Sunday, December 23, 2012

பட்டம்,சாதி குறித்த கள்ளர்களின் அறியாமை


கள்ளர்கள் கூறும் தங்களது வரலாறு பற்றிய ஒரு செய்தி
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
கோடான கோடி கல்களும்..ஓலைகளும்..தளங்களும்..புராணங்களும்..தமிழ் பாரம்பரிய செல்களும் நீங்காமல் நிழலாடாமல் தேவர் என்று கள்ளர்,மறவர்,அகமுடையார்களை சொல்லுகின்றனமேலும் அறிக 
"கோனார்" என்றோரு சாதி இருக்கிறது அதை சாதிப்படியலில் தேடிபார்த்தால் இருக்காது..ஏன்னெனில் "கோனார்" என்பது பட்டம் அதற்க்கு உரித்தானவர்கள் யாதவர்,இடையர்.. 
வெறும் "பிள்ளை" சாதிப்படியலில் தேடிபார்த்தால் இருக்காது..ஏன்னெனில் "பிள்ளை" என்பது பட்டம் அதற்க்கு உரித்தானவர்கள் வெள்ளாளர்கள்,சேனைத்தலைவர் மற்றும் சில பிரிவினர் வெறும் "முதலியார்" என்பது பட்டம் அதன் இனம் என்பது செங்குந்தர் மற்றும் சில,வெறும் "முதலியார்" என்று சாதிப்பட்டியலில் இருக்காது . 
எல்லா தமிழ சாதிகளும் தனக்கென்று ஒரு பட்டத்தை கொண்டுள்ளன..அது தமிழர் கலச்சாரவிதி. 
தேவர் என்பது பட்டம் அதற்கு உரித்தானவர்கள் கள்ளர்,மறவர் மற்றும் அகமுடையார் இனத்தவரே..புரிந்தால் சரி
------------------------------------------------------------------------------------------------------------------------------------------
 ஸ்வஸ்திஸ்ரீ் திருமகள் போல பெருநிலச் செல்வியுந் தனக்கேயுரிமை பூண்டமை மனக்கொளக் காந்தளூர்ச் சாலைக் களமறூத்தருளி வேங்கை நாடும் கங்கைபாடியும் நுளம்பபாடியும் தடிகை பாடியும் குடமலை நாடும் கொல்லமும் கலிங்கமும் எண்டிசை புகழ்தர ஈழ மண்டலமும் இரட்டபாடி ஏழரை இலக்கமும் திண்டிறல் வென்றி தண்டால் கொண்டதன் பொழில் வளர் ஊழியுள் எல்லா யாண்டிலும் தொழுதகை விளங்கும் யாண்டே செழிஞரை தேசுகொள் ஸ்ரீ்கோவிராஜராஜகேசரி பந்மரான ஸ்ரீராஜராஜ தேவர்..ithukku enna artham ..raja rajacholan pallaro
------------------------------------------------------------------------------------------------------------------------------------------
பள்ளர் இனத்திற்கு ஒரு வேண்டுகோள்
நீங்க ஆண்ட பரம்பரை என்று எவ்வளவு தான் சொன்னாலும் நாங்கள் ஏற்கப்போவது இல்லை ..
சும்மா நேரத்தை வீனடிக்காமல் போய் பொழப்ப பாருங்க ......
இங்கே இணையத்தில் விவாதம் செய்வதால் பயன் ஒன்றும் இல்லை ...
நீங்கள் ஒற்றுமையை விரும்பினால் நேரில் சந்திப்போம்
அப்போ வந்து இந்த வீர வசனங்களை பேசுங்க ........
நீங்கள் அரசாண்ட இனம் என்றால் அரசாங்கம் உங்களுக்கு கொடுக்கும் சலுகைகளை வேண்டாம் என்று சொல்லிட்டு வாங்க நாம விவாதம் செய்யலாம் ...
இதுபோல் இணையத்தில் எத்தனையோ விவாதங்களில் நாங்கள் கலந்து இருக்கோம் ....பதில் அளித்து பயன் ஒன்றும் இல்லை .....
இதோடு இந்த விவாதத்தை விடுங்கள் .......நன்றி
------------------------------------------------------------------------------------------------------------------------------------------
இதற்கு பதில் சொல்லுங்கள் நழுவி ஓடாதீர்கள்.
1. சோழர் பரம்பரை ஆந்திரா வரைக்கும் விரிந்திருந்தது. நீங்களோ உங்கள் ஆட்களோ அங்கு இருக்கிறீர்களா?
2. எந்த மன்னர் பரம்பரையாவது உங்களைப் போல தீண்டத்தகாதவர்கள் ஆனார்களா? நீங்கள் எப்படி ஆனீர்கள்?
3. எஸ்சி, தலித், மள்ளர், பள்ளர், தேவேந்திரர், பட்டியல் இனம்னு எத்தன முகம் உங்களுக்கு? உங்க முகம் எது என்று ஊருக்கு வெளிப்படையாக எடுத்துச் சொல்ல தைரியம் இருக்கா?
4. என்னுடைய சுவரில் பாருங்கள் ஜான், பசுபதி பாண்டியன், திருமா, அதியமான், கிருஷ்ணசாமி எல்லாரும் ஒன்றாக போஸ் கொடுக்கிறார்கள். அவர்கள் உங்கள் சொந்தமா இருந்தால் எப்படி நீங்க மன்னர் பரம்பரை?
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@


மள்ளரின் மறுப்புரை:
   கோனார் என்ற பட்டம் இடையர் சாதியைச் சார்ந்தவர்கள் மட்டும் முன்பிருந்து வைத்துக் கொண்டது.
   பிள்ளை மற்றும் முதலியார் பட்டம் தற்கால வெள்ளாளர் என்போர் மட்டும் வைத்துக்கொண்டது.
   ஆனால், ‘தேவர் என்ற பட்டம் அப்படிக் கிடையாது. இது முந்தைய காலத்தில் கடவுள், தமிழ்வேந்தர் மற்றும் தேவகுருமார் ஆகியோருக்கு மரியாதைக்குறிய பட்டமாக இருந்தது. கோனார் மற்றும் பிள்ளை போன்று ஒரு குறிப்பிட்ட சாதிக்கான பட்டமாக அது இல்லை. தமிழ்வேந்தர்கள் வீழ்ச்சிக் காலத்தில் கண்டவர்கள் எல்லாம் அந்த ‘தேவர் பட்டத்தைப் பயன்படுத்த ஆரம்பித்தனர். அதனால், தமிழ்வேந்தர்கள் பின்னால் அந்த தேவர் பட்டம் போட்டுக்கொள்வதை விட்டுவிட்டனர். அதன்பின் அந்நியர் ஆட்சிகாலத்தில் சேதுபதிகள் (தற்கால மறவர்) தம்மை தேவர் என்று சொல்லிக் கொண்டனர். அதன்பின் படிப்படியாக தம்மைப் போலியாக தமிழ்வேந்தர் பரம்பரை என்று காட்டிக்கொள்ளும் பொருட்டு, கள்ளர், மறவர் மற்றும் அகமுடையார் என்று சொல்லக்கூடிய நீங்கள் உங்களை ‘தேவர் என்பதாகச் நகைப்புக்குரிய செயலை செய்து கொண்டு இருக்கிறீர்கள்.


    பள்ளர்கள் ஆண்டபரம்பரை என்பது வரலாறு. அதை நீங்கள் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்பது அவசியம் இல்லை. சுருக்கமாகச் சொல்வதென்றால், கள்ளர் மற்றும் மறவர் என்போர் வடக்கிலிருந்து தமிழகத்தில் புகுந்த கொள்ளைக்கூட்டம் என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அந்தக்கூட்டத்தின் அட்டூழியத்தை எதிர்த்து ஒடுக்குகின்ற  நாங்கள் யாராக இருக்கமுடியும்? மன்னர் பரம்பரைதானே! அது உண்மை என்பது உங்களுக்கே தெரிந்த ஒன்றுதான். இப்பொழுது உங்களது புலம்பல் எல்லாம் கீழே விழுந்தும் மீசையில் மண் ஒட்டவில்லை என்ற கதைதான். இன்னும் உங்களை விவாதத்தில் புரட்டி எடுக்க நாங்கள் தயாராகத்தான் இருக்கிறோம். ஏனென்றால், உண்மை எங்கள் பக்கத்தில் உள்ளது.
    தற்கால அரசமைப்பில், அரசாங்கம் மற்ற இனத்திற்குப் போன்று எங்களுக்கும் இட ஒதுக்கீடு போன்ற எங்களுக்கான உரிமையைத்தான் கொடுத்துள்ளது. அதை சலுகை என்று சொல்லி விட்டுவிடச் சொல்பவர்கள் முதலில் தங்களுக்கு இடஒதுக்கீடு தேவையில்லை என்று சொல்லிவிட்டு வந்து எங்களுக்குப் புத்தி சொல்லவேண்டும்.
   சென்ற வாரம் கேள்விப்பட்ட செய்தி, அரசாங்கம் 2 இலட்சம் ரூபாய்வரை வருமானம் உள்ள அனைத்து பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கும் பொறியியல் கல்வி இலவசம் என்ற அறிவிப்பை வெளியிட்டு உள்ளது. இதன் அர்த்தம் என்ன என்பதை சலுகை என்று சொல்பவர்கள் உணர்ந்து புரிந்து கொள்ளவேண்டும்.
1. முதல் கேள்விக்குப் பதில்: “தற்காலகட்டத்தில் இது முட்டாள்தனமான கேள்வி
2. இரண்டாவது கேள்விக்குப் பதில்: பள்ளன் தீண்டத்தகாதவனாக இருந்ததை உன்னால் நிரூபிக்க முடியுமா? தீண்டத்தகாததற்கான வரமுறைகள் என்ன என்று புரிந்து அதன்பின்பு கேள்வி கேட்கப் பழகிக் கொள்.
3. மூன்றாவது கேள்விக்குப் பதில்: எஸ்.சி மற்றும் பட்டியல் இனம் இரண்டும் ஒன்றுதான். இதை வேறுபடுத்திப் பார்த்துக் கொண்டு எங்களை சிறுமைப் படுத்துவது உங்களது சின்னத்தனம். முன்பு அரிசன் என்று சொல்லி எங்களை சிறுமைப்படுத்தி வந்தீர்களே! அதன் மாற்று வடிவம்தான், முற்போக்கு சிந்தனையாளர்கள் என்று சொல்லிக் கொள்கின்ற, ஊரைக் கெடுக்கின்ற சில உத்தமர்கள் சொல்கின்ற, இந்த ‘தலித் என்ற வார்த்தை. உண்மையில் இது எங்களுக்குப் பொருந்தாத, சிலர் (உங்களைப் போன்று) எங்கள் மீது திணிக்கின்ற ஒரு வார்த்தை. மற்றபடி நாங்கள் வேந்தர்குடி என்பதால் தேவேந்திரகுலத்தான். மள்ளர் மற்றும் பள்ளர் என்பது எங்களது சாதியின் ஒரே அர்த்தம் கொண்ட இருவடிவம்தான்.
4. நான்காவது கேள்விக்குப் பதில்: அரசியல் என்ற அமைப்பில் பிற 
இனத்தைச் சார்ந்தவர்களுடன் எங்கள் இனத்தைச் சார்ந்தவர்கள் சேர்ந்து போஸ் கொடுத்தால் நாங்கள் மன்னர் பரம்பரை இல்லை என்று சொல்வது முட்டாள்களின் வாதம். 

(எமது துணை கேள்வி):'பருத்தி வீரன்' கதை உண்மையாமே? குறவ பெண்ணுக்கும், மறவ ஆணுக்கும் பிறந்தவராமே அவர்? கள்ளர்கள் சோழ நாட்டை ஆண்டபோது ,குறவர்கள் சேர நாட்டை ஆண்டிருப்பார்களோ என்னவோ....? உங்களின் மண உறவை விளக்குவீர்களா?

