சோழர்களின் வரலாறு என்ற கட்டுரைக்கு எம் கேள்விகள் : (பாகம் 2 )
http://www.usetamil.com/t643-topic
(அங்கே கேட்க வழி இல்லாததால் இங்கே கேட்கிறேன்)
============================
//சேர, சோழ ,பாண்டியர்கள் ஆகிய மூவருமே சகோதரர்கள் என்று கூறப்படுகின்றன. இது மரபு வழிச் செய்தி. வரலாற்று ஆதாரம் அற்றது.//
இந்த கட்டுரையை எழுதியர் அப்படி என்ன வரலாற்றை கரைத்து குடித்து விட்டு, கடையில் இப்படி ஒன்றும் இல்லை என்று கைவிரித்தார் என்று தெரியவில்லை. கீழே உள்ள சங்கரன் கோவில் கல்வெட்டை பாருங்கள்.
திருநெல்வேலி மாவட்டம் சங்கரநாயினார் கோவில் கோபுர வாசல் உள்புறம் கீழ்ப்பக்கம் உள்ள கல்வெட்டு
"
விசுவாவசு வருடம் வைகாசி மாதம் 14 நாள்
திங்கட்கிழமையும் உத்திராடமும் பெற்ற நாள்
தெய்வேந்திரக் குடும்பன் பலாத்துப்படி : முன்
துவாபர யுகத்தில் உக்கிரப் பெருவழுதியும்
சோழனும் சேரனும் உலகம் வறுமைப்பட்டு
இருக்கின்ற காலத்திலே தெய்வேந்திரன் பக்கல் மழை
கேட்கப் போனவிடத்திலே பகவானும் மனம்
மகிழ்ந்து இரும் என்ன சேரனும் சோழனும்
வணங்கியிருக்க பாண்டியன் தெய்வேந்திரனுடனே
கூடியிருக்க, தேவேந்திரனும் வரிசை செய்தாற்போல
கவடு நினைக்க. பாண்டியன் கோபித்து எழுந்து
தேவ கன்னிகை மக்கள் நாலு குடும்பத்தாரை
கைப்பிடியாய்ப் பிடித்துக் கொண்டு சென்னல்
விதையும், கன்னல் விதையும் (கதலி) விதையும்
பனைவிதையும் முதலான பல வித்தும் ஒரு ரிசபமும்
ஒரு சாவியும் கொண்டு பூமியில் வந்தான்
நால்வரில் முதல்வனுக்கு தேவேந்திரக் குடும்பப்
பட்டமும் கட்டி, மூன்று பேருக்கு வாரியன்,
அக்கசாலை, (இளந்தாரியன்) என்று வரிசைப்
பட்டமும் கட்டி ஒரு நாளையிலே 12000 கிணறு
வெட்டி வேளாண்மை கண்ட படியினாலே
ராஜாவும் மனம் மகிழ்ந்து வெள்ளானையும்
வெள்ளை வட்டக் குடையும் சேறாடியும் பகல் பந்தம்
பாவாடை ரெட்டைச் சிலம்பும் ரெட்டைக்
கொடுக்கும் நன்மைக்கு 16 பந்தக்காலும் துன்மைக்கு
2 தேரும் பஞ்சவன் விருந்தும் . . . . .18 மேளமும்
கட்டளையிட்டு நடக்கிற காலத்திலெ . . . . . ”
—- தென்னிந்திய கோயிற் சாசனங்கள்ஃ பாகம் 2, எண் 863ஃ பக்கம் 803

(கள்ளர் கூற்றுப்படி)
சேரன் மலையையும், காட்டியும் ஆண்டவன்,
சோழன் மருத நிலத்தை ஆண்டவன்,
பாண்டியன் நெய்தல் நிலத்தை ஆண்டவன் என்றால்
//உக்கிரப் பெருவழுதியும்
சோழனும் சேரனும் உலகம் வறுமைப்பட்டு
இருக்கின்ற காலத்திலே தெய்வேந்திரன் பக்கல் மழை
கேட்கப் போனவிடத்திலே பகவானும் மனம்
மகிழ்ந்து இரும் //
இந்த மூவரும் ,உழவர் தலைவனான 'தெய்வேந்திரக் குடும்பனிடம்' மழை வேண்டி நிற்பானேன்?. குடும்பன் வெட்டிய 12000 கிணறால் விவசாயம் செய்பவனுக்கு தான் உபயோகம். மீன் பிடிப்பவனுக்கும், மலையில் இருப்பவனுக்க்ம் மழை எதற்கு? கிணறு எதற்கு?
...............................................
(வன்னியர் கூற்றுப்படி)
மூவேந்தர்களுக்குள் எந்த உறவும் இல்லை என்றால்,
//சேரனும் சோழனும்
வணங்கியிருக்க பாண்டியன் தெய்வேந்திரனுடனே
கூடியிருக்க, //
ஒரு பொது பிரச்னைக்கு இவர்கள் ஒன்றாக வந்து வேண்டியது ஏன்? பாண்டியனுக்கு பிரச்சனை என்றால் சோழன் எதுக்கு வரணும்? வறட்சியினால் சோழனின் நிலம் வாடினால் சேரனுக்கு என்ன? ஒருவரை 'மன்னன்' என்றும், இன்னொருவனை 'கோ' என்று மட்டுமே வலராறு சுட்டி இருந்திருந்தால் கூட சிறு குழப்பம் வர வாய்ப்பு இருக்கிறது. ஆனால் மூவரையும் தமிழ் உலகம் 'வேந்தன்' என்று தானே பதிவு செய்கிறது? வயலும் வயல் சார்ந்த 'மருத' நில தலைவனையே வேந்தன் என்று தொல்காப்பியர் நிறுவி உள்ளார். எனவே மூவேந்தர்கள் மருத நில குடிகளே, மூவரும் ஒரே குடியை சேர்ந்தவர்களே....!!!
(குறிப்பு: பல காலம் ஒன்றாக இருந்த மூவேந்தர்களை சூழ்ச்சியால் பிரித்ததை மிகப் பெருமையாக சொல்லிக் கொள்ளும் கலிங்கத்து அரசனின் கல்வெட்டும் இங்கே விரைவில் பதிப்பிக்கப் படும்.)

All the tamil kings(muvendars) were said to be mallar(the same word you mentioned to represent pallar).If you have any doubt ,go and study sangam literature.
———————————————-
மல்லர் என்ற சொல் பற்றியது.மல்லல் என்றால் ‘வளம்’என சங்க இலக்கியத்தில் பொருள் கொண்டுள்ளனர்.தொல்காப்பியத்தில்’மல்லல் வளனே’(தொல்.சொல் அதி.8).மல்லல் வளத்தை குறிக்கும…
் போது மல்லன் என்பது வளமுடையவனை குறிக்கவேண்டும்.மருத நிலம் வளமானது.எனவே,மல்லன்,மல்லர் என்பது மருத நில மக்களைக் குறிக்கும்.
மல்லர் எனில் வலிமையுடையவன்,மற்போரில் தேர்ச்சி பெற்றவன் என்ற அர்த்தமும் உண்டு.எனவே,மல்லர் என்பதற்கு போர்வீரன் என்ற பொருள் கொள்ளவேண்டும்.வளமும்,வலிமையும் உடையவர் மல்லர்.தற்காலத்தில் பள்ளர் இன மக்கள் மட்டுமே மல்லாண்டர் சாமியை போரில் இறந்த மல்லர் நினைவாக கும்பிடுவதே அதன் காரணமாகத்தான்.எனவே மள்ளர் மற்றும் மல்லர் என்பது ஒன்றே.மல்லி என்பது பெண்பால்.
திருச்சி மாவட்டம் உடையார்பாளையம் வட்டம் மேலப்பழவூர் அகத்தீஸ்வரர் கோயில் கல்வெட்டு(தெ.க.13/227)பழவூர்ச் சங்கரபடி மல்லன் கங்கன் கொடை பற்றிக் குறிப்பிடுகிறது.
மேல்கண்ட அதேஊரில் வாதமுலீஸ்வரர் கோயில் கல்வெட்டு(தெ.க.5/680)நந்தா விளக்கு கொடை அளித்த மள்ளர் தொண்டிநாட்டு மணலூருடையான் மல்லன்.
தஞ்சாவூர் மாவட்டம் மன்னார்குடி ஜெயங்கொண்டநாதர் கோயில் கல்வெட்டு(தெ.க.6/37)’ஆகோ மல்லகுல கால வாய்க்காலுக்கும் வடக்கு’என்று கூறுகிறது.மல்லர் என்பது ஒரு குலம் என்பது சுட்டப்படுகிறது.
பாண்டிய மரபினரின் பெரும்பாலான(கல்வெட்டு) அடையாளங்கள்தான் திட்டமிட்டு அழிக்கப்பட்டுள்ளது .ஆனால்,பாண்டியரின் வரலாற்றைக்கூறும் திருவிளையாடல் புராணத்தில் கீழ்கண்ட மள்ளர்கள் பாண்டியமன்னர்களாக இருந்துள்ளனர் என்ற செய்திகள் உள்ளன.
