Friday, April 5, 2013

தமிழின மூத்த குடி யார் என்ற ஆய்வும், உண்மை பின்னணியும்

மூல கட்டுரை:


பாமரனின் பார்வையில் கேள்விகள்/சந்தேகங்கள்:
கேள்வி/சந்தேகம்: 1
* மூல கட்டுரையில்,
//முதல் மனிதன் ஆப்பரிக்க கண்டத்தில்தான் தான் தோன்றினானன் அங்கிருந்து தான் மற்றப் பகுதிகளுக்கு. சுமார் 70 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இடம் பெயர்ந்தான் என்பது ஆராய்ச்சியாளர்கள் முடிவு இன்று மறுபரிசீலனை செய்யப்படுகிறது. இந்த முதல் தமிழ் மனிதனை தேடி தமிழ் மண்ணில் ஆராய்ச்சியாளர்கள் வரவு தொடர்கிறது//

என்று சொல்லப் பட்டுள்ளது. ஆனால் இவர்கள் கொடுத்த லிங்கில்,
However, genetic and archaeological evidence points towards an initial migration from southwestern Africa over 100,000 years ago, which spread eastwards out of Africa into the Arabian Peninsula, before a small group began a worldwide dispersal around 60,000 years ago along mainly coastal routes

என்று சொல்லப் பட்டுள்ளது. இதில் எது உண்மை? "தமிழ் மண்ணில் தான் முதல் மாந்தன் தோன்றினான்" என்று இவர்கள் கொடுத்த ஆதாரங்கள் ஏதும் சொன்னதாக தெரியவில்லையே? அனைத்து ஆதரங்கலுமே "பிரமலை கள்ளர்கள்" ஆப்பிரிக்காவில் இருந்து வந்தவர்கள் என்று தானே சொல்கின்றன? அப்படி என்றால் தமிழ் நாட்டை பொறுத்த வரை, இந்தியாவை பொருத்தவரை தமிழன் வந்தேறியா? அப்படி என்றால் 'நாங்கள் குமரிக் கண்டத்தில்' தான் தோன்றினோம் என்று இத்தனை நாள் முக்குலத்தோர் சொல்லி வந்தது பொய்யா...?

கேள்வி/சந்தேகம்: 2
> M130 என்ற மரபணு பிரமலை கள்ளரிடம் மட்டும் தான் உள்ளது என்று எந்த அடிப்படையில் இந்த ஆய்வை நடத்திய பேரா.பச்சையப்பன் முடிவுக்கு வந்தார்?  (இதன் உண்மையான பின்னணியை பிறகு பார்ப்போம்).
> யார் யாரிடம் இருந்து எல்லாம் மாதிரிகள் பெறப்பட்டன?
> எங்கே பெறப்பட்டன ?
> எப்படி பெறப்பட்டன ?
> என்ன என்ன ஆய்வுகள்,ஆராய்ச்சிகள் செய்யப்பட்டன என்று எந்த தகவலும் தெரிவிக்கப்படவில்லையே. ஏன்?

கேள்வி/சந்தேகம்: 3
கள்ளரிடையே பல பிரிவுகள் உண்டு. பிரமலை கள்ளர்,தஞ்சை கள்ளர்,தொண்டைமான் என பலவகைப்படும். இவர்கள் அனைவரும் ஒருவரா? அதற்க்கு வாய்ப்பு இல்லையே. ஆக, ஒரு கள்ளருக்கும், இன்னொரு கள்ளருக்குமே சம்பந்தம் இருக்கா இல்லையா என்று தெளிவாக கூறமுடியாத பட்சத்தில், இங்கே நடத்தப்பட்ட ஆய்வின் மூலம் 'கள்ளர்' தான் தமிழின் மூத்த குடி என்று பொதுவாக சொல்வது ஏற்புடையாதா?

கேள்வி/சந்தேகம்: 4
ஒட்டு மொத்த கள்ளரையே ஒரே மாதிரி பார்க்க இயலாத போது, மறவரையும், அகமுடையாரையும் இணைத்து 'முக்குலத்தோரே' தமிழின் மூத்த குடி என்று சொல்வது ஏற்புடையதா? மறவர்,எயினர் பாலை நிலக்குடி என்று தமிழ் இலக்கணம் கூறும் போது, பிரமலை கள்ளர் போன்ற மலை சார்ந்த வாழ்வு வாழ்ந்த 'கள்ளர்' சிலரையும் ஒரே பார்வையில் பார்ப்பது சரியா?

