Friday, November 30, 2012

'தேவர்' பட்டமும், முக்குலத்தோரின் பொய்களும்



'தேவர்' பட்டமும், முக்குலத்தோரின் பொய்களும்
==============================================
@மேகநாதன் முக்குலத்து புலி:
-------------------------------------------
//தேவர் என்பது சாதி அல்ல, அது பட்டம். இருப்பினும் அது கள்ளர்,அகமுடையார்,மறவர் என்ற சாதி ஆட்களுக்கு மட்டுமே உள்ளது//

இதற்கான மறுப்பு:
----------------------------
* செஞ்சிக் கோட்டையில் முதலாம் அரசன் ஆனந்தத் தேவர்.இவர் “இடையர் (கோனார்)” சாதியை சேர்ந்தவர்.
* சிவகங்கை பாளையக்காரர் முத்து வடுக உடையனாத தேவர்.இவர் தெலுங்கு பேசும் “வடுகர் (நாயக்கர்)” சாதியை சேர்ந்தவர்
* கி.பி.1260 – 1271 இல் தேவகிரியை ஆட்சி பிருந்த மகாதேவர். இவர் “யாதவ” குலத்தை சேர்ந்தவர்.
* கி.பி.1299 – 1301 இல் ராந்தப்பூர் பகுதியை ஆட்சி செய்த கமீர் தேவர். இவர் “சௌக” வம்சத்தை சேர்ந்தவர்.
* சீக்கிய மதத்தை உருவாக்கிய குருநானக் தேவர்.இவர் “சீக்கிய” மத தலைவர் ஆவார்.
* கி.பி. 883 – 902 இல் காஸ்மீர் பகுதியை ஆட்சி புரிந்த சங்கிரமத் தேவர். இவர் “உத்பால” வம்சத்தை சேர்ந்தவர்.
* வங்காளம்,பீகார் பகுதியை ஆட்சி புரிந்த பாலபுத்திர தேவர்.இவர் “சைலேந்திர” வம்சத்தை சேர்ந்தவர்.
* “கோகொல்லர்” வம்சத்தை சேர்ந்தவர் காங்கேயத் தேவர். (கி.பி. 1030 )
* சீவக சிந்தாமணியை இயற்றியவர் திருத் தக்க தேவர். இவர் “சமண” மதத்தை சேர்ந்தவர்.
* பெரிய புராணம் இயற்றிய சேக்கிழார் வேளாண் மரபை சேர்ந்தவர்.இவருக்கு அருண்மொழித் தேவர் என்ற பெயர் பல்லவ மன்னரால் வழங்கப் பட்டது.
* தெலுங்கு பேசும் கம்பளத்து வடுகர் (நாயக்கர்). தங்களை தேவர் வம்சம் என்று கூறி ‘தேவர் ஆட்டம்’ ஆடுகின்றனர்.மதுரை மாவட்டம், கோடங்கி பட்டியில் உள்ள கம்பளத்து வடுகர்களை (நாயக்கர்) இதற்கான சான்றுகளில் ஒன்றாக கூறலாம்.இதற்க்கு இவர்கள் கூறும் விளக்கம் யாதெனில் தேவர் என்றால் இறைவன். நாங்கள் இறைவனோடு நேரடித் தொடர்பு உடையவர்கள். எனவே தான் தேவர் ஆட்டம் ஆடுகின்றோம் என்கின்றனர்
கல்வெட்டு 1
——————-
(சோழர் கால) மதுராந்தகம் கல்வெட்டு வாசகம்:
“இவ்வூர் தேவரடியாள் மகன் கண்டியத் தேவன்”
அப்படியானால், இங்கு தேவரடியாள் மகன் என்று சுட்டப்படும் தேவன் யார்?
கல்வெட்டு 2
——————–
திருச்சி மாவட்டம், 12 ம் நூற்றாண்டு கல்வெட்டு:
“வண்ணான் அழிவில்லாத தேவன்”
அப்படியானால், இங்கு வண்ணான் என்று சுட்டப் படும் தேவன் யார்?
           இதில் இருந்து, 'தேவர்' பட்டம் என்பது முக்குலத்தோர் சொல்வது போல கள்ளர்,அகமுடையார்,மறவருக்கு மட்டுமே உள்ள பட்டம் என்பது கடைந்தெடுத்த பொய் என்பது புலனாகிறது. 

