Saturday, August 2, 2014

கரையாளர் மற்றும் கரையார் என்பவர் யார்?

ஏற்கனவே நாம் கரையாளர் மற்றும் கரையார் யார்? என்பதை விளக்கி நமது 'மள்ளர் ஆவணத்தில்' வெளியிட்டு இருந்தோம். அதைத் தெரிந்தும் நீ என்ன சொல்வது நாங்கள் எங்கள் வழியில் எப்போதும் போல் பொய் சொல்லிக் கொண்டே இருப்போம்! என்று சிலர் 'கரையாளப் பள்ளனை' சொந்தம் கொண்டாடி இருக்கிறார்கள்.

  கரையாளப் பள்ளன்

        மீன் வகைகளை மீனவ மக்களை விட அதிகம் பேசும், ஆய்ந்து நோக்கும் ஒரே இலக்கியம் 'பள்ளு இலக்கியமே'. (மீன் வகைகளை பேசும் அத்தனை பள்ளு பாடல்களும் விரைவில் இங்கே பின் இணைப்பாக பதிப்பிக்கப் படும்). இவ்வாறாக பள்ளர்களின் வாழ்வியலோடு மீன்கள் நெருக்கமான உறவுடையவைகளாக உள்ளன. ஏனெனில் பள்ளர்களின் வேளாண் தொழிலோடு தொடர்புடையது ஆறு, குளம், கண்மாய், கிணறு முதலிய நீர்நிலைகலாகும். மள்ளர்கள் நெல்லுக்கு நீர் பாய்ச்சும் போது வயல்களில் கயல்கள் விளையாடிய செய்தியை இலக்கியங்கள் பேசக் காணலாம். மருத நிலத்தில் உள்ள நீர் நிலைகளில் தோன்றும் மீன்களைப் பற்றி பாடியவர்கலேல்லாம் பள்ளர்களே. மீன் வகைகளைப் பற்றிய அறிவு பள்ளர்களிடம் இருந்ததென்பதைப் பள்ளுப் பாடல்கள் மூலம் அறியலாம்.(காண்க பின் இணைப்பு). பள்ளர்களே மீனினத்திற்க்குப் பெயர் சூட்டி வகைப்படுத்தியுள்ளனர் என்பதே மெய்மை வரலாறு. இன்றளவும் மருத நிலத்தில் பள்ளர்கள் மீனவர்களாகவும், வாழ்ந்து வருகின்றனர். பள்ளர்களும், பள்ளத்தியரும் குளங்களில் மீன் பிடிப்பதை நடப்பிலும் காணலாம். பள்ளர்களில் பெரும்பாலும் எல்லோரும் நீச்சல் தெரிந்தவர்களாகவும், மீன் பிடிக்கத் தெரிந்தவர்களாகவும், மீன் இறைச்சி உண்பவர்களாகவும் உள்ளனர் என்பது கண்கூடு. மருத நில மக்கள் உழவுத் தொழில் மட்டுமின்றி மீன் பிடிக்கும் தொழிலும் செய்துள்ளனர் என்பதை,


        "வானம் வேண்டா வறனில் வாழ்க்கை

          நோன் ஞாண் வினைஞர் கோளறிந்து ஈர்க்கும்

          மீன் முதிர் இலஞ்சிக் கலித்த தாமரை..." (அகநானூறு 186 : 1 )


என்னும் அகநானூற்றுச் செய்யுலடியின் மூலம் அறியலாம். இதனை அடியொற்றிப் பார்த்தால் பள்ளர்களுக்கும், மீன்களுக்குமான உறவை விளங்கிக் கொள்ளலாம்.


        கி.பி.9 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த திவாகர நிகண்டு, நெய்தல் நில மக்கட் பெயரினைப் பரதர்,நுளையர், கடலர்,வலையர் , சலவர், திமிலர் என்றும், நெய்தல் பெண்டிர் பெயரினை நுளைச்சியர், பரத்தியர், (நுரைக்) கடற்ப்பிணாக்கள் என்றும், நெய்தல் நிலத் தலைவன் பெயரினைக் கொங்கன், துறைவன், மெல்லன், புலம்பன், கடற்சேர்ப்பன் என்றும் இலக்கணபப் படுத்தியுள்ளது. இப்பெயர்கள் நெய்தல் நில மக்களான மீனவர்களின் குலம் சார்ந்தவையாகும். இதில் 'கரையார்' என்னும் மீனவச் சாதி பெயர் இடம் பெறவில்லை என்பது கவனிக்கத் தக்கதாகும். நெய்தல் நிலத்தில் பறந்து விரிந்து கிடக்கும் கடற்ப்பரப்பில் மீன் பிடிக்கும் மக்களுக்குப் 'பரதவர்' என்னும் பெயர் ஏற்ப்பட்டது. படகில் சென்று மீன் பிடித்தவர்களே படவர் - பரவர் என்றாயினர் எனக் கொள்வோரும் உளர். மருத நிலத்தில் ஆற்றங்கரையிலும், குளத்தங்கரையிலும், கண்மாய்க் கரையிலும் இருந்து மீன்பிடிக்கும் பள்ளர்களுக்குக் 'கரையார்' என்னும் பெயர் ஏற்பட்டது. 


