பாண்டியர்கள் யார் ? - நடுவக்குறிச்சி பாளையக்காரன் கைபீது
வடுகர்கள் மதுரைப் பாண்டியர்களை வென்று தமிழ்நாட்டைக் கைப்பற்றி ஆண்ட காலத்தில் கி.பி.16 ஆம் நூற்றாண்டின் முற்பாதியில் இருந்த தமிழர்களின் குடும்பு ஆட்சி முறையை மாற்றி 72 பாளையப்பட்டுகளை எற்படுத்தி பாளையக்காரர்களை நியமித்து ஆட்சி செய்து வந்தனர். பெருவாரியாக வடுகர்களைப் பாளையக்காரர்களாக நியமித்தனர். ஒரு சில பாளையப்பட்டுகளைத் தமிழ் மன்னர்களுக்கு எதிராக உதவி செய்த சாதியினருக்கு வழங்கினர்.
வடுகர்களின் ஆட்சி போய் பிரித்தானியரின் கிழக்கிந்தியக் கும்பனியார் ஆட்சியைக் கைப்பற்றிய 19-ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் பாளையப்பட்டுக்காரர்கள் அனைவரும் பாளையப்பட்டுகளை தாங்கள் பரம்பரை பரம்பரையாக ஆண்டு வருவதாகவும் கும்பனியார் இந்தப் பாளையப்பட்டுகளைத் தங்களுக்கு கொடுக்க வேண்டும் என்றும் நாங்கள் கும்பனியாரின் கீழ் வரிகளை ஒழுங்காகக் கட்டி வருவோம் என்றும் உறுதி கூறி வேண்டுகோள் விண்ணப்பங்கள் செய்து கொண்டார்கள். இந்த விண்ணப்பங்கள் கைபீதுகள் எனப் பெயர் பெற்றனர்.
தமிழ்நாடு அரசு பாளையப்பட்டுகளின் வம்சாவளி என்று நான்கு தொகுதிகளாக இவைகளைப் பதிப்பித்துள்ளது. நடுவக்குறிச்சி பாளையக்காரன் வம்சாவளி கைபீது என்ற கைபீது தொகுதி – 2 இல் பக்கங்கள் 106 முதல் 111 வரை ஆறு பக்கங்களில் கொடுக்கப்பட்டுள்ளது. (பதிப்பு ஆண்டு 1981). தமிழ்நாடு அரசு கீழ்திசைச் சுவடிகள் நூல் நிலையத்தில் சுவடி எண் 3886 ஆகப் பாதுகாக்கப்பட்டு வருகிறது. குத்தாலத் தேவர் என்ற பட்டப்பெயர் கொண்ட இப்பாளையக்காரன் “எங்கள் வமுசத்தில் பாண்டிய றாசா பெண் கேட்டார்,அதற்கு
மறக்குலத்திலேயிருக்கிற பெண்ணை சந்திறகுல வங்கிசத்தில் குடுக்கிறதில்லை என்று
சொன்னதிற்கு பாண்டிய றாசா விதனமாய்ப் படை சேகரித்து……”என்று தமது கைபீதில்
எழுதியுள்ளார். கைபீதுவில் உள்ள காலக் குறிப்புகள் தவறாக இருந்தாலும் இந்தச்சாதி பற்றிய செய்தி தவறாக இருப்பதற்கு வாய்ப்பில்லை.
முக்குலத்தோர் சமுதாயத்தைச் சேர்ந்த வரலாற்று அறிஞர்கள் கூட முக்குலத்தோருக்கும் தமிழ் மூவேந்தர் மரபினருக்கும் சாதியத் தொடர்பு இல்லை என்பதையும், முக்குலத்தோர் மூவேந்தர் மரபினர் அல்லர் என்பதையும் கூறியுள்ளனர். இந்த கைபீதில் மறவர் குலத்தினரும் பாண்டியர் குலத்தினரும் வேறு வேறு சாதியினர் என்பதை ஒரு மறவர் பாளையக்காரர் 200 ஆண்டுகளுக்கு முன்பே கூறியுள்ளார்.
தகவல் : டாக்டர் குருசாமி சித்தர் (மள்ளர் மலர் 2003)
கூடுதல் தகவல் : எந்த பாளையக்காரர்களும் ( மறவர், கள்ளர், அகம்படியர்.) தங்களை மூவேந்தர் வம்சம் என உரிமைகோரவில்லை.