           அனைத்து கள்ளர்களும் தங்களை 'தேவர்' என்று அழைத்து கொண்டது இல்லை. இன்னும் சொல்லப் போனால் சில வருடங்களுக்கு முன்பு 'தேவர்' என்பதை சாதியாக அறிவிக்க கோரிய போது, அதை கள்ளர்களின் ஒரு பிரிவினர் எதிர்த்தனர் என்பது தான் வரலாறு.

           மேலும் 'தேவி' என்ற 'தேவனின்' பெண்பாலுக்கு சூடாமணி நிகண்டு தரும் பதில் இதோ:
தேவி பெயர்
இல்லவள், உரிமை, பன்னி, குடும்பினி, இல், இல்லாள், வல்லவை, களம், தாரம், மனையாட்டி, மனை, விருந்தம், பாரி, வாழ்க்கைத்துணை, களத்திரம், காந்தை, காதலி, நாயகி
(Ref: http://www.thamizham.net/pezhi/sangam/nikandu02-u8.htm)

      'தேவி' என்பதற்கு 'குடும்பினி' என பொருள் கண்டுள்ளது சூடாமணி நிகண்டு. கள்ளத்தி,மறத்தி என்று அல்ல. அப்படியானால் 'குடும்பினி' யார்? தொடர்ந்து படியுங்கள்.
*குடும்பினி, s. The wife of a house holder, a mistress, a matron, the mother of a family, குடும்பத்தலைவி. Wils. p. 226. KUT'UMBINEE.

*குடும்பன், s. (fem. குடும்பி.) The title of a chief among the Paller people, பள்ளர்தலைவன்.


         ஆக குடும்பனின் மனைவிக்கு 'தேவி' என்று பொருள் கண்டுள்ளது.மேலும் குடும்பன் என்றால் 'பள்ளனின் தலைவன்' என்றும் அதே அகராதி தான் கூறுகிறது. 'தேவி' குடும்பி என்றால், 'தேவன்' யார் என்று சொல்லாமலேயே விளங்கும். 

       மேற்சொன்ன ஆதாரங்களில் இருந்து 'தேவர்' என்பது பட்டம் மட்டுமே என்றும், இடத்திற்கு தகுந்தவாறு அந்த பட்டம் யாருக்கு, எதற்கு கொடுக்கப் பட்டது என்று ஆராய வேண்டுமே ஒழிய, அது சாதி என்று பிதற்றுவது அழகல்ல.  

மேலே சொன்ன இதே கருத்தை தான் (முக்குல நபர்கள் தவிர) அனைவருமே கூறுகின்றனர் என்பதற்கு உதாரணங்கள்:


Wednesday, October 31, 2012

சோழர்களின் வரலாறு என்ற கட்டுரைக்கு எம் கேள்விகள் : (பாகம் 2 )

சோழர்களின்  வரலாறு என்ற கட்டுரைக்கு எம் கேள்விகள் : (பாகம் 2 )
http://www.usetamil.com/t643-topic

(அங்கே கேட்க வழி இல்லாததால் இங்கே கேட்கிறேன்)

============================
//சேர, சோழ ,பாண்டியர்கள் ஆகிய மூவருமே சகோதரர்கள் என்று கூறப்படுகின்றன. இது மரபு வழிச் செய்தி. வரலாற்று ஆதாரம் அற்றது.//

இந்த கட்டுரையை எழுதியர் அப்படி என்ன வரலாற்றை கரைத்து குடித்து விட்டு, கடையில் இப்படி ஒன்றும் இல்லை என்று கைவிரித்தார் என்று தெரியவில்லை. கீழே உள்ள சங்கரன் கோவில் கல்வெட்டை பாருங்கள்.

திருநெல்வேலி மாவட்டம் சங்கரநாயினார் கோவில் கோபுர வாசல் உள்புறம் கீழ்ப்பக்கம் உள்ள கல்வெட்டு

"

விசுவாவசு வருடம் வைகாசி மாதம் 14 நாள்
திங்கட்கிழமையும் உத்திராடமும் பெற்ற நாள்
தெய்வேந்திரக் குடும்பன் பலாத்துப்படி : முன்
துவாபர யுகத்தில் உக்கிரப் பெருவழுதியும்
சோழனும் சேரனும் உலகம் வறுமைப்பட்டு
இருக்கின்ற காலத்திலே தெய்வேந்திரன் பக்கல் மழை
கேட்கப் போனவிடத்திலே பகவானும் மனம்
மகிழ்ந்து இரும் என்ன சேரனும் சோழனும்
வணங்கியிருக்க பாண்டியன் தெய்வேந்திரனுடனே
கூடியிருக்க, தேவேந்திரனும் வரிசை செய்தாற்போல
கவடு நினைக்க. பாண்டியன் கோபித்து எழுந்து
தேவ கன்னிகை மக்கள் நாலு குடும்பத்தாரை
கைப்பிடியாய்ப் பிடித்துக் கொண்டு சென்னல்
விதையும், கன்னல் விதையும் (கதலி) விதையும்
பனைவிதையும் முதலான பல வித்தும் ஒரு ரிசபமும்
ஒரு சாவியும் கொண்டு பூமியில் வந்தான்
நால்வரில் முதல்வனுக்கு தேவேந்திரக் குடும்பப்
பட்டமும் கட்டி, மூன்று பேருக்கு வாரியன்,
அக்கசாலை, (இளந்தாரியன்) என்று வரிசைப்
பட்டமும் கட்டி ஒரு நாளையிலே 12000 கிணறு
வெட்டி வேளாண்மை கண்ட படியினாலே
ராஜாவும் மனம் மகிழ்ந்து வெள்ளானையும்
வெள்ளை வட்டக் குடையும் சேறாடியும் பகல் பந்தம்
பாவாடை ரெட்டைச் சிலம்பும் ரெட்டைக்
கொடுக்கும் நன்மைக்கு 16 பந்தக்காலும் துன்மைக்கு
2 தேரும் பஞ்சவன் விருந்தும் . . . . .18 மேளமும்
கட்டளையிட்டு நடக்கிற காலத்திலெ . . . . . ”
—- தென்னிந்திய கோயிற் சாசனங்கள்ஃ பாகம் 2, எண் 863ஃ பக்கம் 803








(கள்ளர் கூற்றுப்படி)
சேரன் மலையையும், காட்டியும் ஆண்டவன்,
சோழன் மருத நிலத்தை ஆண்டவன்,
பாண்டியன் நெய்தல் நிலத்தை ஆண்டவன் என்றால்

//உக்கிரப் பெருவழுதியும்
சோழனும் சேரனும் உலகம் வறுமைப்பட்டு
இருக்கின்ற காலத்திலே தெய்வேந்திரன் பக்கல் மழை
கேட்கப் போனவிடத்திலே பகவானும் மனம்
மகிழ்ந்து இரும் //

இந்த மூவரும் ,உழவர் தலைவனான 'தெய்வேந்திரக் குடும்பனிடம்' மழை வேண்டி நிற்பானேன்?. குடும்பன் வெட்டிய 12000 கிணறால் விவசாயம் செய்பவனுக்கு தான் உபயோகம். மீன் பிடிப்பவனுக்கும், மலையில் இருப்பவனுக்க்ம் மழை எதற்கு? கிணறு எதற்கு?
...............................................
(வன்னியர் கூற்றுப்படி)
மூவேந்தர்களுக்குள் எந்த உறவும் இல்லை என்றால்,

//சேரனும் சோழனும்
வணங்கியிருக்க பாண்டியன் தெய்வேந்திரனுடனே
கூடியிருக்க, //

ஒரு பொது பிரச்னைக்கு இவர்கள் ஒன்றாக வந்து வேண்டியது ஏன்? பாண்டியனுக்கு பிரச்சனை என்றால் சோழன் எதுக்கு வரணும்? வறட்சியினால் சோழனின் நிலம் வாடினால் சேரனுக்கு என்ன? ஒருவரை 'மன்னன்' என்றும், இன்னொருவனை 'கோ' என்று மட்டுமே வலராறு சுட்டி இருந்திருந்தால் கூட சிறு குழப்பம் வர வாய்ப்பு இருக்கிறது. ஆனால் மூவரையும் தமிழ் உலகம் 'வேந்தன்' என்று தானே பதிவு செய்கிறது? வயலும் வயல் சார்ந்த 'மருத' நில தலைவனையே வேந்தன் என்று தொல்காப்பியர் நிறுவி உள்ளார். எனவே மூவேந்தர்கள் மருத நில குடிகளே, மூவரும் ஒரே குடியை சேர்ந்தவர்களே....!!!


(குறிப்பு: பல காலம் ஒன்றாக இருந்த மூவேந்தர்களை சூழ்ச்சியால் பிரித்ததை மிகப் பெருமையாக சொல்லிக் கொள்ளும் கலிங்கத்து அரசனின் கல்வெட்டும் இங்கே விரைவில் பதிப்பிக்கப் படும்.)

சோழர்களின் வரலாறு என்ற கட்டுரைக்கு எம் கேள்விகள் : (பாகம் 1 )

சோழர்களின்  வரலாறு என்ற கட்டுரைக்கு எம் கேள்விகள் : (பாகம் 1 )
http://www.usetamil.com/t643-topic

(அங்கே கேட்க வழி இல்லாததால் இங்கே கேட்கிறேன்)

============================

//சோழர் என்ற பெயர் எவ்வாறு வந்தது என்று தெரியவில்லை//
அப்படி என்றால் வன்னியர்கள் 'சோழன்' என்ற பட்டங்களுக்கு உள்ள அர்த்தம் தெரியாமலேயே அதை இத்தனை நாளும் வைத்துகொண்டு இருக்கிறார்கள் என்று தானே அர்த்தம்?

பள் - பண்டு - பண்டைய - பண்டையம் (விவசாயம்) - பாண்டியன்
சோறு - சோர - சோழ
(மொழி ஞாயிறு தேவநேய பாவாணர்)

=> இப்படி சோழனும், பாண்டியனும் தங்களை பெயரை பட்டத்தை குறிக்கும் வேர் சொல்கள் 'விவசாயம்' என்று இருப்பானேன்?
=> 'சோழனையாவது' 'தமிழ் நாட்டின் நெற்களஞ்சியமாம் தஞ்சையை ஆண்டவன், ஊரு உலகத்துக்கே சோறு இட்டவன், அதனால் அவனின் வேர் சொல்' சோழன் என்று வருவதில் ஒரு அர்த்தம் இருக்கு. ஆனால் 'வன்னியரும்,கள்ளரும்' சொல்லும் 'பாண்டியன்' என்பவன் நெய்தல் நில மன்னனாக இருந்தால், அவனுடைய வேர் சொல்லும் விவசாயத்தை குறிப்பானேன்?
=> அட அவ்வளவு ஏங்க...? ஆங்கில அகராதியில் 'குடும்ப' தலைவனை குறிக்கும் husband என்ற சொல்லின் வேர் சொல்லே 'husbandary ' என்ற விவசாய சொல் தானே?
=> "சுழன்றும் ஏர் பின்னது உலகும்" என்று உலகில் இருக்கும் அனைத்து தொழில்களுக்கெல்லாம் 'உழவு' தொழிலே தலையானது என்று திருவள்ளுவர் சொல்வானேன்?


* பிராமணன் தான் உயர்ந்தவன் என்று சோழன் கருதி இருந்தால், அவனின் தொன்மமும் அதுவாகவே, வேதம் ஒதுபவனாகவே, பண்டிதனாகவே அல்லவா இருந்திருக்க வேண்டும்?
* போர் தொழிலே மிக உயர்ந்த தொழில் என்று எந்த தமிழ் இலக்கியங்களும் சொன்னதாக தெரியவில்லை. மூவேந்தர்களுக்கு சொந்தம் கொண்டாடும், போர் குடிகள், சத்ரியர்கள் என்று அழைத்து கொள்பவர்களும், ஏன் போர் தொழிலை சோழன் தனது ஆதி தொழிலாக கொள்ளவில்லை என்று என்னைக்காவது யோசித்தது உண்டா?


ஆக தொழிலாக இருக்கட்டும், சோழ, பாண்டிய, குடும்ப தலைவனாக இருந்தாலும் அனைவரும் விவசாயம் சார்ந்து, அதில் இருந்து தோன்றியவர்கலாகவே இருக்க முடியும். இதை சுருக்கமாக சொல்ல வேண்டுமென்றால்,

மூன்று + வேந்தன் = மூவேந்தன்.
'வேந்தன் மேய தீம்புனல் உலகும்' (தொல்காப்பியம்).

மருத நில தலைவனே வேந்தன், மூவேந்தர்களும் மருத நில குடிகளே என்று தொல்காப்பியரே தடம் பிடித்து காட்டுகிறார். எனவே சோழன் தமிழனாக இருக்கும் பட்சத்தில், அவனின் பூர்வீகம் தமிழ் மண் என்ற பட்சத்தில் அவனின் மூலம் 'விவசாயமே' என்பதில் எந்த சந்தேகமும் வேண்டாம்.
============================