         வேளாண்மைத் தொழிலுக்காக ஆறுகளுக்குக் கரைகண்ட பள்ளர்களே ஆற்றின் மீன்பிடித் தொழிலையும் மேற்கொண்டனர்.  மருதநிலமே கடை நிலம் எனப்பட்டது. எனவே பள்ளர்களுக்குக் 'கடையர்' என்னும் பெயரேட்பட்டது. அவ்வாறே கரையில் மீன்பிடிக்கக் கூடிய பள்ளர்களுக்குக்  'கரையார்' என்ற பெயர் ஏற்ப்பட்டது. நெய்தல் நில நாகரிகம், மருத நில நாகரிகம் தோன்றியதற்குப் பிறகே தோன்றியதென்பதற்கு, அது எல்லா நாகரிங்கங்களுக்கும் இறுதியில் பேசப் படுவதே சான்றாகும். ஆகக் கட்டுமரங்கள் மூலம் கடலுக்குச் சென்று மீன்பிடிக்கும் பழக்கம் மருத நில நாகரிகத்திர்க்குப் பின்னரே ஏற்ப்பட்டிருக்க வேண்டும். பள்ளர்களில் வங்கப் பள்ளர்,அளத்துப் பள்ளர் என்ற வகையினர் தூத்துக்குடிப் பகுதியில் வாழ்ந்து வருகின்றனர். வங்கம் என்றால் கப்பல்;கப்பல் கட்டக் கூடிய பள்ளர்கள் வங்கப் பள்ளர்கள் ஆயினர். அளம் என்றால் உப்பளத்தை குறிக்கும். உப்பளத்தில் பணியாற்றும் பள்ளர்கள் 'அளத்துப்பள்ளர்கள்' என்றாயினர். இவாகைப் பள்ளர்களின் முகாமையான தொழில் இன்றளவும் மீன்பிடித்தலேயாகும். வங்கப் பள்ளர், அளத்துப் பள்ளர், கரையாப் பள்ளர்  முதலிய பள்ளர் சாதி வகைகள் மருத நிலத்து நெல்லின் மக்களுக்கும், நெய்தல் நிலத்துக் கடலின் மக்களுக்கும் ஓர் இணைப்புப் பாலமாக விளங்கக் காணலாம். 


        கரையாளன், ஆற்றங்கரையான், குளத்தங்கரையான் எனக் பெயரிடும் பள்ளர்கள் நடுவே இன்றும் இருந்து வருகிறது. அய்யனார் கோயில்கள் ஆற்றங்கரையிலும், குளத்தங்கரையிலுமே அமைந்திருக்கும். ஐயனாரைக் குல தெய்வமாகப் பள்ளரும், கரையாரும் வழிபட்டு வருவதை கள ஆய்வில் காணமுடிகிறது. இம்மக்களின் இக்குல தெய்வ வழிபாடு - முன்னோர் வழிபாடு பள்ளர்களும், கரையார்களும் ஒரே குலம் என்பதை உறுதி செய்கிறது. 


"வீரக் கரையாள ராசாவும்
வீர மார்த்தாண்ட ராசாவும்
அண்ணன் தம்பி இருபேரும்
அசுவத்தில் ஏறலுற்றார்
பாண்டியமார் இருபேரும்
.........................................
நாற்பது வீட்டுப் பள்ளர்களை
நலமுடனே கூட்டிவந்தனர்"

    (பேராசிரியர் சு.சண்முக சுந்தரம், ஐந்து கதைப்பாடல், ப.12 ) எனப் பேராசிரியர் சு. சண்முகசுந்தரம்(மறவர்) தனது ஐந்து கதைப் பாடல் ஆய்வில் வீரக்கரையாள ராசா, வீரமார்த்தாண்ட ராசா என்னும் பாண்டிய வேந்தர்கள் ஆட்சி செய்த பாண்டிய அரசின் உயிர்நாடியாக விளங்கிய நாற்பது வீட்டுப் பள்ளர்களை அழைத்து வந்த செய்தியைப் பதிவு செய்துள்ளார். 


தி.நடராசன் தொகுத்த கதைப்பாடல்களில் பள்ளர்களின் வீர வரலாறு பேசப்படுகின்றது. அதில்


"தட்டானென்கின்ற கொட்டாப்புளி
சமர்த்தனுக் கொரு கையோலை
பள்ளக் குடும்பன் கரையாளன்
பாதனுக்கு மொரு கையோலை
ஆயிரத்து ஐநூறு ராணைவத்தாரும்
அன்புடன் வந்தார் பாஞ்சாலத்தில்"
.....................................................
"வடுகத் தட்டானொருவன்
வாசம் பெற்ற கொட்டாப்புளி
பள்ளக் குடும்பன் கரையாளன்
பாயும் புலிபோல பள்ளர்களும்
எல்லோரும் கூடி அளப்புகள் பேசி
யெட்டு நாளைக் குள்ளாக
பாளையங் கோட்டையில் வைத்து
நம்மாளை பட்டமும் கட்டியே
வைக்க வேண்டும்" 


    மேற்கண்ட கதைப்பாடல் பள்ளர் படைத் தலைவன் ஒருவனை 'பள்ளக் குடும்பன் கரையாளன்' என்கிறது. யாழ்ப்பாணத்திலும் ஐயனார் வழிபாடும், அண்ணமார் வழிபாடும் பள்ளருக்கும், கரையாருக்கும் உரியதாக விளங்கக் காணலாம்.


    சுப்பிரமணிய நாவலரால் இயற்றப்பட்ட திருவேட்டைநல்லூர் அய்யனார் பள்ளு செய்யுள் 44 இல் இடம் பெற்றுள்ள மலைக்குரிய தெய்வமான வானவனை - இந்திரனை மீனவன் எனக் குறிக்கும் அடிகள் வருமாறு:


        "மீனவன்செந் திருவேட்டை வானவன் நல்லூர்செழிக்க
        வேணமழை பெய்யும் நாளை காணும்
பள்ளீரே"


திருநெல்வேலி மாவட்டம், நாஞ்சான்குளத்தில் பள்ளர்கள் தங்களின் குல தெய்வமாக 'மாசானக் கரையான்' என்னும் தெய்வத்தை வழிபட்டு வருகின்றனர்.


விருதுநகர் மாவட்டம், மானூர் பள்ளர் -ஆசாரிமார் செப்பேட்டில் அக்கசாளைக் குடும்பர்களில்


        "அஞ்ஞப் பள்ளு, அச்சைப் பள்ளு, மங்கல நாட்டுப் பள்ளு, கோத்திரப் பள்ளு, பட்டனக்கரைப் பள்ளு" என்பதில் கரையார் என்ற பள்ளர் பிரிவும் இடம்பெறக் காணலாம். தவிர, அணைக்கரையார், காலான்கரையார், அக்கரைகண்டார், பாலக்கரைநாட்டார் உள்ளிட்ட பள்ளர் சாதி வகைகளும் இவ்விடத்தே நினைத்தற்கு உரியனவாகும்.

        பட்டினக் கரையார் - பள்ளருள் ஒரு வகையினர் (Pattinak Karaiyar - A sub-divisioin of the pallar caste)  என்கிறது. சென்னைப் பல்கலைக் கழக வெளியீடான 'தமிழ் லெக்சிகன்' அகராதி பக்கம் 346 . பட்டினம் என்றால் கடற்கரை ஊர் என்று பொருள். 


        இப்பட்டினக்கரையார் என்னும் பள்ளர்களில் ஒரு சாரார் மீன், கருவாடு, உப்பு வணிகத்தில் ஈடுபட்டுள்ளனர். இத்தோடு முத்துக் குளித்தலில் கிடைத்த முத்துகளை விற்பனை செய்யும் பொருட்டு, இவர்தம் வணிக வளர்ச்சி கடல்கடந்து சென்றது. பின்னர் பல்பொருள் வணிகத்தில் இறங்கிய இவர்கள் பொருளியல் மேம்பாடு அடைந்து அதனை அடியொற்றியே தங்களுக்குள் கொள்வினை கொடுப்பினையை ஏற்படுத்திக் கொண்டு தனிக் குமுகமாகவே உருவெடுத்தனர். இவர்களே இன்று நகரத்தார்களாக - நாட்டு கோட்டைச் செட்டியார்களாக அறியப் படுகின்றனர். பள்ளருக்கும் கரையாருக்கும் குல தெய்வமாக விளங்கும் ஐயனாரே நாட்டுக் கோட்டைச் செட்டியார்களுக்கு குல தெய்வமாகும். பின்னாளில் வணிகத்தில் ஈடுபட்ட பல்வேறு சாதிக் குழுக்களும் நகரத்தார்களாக நாட்டுக் கோட்டைச் செட்டியார்களாக உருவெடுத்தனர்.

Saturday, June 21, 2014

வாணாதிராயர்கள் என்பவர்கள் யார்?

வாணாதிராயர்கள் என்பவர்கள் யார்? என்ற இந்தக்கட்டுரையை ஆரம்பிக்கும் முன்பு 'வெட்டும்பெருமாள் பாண்டியர் யார்?' மற்றும் 'பாண்டியரை வீழ்த்திய வாணர்குலத்தவர்' என்ற நமது முந்தைய கட்டுரைகளுக்கு பதில் அளிக்கிறேன் பேர்வழி என்றரீதியில் "எப்பவும் உண்மையை மட்டுமே!" எழுதக்கூடிய ஒரு தளத்தில் நமக்கு கேட்ட கேள்வியில், 'வாணகோவரையன் சுத்தமல்லன்' என்ற பெயரை சுட்டிக்காட்டி 'சுத்தமல்லன்' என்ற பெயர் கொண்ட வாணாதிராயர் பள்ளனுக்கு எதிராக இருந்ததாக 14 ஆம் நூற்றாண்டைச் சார்ந்த ஒரு கல்வெட்டுச் செய்தியைக் காரணம் காட்டி ஒப்பாரி வைத்து இருந்தார் ஒரு அறிவாளி. வாணாதிராயர் என்பவர்கள் பள்ளனுக்கு எப்பவுமே எதிரிதான். அதில் மாற்றமில்லை. ஆனால், வாணாதிராயர் 'மல்லன்' என்று அழைக்கப்பட்டது எப்படி? என்பதுதான் அவர்களின் ஒப்பாரிக்கு காரணம். இதற்கு பதில் அளிப்பதற்கு முன்பு சோழ மன்னன் முதற் பராந்தகச் சோழனின் வெற்றிச் சிறப்பைப் பற்றிக் கூறும்போது, 'இவன் வாணர்களின் நாடாகிய வாணப்பாடியை வென்று,அதை சுங்க அரசனாகிய இரண்டாம் பிருதுவிபதிக்குக் கொடுத்தான். அது மட்டுமல்ல அவனுக்கு "வாணகோவரையன் பிருதுவிபதி" என்ற பட்டத்தையும் அளித்தான். இது வரலாறு தெரிந்தவர் மட்டும் 'உணர்ந்து' கொண்ட செய்தி. இங்கு சுங்க அரசன் வாணர்குலத்தவன் கிடையாது. ஆனால்,அவனுக்கு வாணர்களை வெற்றி கொண்டதன் அடையாளமாக "வாணகோவரையன்" என்ற பட்டம் முதல் பராந்தகனால் அளிக்கப்பட்டுள்ளது. இதேபோன்று ஒரு மல்லனுக்கு "வாணகோவரையன்" என்ற பட்டம் இருந்ததை வைத்து ஒப்பாரி வைத்தால் நாம் என்ன செய்வது! ஒரு வேளை இந்த 'மல்லன்' என்ற செய்தியை வைத்துத்தான் 'மள்ளன்' என்பவர் கீழ்நிலை விவசாயக்குடியாகிய பள்ளர், மற்றும் 'மல்லன்' என்பது எதோ ஒரு வீரக்குடி(?) என்று ஒரு அருமையான கட்டுரை எழுதினார்களோ!

அடுத்தது வாணாதிராயர் செய்திக்கு வருவோம், தமிழ் வரலாற்றில் இடைக்காலம் என்பது கி.பி.9 முதல் 13 ஆம் நூற்றாண்டு வரை உள்ள காலகட்டமாகும். இந்தக் காலகட்டத்தில் தமிழகத்தில் உள்ள சாதிகள் எவை எவை என்பதை கல்வெட்டில் கீழ்கண்டவாறு உள்ளது:

1.வெள்ளாளர்
2.பிராமணர்
3.கைக்கோளர்
4.செட்டி
5.மன்றாடி
6.இடையர்
7.குயவர்
8.பள்ளி
9.பறையர்
10.கம்மாளர்
11.சாலியர்
12.சாவர்ணா
13.சுருதிமான்
14.வாச்சியன்
15.ஈழச்சான்றான்
16.மணிக்கிராமம்
17.அதிரேசியர்
18.வேட்டுவர்
19.கள்ளர்
20.பட்டினவர்
21.தச்சன்
22.தட்டான்
23.வேட்கோ
24.குதிரைச்செட்டி
25.சங்கரப்பாடி
26.வளஞ்சியர்
27.திரையர்
28.வலையர்
29.இளமகன்
30.தருமாவாணியர்
31.கொங்கன்
32.நாவிதர்
(Noboru karashima, Y. Subbarayalu and Toru Matsui. A Concordance of the names in the Chola Inscriptions - 1979 ). இவர்கள் மட்டுந்தான் இடைக்கால சோழர் ஆட்சியின்போது தமிழகத்தில் இருந்த இனம்.

இப்போது வாணாதியார் என்போர் யார்? என்பதைப் பார்க்கலாம்.

மதுரைத் தல வரலாறு கூறுவது:
மதுரையில் பாண்டியர் ஆட்சி முடிவுற்று விசயநகர ஆட்சி ஏற்பட்டபோது இரண்டாம் கிருஸ்ணதேவராயன் பிரதிநிதி லக்கணநாயக்கன் காளையார்கோயிலில் இருந்த பாண்டியன் காமக்கிழத்தி அபிராமி என்ற தாசியின் மக்களாகிய 1.சுந்தரத்தோள் மாவலி வாணாதிராயர் 2.காளையார் சோமனார் 3.அஞ்சாதபெருமாள் 4.முத்தரசர் மற்றும் 5.திருமலை மாவலி வாணாதிராயர் இவர்களை மதுரைக்கு வரவழைத்து 'பாண்டியர்' என்று போலியாகப் பட்டம் கட்டியதாக மதுரைத் தல வரலாறு கூறும்.

மதுரை நாயக்கர் வரலாறு கண்ட பரந்தாமனார் கூறுவது:
மாவலிவாணாதிராயர் புராணத்தில் கூறப்படும் மாவலி சக்கரவர்த்தியின் வழியில் வந்தவர் எனக் கூறிக் கொண்டனர். இவர்கள் முதலில் கன்னட நாட்டில் இருந்தனர். பின்பு சிற்றூர் மாவட்டத்தின் மேற்குப்பகுதியிலும், வடஆற்காடு மாவட்டத்தின் வடமேற்குப் பகுதியிலும் இருந்தனர். இவர்கள் சாதவாகனப் பேரரசில் நில உரிமை பெற்று படை உதவி செய்யும் சிற்றரசர்களாக  ஆயினர். சாதவாகன அரசு வீழ்ச்சியுற்ற பின்பு காஞ்சிப் பல்லவரிடம் வந்து சேர்ந்தனர். கி.பி 10 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் முதலாம் பராந்தகச் சோழன் இவர்களது நாட்டைக் கைப்பற்றி சோழநாட்டில் சேர்த்துவிட்டதாலும், இவருள் ஒரு பகுதியினர் குண்டூர் மாவட்டம் சென்று வாழலாயினர். மற்றொரு பகுதியினர் தமிழகத்தின் தென்பெண்ணையாற்றங்கரைக்கு வந்து சேர்ந்து அங்கு வாணகப்பாடி என்ற நாட்டை நிறுவி ஆண்டனர். அதை மகராஜ்யம் என்றனர். தென்னாற்காடு, சேலம், திருச்சி மாவட்டங்களின் சில பகுதிகள் இதில் அடங்கும். இவர்கள் இராசராச சோழன், இராசேந்திர சோழன் அவர்களுக்குப் பின் வந்த சோழருக்குப் படை உதவி செய்தனர். மூன்றாம் குலோத்துங்கன் காலத்தில் பொன்பரப்பி வாணாதி வாண கோவரையன் புகழ் பெற்று விளங்கினான். சோழப்பேரரசு அழிவுற்று பாண்டியப் பேரரசு தோன்றிய கி.பி.14 ஆம் நூற்றாண்டில் பாண்டிய நாட்டிற்குள் புகுந்து சிற்றரசர் ஆயினர். இவர் தம்மை பாணர் என்றும் கூறுவர். தமிழ்ப்பாணர் வேறு, இவர் வேறு.

வெ.வேதாச்சலம் வாணாதிராயர் பற்றிக் கூறுவது (கல்வெட்டுக்களில் வாணாதிராயர்) :
கீழக்கோலார், கர்னூல் பகுதியில் இவர் அரசியல் வாழ்வு தொடங்கி இருந்தது. சாளுக்கியர், காஞ்சிப் பல்லவர், இராட்டிரகூடர், சோழர் முதலிய பேரரசுகளுக்கு இவர்கள் அடங்கி இருந்தார்கள். இவருள் ஒரு பகுதியினர் முதற் பராந்தகன் காலத்தில் வடக்கே குண்டூர், கிரிஸ்ணா ஆகிய இடங்கள் சென்று தனித்து ஆட்சி நடத்தினர். மற்றொரு பகுதியினர் பெண்ணைக் கரையில் இருந்து பாணப்பாடியில் சோழருக்கு கட்டுப்பட்டு ஆட்சி நடத்தினர்.

வெ.வேதாச்சலம் நூலுக்கு மதிப்புரை கண்ட ஏ.சுப்பராயலு கூறுவது:
வாணர் என்ற குறுநில மன்னர் கி.பி 5 ஆம் நூற்றாண்டு ஒட்டிய காலத்தில் தமிழகத்தின் வட எல்லையிலிருந்து நாளடைவில் தெற்கு நோக்கிப் பரவி பல்லவ, பாண்டிய, சோழ அரசுகளை அண்டி குறுநிலத்தலைவர்களாகவும், அரசு அலுவலர்களாகவும் இருந்துள்ளனர். இவ்வாணாதிராயர் சோழரின் கீழ் பணி செய்து அவர் வலி குன்றிய போது பாண்டியர் கீழ் சிற்றரசர் நிலை எய்து அவருக்குப் பின் மதுரை, புதுக்கோட்டை, இராமநாதபுரம் மாவட்டங்களில் விசயநகர அரசர்க்கு கீழ் பணிபுரிந்து, மதுரை நாயக்கர் அரசேற்கவும் அவரின் பாளையப்பட்டுக்களாக நியமனம் பெற்றதாக வெ.வேதாச்சலம் கூறுவார்'. என்று கூறுகிறார்.

வாணாதிராயர் மானாமதுரைப் பகுதியை ஆட்சி செய்த போது, கானாடு, கோனாடு வெள்ளாளர் இடையே கலகம் மூண்டது. அக்காலத்தில் கானாட்டு வெள்ளாளரால் கள்ளர் வரவழைக்கப்பட்டு, கலகத்தில் ஈடுபடுத்தப்பட்டதாகவும், கள்ளருக்கு வெள்ளாளர் வெகுமதி வழங்க வேண்டுமென்று வாணாதிராயர் உத்தரவிட்டதாகவும், இக்கலகத்தில் தோல்வி கண்ட வெள்ளாளர் கொங்கு நாடு சென்றதாகவும் வரலாறு கூறும். அதேபோன்று, தமிழ் வேந்தர் ஆட்சி வீழ்ச்சியுற்று விசயநகர ஆட்சி தமிழகத்தில் ஏற்பட்டவுடன் கன்னடிய, தெலுங்கு படைவீரர் இவர்களுடன் வாணாதிராயர் படையில் இருந்த படைவீரரும் பாண்டியருக்கு எதிராகப் போர்களில் ஈடுபடுத்தப்பட்டனர். பாளையப்பட்டுக்களில் தெலுங்கரும், வாணாதிராயரும் இடம் பெற்றனர். நாயக்க மன்னரின் கீழ் வாணாதிராயலிருந்து பாளையப்பட்டுக்களாக தேர்வு பெற்றவர் படைத்தலைவராயினர். இவ்வாறு  வேற்றிடங்களிலிருந்து தமிழகத்தில் குடியேறி படைத்தொழில் புரிந்த அனைவரும் 'லம்பகர்ணா' என்று தெலுங்கு நூல்களில் குறிப்பிடப்பட்டவர் ஆவர்.

Sunday, June 8, 2014

குருபூசை - உறவுக் குரலுக்கு உறவுக்கை

டிசம்பர் 2000 மள்ளர் மலர் இதழில் அட்டைப் படத்தில் 'குருபூசை எதன் குறியீடாகிறது' என்ற தலையங்கச் செய்திக்குப் பதிலாக செ.கதிரேசனை ஆசிரியராகக் கொண்டு வெளிவரும் மூ.மு.க மாத இதழான உறவுக்குரல் தமது சனவரி 2001 இதழில் கீழ்கண்ட விமர்சனத்தை வைக்கிறது.
" யாரையும் தரம் தாழ்ந்து விமர்சிக்கும் மள்ளர் மலருக்கு பதிலடி. டிசம்பர் 2000 மாத மள்ளர் மலர் இதழின் தலையங்கத்தில் பசும்பொன் முத்துராமலிங்கத்திற்கு தமிழக அரசு குருபூசை விழா எடுப்பது எந்த விதத்தில் நியாயம் ஆகும்? தமிழக அரசு ஆதிக்கங்களுக்கும் அக்கிரமங்களுக்கும் துணை போகிற அரசா?...இந்தக் குருபூசை எதைக் குறியீடாக்குகிறது? ஆதிக்கம், அராஜகம், அட்டூழியம், கொலை, கொள்ளை, சமூக விரோதச் செயல்கள், மனிதநேய விரோதச் செயல்கள் ஆகியவை ஆகும்....வ.உ.சிக்கு குருபூசை கொண்டாடினார்கள்,  இத்தனை ஆர்ப்பாட்டம் இல்லை. டாக்டர் அம்பேத்கருக்கு நடத்த புதிய தமிழகம் ஏற்பாடு செய்துள்ளது. உண்மைத் தியாகிகளின் குருபூசைகளைத் தமிழ்நாடு அரசு கண்டுகொள்ளவில்லை ஏனோ?" என்பதைச் சுட்டிக்காட்டி, ஏழு கேள்விகளை எழுப்பி மள்ளர் மலரின் பதிலைக் கேட்டுள்ளது. சகநண்பர்களாகிய உறவுக்குரலுக்கு பதில் அளிப்பது இரு சமுதாயங்களின் உறவுக்கு வழிவகுக்கும் என மள்ளர் மலர் நம்புகிறது.

          உறவுக் குரலின் கேள்வி 1: தமிழர் என்பதில் நம்பிக்கை கொண்ட மள்ளர் மலர் டாக்டர் அம்பேத்கர் (வட நாட்டவர்) பற்றிய அரசியல் ஆதிக்கம் தமிழகத்தில் பரவுவது குறித்த கருத்தை தெரிவிக்குமா?
         
                மள்ளர் மலரின் பதில்: டாக்டர் அம்பேதகர் அவர்கள் இந்தியா முழுமைக்கான, ஏன் உலகம் முழுவதும் உள்ள ஒடுக்கப்பட்ட மக்களுக்காக போராடியவர் ( உங்களுக்கும் சேர்த்துத்தான்). அவர் நேதாஜி, நேரு, காந்தி போல ஒரு மிகப்பெரிய தலைவர், சீர்திருத்தவாதி. அவர் எந்த நாட்டைச் சார்ந்தவராயினும் அவரது சித்தாந்தங்கள் புத்தர், ஏசு, நபிகள், கன்பூசியஸ் சித்தாந்தங்களைப் போல உலகம் முழுவதும் பரவும். நாம் தமிழர், அவர் மராட்டியர் என்பதில் முரன்பாடு இல்லை. தற்போது இந்தியர் என்பதில் ஒற்றுமை உள்ளது.

     உறவுக் குரலின் கேள்வி 2: தமிழகத்தில் அரசு காந்தி முதல் அம்பேத்கர் வரை வடநாட்டவர்களுக்கு பிறந்த நாள் கொண்டாடுவதிலும், மணிமண்டபம், சிலை வைப்பதிலும் உள்ள கருத்து என்ன?
  
               மள்ளர் மலரின் பதில்: காந்தி இந்திய நாட்டின் விடுதலைக்கு அஹிம்சை முறையில் போராடி வெற்றி கண்டவர். டாக்டர் அம்பேத்கர் இந்தியாவில் ஒடுக்கப்பட்ட மக்களும் சம உரிமை பெற்று விடுதலை பெற வேண்டும் என்று போராடி பல கோட்பாடுகளைத் தெரிந்து சொல்லி எழுச்சியூட்டியவர். அவர்களுடைய நினைவு என்றும் மக்களுக்கு எழுச்சியூட்டுபவை. டாக்டர் அம்பேத்காரும் இந்திய அரசியல் அமைப்புச் சட்டமும் கூறும் சமுத்துவம் இன்றும் இந்தியாவில் வரவில்லை. சமுத்துவ நிலையை எய்த அவர்களின் நினைவை புதுப்பித்துக் கொள்வது அவசியம். மணிமண்டபங்களும், சிலைகளும் அதற்குத் துணை புரிகின்றன. தமிழ் மூவேந்தர் மரபினரான தளபதி சுந்தரலிங்கக் குடும்பனார் போக்குவரத்துக் கழகத்தையும் சிலைகளையும் நீங்கள் எதிர்த்தது உங்களது குழப்ப சிந்தனையும் ஆதிக்க எண்ணமுமே காரணம்.

     உறவுக் குரலின் கேள்வி 3: வடநாட்டவரான அம்பேத்கர் பிறந்த நாளில் அனைத்து அரசியல் கட்சித் தலைவர்களும் அவரது சிலக்கு மாலை அணிவித்து மரியாதை செய்வதில் எந்தப் பிற்படுத்தப்பட்ட மக்களும் தடையாக இல்லாதபோது தமிழரான பசும்பொன் தேவரின் குருபூசைக்கு மட்டும் தாழ்த்தப்பட்டவர்களின் தலைவர்கள் என்று கூறிக்கொள்பவர்கள் விசனப்படுவது ஏன்?

            மள்ளர் மலரின் பதில்: முதலில் இந்திய அரசியல் சட்டமும், உலக மனிதநேயக் கோட்பாடுகளும் கூறுகின்ற "அனைத்து மக்களும் சமமானவர்கள்" என்பதை நீங்கள் திரும்ப திரும்ப கூறி உறுதி செய்து கொள்ள வேண்டும். தாழ்த்தப்பட்டவர், பிற்படுத்தப்பட்டவர், உயர்த்தப்பட்டவர் என்று யாரும் இல்லை. அனைவரும் சமமானவர்களே (மள்ளர் மலர் சனவரி 2001 பார்க்கவும்). அம்பேத்கர் ஒடுக்கப்பட்ட, பிற்படுத்தப்பட்ட, பெண்கள், மத சிறுபான்மையினர் ஆகிய அனைவரின் விடுதலைக்காக, முன்னேற்றத்திற்காகப் போராடிய உலக அளவிலான இந்தியத் தலைவர். பசும்பொன் முத்துராமலிங்கம் அவர்களோ, டாக்டர் அம்பேத்கர் பெரியார் காந்தி போன்றவர்கள் போராடிய சாதிய சமத்துவத்திற்கு எதிராகச் செயல்பட்டவர். கொலை, கொள்ளைகளுக்குக் காரணமானவர். நீங்கள் இப்போது "தாழ்த்தப்பட்டவர்" என்று திரும்ப திரும்ப கூறும் அளவுக்கு உங்கள் மூளையை தவறாகப் பதப்படுத்தியவர், பாடம் செய்தவர். முத்துராமலிங்கம் ஒரு சாதியத் தலைவர். ஒரு சாதிக்குள்ளே கூட ஒரு பிரிவினரின் தலைவராக அவரை மற்ற பிரிவினர் கருதுகின்றனர். அவரின் குறியீடு நீங்கள் மேலே சுட்டிக்காட்டிய குறியீடுதான். அது வளர்வது நாட்டிற்கு நல்லதல்ல. டாக்டர் அம்பேத்கரால் பலனடைந்த பிற்படுத்தப்பட்டோர் மற்றும் அவரின் நற்செயல்களில் மனம் கவரப்பட்ட அனைவரும் அவரைப் போற்றுகின்றனர். இது வரவேற்கத்தக்கது.

