Saturday, June 21, 2014

வாணாதிராயர்கள் என்பவர்கள் யார்?

வாணாதிராயர்கள் என்பவர்கள் யார்? என்ற இந்தக்கட்டுரையை ஆரம்பிக்கும் முன்பு 'வெட்டும்பெருமாள் பாண்டியர் யார்?' மற்றும் 'பாண்டியரை வீழ்த்திய வாணர்குலத்தவர்' என்ற நமது முந்தைய கட்டுரைகளுக்கு பதில் அளிக்கிறேன் பேர்வழி என்றரீதியில் "எப்பவும் உண்மையை மட்டுமே!" எழுதக்கூடிய ஒரு தளத்தில் நமக்கு கேட்ட கேள்வியில், 'வாணகோவரையன் சுத்தமல்லன்' என்ற பெயரை சுட்டிக்காட்டி 'சுத்தமல்லன்' என்ற பெயர் கொண்ட வாணாதிராயர் பள்ளனுக்கு எதிராக இருந்ததாக 14 ஆம் நூற்றாண்டைச் சார்ந்த ஒரு கல்வெட்டுச் செய்தியைக் காரணம் காட்டி ஒப்பாரி வைத்து இருந்தார் ஒரு அறிவாளி. வாணாதிராயர் என்பவர்கள் பள்ளனுக்கு எப்பவுமே எதிரிதான். அதில் மாற்றமில்லை. ஆனால், வாணாதிராயர் 'மல்லன்' என்று அழைக்கப்பட்டது எப்படி? என்பதுதான் அவர்களின் ஒப்பாரிக்கு காரணம். இதற்கு பதில் அளிப்பதற்கு முன்பு சோழ மன்னன் முதற் பராந்தகச் சோழனின் வெற்றிச் சிறப்பைப் பற்றிக் கூறும்போது, 'இவன் வாணர்களின் நாடாகிய வாணப்பாடியை வென்று,அதை சுங்க அரசனாகிய இரண்டாம் பிருதுவிபதிக்குக் கொடுத்தான். அது மட்டுமல்ல அவனுக்கு "வாணகோவரையன் பிருதுவிபதி" என்ற பட்டத்தையும் அளித்தான். இது வரலாறு தெரிந்தவர் மட்டும் 'உணர்ந்து' கொண்ட செய்தி. இங்கு சுங்க அரசன் வாணர்குலத்தவன் கிடையாது. ஆனால்,அவனுக்கு வாணர்களை வெற்றி கொண்டதன் அடையாளமாக "வாணகோவரையன்" என்ற பட்டம் முதல் பராந்தகனால் அளிக்கப்பட்டுள்ளது. இதேபோன்று ஒரு மல்லனுக்கு "வாணகோவரையன்" என்ற பட்டம் இருந்ததை வைத்து ஒப்பாரி வைத்தால் நாம் என்ன செய்வது! ஒரு வேளை இந்த 'மல்லன்' என்ற செய்தியை வைத்துத்தான் 'மள்ளன்' என்பவர் கீழ்நிலை விவசாயக்குடியாகிய பள்ளர், மற்றும் 'மல்லன்' என்பது எதோ ஒரு வீரக்குடி(?) என்று ஒரு அருமையான கட்டுரை எழுதினார்களோ!

அடுத்தது வாணாதிராயர் செய்திக்கு வருவோம், தமிழ் வரலாற்றில் இடைக்காலம் என்பது கி.பி.9 முதல் 13 ஆம் நூற்றாண்டு வரை உள்ள காலகட்டமாகும். இந்தக் காலகட்டத்தில் தமிழகத்தில் உள்ள சாதிகள் எவை எவை என்பதை கல்வெட்டில் கீழ்கண்டவாறு உள்ளது:

1.வெள்ளாளர்
2.பிராமணர்
3.கைக்கோளர்
4.செட்டி
5.மன்றாடி
6.இடையர்
7.குயவர்
8.பள்ளி
9.பறையர்
10.கம்மாளர்
11.சாலியர்
12.சாவர்ணா
13.சுருதிமான்
14.வாச்சியன்
15.ஈழச்சான்றான்
16.மணிக்கிராமம்
17.அதிரேசியர்
18.வேட்டுவர்
19.கள்ளர்
20.பட்டினவர்
21.தச்சன்
22.தட்டான்
23.வேட்கோ
24.குதிரைச்செட்டி
25.சங்கரப்பாடி
26.வளஞ்சியர்
27.திரையர்
28.வலையர்
29.இளமகன்
30.தருமாவாணியர்
31.கொங்கன்
32.நாவிதர்
(Noboru karashima, Y. Subbarayalu and Toru Matsui. A Concordance of the names in the Chola Inscriptions - 1979 ). இவர்கள் மட்டுந்தான் இடைக்கால சோழர் ஆட்சியின்போது தமிழகத்தில் இருந்த இனம்.

