பாண்டிய மன்னர்களின் ஆட்சியில் அவர்களுக்குத் திறை செழுத்தி ஆங்காங்கே மாவலி வாணராயர் என்ற வாணர்குலத்தவர் குறுநில மன்னர்களாக ஆட்சி செய்தனர். அவ்வாறே, சேலம் ஜில்லாவின் கீழ்ப் பகுதியும்,தென்னார்காடு ஜில்லாவின் மேற்பகுதியும் தன்னகத்தே கொண்ட உள்நாடு ஒன்று பாண்டியரின் கீழ் இருந்த வாணராயர் என்ற குறுநில மன்னர்களின் ஆட்சியில் இருந்தது. கி.பி 13 நூற்றாண்டின் பிற்பகுதியில் குறுநில மன்னர்களின் நாடெல்லாம் பாண்டிய மன்னனின் ஆட்சியின் கீழ் வந்த நிலையில், வாணர்குலத்தவரில் சிலர் பாண்டியன் ஆட்சியில் அரசியல் தலைவர்களாகவும், படைவீரர்களாகவும் அதிகாரம் பெற்றனர். பிள்ளை மாவலி வாணராயன் என்பான் பாண்டியன் ஆட்சியில் இருந்த வாணர்குல அரசியல் தலைவனாவான். புதுக்கோட்டையிலுள்ள 'கோனாடு' இவன் மேற்பார்வையில் இருந்தது. இதேபோன்று, இராமனாதபுரம் ஜில்லாவில் உள்ள கேரள சிங்க 'வளநாடும்' ஒரு வாணர்தலைவனின் கண்காணிப்பில் இருந்தது அறியத்தக்கது ( The Pandyan Kingdom by K.A.Nilakanda Sastrigal M.A Page:187).
பாண்டிய வேந்தரிடம் படைத்தலைவர்களாக நிலவிய இவ்வாணராயர் பாண்டியர் அயலார் படையெழுச்சினால் ஆற்றல் இழந்து இன்னல் எய்திய காலத்தில், அதை தமக்குச் சாதகமாகக் கொண்டு, பாண்டியரை வீழ்த்தி, தாம் சுயேட்சையாகத் தனியாக அரசு புரியத் தொடங்கினர். மேலும், பாண்டிய மன்னர் திருநெல்வேலி ஜில்லாவிற்குச் சென்று அங்கு குறுநில மன்னராக ஆட்சி புரிய இவர்களே காரணமாயினர். எனவே, பாண்டிய மன்னர்களின் வீழ்ச்சிக்கு இந்த வாணர்குலத்தவரின் அடாத செயல்களே காரணமாகும். இந்த வாணராயரது கல்வெட்டுக்கள் தேவிபட்டிணம், திருப்புல்லாணி, காளையார்கோயில்களில் உள்ளன. "புவனேசுவீரன்" எனப் பொறிக்கப்பட்ட இந்த வாணர்களது செப்புக்காசுகள் இராமநாதபுரம் மாவட்டத்தில் அழகங்குளம், பெரியபட்டிணம் ஆகிய ஊர்களில் அகழ்வாய்வில் கிடைத்துள்ளன. "மைக்கருங்கண் மாதரார் மனங்கவர்ந்த மாரவேள், மதுரை வீரகஞ்சுகன்" என்பது ஒரு வாணராயர் பற்றிய தனிப்பாடலின் தொடராகும் (பெருந்தொகை-மதுரைத் தமிழ்ச் சங்கப்பதிப்பு,1932 பாடல் எண்.1008).
இராமநாதபுரம் ஜில்லாவிலுள்ள ஸ்ரீவில்லிப்புத்தூரில் கி.பி1453 ஆண்டில் வரையப்பெற்றுள்ள ஒரு கல்வெட்டு 'மகாபலி வாணத்தரையர் சீர்மையான மதுரை மண்டலம்' என்று கூறுகிறது ( Travancore Archaeological Series Vol. 1. Page 46; Ins. 577 of 1926. க ). மேலும், பாண்டியருக்குத் திறை செழுத்தி வந்த குறுநில மன்னர்களான மாவலிவாணராயர் தம்மை 'மதுராபுரி நாயகன்(மதுரைராயன்)' எனவும், 'பாண்டியன் குலாந்தகன்' எனவும் கி.பி 1483ல் சிறபித்துக் கூறிக் கொள்வதைப் புதுக்கோட்டை நாட்டில் நெக்கோணம் என்ற ஊரிலுள்ள ஒரு கல்வெட்டில் காணலாம் (Inscriptions of The Pudukkottai State. No. 672 ). ஆகவே, 15 ஆம் நூற்றாண்டில் மதுரையிலிருந்து அரசு செழுத்தியவர்கள் வாணராயர் என்பது நன்கு தெளிவாகிறது. முன்பே சொன்னது போல் பாண்டியர் அயலார் படையெடுப்பால் மிக்க தளர்ச்சியெய்திருந்த காலத்தில் வாணராயர்கள் பாண்டியர்களைப் போரில் வென்று மதுரையைக் கைப்பற்றிக் கொண்டதோடு, அதனைச் சூழ்ந்துள்ள நாட்டைத் தாமே சுயேட்சையாக ஆட்சி புரியவும் தொடங்கினர். வாணராயர் 'பாண்டியர் குலாந்தகன்' என்று தம்மைச் சிறப்பித்துக் கூறிக்கொள்வது ஒன்றே, பாண்டியரிடம் அவர்கள் கொண்ட பெரும்பகை நன்கு விளங்கும்.
மேலும், புதுக்கோட்டை நாட்டில் குடுமியான் மலையிலுள்ள இரண்டு கல்வெட்டுக்கள், 'பாண்டியர்கள் வாணராயரிடம் தோல்வியுற்று வேற்றிடம் சென்றனர்' என்று வழியுறுத்துகின்றன (Inscriptions of The Pudukkottai State. No. 653 and 678 ).
மதுரை மாநகரை விட்டு நீங்கிய பாண்டியர்கள் தென்பாண்டி நாட்டை அடைந்து அங்கு அரசு செழுத்தி வந்தனர் என்பது பல்வேறு கல்வெட்டுச் செய்திகளால் உறுதியாகிறது. இவர்களின் ஆளுகையும் அங்கு 17 ஆம் நூற்றாண்டின் இறுதி வரை நடைபெற்றது அறியப்படுகிறது.