Showing posts with label போர்மறவர். Show all posts
Showing posts with label போர்மறவர். Show all posts

Saturday, December 15, 2012

இராசராச சோழன் சத்திரியனா?

கள்ளர்கள் தங்களது வரலாற்றை பற்றி எடுத்து வைக்கும் ஆதாரங்கள்/வாதங்கள்:
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
=>        சேரனும் தன்அரசுரிமையையும், செங்கதிர் வீசிய மணிமாலை ஒன்றையும் இராசேந்திரனிடம் பறிகொடுத்தான். இராசேந்திரன் மதுரையில் தன் மகனைப் பிரதிநிதியாக அமர்த்தி, அப்பிரதிநிதியிடம் பாண்டிநாடு, கேரளம் ஆகியவற்றின் ஆட்சிப்பொறுப்பை ஒப்படைத்தான்.(கிபி.1018-19) அப்பிரதிநிதியின் பெயர் சடாவர்மன் சுந்தரபாண்டியன். இவன் 23 ஆண்டுகள் அரசாண்டான். வடநாட்டு வெற்றிகளுக்குப்பிறகு நாடுதிரும்பிய இராசேந்திரன் சோழகங்கை என்னும் குளம் ஒன்றை வெட்டி அதில்கங்கையிலிருந்து கொண்டுவந்தநீரைசொரிந்து கங்கா ஜலமயம் ஜயஸ்தம்பம் என்று பெயரிட்டுத் தன் வெற்றிக்கு விழாகொண்டாடினான். தன்மருமகன் இராசராச நரேந்திரனை (வேங்கி இளவரசன் விமலாதித்தனுக்கும் இராசராச சோழன் மகள் குந்தவைக்கும் பிறந்தவனை) வேங்கிநாட்டு மன்னனாக மணிமுடிசூட்டினான். தன்மகள் அம்மங்காதேவியை இராசராச நரேந்திரனுக்கு மணம் முடித்துவைத்தான். இவ்விருவருக்கும் பிறந்தவனே முதலாம் குலோத்துங்கசோழன் ஆவான். ""களவர்" என்ற வார்த்தை மருவி "களபர்" என்ற வார்த்தை பிறந்jது. களவர் என்போர் சுத்தத் தமிழர். முக்குலத்தோர். இரண்டு வார்த்தைகளுக்கும் வேறுபாடு அறிந்திருப்பது அவசியம். கள்ளர் என்பதன் மூலவார்த்தை களம் ஆகும். அதிலிருந்து பிறந்ததே களவர் என்ற வார்த்தை. களவர் என்ற ஒரே குடும்பத்திலிருந்து பிரிந்தவர்களே மறவரும் அகமுடையோரும் ஆவர். மூவரும் போர்க்களத்தொழிலையே செய்துவந்த ஒருதாய்வயிற்று மக்களாவர். போர்க்களத்தொழில் ஒரேகுடும்பத்திலிருந்து பிறந்தது. கள்ளர் என்போரே மூத்தவரானார். அவரே மற்ற இளையவர்களுக்கும் போர்பயிற்சி அளித்த குருவானார் எனலாம். தனக்கு போர்க்களத்தில் உதவிடும் பொருட்டே தன் இளையவர்களுக்கும் போர்பயிற்சிஅளித்து தன்நிழலைப்போல் பின்தொடர பழக்கியிருந்தனர் எனலாம்.மறவர்(விளக்கம்): இவர்கள் களவர் குலத்தின் ஒருபிரிவினர் ஆவார். இவர்கள் வீர தீரத்துடன் ஊக்கம் காட்டி போர்புரிந்ததால், மறவர் என்று அழைக்கப்பட்டனர். மறம் என்றால் வீரம். வீரத்துடன் போரிட்ட தால் மறவர் என்ற பெயர் பெற்றனர்.இவர்கள் கோட்டைக்கு வெளியே அரணாக நின்று எதிரி படையை தடுத்துநிறுத்தி இறுதிகட்ட போர்புரிவர். இது இவர்களின் தலையாய பணியாக இருந்தது.அகமுடையோர்(விளக்கம்): இவர்கள் களவர் குலத்தின் மற்றொரு பிரிவினர்ஆவார். இவர்கள் கோட்டையின்உள்ளே இருந்தபடி ,மதில்களின் மீது மறைந்து நின்றபடி கோட்டையை முற்றுகையிட வரும் எதிரியின் படைமீது குறி தவறாமல் அம்புமழை பொழிந்து, எதிரிகளை தடுத்து நிறுத்திப்போர் புரிந்தனர். வில்லில் நாண் ஏற்றி அதன் மீது அம்பைப்பூட்டி குறிதவறாமல் எதிரியின்மீது எய்தனர். அவ்வாறு எறிந்துஅவர்களைக் கொல்வதில் வல்லவர்கள். கோட்டையின் உள்ளேஇருந்தபடி போர்புரிந்ததால் அகமுடையோர் எனப்பெயர் பெற்றனர். அகம் என்றால் உள்ளே என்று பொருள்படும்.இவர்கள் கோட்டைக்கு உள்ளே இருக்கும் அரசகுடும்பத்தினர்கள், பெருந்தர மக்கள், அரசனின் சொத்துக்கள் அனைத்தையும் பாதுகாக்கும் பொறுப்பு இவர்களின் தலையாய கடமையாக இருந்தது அதற்காக கோட்டையின் மதில்கள்மீது நின்று அம்புமழைபொழிந்து எதிரிகளை கொன்றதோடு மட்டுமல்ல….கோட்டைப்பாதுகாப்புப்பொறிகளையும் பயன்படுத்தி கோட்டைமீது ஏறுகின்ற எதிரிகளை தாக்கி கொன்றனர். இவ்வாறு கோட்டைப்பாதுகாப்புப்பொறிகளை இவர்கள் பயன்படுத்திகொன்றனர் என்பதை இளங்கோவடிகள் பாடல் மூலம்கீழ்கண்டவாறு அறிகின்றோம்:பாடல்: "மிளையும் கிடங்கும் விளைவிற் பொறியும், கருவிர லூகமும் கல்லுமிழ் கவனும் பரிவுறு வெந்நெயும் பாகடு குழிசியும், காய்பொன் லுலையும் கல்லிடு கூடையும் தூண்டிலும் தொடக்கும் ஆண்டலை யடுப்பும் சுவையுட்ம கழுவும் புதையும் புழையும் அய்யவித் சீப்பும் முழுவிற்ற் கணையமும் கோலும் குந்தமும் வேலும் பிறவும்……………….."பொருள்:1)அம்பெய்யும் பொறி 2)கரிய விரலையுடைய குரங்குபோன்ற கடிக்கும் பொறி 3)கல்லெறியும் கவண் 4)கோட்டைமீதேற முயற்சிக்கும் எதிரிமீது காய்ச்சி ஊற்றும் எண்ணெய் 5)அவ்விதமான எண்ணெய் முதலியன ஊற்றுவதற்கான பாத்திரம் 6)இரும்பு கம்பிகளைக் காய்ச்சும் உலை 7)கல்லும் கவணும் வைக்கும் கூடை 8)கோட்டைமதில்மீது ஏற முயற்சிக்கும் எதிரிமீது மாட்டி இழுக்கும் தூண்டில் 9)சங்கிலி 10)எதிரியின்மீது வீச்ச் சேவல் போன்ற பொறி 11)அகழியைத்தாண்டி மேலே ஏறும் எதிரியைத்தாக்கி கீழேதள்ளும் இயந்திரம் 12)திடீரென பாயும் அம்புக்கூட்டம் 13)எதிரியின்மீது தீவீசும்,தீபந்தம் மற்றும் தீப்பொறி 14)சிற்றம்புகள் எய்யும் இயந்திரம் 15)மதிலின் மேல் உச்சியில் ஏறும் எதிரியின் கைகளைக்குத்தும் குத்தூசிகள் 16)மதிலில் ஏறியவனின் உடலைக்கிழிக்கும் இரும்பாற்செய்த பன்றி உருவமுடைய இயந்திரம் 17)மூங்கில் போன்ற உருவமுடைய இரும்பு உலக்கைகள் 18)கோட்டைக்கு ஆதரவாகப்போடப்படும் பெரிய மரக்கட்டைகள் 19)பெரியமரக்கட்டைகளை பிணைத்து குறுக்கே போடும் உத்திரங்கள் 20)தடி,ஈட்டி,வேல்,வாள் வீசும் இயந்திரப்பொறி. இக்கருவிகளைக்கொண்டு கோட்டைமீதிருக்கும் அகமுடையப்படையினர் போராடினர். இவ்வாறு போராடிய வீரர்கள் நொச்சிப்பூமாலை அணிந்துபோராடினர். எனவே, இது நொச்சித்தினை எனப்படும்.கள்ளர், மறவர், அகமுடையோர் என்னும் மூவரும் ஒருதாய்வயிற்றில் பிறந்தவர்கள்என்பதை விசயநகரப்பேர்ரசின் அமைச்சர் வெங்கய்யா அவர்கள் 1730ல் எழுதிய "தொண்டைமான் வம்சாவளி" என்றநூல் வலியுறுத்திக்கூறுகிறது.
தொண்டைமான் கள்ளர் வம்சத்தினர் என்று "இராஜதொண்டைமான் அநுராகமாலை சுவடிகூறுகிறது. பூவிந்தபுராணம், கள்ளகேசரிபுராணம் கள்ளர்,மறவர், அகமுடையோர் ஒருதாய் வயிற்றில் பிறந்தவர்கள் என்றும் இந்திரகுலத்தார் என்றும் கூறுகின்றன. இன்றைக்கும் தேவர், சேர்வை ஆகிய பட்டங்கள் கள்ளர், மறவர், அகமுடையோர் ஆகிய மூவருக்குமே உள்ளதை நுண்மான் நுழைபுலம்கொண்டு நுணுகிஆராய்ந்தால், இவர்கள் மூவரும் ஒரு தகப்பனுக்குப்பிறந்த, ஒருதாய்வயிற்றுப் பிள்ளைகள் என்பதை எளிதில் உணரலாம். தகப்பனின் பட்டப்பெயரே அவன் பெற்ற ஆண்மக்களுக்கும் தலைமுறை தலைமுறையாக தொடர்ந்து வந்துகொண்டிருப்பது நடைமுறையிலுள்ள மரபு ஆகும். அவ்வாறே தேவர், சேர்வை என்ற பட்டங்கள் ஒருதகப்பன் பெற்ற மூன்று ஆண்மக்களுக்கும்(கள்ளர்,மறவர், அகமுடையோர் ஆகிய மூன்று ஆண்மக்களுக்கும்) வந்துள்ளது. பன்னிருபடலமும், புறப்பொருள்வெண்பாமாலையும் களவர் குலத்திலிருந்து பிறந்த முக்குலத்தோர் போர் செய்த முறைகளை முக்கியமாக எட்டு தினைகளாக்கி விவரித்துக் கூறுகின்றன.அவைகள் வருமாறு:-1)வெட்சித்தினை: வேந்தனால் ஏவிவிடப்பட்ட வெட்சிமறவர் கள்வர்கள் படை பகைஅரசனின் நாட்டிற்குள் புகுந்து காவற்படையை வென்று ஆநிரைகளைக் கவர்ந்து வந்து, ஊர்மன்றத்தில் கொண்டுவந்து நிறுத்துதல். "வேந்துவிடு முனைஞர் வேற்றுப்புலக்களவின் ஆதந்து ஓம்பல் மேவற்றாகும் வெட்சி" என்று தொல்காப்பியர் பாடியுள்ளார். மற்றொரு இடத்தில் "தன்னுறு தொழிலே வேந்துறு தொழில் என்றன்ன இருவகைத்தே வெட்சி" என்று பாடியுள்ளார்(இ.வி.சூ.602 மேற்.) வெட்சிப்பூ மாலை அணிந்து போராடியதால் இது வெட்சித்தினை ஆயிற்று.(இதன் விளக்கத்தை எம்_130 மரபணு கள்ளர்களுக்கே உள்ளது என்ற என்னுடைய மற்றொரு கட்டுரையில் காண்க)2)கரந்தைத்தினை: வெட்சிமறவர் கள்வர்கள் படை கவர்ந்து சென்ற ஆநிரைகளை, அவர்கள் நாட்டின் ஊர்மன்றத்திற்குள் கொண்டுபோய் சேர்க்கும் முன் அவர்களை வழிமறித்து வெட்சிமறவர் கள்வர்படையை வென்று, இழந்த ஆநிரைகளை மீட்டு வருதல். இவர்கள் கரந்தைப்பூ மாலை அணிந்து போராடியதால், இது கரந்தைத்தினை ஆயிற்யறு.(வெட்சித்தினை, கரந்தைத்தினை ஆகிய இருபோர்களையும் செய்தவர்கள் கள்ளர்களே ஆவர். இதனை தொல்காப்பியரின் பன்னிருபடலத்தில் காணலாம்.)3)வஞ்சித்தினை: பகைஅரசனின் நாட்டைக்கைப்பற்றக் கருதிய வேந்தன், பகைநாட்டின்மீது போர்தொடுத்தல். (கள்ளர், மறவர்,அகமுடையோர் ஆகிய மூன்றுபடைகளும் இணைந்து பகைமன்னனின் நாட்டின்மீது படைஎடுத்துப்போய் போர் தொடுத்தல்) வஞ்சிப்பூ மாலைஅணிந்துபோராடுவர். 4)காஞ்சித்தினை: நாட்டைக்கவர படையெடுத்து வரும் அரசனின் படைகளை எதிர்த்து போராடுதல் (கள்ளர்,மறவர் படைகள் இணைந்து நாட்டைக்கவர வரும் எதிரி அரசனின்படைகளை எதிர்த்து நின்று போராடுதல்) 5)நொச்சித்தினை: பகைவர் படையின் முற்றுகையிலிருந்து கோட்டையை காக்க கோட்டைமீதிருந்து எதிரிகள் மீது அம்புமழைபொழிந்து தாக்கும் அகமுடையோர் படையின்(வில்லாளிகள்) போர். அகமுடையோர்படை கோட்டைமேலிருந்து அம்புமழைபொழிந்து தாக்குவர். அதேநேரத்தில், கோட்டையை முற்றுகையிடும் எதிரிபடைகளுடன் கோட்டைவாசலில் பாதுகாப்பாகநின்று கள்ளர்,மறவர் படைகள் இணைந்து எதிரியுடன் போர் செய்வர். நொச்சிப்பூமாலை அணிந்து போராடுவர்.
6)உழிஞைத்தினை: பகைவரது கோட்டையை சுற்றிவளைத்து முற்றுகையிட்டு, கோட்டையின்காவலை உடைத்து, கோட்டைக்குள்புக எதிரிநாட்டரசன் படைகள் நடத்தும்போர். எதிரிநாட்டின் கள்ளர், மறவர் அகமுடையோர்(வில்லாளிகள்) படைகள் மூன்றும் இணைந்து நடத்தும்போர். உழிஞைப்பூ மாலை அணிந்து போராடுவர்.7)தும்பைத்தினை: இரண்டு நாட்டு அரசர்களின் படைகளும் நேருக்கு நேர் மோதி நடத்தும் இறுதிகட்டப் போர். (இப்போரில் இரண்டு நாடுகளின் கள்ளர்,மறவர்,அகமுடையோர்(வில்லாளிகள்) படைகள் நேருக்குநேர் கடுமையாக மோதிக்கொள்ளும் இறுதிகட்டப்போர். தும்பைப்பூ மாலை அணிந்து போராடுவர்..8)வாகைத்தினை: இரண்டு நாடுகளின் கள்ளர், மறவர், அகமுடையோர்படைகளும் போரிட்டு ஒருநாடு வெற்றி வாகைசூடும் போர். வெற்றிபெற்ற படைகள் வாகைப்பூ மாலை சூடி மகிழ்ச்சி ஆரவாரம் செய்வர்கள்ளர் என்ற வார்த்தை களம் என்ற மூலவார்த்தையிலிருந்து பிறந்ததுபோல், வேறு எந்த இனமும், களம் என்ற வார்த்தையிலிருந்து பிறக்கவில்லை. இந்த அடிப்படைஉண்மையை அறியாது எழுதப்படும் வரலாறு, பெருக்கல்வாய்ப்பாடு அறியாத மாணவன் போடுகின்ற கணக்கின் விடைபோல் தவறாகவே முடிந்துவிடும்.களவர் குலத்தினராகிய நம்முன்னோர்கள் ஆற்றிய போரினையே 2300ஆண்டுகளுக்கு முன் அகத்தியரின் மாணவர்களாகிய பன்னிருவர் எழுதியுள்ளனர். அப்பன்னிரு மாணவர்களில் முக்கியமானவர் தொல்காப்பியர். தொல்காப்பியரே முதல் இருபடலங்களை எழுதியுள்ளார். அவ்விரு படலங்களே வெட்சித்தினையும் கரந்தைத்தினையும் ஆகும். வெட்சிச்தினையிலும் கரந்தைத்தினையிலும் கள்ளர்கள் ஆற்றிய போரையே தொல்காப்பியர் தெளிவாக பாடியுள்ளார். அதன்பிறகு ஐயனாரிதனார் என்னும் சேரர்குடியைச்சேர்ந்த புலவரும் கி,பி,9ஆம் நூற்றாண்டில் புறப்பொருள்வெண்பாமாலையை பாடியுள்ளார். இப்பன்னிருபடலமும் புறப்பொருள் வெண்பாமாலையும் களவர் என்ற நம் முன்னோர்கள் ஆற்றிய குலத்தொழில் போரைமிகத்தெளிவாக படம்பிடித்துக்காட்டுகின்றன. இக்களவர் என்ற பெயரையே, இராஜராஜசோழனின் கல்வெட்டில் கள்வன் ராஜராஜன் என்றும் களப ராஜராஜன் என்றும் பொறித்துவைத்துள்ளார். "களப" என்ற வார்த்தையும் "கள்வன்" என்ற வார்த்தையும் கள்ளர் இனத்தைக்குறிக்கும் இரு வார்த்தைகளாகும். இவ்விருவார்த்தைகளும் ஒரே பொருளைத்தன் குறிக்கின்றன. எனவேதான், கல்வெட்டு 1ல் "களப என்றும் மற்றொரு கல்வெட்டில் களப என்ற வார்த்தையை நீக்கிவிட்டு, அவ்வார்த்தைக்குப்பதிலாக எளிதில் புரியக்கூடிய "கள்வன்" என்ற வார்த்தையையும் வெட்டிவைத்துள்ளனர். இவ்வார்த்தைகள் கள்ளர்கள் முற்காலத்தில் செய்த குலத்தொழிலைக்குறிக்கும் காரணப்பெயர்களாகும் என்பதை மீண்டும் வலியுறுத்திக் கூறிக்கொள்கிறேன். எனவே, சோழமன்னர்கள் அனைவரும் வீரஇனமாகிய கள்ளர் குலத்தவரே