சோழர்கள் திருடர்களா? ஒருபோதும் இல்லை


ராஜ ராஜனை சொந்தம் கொண்டாடும் கள்ளர்கள்
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
ராஜராஜசோழத்தேவரை எவரெல்லாமோ தனது இனமாக கண்மூடித்தனமாக
உரிமைகொண்டாடும் வேளையிலே இந்த கல்வெட்டு ஆதாரம் அனைவருக்கும் 
உண்மையை உணர்த்தும். கள்ளர்குல வேளிர்களான (பார்க்கவ குலம்) மலையமான் மற்றும் பாரி இருவரின் மரபணுக்களை தாய் வழி மரபாகவும் கள்ளர்குல சோழர்களின் இரத்தத்தை தந்தை வழி மரபாகவும் கொண்ட உடையார் ஸ்ரீ இராஜராஜசோழத்தேவர் கள்ளர் மரபினரென தெற்றென விளங்குகிறதல்லவா.
------------------------------------------------------------------------------------------------------------------------------------------
கள்ளர், மறவர், அகமுடையார் சேர்ந்துதான் முக்குலத்தோர். இவர்கள் வேறு வேறு ஆட்கள் அல்ல; சேர சோழ பாண்டிய மன்னர்கள் வெவ்வேறானாலும் தமிழ் சத்ரிய வம்சத்தைச் சேர்ந்தவர்கள்தான். அதே போல் கொங்கு பெல்டில் நீங்களும் பல்லவரான வன்னியர்களும் குறுநில மன்னர்களான முத்தரையர்களும் யாதவரும் உடையார்களும் தமிழகத்தின் வெவ்வேறு பகுதிகளில் ஆண்டு வந்தனர். நாம் வெவ்வேறு நிலம், வெவேறு வம்சம் என்றாலும் சத்ரியர் குலம்தானே. 
கள்ளர்கள் முஸ்லீம்களாலும் பிற அந்நியர்களாலும் தங்கள் ஆட்சியை இழந்தபோது மறைந்து வாழ ஆரம்பித்தனர். சின்ன சின்ன கலகங்கள் செய்தனர். தங்கள் இனத்தைக் காப்பாற்ற திருட்டிலும் ஈடுபட்டனர். என்னைக்குமே மன்னர் வம்சங்கள் பிறரால் வெல்லப்பட்டால் மறைந்திருந்து வாழ்வர். கலகங்களிலும் ஈடுபடுவர் என்பது தெரிந்ததுதானே. கள்ளர், மறவர், அகமுடையார் மட்டுமல்ல கடலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் வாழ்ந்த வன்னியர்கள் உள்ளிட்ட 98 சாதிகளும் குற்றப் பரம்பரையினராக முத்திரை குத்தப்பட்டனர். ஆனால் முக்குலத்தோரே இதனால் அதிக அளவு பாதிக்கப்பட்டனர். காரணம் பூலித்தேவன், மருதுபாண்டியர், மயிலப்பன் சேர்வை, வேலு நாச்சியார் என முக்குலத்தை சேர்ந்தவர்கள் பிரிட்டாஷாருக்கு எதிராக கிளர்ச்சி செய்ததற்காகவே. நேதாஜியின் ஜாதியான போஸ் ஜாதியும் கூட கொல்கத்தாவில் குற்றப் பரம்பரையினர்தான்.
------------------------------------------------------------------------------------------------------------------------------------------
"சோழரின் கீழ் தென்னகம்" எனும் கட்டுரையில் கட்டுரையாளர் கி.இரா.சங்கரன் எழுதுகிறார்நீண்ட கட்டுரையிலிருந்து சில பகுதிகள் தென்னிந்திய வரலாற்றாய்வினை இருமுறைகளில் அறிஞர்கள் மேற்கொண்டு வருகின்றனர். குத்துமதிப்பு ஆய்வுமுறை (டட ஒf ரன்டொம் சம்ப்லெ) குவியல்முறை ஆய்வு (ஃஉஅன்டிடடிவெ மெட்கொட்). இவ்விரு முறைகளையும் பின்பற்றிச் சோழர் ஆட்சி பற்றி ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன "ஊரார், நாட்டார், பெரிய நாட்டார் என்ற கட்டுரை சோழர் காலத்தின் சமூக மாற்றத்தினை விளக்குகிறது. 
ஊரார் பொதுவாக நிலவுடைமை யுள்ள வெள்ளாளர் ஆவர். இது வரலாற்று உண்மை. எனினும், பேராசிரியரின் ஆய்வு வரண்ட பகுதி யான புதுக்கோட்டை வட்டாரத்தின் விரையாச் சிலை என்ற ஊரின் போர்க்குலத்தவரான மறவரும், அரச மக்களும் (கள்ளரும்) ஊராராக எழுந்துள்ளனர் என்பதனை 13ஆம் நூற்றாண்டின் கல்வெட்டு அடிப்படையில் விளக்குகிறது.
இதனைக் கள்ளர், மறவர், கணத்ததோர் அகம்படியர் மெள்ள மெள்ள வெள்ளாளர் ஆவர் என்ற சொலவடையினை மெய்ப்பிப்பதாக அமைகிறது. இதனை feudalism from the below என்ற கொசாம்பியின் பார்வையில் காண வேண்டும். இது ஒருவகையான சமூக மாற்றம். புதுக்கோட்டையின் அன்னவாசல், இலுப்பூர் பகுதிகளில் இருந்துவந்த அம்பலக்காரர்களே பின்னாட்களில் முஸ்லிம்களாக மாறினர் என்ற செய்தியும் உண்டு. அங்கு வெள்ளையப்ப ராவுத்தர், சீனியப்ப ராவுத்தர் என்ற பெயர்கள் வழக்கில் உண்டு. இப்படி இவ்வட்டாரம் அடிக்கடி சமூக மாற்றத்தினைப் பெற்றுள்ளது." 
"பத்தாம் நூற்றாண்டிற்குப் பிறகு சபையாரும், ஊராரும் இணைந்து செயற்படவில்லை. சபையார் பதினோராம் நூற்றாண்டிற்குப் பிறகு தம் ஆதிக்கத் தினை இழந்தனர்;
------------------------------------------------------------------------------------------------------------------------------------------
நான்காம் காலகட்டத்தில்தான் மீள எழுந்தனர். பேராசிரியரின் கூற்றுப்படி சோழ அரசினைத் தாங்கி நிற்கும் கால்களாக அமைந்த நாடு நீர் கிடைக்கும் வளமைக்கு ஏற்ப பரப்பளவில் சிறிதாகவோ, பெரிதாகவோ அமைந்திருக்கும். நாட்டார்களின் இயக்கம் பெரும்பாலும் விளிம்பு நிலப்பகுதிகளிலேயும், புதுக்கோட்டை போன்ற வரண்ட நிலப்பகுதியிலும் அதிகாரம் பெற்றிருந்தது. நாட்டார்களுக்குச் சோழ அரசின் மையப்பகுதியில் செல்வாக்கு இல்லை. காலம் செல்லச் செல்ல நாடு அமைப்பு தம் தனித்தன்மையினை இழந்து பல இனக்குழுக்களுக்கும் வாழ்வாதாரமாக அமைந் திருந்தது. தெற்கில் போர்க்குலத்தவரான கள்ளர், மறவர் ஊரார் எனவும் நாட்டார் எனவும் வேளாண் மைக்குத் திரும்ப வடக்கின் போர்க் குலத்தவரான பள்ளியர், ஸ்ரீகோபாலர் என்ற ஆயர்குலத்தவரும் பெரிய நாட்டார் என்ற தொணியில் வேளாண் மைக்குத் திரும்பினர். ஒவ்வோர் கட்டுரையும் இப்படியான சமூக மாற்றத்தினைப் பதிவு செய்கிறது." 
ஜார்ஜ் டபிள்யூ ஸ்பென்ஸர், கென்னத்.ஆர் ஹால் இருவரும் சோழர் பிரதேசத்தில் சீரற்ற நிலையில் பரவிக் கிடந்த கல்வெட்டுகளை உதாரணம் காட்டினர். நாடு அமைப்புகளின் மாறாத தன்மையே சோழர் அரசின் கூறாக்க நிலைக்குக் காரணம் என்று ஸ்டெயின் கருதினார். நாட்டிற்குள்ளேயே நடந்த அகமணமுறையே காரணம் என்றும் கருதினார். 
(நாடு என்ற அமைப்பு முறை எந்த இனத்திடம் இன்ரும் நடைமுறையில் உள்ளது என்பது நாடு அறியும்) 
இதற்கு கடுங்கோன் பாண்டியன் எனும் புனைப்பெயரில் இருக்கும் கடுங்கோல்மால் தாரை தாரையாக வழிந்த கண்ணீரை துடைத்துக்கொண்டே எழுதிய பின்னுட்டம் 
"சோழர்கள் ஒருபோதும் திருடியது கிடையாதுதிருடர்கள் (கள்ளர்) ஒருபோதும் சோழர்களாக இருந்ததுதும் கிடையாதுஎம் தமிழ் மண்ணிலேயே எம்மக்கள் (தமிழர்) வரலாறு மறைக்கப்படும் அவல நிலையிலேயே இன்னும் இம்மண் உள்ளது…. கள்வர்களிடம் இருந்தும் பகைவர்களிடம் இருந்தும் மக்களைக் காக்கவே அரசு. ஆனால் இங்கு திருடர்களே அரசகுடிகளாக பெரும் பொய்யைச் சொல்லியிருப்பது தமிழினத்திற்க்கே பேரவலம் அசிங்கம்இப்படிப் பட்ட தமிழினப் பகைவர்களின் இது போன்ற அடியாட்களால்தான் தமிழர் மண் இன்னும் தமிழினப் பகைவர்களால் ஆளப்பட்டு வருகிறது…"
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@

மள்ளரின் மறுப்புரை:
     மலையமான் திருமுடிக்காரி மற்றும் வேள் பாரி ஆகிய இருவரும் வேளிர் என்பது அனைவருக்கும் தெரியும். ஆனால், அவர்கள் கள்ளர் வேளிர் என்றும்,சோழர்கள் கள்ளர் என்றும் எந்தக் கல்வெட்டுக்களிலும் இல்லை. இது அப்பட்டமான பொய் என்று எல்லாருக்கும் தெரிந்த விசயம்தான். திரும்பத் திரும்ப ‘தேவர் என்ற பட்டத்தைக் கொண்டு சோழர்களை கள்ளர் என்று சொல்வது முட்டாள்களின் சொல் மற்றும் முட்டாள்களின் சிந்தனை என்றே கொள்ளமுடியும்.

    மதுரைப் பகுதியிலுள்ள பிறமலைக்கள்ளர் என்போர் முஸ்லீம்களிலிருந்து மாறியவர் என்பதற்கு ஏற்கனவே ஆதாரம் கொடுக்கப்பட்டுள்ளது. எனவே, கள்ளர்கள் முஸ்லீம்களால் பாதிப்படைந்தனர் என்று சொல்வது தவறு.

    அரசபரம்பரை மறைந்து வாழ்ந்த காலத்தில் தங்கள் இனத்தைக் காப்பாற்ற ‘திருடினர் என்று சப்பைக்கட்டுக் கட்டுவது அரச வம்சத்தைக் கேவலப்படுத்தும் செயல்.

    13 ஆம் நூற்றாண்டுக்குப் பின் ஊராராக மற்றும் நாட்டாராக கள்ளர், மறவர் மற்றும் அகமுடையார் சமூகம் மாற்றமடைந்தது என்று சொன்னால் அதற்கு முன்பு அவர்கள் ஊரார் மற்றும் நாட்டார் இல்லை என்பதுதான் அர்த்தம். இதைத்தான்
கள்ளர், மறவர், கணத்ததோர் அகம்படியர் மெள்ள மெள்ள வெள்ளாளர் முதலி என்று சொன்னார் என்ற பழமொழி மெய்ப்பிக்கிறது.

   13 ஆம் நூற்றாண்டு என்பது தமிழ் வேந்தர்கள் அந்நியர்களால் வீழ்ச்சி அடையத் தொடங்கிய காலகட்டம். அதற்கு முன்பு சங்க காலத்திலிருந்து ஊரார் மற்றும் நாட்டார் என்போர் தமிழ்வேந்தர்குடியான மள்ளர் குடியே. தற்போதுள்ள ‘நாடு போன்ற அமைப்பு வேந்தர் காலத்தில் இல்லை. ஊர்க்குடும்பு  இருந்தது.

Saturday, December 22, 2012

காளையார் கோவில் பள்ளனுக்கே சொந்தம்

பள்ளர்களின் கோவில் உரிமை என்ற கட்டுரைகளுக்கு பதில் சொல்கிறேன் பேர்வழி என்று தான்தோன்றி தனமாக கைக்கு வந்ததை எழுதி தள்ளும் கள்ளரின் ஒரு சில வார்த்தைகள் தாம் இவை. 

@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
@மேகநாதன் முக்குலத்து புலி: திரும்பிய பக்கம் எல்லாம் எங்களுக்கும்(கள்ளர்களுக்கும்) கோவில் மரியாதை உள்ளது. ஒரு உதாரணமாக மருது பாண்டியர்கள் கட்டிய
கோவில்களில் காளையார் கோவில் போதுமா ?? ஒன்றா இரண்டா சொல்ல ஓராயிரம் கோவில்கள் என் பாட்டன்களுக்கே சொந்தமாக இரண்டு கோவில்கள்
இருக்கு ..அட போங்கப்பா
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
மள்ளரின் மறுப்புரை:
      என்ன காளையார் கோயிலைக் கட்டியது மருது சேர்வைக்காரர்களா? இப்படிச் சொல்ல கள்ளர்களுக்கு அசிங்கமா இல்லையா?. என் பாட்டனுக்கு,மள்ளனுக்கு கோயில்  கட்ட நீங்கள் யார்? இது எப்படி இருக்கிறது என்றால், இராமேஸ்வரம் கோயிலைக் கட்டியது மறவர் (கிழவன் சேதுபதி) என்று சொல்வது போலும், மீனாட்சியம்மன் கோயிலைக் கட்டியது நாயக்கர் (திருமலை) என்று சொல்வது போலும், தஞ்சை பெரிய கோயிலைக் கட்டியது மராட்டியர் (போஸ்லே) என்று சொல்வது போலும் மற்றும் சிதம்பரம் நடராஜர் கோயிலைக் கட்டியது தெலுங்கு பாளையக்காரர் (பிச்சாவரம் சமீன்தார்) என்று சொல்வது போலும் இருக்கிறது நீங்கள் சொல்லக்கூடிய கதை.
    உண்மையில், காளையார் கோயில் என்பது சங்க காலப் பாண்டிய மன்னர்களால் கட்டப்பட்டது. சங்க காலத்தில் இதன் உண்மையான பெயர் ‘காளீஸ்வரர் என்பதாகும். ஆரம்பத்தில் இந்த இடம் ‘கானப்பேர் என்றே அழைக்கப்பட்டது. கி.பி 9 ஆம் நூற்றாண்டில் சுந்தரமூர்த்தி நாயனார் இதில் குடிகொண்ட எனது(பள்ளனின்) பாட்டனை ‘காளை என்று பாடியதால் காளையார் என்று மாறியது. இதுதான் காளையார் கோயில் என்று பெயர் வந்த கதை. சங்க காலத்தில் பாண்டியர்களால் கட்டப்பட்ட இந்தக் கோயிலுக்கும், 17 ஆம் நூற்றாண்டுக்குப் பிந்திய காலத்தில் இங்கு இருந்த அந்நிய பாளையக்காரரான முத்துவடுகநாதன் மற்றும் அவரது சேவைக்காரர்களான மருது சகோதரர்களுக்கும் என்ன சம்மந்தம்? எப்படி மீனாட்சியம்மன் கோயிலைக் கட்டியது திருமலை நாயக்கன் இல்லையோ அதுபோல் காளையார் கோயிலைக் கட்டியது முத்துவடுகநாதன் மற்றும் மருது சேவைக்காரர் கிடையாது.
    அந்நியர் ஆட்சிகாலத்தில் கோயில்கள் அனைத்தும் அந்தந்தப் பகுதி சமஸ்தானத்தில் இணைக்கப்பட்டுப் பராமரிக்கப்பட்டது என்பதற்காக, அந்த சமஸ்தானதிபதி கட்டினார் என்று சொன்னால் இதைவிட பைத்தியக்காரத்தனமான பேச்சு வேறு எதுவும் இருக்க முடியாது.
     தெலுங்கன் (வீரபாண்டிய) கெட்டிப்பொம்மு மாதிரி பெயரில் (மருது) பாண்டியர் என்று இப்போது சேர்த்துக் கொண்டு, தங்களைப் பாண்டியர் பரம்பரை போல் நினைத்துக் கொண்டு பேசுவது, அவர்களுக்கு முன்பு காளையார் கோயில் பகுதியில் இருந்த அபிராமி என்ற தாசி மகன்கள் தங்களைப் பாண்டியர் என்று சொல்லிக் கொண்டதைவிட ரொம்பக் கேவலமாக இருக்கிறது.
கானப்பேர் என்று சங்க காலத்தில் அறியப்பட்ட காளையார் கோயில் பற்றிய புறநானூற்றுப் பாடல்:

".....அருங்குறும்பு உடுத்த கானப்பேர் எயில்
கருங்கைக் கொல்லன் செந்தீ மாட்டிய..."(புறம் 21:6-7)
கானப் பேரெயில் கடந்த உக்கிரப்பெருவழுதி பற்றி மூலங்கிழார் பாடியது.

