Showing posts with label தேவி. Show all posts
Showing posts with label தேவி. Show all posts

Friday, November 30, 2012

'தேவர்' பட்டமும், முக்குலத்தோரின் பொய்களும்



'தேவர்' பட்டமும், முக்குலத்தோரின் பொய்களும்
==============================================
@மேகநாதன் முக்குலத்து புலி:
-------------------------------------------
//தேவர் என்பது சாதி அல்ல, அது பட்டம். இருப்பினும் அது கள்ளர்,அகமுடையார்,மறவர் என்ற சாதி ஆட்களுக்கு மட்டுமே உள்ளது//

இதற்கான மறுப்பு:
----------------------------
* செஞ்சிக் கோட்டையில் முதலாம் அரசன் ஆனந்தத் தேவர்.இவர் “இடையர் (கோனார்)” சாதியை சேர்ந்தவர்.
* சிவகங்கை பாளையக்காரர் முத்து வடுக உடையனாத தேவர்.இவர் தெலுங்கு பேசும் “வடுகர் (நாயக்கர்)” சாதியை சேர்ந்தவர்
* கி.பி.1260 – 1271 இல் தேவகிரியை ஆட்சி பிருந்த மகாதேவர். இவர் “யாதவ” குலத்தை சேர்ந்தவர்.
* கி.பி.1299 – 1301 இல் ராந்தப்பூர் பகுதியை ஆட்சி செய்த கமீர் தேவர். இவர் “சௌக” வம்சத்தை சேர்ந்தவர்.
* சீக்கிய மதத்தை உருவாக்கிய குருநானக் தேவர்.இவர் “சீக்கிய” மத தலைவர் ஆவார்.
* கி.பி. 883 – 902 இல் காஸ்மீர் பகுதியை ஆட்சி புரிந்த சங்கிரமத் தேவர். இவர் “உத்பால” வம்சத்தை சேர்ந்தவர்.
* வங்காளம்,பீகார் பகுதியை ஆட்சி புரிந்த பாலபுத்திர தேவர்.இவர் “சைலேந்திர” வம்சத்தை சேர்ந்தவர்.
* “கோகொல்லர்” வம்சத்தை சேர்ந்தவர் காங்கேயத் தேவர். (கி.பி. 1030 )
* சீவக சிந்தாமணியை இயற்றியவர் திருத் தக்க தேவர். இவர் “சமண” மதத்தை சேர்ந்தவர்.
* பெரிய புராணம் இயற்றிய சேக்கிழார் வேளாண் மரபை சேர்ந்தவர்.இவருக்கு அருண்மொழித் தேவர் என்ற பெயர் பல்லவ மன்னரால் வழங்கப் பட்டது.
* தெலுங்கு பேசும் கம்பளத்து வடுகர் (நாயக்கர்). தங்களை தேவர் வம்சம் என்று கூறி ‘தேவர் ஆட்டம்’ ஆடுகின்றனர்.மதுரை மாவட்டம், கோடங்கி பட்டியில் உள்ள கம்பளத்து வடுகர்களை (நாயக்கர்) இதற்கான சான்றுகளில் ஒன்றாக கூறலாம்.இதற்க்கு இவர்கள் கூறும் விளக்கம் யாதெனில் தேவர் என்றால் இறைவன். நாங்கள் இறைவனோடு நேரடித் தொடர்பு உடையவர்கள். எனவே தான் தேவர் ஆட்டம் ஆடுகின்றோம் என்கின்றனர்
கல்வெட்டு 1
——————-
(சோழர் கால) மதுராந்தகம் கல்வெட்டு வாசகம்:
“இவ்வூர் தேவரடியாள் மகன் கண்டியத் தேவன்”
அப்படியானால், இங்கு தேவரடியாள் மகன் என்று சுட்டப்படும் தேவன் யார்?
கல்வெட்டு 2
——————–
திருச்சி மாவட்டம், 12 ம் நூற்றாண்டு கல்வெட்டு:
“வண்ணான் அழிவில்லாத தேவன்”
அப்படியானால், இங்கு வண்ணான் என்று சுட்டப் படும் தேவன் யார்?
           இதில் இருந்து, 'தேவர்' பட்டம் என்பது முக்குலத்தோர் சொல்வது போல கள்ளர்,அகமுடையார்,மறவருக்கு மட்டுமே உள்ள பட்டம் என்பது கடைந்தெடுத்த பொய் என்பது புலனாகிறது. 

           அனைத்து கள்ளர்களும் தங்களை 'தேவர்' என்று அழைத்து கொண்டது இல்லை. இன்னும் சொல்லப் போனால் சில வருடங்களுக்கு முன்பு 'தேவர்' என்பதை சாதியாக அறிவிக்க கோரிய போது, அதை கள்ளர்களின் ஒரு பிரிவினர் எதிர்த்தனர் என்பது தான் வரலாறு.

           மேலும் 'தேவி' என்ற 'தேவனின்' பெண்பாலுக்கு சூடாமணி நிகண்டு தரும் பதில் இதோ:
தேவி பெயர்
இல்லவள், உரிமை, பன்னி, குடும்பினி, இல், இல்லாள், வல்லவை, களம், தாரம், மனையாட்டி, மனை, விருந்தம், பாரி, வாழ்க்கைத்துணை, களத்திரம், காந்தை, காதலி, நாயகி
(Ref: http://www.thamizham.net/pezhi/sangam/nikandu02-u8.htm)

      'தேவி' என்பதற்கு 'குடும்பினி' என பொருள் கண்டுள்ளது சூடாமணி நிகண்டு. கள்ளத்தி,மறத்தி என்று அல்ல. அப்படியானால் 'குடும்பினி' யார்? தொடர்ந்து படியுங்கள்.
*குடும்பினி, s. The wife of a house holder, a mistress, a matron, the mother of a family, குடும்பத்தலைவி. Wils. p. 226. KUT'UMBINEE.

*குடும்பன், s. (fem. குடும்பி.) The title of a chief among the Paller people, பள்ளர்தலைவன்.


         ஆக குடும்பனின் மனைவிக்கு 'தேவி' என்று பொருள் கண்டுள்ளது.மேலும் குடும்பன் என்றால் 'பள்ளனின் தலைவன்' என்றும் அதே அகராதி தான் கூறுகிறது. 'தேவி' குடும்பி என்றால், 'தேவன்' யார் என்று சொல்லாமலேயே விளங்கும். 

       மேற்சொன்ன ஆதாரங்களில் இருந்து 'தேவர்' என்பது பட்டம் மட்டுமே என்றும், இடத்திற்கு தகுந்தவாறு அந்த பட்டம் யாருக்கு, எதற்கு கொடுக்கப் பட்டது என்று ஆராய வேண்டுமே ஒழிய, அது சாதி என்று பிதற்றுவது அழகல்ல.  

மேலே சொன்ன இதே கருத்தை தான் (முக்குல நபர்கள் தவிர) அனைவருமே கூறுகின்றனர் என்பதற்கு உதாரணங்கள்: