Showing posts with label பூலித் தேவன். Show all posts
Showing posts with label பூலித் தேவன். Show all posts

Friday, November 30, 2012

யார் பாளையக்காரர்?

யார் பாளையக்காரர்?

       மருது பாண்டியன் ஏதோ ஒரு பாளையத்தின் தலைவன். பறங்கியர் நாயக்கர் ஆட்சி முறையில் இருந்த பாளையங்களை எல்லாம் ஜமீனாக மாற்றி தமது கட்டுப் பாட்டில் வைத்துகொள்ள விரும்பினர். அதற்க்கு ஒத்துபோகாதவர்கள் கட்ட பொம்மன்(தெலுங்கன்),பூலித் தேவன்(கள்ளன்),மருது பாண்டியன்(கள்ளன்) போன்றோர்.

* பாண்டியனின் ஆட்சியை வீழ்த்தி விட்டு, ஆட்சிக்கு வந்தவர்கள் நாயக்கர்கர்கலான தெலுங்கர்கள். அது வரை இருந்த ஊர் குடும்பு ஆட்சி முறையை நீக்கிவிட்டு, பாண்டிய அரசை 668 பாளையங்களாக பிரித்து அதில் 500 பாளையங்களில் தெலுங்கரையே அதிகாரிகளாக நியமித்தான். மீதம் உள்ள பாலையங்களுக்கு வேறு வழியில்லாமல் தெலுங்கர் அல்லாதவர்களை நியமித்தான். இது வரலாறு.

நமது கேள்வி இது தான்.

* பாண்டியன் என்பவன் 'கள்ளன்' என வைத்து கொண்டால், தெலுங்கன் இவனிடம் இருந்தே ஆட்சியை பறித்து இவனிடமே ஒப்படைக்க வேண்டிய அவசியம் என்ன? எந்த கேனையனாவது அதை செய்வானா?

* (கள்ளன் பாண்டியன் என ஒரு பேச்சுக்கு வைத்து கொள்வோம்). அப்படியானால் தெலுங்கனிடம் ஆட்சியை பறி கொடுத்த போது வராத கோபம், தெலுங்கன் இவனை அவனுடைய மண்ணுக்கே காவல் காரனாக பாளையத்துக்கு நியமித்த போது வராத கோபம், சொந்த மண்ணுக்கே தெலுங்கனிடம் கப்பம் கட்டிய போதும் சேவகம் செய்த போதும் வராத கோபம், பறங்கியர் வரி கேட்டதும் கள்ளனுக்கு பொத்து கொண்டு வருவது ஏன்?