=>        சோழர்கள் சம்பு,காடவர் குலம் அல்ல.
சோழர்கள் சூரிய குல சத்திரியர்.சோழரின் கிளைக்குடியாக ஆய்வாளர்கள் கூறும் பார்கவகுலம் மற்றும் தஞ்சைக்கள்ளர் இவற்றோடு சம்பந்தமுடையது. இதை திருகு ஜாலங்களால் மாற்றவே முடியாது.

=>        தஞ்சை கோவிலை கட்டிய பேரரசன் இராசராச சோழன்
கள்ளர் குலத்தில் பிறந்தவர் என்பதை வரலாறுகள் மிகச்தெளிவாக எடுத்துக்காட்டுகின்றன. உலகம் முழுவதும் தமிழர்களின் வீரம், பண்பாடு, நாகரிகத்தை பரப்பிய தமிழ் மாமன்னர் இராசராசசோழன்,உலகத்தமிழர்கள் அனைவருக்கும் உரிமையுடையவர் என்பது மறுக்கமுடியாத, மறுக்கக்கூடாத உண்மை. ஆனால், அவர்" போர்த் தொழில் உரிமையி லெய்தி யரசு வீற்றிருந்து. . . " என்று வீர்ராசேந்திர சோழதேவரின் கல்வெட்டுக்கூறுவதும், கொடும்பாளூர் இருக்குவேளிர் என்னும் கள்ளர் அரசர்குடியிலிருந்து பிறந்ததே சோழர்குடியென்று, மூன்றாம் குலோத்துங்க சோழனின் முதல் அமைச்சர் சேக்கிழார் பெருமானும், மூவர் பாடிய தேவார திருமுறைகளை தொகுத்து பேரரசன் இராசராசசோழனுக்கு தொண்டுசெய்த திருநாரையூர் நம்பியாண்டார் நம்பி அடிகளும் சோழர் காலத்திலேயே பாடி அரங்கேற்றம் செய்து -- இராசராச சோழன் கள்ளரே என்பதை உறுதிபடுத்தியுள்ளனர்.(ஆதாரம்:முப்பது கல்வெட்டுக்கள் என்ற நூலின் பக்கம் 203, முதலாம் பராந்தக சோழனின் கல்வெட்டு ER.140/1928 கொடும்பாளூர் இருக்குவேளிர்கள் கள்ளர்களே என எழுதியுள்ள கே.ஏ.நீலகண்ட சாஸ்திரிகள் எழுதிய சோழர்கள் புத்தகம் 1 பக்கங்கள் 184, 146, 224, 225, திருத்தொண்டர் புராணம்(பெரியபுராணம் பக்கம் 491) & திருத்தொண்டர் திருவந்தாதி). இந்நிலையில் இராசராச சோழன் பிறந்தது கள்ளர் குலமே என்ற வரலாற்றுச்செய்தியை யாரும் மறைக்கவோ மறுக்கவோ முடியாது. பொய்மையை அவர்கள் சொற்பகாலத்திற்கு மட்டுமே அரங்கேற்றலாம். பின் சாயம் வெளுத்துவிடும். இராசராசசோழனின் பெரிய பாட்டியார் மழவராயர் மகள் செம்பியன் மாதேவியார் பலசிவாலயங்களை கற்றளியாக எடுப்பித்து அதற்கு நாள் வழிபாட்டிற்கும் விழாக்களுக்கும் நிவந்தமாக இறையிலி நிலங்கள் அளித்துள்ளாரே.அதுமட்டுமல்ல தஞ்சாவூர் ஜில்லாவில் கோனேரிராசபுரம் (எ) திருநல்லம் என்னும் ஊரிலுள்ள சிவாலயத்திற்கு தன் கணவன் பெயரான ஸ்ரீ கண்டராதித்தன் என்று தன் கணவன் பெயரையே வைத்து மக்கள் நாள்தோறும் வழிவட்டுவந்தனரே. அதுமட்டுமல்ல. அக்கோயிலினுள் தன்கணவர் கண்டராதித்த தேவர் சிவலிங்கத்தை வழிபடுவதாக படிமம் வைத்துள்ளதை இன்று காணலாம். (ஆதாரம்: "SII. Vol.III No.146). மேலும் நாகப்பட்டிணம் தாலுக்காவிலுள்ள செம்பியன்மாதேவி கோயிலில் தற்போதும் ஆண்டுதோறும் செம்பியன்மாதேவி படிமத்தை ஊர் முழுவதும் வீதிஉலா செய்து அதற்கு கற்பூர ஆரத்தி எடுத்து அனைவரும் பிராமணர்கள் உட்பட அனைவரும் வணங்கி வருகின்றனர்.(சதாசிவப்பண்டாரத்தார் அவர்களின் பிற்காலச்சோழர் வரலாறு பக்கம் 69) இந்த மழவர் அரசி செம்பின் மாதேவியார் கற்றளியாக அமைத்த பிற கோயில்கள் :"விருத்தாசலம், திருகோடிகா, தென்குரங்காடுதுறை,செம்பியன் மாதேவி, திருவாரூர் அரநெறி, திருத்துருத்தி, ஆநாங்கூர், திருமணஞ்சேரி, திருவக்கரை என்னும் ஊர்களிலுள்ள சிவாலயங்களாம். முதல் இராசராச்சோழன் மகனாகிய கங்கைகொண்டசோன், செம்பியன் மாதேவியிலுள்ள திருக்கயிலாயமுடையார் கோயிலில் கி.பி.1019இல் இவ்வம்மையின் படிம்ம் எழுந்தருளுவித்து வழிபாட்டிற்கு நிவந்தம் அளித்துள்ளான்.
எனவே தெய்வமாக்க் கருதி கோயியலில் படிம்ம் வைந்து முடிமன்னனால் வணங்கப்பெற்றுள்ளமை அறியத்தக்கது(எழுதியவர் வரலாற்றுப்பேரறிஞர் அமரர் தி.வை.சதாசிவப்பண்டாரத்தார். பிற்காலச்சோழர் வரலாறு பக்கம்.72 கல்வெட்டுக்கள் Ins 47 of 1918, Ins.36 of 1931, SII.Vol.III No.144, Ins.485 of 1925, Ins.571 of 1904, Ins.103 of 1926 துருத்தி--குற்றாலம்.I:ns.75 of 1926, Ins.9 of 1914. Ins.200 of 1904 & Ins.481 of 1925) இதைப்பற்றி ஆராய்ச்சிப் பேரறிஞர் அமரர் திரு.தி.வை.சதாசிவப்பண்டாரத்தார் அவர்கள் பிற்காலச்சோழர் வரலாறு பக்கம் 74 மற்றும் 92ல் எழுதியுள்ளது வருமாறு.:"இவனுடைய பெற்றோர்கள் இவனுக்கு இட்டு வழங்கிய பெயர் அருண்மொழிவர்மன் என்பது.(SII. Vol.V Verse 61) அவ்வேந்தற்கு வழங்கிய சிறப்புப் பெயர்களுள் இராசராசன் என்பது யாண்டும் பரவி இயற்பெயர்போல் வழங்கி வந்தமையின் இவனது இயற்பெயராகிய அருண்மொழித்தேவன் என்பது வழக்கற்றுப்போயிற்று. முடிசூட்டிக்கொள்ளும் முன் இயற்பெயர் அருண்மொழித் தேவன் என்பதை டாக்டர் மு.வ.இராச மாணிக்கனார் அவர்களும் அவருடைய சோழர் வரலாறு என்னும் நூலில் பக்கம்144ல் குறிப்பிட்டுள்ளது வருமாறு: "சோணாட்டுக்குடிகள் அருள் மொழித்தேவனை .. பட்டம் ஏற்குமாறு தூண்டினர். ஆயினும் இராசராசன் அதற்கு இணங்கவில்லை. தன் சிற்றப்பனான மதுராந்தகனுக்கு (உத்தமசோழனுக்கு)நாடாள விருப்பம் இருந்ததை அறிந்தான். அவனை அரசனாக்கினான். தான் அவனுக்கு அடங்கிய இளவரசனாக இருந்து நாட்டைக் கவனித்து வந்தான். முடிசூட்டிக்கொள்ளும் முன் இளவரசன் அருண்மொழித்தேவன் என்றே குறிப்பிடப்பட்டார் என்பதை முனைவர் சி.கோ.தெய்வநாயகம் அவர்களும் அவருடைய சோழர் வரலாறு என்னும் நூலில் பக்கம் 53ல் எழுதியுள்ளது வருமாறு: "சோமன், ரவிதாசனான பஞ்சவன் பிரமாதிராஜன், பரமேசுவரனான இருமுடிச்சோழபிரமாதிராஜன், மலையனூரானான ரேவதாசக் கிரமவித்தன் என்ற நான்கு பிராமணச்சகோதரர்களால் இரண்டாம் பராந்தக சோழனான சுந்தரசோழனின் மூத்த மகனும் போரில் வீரபாண்டியனின் தலையை கொய்த பெரும்வீரனான ஆதித்தகரிகாலன் சதிச்செயல்மூலம் வஞ்சகமாக கொலைசெய்யப்பட்டான்.(ஆதாரம்: காட்டுமன்னார் கோயிலுக்கணித்தாகவுள்ள உடையார் குடிகல்வெட்டு எண். Ep.Ind.Vol. XXI No.27). எனவே, ஆதித்தகரிகாலனின் தம்பி அருண்மொழித் தேவன் என்ற இளமைப்பெயருடைய இராசராசனே முடிபுனைந்து அரசப்பொறுப்பினை ஏற்கவேண்டும் என்றே மக்களும் அறிஞர்களும் சோழ அரசியல் அதிகாரிகளும் விரும்பி வேண்டி நின்றனர். அந்நிலையில் இரண்டாம் பராந்தகன் இராசகேசரி சுந்தரசோழனின் பெரிய தந்தை கண்டராதித்த தேவரின் மனைவியும் மழவர் குலத்தில் பிறந்தவளும் சைவத் திருக்கோயில் வழிபாடு மற்றும் திருப்பணிகளில் மிகுந்த ஈடுபாடு காட்டியவளும் அரசியல் திருக்கோயில் பணியாளரிடையே பெரும் செல்வாக்குப்பெற்றவளுமாகிய செம்பியன் மாதேவி தம் திருவயிறு உதித்த மதுராந்தக உத்தமசோழன் சோழ அரியணை ஏறி ஆட்சிசெய்ய பெருவிருப்பம் கொண்டவனாக இருந்துள்ளான. எனவே, சிறிய தகப்பன் முறையிலான உத்தமசோழனது விருப்பத்தை மதித்து தமக்குரிய அரியணை ஏற்றத்தை விட்டுக்கொடுத்து உத்தமசோழனை(மதுராந்தகனை) கி.