      உறவுக் குரலின் கேள்வி 4: தந்தைப் பெரியாரை தமிழ்ப் பகைவர் என்று கூறும் மள்ளர் மலர் வடநாட்டு அம்பேத்கரை தூக்கித் துதிபாடுவது என்ன நியாயம்.

                                            பதில்: டாக்டர் அம்பேத்கர் மள்ளர் என்னும் தேவேந்திரகுல வேளாளரின் தலைவர் அல்லர். ஏற்கனவே கூறியது போல் நேதாஜி, காந்தி, நேரு போல அவர் ஒரு இந்திய தேசியத் தலைவர். அவர் தமிழர் அல்லர். அவரது கொள்கைகளும், செயல்பாடுகளும் எங்களுக்குத் தீமை செய்யவில்லை. ஆனால், கன்னடியரான பெரியாரின் பொய்யான செய்திகள், நெல் நாகரிகத்தைத் தோற்றுவித்த தமிழ் மூவேந்தர் மரபினரான மள்ளர் என்னும் தேவேந்திர குல வேளாளர்களைத் தீண்டாமைச் சகதியில் தள்ளியது. பட்டியல் சாதிகளில் (செட்டியூல்டு சாதிகள்) தள்ளியது. நீங்கள் கூட எங்களைத் 'தாழ்த்தப்பட்டவர்கள்' என்று கூறுமளவிற்குத் தீங்கு விளைவித்துள்ளது. மேலும் தமிழர் என்ற பெருமையை அழிக்கும்படி பெரியார் 'தமிழ் காட்டுமிராண்டி மொழி, தமிழர்கள் முட்டாள்கள், தமிழர்களில் தலைவனாகும் தகுதி யாருக்கும் இல்லை' என்பன போன்ற பேச்சுக்கள் தமிழரைத் தாழ்த்தியது. பார்ப்பனரை ஒழிக்கப் புறப்பட்ட பெரியார் உங்களைப் போன்ற புதிய பிராமணர்களை உருவாக்கியுள்ளது தமிழருக்கு தீங்கு விளைவித்துள்ளது.

                              கேள்வி 5:அரசியல் ஆதிக்கச் சாதி என்னும் நிலைக்கு உயர்ந்து கல்வி, வேலைவாய்ப்பு, தொழில்துறை, அரசியல் இடஒதுக்கீட்டின் மூலம் முன்னேறிவிட்டோமெனும் "திமிர்த்தனம்" யாரையும் தரம் தாழ்த்தி விமர்சிக்க முடியுமெனும் நிலைக்கு மள்ளர் மலரைத் தள்ளுகிறதா?

                                     பதில்: செட்யூல்டு சாதிகளுக்கான ஒதுக்கீடு 18 சதவீதம். இதில் தமிழ்நாட்டின் மக்கள் தொகையில் ஆறில் ஒரு பங்கு உள்ள தேவேந்திரர்களுக்கு 1 அல்லது 2 சதவீதமே கிடைத்துள்ளது. மக்கள் தொகை விகிதாச்சாரப்படி உரிய பங்கு (16%) கிடைக்கவில்லை. மற்றவர்கள் சுரண்டி சாப்பிடுகின்றனர். பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 50 சதவீத ஒதுக்கீடுகள் உள்ளது. அதில் நீங்கள் உங்கள் மக்கள் தொகை விகிதாசாரத்திற்கும் அதிகமாகவே பலன் பெற்று வருகிறீர்கள். இந்த ஒதுக்கீடுகளில் தேவேந்திரர்களுக்குப் பலன் இல்லை. இழிவுதான் மிச்சம். தேவேந்திரகுல வேளாளர்கள் தங்களை செட்யூல்டு சாதிகள் பட்டியலிருந்து நீக்கி வேறு பட்டியலில் சேர்க்க வேண்டும் என அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர். இது நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டிய செய்தி.
மூத்த தமிழ்க்குடியும், நெல் நாகரிகத்தைத்  தோற்றுவித்தவரும், முத்தமிழை வளர்த்தவரும், தமிழ் மூவேந்தர் மரபினருமான மள்ளர் எனும் தேவேந்திரகுல வேளாளர்களின் அடையாளத்தை அழித்து "தாழ்த்தப்பட்டவர்" என்று கூறும் "திமிர்த்தனம்" எங்களுக்கு இல்லை. ஆதிக்கமும், அடாவடித்தனமும், அக்கிரமும் செய்யும் திமிர்த்தனம் எங்களுக்கு இல்லை. இவைகள் உங்களுக்கு இருப்பதனாலேயே இந்தக் கேள்வி வருகிறது. எல்லா மனிதர்களும் சமமானவர்களே என்ற மனிதநேயப் பண்பாடு கொண்டவர்கள் மள்ளர் எனும் தேவேந்திரகுல வேளாளர்கள். தயை செய்து இந்த தவறான எண்ணத்தை உங்கள் மனதிலிருந்து நீக்கி விடுங்கள். அடைக்கலம் தருதல், அக்கிரமங்களையும் அடாவடித்தனத்தையும் எதிர்க்கும் பண்பு கொண்டவர் மள்ளர். இவற்றில் நீங்களும் வந்தால் உங்களுடனும் சேர்ந்து தமிழர் பண்பாடுகளைக் காக்க செயல்படவே விரும்புகிறோம்.