இப்போது வாணாதியார் என்போர் யார்? என்பதைப் பார்க்கலாம்.

மதுரைத் தல வரலாறு கூறுவது:
மதுரையில் பாண்டியர் ஆட்சி முடிவுற்று விசயநகர ஆட்சி ஏற்பட்டபோது இரண்டாம் கிருஸ்ணதேவராயன் பிரதிநிதி லக்கணநாயக்கன் காளையார்கோயிலில் இருந்த பாண்டியன் காமக்கிழத்தி அபிராமி என்ற தாசியின் மக்களாகிய 1.சுந்தரத்தோள் மாவலி வாணாதிராயர் 2.காளையார் சோமனார் 3.அஞ்சாதபெருமாள் 4.முத்தரசர் மற்றும் 5.திருமலை மாவலி வாணாதிராயர் இவர்களை மதுரைக்கு வரவழைத்து 'பாண்டியர்' என்று போலியாகப் பட்டம் கட்டியதாக மதுரைத் தல வரலாறு கூறும்.

மதுரை நாயக்கர் வரலாறு கண்ட பரந்தாமனார் கூறுவது:
மாவலிவாணாதிராயர் புராணத்தில் கூறப்படும் மாவலி சக்கரவர்த்தியின் வழியில் வந்தவர் எனக் கூறிக் கொண்டனர். இவர்கள் முதலில் கன்னட நாட்டில் இருந்தனர். பின்பு சிற்றூர் மாவட்டத்தின் மேற்குப்பகுதியிலும், வடஆற்காடு மாவட்டத்தின் வடமேற்குப் பகுதியிலும் இருந்தனர். இவர்கள் சாதவாகனப் பேரரசில் நில உரிமை பெற்று படை உதவி செய்யும் சிற்றரசர்களாக  ஆயினர். சாதவாகன அரசு வீழ்ச்சியுற்ற பின்பு காஞ்சிப் பல்லவரிடம் வந்து சேர்ந்தனர். கி.பி 10 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் முதலாம் பராந்தகச் சோழன் இவர்களது நாட்டைக் கைப்பற்றி சோழநாட்டில் சேர்த்துவிட்டதாலும், இவருள் ஒரு பகுதியினர் குண்டூர் மாவட்டம் சென்று வாழலாயினர். மற்றொரு பகுதியினர் தமிழகத்தின் தென்பெண்ணையாற்றங்கரைக்கு வந்து சேர்ந்து அங்கு வாணகப்பாடி என்ற நாட்டை நிறுவி ஆண்டனர். அதை மகராஜ்யம் என்றனர். தென்னாற்காடு, சேலம், திருச்சி மாவட்டங்களின் சில பகுதிகள் இதில் அடங்கும். இவர்கள் இராசராச சோழன், இராசேந்திர சோழன் அவர்களுக்குப் பின் வந்த சோழருக்குப் படை உதவி செய்தனர். மூன்றாம் குலோத்துங்கன் காலத்தில் பொன்பரப்பி வாணாதி வாண கோவரையன் புகழ் பெற்று விளங்கினான். சோழப்பேரரசு அழிவுற்று பாண்டியப் பேரரசு தோன்றிய கி.பி.14 ஆம் நூற்றாண்டில் பாண்டிய நாட்டிற்குள் புகுந்து சிற்றரசர் ஆயினர். இவர் தம்மை பாணர் என்றும் கூறுவர். தமிழ்ப்பாணர் வேறு, இவர் வேறு.

வெ.வேதாச்சலம் வாணாதிராயர் பற்றிக் கூறுவது (கல்வெட்டுக்களில் வாணாதிராயர்) :
கீழக்கோலார், கர்னூல் பகுதியில் இவர் அரசியல் வாழ்வு தொடங்கி இருந்தது. சாளுக்கியர், காஞ்சிப் பல்லவர், இராட்டிரகூடர், சோழர் முதலிய பேரரசுகளுக்கு இவர்கள் அடங்கி இருந்தார்கள். இவருள் ஒரு பகுதியினர் முதற் பராந்தகன் காலத்தில் வடக்கே குண்டூர், கிரிஸ்ணா ஆகிய இடங்கள் சென்று தனித்து ஆட்சி நடத்தினர். மற்றொரு பகுதியினர் பெண்ணைக் கரையில் இருந்து பாணப்பாடியில் சோழருக்கு கட்டுப்பட்டு ஆட்சி நடத்தினர்.

