ததுமே நடந்தது. இதுவும் சேதுபதி வரலாற்றில் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. பின்னால் ஒரு காலகட்டத்தில் புதுக்கோட்டை கள்ளர் சகோதரர்கள் இருவரின் தங்கையான கத்தாயி என்ற காதலி நாச்சியாரை சேதுபதி மன்னர் இரண்டாம்தாரமாகத் திருமணம் முடித்த நிலையில், புதுக்கோட்டையின் உண்மையான தொண்டைமான் மன்னனைக் கொன்றுவிட்டு, தனது மைத்துனான கள்ளனை சேதுபதி மன்னர் புதுக்கோட்டை தொண்டைமான் மன்னனாக்கினான். இப்படித்தான் புதுக்கோட்டை சமஸ்தானம் உருவானது. இங்கேயும் மறவருக்கும், கள்ளருக்கும் முக்குலத்தோர் என்ற வகையில் உறவுமுறை இல்லை. கள்ளருக்கு தேவர் என்ற பட்டமும் இருக்கவில்லை. பிறகு எப்படி கள்ளர், மறவர் மற்றும் அகமுடையார் என்போர் முக்குலத்தோர் ஆனார்கள்? கள்ளர் மற்றும் மறவர் என்போர் சட்டதிட்டங்களுக்கு உட்படாமல், பொதுமக்களிடத்தில் கொள்ளை போன்ற அட்டூழியச் செயல்களில் ஈடுபட்டதால் ஆங்கிலேய அரசின் குற்றபரம்பரைச் சட்டத்தால் அடக்கப்பட்டனர். இதுவே கள்ளர் மற்றும் மறவர் என்போர் ஒன்றிணைய வழிவகுத்தது. இதற்கிடையில், மறவரின் கீழ் சேர்வைக்காரர்களாக இருந்த அகமுடையாரும் இவர்களுடன் இணைந்தனர். முக்கியமாக இராமநாதபுரம் மாவட்டத்தில் பெரும்பான்மை மக்களான பள்ளர்களின் எதிர்ப்பை சமாளிக்கும்முகமாக மூன்று இனத்தாரும் ஒன்றிணைந்த அமைப்பாக செயல்பட ஆரம்பித்தனர். இதுதான் ‘முக்குலத்தோர் அமைப்பு உருவான முறை.

    Friday, November 30, 2012

    கள்ளர்,மறவர்,அகமுடையார் என்றால் யார்?

    கள்ளர்,மறவர்,அகமுடையார் என்றால் யார்?

    அறிஞர் பெருமக்கள் சொல்வது:
    *******************************
          * "கள்ளர் என்ற சொல் பொதுவாக திருட்டு தொழில் ஈடுபடும் எல்லா மரபினரையும் குறிக்கும். ஆனால் இப்பெயர் அரசுக்கு வரி செலுத்த உட்படாத ஒரு குறிப்பிட்ட பகுதியில் காணப்படும் மக்களை குறிப்பதாக உள்ளது. கள்ளர்களுக்கு என்று ஒரு பொதுப்படையான குணம் உண்டு.அது தான் எல்லோரும் திருடுவது ஆகும். இதனால் கள்ளர
    ் என்ற பொதுப்பெயர் இவர்களுக்கு தொழிற் பெயராக சூட்டப் பட்டது. (தகவல்: E.Thurston C&T of SI Vol. IV,Page 53)

            * மறவர் என்ற சொல் போரில் ஈடுபட்ட அனைத்து வீரர்களுக்கும் பொதுவாக வழங்கியது. "சங்க இலக்கியத்தில் மறம்,மறவன் என்ற சொற்கள் பேசப்படுவது உண்மையே.அது முறையே வீரத்தையும், வீரனையும் சுட்டுமே அன்றி, மறவர் என்ற ஒரு இனம் அல்லது மரபை சுட்டவில்லை.(தகவல்:History of Maravar,Page 16. Dr. S. Kadirvel)

            * அகம்படியார் என்ற ஒரு சாதி தமிழ்வேந்தர் காலத்திலேயே இல்லை என்று தான் கூறப்படுகிறது. "ஆளையங்களிலும், அரண்மனையிலும் குற்றேவல் செய்வோர் அகம்படியார் என வழங்கினர்". (தகவல்: J.A.Abbe Dubois, Hindu Mannar & Custom - Page 17)