பி.970 முதல் கி.பி.985 வரை சோழ நாட்டை ஏறத்தாழ 15 ஆண்டுகள் ஆட்சிசெய்ய அனுமதித்த பேருள்ளம் படைத்தவனாக …. இராசராசனை குறித்து திருவாலங்காட்டுச் செப்பேடுகள் பெருமிதம் அடைகின்றன." "கோப்பரகேசரிவர்மரான ஸ்ரீ உத்தமசோழ தேவர்" என்று திருவிடைமருதூர் கல்வெட்டு கூறுகின்றது (Ibid.Nos.128,131 and 150) மேலும் முனைவா சி.கோ.தெய்வநாயகம் பக்கம் 47ல் எழுதியுள்ளது வருமாறு:"உத்தமசோழனுடைய கல்வெட்டு ஒன்று அருண்மொழித்தேவ கைக்கோளர் படை ஒன்றை சுட்டுகிறது. எனவே, வாலிப வயதில் அருண்மொழித்தேவன், உத்தமசோழனின் ஆட்சிக்காலத்தில் சோழர்களின் ஒரு குறும்படைப் பிரிவிற்கு தலைவனாகவும் பாட்டியார் செம்பியன் மாதேவியின் திருக்கோயில் திருப்பணிகளுக்கு அன்போடு உதவியுமுள்ளான் என அறியமுடிகிறது. சோழநாட்டின் தலைநகரான தஞ்சாவூர் அரண்மனையில் அருண்மொழி தேவத் தெரிந்த திருப்பரிகலத்தார் என்ற வேளம் இருந்தது. இந்த அரண்மணைப்பகுதிக்கும் அருண்மொழித்தேவன் என்ற பெயரே சூட்டப்பட்டிருந்தது(பக்கம் 56). இராசராசசோழன் பிறந்தவுடன் பெற்றோர்கள் சூட்டிய அருண்மொழி வர்மன் என்ற பெயர் வழங்கப்படவில்லை. அவர் தேவர் குடும்பத்தில் பிறந்ததால், அருண்மொழித்தேவன் என்றே அனவரும் அழைத்ததால், சுமார் 42 வயதுவரை அருண்மொழித் தேவன் என்ற பெயரே இயற்பெயராகவும் இளமைகாலப் பெயராகவும் அமைந்தது. தமிழகம் ஊரும் பேரும் எழுதிய ரா.பி.சேதுப்பிள்ளை அவர்கள் அந்நூலின் பக்கம் 120 & 161ல் குறிப்பிட்டுள்ளதாவது "இம்மன்னனது இயற்பெயர் அருண்மொழித்தேவன் என்பதாகும். தஞ்சை (தற்போது நாகை) மாவட்ட மாயவர வட்டத்தில் அருமொழித் தேவன் என்ற பெயருடைய இரண்டு ஊர்களும், நாகப்பட்டின வட்டத்தில் ஒர் அருமொழித்தேவனும் உள்ளன. தென் ஆர்க்காட்டுச் சிதம்பர வட்டத்திலும் அருமொழித்தேவன் என்னும் ஊர் உண்டு.. பாண்டி மண்டலத்தைச்சேர்ந்த அருண்மொழித்தேவபுரம் என்றொரு ஊரும் உண்டு.இவ்வூர்கள் யாவும் அருண்மொழித் தேவன் நினைவாக ஏற்பட்ட ஊர்களாகும். உத்தமசோழன் கி.பி.985ல் இறந்தான். பக்கம் 53ல் முனைவர் சி.கோ. தொடர்ந்து எழுதியுள்ளது வருமாறு: "15 ஆண்டுகள் உத்தமசோழன் ஆட்சியில் போர்கள் ஏதுமின்றி, தாய்செம்பியன் மாதேவியின் சைவத் திருக்கோயில் பணிகளுக்கு உதவிய அமைதியான சூழலில் அமைந்தது. அந்நிலையில் முதல் பராந்தகனாலும், சுந்தரசோழனாலும், ஆதித்த கரிகாலனாலும் வெற்றிகொள்ளப்பட்டு அடக்கி வைக்கப்பட்டு இருந்த சேரர்களும் பாண்டியர்களும், வேங்கிநாட்டவரும் எழுச்சிபெற்று சோழப்பேரரசை எதிர்க்கலாயினர். அந்நிலையில் சோழநாட்டின் எல்லைப்பகுதிகளில் அமைதி குலைந்து கலக்கம் ஏற்படுவது இயற்கை. இச்சூழலில்தான், மக்களின் பெருவிருப்பத்தைத் தவிர்க்க இயலாதவனாக இளவரசன் அருண்மொழித்தேவன் இராசராசன் என்ற ஆட்சிச்பெயருடன் கி.பி. 985ஆம் ஆண்டு ஜுலை மாதம், 18ஆம் நாளுக்கு இணையான ஆடிமாதம் புனர்பூச நட்சத்திரம் கூடிய சனிக்கிழமையில் முடிசூட்டப்பட்டு சோழப்பேரரசின் ஆட்சிப்பொறுப்பினை ஏற்றுள்ளான். இதனை திருவாலங்காடு, கரந்தை செப்பேடுகள் எடுத்துரைக்கின்றன. (Mysore Gazetteer Vol. II. Part II, page 943) அப்போது ஏறத்தாழ 42 வயது.(பக்கம் 102) இராசராச சோழனின் மகன் இராசேந்திரசோழனும், தன்தந்தையின் இயற்பெயரால் அருமொழி தேவனிற்க் கோயில். . எனக்குறிப்பிட்டு கி.பி.1016ஆம் ஆண்டு கல்வெட்டு வெளியிட்டார்.,இக்கல்வெட்டைக்காண்க:". . . யாண்டு நாலாவது நடுவிருக்கும் கொட்டையூர் வூவத்தபட்ட ஸொமாஜியார் . . சொளெந்திரசிங்க ஈஸ்வரமுடையார் கோயிலின் வடபக்கத்து சாலை அருமொழிதேவனிற்க். கோயில் கருமமாராயாவிருந்து. . . .(ஆதாரம்:முனைவர் சி.கோ.தெய்வநாயகம் எழுதிய சோழர் வரலாறு பக்கம் 62) . இக்கல்வெட்டில் இராசராசன் கட்டிய கோயில் என்று இராசேந்திரசோழன் குறிப்பிடவில்லை. தன் தந்தையின் இயற்பெயராகிய அருண்மொழித் தேவன் கட்டிய கோயில் என்றே குறிப்பிட்டுள்ளதிலிருந்தே, அம்மன்னர்கள் தாங்கள் பிறந்த தேவர் குலத்தில் எவ்வளவு ஈடுபாடும் மனச்சார்பும் உடையோராய் இருந்தனர் என்பது உள்ளங்கை நெல்லிக்கனி போல் தெளிவாக தெரிகிறதல்லவா?இக்கோயில் பற்றிய வரலாற்றுச்செய்தியை உங்களின் கவனத்துக்கு கொண்டு வருகிறேன். இக்கோயில், இராசராச சோழன் முடிசூட்டிக்கொண்டபிறகு, அவரது 14வது ஆட்சி ஆண்டில் இராச ராசசோழனால் கட்டப்பட்டது. எனவே, "இராசராச சோழனிற்க் கோயில்" என்றுதானே இராசேந்திரசோழனின் கி.பி.1016ஆம் ஆண்டில் வெட்டப்பட்ட அக்கல்வெட்டுக் குறிப்பிடவேண்டும். ஆனால், அவ்வாறு குறிப்பிடாமல், இராச ராசசோழனின் இயற்பெயராகிய அருண்மொழி தேவனிற்கோயில் என்று கல்வெட்டில் வெட்டிவைக்கப்பட்டதிலிருந்து,முடிசூட்டிக்கொண்டபிறகும் இராசராசனின் இயற்பெயரிலேயே அக்கோயில் அனைவராலும் அழைக்கப்பட்டிருந்தது என்பது தெள்ளிதின் தெளிவாக தெரிகிறது அன்றோ?.அவரை "பெரிய தேவர்" என்றுதான் அனைவரும் அழைத்துள்ளனர். எனவே, பெரிய தேவர் என்ற விருதுபெயர் பெற்றார் (ஆதாரம்..முனைவர் தெய்வநாகம் எழுதிய சோழர் வரலாறு பக்கம் 49) இராசராசசோழன் பெரியதேவர் என்றால், இராசேந்திரசோழனை அனைவரும் சிறியதேவர் என்று அழைத்திருக்கவேண்டும் என்பது உய்த்துணரக் கூடியதாகும்.. இராசராச சோழன் முடிசூட்டிக்கொண்ட பிறகு "திரு.இராஜ ராஜ தேவன்" என்ற பெயர் தாங்கிய வெள்ளிக்காசை வெளியிட்டார்(ஆதாரம்..ஹுல்ஸ் EA.XXV பக்கம்317 கே.ஏ.நீலகண்டசாஸ்திரிகளின் சோழர்கள் புத்.1 பக்கம்.23) அருண்மொழித் தேவ வளநாடு, அருண்மொழித்தேவ பெருந்தெரு,அருண்மொழித்தேவ மரக்கால், அருண்மொழிதேவ சாலை, அருண்மொழித்தேவ வாய்க்கால் என்று இராசராச சோழனின் ஆட்சியின்போது வழங்கிவந்த பெயர்கள் யாவும், அவருடைய இயற்பெயரான அருண்மொழித் தேவன் என்பதை உறுதிபடுத்துகின்றன.(ஆதாரம்: TAS VPP 29-30. 186 OF 1925, 227 OF 1921, 401 OF 1921, SII III 1908)
குறிப்பு: பிரிட்டிசு அரசு குற்றப்பரம்பரை சட்டம் கொண்டுவந்ததற்கு ஒரு காரணம், முக்குலத்து மக்கள் நாடாண்ட அரசர் குலம் என்பதை மறைத்துதான் கொண்டுவந்தது. அதுபோல்தான், தற்போது சில அரசு அதிகாரிகள் நம் வரலாற்றை மறைக்க முயல்வதையும், அதற்கு ஒரு இனத்தாரை தூண்டிவிடுவதையும் கண்டித்தே இந்த பதில் ...  
இந்தியா முழுமையும் சத்திரிய இனமாக அறியப்பட்டு பதியப்பட்டதாக வெள்ளையர் ஆதாரப்பூர்வமாக எழுதி வைத்துள்ள நிரூபணம் கீழே….
Followings are martial races listed by British , and declared that they can claim ksatriya status in india……but nair and thevar continuously rebelled against british,,,,