வெ.வேதாச்சலம் நூலுக்கு மதிப்புரை கண்ட ஏ.சுப்பராயலு கூறுவது:
வாணர் என்ற குறுநில மன்னர் கி.பி 5 ஆம் நூற்றாண்டு ஒட்டிய காலத்தில் தமிழகத்தின் வட எல்லையிலிருந்து நாளடைவில் தெற்கு நோக்கிப் பரவி பல்லவ, பாண்டிய, சோழ அரசுகளை அண்டி குறுநிலத்தலைவர்களாகவும், அரசு அலுவலர்களாகவும் இருந்துள்ளனர். இவ்வாணாதிராயர் சோழரின் கீழ் பணி செய்து அவர் வலி குன்றிய போது பாண்டியர் கீழ் சிற்றரசர் நிலை எய்து அவருக்குப் பின் மதுரை, புதுக்கோட்டை, இராமநாதபுரம் மாவட்டங்களில் விசயநகர அரசர்க்கு கீழ் பணிபுரிந்து, மதுரை நாயக்கர் அரசேற்கவும் அவரின் பாளையப்பட்டுக்களாக நியமனம் பெற்றதாக வெ.வேதாச்சலம் கூறுவார்'. என்று கூறுகிறார்.

வாணாதிராயர் மானாமதுரைப் பகுதியை ஆட்சி செய்த போது, கானாடு, கோனாடு வெள்ளாளர் இடையே கலகம் மூண்டது. அக்காலத்தில் கானாட்டு வெள்ளாளரால் கள்ளர் வரவழைக்கப்பட்டு, கலகத்தில் ஈடுபடுத்தப்பட்டதாகவும், கள்ளருக்கு வெள்ளாளர் வெகுமதி வழங்க வேண்டுமென்று வாணாதிராயர் உத்தரவிட்டதாகவும், இக்கலகத்தில் தோல்வி கண்ட வெள்ளாளர் கொங்கு நாடு சென்றதாகவும் வரலாறு கூறும். அதேபோன்று, தமிழ் வேந்தர் ஆட்சி வீழ்ச்சியுற்று விசயநகர ஆட்சி தமிழகத்தில் ஏற்பட்டவுடன் கன்னடிய, தெலுங்கு படைவீரர் இவர்களுடன் வாணாதிராயர் படையில் இருந்த படைவீரரும் பாண்டியருக்கு எதிராகப் போர்களில் ஈடுபடுத்தப்பட்டனர். பாளையப்பட்டுக்களில் தெலுங்கரும், வாணாதிராயரும் இடம் பெற்றனர். நாயக்க மன்னரின் கீழ் வாணாதிராயலிருந்து பாளையப்பட்டுக்களாக தேர்வு பெற்றவர் படைத்தலைவராயினர். இவ்வாறு  வேற்றிடங்களிலிருந்து தமிழகத்தில் குடியேறி படைத்தொழில் புரிந்த அனைவரும் 'லம்பகர்ணா' என்று தெலுங்கு நூல்களில் குறிப்பிடப்பட்டவர் ஆவர்.

11 comments:

  1. இன்றைக்கு வாணர் எந்த பெயரில் உள்ளனர்,,, எந்த இடத்தில உள்ளனர்

    ReplyDelete
  2. நமக்கு எப்போது புத்தாண்டு தை முதல் நாளா? அல்லது சித்திரை முதல் நாளா?

    ReplyDelete
  3. வானாதிராயர் முனைத்திறியர் இடையே குடி கூலி பள்ளர்க்களை வேலைக்கு அமர்த்தியது தொடர்பாக ஒரு வரலாற்று நிகழ்வு இருக்கிறதே அது பற்றி ஏன் பதிய வில்லை.

    ReplyDelete
  4. வெட்டு மாவலி அகம்படியர்.
    வாணாதிராயர்கள் அகம்படி இனம்.