Saturday, December 15, 2012

மதுரைத் தெப்பத் திருவிழா தலைவன் யார்?

      (குறிப்பு: கீழே உள்ள கருத்து (கள்ளர் திரு.மேகநாதன் எழுதியது & குமரன் சுப்பையா) மதுரை மீனாட்சி கோயிலில் பள்ளர்களுக்கு உள்ள பரிவட்ட முறையையும், தெப்பத் திருவிழாவின் வரலாறையும்  விமர்சித்து மிகவும் நாகரிகமான(?) முறையில் எழுதப்பட்டது. அவருடைய கருத்துக்கு எமது பதில் மறுப்பை இங்கே யாம் பதிவு செய்துள்ளோம்.)


      @மேகநாதன் முக்குலத்து புலி (said):
-----------------------------------------------------------------

   பதினேழாம் நூற்றாண்டில் தான் மாரியம்மன் தெப்பக்குளம் அமைக்கப்பட்டது அதுவும் குளமாக வடிவமைக்கப்படவில்லை. திருமலை நாயக்கன் புதிய கோட்டை அமைப்பதற்க்கு தேவையான மண் எடுப்பதற்காக தோண்டப்பட்ட பள்ளம். மதுரை நகரில் இருந்து தொலைவில் இருந்த பகுதியில் இப்பள்ளம் தோண்டப்பட்டது.(இப்போதே அது ஊருக்கு ஒதுக்குபுறமாக உள்ளது) கோட்டை அமைத்த பிறகும் பல ஆண்டுகளாக இப்பள்ளம் அப்படியே இருந்தது... ....எப்பொழுதும் மன்னர்கள் புதிய திட்டங்களை ஆரம்பிக்கும் முன் பலியிடுவது வழக்கம்(சில விஷயங்கள் வரலாற்றில் எழுதப்படாது)...எனவே அப்போதும் பலியிடல் நடந்தது உண்மை...பிறகு அஸ்திவாரம் மட்டும் அமைக்கப்பட்ட கட்டிடமும், ஆழ தோண்டபட்ட பள்ளங்களும் அரசனுக்கு மட்டும் அல்ல குடிகளுக்கே உகந்தது அல்ல என்பது மன்னனுக்கு உரைக்கப்பட்டு பள்ளத்தில் நீர் நிரப்பும் கால்வாய்கள் அமைக்கப்பட்டன..இப்போதும் அப்போதும் எப்போதும் தெப்பக்குளம் அருகில் உள்ள அனுப்பனாடி பள்ளர்கள் வாழும் சேரி...தமிழர்களின் வழிபாடு முறையில் நீரில் சாமி இறங்கும் போதும், குதிரையில் சாமி செல்லும் பொதும் எதிரே கெட்ட சக்திகள் எதிர்படும் என்பது காலம் காலமாக இருந்து வரும் நம்பிக்கை ...எனவே தான் எல்லா சாமி ஊர்வலங்களிலும் முன்னே பறையர்கள் பறையடித்து செல்வதும் வழக்கம் .எனவே கெட்ட சக்திகள் எதிர்பட்டாலும் இந்த நல்ல சக்திகளை ( போனா பரவாயில்லை ) அழிக்கட்டும் என கடை பிடிக்க பட்ட முறைகள்.அதுபோன்ற பலியிடுதல் தான் இந்த பழக்கம்.ஆனாலும் இவனுக சொல்றது போல மரியாதை எல்லாம் இல்லை...கரையில் பள்ள இனத்தவன் நிற்பான் ...அவனை குளத்திற்குள் இறக்கி விடுவார்கள் அவன் திரும்பி வந்தால் ஒரு மாலை ஒரு தேங்காய் ஒரு வெத்தலை குடுத்து போயிட்டு வாடா தம்பின்னு அனுப்பிருவாங்க ( பலியாட்டுக்கு மஞ்ச தண்ணி ஊத்துரோம்ல ).கவனிக்க இந்த தெப்ப திருவிழாவில் பறையடிக்க படுவதில்லை அதுதான் கெட்ட சக்திகள் எதிர்படுதானு இவனுகள வச்சு சோதன பண்ணிறோம்ல. காலை இரு முறை சாமி தெப்பத்தில் வரும்.(டெஸ்டிங் லாம் முடுஞ்சுரும் ) மாலை ஒரு முறை சாமி ஊர்வலம் வரும்.அப்போது தான் மன்னர் கலந்து கொள்வார்.ஒவ்வொரு ஜனவரி பிப்ரவரிக்கு இடைப்பட்ட சித்ரா பவுர்ணமில இது நடக்கும் .மீனாட்சி அம்மன் கோவிலுக்கும் இந்த தெப்பகுளத்துக்கும் 5 கிலோமீட்டர் தூரம் இருக்கும் ...மதுரை மக்கள் இந்த குளத்தை வண்டியூர் மாரியம்மன் தெப்பகுளம் என்று தான் சொல்வார்கள் ....உங்க முகரைல முள்ள வெட்டி சாத்த மீனாட்சி அம்மன் கோவிலுக்கும் மாரியம்மன் கோவில் தெப்ப குளத்துக்கும் என்னடா சம்பந்தம் .....

இந்தப்பின்னூட்டத்தை எழுதிய பதருக்கு மள்ளரின் மறுப்புரை:
இதில் சொல்லப்பட்ட இரண்டு முட்டாள்தனமான செய்திகள்
1.விழா நடப்பதற்கு முன்பு பலியிடுதல் என்று சொல்வது
2.பறை அடிப்பது தீய சக்தியை விரட்ட என்று சொல்வது
     இந்த தெப்பத் திருவிழாவில் பலியிடுதலை உறுதிபடுத்தக்கூடிய நிகழ்வோ, கெட்ட ஆவியை தடுக்கும் பொருட்டு முன்னால் செல்லக்கூடிய நிகழ்வோ எதுவும் நடைபெறுவது இல்லை. இது பரிவட்டம் கட்டி முதல்மரியாதை செய்யும் நிகழ்வு மட்டுமே. அது எதற்கு என்பது கீழே விளக்கப்பட்டுள்ளது. பரிவட்டம் கட்டி முதல்மரியாதை செய்தலை பலியிடுதல் என்று ஒருவர் சொன்னால், அதைச் சொல்பவர் உண்மையில் மனநிலை பாதிக்கப்பட்டவர் என்றுதான் அர்த்தம்!
     பறை அடித்தல் என்பது பண்டைய தமிழ் சமூகத்தில் தமிழ்மூத்தகுடியான பள்ளனை மகிழ்வூட்டும் பொருட்டு அடிக்கப்பட்ட இசை எழுப்புதலே ஆகும். இப்படி பலவிதத்தில் மகிழ்விக்கப்பட்ட பள்ளனே சங்க இலக்கியங்களில் ‘மகிழ்நன்என்றும் அழைக்கப்படுகிறான். இது சங்க இலக்கியம் படித்தவருக்குப் புரியும். சரி, பறை ஏன் கோயில் திருவிழாவின்போது அடிக்கப்படுகிறது? புரியவில்லையா? இன்று தமிழ்கடவுள் என்று காட்டப்படுகின்ற அனைத்தும், முன்னால் தமிழ்த் தலைகுடியான பள்ளனே. முன்னோர் வழிபாடு என்பதுதான் தமிழர் வழிபாட்டுமுறை. அதனால்தான் பள்ளன் சாமி ஆடுவதும் அதற்கு அருளூட்ட பறை ஒலி எழுப்புதலும். அப்போது அனைத்தும் மக்களும், பள்ளன் சாமி ஆடும்போது கும்பிட்டு விழுந்து திருநீர் பெறும் வழக்கமாக இருக்கிறது. அதனடிப்படையில்தான் அனைத்துக் கோயில்களிலும் பள்ளனுக்கே முதல்மரியாதை. சொக்கநாதர் முன்னால் பாண்டிய மன்னனான சுந்தரேசுவரபாண்டிய பள்ளன். அவனது ‘பள்ளிப்படை கோயிலே மதுரையில் உள்ள மீனாட்சியம்மன் கோயிலில் உள்ள லிங்கம். மீனாட்சி என்பது முன்னால் பாண்டிய அரசியான ‘தடாதகை மள்ளத்தியார் இவரது வம்சாவழியினரான பள்ளர்கள் இன்னும் மதுரைப் பக்கத்தில் இருக்கிறார்கள். (காண்க: மதுரை வரலாறு)

மதுரை தெப்பத் திருவிழா மற்றும் கதிர் அறுப்பு விழாவின் வரலாற்று சுருக்கம்:
    "மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் தை மாதத்தில், தை பூசத்திற்கு முதல்நாள் கதிர் அறுப்புத் திருவிழா நடக்கிறது. இதற்காக பள்ளனான சுந்தரேசுவரரும், பள்ளத்தியான தடாதகைப் பிராட்டியும் மீனாட்சி அம்மன் கோயிலிருந்து புறப்பட்டு அனுப்பானடிக்கு அருகே மருதநிலப் பகுதியான சிந்தாமணி (முன்பு இது வயல்பகுதியாக இருந்த இடம். இப்போது இப்பகுதியில் அதிக கட்டிடங்கள் உருவாகிவிட்டன) என்ற பகுதிக்கு வருகை தருகிறார்கள். இந்த நிலப்பகுதியானது ‘கிருதுமால் என்ற ஆற்றின் கரையில் இருந்தது. தற்காலத்தில் இந்த ஆறு மறைந்துவிட்ட நிலையில், மதுரையின் உட்பகுதியில் மட்டும் இந்த ஆற்றின் சில பகுதிகள் இன்றும் உள்ளது. சிந்தாமணி என்ற பகுதியில் வைகை நதியின் கிளைநதியான இந்த கிருதுமால் நதியின் முதல் மடை அமைந்துள்ளது. அதன் வழியாக வரும் நீரில் விளைந்த நெல்லை அறுவடை செய்யும் நிகழ்வே விழாவாகிறது. 

    மீனாட்சி அறுவடை செய்யும் வயல் அனுப்பானடியைச் சேர்ந்த மடைவாரியர் குடும்பத்திற்கு மீனாட்சி அம்மன் கோயிலில் இருந்து கொடுக்கப்பட்டது. இந்த வயலை மடைவாரியர் குடும்பத்தினர் பராமரித்து வருவது தொன்றுதொட்டு வந்த வழக்கம். மடைவாரியர் என்பது நெல் நாகரிக மக்களில் கண்மாய்ப் பாசனத்தை நிர்வகிக்கும் பள்ளனுக்குரிய பெயர் ஆகும். கிருதுமால் நதியைப் பற்றி இங்கு வாழ்ந்த முன்னோர்கள் குறிப்பிடுகையில், ‘நதியின் குறுக்கே மிருகங்கள்கூட கடந்து செல்லமுடியாத அளவிற்கு ஆழமாகவும், அகலமாகவும் இருந்தது என்று குறிப்பிடுகிறார்கள். தற்காலத்தில் அந்த இடத்தில் சுத்தம் செய்து தண்ணீர் ஊற்றி வயலாக மாற்றுகின்றனர். வேறு இடத்தில் இருந்து எடுத்து வந்த விளைந்த நெல் கதிரை தற்காலிமாக உருவாக்கப்பட்ட அந்த இடத்தில் நட்டு வைக்கிறார்கள். பின்பு மீனாட்சி அம்மன் கதிர் அறுக்கும் சடங்கு நடைபெறுகிறது. அந்த விழாவில் கோயில் குருக்கள் கதிர் அறுக்கும் அரிவாளுடன் தற்காலிக வயலில் கதிர் அறுப்பு நிகழ்வு நடக்கும் (ஏன் மீனாட்சி கதிர் அறுக்கவில்லை என்று அதி புத்திசாலித் தனமாக கேட்கக்கூடாது). பிறகு, மாரியம்மன் கோயில் அருகேயுள்ள வண்டியூர் தெப்பக்குளத்திற்கு (உண்மை) மீனாட்சியும், சுந்தரேசுவரரும் கதிரறுப்புத் திருவிழா முடிந்து, தெப்பத்தில் அமர்ந்து உழவின் வெற்றியை அடையாளப்படுத்தும் விதமாக மக்களுக்கு காட்சி அளிக்க வருகிறார்கள். இது ஒவ்வொரு ஆண்டும் தைப்பூசத்தன்று நடைபெருகிறது (ஏன் மற்ற மாதத்தில் நடத்தக்கூடாது என்று அதி மேதாவித் தனமாக கேட்கக் கூடாது). 