    வன்னியர் சொல்வது
    *********************
    "உண்மையில் கள்ளர் சங்ககாலத்தில் இவர்கள் முதலில் தூசிப் படைகளாக, ஆநிரை கவரும் வெட்சிப் போரில் ஈடுபடுத்தப்பட்டனர். கவர்ந்து வரப்பட்ட கால்நடைகள் அவர்களுக்கே பகிர்ந்தளிக்கப்பட்டது. பிறகு அவர்களை குதிரை பராமரிப்பு போன்ற பணிகளில் ஈடுபடுத்தினர். இவ்வாறானவர்கள் சேர்வைக்காரர்களாக அறியப்பட்டனர். பிறகு இவர்கள் அகப்பரிவாரங்களாக, அரண்மனைப் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டனர்.

    இவர்களே அகம்படியர் ஆவர். படைத் தளபதி ஆகும் அளவு இவர்களுக்கு உரிமை இருந்தது. இதைத்தான் 'கள்ளர் மறவர் கனத்ததோர் அகம்படி மெள்ள மெள்ள வெள்ளாளர் ஆயினரே' என்கிற சொல்வழக்கு வெளிப்படுத்துகிறது."

    மறத்தமிழர் சேனை(இது 'மறவர்களுக்கான' அமைப்பு):
    ***************************************************
    கள் - தல்: பறித்தல், பகைவர்களின் பொருட்களை கவர்தல்
    கள்ளன்: களம் விட்டு களம் சென்று பகையை அளித்தவர்கள் களைப்படை வீரர்கள்
    மறவர்: வரும் பகையை எதிர்த்து நின்ற மறப்படை வீரர்கள்
    அகமுடையார்: கோட்டை கொத்தளங்கள் காத்தும், குடிபடைகளுக்குள் கட்டுகோப்பு வளர்த்த அகப்படை வீரர்கள்

    வேந்தன் ராஜ ராஜன் கள்ளரா? அடமுடையாரா...?


    வேந்தன் ராஜ ராஜன் கள்ளரா? அடமுடையாரா...?
    ===============================================
    நீங்க 'பள்ளனிடம்' வாக்குவாதம் செய்யும் முன், முதலில் இவர்கள் தங்களுக்கேல்லையே பேசி ஒரு முடிவுக்கு வரட்டுமே. :-)

    "..................நமக்குள்ளாகவே இன்னும் உள்ள பாகுபாடு சரியாகல. பிறகு என்ன பண்ண முடியும்? எனக்கு தெரிந்த தரவுகள் அடிப்படையில் ராஜ ராஜ சோழன் - அகமுடையார் இனத்தை சார்ந்தவர்; ஆனால், அதை யாருமிங்கே ஏற்க நாதியில்லை. ஆதாரம் இருக்கா? அதை காட்டு என்பார்கள். ஆதாரம் என்பதை பள்ளர்கள் போல தனக்கு தானே திருத்தி எழுதுவது அல்ல. பூம்புகார் என்கிற காவிரி பூம்பட்டினமும் (நாகப்பட்டினம் மாவட்டம்), உறையூரும் (திருச்சி மாவட்டம்), தஞ்சாவூரும் சோழர்களின் பகுதிகள். இந்த திருச்சி - தஞ்சை - ஆரூர் - நாகை ஆகிய நான்கு மாவட்டங்களிலும் உள்ள அனைத்து சாதியினரில் தேவர் யென்ற பட்டம் உடையவர்கள், அகமுடையார்கள் மட்டுமே. சோழர்களின் அனைத்து மெய் கீர்திகளிலும் கூட "உடையார் ஸ்ரீ ராஜ ராஜ சோழ தேவர்க்கு யாண்டு" உடையார் என்ற பெயருக்கு முன்னால் பட்டம் போட்டுக்கொள்வதும் அப்போதிலிருந்து வழக்கத்தில் இருக்கிறது. அதற்கு உதாரணம் வட மாவட்டங்களில் வாழும் அகமுடயார்களுக்கு போதுப்பட்டம் முதலியார் என்பதே (செங்குந்தர் என்பரையே நாம் முதலியார் யென்று சொல்வோம்;............."

    (Referrence: http://aaru-saravanathevar.blogspot.in/2012/09/blog-post_3911.html?m=1)