    ReplyDelete
    Replies
    1. உண்மை ஆதாரங்கள்..மறுப்பு தெரிவித்தவர் அடுத்தவர் குடி வேசி குடி என்கிறார்.. உண்மை என்னவென்றால் அவர் குடியே அதுதானாம் தூ https://kallarkulavaralaru.blogspot.com/2018/04/blog-post_1

      Delete
  5. மறுப்பு கட்டுரை எழுதுபரே எழுதும்போது முடிந்தால் கல்வெட்டை படமாக தெளிவாக இணைத்து அந்த பிராமி எழுத்துக்களுக்கு முறையான பல்கலைக்கழகங்களில் தமிழ் பயின்ற ஆன்றோரின் புத்தகங்களின் முதல் பக்கத்தை காட்சிப்படுத்தி அவர் எதற்காக இதை எழுதியிருக்கிறார் அவர் பொதுவான வரா நியாயமானவரா என விளக்கமாக கொடுத்தால் தான் அது சரியான கட்டுரை கண்ட கழுசடை அவன் அவன் சாதிக்கு ஏற்றது போல் எழுதிக்கொள்வது ராஜராஜன் சமூக நீதிக்கு இடம்கொடுத்து அவரிடம் கட்டுமான பணிகளில் சில வேலைசெய்த குஞ்சரமல்லரை கௌரவபடுத்தி அவர் பெயரை சேர்த்து குஞ்சரமல்லன் என கோவிலில் அச்சடித்து வைத்திருக்கிறார் என் பாட்டியின் அண்டத்தில் வந்த பிறப்பே இப்படி உன்னை நீயே அவமானப்படுத்தி கொள்ளலாமா..

    ReplyDelete

  6. வரலாறு தெரியாத ஒரு படிப்பறிவில்லாத கூழ்முட்டை இந்த கட்டுரையை எழுதியவர் .எந்த குடியிலும் கல்வெட்டுக்களில் அக்காலத்தில் இப்படி பாண்டியக்கிழத்தி அபிராமி என்கிற வேசிக்கு பிறந்ததாக இல்லை...இதை எழுதும் கழுசடைகள் குல ஆய்வுக்கு எழுதுவதில்லை அவர்களுக்கு பீற்றிக்கொண்டே இருக்க வேண்டும் அவர்களுடைய அப்பன் யாரென்று தெரியாது நாங்கள் திருக்கோவிலூர் பகுதியையும் தஞ்சை சேலத்தில் ஆறகலூர் பகுதிகளிலும் திருச்சி புதுக்கோட்டை பகுதிகளில் காலம் தொட்டு வரும் தமிழ்குடிகள் எங்கள் குலம் தாயார் ஊரறிந்த திருமுடிக்காரியின் வம்சம் செம்பியன் மாதேவி என்பவர் ஆவார் தாயார் உருவாக்கியவள் இந்த கட்டுரை எழுதியவர் சொல்லும் மல்லன் அல்லது பள்ளன் இவர்கள் உலகம் போற்றும் மன்னர்கள் எப்படி ஆனார்கள் என் பாட்டியின் அண்டத்தில் அவரின் விடாப்பிடியான குணத்தினால் பின்பு இவன் எங்கிருந்து மல்லனானான் இதற்கு இவன் படிப்பறிவு பெற்றவன் என்றால் எதிர்த்து பேசவே முடியாது ஏன் என்றால் இதை மறுத்தால் இவன் பிறப்பே தவறு பெற்றுவிடும் நாங்கள் உண்மையில் மூவேந்தர் காலத்திலேயே சிறு குறு நில மன்னர்கள் தான் இவர்ளுக்கு இல்லாத நீண்ட நெடிய 1800 வருட கல்வெட்டு ஆதாரங்களும் பதினெண்கீழ்க்கணக்கு நூல்களில் ஏகப்பட்ட பாடல்களும் கம்பர் அவ்வை பிராட்டி எழுதிய வாசகங்களையும் தொல்லியல் துறையில் பாதுகாக்கப்பட்ட இடங்கள் என்ன என்று இந்த கட்டுரை எழுதும் நான்காம் தர ஆட்களுக்கு நன்றாகவே தெரியும் சில கட்டுரைகளில் பார்க்கவன் ஆய்வுக்குழு மூலம் மல்லர்கள் எங்கள் பங்காளிகள் என்று கூறினோமே தவிர இவனைப்போல் தரம் கெட்டு எதையாவது உளரவில்லை வாணாதிராயர் வாணக்கோவரையர் வேட்டவலம் பகுதி பாரி சிவகங்கை பகுதி ஓரி கொல்லிமலை திருமுடிக்காரி திருக்கோவிலூர் நாங்கள் ஐந்து உட்பிரிவுகள் ஒரே குலம் (இப்போதும் நாங்கள் பெண்குடுத்து பெண் எடுக்கும் பார்க்கவகுலம் தான் 80 லட்சம் பேர் விடுபடாமல் திருக்கோவிலூர் மற்றும் தஞ்சை பெரம்பலூர் திருச்சி சேலம் அருகேயும் எங்கள் குலக்கோவில்களையும் பின்பற்றி வருகிறோம் )இந்த வரலாற்றில் இடைச்சங்கத்தில் சாதி பெயர் இல்லை என்று சுருதிமான் என்று போட்டிருக்கிறான் அது யார் என்று அவனுக்கு தெரியாமல்... இப்படி யாரோ முட்டாள் பெரியவரிடம் கேட்டனாம் சில புத்தகங்களில் பார்த்தானாம் இதற்கு ஆராய்ச்சி வேறு செய்தானாம் தூ தூ யார் இவனே கல்வெட்டு செதுக்கியவனா ஆயிரம் ஆண்டு தாண்டி உயிரோடு இருந்து உண்மையை பேசுவது போல் ஒரு குடியை எதற்காக இப்படி பேசுகிறான் என் தெரியவில்லை நான் மேலே குறிப்பிட்ட விடயங்களை யாராவது Google செய்து பாருங்கள் எல்லாமே பூரிந்துகொள்ளலாம் சமூக நீதிக்கு அர்த்தமற்றவன் சாதியை காலம் கடந்து சில பண்பாட்டை சுமந்து கடந்து வரும் குலமாக பார்க்காமல் சாதி வெறியாக நினைத்து பீற்றிக்கொள்கிறான் நல்ல குலத்தில் பிறந்தவரனாக இருந்தால் இனி இது போல் தரம்கெட்ட பொய்மை கலந்த
    கட்டுரைகளை தவிர்ப்பான் பிறகு அவன் குடும்பம் எப்படியோ யாருக்கு தெரியும் ...