     இந்த தெப்பவிழாவில் அனுப்பானடிக் கிராமத்தில் வசிக்கும் பூர்வீகக் குடிகளான பள்ளர்களுக்கே வடம்தொட்டுக் கொடுக்கவும், வெள்ளை வீசி தெப்பத் திருவிழாவைத் துவக்கி வைக்கும் உரிமையும் தரப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சிக்கு அனுப்பானடியைச் சேர்ந்த ஊர்க்குடும்பனார் தன் இல்லத்திலிருந்து புறப்பட்டு மாரியம்மன் கோயில் சென்று வணங்கி ஊர்வலமாகத் தெப்பத்திற்கு வருகிறார். தெப்பக்குளத்தில் மீனாட்சியம்மன் கோயில் அறங்காவல்துறை அதிகாரிகள் மற்றும் அரசு உயர் அதிகாரிகள் இவரை வரவேற்கிறார்கள். பின்பு மீனாட்சியம்மன் கோயில் குருக்கள் அனுப்பானடி ஊர்க்குடும்பனாருக்கு மாலை அணிவித்து, நெற்றியில் திலகமிட்டு பின்பு பரிவட்டம் கட்டி, தெப்பத்திருவிழாவைத் துவக்கி வைக்க வேண்டுகிறார். அதன்பின் அனுப்பானடிக் குடும்பனார் தெப்பத்தின் வடத்தைத் தொட்டு வணங்கி, வெள்ளை வீசத் தெப்பத் திருவிழா தொடங்குகிறது. தெப்பத்தின் வெளி வடத்தை அனுப்பானடி மள்ளர்களும் மற்றும் பொதுமக்களும், உள்வடத்தை அனுப்பானடி மள்ளர்கள் மட்டுமே வடம்பிடிக்கும் உரிமை உள்ளது. பின்பு காலை இருமுறையும் மாலை ஒரு முறையும் தெப்பம் வலம் வருகிறது. அதன்பின்பு சுந்தரேசுவர பள்ளரும், மீனாட்சி மள்ளத்தியும் தங்களுடைய வாகனத்தில் வந்து அமர்கிறார்கள். இந்த பெரிய தெப்பமானது 17 ஆம் நூற்றாண்டில் வெட்டப்பட்டது என்பது உண்மையே. அதற்கு முன்பு இதே சடங்குகள் கிருதுமால் நதியில் நடத்தப்பட்டது. இந்தக் குளம் உண்டான பிறகு இங்கு நடத்தப்படுகிறது."
இப்போது 'மேகநாதன் முக்குலத்து புலி & குமரன் சுப்பையா' என்ற பதர்களிடம் மள்ளர்கள் கேட்க விரும்பும் கேள்விகள்.
1. இந்தக் கதிர் அறுப்புத் திருவிழாவில் பலியிடல் சம்பவத்தை எங்கே கண்டாய்?
2. தெப்பத் திருவிழா என்பது கழனிப் பக்கமுள்ள நீர் நிலையில் நடக்காமல் குடியிருக்கும் வீட்டிற்குள் நடக்குமா? அதுமட்டுமல்ல மீனாட்சியம்மன் கோயில் என்பது சுந்தரேசுவரப் பள்ளனைப் பள்ளிப்படுத்திய இடம். (பெரும்பாலான லிங்கம் உள்ள சிவன் கோயில் அனைத்தும் மள்ள அரசர்களைப் பள்ளிப்படுத்திய இடமே). இதில் வயல் உள்ள பகுதி 5 கி.மீ இருந்தால் என்ன? 10 கி.மீ இருந்தால் என்ன? இதில் என்ன புதுமையை நீ கண்டு விட்டாய்?
3. தெப்பக்குளம் வண்டியூர் மாரியம்மன் தெப்பக்குளம்தான். இல்லை என்று உன்னிடம் யார் சொன்னது? அதனால் நீ என்ன கண்டாய்? 
4. இதேபோன்று திருப்பரங்குன்றம் கோயிலில் மாடக்குளம் ஊர்க்குடும்பனாருக்கு பரிவட்டம் கட்டி, முதல்மரியாதை செய்யப்படுகிறது. அங்கே எந்தக் குளத்தை வெட்டி அதனால் கெட்ட ஆவி வந்து அதைத் தடுக்க பள்ளனை அனுப்புகிறார்கள்? மேலும், முருகன், தெய்வானை திருமணம் முடிந்து மறுவீட்டு அழைப்பாக பள்ளரின் மடத்திற்கு அழைத்து வரப்படுகிறார்களே! அது கூட நீ சொன்ன காரணத்திற்காக இருக்குமோ? இருந்தாலும் இருக்கும்! பதரே ..பதரே! :-)
5. இதேபோன்று தமிழ்நாட்டின் வேறு இனத்தார் சிலரது குலதெய்வக்கோயிலில் அவர்களுக்கு பரிவட்டம் கட்டி முதல்மரியாதை செய்து கொள்கிறார்களே அதுகூட நீ சொன்ன அதே காரணம்தானோ?
6. இந்தத் தெப்பத்திருவிழாவானது பள்ளனும், பள்ளத்தியும் கதிர் அறுத்து அதன் வெற்றியைக் கொண்டாடும் விழா(தைத் திருவிழா) என்பது உனக்கு இன்னும் புரியவில்லையா? இதில் மன்னனான விழா தலைவன் இருக்கும்போது வேறு மன்னர் இங்கே வர என்ன தேவை இருக்கிறது?
திரும்பவும் சொல்றேன் புலி என்று பெயர் வைத்துக் கொண்டு இப்படி எல்லாம் தெரிஞ்ச பு**கி மாதிரி பேசும் பதரே! உன் புத்தியை எங்கே அடகு வச்சே?


இராசராச சோழன் சத்திரியனா?