சோமசேகரப்பாண்டியன்,இராஜசேகரப்பாண்டியன்,அனந்தகுணப்பாண்டியன்,குலபூடணப்பாண்டியன்,இராஜேந்திரப்பாண்டியன்,இராசசிங்கப்பாண்டியன்,சுந்தரேசபாதசேகரப்பாண்டியன்,வரகுணப்பாண்டியன்,இராசராசப்பாண்டியன்,வங்கியசேகரப்பாண்டியன் மற்றும் அரிமர்த்தனப்பாண்டியன் ஆகியோர் மள்ள மன்னர்களே.
உதாரணம்:
‘புரவி வெள்ளமும் போர்க்கரி வெள்ளமும்
வரவிற் கால்வலி மள்ளரின் வெள்ளமும்
விரவி யாழிய வெள்ளமு முள்ளுக
இரவி தன் வழித் தோன்றல்வந்
தெய்தினான்’
என்ற பாடலில் சோமசேகரப்பாண்டியன் அனைத்துப்படைகளையும் வழிநடத்தி சூரியன் உதித்து வருவதுப்போல வந்தான் என்று உள்ளது
—————————————————————————————————-
“அருந்திறல் வீரர்க்கும் பெருந்திறல் உழவர்க்கும்
வருந்தகைத்தாகும் மள்ளர் என்னும் பெயர்” – திவாகர நிகண்டு.
“செருமலை வீரரும் திண்ணியோரும்
மருத நில மக்களும் மள்ளர் என்ப” — பிங்கள நிகண்டு
—————————————————————————————————-
கம்பர் தமது இராமாயணத்தில் மள்ளர்கள் போர்க்களத்தில் பகைவர்களின் தலைகளை வெட்டி வீழ்த்துவதை உழவு, தொளி கலக்குதல், நாற்று முடிகளைப் பரவுதல் முதலிய நிகழ்வுகளோடு கீழ்க்கண்டவாறு ஒப்பிட்டு கூறுவார்.அப்பாடலானது,
…
“நெடும் படை வாள் நாஞ்சில் உழு நிணச் சேற்றின்
உதிர நீர் நிறைந்த காப்பின்
கடும் பகடு படி கிடந்த கரும் பரப்பின்
இன மள்ளர் பரந்த கையில்
கடு ங்கமல மலர் நாறும் முடிபரந்த
பெருங்கிடக்கைப் பரந்த பண்ணை
தடம் பணையின் நறும் பழனம் தழுவியதே
எனப் பொலியும் தகையும் காண்மின்” – கம்பராமாயணம்.
இதிலிருந்து மருதநிலத் தமிழர்களான மள்ளர்கள் உழவர்களாக மட்டுமின்றி போர்ப்படையாகவும் இருத்தமை தெளிவாகும்
—————————————————————————————————-
ஏறும் போரும் இணைபிரியாது என்ற பழமொழிக்கு ஏற்ப மள்ளர்கள் உழவர்களாக மட்டுமின்றி போர்க்குடிகளாகவும் இருந்து பேரரசுகளைக் கட்டி தமிழினத்தைக் காத்துநின்றமையை சங்க இலக்கியங்கள் போற்றுகின்றன. திருவிளையாடற்புராணம்மள்ளர்களின…
் போர்த்திறனை வேளாண்திறனோடு சேர்த்து “பலநிற மணிகளையும் கோர்த்துச் செய்த மாணிக்கமாலை போன்று பலநிறக் காளைகளையும் ஏரில்பூட்டி கலப்பையில் உள்ள இரும்பினால்செய்த கொழுவு தேய , வாள்வீசிச் சண்டையிடும் போர்த்தொழிலில் வல்ல கரிய கால்களையுடைய மள்ளர்கள், நிலமகளின் உடல்போன்ற நிலத்தை உழுதனர். உழுத ஏர்த்தடங்களில் குருதி போன்ற சிவந்த சேற்றிடத்தில் சிவந்த மாணிக்கம் போன்ற தானிய மணிகள் ஒளிவீசின ” எனப் பாடுகிறது.அப்பாடலானது,
“பலநிற மணிகோத் தென்னப் பன்னிற வேறு பூட்டி
அலமுக விரும்பு தேய வாள்வினைக் கருங்கான் மள்ளர்
நிலமக ளுடலங் கீண்ட சால்வழி நிமிர்ந்த சோரிச்
சலமென நிவந்த செங்கேழ்த் தழன்மணி யிமைக்கு மன்னோ” (செ-19) என சுட்டுகிறது.