    ReplyDelete
  7. இந்தக்கட்டுரை எழுதிய சோழ நாட்டை அதிகமாக காணப்படாத துளி ஆதாரமற்ற மதுரைப் பகுதியில் வாழும் கழுசடை ஆவான்...இடைக்காலத்தில் ராஜராஜன் ராஜேந்திர சோழனுக்கு பின்னர்தான் வாணதிராயர் வந்தார்களாம் அதாவது பார்க்கவும்.....அடேய் மறுப்பு கட்டுரை எழுதிய எழுத்தறிவு பெற்ற கைநாட்டே அதே எங்கள் திருவாண்ணாமலை பகுதியில் வேடியப்பன் கோவிலில் உள்ள கல்வெட்டில் வைரமேக வாணக்கோவரையர் மகள் செம்பியன் மாதேவி கண்டராதித்தரை மணந்தார் என்ற கல்வெட்டு இன்றும் உள்ளது..ஆதலால் தான் முக்குலத்தோரில் பல நல்லவர்கள் தவிர ஒரு சில படிப்பறிவற்ற கைநாட்டுகள் பார்க்கவ மலையமான் இனிசியலில் பிச்சை எடுக்கிறீர்கள்...உன் குடிக்கு எடுத்துக்காட்டு இருந்தால் ஆதாரங்கள் இருந்தால் பெருமை வீற்று ....ஏன் ஆதாரம் அன்று பீற்றிக்கொண்டே இருப்பவன் மூடன்... ராஜராஜன் வடக்கே படை ஆட்சியையும் தெற்கே கள்ளர் மறவரையும் ஆட்சி அமைச்சரவையில் அகமுடையார் களையும் பெண் எடுப்பதில் பார்க்கவகுலத்தையும் உறவுமுறைகளாக இருந்ததாக தெரியவருகிறது...அவருக்கு 15 மனைவிகள்...அதில் உடையாருக்கு பிறந்தவர்கள் ஆதித்த கரிகாலன் அருண்மொழி குந்தவை...இவை எல்லாம் கூகுள் செய்தால் கூட வரும் கைநாட்டே

    ReplyDelete
  8. மாவலி வாணன் அகமுடையார் கள்... அதாவது பாண்டியர்களின் முன்னோர் என்று செந்தமிழ் சுவடு மற்றும் குரு வம்சம் அடையாளம் கொண்டவர்கள் பாண்டிய சேரர்களுமே...குரு வம்சம் என்ற பட்டத்தையும் கல்வெட்டுகளையும் கொண்டுள்ளது அகமுடையார்.... 🌕🦅🏹🪃🦈✅

    ReplyDelete
  9. மாவலி வாணாதிராய அகம்படிய மக்கள் என்று கல்வெட்டுகளும் வரலாற்று தொகுப்புகளும் சொல்கிறது.... மேலும் வானவன் கடைசியாக ஆண்ட சோழவந்தானிலும் மானாமதுரையிலும் பெரும் அடையாளம் அகமுடையார் என்றும் சேர்வராயன் மலைநாட்டு அகமுடையார் தான்

    ReplyDelete