கள்ளர்கள் தங்களது வரலாற்றை பற்றி எடுத்து வைக்கும் ஆதாரங்கள்/வாதங்கள்:
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
=>        சேரனும் தன்அரசுரிமையையும், செங்கதிர் வீசிய மணிமாலை ஒன்றையும் இராசேந்திரனிடம் பறிகொடுத்தான். இராசேந்திரன் மதுரையில் தன் மகனைப் பிரதிநிதியாக அமர்த்தி, அப்பிரதிநிதியிடம் பாண்டிநாடு, கேரளம் ஆகியவற்றின் ஆட்சிப்பொறுப்பை ஒப்படைத்தான்.(கிபி.1018-19) அப்பிரதிநிதியின் பெயர் சடாவர்மன் சுந்தரபாண்டியன். இவன் 23 ஆண்டுகள் அரசாண்டான். வடநாட்டு வெற்றிகளுக்குப்பிறகு நாடுதிரும்பிய இராசேந்திரன் சோழகங்கை என்னும் குளம் ஒன்றை வெட்டி அதில்கங்கையிலிருந்து கொண்டுவந்தநீரைசொரிந்து கங்கா ஜலமயம் ஜயஸ்தம்பம் என்று பெயரிட்டுத் தன் வெற்றிக்கு விழாகொண்டாடினான். தன்மருமகன் இராசராச நரேந்திரனை (வேங்கி இளவரசன் விமலாதித்தனுக்கும் இராசராச சோழன் மகள் குந்தவைக்கும் பிறந்தவனை) வேங்கிநாட்டு மன்னனாக மணிமுடிசூட்டினான். தன்மகள் அம்மங்காதேவியை இராசராச நரேந்திரனுக்கு மணம் முடித்துவைத்தான். இவ்விருவருக்கும் பிறந்தவனே முதலாம் குலோத்துங்கசோழன் ஆவான். ""களவர்" என்ற வார்த்தை மருவி "களபர்" என்ற வார்த்தை பிறந்jது. களவர் என்போர் சுத்தத் தமிழர். முக்குலத்தோர். இரண்டு வார்த்தைகளுக்கும் வேறுபாடு அறிந்திருப்பது அவசியம். கள்ளர் என்பதன் மூலவார்த்தை களம் ஆகும். அதிலிருந்து பிறந்ததே களவர் என்ற வார்த்தை. களவர் என்ற ஒரே குடும்பத்திலிருந்து பிரிந்தவர்களே மறவரும் அகமுடையோரும் ஆவர். மூவரும் போர்க்களத்தொழிலையே செய்துவந்த ஒருதாய்வயிற்று மக்களாவர். போர்க்களத்தொழில் ஒரேகுடும்பத்திலிருந்து பிறந்தது. கள்ளர் என்போரே மூத்தவரானார். அவரே மற்ற இளையவர்களுக்கும் போர்பயிற்சி அளித்த குருவானார் எனலாம். தனக்கு போர்க்களத்தில் உதவிடும் பொருட்டே தன் இளையவர்களுக்கும் போர்பயிற்சிஅளித்து தன்நிழலைப்போல் பின்தொடர பழக்கியிருந்தனர் எனலாம்.மறவர்(விளக்கம்): இவர்கள் களவர் குலத்தின் ஒருபிரிவினர் ஆவார். இவர்கள் வீர தீரத்துடன் ஊக்கம் காட்டி போர்புரிந்ததால், மறவர் என்று அழைக்கப்பட்டனர். மறம் என்றால் வீரம். வீரத்துடன் போரிட்ட தால் மறவர் என்ற பெயர் பெற்றனர்.இவர்கள் கோட்டைக்கு வெளியே அரணாக நின்று எதிரி படையை தடுத்துநிறுத்தி இறுதிகட்ட போர்புரிவர். இது இவர்களின் தலையாய பணியாக இருந்தது.அகமுடையோர்(விளக்கம்): இவர்கள் களவர் குலத்தின் மற்றொரு பிரிவினர்ஆவார். இவர்கள் கோட்டையின்உள்ளே இருந்தபடி ,மதில்களின் மீது மறைந்து நின்றபடி கோட்டையை முற்றுகையிட வரும் எதிரியின் படைமீது குறி தவறாமல் அம்புமழை பொழிந்து, எதிரிகளை தடுத்து நிறுத்திப்போர் புரிந்தனர். வில்லில் நாண் ஏற்றி அதன் மீது அம்பைப்பூட்டி குறிதவறாமல் எதிரியின்மீது எய்தனர். அவ்வாறு எறிந்துஅவர்களைக் கொல்வதில் வல்லவர்கள். கோட்டையின் உள்ளேஇருந்தபடி போர்புரிந்ததால் அகமுடையோர் எனப்பெயர் பெற்றனர். அகம் என்றால் உள்ளே என்று பொருள்படும்.இவர்கள் கோட்டைக்கு உள்ளே இருக்கும் அரசகுடும்பத்தினர்கள், பெருந்தர மக்கள், அரசனின் சொத்துக்கள் அனைத்தையும் பாதுகாக்கும் பொறுப்பு இவர்களின் தலையாய கடமையாக இருந்தது அதற்காக கோட்டையின் மதில்கள்மீது நின்று அம்புமழைபொழிந்து எதிரிகளை கொன்றதோடு மட்டுமல்ல….கோட்டைப்பாதுகாப்புப்பொறிகளையும் பயன்படுத்தி கோட்டைமீது ஏறுகின்ற எதிரிகளை தாக்கி கொன்றனர். இவ்வாறு கோட்டைப்பாதுகாப்புப்பொறிகளை இவர்கள் பயன்படுத்திகொன்றனர் என்பதை இளங்கோவடிகள் பாடல் மூலம்கீழ்கண்டவாறு அறிகின்றோம்:பாடல்: "மிளையும் கிடங்கும் விளைவிற் பொறியும், கருவிர லூகமும் கல்லுமிழ் கவனும் பரிவுறு வெந்நெயும் பாகடு குழிசியும், காய்பொன் லுலையும் கல்லிடு கூடையும் தூண்டிலும் தொடக்கும் ஆண்டலை யடுப்பும் சுவையுட்ம கழுவும் புதையும் புழையும் அய்யவித் சீப்பும் முழுவிற்ற் கணையமும் கோலும் குந்தமும் வேலும் பிறவும்……………….."பொருள்:1)அம்பெய்யும் பொறி 2)கரிய விரலையுடைய குரங்குபோன்ற கடிக்கும் பொறி 3)கல்லெறியும் கவண் 4)கோட்டைமீதேற முயற்சிக்கும் எதிரிமீது காய்ச்சி ஊற்றும் எண்ணெய் 5)அவ்விதமான எண்ணெய் முதலியன ஊற்றுவதற்கான பாத்திரம் 6)இரும்பு கம்பிகளைக் காய்ச்சும் உலை 7)கல்லும் கவணும் வைக்கும் கூடை 8)கோட்டைமதில்மீது ஏற முயற்சிக்கும் எதிரிமீது மாட்டி இழுக்கும் தூண்டில் 9)சங்கிலி 10)எதிரியின்மீது வீச்ச் சேவல் போன்ற பொறி 11)அகழியைத்தாண்டி மேலே ஏறும் எதிரியைத்தாக்கி கீழேதள்ளும் இயந்திரம் 12)திடீரென பாயும் அம்புக்கூட்டம் 13)எதிரியின்மீது தீவீசும்,தீபந்தம் மற்றும் தீப்பொறி 14)சிற்றம்புகள் எய்யும் இயந்திரம் 15)மதிலின் மேல் உச்சியில் ஏறும் எதிரியின் கைகளைக்குத்தும் குத்தூசிகள் 16)மதிலில் ஏறியவனின் உடலைக்கிழிக்கும் இரும்பாற்செய்த பன்றி உருவமுடைய இயந்திரம் 17)மூங்கில் போன்ற உருவமுடைய இரும்பு உலக்கைகள் 18)கோட்டைக்கு ஆதரவாகப்போடப்படும் பெரிய மரக்கட்டைகள் 19)பெரியமரக்கட்டைகளை பிணைத்து குறுக்கே போடும் உத்திரங்கள் 20)தடி,ஈட்டி,வேல்,வாள் வீசும் இயந்திரப்பொறி. இக்கருவிகளைக்கொண்டு கோட்டைமீதிருக்கும் அகமுடையப்படையினர் போராடினர். இவ்வாறு போராடிய வீரர்கள் நொச்சிப்பூமாலை அணிந்துபோராடினர். எனவே, இது நொச்சித்தினை எனப்படும்.கள்ளர், மறவர், அகமுடையோர் என்னும் மூவரும் ஒருதாய்வயிற்றில் பிறந்தவர்கள்என்பதை விசயநகரப்பேர்ரசின் அமைச்சர் வெங்கய்யா அவர்கள் 1730ல் எழுதிய "தொண்டைமான் வம்சாவளி" என்றநூல் வலியுறுத்திக்கூறுகிறது.
தொண்டைமான் கள்ளர் வம்சத்தினர் என்று "இராஜதொண்டைமான் அநுராகமாலை சுவடிகூறுகிறது. பூவிந்தபுராணம், கள்ளகேசரிபுராணம் கள்ளர்,மறவர், அகமுடையோர் ஒருதாய் வயிற்றில் பிறந்தவர்கள் என்றும் இந்திரகுலத்தார் என்றும் கூறுகின்றன. இன்றைக்கும் தேவர், சேர்வை ஆகிய பட்டங்கள் கள்ளர், மறவர், அகமுடையோர் ஆகிய மூவருக்குமே உள்ளதை நுண்மான் நுழைபுலம்கொண்டு நுணுகிஆராய்ந்தால், இவர்கள் மூவரும் ஒரு தகப்பனுக்குப்பிறந்த, ஒருதாய்வயிற்றுப் பிள்ளைகள் என்பதை எளிதில் உணரலாம். தகப்பனின் பட்டப்பெயரே அவன் பெற்ற ஆண்மக்களுக்கும் தலைமுறை தலைமுறையாக தொடர்ந்து வந்துகொண்டிருப்பது நடைமுறையிலுள்ள மரபு ஆகும். அவ்வாறே தேவர், சேர்வை என்ற பட்டங்கள் ஒருதகப்பன் பெற்ற மூன்று ஆண்மக்களுக்கும்(கள்ளர்,மறவர், அகமுடையோர் ஆகிய மூன்று ஆண்மக்களுக்கும்) வந்துள்ளது. பன்னிருபடலமும், புறப்பொருள்வெண்பாமாலையும் களவர் குலத்திலிருந்து பிறந்த முக்குலத்தோர் போர் செய்த முறைகளை முக்கியமாக எட்டு தினைகளாக்கி விவரித்துக் கூறுகின்றன.அவைகள் வருமாறு:-1)வெட்சித்தினை: வேந்தனால் ஏவிவிடப்பட்ட வெட்சிமறவர் கள்வர்கள் படை பகைஅரசனின் நாட்டிற்குள் புகுந்து காவற்படையை வென்று ஆநிரைகளைக் கவர்ந்து வந்து, ஊர்மன்றத்தில் கொண்டுவந்து நிறுத்துதல். "வேந்துவிடு முனைஞர் வேற்றுப்புலக்களவின் ஆதந்து ஓம்பல் மேவற்றாகும் வெட்சி" என்று தொல்காப்பியர் பாடியுள்ளார். மற்றொரு இடத்தில் "தன்னுறு தொழிலே வேந்துறு தொழில் என்றன்ன இருவகைத்தே வெட்சி" என்று பாடியுள்ளார்(இ.வி.சூ.602 மேற்.) வெட்சிப்பூ மாலை அணிந்து போராடியதால் இது வெட்சித்தினை ஆயிற்று.(இதன் விளக்கத்தை எம்_130 மரபணு கள்ளர்களுக்கே உள்ளது என்ற என்னுடைய மற்றொரு கட்டுரையில் காண்க)2)கரந்தைத்தினை: வெட்சிமறவர் கள்வர்கள் படை கவர்ந்து சென்ற ஆநிரைகளை, அவர்கள் நாட்டின் ஊர்மன்றத்திற்குள் கொண்டுபோய் சேர்க்கும் முன் அவர்களை வழிமறித்து வெட்சிமறவர் கள்வர்படையை வென்று, இழந்த ஆநிரைகளை மீட்டு வருதல். இவர்கள் கரந்தைப்பூ மாலை அணிந்து போராடியதால், இது கரந்தைத்தினை ஆயிற்யறு.(வெட்சித்தினை, கரந்தைத்தினை ஆகிய இருபோர்களையும் செய்தவர்கள் கள்ளர்களே ஆவர். இதனை தொல்காப்பியரின் பன்னிருபடலத்தில் காணலாம்.)3)வஞ்சித்தினை: பகைஅரசனின் நாட்டைக்கைப்பற்றக் கருதிய வேந்தன், பகைநாட்டின்மீது போர்தொடுத்தல். (கள்ளர், மறவர்,அகமுடையோர் ஆகிய மூன்றுபடைகளும் இணைந்து பகைமன்னனின் நாட்டின்மீது படைஎடுத்துப்போய் போர் தொடுத்தல்) வஞ்சிப்பூ மாலைஅணிந்துபோராடுவர். 4)காஞ்சித்தினை: நாட்டைக்கவர படையெடுத்து வரும் அரசனின் படைகளை எதிர்த்து போராடுதல் (கள்ளர்,மறவர் படைகள் இணைந்து நாட்டைக்கவர வரும் எதிரி அரசனின்படைகளை எதிர்த்து நின்று போராடுதல்) 5)நொச்சித்தினை: பகைவர் படையின் முற்றுகையிலிருந்து கோட்டையை காக்க கோட்டைமீதிருந்து எதிரிகள் மீது அம்புமழைபொழிந்து தாக்கும் அகமுடையோர் படையின்(வில்லாளிகள்) போர். அகமுடையோர்படை கோட்டைமேலிருந்து அம்புமழைபொழிந்து தாக்குவர். அதேநேரத்தில், கோட்டையை முற்றுகையிடும் எதிரிபடைகளுடன் கோட்டைவாசலில் பாதுகாப்பாகநின்று கள்ளர்,மறவர் படைகள் இணைந்து எதிரியுடன் போர் செய்வர். நொச்சிப்பூமாலை அணிந்து போராடுவர்.
6)உழிஞைத்தினை: பகைவரது கோட்டையை சுற்றிவளைத்து முற்றுகையிட்டு, கோட்டையின்காவலை உடைத்து, கோட்டைக்குள்புக எதிரிநாட்டரசன் படைகள் நடத்தும்போர். எதிரிநாட்டின் கள்ளர், மறவர் அகமுடையோர்(வில்லாளிகள்) படைகள் மூன்றும் இணைந்து நடத்தும்போர். உழிஞைப்பூ மாலை அணிந்து போராடுவர்.7)தும்பைத்தினை: இரண்டு நாட்டு அரசர்களின் படைகளும் நேருக்கு நேர் மோதி நடத்தும் இறுதிகட்டப் போர். (இப்போரில் இரண்டு நாடுகளின் கள்ளர்,மறவர்,அகமுடையோர்(வில்லாளிகள்) படைகள் நேருக்குநேர் கடுமையாக மோதிக்கொள்ளும் இறுதிகட்டப்போர். தும்பைப்பூ மாலை அணிந்து போராடுவர்..8)வாகைத்தினை: இரண்டு நாடுகளின் கள்ளர், மறவர், அகமுடையோர்படைகளும் போரிட்டு ஒருநாடு வெற்றி வாகைசூடும் போர். வெற்றிபெற்ற படைகள் வாகைப்பூ மாலை சூடி மகிழ்ச்சி ஆரவாரம் செய்வர்கள்ளர் என்ற வார்த்தை களம் என்ற மூலவார்த்தையிலிருந்து பிறந்ததுபோல், வேறு எந்த இனமும், களம் என்ற வார்த்தையிலிருந்து பிறக்கவில்லை. இந்த அடிப்படைஉண்மையை அறியாது எழுதப்படும் வரலாறு, பெருக்கல்வாய்ப்பாடு அறியாத மாணவன் போடுகின்ற கணக்கின் விடைபோல் தவறாகவே முடிந்துவிடும்.களவர் குலத்தினராகிய நம்முன்னோர்கள் ஆற்றிய போரினையே 2300ஆண்டுகளுக்கு முன் அகத்தியரின் மாணவர்களாகிய பன்னிருவர் எழுதியுள்ளனர். அப்பன்னிரு மாணவர்களில் முக்கியமானவர் தொல்காப்பியர். தொல்காப்பியரே முதல் இருபடலங்களை எழுதியுள்ளார். அவ்விரு படலங்களே வெட்சித்தினையும் கரந்தைத்தினையும் ஆகும். வெட்சிச்தினையிலும் கரந்தைத்தினையிலும் கள்ளர்கள் ஆற்றிய போரையே தொல்காப்பியர் தெளிவாக பாடியுள்ளார். அதன்பிறகு ஐயனாரிதனார் என்னும் சேரர்குடியைச்சேர்ந்த புலவரும் கி,பி,9ஆம் நூற்றாண்டில் புறப்பொருள்வெண்பாமாலையை பாடியுள்ளார். இப்பன்னிருபடலமும் புறப்பொருள் வெண்பாமாலையும் களவர் என்ற நம் முன்னோர்கள் ஆற்றிய குலத்தொழில் போரைமிகத்தெளிவாக படம்பிடித்துக்காட்டுகின்றன. இக்களவர் என்ற பெயரையே, இராஜராஜசோழனின் கல்வெட்டில் கள்வன் ராஜராஜன் என்றும் களப ராஜராஜன் என்றும் பொறித்துவைத்துள்ளார். "களப" என்ற வார்த்தையும் "கள்வன்" என்ற வார்த்தையும் கள்ளர் இனத்தைக்குறிக்கும் இரு வார்த்தைகளாகும். இவ்விருவார்த்தைகளும் ஒரே பொருளைத்தன் குறிக்கின்றன. எனவேதான், கல்வெட்டு 1ல் "களப என்றும் மற்றொரு கல்வெட்டில் களப என்ற வார்த்தையை நீக்கிவிட்டு, அவ்வார்த்தைக்குப்பதிலாக எளிதில் புரியக்கூடிய "கள்வன்" என்ற வார்த்தையையும் வெட்டிவைத்துள்ளனர். இவ்வார்த்தைகள் கள்ளர்கள் முற்காலத்தில் செய்த குலத்தொழிலைக்குறிக்கும் காரணப்பெயர்களாகும் என்பதை மீண்டும் வலியுறுத்திக் கூறிக்கொள்கிறேன். எனவே, சோழமன்னர்கள் அனைவரும் வீரஇனமாகிய கள்ளர் குலத்தவரே


=>        சோழர்கள் சம்பு,காடவர் குலம் அல்ல.
சோழர்கள் சூரிய குல சத்திரியர்.சோழரின் கிளைக்குடியாக ஆய்வாளர்கள் கூறும் பார்கவகுலம் மற்றும் தஞ்சைக்கள்ளர் இவற்றோடு சம்பந்தமுடையது. இதை திருகு ஜாலங்களால் மாற்றவே முடியாது.