Ahirs/Yadavs [22]
Awans[23][24][25]
Bhumihar (excluded later after rebellions)
Bunt
Dhund Abbasis
Dogra[26]
Gakhars
Garhwalis[27]
Ghumman
Gujjar[26]
Gurkhas[28]
Janjua[26]
Jats[26][29][30]
Khokhar[26]
Kodava (Coorgs)
Kumaoni/Kumaunis[31]
Mahars
Marathas
Mohyals
Mukkulathors (excluded and branded as Criminal Tribes due to rebellious nature)
Nairs[32][33][34][35] (removed after rebelling)
Pathans[26]
Qaimkhanis
Rajputs[26]
Rajus
Sainis of undivided Punjab[26][36][37]
Satti
Sikhs[38][39]
Sudhan
Tanolis[40][41]
Tarkhans[42]

தமிழகத்தில் முக்குலத்தோரையும் கேரளநாயரையும் தவிர யாருக்கு
கொடுத்திருக்கிறார்கள் சத்ரியப்பட்டம்?
பிறகு நீங்களாகவே சத்திரியர்கள்
நாங்கள் மட்டுமே என மார்தட்டுவது ஏன்?
.தஞ்சைக்கள்ளர்குல
மன்னன் ராஜராஜன் சத்திரிய சிகாமணி என கல்வெட்டே உண்டு.ஆதியிலிருந்தே சத்திரிய வர்ணம் உடையோர் தஞ்சைக்கள்ளர்கள்,
மற்றும் உடையார்களே அவர்கள் பார்கவ குல சத்திரியர்கள்ஆவர். சோழ வரலாறு பார்கவ குலத்தோடே மட்டுமே குலத்தொடர்புள்ளது. இவர்களும் தஞ்சைகள்ளராயிருந்தோர். ஆனால் உண்மையாகவே சத்திரியரான இவர்களெல்லாம் சத்திரியர் என கேட்டு வாங்க வில்லை.

=>        கள்ளர்களைப்பற்றிய உண்மை வரலாறு என்னும் ஆதவன் ஒளி உலகெங் கும் பரவி பொய்மை வரலாறு என்னும் பனித்திரை விலகவேண்டும்.. தமிழ் இலக்கியங்களில் கள்ளர்கள் நாடாண்ட செய்திகள் ஏராளமாக கூறப்பட்டுள்ளன. அதை 1800 ஆண்டுகளுக்கு முற்பட்ட தமிழகம் என்னும் நூல் எழுதிய திரு.கனகசபைப்பிள்ளை அவர்கள் மூடிமறைக்க முயன்றுள்ளதும், கள்ளர்களை இழிவுபடுத்தும் வார்த்தைகளை எழுதியுள்ளதையும் தவறு என்பதை எடுத்துக்காட்டவே இக்கட்டுரையை எழுதுகிறேன். கள்ளர்கள் சாம்ராஜ்யவாதிகள் என்று மேனாட்டு அறிஞர்கள் போற்றியிருக்கின்றனர். டாக்டர் உ,வே,சாமிநாதய்யர் அவர்கள் புறப்பொருள் வெண்பாமாலை ஓலைச் சுவடிகளை கண்டுபிடித்து அச்சிலேற்றி, முக்குலத்து சமூகத்திற்கு பெரும் தொண்டு ஆற்றினார். அதைப்போலவே, அக்டோபர் 29,1950 முதல் மூன்றரை ஆண்டுகாலம் கல்கியில் பொன்னியின் செல்வன் என்ற இராசராசனின் இளமைகால வரலாற்றுப்புதினத்தை அமரர் கல்கி கிருட்டிணமூர்த்தி அவர்கள் எழுதி கள்ளர் குலத்திற்கு மாபெரும் தொண்டு செய்தார். இதை எழுதுவதற்கு வரலாற்று ஆராய்ச்சிப் பேர- றிஞர் சதாசிவப்பண்டாரத்தார் எழுதிய பிற்காலச்சோழர் வரலாறுஅடிப்படையாக அமைந்- தது என்று பிற்காலச்சோழர் வரலாறு பதிப்புரையில் (பக்கம்xxல்) திரு.மு.பெரி.மு.இராமசாமி எழுதியுள்ளார்.. அமரர் கல்கி அவர்கள் மயிலாடுதுறை, மணல்மேடு கிராமத்திற்கு அருகில் புத்தமங்கலம் என்னும் கிராமத்தில் பிறந்த பிராமணர். கல்கி, டாக்டர் உ.வே.சா., சதாசிவப் பண்டாரத்தார்,மு.பெரியசாமி அனைவருமே முக்குலத்தோர் அல்ல.ஆனால்,உண்மையை எழுதிய மாசுமருவற்ற சான்றோர் பெருமக்கள்.
=>        சான்றோர்-கல்கி எழுதியுள்ளது (பொன்னியின் செல்வன் பாகம்-1அத்தியாயம்-6ல்)
நடுநிசிக்கூட்டத்திற்கு…….."…பழுவேட்டரையரும், சம்புவரையரும் தவிர………..அங்கே மழபாடித் தென்னவன் மழவராயர் வந்திருந்தார். குன்றத்தூர்ப் பெருநிலக்கிழார் வந்திருந் தார். மும்முடிப் பல்லவராயர் வந்திருந்தார். தான் தொங்கிக் கலிங்கராயர், வணங்காமுடி முனையரையர், தேவசேநாபதி பூவரையர், அஞ்சாத சிங்க முத்தரையர், இரட்டைக்குடை ராஜாளியார், கொல்லிமலைப் பெருநில வேளார்(இருக்குவேளிர்). . வந்திருந்தனர். . .
இந்தப் பிரமுகர்கள் சாமான்யப்பட்டவர்கள் அல்ல. எளிதாக ஒருங்கு சேர்ந்துக் காணக்கூடியவர்களும் அல்ல. அநேகமாக ஒவ்வொருவரும் குறுநில மன்னர்கள், அல்லது குறுநில மன்னருக்குரிய மரியாதையைத் தங்கள் வீரச்செயல்களினால் அடைந்தவர்கள். ராஜா அல்லது அரசர் என்பது மருவி அக்காலத்தில் அரையர் என்று வழங்கி வந்தது. சிற்றரசர்களுக்கும், சிற்றரசர்களுக்குச் சமமான சிறப்பு வாய்ந்தவர்க்ளுக்கும் அரையர் என்ற பட்டப் பெயர் சேர்த்து வழங்கப்பட்டது. அவரவர்களுடைய ஊரை மட்டும் கூறி அரையர் என்று சேர்த்துச்சொல்லும் மரபும் இருந்தது.(மழவ+அரையர்=மழவரையர்,மழவராயர் என மரூவியது.பல்லவ+அரையர்=பல்லவரையர்.பல்லவராயர்..கலிங்க+அரையர்=கலிங்கரையர்.
காலிங்கராயர்

=> ராஜ ராஜ சோழன் சூத்திரனா சத்திரியனா சரித்திரம் என்ன சொல்லுகிறது ?
    சத்ரியனான சுந்தர சோழனுக்கும், மலையமான் குலப் பெண் வானவன் மாதேவிக்கும் பிறந்தவன் ராஜ ராஜன். மலையமான் குலம் என்பது ஒரு அடிமைப்படாத சிற்றரசு வம்சமாக இருந்திருக்கிறது. மலையமான் திருமுடிக் காரி பற்றி சங்க இலக்கியம் குறிப்பிடுகிறது. இந்த மலையமான் வம்சம் அடிமைப் பட்டிருந்தால் சூத்திர வர்ணமாகி இருக்கும். அவ்வாறு அடிமைப்படவில்லை என்பது பிற சான்றுகள் மூலம் நிரூபணம் ஆகிறது. இன்றைக்கும் தஞ்சைக்கள்ளர்குல மலையமான், நத்தமான், சுருதிமான் பரம்பரையினர் பார்கவ குல சத்ரியர் என்று அழைக்கப்படுகிறார்கள். அன்றியும், சுந்தர சோழன் இறந்தபோது அவனது மனைவி வானவன் மாதேவியும் உடன்கட்டை ஏறி இருக்கிறாள். சூத்திரப் பெண்கள் இவ்வாறு உடன்கட்டை ஏறியதற்கான சான்றுகள் ஏதும் இல்லை. மேலும், சிறிய வயதிலேயே முடிசூடிக் கொள்ள சொல்லப்பட்ட போது, சத்ரிய தர்மப் படி உரிய வயது வந்ததும் முடிசூடுவதாக ராஜ ராஜன் சொன்னது அவனது மெய்கீர்த்திகளில் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் சத்ரிய சிகாமனி என்பது அவனது மெய்கீர்த்தியில் சொல்லப்பட்டுள்ளது. எனவே அவன் சத்ரியனே.
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
மேற்கண்ட விளக்கத்திற்கு எமது மறுப்புரைகள்

‘களம் என்ற வார்த்தையிலிருந்து பிறந்தது ‘களமர் ஆகும். அந்தக் களமர் என்போர் மள்ளரே என்பதற்கு (பார்க்க:பண்டைய தமிழகத்தில் போர்மறவர் என்போர் ‘பள்ளரே’) ஏற்கனவே ஆதாரம் கொடுக்கப்பட்டுள்ளது. அதேபோல், தற்கால கள்ளர் மற்றும் மறவர் என்போர் யார் என்பது பற்றியும் ஏற்கனவே விளக்கப்பட்டுள்ளது. எனவே, அகமுடையார் பற்றி மட்டும் பார்க்கலாம். அகமுடையார் என்ற இனம் சங்ககாலத்திலோ, இடைக்காலத்திலோ அறியப்படவில்லை. அகம்படியர் என்ற சொல் இடைக்காலக் கல்வெட்டுக்களில் காணப்படுகிறது. ஆனால், அது ஒரு இனமாகக் காட்டப்படவில்லை. கல்வெட்டுக்களில் அகம்படி என்பவர் வேலைக்காரர்களில் ஒருவராகப் பேசப்படுகின்றார். அகம்படி முதலி என்பவர் அவர்களை மேற்பார்வையிடுபவர்.

அகம்படியர் பற்றி எம்.சீனிவாச அய்யங்கார் கூறுவது:
கி.பி.10 ஆம் நூற்றாண்டுக்கு முன்பு அகம்படியர் என்ற வகுப்பு இருந்ததில்லை எனலாம்(Tamil studies, page  67)

ஜெ.எ.அபேடுபாய் கூறுவது:
ஆலயங்களிலும், அரண்மனைகளிலும் குற்றேவல் செய்பவர் அகம்படியர் என வழங்கினர்(J.A.Abbe Dubois, Hindu manner and customs, page 17)

கால்டுவெல் கூறுவது:
அகம்படியர் இனத்தைச் சார்ந்த பெரியமருது, சின்னமருது பாளையக்காரரோ அல்லது அவரது மரபைச் சார்ந்தவரோ இல்லை. அவரது வகுப்பை விட தாழ்ந்த வகுப்பைச் சார்ந்தவரும், பாளையக்காரர் குடும்பங்களின் பரிவாரத்தில் தொண்டு செய்பவரும் ஆவர் (Dr. Caldwell, History of Tinnevelly, page 210)

கல்வெட்டுச் செய்தி:
    தஞ்சை மாவட்டம் பாபனாசம் தாலுகா நல்லூரில் உள்ள மூன்றாவது இராசராசன் காலத்திய கல்வெட்டில் திருநல்லார் நாயனார் கோயில் வேலைக்காரர் அகம்படியர் என்று கண்டுள்ளது (ARE 59/1911)
இதுபோல் ஏராளமான கல்வெட்டு ஆதாரம் உள்ளது. இராமநாதபுரம் பகுதியிலுள்ள அகம்படியர் ‘சேவைக்காரன்’ என்ற அர்த்தம் கொண்ட சேர்வைக்காரன் என்று அழைக்கப்படுகின்றனர்.
புதுக்கோட்டைத் தொண்டைமான் வடுகர் இனத்தைச் சார்ந்தவர். இவர்கள் போலித்தனமாக தம்மை இந்திரகுலத்தார் எனக்கூறிக்கொண்டு, அதற்கு ஆதாரமாகத் தமது அரசவைப் புலவனாகிய தெலுங்குப் பிராமணன் வெங்கன்னாவைக் கொண்டு கட்டுக்கதைகள் எழுதியது உண்மையே. இதேபோன்று, பிற்காலத்தில் அகம்படியரையும், மறவரையும் கூட்டு சேர்ந்து கொண்டு, அவர்களும் இந்திரனுக்கே பிறந்தவர், மூவரும் ஒரு தாயின் பிள்ளைகள் எனவும் கதை புனைந்தனர். அப்படிப் புனையப்பட்ட ஒரு கதைதான் பூவிந்த புராணம்,கள்ளகேசரி புராணம். அந்தக் கதையைப் படிப்பவருக்குத் தெரியும், அது எப்படிப்பட்ட கதை என்று.
வெட்சித்தினை, கரந்தைத்தினை ஆகிய இருபோர்களையும் செய்தவர்கள் கள்ளர்கள் இல்லை (பார்க்க:பண்டைய தமிழகத்தில் போர்மறவர் என்போர் ‘பள்ளரே’)