                               கேள்வி 6: "வன்கொடுமை ஒழிப்புச் சட்டம்" எனும் போர்வையில் கொலை, கொள்ளை, அதிகார வர்க்கத்தை மிரட்டுதல், அரசியல் கட்சிகளில் ஆதிக்கம் செலுத்துதல் போன்ற சமூக விரோதச் செயல்களில் ஈடுபடும் மள்ளர் மலரின் உறவுகளுக்கு பாதுகாப்பளிப்பதற்காக இப்படியெல்லாம் எழுதும் துணிவு வந்துவிட்டதா?

                                      பதில்: மள்ளர் எனும் தேவேந்திரகுல வேளாளர் வன்கொடுமை ஒழிப்புச் சட்டத்தைப் பயன்படுத்தியதில்லை என்கிற செய்தியை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும். தமிழ்நாட்டில் இந்த வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் 10 பேர் கூட இதுவரை தண்டிக்கப்படவில்லை. தமிழக முதலமைச்சர் சட்டப்பேரவையிலேயே 100-க்கும் மேற்பட்ட ஊர்களில் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் தண்டிக்கப்பட வேண்டிய குற்றங்களான "இரட்டை டம்ளர் முறை" இருப்பதாகக் கூறியுள்ளார். குற்றவாளிகள் தண்டிக்கப்படவேண்டியது நியாயமானதுதான். ஆதிக்க எண்ணமும், தாழ்த்தப்பட்டவர், பிற்படுத்தப்பட்டவர், உயர்த்தப்பட்டவர் என்ற மனுநீதிக் கொள்கைகளையும் கொண்டவர்கள்தான் இந்த சட்டத்தை எதிர்ப்பார்கள்.
நீங்கள் துணிவு என்று எதைக் கூறுகிறிர்கள் என்று புரியவில்லை. அநீதிகளையும், அடக்குமுறைகளையும், சுரண்டல்களையும், சமூகவிரோதச் செயல்களை, திருட்டு, கொலை, கொள்ளைகளையும் எதிர்க்கின்ற துணிவு தமிழ் மூவேந்தர் மரபினரும் தமிழரின் நற்பண்புகளுக்கும், பண்பாட்டுக்கும், பெருமைக்கும், சிறப்புக்கும் காரணமான 'அருந்திறல் வீரரும் பெருந்திறல் உழவரும் திண்ணியோருமான மள்ளர் என்னும் தேவேந்திரகுல வேளாளர்களுக்கு ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பிருந்தே இருந்து வருகிறது. தமிழகச் சிறைகளில் உள்ள கொலை, கொள்ளை, சாராயக் குற்றவாளிகளை சாதிவாரி கணக்கிட்டால் உங்கள் பொய்மையும், தேவேந்திரர்களின் நற்பண்பும் தெளிவாகத் தெரியும்.

                              கேள்வி 7: கொலைக் குற்றவாளிப் பட்டியலில் டாக்டர் கிருஸ்ணசாமி கைது செய்யத் துணிவில்லாத தமிழகக் காவல்துறையைப் பார்த்த பிறகும் தமிழக அரசு யாருக்காக தலை வணங்குகிறது என்று மள்ளர் மலருக்குத் தெரியாதா?

                                    பதில்: பொன்.பரமகுரு காவல்துறைத் தலைவராக இருந்த காலத்தில் தகுதியற்றவர்களும், சாதிவெறி பிடித்தவர்களும் நிறையவே காவல்துறையில் புகுத்தப்பட்டு விட்டனர். ஆதிக்க எண்ணமும், சாதி துவேசமும் கொண்ட அவர்களுக்கு டாக்டர் கிருஸ்ணசாமி மீது கொலைக்குற்றம் சாட்டுவது புதுமையல்ல. ஜோடனை செய்த குற்றப்பதிவு என்பதை உணர்ந்த தமிழக அரசும், உயர் காவல்துறை அதிகாரிகளும் அவரைக் கைது செய்யவில்லை. நீதிமன்றமும் அவருக்கு ஜாமீனில் வெளிவர அனுமதித்துள்ளது. தற்போதைய தமிழக அரசு தேவேந்திரரகளுக்கு எதிரானது. உங்களைப் போல, தேவேந்திரர் என்ற அடையாளத்தை அளித்து தாழ்த்தப்பட்டவர், ஆதிதிராவிடர் என்று வேறு சாதிகளுடன் சேர்த்து அழைப்பது கண்டிக்கத்தக்கது.
தேவேந்திரரைத் தாழ்தப்பட்டவர் என்று கூறுவதில் உஙகளுக்கு ஒரு தனி இனபம் கிடைக்கும் போலிருக்கிறது. ஆனால். அது உங்களைச் சமநீதி, சமூகநீதிகளுக்கு எதிரானவராகவும், சனநாயக விரோதியாகவும் காட்டுகிறது என்பதை நீங்கள் உணர வேண்டும்.
மள்ளர் என்னும் தேவேந்திரகுல வேளாளர்களின் தமிழ் மூவேந்தர் மரபை, நெல் நாகரிக மரபை, இலக்கிய மரபை, மருதநில மரபை, பல பல்கலைக்கழக பேராசிரியர்களும், துணை வேந்தர்களும் அறிஞர்களும் ஏற்றுக் கூறியுள்ளார்கள். அவர்களைப் பற்றி 20-க்கும் மேற்பட்ட வரலாறு மற்றும் பண்பாட்டு ஆய்வு நூல்கள் வெளிவந்துள்ளன. நீங்கள் அவற்றை படிக்காமல் அல்லது படித்துவிட்டுத் தெரியாததுபோல் பேசுவது அழகல்ல.
இவ்வளவுக்கும் பிறகும் பழையதை மறந்து மனிதநேயத்துடன் உங்களைச் சமமானவர்களாகக் கருதி எங்கள் உறவுக் கரங்களை நீட்டுகிறோம். பற்றிக்கொள்வதும் விட்டுவிடுவதும் உங்கள் விருப்பம்.

நன்றி மள்ளர் மலர்