—————————————————————————————————-
(மல்லன்,மள்ளன்,பள்ளன் அனைவரும் ஒருவரே என்பது குறித்த ஒரு ஆதாரம்)
கச்சியப்ப முனிவரால் எழுதப்பட்ட பேரூர்ப்புராணம் சிவனை (பேரூர் பட்டீஸ்வரர் -கோயமுத்தூர்) பள்ளன் எனவும் மள்ளன் எனவும் மாறி மாறி அழைக்கிறது. அப்பாடலானது
…
” இந்திரன் பிரமனாரணன் முதலா மிமையவர் நுகமலை மேழி
வெந்திறள் கொழுவார் கயிறுகோல் பகடு வித்துனா றனைத்துமா யங்கு
வந்தனர் பயில வன்கண நாத றேவல்செய் மள்ளரய் விரவி
முந்துறும் பட்டிப் பள்ளனை யடுத்து மொழிவழி வினைதொடங் கினரால்”-(செய்-28) எனப் போற்றுகிறது.
—————————————————————————————————-
சங்க காலம் முதற்கொண்டு இடைக்காலத்திலும் ஆண்ட அரசர்கள், குறுநிலத் தலைவர்கள் அல்லது வேளிர்கள் அனைவரும் மள்ளர் குலத்தவர் என்று கூறுவது அதிகப்படியாகத் தோன்றுகிறது.
இடைக்காலம் என்பதும் தமிழரசர்கள் ஆண்ட காலம் தான்.குறு நில மன்னர்கள் ஏனைய இனத்தோரிலும் உண்டு.
மள்ளர்களே தமிழகம் முழுதும் ஆண்டார்கள், சிறிய பகுதிகளுக்குக் கூட தலைவராக விளங்கியவர்கள் மள்ளர்கள் என்பது போன்ற கருத்துக்கள் மிகையானவை. உழு தொழில் செய்தவர்தான் அனைத்தும் அறிந்தவர் எனக் கூற முடியாது. உழு தொழில் மேன்மை உடையது என்று கூறினாலும் ஒவ்வொரு அரசனும் தங்கள் நாட்டைக் காத்துக் கொள்ள படைகள் கூடுதலாகவே தேவைப்பட்டன. உழு தொழில் செய்த மள்ளர்களும் போர்த் தொழிலில் ஈடுபடுத்தப்பட்டார்கள்.
மல் என்ற சொல்லுக்குச் செல்வம் என்று பொருள். மல்லை என்றால் செல்வம் மிகுந்தது என்று பொருள். அதற்கு திண்மை என்ற பொருளும் உண்டு. வளப்பம் என்ற பொருளும் உண்டு.
வளப்பம் என்ற பொருளும், திண்மை என்ற பொருளும், செழுமை என்ற பொருளும்,செல்வம் என்ற பொருளும் மல் என்ற சொல்லுக்கு உண்டு (டாக்டர்.தயாளனின் லெக்௯சிகன் மற்றும் திராவிடியன் எட்டிமலாச்சி டிக்ஸனரி). எனவே,மல்லன் என்றால் யார் எனப் புரிந்துவிடும்.
இதே பொருளை மள் என்ற சொல்லுக்கும் பார்க்கலாம்.அதாவது,மள்ளர் என்றால் திண்மை, செழுமை என்று வருகிறது. மல்-மல்லர், மள்-மள்ளர் இரண்டுக்கும் ஒரே மாதிரியான பொருள் வருகின்ற காரணத்தினால் இரண்டு சொற்களும் ஒரே பொருளில் பயன்படுத்தப்படுகிறது.//
Referrence:
http://kallarperavai.webs.com/kallar.htm
‘மள்ளர்’,'மல்லர்’ இருவரும் ஒருவரே என்றும், இந்த இரண்டு வார்த்தைகளும் மாறி மாறி உழவுத் தொழில், போர்த்தொழில் என்று இலக்கியங்களில் பயன்படுத்தப் பட்டுள்ளது என்பதை இன்னும் பல ஆதரங்களுடன் இங்கு யாம் நிரூபித்தால் இந்த கட்டுரை எழுதியதற்கு மன்னிப்பு கேட்டுக்கொண்டு, இந்த கட்டுரையை நீக்கி விடுகிறீர்களா? இது என்னுடைய வெளிப்படையான சவால்.