Friday, February 22, 2013

'கள்ளர் வெட்டு' - திருவிழா


    மறவர்கள் 'களவுத் தொழிலை மேற்கொண்டவர்கள்' என்பதற்கு இன்றும் கண்முன் சாட்சியாக இருப்பது 'கள்ளர் வெட்டு' என்னும் திருவிழாவாகும். இந்த திருவிழாவானது திருநெல்வேலி மாவட்டம், தாமரைக்குளத்தில் ஆண்டு தோறும் சித்திரை மாதம் நடைபெற்று வருகிறது.


'கள்ளர் வெட்டு': வரலாறு
    பள்ளர்களின் கோயிலில் முன்பொரு காலம் பொன் அணிகலன்களை மறவர்கள் திருடியதாகவும், அதன் விளைவாக அம்மறவர் குடும்பங்களில் பல இறப்புகளும், பாதிப்புகளும் நேர்ந்ததாகவும் அதற்காகவே இக்கள்ளர் வெட்டுத் திருவிழாவை மறவர்கள் விரும்பி நடத்துவதாகவும் தெரிகிறது.

    மறவர்கள் குதிரையில் வந்து பள்ளர்களின் கோயிலிலுள்ள பொன்னையும், பொருளையும் திருடிச் செல்லும்போது பள்ளர்கள் அதை கண்டு அவர்கள் மீது தாக்குதல் தொடுத்து, மறவர்களை வெட்டி வீழ்த்துவதாக இத்திருவிழா நடைபெறுகிறது. தென் மாவட்டங்களில் வேறு சில இடங்களிலும் கள்ளர் வெட்டுத் திருவிழா நடைபெற்று வருகிறது. இத்திருவிழாவின் கருப்பொருளை மறைத்து புதிய பொருள் கற்பிக்கின்ற போக்குகளும் அண்மைக்காலங்களில் அரங்கேறி வருகின்றன.