        இராஜராஜசோழனின் கல்வெட்டில் கீர்த்திச் செய்தியில் ......கோராஜ கேசரி வன்மரான ஸ்ரீ ராஜராஜதேவர்... என்று முடிகிறது. இவனது 4-வது ஆண்டு வரை ....கோவி’ராசராசகேசரி’ என்று தொடங்கும். அதற்குப் பிறகு 8-வது ஆண்டு வரை .....கலமறுத்தருளிய கோவி ராசராசகேசரி என்று தொடங்கும். இதிலுள்ள ‘வன்ம என்பதை களப என்கிறார்களா? அல்லது ‘கலம என்பதை களப என்கிறார்களா? எதை இவர்கள் ‘களப’ என்கிறார்களோ அதன் உண்மையான அர்த்தம் என்ன என்பதை பார்வையாளர்கள் முடிவிற்கே விட்டுவிடுகிறேன். கள்வன் ராஜராஜன் என்று எந்தக் கல்வெட்டிலும் கிடையாது. இது அப்பட்டமான பொய்.
வேளிர் என்போர் உண்மையில் யார் என்று ஏற்கனவே சொல்லியாகி விட்டது (பார்க்க:பண்டைய தமிழகத்தில் போர்மறவர் என்போர் ‘பள்ளரே’). இதற்கு இன்னும் விளக்கம் வேண்டுமெனில், வேளிர் என்ற சொல்லின் பொருள் பற்றி என்.சிவராச பிள்ளை கூறுவது:
    “பழங்காலத் தமிழ் ஊர்களில் கிழார் அல்லது கிழவன் என்பவரது தலைமையின் கீழ் வாழ்ந்து வந்தனர். பல ஊர்கள் சேர்ந்து கூட்டாட்சி ஏற்பட்டபோது அக்கூட்டாட்சிக்குத் தலைமை தாங்கியவர் வேளிர் அல்லது வேண்மான் என வழ்ங்கினர்”(Page 67. Chronology of the early Tamils, N.Sivaraja Pillay). பழங்காலத் தமிழர் என்று சொல்லும்போது, அவர் நிச்சயம் கள்ளர் இல்லை என்பது உறுதியாகிறது.

    மன்னன் ராஜராஜன் சத்திரிய சிகாமணி என கல்வெட்டு உண்டு என்பது உண்மையே. யார் சத்திரியன் என்று சொல்லியது என்பது நமக்குப் புரியாமல் இல்லை. வெள்ளைக்காரன் இந்த நாட்டை விட்டுப் போகும்போது, தமிழ்நாட்டில் முக்குலத்தோர்(?) மற்றும் கேரளாவில் நாயர் என்போர் ‘சத்திரியர்’ என்று சொன்னதாகச் சொல்கிறீர்கள். இப்போது விசயத்திற்கு வருவோம். நாயக்கர் ஆட்சி முடிவு காலத்தில் சேதுபதி (தற்கால மறவன்) இராமநாதபுர சமஸ்தானதிபதி. போலி தொண்டைமான்(கள்ளன்) புதுக்கோட்டை சமஸ்தானதிபதி. இதுபோன்றே சிவகங்கை சமஸ்தானதிபதியும் கூட. ஆனால், சேர்வைக்காரரான மருது சகோதரர்கள் (அகமுடையார்) சிவகங்கையை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருந்தவர்கள். அதனால், இந்த மூன்று இனத்தையும் ‘சத்திரியர் என்று சொல்லிவிட்டுச் சென்றார்களா? இந்த நேரத்தில் ஒரு செய்தி.
சுதந்திரம் பெற்று 50 ஆண்டுகள் ஆகின்றன. இன்னும் வெள்ளைக்காரர்கள் விட்டுச் சென்ற பல தவறான கருத்துக்கள் நம் சமுதாயத்தைச் சீரழித்துக் கொண்டிருக்கிறது. உண்மை வரலாறு வேறு இது முன்னால் தொல்பொருள் துறையின் இயக்குனர் முனைவர் இரா.நாகசாமி சொன்னது (தினமலர் 23.9.99).

    ஆதியிலிருந்தே சத்திரிய வர்ணம் உடையோர் தஞ்சைக்கள்ளர்கள் என்று சொல்கிறார்கள். அப்படியெனில்,பிராமணன்,சத்திரியன்,வைசியன் மற்றும் சூத்திரன் என்ற வர்ணப் பிரிவை அவர்கள் ஏற்றுக் கொள்கிறார்கள் என்பதாகிறது. அதாவது, இவர்கள் மனுதர்ம விதியை ஏற்றுக் கொள்ளவேண்டும். இதில் ஒரு விசயத்தை நன்றாகப் புரிந்து கொள்ள வேண்டும். அதாவது, தமிழ்நாட்டில் தற்போது தாழ்த்தப்பட்டோர் என்று சொல்லக்கூடிய மக்கள் இந்த நான்கு வர்ண வரைமுறைக்குள் இல்லை. ஏனெனில், அவர்கள் இதற்கு வெளியேயுள்ள ‘பஞ்சமர்கள் ஆவர்.
சரி, இந்த நான்கு பிரிவிலுள்ள ‘சூத்திரன்’ தொழில் என்ன? ஏவலர் அதாவது, தர்ம சாத்திரப்படி, சூத்திரன் பிராமணனுக்கு அடிமையானவன். அவனுக்குப் பெண்ணை அனுபவிக்க உரிமை இல்லை.i இந்தக் கட்டுரைக்கும், சூத்திரனுக்கும் என்ன சம்பந்தம்? இருக்கிறது. நீங்கள் கொடுத்த பட்டியலில் கேரள நாயர் என்பவர் சத்திரியர் என்பதாகச் சொல்லப்பட்டிருக்கிறது. அந்த நாயர் என்போர் யார்? தமிழ்நாட்டில் தற்காலத்தில் பிள்ளை என்று சொல்கிறோமே, இந்த பிள்ளைக்குத்தான் கேரளாவில் நாயர் என்று பெயர். இவர்களைப் பற்றி எட்கர் தர்ஸ்டன் கூறுவது: “நாயர் குலப்பட்டம் குழந்தை எனப் பொருள்படும் ‘பிள்ளை ஆகும். இப்பட்டத்தை ஏற்கனவே தென்நாட்டில் குடியிருந்த பார்ப்பனர் பூண்டிருந்தனர். பின்னர் பார்ப்பனன் அல்லாதார் பார்ப்பனனை தந்தை எனப் பொருள்படும் ‘அய்யன்’ என அழைக்கவும், பார்ப்பனர் தம்மை அய்யன் என வழங்கலாயினர். அதன்பின் பார்ப்பனர் கொண்டிருந்த பிள்ளை என்ற பட்டத்தை ‘சூத்திரர்’ தமக்கு உரித்தாக்கிக் கொண்டனர்”(Edger Thurston, Caste and Tribes of South India. Vol.V). இதன் அடிப்படையில்தான், கேரள நாயர் என்போர் திருமண வழக்கில், திருமணம் நடந்த முதல் நாள் இரவில் மணப்பெண்ணை அனுபவிக்க மணமகனுக்கு உரிமை இல்லை. அந்த உரிமை திருமணத்தை நடத்தி வைக்கும் புரோகிதனான பிராமணனுக்கே உண்டு. நம்பூதிரிப் பார்ப்பனர் தாம் விரும்பும் நாயர் பெண்ணிடம் உறவு வைத்துக் கொள்ளலாம்(K.P.Kapada, Marriage and Family life in India). இதிலிருந்து தெரிவது என்ன? கேரள நாயர் என்போர் வர்ணமுறையில் சூத்திரர் என்பதாகும். அப்புறம் எப்படி நாயரை சத்திரியர் என்று பிரிட்டீஸ்காரன் சொன்னான்? இதேபோன்று, பிரிட்டீஸ்காரனால் சத்திரியர் என்று காட்டப்பட்ட உங்கள் முறைகள் எப்படி?
சரி, நீங்கள் காட்டக்கூடிய பட்டியலில் ‘மகர் என்ற சாதியும் உள்ளது. இது தாழ்த்தப்பட்டோர் என்று நீங்கள் சொல்லக்கூடிய இனத்தைச் சார்ந்த டாக்டர் அம்பேத்காரின் சாதியாகும். மகர் என்றால் மள்ளர் என்று அர்த்தம் என கஸ்டாப் ஓப்பெர்ட் கூறுகிறார்(AES/1888). விசயம் அதுவல்ல, தாழ்த்தப்பட்டோர் என்பவர்கள் வர்ணாசிரம பிரிவிற்குள் வராத பஞ்சமர்கள். அந்த பஞ்சமர்களை எப்படி சத்திரியர் என்று ஆங்கிலேயர் சொல்லிவிட்டுப் போனார்கள்? இதைப்பற்றி நீங்கள் ஏதாவது யோசித்தது உண்டா! சரி, இராசராசனுக்கு ‘சத்திரிய சிகாமணி என்ற பட்டம் உள்ளது என்பது பற்றிக் கல்வெட்டுச் செய்தி உள்ளது. எனவே, அவன் சத்திரியன் என்பது உங்கள் வாதம். அப்படியெனில், அந்த சத்திரியனின் சிலையை அவன் கட்டிய கோயிலுக்குள் வைக்க அனுமதியில்லையே அது ஏன்? இதுவரை அவர் சிலை கார்ப்பரேசன் இடத்தில்தானே உள்ளது. சிலையை உள்ளே வைக்கத் தடுக்கும் சக்தி எது?

இறுதியாக, கள்ளருக்கும், மலையமான் திருமுடிக்காரிக்கும் எந்த வகையிலும், எந்த சம்பந்தமும் இல்லை.   

Wednesday, December 12, 2012

பண்டைய தமிழகத்தில் போர்மறவர் என்போர் ‘பள்ளரே’ -- பாகம் 2

கள்ளர்கள் தங்களது வரலாற்றை பற்றி எடுத்து வைக்கும் ஆதாரங்கள்/வாதங்கள்: 

@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
=>    குறிஞ்சி நிலத்து குறவன் ஒருவன் முல்லைநிலத்து இடைச்சியை மணக்கலாம். அதுபோல் நெய்தல் நிலத்து பரதவன், மருதநிலத்து விவசாயப்பெண்ணைமணக்கலாம்.
(ஆதாரம்:முனைவர் கே.கே.பிள்ளை அவர்கள் எழுதிய தமிழக வரலாறு மக்களும் பண்பாடும்)அப்போது, தமிழகத்தில் மக்கள் அவரவர் செய்துவந்த தொழிலுக்கேற்ப பல குலங்கள் மட்டுமே தோன்றியிருந்தன. தமிழக மக்கள் அனைவரும் அவரவர் செய்துவந்த தொழிலின் அடிப்படையில், தொழில் பெயராலேயே அழைக்கப்பட்டனர். எ.கா:--(1)அளவர் (2)இடையர் (3)உமணர் (4)உழவர் (5)எயினர் (6)குயவர் (7)கூத்தர் (8)கொல்லர் (9)தச்சர் (10)தட்டார் (11)தேர்ப்பாகர் (12)பரதவர் (13)பறையர் (14)புலையர் (15)வண்ணார் (16)வணியர் (17) வெள்ளாளர் (18)களவர். இன்றைய கள்ளர்குல முன்னோர்கள் அனைவரும் உலகம் தோன்றிய நாள்முதல் போர்க்களம் சென்று போராடுவதையே தங்கள் குலத்தொழிலாகக்கொண்டிருந்தனர் என்பதை பன்னிருபடலம், புறப்பொருள்வெண்பாமாலை, அகநானூறு, புறநானூறு, நற்றிணை கலித்தொகை, சிலப்பதிகாரம், மணிமேகலை போன்ற தமிழ இலக்கியங்கள் மூலம் அறியமுடிகிறது.

     களவர்(விளக்கம்): ஆதிகாலம் முதல் நம்குலமுன்னோர்கள் அனைவரும்போர்க்களத்தொழிலையே குலத் தொழிலாகக் கொண்டு வாழ்ந்ததால், கி.மு.ஆறாம் நூற்றாண்டுக்குமுன் அக்குலத்தொழில் பெயராலேயே களவர் என்று அனைவராலும் அன்புடன் அழைக்கப்பட்டனர். களவர் என்றால் களம் காண்பவர் என்று பொருள். இதனைப்பற்றி, மயிலை சீனி வெங்கடசாமி அவர்கள் எழுதியுள்ளது வருமாறு: களவர் தமிழ்ச்சொல். களம் என்னும் தமிழ்ச்சொல்லிலிருந்து பெறப்படும். களம் என்றால் போர்க்களம். களவர் என்பதற்கு களம் காண்பவர் அல்லது போர்க்களம் சார்ந்த மக்கள் என்று பொருள். இவ்வாறு அவர் எழுதியுள்ளார். தென்னிந்திய குலங்களும் குடிகளும் என்ற நூல் எழுதிய எட்கர் தர்சன் என்ற ஆங்கிலேய வரலாற்று ஆசிரியரும் கள்ளர்,மறவர், அகமுடையோர் என்போர் போர்க்களம் சார்ந்த மக்கள் என்பதை தெளிவாக எழுதியுள்ளார். பிற்காலத்தில், களவர் என்ற வார்த்தைக்கு புள்ளி வைத்து எழுதும்போது கள்வர் என்றும்,கள்வர் என்ற வார்த்தையே தற்காலத்தில் கள்ளர் என்றும் மரூவி வந்துள்ளது.