=>        தஞ்சை கோவிலை கட்டிய பேரரசன் இராசராச சோழன்
கள்ளர் குலத்தில் பிறந்தவர் என்பதை வரலாறுகள் மிகச்தெளிவாக எடுத்துக்காட்டுகின்றன. உலகம் முழுவதும் தமிழர்களின் வீரம், பண்பாடு, நாகரிகத்தை பரப்பிய தமிழ் மாமன்னர் இராசராசசோழன்,உலகத்தமிழர்கள் அனைவருக்கும் உரிமையுடையவர் என்பது மறுக்கமுடியாத, மறுக்கக்கூடாத உண்மை. ஆனால், அவர்" போர்த் தொழில் உரிமையி லெய்தி யரசு வீற்றிருந்து. . . " என்று வீர்ராசேந்திர சோழதேவரின் கல்வெட்டுக்கூறுவதும், கொடும்பாளூர் இருக்குவேளிர் என்னும் கள்ளர் அரசர்குடியிலிருந்து பிறந்ததே சோழர்குடியென்று, மூன்றாம் குலோத்துங்க சோழனின் முதல் அமைச்சர் சேக்கிழார் பெருமானும், மூவர் பாடிய தேவார திருமுறைகளை தொகுத்து பேரரசன் இராசராசசோழனுக்கு தொண்டுசெய்த திருநாரையூர் நம்பியாண்டார் நம்பி அடிகளும் சோழர் காலத்திலேயே பாடி அரங்கேற்றம் செய்து -- இராசராச சோழன் கள்ளரே என்பதை உறுதிபடுத்தியுள்ளனர்.(ஆதாரம்:முப்பது கல்வெட்டுக்கள் என்ற நூலின் பக்கம் 203, முதலாம் பராந்தக சோழனின் கல்வெட்டு ER.140/1928 கொடும்பாளூர் இருக்குவேளிர்கள் கள்ளர்களே என எழுதியுள்ள கே.ஏ.நீலகண்ட சாஸ்திரிகள் எழுதிய சோழர்கள் புத்தகம் 1 பக்கங்கள் 184, 146, 224, 225, திருத்தொண்டர் புராணம்(பெரியபுராணம் பக்கம் 491) & திருத்தொண்டர் திருவந்தாதி). இந்நிலையில் இராசராச சோழன் பிறந்தது கள்ளர் குலமே என்ற வரலாற்றுச்செய்தியை யாரும் மறைக்கவோ மறுக்கவோ முடியாது. பொய்மையை அவர்கள் சொற்பகாலத்திற்கு மட்டுமே அரங்கேற்றலாம். பின் சாயம் வெளுத்துவிடும். இராசராசசோழனின் பெரிய பாட்டியார் மழவராயர் மகள் செம்பியன் மாதேவியார் பலசிவாலயங்களை கற்றளியாக எடுப்பித்து அதற்கு நாள் வழிபாட்டிற்கும் விழாக்களுக்கும் நிவந்தமாக இறையிலி நிலங்கள் அளித்துள்ளாரே.அதுமட்டுமல்ல தஞ்சாவூர் ஜில்லாவில் கோனேரிராசபுரம் (எ) திருநல்லம் என்னும் ஊரிலுள்ள சிவாலயத்திற்கு தன் கணவன் பெயரான ஸ்ரீ கண்டராதித்தன் என்று தன் கணவன் பெயரையே வைத்து மக்கள் நாள்தோறும் வழிவட்டுவந்தனரே. அதுமட்டுமல்ல. அக்கோயிலினுள் தன்கணவர் கண்டராதித்த தேவர் சிவலிங்கத்தை வழிபடுவதாக படிமம் வைத்துள்ளதை இன்று காணலாம். (ஆதாரம்: "SII. Vol.III No.146). மேலும் நாகப்பட்டிணம் தாலுக்காவிலுள்ள செம்பியன்மாதேவி கோயிலில் தற்போதும் ஆண்டுதோறும் செம்பியன்மாதேவி படிமத்தை ஊர் முழுவதும் வீதிஉலா செய்து அதற்கு கற்பூர ஆரத்தி எடுத்து அனைவரும் பிராமணர்கள் உட்பட அனைவரும் வணங்கி வருகின்றனர்.(சதாசிவப்பண்டாரத்தார் அவர்களின் பிற்காலச்சோழர் வரலாறு பக்கம் 69) இந்த மழவர் அரசி செம்பின் மாதேவியார் கற்றளியாக அமைத்த பிற கோயில்கள் :"விருத்தாசலம், திருகோடிகா, தென்குரங்காடுதுறை,செம்பியன் மாதேவி, திருவாரூர் அரநெறி, திருத்துருத்தி, ஆநாங்கூர், திருமணஞ்சேரி, திருவக்கரை என்னும் ஊர்களிலுள்ள சிவாலயங்களாம். முதல் இராசராச்சோழன் மகனாகிய கங்கைகொண்டசோன், செம்பியன் மாதேவியிலுள்ள திருக்கயிலாயமுடையார் கோயிலில் கி.பி.1019இல் இவ்வம்மையின் படிம்ம் எழுந்தருளுவித்து வழிபாட்டிற்கு நிவந்தம் அளித்துள்ளான்.
எனவே தெய்வமாக்க் கருதி கோயியலில் படிம்ம் வைந்து முடிமன்னனால் வணங்கப்பெற்றுள்ளமை அறியத்தக்கது(எழுதியவர் வரலாற்றுப்பேரறிஞர் அமரர் தி.வை.சதாசிவப்பண்டாரத்தார். பிற்காலச்சோழர் வரலாறு பக்கம்.72 கல்வெட்டுக்கள் Ins 47 of 1918, Ins.36 of 1931, SII.Vol.III No.144, Ins.485 of 1925, Ins.571 of 1904, Ins.103 of 1926 துருத்தி--குற்றாலம்.I:ns.75 of 1926, Ins.9 of 1914. Ins.200 of 1904 & Ins.481 of 1925) இதைப்பற்றி ஆராய்ச்சிப் பேரறிஞர் அமரர் திரு.தி.வை.சதாசிவப்பண்டாரத்தார் அவர்கள் பிற்காலச்சோழர் வரலாறு பக்கம் 74 மற்றும் 92ல் எழுதியுள்ளது வருமாறு.:"இவனுடைய பெற்றோர்கள் இவனுக்கு இட்டு வழங்கிய பெயர் அருண்மொழிவர்மன் என்பது.(SII. Vol.V Verse 61) அவ்வேந்தற்கு வழங்கிய சிறப்புப் பெயர்களுள் இராசராசன் என்பது யாண்டும் பரவி இயற்பெயர்போல் வழங்கி வந்தமையின் இவனது இயற்பெயராகிய அருண்மொழித்தேவன் என்பது வழக்கற்றுப்போயிற்று. முடிசூட்டிக்கொள்ளும் முன் இயற்பெயர் அருண்மொழித் தேவன் என்பதை டாக்டர் மு.வ.இராச மாணிக்கனார் அவர்களும் அவருடைய சோழர் வரலாறு என்னும் நூலில் பக்கம்144ல் குறிப்பிட்டுள்ளது வருமாறு: "சோணாட்டுக்குடிகள் அருள் மொழித்தேவனை .. பட்டம் ஏற்குமாறு தூண்டினர். ஆயினும் இராசராசன் அதற்கு இணங்கவில்லை. தன் சிற்றப்பனான மதுராந்தகனுக்கு (உத்தமசோழனுக்கு)நாடாள விருப்பம் இருந்ததை அறிந்தான். அவனை அரசனாக்கினான். தான் அவனுக்கு அடங்கிய இளவரசனாக இருந்து நாட்டைக் கவனித்து வந்தான். முடிசூட்டிக்கொள்ளும் முன் இளவரசன் அருண்மொழித்தேவன் என்றே குறிப்பிடப்பட்டார் என்பதை முனைவர் சி.கோ.தெய்வநாயகம் அவர்களும் அவருடைய சோழர் வரலாறு என்னும் நூலில் பக்கம் 53ல் எழுதியுள்ளது வருமாறு: "சோமன், ரவிதாசனான பஞ்சவன் பிரமாதிராஜன், பரமேசுவரனான இருமுடிச்சோழபிரமாதிராஜன், மலையனூரானான ரேவதாசக் கிரமவித்தன் என்ற நான்கு பிராமணச்சகோதரர்களால் இரண்டாம் பராந்தக சோழனான சுந்தரசோழனின் மூத்த மகனும் போரில் வீரபாண்டியனின் தலையை கொய்த பெரும்வீரனான ஆதித்தகரிகாலன் சதிச்செயல்மூலம் வஞ்சகமாக கொலைசெய்யப்பட்டான்.(ஆதாரம்: காட்டுமன்னார் கோயிலுக்கணித்தாகவுள்ள உடையார் குடிகல்வெட்டு எண். Ep.Ind.Vol. XXI No.27). எனவே, ஆதித்தகரிகாலனின் தம்பி அருண்மொழித் தேவன் என்ற இளமைப்பெயருடைய இராசராசனே முடிபுனைந்து அரசப்பொறுப்பினை ஏற்கவேண்டும் என்றே மக்களும் அறிஞர்களும் சோழ அரசியல் அதிகாரிகளும் விரும்பி வேண்டி நின்றனர். அந்நிலையில் இரண்டாம் பராந்தகன் இராசகேசரி சுந்தரசோழனின் பெரிய தந்தை கண்டராதித்த தேவரின் மனைவியும் மழவர் குலத்தில் பிறந்தவளும் சைவத் திருக்கோயில் வழிபாடு மற்றும் திருப்பணிகளில் மிகுந்த ஈடுபாடு காட்டியவளும் அரசியல் திருக்கோயில் பணியாளரிடையே பெரும் செல்வாக்குப்பெற்றவளுமாகிய செம்பியன் மாதேவி தம் திருவயிறு உதித்த மதுராந்தக உத்தமசோழன் சோழ அரியணை ஏறி ஆட்சிசெய்ய பெருவிருப்பம் கொண்டவனாக இருந்துள்ளான. எனவே, சிறிய தகப்பன் முறையிலான உத்தமசோழனது விருப்பத்தை மதித்து தமக்குரிய அரியணை ஏற்றத்தை விட்டுக்கொடுத்து உத்தமசோழனை(மதுராந்தகனை) கி.பி.970 முதல் கி.பி.985 வரை சோழ நாட்டை ஏறத்தாழ 15 ஆண்டுகள் ஆட்சிசெய்ய அனுமதித்த பேருள்ளம் படைத்தவனாக …. இராசராசனை குறித்து திருவாலங்காட்டுச் செப்பேடுகள் பெருமிதம் அடைகின்றன." "கோப்பரகேசரிவர்மரான ஸ்ரீ உத்தமசோழ தேவர்" என்று திருவிடைமருதூர் கல்வெட்டு கூறுகின்றது (Ibid.Nos.128,131 and 150) மேலும் முனைவா சி.கோ.தெய்வநாயகம் பக்கம் 47ல் எழுதியுள்ளது வருமாறு:"உத்தமசோழனுடைய கல்வெட்டு ஒன்று அருண்மொழித்தேவ கைக்கோளர் படை ஒன்றை சுட்டுகிறது. எனவே, வாலிப வயதில் அருண்மொழித்தேவன், உத்தமசோழனின் ஆட்சிக்காலத்தில் சோழர்களின் ஒரு குறும்படைப் பிரிவிற்கு தலைவனாகவும் பாட்டியார் செம்பியன் மாதேவியின் திருக்கோயில் திருப்பணிகளுக்கு அன்போடு உதவியுமுள்ளான் என அறியமுடிகிறது. சோழநாட்டின் தலைநகரான தஞ்சாவூர் அரண்மனையில் அருண்மொழி தேவத் தெரிந்த திருப்பரிகலத்தார் என்ற வேளம் இருந்தது. இந்த அரண்மணைப்பகுதிக்கும் அருண்மொழித்தேவன் என்ற பெயரே சூட்டப்பட்டிருந்தது(பக்கம் 56). இராசராசசோழன் பிறந்தவுடன் பெற்றோர்கள் சூட்டிய அருண்மொழி வர்மன் என்ற பெயர் வழங்கப்படவில்லை. அவர் தேவர் குடும்பத்தில் பிறந்ததால், அருண்மொழித்தேவன் என்றே அனவரும் அழைத்ததால், சுமார் 42 வயதுவரை அருண்மொழித் தேவன் என்ற பெயரே இயற்பெயராகவும் இளமைகாலப் பெயராகவும் அமைந்தது. தமிழகம் ஊரும் பேரும் எழுதிய ரா.பி.சேதுப்பிள்ளை அவர்கள் அந்நூலின் பக்கம் 120 & 161ல் குறிப்பிட்டுள்ளதாவது "இம்மன்னனது இயற்பெயர் அருண்மொழித்தேவன் என்பதாகும். தஞ்சை (தற்போது நாகை) மாவட்ட மாயவர வட்டத்தில் அருமொழித் தேவன் என்ற பெயருடைய இரண்டு ஊர்களும், நாகப்பட்டின வட்டத்தில் ஒர் அருமொழித்தேவனும் உள்ளன. தென் ஆர்க்காட்டுச் சிதம்பர வட்டத்திலும் அருமொழித்தேவன் என்னும் ஊர் உண்டு.. பாண்டி மண்டலத்தைச்சேர்ந்த அருண்மொழித்தேவபுரம் என்றொரு ஊரும் உண்டு.இவ்வூர்கள் யாவும் அருண்மொழித் தேவன் நினைவாக ஏற்பட்ட ஊர்களாகும். உத்தமசோழன் கி.பி.985ல் இறந்தான். பக்கம் 53ல் முனைவர் சி.கோ. தொடர்ந்து எழுதியுள்ளது வருமாறு: "15 ஆண்டுகள் உத்தமசோழன் ஆட்சியில் போர்கள் ஏதுமின்றி, தாய்செம்பியன் மாதேவியின் சைவத் திருக்கோயில் பணிகளுக்கு உதவிய அமைதியான சூழலில் அமைந்தது. அந்நிலையில் முதல் பராந்தகனாலும், சுந்தரசோழனாலும், ஆதித்த கரிகாலனாலும் வெற்றிகொள்ளப்பட்டு அடக்கி வைக்கப்பட்டு இருந்த சேரர்களும் பாண்டியர்களும், வேங்கிநாட்டவரும் எழுச்சிபெற்று சோழப்பேரரசை எதிர்க்கலாயினர். அந்நிலையில் சோழநாட்டின் எல்லைப்பகுதிகளில் அமைதி குலைந்து கலக்கம் ஏற்படுவது இயற்கை. இச்சூழலில்தான், மக்களின் பெருவிருப்பத்தைத் தவிர்க்க இயலாதவனாக இளவரசன் அருண்மொழித்தேவன் இராசராசன் என்ற ஆட்சிச்பெயருடன் கி.பி. 985ஆம் ஆண்டு ஜுலை மாதம், 18ஆம் நாளுக்கு இணையான ஆடிமாதம் புனர்பூச நட்சத்திரம் கூடிய சனிக்கிழமையில் முடிசூட்டப்பட்டு சோழப்பேரரசின் ஆட்சிப்பொறுப்பினை ஏற்றுள்ளான். இதனை திருவாலங்காடு, கரந்தை செப்பேடுகள் எடுத்துரைக்கின்றன. (Mysore Gazetteer Vol. II. Part II, page 943) அப்போது ஏறத்தாழ 42 வயது.(பக்கம் 102) இராசராச சோழனின் மகன் இராசேந்திரசோழனும், தன்தந்தையின் இயற்பெயரால் அருமொழி தேவனிற்க் கோயில். . எனக்குறிப்பிட்டு கி.பி.1016ஆம் ஆண்டு கல்வெட்டு வெளியிட்டார்.,இக்கல்வெட்டைக்காண்க:". . . யாண்டு நாலாவது நடுவிருக்கும் கொட்டையூர் வூவத்தபட்ட ஸொமாஜியார் . . சொளெந்திரசிங்க ஈஸ்வரமுடையார் கோயிலின் வடபக்கத்து சாலை அருமொழிதேவனிற்க். கோயில் கருமமாராயாவிருந்து. . . .(ஆதாரம்:முனைவர் சி.கோ.தெய்வநாயகம் எழுதிய சோழர் வரலாறு பக்கம் 62) . இக்கல்வெட்டில் இராசராசன் கட்டிய கோயில் என்று இராசேந்திரசோழன் குறிப்பிடவில்லை. தன் தந்தையின் இயற்பெயராகிய அருண்மொழித் தேவன் கட்டிய கோயில் என்றே குறிப்பிட்டுள்ளதிலிருந்தே, அம்மன்னர்கள் தாங்கள் பிறந்த தேவர் குலத்தில் எவ்வளவு ஈடுபாடும் மனச்சார்பும் உடையோராய் இருந்தனர் என்பது உள்ளங்கை நெல்லிக்கனி போல் தெளிவாக தெரிகிறதல்லவா?இக்கோயில் பற்றிய வரலாற்றுச்செய்தியை உங்களின் கவனத்துக்கு கொண்டு வருகிறேன். இக்கோயில், இராசராச சோழன் முடிசூட்டிக்கொண்டபிறகு, அவரது 14வது ஆட்சி ஆண்டில் இராச ராசசோழனால் கட்டப்பட்டது. எனவே, "இராசராச சோழனிற்க் கோயில்" என்றுதானே இராசேந்திரசோழனின் கி.பி.1016ஆம் ஆண்டில் வெட்டப்பட்ட அக்கல்வெட்டுக் குறிப்பிடவேண்டும். ஆனால், அவ்வாறு குறிப்பிடாமல், இராச ராசசோழனின் இயற்பெயராகிய அருண்மொழி தேவனிற்கோயில் என்று கல்வெட்டில் வெட்டிவைக்கப்பட்டதிலிருந்து,முடிசூட்டிக்கொண்டபிறகும் இராசராசனின் இயற்பெயரிலேயே அக்கோயில் அனைவராலும் அழைக்கப்பட்டிருந்தது என்பது தெள்ளிதின் தெளிவாக தெரிகிறது அன்றோ?.அவரை "பெரிய தேவர்" என்றுதான் அனைவரும் அழைத்துள்ளனர். எனவே, பெரிய தேவர் என்ற விருதுபெயர் பெற்றார் (ஆதாரம்..முனைவர் தெய்வநாகம் எழுதிய சோழர் வரலாறு பக்கம் 49) இராசராசசோழன் பெரியதேவர் என்றால், இராசேந்திரசோழனை அனைவரும் சிறியதேவர் என்று அழைத்திருக்கவேண்டும் என்பது உய்த்துணரக் கூடியதாகும்.. இராசராச சோழன் முடிசூட்டிக்கொண்ட பிறகு "திரு.இராஜ ராஜ தேவன்" என்ற பெயர் தாங்கிய வெள்ளிக்காசை வெளியிட்டார்(ஆதாரம்..ஹுல்ஸ் EA.XXV பக்கம்317 கே.ஏ.நீலகண்டசாஸ்திரிகளின் சோழர்கள் புத்.1 பக்கம்.23) அருண்மொழித் தேவ வளநாடு, அருண்மொழித்தேவ பெருந்தெரு,அருண்மொழித்தேவ மரக்கால், அருண்மொழிதேவ சாலை, அருண்மொழித்தேவ வாய்க்கால் என்று இராசராச சோழனின் ஆட்சியின்போது வழங்கிவந்த பெயர்கள் யாவும், அவருடைய இயற்பெயரான அருண்மொழித் தேவன் என்பதை உறுதிபடுத்துகின்றன.(ஆதாரம்: TAS VPP 29-30. 186 OF 1925, 227 OF 1921, 401 OF 1921, SII III 1908)
குறிப்பு: பிரிட்டிசு அரசு குற்றப்பரம்பரை சட்டம் கொண்டுவந்ததற்கு ஒரு காரணம், முக்குலத்து மக்கள் நாடாண்ட அரசர் குலம் என்பதை மறைத்துதான் கொண்டுவந்தது. அதுபோல்தான், தற்போது சில அரசு அதிகாரிகள் நம் வரலாற்றை மறைக்க முயல்வதையும், அதற்கு ஒரு இனத்தாரை தூண்டிவிடுவதையும் கண்டித்தே இந்த பதில் ...  
இந்தியா முழுமையும் சத்திரிய இனமாக அறியப்பட்டு பதியப்பட்டதாக வெள்ளையர் ஆதாரப்பூர்வமாக எழுதி வைத்துள்ள நிரூபணம் கீழே….
Followings are martial races listed by British , and declared that they can claim ksatriya status in india……but nair and thevar continuously rebelled against british,,,,