கேள்வி/சந்தேகம்: 5
   70000 வருசத்துக்கு முன்பு இந்தியாவில் வந்த முதல் மாந்தன் என்று ஒருவரை அடையாள படுத்தும் போது, அதற்க்கு முன்பு இந்தியாவில், குறிப்பாக தமிழகத்தில் மாந்தரே இல்லை என்று உறுதி பட நிலை நிறுத்த வேண்டியது இந்த ஆய்வை நடத்திய பேராசிரியர்களின் கடமை. அப்படி ஏதும் செய்ததாக தெரியவில்லை. ஏன்? அப்படி இருக்க வாய்ப்பில்லை என்ற முடிவுக்கு பேராசிரியர் எப்படி வந்தார்?

    இனி விசயத்துக்கு வருவோம். இந்த M130 என்ற இந்த ஆய்வானது நேர்மையாக நடத்தப்பட்ட ஆய்வா, இல்லை பித்தலாட்டமா என்பதை இந்த கட்டுரையின் இறுதியில் நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள். இந்த ஆய்வை பற்றி அலசும் முன்பு, இந்த ஆய்வுக்கு பின்பு உள்ள அடித்தளத்தை சற்று பார்ப்போம்.

மனித தோற்றம் பற்றிய கோட்பாடுகள்
* உலகில் மாந்தன் தோன்றினான் என்று சொல்லப்படும் முக்கிய தியரி
  > 'ஆப்பிரிக்காவில் தோன்றி பரவினான்'
  > 'லெமூரியாவில் (குமரித்தீவு) தோன்றி பரவினான்'
என்ற இரட்டை தியரிகலாகும். இதில் மேலை நாட்டவர்களால் முன்னிறுத்தப்பட்டு பிரச்சாரம் செய்யப்படும் முக்கிய தியரி 'ஆப்பிரிக்க தியரி' தான். அவர்கள் விரும்புவதும், நிலை நிறுத்த நினைப்பதும் அது தான். முதல் மாந்தன் 'லெமூரியாவில்' தோன்றினான் என்று யோசிக்க கூட அவர்கள் தயார் இல்லை. விதி விளக்காக சுவீடன் போன்ற நாடுகள் 'லெமூரிய' ஆராய்ச்சியில் முடிவை நெருங்கி விட்டதாக அறிகிறோம். (மேலதிக தகவல் இணைக்கப்படும்).மூலக் கட்டுரை கூட தியரி 1 (அதாவது ஆப்பிரிக்க தியரி'க்கு) வலு சேர்ப்பதற்காக நடத்தப்பட்ட ஆய்வே. இதை நாம் முதலில் புரிந்து கொள்ள வேண்டும். இந்த 'ஆப்பிரிக்க' தியரியை எப்பாடு பட்டாவது நிலை நிறுத்த விரும்பும் மேலை நாட்டு அறிவுஜீவிகள்,அதற்காக பண பலம்,ஊடக பலம் (டிஸ்கவரி சேனல்) என சகல வழிகளிலும் முயற்சி செய்கிறார்கள் என்பதும் அறிந்ததே. எனவே M130 என்ற பேராசிரியரின் ஆய்வு முடிவு அவர்களை ஈர்த்ததில் ஆச்சரியம் இல்லை. இந்த ஆய்வுக்காக பல கோடி ரூபாய்களை வரை 'NGO 'க்கள் மூலம் பேராசிரியரின் குழுவுக்கு விநியோகிக்கப்பட்டதாக சொல்லப்படுகிறது.

இனி பேராசிரியர்.பச்சையப்பன் செய்தது ஆய்வு தானா என்பதை அலசுவோம்.

பேராசிரியர்.பச்சையப்பன் ஆய்வின் பின்னணி
    ஏதோ ஒரு தருணத்தில், ஏதோ ஒரு மருத்துவ பரிசோதனைக்கு வந்த பல ரத்த மாதிரிகளில் இருந்து M130 மரபணு உள்ள மாதிரிகள் பிரித்தரியப்பட்டு ,அதில் சுமார் 12 மாதிரிகள் இறுதி செய்யப்பட்டன. அந்த தகவல் தான் பேராசிரியர்.பச்சையப்பனுக்கு சொல்லப்பட்டது. அதை இவர் வெளியே தெரியப்படுத்தினார். அவ்வளவே...!!! மாறாக, இவர் தானே முன்வந்து மாநிலம் முழுக்க பல்வேறு இனக்குழுக்களிடம் இந்த ஆய்வை செய்யவும் இல்லை, கண்டுபிடிக்கவும் இல்லை. சரி அந்த  12 மாதிரிகளும் 'பிரமலை கள்ளரிடம்' மட்டும் தான் இருந்ததா? இல்லை வேறு எந்த சாதி'க்கும் இருந்ததா? இங்கே தான் பச்சையப்பனின் நரித்தனம் வெளிப்படுகிறது.