=> தஞ்சை பெருவுடையார் கோயிலில் உள்ள மாமன்னர் இராஜராஜசோழனின்கல்வெட்டில் "தாய்மண் காக்க உதிரம் கொட்டிய கள்ளர்குல மறவர்களுக்கு உதிரப்பற்று என்னும் வரிநீக்கிய நிலங்களை கொடையாக அளித்து போற்றியுள்ளது" பொறித்துவைக்கப்பட்டுள்ளது. இதை அறியாத அரைவேக்காட்டு கத்துக்குட்டி வரலாற்று ஆசிரியர்கள், கள்ளர் என்பதற்கு திருடர் என்று பொருள் கண்டுள்ளனர்., மேலும், கள்ளர்கள் பலப்பல போர்க்களங்கள் கண்டு ஏராளமான விருதுப்பெயர்களை சோழமன்னர்களிடமிருந்து பெற்றுள்ளனர் என்பதற்கு போதுமான சான்றுகள் உள்ளன. எனவே, கள்ளர்களைவிருதுகள் பலகூறு வீரைமுடையான் என்று மிராஸ்ரைட் கல்வெட்டு கூறுவதை காண்க:"தொண்டைமண்டல வரிசை மூவாறு குடிமக்கள் சுருதிநாள் முதலாகவே துங்கமிகு நாவிதன், குயவன்,வண்ணான், ஓலை சொன்னபடி எழுதும் ஒச்சன், கண்டகம் மாளர்வகை ஐவர், வாணியர் மூவர், கந்தமலர் மாலைகாரர் கலைமீது சரடோட்டும் பாணன், தலைக்கடைக் காவல்புரி பள்ளி,வலையன், பண்டுமுதல் ஊரான் மறிக்கும் இடையன், விருது பலகூறு வீரமுடையான் பதினெண் குடிமக்கள் அனைவரும்……………………………………"

     பழங்காலத்தில், போர்முரசு கொட்டியவுடன், நம் முன்னோர்கள் அனைத்துவேலைகளையும் புறம்தள்ளிவைத்துவிட்டு, அவசரம் அவசரமாக போர்க்கோலம் பூண்டு, இடது தோளில் வில்லை எடுத்துமாட்டிக்கொண்டு, வலது தோளில் முதுகுப்பக்கம் கற்றை கற்றையாக எண்ணற்ற அம்புகளைப்பிணைத்திருக்கும் அம்பறாத்தூளியை எடுத்துக்கட்டிக்கொண்டு, இடது இடையில் போர்வாளுடன கூடிய உறையை எடுத்து இறுகக்கட்டிக்கொண்டு, வலதுகையில் நெடிய ஈட்டியையும் இடதுகையில் கேடயத்தையும் எடுத்துக்கொண்டு போர்க்களம் நோக்கி ஓடி, எதிரி நாட்டுப்போர்ப்படையின்மீது புலிபோல் பாய்ந்து உயிரைப்பற்றிக்கவலைப்படாமல் மதம்கொண்ட யானையைப்போல்வெறியுடன் போர்க்களம்முழுவரும் ஓடி எதிரிகளின் தலைகளை பனங்குலைகளை வெட்டித்தள்ளுவதைக்போல் வெட்டித்தள்ளி வீரம்-தீரம் காட்டிப்போராடியவர்கள் என்பதை புறநானூறு அகநானூறு போன்ற தமிழ் இலக்கியங்கள் மூலம் அறிகிறோம்.

=> கி.மு.மூன்றாம் நூற்றாண்டில் வாழ்ந்தவர் தொல்காப்பியர். அவர் நம்குலமறவர்களாகிய வெட்சிமறவர் கள்வர்கள் போர்செய்த முறையையும் அவர்கள் போர்க்களம் சென்று வீரமரணம் அடைந்தபின் நடுகல்லாகி அனைவராலும் வணங்கப்பட்ட செய்திகள் பலவற்றையும் நேரில் கண்ட செய்திகளாக பன்னிருபடலத்தில் நமக்கு படம்பிடித்துக்காட்டுகிறார். தொல்காப்பியருக்குப்பின் இருநூறு ஆண்டுகளுக்குப்பின் வாழ்ந்தவர் திருவள்ளுவர்.அவரும் நம்மறக்குடி மக்களின் மாண்பையும் வீரத்தையும் நேரில்கண்டு போற்றிப்பாடியுள்ளார். திருவள்ளுவரின் கீழ்காணும் இருபாடல்கள் நம் குல முன்னோர்கள் போர்க்களத்தில் நின்று போராடும் காட்சியை நமக்குக் காட்டுகின்றது:"விழித்தக்கண் வேல்கொண்டு எறிய, அழித்து இமைப்பின் ஓட்டு அன்றோ வன் கணவர்க்கு"(குறள் 775) பொருள்: போர்க்களத்தில் நேருக்குநேர்நின்று போர்புரியும்போது, எதிரி எறியும் வேலைக்கண்டு, திறந்திருந்த கண்களை சிறிது மூடிதிறந்தாலும்(இமைத்தாலும்) அது கோழையின் செயலாகக்கருதி, புறமுதுகிட்டு ஓடியதற்கு ஒப்பாகும்."கைவேல் களிற்றொடு போக்கி வருபவன் மெய்வேல் பறியா நகும்" (குறள் 774பொருள்: போர்க்களத்தில் வீரன் ஒருவன் தன்னைத்தாக்க எதிரேவரும் யானையின் மீது தன் கையிலிருக்கும் கூரிய வேலை வேகமாக எறிந்து அதன் உடலில் ஆழமாக பாய்ச்சி விடுகின்றான். வேலின் வன்மையை தாக்குபிடிக்கமுடியாத அந்த யானை வலியினால் பின்வாங்கி அவன் எறிந்த வேலோடு திரும்பி ஓடிவிடுகின்றது. மேற்கொண்டு போராட வேலில்லையே என அவ்வீரன் செய்வதறியாது திகைத்து நிற்கின்றான். அப்போது, எதிரி எறிந்த வேல் ஒன்று வேகமாக பாய்ந்து வந்து அவன் மார்பில் பதிந்த நிற்கின்றது. அதுகண்டு அவன் மனம் மகிழ்ந்தான். வேல்ஒன்று கிடைத்துவிட்ட மகிழ்ச்சியில், அவன் மார்பில் தைத்துநிற்கின்ற அந்த வேலை பிடிங்கி கையில் எடுத்து சுழற்றிக்கொண்டு எதிரியைத்தாக்க மகிழ்ச்சியுட்ன் ஓடுகின்றான்.மேலும், போர்க்களம்செல்லும் முன் தன் மனைவியை மைத்துனர் வீட்டில் விட்டுச்செல்வதையும் நம் குலமுன்னோர்கள் வழக்கமாகக் கொண்டிருந்தனர்.

=>     போர்க்களம் செல்லும் நம்குல மறவர்கள், மாலையில்வீடுதிரும்புவோம் என்ற நிச்சயமற்றநிலையை மனதில் கருதியே அவ்வழக்கத்தைக்கடைபிடித்தனர். தமிழ் இனத்தில்பள்ளுபறை என்னும் 18 சாதிகள் உண்டு. ஆனால், எந்த சாதியினரும் செய்யாத மிகவும் ஆபத்தான தொழிலையேஇவர்கள் செய்ததற்குக் காரணம், முற்கால மன்னர்கள் இவர்களை மிகவும் போற்றி மதித்துள்ளனர் என்பதுமட்டுமல்லாமல் பிறந்த மண்ணுக்காகவும், மன்னனுக்காகவும் போரில் வீர மரணம் அடைவதை பெறும் பேறாகக்கருதியவர்கள் நம்குலமுன்னோர்கள் என்பதும் அவர்கள் உண்மையாக போர்செய்து வெற்றிவாகைசூடி மன்னனுக்குபெருமைதேடித்தந்தனர் என்பதையே தஞ்சை பெருவுடையார் கோயிலில்உள்ள பேரரசன் இராஜராஜ சோழனின்கல்வெட்டு சான்று கூறுகிறது. போர்க்களம் சென்ற தன் தளபதிகள் உடல் உறுப்புக்கள் ஊனமின்றி நல்லபடியாக வீடுதிரும்பவேண்டும் என, சிவபெருமானைவேண்டி இராஜராஜசோழன் திருவிளக்கு எரிய நிவந்தம் விட்ட செய்திகளும்தஞ்சை பெருவுடையார்கோயிலில் உள்ள கல்வெட்டுகள் மூலம் அறிகிறோம்.இரட்டைப்பாடி ஏழரைஇலக்கத்தின்மன்னன் மேலைச் சாளுக்கியனுடன் 100 ஆண்டுகளுக்குமேல் நடைபெற்ற போரில் 9,00,000 போர்வீரர்கள் போரிட்டுஇறுதியில் சோழமன்னன் வெற்றிவாகை சூடினான்..தரைப்படை,குதிரைப்படை,யானைப்படை மற்றும்கப்பற்படைமூலம் கடல்கடந்த நாடுகளையும் தாக்கி தென்கிழக்கு ஆசிய நாடுகளையும் சோழர்படை வென்றது. 1. பாண்டிநாடு 2. பல்லவநாடு3. சேரநாடு 4. இலங்கை5. இரட்டைப்பாடி ஏழரை இலக்கம்6. வேங்கி7. சாளுக்கியநாடு8. சக்கரக்கோட்டம்9. கலிங்கம்10. கங்கபாடி 11. நுளம்பப்பாடி 12. குடகு 13. கேரளம் 14. கொல்லம் 15. மாநக்கவாரம்16. மாப்பாளம் 17. மலேயா தீபகற்பத்திலுள்ள மாயிருடிங்கம்18. கடாரம் 19. சாவகம்20. இலாமுரிதேசம் 21. சிறீவிசயம்22. கருமனம் 23. புட்பகம் 24. யவனம் 25. மிசிரம் 26. காழகம் 27. புட்பகம்28. அரபிக்கடலிலுள்ள முன்னீர் பழந்தீவுபன்னீராயிரம்29. அங்கம் 30. வங்கம்31. கோசலம் 32. விதேகம்33. கூர்சரம்34. பாஞ்சாலம் 35. இடைதுறைநாடு36. வனவாசி37. கொள்ளிப்பாக்கை 38. மண்ணைக்கடக்கம்39. மதுரமண்டலம்40. நாமணக்கோணை 41. பஞ்சப்பள்ளி 42. மாசுணிதேசம்43. ஒரிசா(ஒட்ட விசயம்) 44. சுமத்ரா தீவிலுள்ள விசையம் 45. பண்ணை46. மலையூர்47. இலங்கா சோகம்48. இலிம்பிங்கம் 49. வளைப்பந்தூறு 50. தக்கோலம் 51. மதமாலிங்கம் ஆகிய நாடுகளை சோழர் படைவென்றுஉலகப்பேரரசாக மாறியது.

=> சோழனின் படை வடஇந்தியாவில் உள்ள கங்கைக்கரைவரை சென்று வெற்றிவாகைசூடியது. வடஇந்தியாவின்மீது 18முறை படையெடுத்து சோமநாதபுரம் கோயிலை கொள்ளையிட்ட ஆப்கானிஸ்தானின்துருக்கி அரசன் கஜினிமுகமதுவை தண்டிக்கவும் இராஜேந்திரசோழன் வடஇந்தியாவின்மீது திக்விஜயம் செய்தார்என்பதற்கு வலுவான வரலாற்று சான்று உள்ளன. கி.பி.1025,டிசம்பர் மாதத்தில் 17வது முறையாக கஜினி முகமதுசோமநாதபுரம் கோயிலின்மீது படையெடுத்தான். அவன் அக்கோயிலைநோக்கி அரபிக்குதிரைகளின்மீதும்ஒட்டகங்களின்மீதும் புயல்காற்றென வாயுவேகத்தில் வந்து தாக்கினான். அவனைத்தடுத்த 50,000க்கும் மேற்பட்டநிராயுதபாணியான பக்தர்களைவெட்டிசாய்த்தான். கோயிலை இடித்து, இறைவனுக்கு காணிக்கையாக பக்தர்களால்அளிக்கப்பட்ட தங்கம்,வைரம், வைடூரியம், கோமேதகம்,முத்து, பவளம்,மாணிக்கம் போன்ற விலையுயர்ந்த கோடானகோடிசெல்வங்களை கொள்ளையிட்டு ஒட்டகங்களின்மீதும், குதிரைகளின்மீதும் மூட்டையாக்க்கட்டிஅள்ளிச்சென்றான். அவன் அப்போது கொண்டுபோன தங்கம் மட்டுமே ஆறுடன் எடைக்கு குறையாது. அம்மூட்டைகளைதூக்கமுடியாமல், ஒட்டகங்களும், குதிரைகளும் முதுகைநெளித்துக்கொண்டு எறும்புஊருவதைபோல்ஆப்கானிஸ்தானை நோக்கி மெல்ல ஊர்ந்துசென்றன.. இவ்வாறு அரபுநாட்டு வரலாற்று ஆசிரியர்அல்காசுவினி எழுதியுள்ளார். கி.பி.1000லிருந்து தொடங்கி தொடர்ந்து ஆண்டுதோறும் துருக்கி அரசன் கஜினிமுகம்மதுவடஇந்தியாவின்மீது படையெடுத்து சோமநாதபுரம் சிவன்கோயிலைகொள்ளைஅடித்துவரும்செய்தி, சிவபாதசேகரனும்சிவநேசச்செல்வனுமான இராஜராஜசோழனையும், மும்முடிச்சோழன் பெற்ற களிறு என்று வரலாறு போற்றும்இராசேந்திர சோழனையும் மனம் நோகச்செய்திருக்கவேண்டும். மேலும், கஜினி முகமது கிபி.1018ல் கன்னோசிநாட்டின்மீதுபடையெடுத்து, அந்நாட்டை ஆண்ட ராஜ்யபாலனைத்தோற்கடித்து நாட்டைவிட்டே துரத்தி, வழக்கம்போல்கோயில்களை இடித்தும், கோயில் சொத்துக்களையும் உடைமைகளையும் சூறையாடி, பொதுமக்களைகொன்றுகுவித்து ஊருக்கும் எரியூட்டி அந்நாட்டிற்கு பேரிழப்பை உண்டுபண்ணினான். ராஜ்யபாலன் இவற்றைத்தடுக்கஎவ்வித முயற்யசியும்செய்யாது கோழையைப்போல் ஓடி ஒளிந்துகொண்டான். இதனால் பக்கத்து நாட்டுமன்னர்கள்சந்தெல்லர் நாட்டு மன்னன் வித்தியாதரன் என்பவன் தலைமையில் ஒன்றுகூடி நடவடிக்கை மேற்கொண்டனர்.கஜினியை எதிர்த்துப்போரிடாத கோழை ராஜ்யபாலனை கொன்று அவன் மகன் திரிலோசன பாலனை கன்னோசியின்மன்னாக முடிசூட்டி, கஜினியை எதிர்க்க கூட்டு உடன்படிக்கை மேற்கொண்டனர். தன்னைஎதிர்த்து கூட்டுநடவடிக்கைமேற்கொண்ட மன்னர்களைத்தண்டிக்க, கஜினி மீண்டும் கன்னோசியின்மீது படையெடுத்து வெற்றிகண்டான்.