Ahirs/Yadavs [22]
Awans[23][24][25]
Bhumihar (excluded later after rebellions)
Bunt
Dhund Abbasis
Dogra[26]
Gakhars
Garhwalis[27]
Ghumman
Gujjar[26]
Gurkhas[28]
Janjua[26]
Jats[26][29][30]
Khokhar[26]
Kodava (Coorgs)
Kumaoni/Kumaunis[31]
Mahars
Marathas
Mohyals
Mukkulathors (excluded and branded as Criminal Tribes due to rebellious nature)
Nairs[32][33][34][35] (removed after rebelling)
Pathans[26]
Qaimkhanis
Rajputs[26]
Rajus
Sainis of undivided Punjab[26][36][37]
Satti
Sikhs[38][39]
Sudhan
Tanolis[40][41]
Tarkhans[42]

தமிழகத்தில் முக்குலத்தோரையும் கேரளநாயரையும் தவிர யாருக்கு
கொடுத்திருக்கிறார்கள் சத்ரியப்பட்டம்?
பிறகு நீங்களாகவே சத்திரியர்கள்
நாங்கள் மட்டுமே என மார்தட்டுவது ஏன்?
.தஞ்சைக்கள்ளர்குல
மன்னன் ராஜராஜன் சத்திரிய சிகாமணி என கல்வெட்டே உண்டு.ஆதியிலிருந்தே சத்திரிய வர்ணம் உடையோர் தஞ்சைக்கள்ளர்கள்,
மற்றும் உடையார்களே அவர்கள் பார்கவ குல சத்திரியர்கள்ஆவர். சோழ வரலாறு பார்கவ குலத்தோடே மட்டுமே குலத்தொடர்புள்ளது. இவர்களும் தஞ்சைகள்ளராயிருந்தோர். ஆனால் உண்மையாகவே சத்திரியரான இவர்களெல்லாம் சத்திரியர் என கேட்டு வாங்க வில்லை.

=>        கள்ளர்களைப்பற்றிய உண்மை வரலாறு என்னும் ஆதவன் ஒளி உலகெங் கும் பரவி பொய்மை வரலாறு என்னும் பனித்திரை விலகவேண்டும்.. தமிழ் இலக்கியங்களில் கள்ளர்கள் நாடாண்ட செய்திகள் ஏராளமாக கூறப்பட்டுள்ளன. அதை 1800 ஆண்டுகளுக்கு முற்பட்ட தமிழகம் என்னும் நூல் எழுதிய திரு.கனகசபைப்பிள்ளை அவர்கள் மூடிமறைக்க முயன்றுள்ளதும், கள்ளர்களை இழிவுபடுத்தும் வார்த்தைகளை எழுதியுள்ளதையும் தவறு என்பதை எடுத்துக்காட்டவே இக்கட்டுரையை எழுதுகிறேன். கள்ளர்கள் சாம்ராஜ்யவாதிகள் என்று மேனாட்டு அறிஞர்கள் போற்றியிருக்கின்றனர். டாக்டர் உ,வே,சாமிநாதய்யர் அவர்கள் புறப்பொருள் வெண்பாமாலை ஓலைச் சுவடிகளை கண்டுபிடித்து அச்சிலேற்றி, முக்குலத்து சமூகத்திற்கு பெரும் தொண்டு ஆற்றினார். அதைப்போலவே, அக்டோபர் 29,1950 முதல் மூன்றரை ஆண்டுகாலம் கல்கியில் பொன்னியின் செல்வன் என்ற இராசராசனின் இளமைகால வரலாற்றுப்புதினத்தை அமரர் கல்கி கிருட்டிணமூர்த்தி அவர்கள் எழுதி கள்ளர் குலத்திற்கு மாபெரும் தொண்டு செய்தார். இதை எழுதுவதற்கு வரலாற்று ஆராய்ச்சிப் பேர- றிஞர் சதாசிவப்பண்டாரத்தார் எழுதிய பிற்காலச்சோழர் வரலாறுஅடிப்படையாக அமைந்- தது என்று பிற்காலச்சோழர் வரலாறு பதிப்புரையில் (பக்கம்xxல்) திரு.மு.பெரி.மு.இராமசாமி எழுதியுள்ளார்.. அமரர் கல்கி அவர்கள் மயிலாடுதுறை, மணல்மேடு கிராமத்திற்கு அருகில் புத்தமங்கலம் என்னும் கிராமத்தில் பிறந்த பிராமணர். கல்கி, டாக்டர் உ.வே.சா., சதாசிவப் பண்டாரத்தார்,மு.பெரியசாமி அனைவருமே முக்குலத்தோர் அல்ல.ஆனால்,உண்மையை எழுதிய மாசுமருவற்ற சான்றோர் பெருமக்கள்.
=>        சான்றோர்-கல்கி எழுதியுள்ளது (பொன்னியின் செல்வன் பாகம்-1அத்தியாயம்-6ல்)
நடுநிசிக்கூட்டத்திற்கு…….."…பழுவேட்டரையரும், சம்புவரையரும் தவிர………..அங்கே மழபாடித் தென்னவன் மழவராயர் வந்திருந்தார். குன்றத்தூர்ப் பெருநிலக்கிழார் வந்திருந் தார். மும்முடிப் பல்லவராயர் வந்திருந்தார். தான் தொங்கிக் கலிங்கராயர், வணங்காமுடி முனையரையர், தேவசேநாபதி பூவரையர், அஞ்சாத சிங்க முத்தரையர், இரட்டைக்குடை ராஜாளியார், கொல்லிமலைப் பெருநில வேளார்(இருக்குவேளிர்). . வந்திருந்தனர். . .
இந்தப் பிரமுகர்கள் சாமான்யப்பட்டவர்கள் அல்ல. எளிதாக ஒருங்கு சேர்ந்துக் காணக்கூடியவர்களும் அல்ல. அநேகமாக ஒவ்வொருவரும் குறுநில மன்னர்கள், அல்லது குறுநில மன்னருக்குரிய மரியாதையைத் தங்கள் வீரச்செயல்களினால் அடைந்தவர்கள். ராஜா அல்லது அரசர் என்பது மருவி அக்காலத்தில் அரையர் என்று வழங்கி வந்தது. சிற்றரசர்களுக்கும், சிற்றரசர்களுக்குச் சமமான சிறப்பு வாய்ந்தவர்க்ளுக்கும் அரையர் என்ற பட்டப் பெயர் சேர்த்து வழங்கப்பட்டது. அவரவர்களுடைய ஊரை மட்டும் கூறி அரையர் என்று சேர்த்துச்சொல்லும் மரபும் இருந்தது.(மழவ+அரையர்=மழவரையர்,மழவராயர் என மரூவியது.பல்லவ+அரையர்=பல்லவரையர்.பல்லவராயர்..கலிங்க+அரையர்=கலிங்கரையர்.
காலிங்கராயர்

=> ராஜ ராஜ சோழன் சூத்திரனா சத்திரியனா சரித்திரம் என்ன சொல்லுகிறது ?
    சத்ரியனான சுந்தர சோழனுக்கும், மலையமான் குலப் பெண் வானவன் மாதேவிக்கும் பிறந்தவன் ராஜ ராஜன். மலையமான் குலம் என்பது ஒரு அடிமைப்படாத சிற்றரசு வம்சமாக இருந்திருக்கிறது. மலையமான் திருமுடிக் காரி பற்றி சங்க இலக்கியம் குறிப்பிடுகிறது. இந்த மலையமான் வம்சம் அடிமைப் பட்டிருந்தால் சூத்திர வர்ணமாகி இருக்கும். அவ்வாறு அடிமைப்படவில்லை என்பது பிற சான்றுகள் மூலம் நிரூபணம் ஆகிறது. இன்றைக்கும் தஞ்சைக்கள்ளர்குல மலையமான், நத்தமான், சுருதிமான் பரம்பரையினர் பார்கவ குல சத்ரியர் என்று அழைக்கப்படுகிறார்கள். அன்றியும், சுந்தர சோழன் இறந்தபோது அவனது மனைவி வானவன் மாதேவியும் உடன்கட்டை ஏறி இருக்கிறாள். சூத்திரப் பெண்கள் இவ்வாறு உடன்கட்டை ஏறியதற்கான சான்றுகள் ஏதும் இல்லை. மேலும், சிறிய வயதிலேயே முடிசூடிக் கொள்ள சொல்லப்பட்ட போது, சத்ரிய தர்மப் படி உரிய வயது வந்ததும் முடிசூடுவதாக ராஜ ராஜன் சொன்னது அவனது மெய்கீர்த்திகளில் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் சத்ரிய சிகாமனி என்பது அவனது மெய்கீர்த்தியில் சொல்லப்பட்டுள்ளது. எனவே அவன் சத்ரியனே.
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
மேற்கண்ட விளக்கத்திற்கு எமது மறுப்புரைகள்

‘களம் என்ற வார்த்தையிலிருந்து பிறந்தது ‘களமர் ஆகும். அந்தக் களமர் என்போர் மள்ளரே என்பதற்கு (பார்க்க:பண்டைய தமிழகத்தில் போர்மறவர் என்போர் ‘பள்ளரே’) ஏற்கனவே ஆதாரம் கொடுக்கப்பட்டுள்ளது. அதேபோல், தற்கால கள்ளர் மற்றும் மறவர் என்போர் யார் என்பது பற்றியும் ஏற்கனவே விளக்கப்பட்டுள்ளது. எனவே, அகமுடையார் பற்றி மட்டும் பார்க்கலாம். அகமுடையார் என்ற இனம் சங்ககாலத்திலோ, இடைக்காலத்திலோ அறியப்படவில்லை. அகம்படியர் என்ற சொல் இடைக்காலக் கல்வெட்டுக்களில் காணப்படுகிறது. ஆனால், அது ஒரு இனமாகக் காட்டப்படவில்லை. கல்வெட்டுக்களில் அகம்படி என்பவர் வேலைக்காரர்களில் ஒருவராகப் பேசப்படுகின்றார். அகம்படி முதலி என்பவர் அவர்களை மேற்பார்வையிடுபவர்.