    உண்மை என்னவெனில், அந்த 12 மாதிரிகளில் வேறொரு சாதியின் மாதிரியும்(sample) இதே M130 மரபணு கொண்டுள்ளது. அது வேறு யாரும் அல்ல 'கோனார்' சாதி தான். இதை பச்சையப்பன்  வெளியே சொன்னாரா..? இல்லை என்றால் இதை விட வேறு அயோக்கிய தனம் இருக்க முடியுமா..? அதெப்படி 'கோனாரு'க்கு இந்த மரபணு வந்தது என்று நீங்கள் கேட்கலாம். அதற்க்கு முன்பு M130 என்ற மரபணுவுக்கு முந்திய நிலை 'காட்டுமிராண்டி' மனித படி நிலை என்பதை உள்வாங்கி கொண்டு மேற்கொண்டு வாசியுங்கள்.

மனித மாந்தன் குமரித்தீவில் தோன்றியமை குறித்த ஆய்வுகள் பல உள்ளன. அதில் ஒன்றை இங்கே தருகிறோம்.

விழுப்புரம் ஓடை கிராமத்தில், ஆப்பிரிக்காவில் இருந்து மனிதன் இடம் பெயர்ந்தான், தமிழ் மண்ணுக்கு வந்தான் என்று கூறப்படும் காலத்துக்கு பல ஆயிரம் வருடங்களுக்கு முன்பில் இருந்தே மனிதர்கள் இங்கே வாழ்ந்து வருகின்றனர் என்பதை உணர்த்தும் ஆய்வு இது.

அப்படி பெறப்பட்ட ஒரு குழந்தையின் மண்டை ஒட்டு பாசில் இதோ.

முழு தகவலுக்கு இங்கே சொடுக்கவும்.
அந்த ஆய்வு முடிவு சொல்வது

"The human fossils from Odai and Hathnora probably bear significant implications for the current "Out of Africa" verses "Multiregional" debate concerning the place of origin and antiquity of humans, and Asia's importance in the story of hominid evolution"

தமிழ் கூறும் ஐவகை நில மக்கள் வாழ்வு

    தமிழ் இலக்கணப்படி கோனார்(இடையர்),மலை கள்ளர் போன்றவர்கள் முல்லை,குறிஞ்சி நில மக்கள். மறவர்,எயிற்றினர் போன்றவர்கள் பாலை நிலக்குடி மக்கள். ஆனால் பிரமலை கள்ளர்,மறவர் போன்றவர்களின் தொழில் 'ஆடு மாடு திருடுதல், வழிப்பறி செய்தல்' என்பதால் தொழில் அடிப்படையில் இவர்கள் ஒரே இனமாக பின்பு அறியப்பட்டனர். நிற்க. கால்நடை வளர்ப்பதும், அதை பராமரிப்பதும் இடையரின் தொழில். அதை திருடுவதும்,கொள்ளை இடுவதும் 'மலை கள்ளரின்' தொழில். இந்த அடிப்படையில் நோக்கினால் எப்படி 'கோனார்' போன்ற குறிஞ்சி நில பழங்குடி மக்களிடமும் M130 வந்தது என்பது புலனாகும்.

எமது வேண்டுகோள்கள்:
>    இந்த தகவலை (கோனாருக்கும் M130 இருக்கிறது) பேராசிரியர்.பச்சையப்பன் அறிவிக்க வேண்டும். அதோடு மட்டுமின்றி, மாநிலம் முழுவதும்,பல்வேறு இனக் குழுக்களிடமும் இது போன்ற ஆய்வை மேற்கொண்டு உண்மை தகவலை வெளியில் சொல்ல வேண்டும்.

> அப்படி ஒரு ஆய்வு நடத்தி முடிக்கப்படும் போது, வெவ்வேறு இனக்குளுக்களுக்கிடையே உள்ள மரபண்டு தொன்மை, இடைவெளி, பரிணாம வளர்ச்சி போன்ற தகவலகளையும் வெளியிட வேண்டும்.