=> இரண்டுஆண்டுகளுக்குப்பிறகு,(கிபி.1021-22ல்) தனக்கு எதிராக கூட்டணிநிறுவிதலைமையேற்ற வித்தியாதரனைத்தண்டிக்க,கஜினி முகமது அவன் நாட்டின்மீது படையெடுத்தான்.இந்நிலையில்,வடநாட்டுபடையெடுப்பின்போது போசராசன்நட்பும், சேதிநாட்டுக்காளச்சூரி மன்னன் காங்கேயர் விக்கிரமாதித்தன் நட்பும் இராசேந்திர சோழனுக்கு கிடைத்தது.அவர்களின் வேண்டுகோளை ஏற்று,வித்தியாதரனை கஜினியிடமிருந்து காப்பாற்ற மாபெரும் படையுடன் இராசேந்திரசோழன் வடநாடுநோக்கி திக்விஜயம் புறப்பட்டான். வழியில் சக்கரக்கோட்டம், மதுரை மண்டலம், நாமனைக்கோட்டம்,பஞ்சப்பள்ளி, மாசுணிதேசம்(சிந்துநதிக்கரையில் உள்ளது) ஆகிய இடங்களை கைப்பற்றினான்.(ஆதாரம்: டாக்டர்கே.கே.பிள்ளை அவர்கள் எழுதிய தமிழக வரலாறும் மக்களும் பண்பாடும் பக்கம் 277&278ல்காண்க).இராசேந்திரசோழனின் மேற்கண்ட திக்விஜயத்தைகேள்விபட்ட கஜினி முகமது அஞ்சிஓடிஒளிந்துகொண்டான். அதுமட்டுமல்ல.,இராசேந்திரசோழனின் மேற்கண்ட வடநாட்டு படையெடுப்பிற்குப்பிறகு,இந்தியாவின்மீது படையெடுப்பதையும் கோயில்களை கொள்ளை யடிப்பதையும் விட்டுவிட்டான். அதன்பிறகு இந்தியாவின் மீது படையெடுப்பு எதையும் கஜினி முகமது எடுக்கவில்லை என்று வரலாறுகூறுகிறது. மதுரை மண்டலம் என்பது யமுனைக்கரையில் உள்ள வடமதுரையே என்பதில் ஐயமில்லை. அந்நகர் அக்காலத்தில் செல்வமும் செழிப்பும் புகழும்பொதிந்து காணப்பட்டதால், அந்நகர் மீது கஜினிமுகமது பன்முறை தாக்குதல்நடத்தி கொள்ளையடித்து தீயிட்டு சீரழித்தான்.அப்போது வடநாட்டு மன்னர்களின் வேண்டுகோளைஏற்று சிவபாதசேகரனின் மகனான இராசேந்திரசோழன்,சோமநாதபுரம் கோயிலைக் காப்பாற்றவும், கஜினிமுகம்மதுவுடன் போரிட்டு அவன்தொல்லையிலிருந்து வடஇந்தியாவைவைக் காப்பாற்றவும், மாபெருமபடை திரட்டிக்கொண்டு வடநாட்டின்மீது திக்விஜயம் விஜயம் மேற்கொண்டான் என்று கருதத்தோன்றுகிறது என்று டாக்டர் கே.கே.பிள்ளை கூறுகிறார்.(பக்கம்279) இராஜேந்திரசோழனின் நாட்டம் அடுத்துக் கங்கை வெளி யின் மீது பாய்ந்த்து. மேலைச்சாளுக்கிய மன்னன்இரண்டாம் சயசிம்மனுக்கு படைத்துணைநல்கிய வர்களான கலிங்கத்து அரசனும், ஒட்டவிசயஅரசனும் சோழர்படைக்கு அடிபணிந்தனர். இப்படைகள் மேலும் வடக்கே முன்னேறிச்சென்று இந்திரதரன், இரணசூரன், தருமபாலன்ஆகியமன்னர்களை வென்று கங்கைவெளியில் அடிவைத்தன. வங்க நாட்டு பாலவமிசத்து மன்னன் மகிபாலன் என்பான்சோழர்படைக்கு தலைவணங்கி அடிபணிந்தான். கங்கைஆற்யறைக்கடந்துசென்றும் சோழர் படை சிற்சில இடங்களில்போரிட்டுவென்றது.

=> வங்காளம் முழுவதுமே சோழப்பேர்ரசின் மேலாட்சிக்குஇணங்கிற்று.இராசேந்திரசோழனின் வடநாட்டுபடையெடுப்பில் படைத்தலைவனாக சென்ற கருநாடகக்குறுநிலமன்னன் ஒருவன் மேலை வங்கத்தில் குடியேறினான்.அவன் வழியில் பிறந்த சமந்தசேனன் என்ற ஒருவன் தோன்றி, "சேனர் பரம்பரை" ஒன்றை மேற்கு வங்காளத்தில் தொடங்கி வைத்தான். மேலும், இராசேந்திரசோழன் கங்கைக்கரையிலிருந்து சைவர்கள்(கங்கை வேளாளர்) சிலரை கொண்டுவந்து காஞ்சிபுரத்தில் குடியேற்றினான்(ஆதாரம்: திரிலோசன சிவாச்சாரியார் எழுதிய சித்தாந்த சாராவளி என்னும் நூல்).கங்கைத்திருநாட்டில் வேளாண்மைத்தொழில் செய்த வேளாளர் இன்றும்தமிழகத்தில், தங்களை கங்கைக்குலத்தவர் என்றே கூறிக்கொள்கின்றனர். வேளாளர்களுக்குக் கங்கக்குலம் அல்லது கங்க வம்சம் என்ற பெயரும் உண்டு. ஏனெனில் அவர்கள் பிளினி, டாலமி ஆகியவர்களால் குறிப்பிடப்பட்ட கங்கைத்தீரத்திலுள்ள வல்லமைவாய்ந்த கங்கரிடே என்ற மாபெருங்குடி மரபிலிருந்து தங்கள் குலமரபை வரன்முறையாகக் கொண்டனர். (ஆதாரம்:ரா.பி.சேதுப்பிள்ளை அவர்கள் தமிழகம் ஊரும் பேரும் என்ற நூலில் எழுதியுள்ளது).இராசேந்திரன் கிபி.1018ல் இலங்கை முழுவதையும் வென்று சோழப்பேரரசின்கீழ் கொண்டுவந்தார். முதலாம் பராந்தகச்சோழனிடம் தோற்றோடிய வீரபாண்டியன் அன்று சிங்களத்தில் கைவிட்டோடிய பாண்டிநாட்டு மணிமுடியையும், இந்திரஆரத்தையும், இரெத்தின சிம்மாசனத்தையும், பாண்டியனின் செங்கோலையும் இராசேந்திரன் மீட்டு வந்தார்.("தேவர்கோன் பூணாரம் தென்னர்கோன் மாப்பினவே" என்று சிலப்பதிகாரத்தில் இளங்கோவடிகள் இதனை குறிப்பிடுவதை காண்க) மேலும் சிங்கள மன்னனின் மணிமுடியையும் அவன் பட்டத்தரசியின் மணிமுடியையும் பறித்தார். இலங்கையில் சிவனுக்கும் பெருமாளுக்கும் பல கோயில்கள் எழுப்பப்பட்டன.

@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
மேற்குறிப்பிட்ட வாதங்களுக்கு எமது மறுப்புரை

      சங்க காலத்தில் வாழ்ந்த மக்கள் பற்றி அறியத் துணை புரிவது சங்க இலக்கியங்கள் ஆகும். இவை எட்டுத் தொகை, பத்துப்பாட்டு மற்றும் தொல்காப்பியம் ஆகியன. அக்கால மக்கள் வாழ்ந்த நிலத்தை இயற்கை அமைப்புக்கு தக்கவாறு குறிஞ்சி, முல்லை, மருதம் மற்றும் நெய்தல் என்று நான்காகப் பிரித்திருந்தனர். பாலை என்ற ஐந்தாவது நிலம் பற்றி தொல்காப்பியத்தில் குறிப்பு கிடையாது. ஆனால், குறிஞ்சியும், முல்லையும் வானம் பொய்த்துப் போன நிலையில் தனது நிலையில் மாறுபட்டு புதிய நிலமாக காட்சி தருகின்ற ஒரு காலப்பகுதியைக் குறிப்பதே பாலை என்று சிலப்பதிகாரம் குறிப்பிடுகிறது. எனவே, பாலை என்பது குறிஞ்சி மற்றும் முல்லையின் ஒரு மாறுபட்ட நிலையேயன்றி, ஒரு தனி நிலப்பரப்பு அன்று. இதில் குறிஞ்சியும்,முல்லையும் வன் நிலம். அதாவது, திருந்தாத நிலம். திருந்தாத நிலம் என்னும் போது அங்கு வாழ்ந்த மக்களின் வாழ்க்கை முறையும் திருந்தாத நிலையாகவே இருந்தது. குறிஞ்சி நிலமக்கள் குறவர், குறத்தியர் எனப்பட்டனர். அவர்கள் தொழில் தேன் எடுத்தல் மற்றும் விலங்குகளை வேட்டையாடல். முல்லை நிலமக்கள் இடையர் மற்றும் இடைச்சியர். இவர்கள் தொழில் ஆநிரை பேனல் மற்றும் வேட்டையாடல். இந்த இரு நிலங்களிலும் தொழிலின் அடிப்படையில் இவர்களுக்கு நிரந்தரமான குடியிருப்புகள் இல்லை. இவர்களின் வாழ்க்கை நாடோடி வாழ்க்கையாகவே இருந்தது. எனவே, இவர்களிடையே கணவன், மனைவி என்ற குடும்ப அமைப்பு ஏற்படவில்லை.

    மருதமும், நெய்தலும் மென் நிலங்கள். நெய்தல் நிலத்தில் மீன், உப்பு இவைகள்தான் கிடைக்கும். ஆனால், மருதநிலம் அப்படி இல்லை. இது நீர் நிலை நிறைந்த வளமான நிலம். ஏனெனில், இது ஆற்றோரங்களில் அமைந்திருந்தது. இதனால், அங்கு நெல் உற்பத்தி செய்யப்பட்டது. நெல் உற்பத்தியே நாகரிகத்தின் பொருளியல் அடிப்படையானது. எனவே, குறிஞ்சியும், முல்லையும் போல் இல்லாமல் மருத நிலத்தில் நாகரிக வளர்ச்சியும், அதனால் நிரந்தரக் குடியிருப்புகளும் ஏற்பட்டன. இந்த நிலத்தில் வாழ்ந்த மக்கள் மள்ளர் எனப்பட்டனர். இந்த மக்கள் கழனியில் செய்த வேலையின் பொருட்டு உழவர், களமர், வினைஞ்ர், கடைஞ்ர், உழத்தியர், கடைசியர் மற்றும் ஆற்றுக்காலாட்டியார் என பல பெயரால் அழைக்கப்பட்டனர். இவர்களுக்கென பிரத்தியோகத் தனி உடைமைகள் ஏற்பட்ட நிலையில் கணவனை தலைவனாகக் கொண்ட குடும்ப வாழ்க்கை ஏற்பட்டது. மருத நில மக்கள் தொகை பெருகிய பின், பண்டமாற்றிற்கு வணிகனும், வழக்குத் தீர்ப்பிற்கும் காவற்கும் ஊர்க்கிழவரும்(தலைவர்), தெய்வத்தை வேண்ட உவச்சனும்(பூசாரி) உழவரின்றி பிரிந்தனர். இவ்வாறாக மருதநில மக்கள் நான்கு பிரிவாயினர். ஊர்க்கிழவரே அரசகுலத் தொடக்கம். ஆட்சிப்பரப்பு விரியவிரிய, வேளிரும், குறுநில மன்னரும், கோக்களும் மற்றும் வேந்தரும் முறையே தோன்றினர். எனவே, மருத நிலம்தான் நாகரிகத்தின் பிறப்பிடம். நீர் வளம் நிறைந்த இடத்திலேதான் நாகரிகம் பிறந்தது. நாகரிகத்தின் சின்னம்தான் அரசும், அரசனும். பண்டைகாலத்தில் மக்களைக் காத்து அவர்கள் முன்னேறத் துணை செய்தவன் அரசனே. மக்களும் தங்களுக்குத் துணை செய்த மன்னனை தெய்வப் பிறவியாக மதித்து வணங்கினர். ஆதலால், வேந்தனையே மருத நிலத்தின் தெய்வமாக வைத்தார் தொல்காப்பியர்.