அகம்படியர் பற்றி எம்.சீனிவாச அய்யங்கார் கூறுவது:
கி.பி.10 ஆம் நூற்றாண்டுக்கு முன்பு அகம்படியர் என்ற வகுப்பு இருந்ததில்லை எனலாம்(Tamil studies, page  67)

ஜெ.எ.அபேடுபாய் கூறுவது:
ஆலயங்களிலும், அரண்மனைகளிலும் குற்றேவல் செய்பவர் அகம்படியர் என வழங்கினர்(J.A.Abbe Dubois, Hindu manner and customs, page 17)

கால்டுவெல் கூறுவது:
அகம்படியர் இனத்தைச் சார்ந்த பெரியமருது, சின்னமருது பாளையக்காரரோ அல்லது அவரது மரபைச் சார்ந்தவரோ இல்லை. அவரது வகுப்பை விட தாழ்ந்த வகுப்பைச் சார்ந்தவரும், பாளையக்காரர் குடும்பங்களின் பரிவாரத்தில் தொண்டு செய்பவரும் ஆவர் (Dr. Caldwell, History of Tinnevelly, page 210)

கல்வெட்டுச் செய்தி:
    தஞ்சை மாவட்டம் பாபனாசம் தாலுகா நல்லூரில் உள்ள மூன்றாவது இராசராசன் காலத்திய கல்வெட்டில் திருநல்லார் நாயனார் கோயில் வேலைக்காரர் அகம்படியர் என்று கண்டுள்ளது (ARE 59/1911)
இதுபோல் ஏராளமான கல்வெட்டு ஆதாரம் உள்ளது. இராமநாதபுரம் பகுதியிலுள்ள அகம்படியர் ‘சேவைக்காரன்’ என்ற அர்த்தம் கொண்ட சேர்வைக்காரன் என்று அழைக்கப்படுகின்றனர்.
புதுக்கோட்டைத் தொண்டைமான் வடுகர் இனத்தைச் சார்ந்தவர். இவர்கள் போலித்தனமாக தம்மை இந்திரகுலத்தார் எனக்கூறிக்கொண்டு, அதற்கு ஆதாரமாகத் தமது அரசவைப் புலவனாகிய தெலுங்குப் பிராமணன் வெங்கன்னாவைக் கொண்டு கட்டுக்கதைகள் எழுதியது உண்மையே. இதேபோன்று, பிற்காலத்தில் அகம்படியரையும், மறவரையும் கூட்டு சேர்ந்து கொண்டு, அவர்களும் இந்திரனுக்கே பிறந்தவர், மூவரும் ஒரு தாயின் பிள்ளைகள் எனவும் கதை புனைந்தனர். அப்படிப் புனையப்பட்ட ஒரு கதைதான் பூவிந்த புராணம்,கள்ளகேசரி புராணம். அந்தக் கதையைப் படிப்பவருக்குத் தெரியும், அது எப்படிப்பட்ட கதை என்று.
வெட்சித்தினை, கரந்தைத்தினை ஆகிய இருபோர்களையும் செய்தவர்கள் கள்ளர்கள் இல்லை (பார்க்க:பண்டைய தமிழகத்தில் போர்மறவர் என்போர் ‘பள்ளரே’)

        இராஜராஜசோழனின் கல்வெட்டில் கீர்த்திச் செய்தியில் ......கோராஜ கேசரி வன்மரான ஸ்ரீ ராஜராஜதேவர்... என்று முடிகிறது. இவனது 4-வது ஆண்டு வரை ....கோவி’ராசராசகேசரி’ என்று தொடங்கும். அதற்குப் பிறகு 8-வது ஆண்டு வரை .....கலமறுத்தருளிய கோவி ராசராசகேசரி என்று தொடங்கும். இதிலுள்ள ‘வன்ம என்பதை களப என்கிறார்களா? அல்லது ‘கலம என்பதை களப என்கிறார்களா? எதை இவர்கள் ‘களப’ என்கிறார்களோ அதன் உண்மையான அர்த்தம் என்ன என்பதை பார்வையாளர்கள் முடிவிற்கே விட்டுவிடுகிறேன். கள்வன் ராஜராஜன் என்று எந்தக் கல்வெட்டிலும் கிடையாது. இது அப்பட்டமான பொய்.
வேளிர் என்போர் உண்மையில் யார் என்று ஏற்கனவே சொல்லியாகி விட்டது (பார்க்க:பண்டைய தமிழகத்தில் போர்மறவர் என்போர் ‘பள்ளரே’). இதற்கு இன்னும் விளக்கம் வேண்டுமெனில், வேளிர் என்ற சொல்லின் பொருள் பற்றி என்.சிவராச பிள்ளை கூறுவது:
    “பழங்காலத் தமிழ் ஊர்களில் கிழார் அல்லது கிழவன் என்பவரது தலைமையின் கீழ் வாழ்ந்து வந்தனர். பல ஊர்கள் சேர்ந்து கூட்டாட்சி ஏற்பட்டபோது அக்கூட்டாட்சிக்குத் தலைமை தாங்கியவர் வேளிர் அல்லது வேண்மான் என வழ்ங்கினர்”(Page 67. Chronology of the early Tamils, N.Sivaraja Pillay). பழங்காலத் தமிழர் என்று சொல்லும்போது, அவர் நிச்சயம் கள்ளர் இல்லை என்பது உறுதியாகிறது.

    மன்னன் ராஜராஜன் சத்திரிய சிகாமணி என கல்வெட்டு உண்டு என்பது உண்மையே. யார் சத்திரியன் என்று சொல்லியது என்பது நமக்குப் புரியாமல் இல்லை. வெள்ளைக்காரன் இந்த நாட்டை விட்டுப் போகும்போது, தமிழ்நாட்டில் முக்குலத்தோர்(?) மற்றும் கேரளாவில் நாயர் என்போர் ‘சத்திரியர்’ என்று சொன்னதாகச் சொல்கிறீர்கள். இப்போது விசயத்திற்கு வருவோம். நாயக்கர் ஆட்சி முடிவு காலத்தில் சேதுபதி (தற்கால மறவன்) இராமநாதபுர சமஸ்தானதிபதி. போலி தொண்டைமான்(கள்ளன்) புதுக்கோட்டை சமஸ்தானதிபதி. இதுபோன்றே சிவகங்கை சமஸ்தானதிபதியும் கூட. ஆனால், சேர்வைக்காரரான மருது சகோதரர்கள் (அகமுடையார்) சிவகங்கையை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருந்தவர்கள். அதனால், இந்த மூன்று இனத்தையும் ‘சத்திரியர் என்று சொல்லிவிட்டுச் சென்றார்களா? இந்த நேரத்தில் ஒரு செய்தி.
சுதந்திரம் பெற்று 50 ஆண்டுகள் ஆகின்றன. இன்னும் வெள்ளைக்காரர்கள் விட்டுச் சென்ற பல தவறான கருத்துக்கள் நம் சமுதாயத்தைச் சீரழித்துக் கொண்டிருக்கிறது. உண்மை வரலாறு வேறு இது முன்னால் தொல்பொருள் துறையின் இயக்குனர் முனைவர் இரா.நாகசாமி சொன்னது (தினமலர் 23.9.99).

    ஆதியிலிருந்தே சத்திரிய வர்ணம் உடையோர் தஞ்சைக்கள்ளர்கள் என்று சொல்கிறார்கள். அப்படியெனில்,பிராமணன்,சத்திரியன்,வைசியன் மற்றும் சூத்திரன் என்ற வர்ணப் பிரிவை அவர்கள் ஏற்றுக் கொள்கிறார்கள் என்பதாகிறது. அதாவது, இவர்கள் மனுதர்ம விதியை ஏற்றுக் கொள்ளவேண்டும். இதில் ஒரு விசயத்தை நன்றாகப் புரிந்து கொள்ள வேண்டும். அதாவது, தமிழ்நாட்டில் தற்போது தாழ்த்தப்பட்டோர் என்று சொல்லக்கூடிய மக்கள் இந்த நான்கு வர்ண வரைமுறைக்குள் இல்லை. ஏனெனில், அவர்கள் இதற்கு வெளியேயுள்ள ‘பஞ்சமர்கள் ஆவர்.
சரி, இந்த நான்கு பிரிவிலுள்ள ‘சூத்திரன்’ தொழில் என்ன? ஏவலர் அதாவது, தர்ம சாத்திரப்படி, சூத்திரன் பிராமணனுக்கு அடிமையானவன். அவனுக்குப் பெண்ணை அனுபவிக்க உரிமை இல்லை.i இந்தக் கட்டுரைக்கும், சூத்திரனுக்கும் என்ன சம்பந்தம்? இருக்கிறது. நீங்கள் கொடுத்த பட்டியலில் கேரள நாயர் என்பவர் சத்திரியர் என்பதாகச் சொல்லப்பட்டிருக்கிறது. அந்த நாயர் என்போர் யார்? தமிழ்நாட்டில் தற்காலத்தில் பிள்ளை என்று சொல்கிறோமே, இந்த பிள்ளைக்குத்தான் கேரளாவில் நாயர் என்று பெயர். இவர்களைப் பற்றி எட்கர் தர்ஸ்டன் கூறுவது: “நாயர் குலப்பட்டம் குழந்தை எனப் பொருள்படும் ‘பிள்ளை ஆகும். இப்பட்டத்தை ஏற்கனவே தென்நாட்டில் குடியிருந்த பார்ப்பனர் பூண்டிருந்தனர். பின்னர் பார்ப்பனன் அல்லாதார் பார்ப்பனனை தந்தை எனப் பொருள்படும் ‘அய்யன்’ என அழைக்கவும், பார்ப்பனர் தம்மை அய்யன் என வழங்கலாயினர். அதன்பின் பார்ப்பனர் கொண்டிருந்த பிள்ளை என்ற பட்டத்தை ‘சூத்திரர்’ தமக்கு உரித்தாக்கிக் கொண்டனர்”(Edger Thurston, Caste and Tribes of South India. Vol.V). இதன் அடிப்படையில்தான், கேரள நாயர் என்போர் திருமண வழக்கில், திருமணம் நடந்த முதல் நாள் இரவில் மணப்பெண்ணை அனுபவிக்க மணமகனுக்கு உரிமை இல்லை. அந்த உரிமை திருமணத்தை நடத்தி வைக்கும் புரோகிதனான பிராமணனுக்கே உண்டு. நம்பூதிரிப் பார்ப்பனர் தாம் விரும்பும் நாயர் பெண்ணிடம் உறவு வைத்துக் கொள்ளலாம்(K.P.Kapada, Marriage and Family life in India). இதிலிருந்து தெரிவது என்ன? கேரள நாயர் என்போர் வர்ணமுறையில் சூத்திரர் என்பதாகும். அப்புறம் எப்படி நாயரை சத்திரியர் என்று பிரிட்டீஸ்காரன் சொன்னான்? இதேபோன்று, பிரிட்டீஸ்காரனால் சத்திரியர் என்று காட்டப்பட்ட உங்கள் முறைகள் எப்படி?
சரி, நீங்கள் காட்டக்கூடிய பட்டியலில் ‘மகர் என்ற சாதியும் உள்ளது. இது தாழ்த்தப்பட்டோர் என்று நீங்கள் சொல்லக்கூடிய இனத்தைச் சார்ந்த டாக்டர் அம்பேத்காரின் சாதியாகும். மகர் என்றால் மள்ளர் என்று அர்த்தம் என கஸ்டாப் ஓப்பெர்ட் கூறுகிறார்(AES/1888). விசயம் அதுவல்ல, தாழ்த்தப்பட்டோர் என்பவர்கள் வர்ணாசிரம பிரிவிற்குள் வராத பஞ்சமர்கள். அந்த பஞ்சமர்களை எப்படி சத்திரியர் என்று ஆங்கிலேயர் சொல்லிவிட்டுப் போனார்கள்? இதைப்பற்றி நீங்கள் ஏதாவது யோசித்தது உண்டா! சரி, இராசராசனுக்கு ‘சத்திரிய சிகாமணி என்ற பட்டம் உள்ளது என்பது பற்றிக் கல்வெட்டுச் செய்தி உள்ளது. எனவே, அவன் சத்திரியன் என்பது உங்கள் வாதம். அப்படியெனில், அந்த சத்திரியனின் சிலையை அவன் கட்டிய கோயிலுக்குள் வைக்க அனுமதியில்லையே அது ஏன்? இதுவரை அவர் சிலை கார்ப்பரேசன் இடத்தில்தானே உள்ளது. சிலையை உள்ளே வைக்கத் தடுக்கும் சக்தி எது?

இறுதியாக, கள்ளருக்கும், மலையமான் திருமுடிக்காரிக்கும் எந்த வகையிலும், எந்த சம்பந்தமும் இல்லை.