வேந்தன் மேய தீம்புனல் உலகம்

இதைப்போலவே மருதநில மள்ளர்கள் பற்றி நிகண்டுகள் குறிப்பிடுவது,

அருந்திரல் வீரர்க்கும் பெருந்திரல் உழவர்க்கும்
வருந் தகையதாக்கும் மள்ளர் எனும் பெயர் (திவாகர நிகண்டு)

செருமலை வீரரும் திண்ணியோரும் மருதநில
மக்களும் மள்ளர் என்ப           (பிங்கல நிகண்டு)

இந்த இரண்டு செய்யுள்களிலிருந்தும் நாம் தெரிந்து கொள்வது, மருதநில மக்கள் மள்ளர் என்று சொன்னால் போதும் நாம் புரிந்துகொள்ளலாம். ஆனால், அருந்திரல் வீரர் மற்றும் செருமலை வீரர் என்போர் மள்ளர் என்றும் சொல்வதால், பண்டைய காலத்தில் வீரன் என்றாலே மருத நில மள்ளன்தான் என்பதாகிறது. அவன்தான் அனைத்து நில மக்களையும் அடக்கி ஆண்டவன் என்பது உறுதியாகிறது. இதனை கீழ்கண்ட தொல்காப்பியப் பாடல் உறுதிபடுத்துகிறது.

ஆயர் வேட்டுவர் ஆடூஉத்திணைப்பெயர்
ஆவயின் வரூஉம் கிழவரும் உளரே   (தொ.பொ.அக.23)

“ஆயர் என்பதும், வேட்டுவர் என்பதும் (முறையே முல்லை மற்றும் குறிஞ்சி நில) ஆண்களைக் குறிக்கும் திணைப்பெயராகும். அவ்விடங்களிலே வேறு பெயர் குறித்து வரும் தலைவர்களும்(கிழவர்) உள்ளனர்

    இங்கே குறிஞ்சி மற்றும் முல்லை நில மக்களை (வேட்டுவர்,ஆயர்) அடக்கியாண்ட அந்த தலைவர்கள் மருத நிலத்தைச் சார்ந்த கிழவரே (குறுநில மன்னர்) ஆவர். இவர்களே அந்த நிலங்களில் நிலத் தலைவர்களாக வாழ்ந்தனர். இதேபோன்றே வணிகம், படையெடுப்பு மற்றும் காதல் போன்ற காரணங்களால் மருத நிலத்தவன் பிற நிலங்களில் போய்த் தங்கக்கூடிய சூழலும் இருந்தது. இந்நிலையில், அவனே கிளவித் தலைவனாகவும் காட்டப்படுகிறான். அப்படி ஏற்பட்ட ஒரு நிலைதான் மள்ளனான முருகன் குறுஞ்சி நிலக் குறத்தியான வள்ளியைக் காதல் செய்த விவகாரம். இங்கே மருத நிலத்தான் மற்ற நிலங்களில் பெண் எடுத்திருக்கிறான். ஆனால், மற்ற நிலத்தவன் மருத நிலத்தில் வந்து பெண் எடுக்கக் கூடிய சூழ்நிலை இருந்ததில்லை.

    மருத நிலத்தின் உழவர், அரசர், வணிகர் மற்றும் உவச்சன் என்ற நான்கு பிரிவு மக்களில் உழவனே தலையாய இடத்தில் வைக்கப்பட்டான். இதன்பொருட்டே திருவள்ளுவரும்

சுழன்றும் ஏர்ப்பின்னது உலகம்-அதனால்
உழந்தும் உழவே தலை

என்று உழவனின் பெருமையை விளக்கினார். இவ்வாறு உழவிற்கு முக்கியத்துவம் ஏற்பட்ட நிலையில், உழவர்க்கு தேவையான பொருள்களை செய்து கொடுக்க பதினெட்டுக் குடிகள் என்ற பக்கத்தொழிலாளர்கள் படிப்படியாகத் தோன்றினர்.  
 
புறப்பொருள் வெண்பாமாலை புகழக்கூடிய போர்மறவன் மள்ளனே ஆவான். இதனை கீழ்கண்டபாடல் மூலம் தெளிவு பெறலாம்.

கோடுயர் வெற்பின் நிலங்கண் டிரைகருதும்
தோடுகொள் புள்ளின் தொகையொப்பக்-கூடார்
முரணகத்துட்ப பாற முழவுத்தோள் மள்ளர்
அரணகத்துப் பாய்ந்திழிந்தார் ஆர்த்து  (புறப்பொருள் வெண்பாமாலை-உழி.படலம்
                                      பாடல் 20)

பொருள்: மத்தளம் போன்ற திரண்ட தோள்களையுடைய மள்ளர், நிலத்திலே இரையைப் பாய்ந்து பிடிக்கும் பறவை போல, பகைவர் பயந்து ஒழியும்படி மதில் உச்சியிலிருந்து குதித்து இறங்கினர்.

இலக்கியத்தில் காட்டப்படுகின்ற வெட்சிமறவர் மற்றும் கரந்தைமறவர் என்போர் போர்மறவரான ‘மள்ளர்களே.

வெட்சி நிரை கவர்தல்
மீட்டல் கரந்தையாம் என்று புறப்பொருள் வெண்பாமாலை கூறும்.

கல்கெழு சீறூர்க் கடைக்கண் விருப்பினான்
மெல்ல நடவா விரையு நிரையென்னோ
தெள்ளற் கான்யாற்றுதீநீர் பருகவும்
மள்ளர் நடவா வகை      ( பெரும்பொருள் விளக்கம்-செய்யுள் 14)

பொருள்: ஆரவாரம் மிகுந்த சீர்மையான ஊரைச் சென்றடையும் விருப்பத்தினால் உந்தப்பட்டு ‘வெட்சிமறவர்களான வீரமள்ளர்கள் தாம் கொள்ளைகொண்டுவரும் பசுக்கூட்டம் இடைப்பட்ட தெளிந்த தித்திப்பான காட்டாற்றுத் தண்ணீரைப் பருகும்படி செய்து விரைவாக ஓட்டிச் சென்றனர். இது வெட்சிமள்ளர்களின் ஒழுக்கநெறியாகும்.

‘கரந்தியல் காட்டுத்தீயப் போலப் பெரிதும்
பரந்துசென் மள்ளர் பதிந்தா-ரராந்தை
விரிந்தவியு மாறுபோல் விண்டோயத் தோன்றி
எரிந்தவியும் போலுமிவ் வூர்         (புறத்திரட்டு-பாடல் 40)

பொருள்: விரைந்து பரவி வளைத்துக்கொண்டு மூண்டெரியும் காட்டுத்தீ போல வீர மள்ளர்கள் பசுக்கூட்டத்தை மீட்கும் பொருட்டு பகைவர் ஊருக்குள் சென்றனர். அதனால், இந்த ஊர் துன்பம் பெருகி அழிவது போல் எரிந்து அழியும்.


திருவள்ளுவர் போற்றிய வன்கண் போர்மறவன் ‘மள்ளனே

வெஞ்சொன் மாற்றம் வந்துகை கூட
வன்கண் மள்ளர் வந்தழல் உறீஇப்
போர்ப்பறை அரவாமொ.............     (பெருங்கதை இலாவாண காண்டம்-17)

பொருள்: ....அச்செய்திக்கு கருவியாக அமைந்த இதறுகண்மையுடைய மள்ளர் போர்ப்ப்பறை முழக்கத்தோடு  ஆரவாரித்து வந்து ............

சீறிவரும் வேலுக்கும் அஞ்சாதவர் மள்ளர். அது கள்ளர் இல்லை.

எறி கோல் அஞ்சா அரவின் அன்ன
சிறு வல் மள்ளரும் உளரே, அதா அன்று
............................               (புறநானூறு-பாடல் 89)

பொருள்: ......போர்ப்படை வேந்தனே, எதிர்த்துப் பாய்ந்து வரும் வேலுக்கும் அஞ்சாத பாம்பு போல் சீறிப் பாயும் வலிமையுள்ள மள்ளர் குலப்போர் மறவரும் உள்ளனர் எம்நாட்டில்........(ஔவையார் சொன்னது)

களம் என்ற சொல்லிலிருந்தே களமர் என்ற சொல் தோன்றியது.
‘களமர் என்று பண்டைய காலத்தில் அழைக்கப்பட்டவர் ஏர்க்களம் மற்றும் போர்க்களம் போற்றிய ‘மள்ளரே. தற்காலத்தில் இருக்கக்கூடிய கள்ளர் கிடையாது.

நுங்கோ யார்என வினவின் எங்கோக்
களமர்க்கு அரித்த விளையல் வெங்கள்
யாமைப் புழுக்கின் காமம் வீட ஆரா
.............................  (புறநானூறு-212)

பொருள்: உழவர்க்கு என வடித்தெடுக்கப்பட்ட முதிர்ந்த விரும்பத்தக்க கள்ளை ஆமையின் இறைச்சியுடனே ஆசைதீர உழவர் உண்டு,.........

"
இருவர்சேனை மள்ளரும் மெதிர்ந்துகை கலந்தனர்.   "(திருவிளையாடற்புராணம்                                தண்ணீர்ப்பந்தல் வைத்த படலம்-செய்யுள் 14)

பொருள்: ......இரு மள்ள மன்னர்களின் சேனை மள்ளர்களும் (போர்க்களத்தில்) எதிர் எதிர் மோதிக் கலந்தனர்.

     பண்டைய காலத்தில் பள்ளருக்குத் துணையாக இருந்த 18 தொழில்மக்களில் பறையன் என்ற பிரிவு இல்லை. கிணையன் என்ற பிரிவே இருந்தது. கிணையனையே சிலர் கிணைப்பறையன் என்று சொல்லிக் கொள்கிறார்கள். பள்ளு மற்றும் பறை என்ற சாதிகள் பற்றிய குறிப்பு நாயக்கர் ஆட்சி காலத்தில் கல்வெட்டுக்களில் காணப்படுகிறது. அதேபோன்று, பள்ளர்சேரி என்பது பச்சேரி என்ற பெயரில் இருந்தது. பறைச்சேரியும் தனியே இருந்தது. இடைக்கால தமிழ் வேந்தர் ஆட்சியில் மற்ற சேரிகளுடன் பறைச்சேரியும் இருந்தது. ஆனால், பள்ளர் சேரி கிடையாது. பள்ளர்கள் குடும்பு ஆட்சிமுறையின் முக்கிய அங்கத்தினராக இருந்தார்கள்.

     'இந்திர ஆரத்தை' அணிபவர் தேவேந்திரகுலத்தைச் சார்ந்த மூவேந்தர் மட்டுமே. மற்ற யாரும் அணிதல் முறை கிடையாது.
கள்ளர், மறவர் மற்றும் அகமுடையார் பற்றி எட்கர் தர்ஸ்டன் என்ன சொன்னார் என்பது பற்றி ஏற்கனவே அதிகம் சொல்லியாகி விட்டது. தாங்கள் போர்க்குடியினர் என்று சொல்லிக்கொள்கின்ற கள்ளர் பற்றி V.V.R. தீட்சதர் கூறுவது:

    “கள்ளர் ஒரு கொள்ளைக் கூட்டம். அவர்கள் எந்த படைகளிலும் சேர்ந்து பயிற்சி பெற்ற போர்வீரர் அல்ல (V.V.R.Dikshidar. War in ancient India page 183-184)

‘தாய்மண் காக்க உதிரம் கொட்டியவர் போர்மறவரான மள்ளரே. இடைக்கால ஆட்சியில் அவர் கள்ளர் என்பதற்கு ஆதாரம் இல்லை. அதேபோல், ‘பலகூறு வீரமுடையான் கள்ளர் என்பதற்கும் ஆதாரம் இல்லை.
மற்ற செய்திகளான இராஜேந்திரசோழன் வடஇந்தியா முழுமைக்கும் படைஎடுத்துச் சென்று பல நாடுகளை வென்றதும், கஜினிமுகமது தென்தமிழகம் வந்து கொள்ளையடித்துச் சென்றதும் அனைவரும் தெரிந்த உண்மையே. இதில் கள்ளர் அரசபரம்பரை என்ற ஆதாரம் எதுவும் கிடையாது.